Twist 21 போட்டி
கதை விமர்சனம்
கதை எண்:10 - நிழல் போல தொடர்வாயோ?
இக்கதையில் நாயகன் நாயகி என்று யாரையும் என்னால் குறிப்பிட்டு சொல்ல முடியாது. கதையே இக்கதையின் நாயகன் நாயகிகளே. ?
அழகான அழுத்தமான கதை.?
போட்டியின் தலைப்புக்கு ஏற்ற ஒரு கதை.??
ஒரு தேடுதல் வேட்டையில் தொடங்கி
தேடுதல் வேட்டை பலமாக மாறி…
அத்தேடுதல் வேட்டையின் உண்மை காரணம் தெரிய வர அதிர்ச்சிக்குள்ளாகியதோ…?
அதிர்ச்சியான செய்திகள் நெஞ்சை அழுத்தியதோ…?
நெஞ்சை அழுத்திய செய்தி
தீரா வலியை பரிசளத்ததோ…?
நட்பு என்ற உறவில் பல மர்மங்கள் மறைந்துள்ளதோ…
நட்பின் மர்மங்கள் வெளி வர
அதனின் எதிர்வினை தான் யாதோ…?
நிழலாய் தொடர்வது
நிஜமாய் மாறியதோ…?
அதன் தாக்கத்தில் மீண்டும்
நிஜமானது நிழலாய் மாறியதோ…?
நிழல் நிஜத்தை தொடர்ந்ததா
இல்லை நிஜம் நிழலை தொடர்ந்ததா…?
என அறிய கதையை வாசியுங்கள்.?
அழகிய கதையை அழகாய் தந்த ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்…???
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்…???
அன்புடன்
ஸ்ரீராஜ்