ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 80

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 80)


ஆமாப்பா...ஆமா...! இருந்தா ஒரேயடியா அயோக்கியனா இருக்கிறது.. மாறினா ஒரேயடியா நல்லவனா மாறிடறது. அதாவது, வைச்சா குடுமி, சிரைச்சா மொட்டை..
அப்படித்தானே...? ஓ... தப்பா சொல்லிட்டேனோ..? வைச்சா தாடி, சிரைச்சா வழுக்கை முகம்.


உண்மை தான்..! என்றோ தாலி கட்டிய மனைவிக்கு செய்த தீதும், பாவமும்... இன்று வேறொரு பெண்ணான வந்தனாவின் விஷயத்தில் செய்யாத குற்றத்திற்கு வீண் பழியேற்று, செருப்படி வாங்கி, வெட்கப்பட்டு, துக்கப்பட்டு, மீளாத்துயரில் வீழ்ந்து இன்று தனக்குத் தானே தண்டனை விதித்து, தனித்து ஒதுங்கி வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.


எப்பொழுதுமே நாம் செய்த தவறுக்கு உடனுக்குடன் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை.
காலம் தாழ்த்தி, அதுவும் நம் உடலும், மனமும், வயதின் காரணமாக பலவீனப்பட்டு இருக்கும்போது தான்... நம் தவறுகளுக்கு தண்டனைகளே கிடைக்கின்றன. அதுவும் நேரடியாக அல்லாமல் நாம் நேசித்தவர்களின் மூலமாகவோ
அல்லது நேசித்தவர்களுக்கே
துயரங்களைக் கொடுத்து மொத்த வலிகளையும் நமக்கு அளித்து விடுவான். பாவத்தின் சம்பளம் மரணம் இல்லை...
மரணம் விடுதலையின் திறப்பு.
பாவத்தின் சம்பளம் தண்டனை
அது தான் உண்மை..!


தண்டனை கிடைத்த பிறகுத் தான்... மனிதனாகவே மாறத் தோணுகிறதோ... ?தவறுகளையும் உணரத் தோணுகிறதோ...?


இப்ப வருத்தப்பட்டு என்னடி பிரயோஜனம்...? அப்பவும் யோசிக்கலை, இப்பவும் யோசிக்கலை. அப்படி சொந்த புத்தியும் கிடையாது, இப்படி சொல் புத்தியும் கிடையாது.
அவனுக்கான தண்டனையை
அவன் அனுபவிக்கிற மாதிரி, உனக்கான தண்டனையை நீயும் அனுபவிச்சுத்தான் ஆகணும். அப்பத்தான், சீக்கிரம்
பாப விமோசனம் கிடைச்சு..
ரெண்டு பேருமே தண்டனையில் இருந்து மீள முடியும். அதற்க்குப்பிறகு,
சந்தோஷமா இருக்க முடியும்.


"திருந்தாத உள்ளங்கள்
இருந்தென்ன லாபம்...?
வருந்தாத உள்ளங்கள்
வாழ்ந்தென்ன லாபம்..?
இருந்தாலும் போனாலும்
பேர் சொல்ல வேண்டும்..
இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்..!"


😆😆😆
CRVS (or) CRVS 2797
 
Top