Kaviya Tamilraj
Member
Super
Super sisபிரம்மா 14
அங்கே தன்னை சுற்றி எதிரிகள் வலை பின்னிக் கொண்டு இருப்பதை அறியாமல் சித்தார்த்தோ தனது கண்டுபிடிப்பு ஒன்றை சமர்ப்பித்து அதுக்கு பேட்டண்ட் பெறும் பொருட்டு ஆய்வுகூடத்தில் இருந்து காவலாளிகளுடன் கிளம்பி இருந்தான்.
இந்த விஷயம் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் மூலம் நரேனுக்கு வந்து சேர, அவன் அடுத்து அழைத்தது என்னவோ அஜய்க்கு தான். அஜய்யும் ஒரு போலீஸ் கேஸ் விஷயமாக வெளியே இருந்தவன் நம்பரை புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு எடுத்து "சொல்லுங்க நரேன்" என்று சொல்ல, அவனோ "நமக்கு செமயா ஒரு விஷயம் சிக்கி இருக்கு. சித்தார்த் இன்னைக்கு இங்க வர்றான்" என்று சொல்ல அஜய்யின் இதழ்கள் வன்மத்தில் விரிய "வரட்டும். ஆனா திரும்பி போக மாட்டான்" என்று சொன்னான். அதைக் கேட்டு சிரித்த நரேன் "தட்ஸ் மை பாய், பேட்டண்ட் ஒன்றுக்கு ரெஜிஸ்டர் பண்ண வர்றான். டைரக்ட் ஆஹ் ரெஜிஸ்டர் ஆபீசுக்கு தான் .போவான். அங்கிருந்து திரும்பும் போது தான் நாம அவனை தூக்கணும்.. பக்கத்தில தான் என்னோட இரு பழைய லேப் இருக்கு, அவனை அங்க கொண்டு வந்து அணுவணுவா சித்தரவதை செய்து சாகடிக்கணும்" என்று சொல்ல, அஜய்யும் "டன்" என்று சொல்லி விட்டு போனை வைத்து இருந்தவனோ யோசனையுடன் ஜீப்பில் ஏறிக் கொண்டான். அவனோ ஷாந்தியையும் கேஸ் விஷயமாக அழைத்து வந்தவன், அவளை ஸ்டேஷனில் விட்டு விட்டு "ஷாந்தி இன்னைக்கு நான் வர மாட்டேன்.. எதுன்னாலும் எனக்கு கால் பண்ணு" என்று சொன்னவன் ட்ரைவரிடம் "நீயும் கிளம்பு, எனக்கு ஒரு பர்சனல் வேலை இருக்கு, நானே ஜீப்பை கொண்டு போறேன்" என்று சொல்லிக் கொண்டே ஜீப்பை எடுத்துக் கொண்டு நரேனைத் தேடி புறப்பட்டான்.
நரேனோ தனது ஆட்களுடன் பக்காவாக பிளானைப் போட்டுக் கொண்டே இருக்க, அவனது அறைக்குள் நுழைந்த அஜய் அங்கிருந்த இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டே அமர்ந்தான்.. நரேனும் "அவன் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வெளியே வந்து கார்ல ஏறினதுமே அவனை பின் தொடர்ந்து கார் எங்கேயும் நின்னதுமே" என்று ஆரம்பிக்க "ஓஹ் மை காட், ரொம்ப சைல்டிஷ் பிளான் ஆஹ் இருக்கு" என்ற அஜய், மேலும் "உங்க லெப் இருக்கிற இடத்தை மேப் ல பார்த்தேன். அது கொஞ்சம் ஆப் ஏரியா தானே. எப்படியும் அந்த வழியால் தான் ரிட்டர்ன் ஆவான், அங்கே இருக்கிற மரத்து பின்னாடி நின்னு அவன் கார் டயருக்கு ஷூட் பண்ணினா எப்படியும் கார் நின்னுடும். அதுக்கப்புறம் அவன் கூட வந்த நாலு பேரை போடுறது ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல. நெக்ஸ்ட் அவனையே தூக்கிடலாம்" என்று சொல்ல, அவனை விழி விரித்துப் பார்த்த நரேன் "கேட்க நல்லா தான் இருக்கு.. ஆனா இவனுங்கள நம்பி அவன் செக்கியூரிட்டிஸ போட சொல்லலாமா? இவனுங்க தான் செத்து கிடைப்பானுங்க" என்று தன்னை சேர்ந்த காவலாளிகளைக் காட்டி சொல்ல, இரு பக்கமும் தலையாட்டி வாய் விட்டு சிரித்தவன் "நான் ஒருத்தன் போதும்" என்று சொல்ல, நரேனோ "அமேஸின்" என்று கைகளைத் தட்டி அவனைப் பாராட்டினான்.
அவர்கள் எதிர்பார்த்த போலவே அன்று மாலை சித்தார்த்தின் வண்டியும் பேட்டண்ட் அலுவலகத்துக்கு சென்று விட்டு திரும்பிய தருணம் அது. அங்கே ஒரு மரத்தின் பின்னால் மறைந்து இருந்த அஜய்யோ அவன் வண்டி வரும் நேரத்தில் சரியாக குறி பார்த்து தன் பக்கம் இருந்த இரு டயர்களிலும் சுட, வண்டியோ இரு பக்கமும் ஆடிச் சென்று ஒரு மரத்தில் மோதிக் கொள்ள, உள்ளே இருந்த சித்தார்த்தின் நெற்றியும் நன்றாக முன்னால் இருந்த சீட்டில் அடிபட்டது. அவனோ "ஸ்ஸ் .என்னாச்சு? கன் சவுண்ட் கேட்டுச்சே" என்று சொல்லிக் கொண்டே நெற்றியினை வருட, அவன் அருகே இருந்த நான்கு காவலாளிகளை "சம்திங் ராங் சார்" என்று சொல்லிக் கொண்டே வெளியேற சித்தார்த்தும் அருகே இருந்த தனது பிஸ்டலை எடுத்து ஷேர்ட்டின் பின்னால் சொருகிக் கொண்டே வெளியில் வர எத்தனிக்க, "நீங்க இருங்க சார், நாங்க பார்த்துகிறோம்" என்று சொன்ன நால்வரும் காரின் நான்கு புறமும் நின்று சுற்றி பார்த்துக் கொண்டே இருந்தார்கள் துப்பாக்கியை முன்னே நீட்டியபடி.
அஜய்க்கு தான் இதெல்லாம் பெரிய விடயமே இல்லை அல்லவா? மரத்தின் பின்னே மறைந்து நின்றபடியே அங்கு நின்ற நான்கு காவலாளிகளையும் குறி வைத்தவன் அவர்களது தோள்களில் இடைவெளி கூட விடாமல் சுட, இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத நால்வரும் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்தார்கள். அதை உள்ளே இருந்து பார்த்த சித்தார்த்தோ அதிர்ச்சியுடன் கார்க் கதவைத் திறந்து கொண்டே இறங்க, அவனை குறி வைத்தபடி அருகே நெருங்கி இருந்தான் அஜய். அவனைக் கண்டதுமே சித்தார்த்தின் விழிகள் விரிந்து கொள்ள, "அஜய்" என்று அழைத்தபடி பின்னால் இருந்த துப்பாக்கியை எடுக்க முயல "ஆஹா" என்று சொல்லி இல்லை என்று தலையாட்டியவன் அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்துக் கொண்டே அடுத்த கையை நீட்டி "பிஸ்டல்" என்று சொல்ல, சித்தார்த்தும் பின்னால் இருந்த துப்பாக்கியை எடுத்து கொடுத்தவன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டான். அஜய்யோ " ரொம்ப அசிங்கமா போய்டுச்சு சித்தார்த்" என்று சொல்ல, அவனோ "சாரி அஜய், அவ உனக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணுன்னு எனக்கு தெரியல" என்று சொல்ல, இதழ்களைப் பிதுங்கிய அஜய் " ம்ம்ம் ஆனா அதுக்காக நான் உன்ன சும்மா விடுவேன்னு மட்டும் நினைக்காத" என்று சொன்னான். சித்தார்த்தோ அஜய்யின் கண்களை ஏறிட்டுப் பார்த்தவன் "என்னைக் கொல்லப் போறியா?" என்று கேட்கும் போதே அவன் குரலில் அப்படி ஒரு வலி.
எப்போதோ அனுபவித்த ஒரு வலி மீண்டும் மனதுக்குள் தொடர்ச்சியாக வந்த உணர்வு அது. அஜய்யோ இரக்கமே இல்லாமல் "கண்டிப்பா. ஆனா நீ சாகிறத பார்க்க இன்னொருத்தனும் ஆசையா இருக்கிறான்" என்று சொன்னவன் சித்தார்த்தின் தலையைக் குறி வைத்தவாறே "மூவ்" என்று சொல்ல, அவனும் அவன் காட்டிய திசையில் சென்று அங்கிருந்த அவனது ஜீப்பில் ஏற, அவனது கையை பின்னால் சீட்டுடன் வைத்து விலங்கிட்டவனின் ஜீப் உயர் வேகத்தில் நரேனின் பழைய ஆய்வுகூடத்தை நோக்கி விரைந்தது.
ஜீப்பை ஓட்டிக் கொண்டு இருந்த அஜய்யைப் பக்கவாட்டாக திரும்பிப் பார்த்த சித்தார்த்தின் இதழ்கள் விரக்தியாக புன்னகைக்க அஜய்யோ இறுகிய முகத்துடனேயே ஜீப்பை ஓட்டிக் கொண்டு ஆய்வுகூடத்தை அடைந்து இருந்தான். அஜய்யின் ஜீப் வந்ததுமே "வெல் டன்" என்று கையை தட்டியது வேறு யாரும் அல்ல நரேன் தான். அவனை திரும்பி ஜீப்பின் கண்ணாடி யூடு பார்த்த சித்தார்த் "இவனா?" என்று கேட்க அஜய்யோ இதழ்களைப் பிதுக்கியவன் "எதிரிக்கு எதிரி நண்பன்" என்று சொல்லிக் கொண்டே இறங்கி அவனது கையில் இருந்த விலங்கைக் கழட்டிக் கொண்டே அவனை பிடித்து இழுத்து வர, நரேனோ "என்ன ஒரு கண் கொள்ளாக் காட்சி.. உன்னைப் பிடிக்க எவ்வளவோ முயற்சி பண்ணினேன். ஆனா அஜய்.. ப்பா.. சச் எ பிரில்லியண்ட் பெர்சன்" என்று நக்கலாக சொன்னவன் தனது காவலாளிகளிடம் "இவனை உள்ளே கொண்டு போய் கட்டி வைங்க நான் வரேன் " என்று சொல்ல, அவனை கொண்டு போய் உள்ளே இருக்கையில் கட்டி வைத்தார்கள் அவனது காவலாளிகள்.
அதே சமயம், அஜய்யின் தோளில் கை போட்ட நரேன்.. "எவ்ளோ கோடி வேணும்னாலும் கேளு" என்று சொல்ல, அவனோ "இது காசுக்காக நான் பண்ணல.. என்னோட வலிக்கு மருந்து இது" என்று அழுத்தமாக சொன்னவன் கையில் இருந்த பிஸ்டலை லோட் பண்ணிக் கொண்டே கம்பீரமாக சித்தார்த்தை தேடிச் சென்றான். சித்தார்த்தோ இருக்கையில் அமர்ந்து இருந்தாலும் மனதில் வலி அதிகரித்ததால் என்னவோ சக்தி அனைத்தும் வடிந்து விட்ட உணர்வு அவனுக்கு.
அவன் முகமோ வெறுமையாக இருக்க, பெருமூச்சுடன் அமர்ந்து இருந்தவனின் நாடியை துப்பாக்கியால் தொட்டு தன்னை நோக்கி நிமிர்த்தினான் அஜய். சித்தார்த்தோ அவன் விழிகளை ஆழ்ந்து பார்க்க அஜய்யோ "கடைசி ஆசை ஏதும் இருக்கா?" என்று கேட்க அழுத்தமாக இல்லை என்று தலையாட்டியவன் "போடுறதுன்னா போடு,"என்று சொன்னான் சற்றே விரக்தி குரலில்.. நரேனோ அஜய் அருகே நின்று "என்னடா கோபப்படுவ, ஆக்ரோஷமா சண்டை போடுவ என்று பார்த்தா கொல்றதுன்னா கொல்லுன்னு சிம்பிள் ஆஹ் சொல்ற" என்று கேட்க, அவனைப் பார்த்த சித்தார்த் " உன்னை போல துரோகிங்க இருக்கிற உலகத்தில வாழுறத விட செத்துப் போகலாம்" என்று சொன்னவன் விழிகள் அஜய்யில் படிய, அஜய்யோ அவனை வன்மமாக பார்த்துக் கொண்டே புன்னகைத்தவன் துப்பாக்கியை லோட் பண்ணி விட்டு அவன் நெற்றியில் வைத்து "இந்த மூளையை பார்த்து தானே காயத்ரி மயங்கி இருப்பா, அதனால இங்க சுடவா , இல்ல" என்று சொல்லிக் கொண்டே அவன் நெற்றியில் இருந்து மார்பு வரை இறக்கி வந்தவன் "இந்த இதயம் தானே அவளை காதலிச்சுது.. அதனால இங்க சுடவா?" என்று கேட்க நரேனோ "எங்க வேணும்னாலும் சுடுங்க அஜய்... அவன் என் கண் முன்னாடி சாகணும் அவ்ளோ தான்" என்று சொன்னான்.
அஜய்யோ "நரேன், அப்போ வன் டூ த்ரீ எண்ணுங்க போட்ரலாம்" என்று சொல்ல, சித்தார்த் அஜய்யை அடிபட்ட பார்வை பார்க்க, அவனோ சித்தார்த்தை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே அவன் நெஞ்சில் சுட ஆயத்தமாக நரேனும் "வன் டூ த்ரீ,. ஷூட் அஜய் ஷூட் " என்று சொல்லி முடித்து அடுத்த கணமே அவன் நெஞ்சில் குறி வைத்து இருந்த துப்பாக்கியை சுழட்டி எடுத்தபடி குறி வைத்து இருந்தான் நரேனின் நெற்றிப் பொட்டில். நரேனோ அதிர்ச்சியுடன் விழி விரித்தபடி "அஜய் என்ன இது?" என்று கேட்டுக் கொண்டே கையை தூக்கியவன் பின்னால் செல்ல, அவனோ நரேனை எரித்து விடுவது போல பார்த்துக் கொண்டே "என்னை செதுக்குன பிரம்மாடா அவன்.. அவனை நான் ஏன்டா சுட போறேன்? லாஸ்ட் ஸ்டேஜ் கேன்சர் பேஷண்ட் நான் இப்போ உன் முன்னாடி இப்படி கம்பீரமா நிக்கிறேன்னா அதுக்கு அவன் தான் காரணம். அவனோட பெர்ஸ்ட் டெஸ்ட் பீஸ் ஹியூமன் நான் தான்.. உன்னை போல துரோகியா நான் இருப்பேன்னு நினைச்சியா? எனக்கு உயிர் கொடுத்தவனோட உயிரை எடுக்கிறவன் இல்ல நான்.. அந்த பிரம்மனுக்கு தளபதியா இருப்பேன் தவிர எப்போவுமே எமனா இருக்க மாட்டேன்" என்று சொல்ல, சித்தார்த்தின் இதழ்களோ இப்போது முழுதாக விரிந்து கொள்ள "லெட் ஹிம் கோ" என்று சொன்னான். உடனே சித்தார்த்தைப் பார்த்த அஜய் "சாரி சித்தார்த், அவனை நீ மன்னிச்சாலும் நான் மன்னிக்கிறதா இல்ல" என்று சொன்னவன் நரேனை அழுத்தமாகப் பார்த்து “எதிரிக்கு எதிரி நண்பன் மட்டும் இல்ல, நண்பனோட எதிரி எனக்கும் எதிரி தான்” என்று சொல்லிக் கொண்டே அவனை நோக்கி சுட்டான். அடுத்த கணமே, துப்பாக்கியில் இருந்த தோட்டாவினால் அவன் மூளை வெடித்து சிதற, அடுத்த கணமே சுற்றி இருந்த அவனது காவலாளிகளையும் கண நேரத்தில் சுட்டு வீழ்த்தி இருந்தான். சித்தார்த்தோ கண்களை மூடித் திறந்து கொள்ள, அவன் அருகே வந்த அஜய் சித்தார்த்தின் விழிகளைப் பார்த்துக் கொண்டே அவன் கட்டை அவிழ்த்தவன் "என்னையும் அவனை போல துரோகின்னு நினச்சுட்டே தானே" என்று கேட்க , சித்தார்த்தோ "ஐ ஆம் சாரி" என்றபடி எழுந்து கொண்டு அணைக்க போக அவன் நெஞ்சில் துப்பாக்கியை வைத்து தள்ளி நிறுத்தியவன் "ஒரு பெண்ணுக்காக உன்னை கொல்லுவேன்னு நினைச்சியா? உன் படைப்பு மேல அவ்ளோ தான்ல உன் நம்பிக்கை" என்று சொன்னவன் விறு விறுவென வெளியே சென்றான். சித்தார்த்தோ சிறு புன்னகையுடனேயே "அஜய்" என்று அழைத்துக் கொண்டே பின்னே செல்ல, அவனை அனல் தெறிக்க திரும்பிப் பார்த்தவன் "என் கிட்ட பேசாதே" என்று சொன்னபடி ஜீப்பில் ஏறிக் கொண்டான். சித்தார்த்தும் பாய்ந்து அவன் பக்கத்தில் ஏறிக் கொண்டே "அஜய், ஜஸ்ட் லீவ் இட்" என்று சொல்லிக் கொண்டே அவனை இழுத்து இறுக அணைத்துக் கொண்டவன் "உன் கூட மனசு விட்டு பேசி எவ்ளோ நாள் ஆச்சு" என்று சொன்னான். ஆம் சித்தார்த் சொன்ன போல எப்போதுமே அவனுக்கு தான் செதுக்கிய படைப்புகள் மீது அதீத அன்பு இருக்கும்.. அது பீட்டர் ஆனாலும் சரி, அஜய் ஆனாலும் சரி.. அவர்களின் பிரம்மன் அவன் தான்..