ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 80

pommu

Administrator
Staff member
நிலவு 80

கடைக்கு சென்று அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டு, "அண்ணன் ரெண்டு டீ..." என்று சொன்ன அர்ஜுனோ கஜனைப் பார்த்து, "திடீர்னு என்ன இந்த பக்கம்?" என்று கேட்டான்.

"அடுத்த வாரம் ராகவிக்கு டெலிவரி." என்றான் கஜன்.

"ஓஹ்..." என்றான்.

"வர்றியா, இல்லையா?" என்று கேட்டான்.

அவனிடம் மௌனம்.

"சொல்லுடா..." என்ற அதட்டல் கஜனிடம்.

ஒரு பெருமூச்சுடன் கஜனை ஏறிட்டுப் பார்த்தவன் இல்லை என்று தலையாட்ட, "எவ்ளோ நாள் இப்படியே இருக்க போற?" என்று கேட்டான்.

"வாழ்க்கை முழுக்க..." என்று பதில் வந்தது.

கஜனோ அழுத்தமாக முகத்தை இரு கைகளாலும் தேய்த்துக் கொள்ள, அவர்களிடம் டீ நீட்டப்பட்டது.

அதனை வாங்கிக் கொண்டு, "ராகவி, உன்னை கேட்டுட்டே இருக்கா." என்றான்.

"அவளுக்கு நான் வேணாம்." என்றான் விழிகளைத் தாழ்த்திக் கொண்டு.

"அவளுக்கு நீதான் வேணுமாம்..." என்றான்.

"வேற நல்ல பையனா பார்த்து கட்டி கொடுங்க." என்றான்.

இதழ் குவித்து ஊதிக் கொண்டு டீயை குடித்த கஜனோ, "முடியலடா..." என்று சலித்துக் கொள்ள, "யாழினி வளர்ந்துட்டாளா?" என்று கேட்டான்.

ராகவியைப் பற்றி அவன் பேச விரும்பவில்லை என்று தெரிய, அலைபேசியை எடுத்து யாழினியின் புகைப்படங்களைக் காட்டினான்.

அதனை மென் புன்னகையுடன் பார்த்தவன், "அழகா இருக்கா!" என்று சொல்ல, "மாமா உன்னை பார்க்கணும்னு கேட்டுட்டே இருந்தார். நான் எதுவுமே சொல்லல, நீ இல்லாம ரொம்ப வருத்தப்படுறாங்க..." என்றான்.

அவனிடம் பதில் இல்லை.

"ராகவிக்கு நான் வேற புருஷன் கட்டி கொடுக்கலாம், ஆனா அவங்களுக்கு நீ ஒருத்தன் தான் மகன். நினைவிருக்கா?" என்று கேட்க, அர்ஜுனுக்கு அந்த வார்த்தைகள் என்னவோ போல ஆகிவிட கண்களை மூடி திறந்தவன், "என்னை கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணாதீங்க." என்றான்.

"ரொம்ப கறாரா இருக்க..." என்று சொல்லிக் கொண்டு டீயை குடிக்க, அர்ஜுனும் டீயை குடித்து முடித்து இருந்தான்.

"அதுசரி, எதுக்கு இப்படி மீசை, தாடி எல்லாம்? ஷேவ் எடுக்க மாட்டியா என்ன?" என்று கேட்டான்.

"இத உங்க அப்பாகிட்ட எப்போவாவது கேட்டு இருக்கீங்களா?" என்று அவன் கேட்டான்.

அவனை மேலிருந்து கீழ் பார்த்து விட்டு கழுத்தை அழுந்த வருடிக் கொண்டு, "குழந்தையை பார்க்கவும் ஆசை இல்லையாடா?" என்று ஆதங்கமாக கேட்டே விட்டான்.

"பார்த்தா கூடவே இருக்கணும்னு தோனும்." என்றான்.

"நல்லது தானே?" என்றான்.

"ராகவிக்கு நல்லது இல்லையே..." என்றான்.

"அட போடா..." என்று எரிச்சலாக சொல்லிக் கொண்டு எழ, அர்ஜுன் டீக்கு பணத்தை கொடுத்து இருக்க, அவனுடன் நடந்து மீண்டும் தனது வண்டிக்கு அருகே வந்தான் கஜன்.

"பல்லவி எப்படி இருக்கா?" என்று கேட்டான்.

"அவ நல்லா இருக்கா, ரொம்ப மனசு வருத்தப்பட்டா, உன்னை பார்க்க ஆசைப்பட்டா. நீதான் யாரையும் பார்க்க முடியாதுனு சொல்லிட்டு இருக்கியே..." என்றான்.

"அம்மாவும் அப்பாவும் எப்படி இருக்காங்க?" என்று கேட்டான்.

"ராகவியோட டெலிவரிக்கு வர்றேன்னு சொல்லி இருக்காங்க, இருக்க வேண்டிய நீ மட்டும் தான் மிஸ்ஸிங்." என்றான்.

அர்ஜுனிடம் மௌனம் மட்டுமே!

"எதாவது பேசு அர்ஜுன்." என்றான்.

"பேச என்ன இருக்கு?" என்றான்.

"சரி விடு, டெலிவரிக்கு வர தோனுச்சுன்னா கால் பண்ணு." என்றான்.

"தோனாது." என்று பதில் வந்தது.

"ரொம்ப ஸ்டபெர்னா இருக்க..." என்ற கஜன் வண்டியில் ஏறிக் கொள்ள, அர்ஜுனும் அவனை மென் புன்னகையுடன் வழியனுப்பி விட்டு, அவன் காரையே வெறித்துப் பார்த்துக் கொண்டு மார்புக்கு குறுக்கே கட்டியபடி நின்று இருந்தான்.

அடுத்த வாரத்தில் அவன் குழந்தை பிறந்து விடும். மனதில் ஆசை இருந்தது. சராசரி தந்தைக்கு தோன்றும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இத்தனை மாதங்கள் கடந்தும் சட்டென குடும்பத்துடன் ஒன்ற முடியவே இல்லை. இன்னுமே அவனால், தான் பட்ட வலியில் இருந்து மொத்தமாக மீள முடியவில்லை.

தன் மீது இப்படி நம்பிக்கை இல்லாத பெண்ணுடன் எப்படி வாழ்வது என்கின்ற எண்ணம் தான். ஏதாவது ஒரு புள்ளியில் அவள் மீது கோபத்தைக் காட்டி, மீண்டும் அவளைக் காயப்படுத்தி விடுவோமோ என்ற தடுமாற்றமும் இருந்தது. கோபம் என்பதை விட, வலியும் ஆதங்கமும் அளவுக்கு அதிகமாகவே இருந்தது. அவள் ஏற்கனவே இருந்த மனநிலையில் அவன் மீது வெறுப்பைக் காட்டி இருந்தால், அவன் அதனை பெரிதாக எடுத்து இருக்க மாட்டான்.

ஆனால் அவனுக்கு ஆசையாக முத்தமிட்டு இருக்கின்றாள், அவனை தழுவி இருக்கின்றாள், சந்தோஷமாக வாழ்ந்து இருக்கின்றாள். எல்லாமே ஒரே கணத்தில் துடைத்து எறியப்பட்டு விட்டதே? தனது பேச்சும் செயலும் அதற்கு காரணம் என்று அவனுக்கு புரிந்தது. ஆனாலும் ஒரு ஆதங்கம். உரிமையுடன் சேர்ந்த கோபம் இன்னுமே அவளில் தேங்கி இருந்தது.

அன்று அவள் ஒருத்தி, 'என் புருஷன் இத பண்ணி இருக்க மாட்டார்' என்று சொல்லி இருந்தாலே போதும், யாருமே அவனை காயப்படுத்தி இருக்க மாட்டார்கள். அவன் தாய் செருப்பால் அடித்து இருக்க மாட்டாள். அத்தனை அவமானம் அவனுக்கு நேர்ந்து இருக்காது. அத்தனை வலிகளை அவன் கடந்து இருக்க தேவையே இல்லை. அவனுக்கான முடிவை எழுதியது அவள்தான்.

என்றோ அவன், அவளுக்கு செய்த பாவம் அன்று கர்மாவாக அவனை ஆட்டி வைத்து இருந்தது. அவன் மூர்க்கமாக இருந்த சமயம் இது எல்லாம் நடந்து இருந்தால், அவனுக்கு இவ்வளவு வலித்து இருக்காதோ என்னவோ? கொஞ்சம் கொஞ்சமாக மாறினான். அவளுக்காக மாறிக் கொண்டு இருந்தானே. தனது கடையில் ஏற்பட்ட கோளாறினால் தான், அவள் மீது கடைசி நாள் எகிறிப் பாய்ந்தான். வார்த்தைகளின் வீரியம் புரியாமல் எல்லாவற்றையும் கத்தி போல வீசி எறிந்தான்.

அன்று அவன் நிதானமாக இருந்து இருந்தாலோ, தனது பிரச்சனையை அவளிடம் சொல்லி இருந்தாலோ, அவனுக்கு இந்த நிலை உண்டாகி இருக்காது. அன்று அவன் செய்த பிழைதான், அவளுக்கு அவன் மீதான மொத்த நம்பிக்கையையும் துடைத்து எறிந்து இருக்க வேண்டும். எப்படியோ எதிர்பாராத திருப்பங்கள் நடந்து முடிந்து விட்டன.

அவன் மீதும் சரி, அவள் மீதும் சரி, தப்புகள் இருந்தன. இனி எதையும் மாற்ற முடியாது. ஜெயிலில் இருந்து வந்த நேரம் அவனுக்கு இருந்த அழுத்தமும் வலியும் இப்போது இருக்கவில்லை. காலம் அவனைக் கொஞ்சமாக மாற்றி இருந்தது. இப்போதெல்லாம் வார்த்தைகளில் அவன் அதீத கவனம் செலுத்துகின்றான். இஷ்டத்துக்கு எதுவும் பேசுவது இல்லை. வார்த்தைகளைப் பார்த்து பார்த்து விடுகின்றான். கிட்டத்தட்ட மௌனமாகி விட்டான்... தேவை இன்றி பேசுவதை குறைத்துக் கொண்டான்...

வன்மம் வளர்ப்பதை விட்டு விட்டான்...

மன்னிக்க பழகிக் கொண்டான்... விட்டுக் கொடுக்க பழகிக் கொண்டான்...

வந்தனாவுக்கு இப்படி ஆனதற்கு ஏதோ ஒரு வகையில், தான் காரணம் என்கின்ற குற்ற உணர்வும் அவனுக்குள் இருந்தது. சாதாரணமாக சொன்ன வார்த்தைகள் இப்படி நிஜம் ஆகி விட்டதே என்று, அவன் மனசாட்சி அவனை அழுத்திக் கொண்டு இருந்தது. வார்த்தைகளுக்கு வீரியம் அதிகம். இஷ்டத்துக்கு பேசக் கூடாது என்று, வாழ்க்கை அவன் நெற்றிப் பொட்டில் அடித்து புரிய வைத்து இருந்தது.

இத்தனை நாட்கள் எதுவுமே வேண்டாம் என்கின்ற மனநிலையில் இருந்தவனுக்கு, குழந்தை விஷயம் கொஞ்சமாக எதிர்பார்ப்பை கொடுத்து இருந்தது. பாறையின் இடுக்கில் பூ பூப்பது போல, அவனுக்குள் மிக மெல்லிய மாற்றம் உருவாகி இருந்த போதிலும், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருந்தான்.

***

அன்று வீட்டுக்குள் கஜன் நுழைந்ததுமே, "அர்ஜுன்கிட்ட சொன்னீங்களா அண்ணா?" என்று கேட்டாள் ராகவி.

"ம்ம்... ஆனா வரமாட்டேன்னு சொல்லிட்டான்." என்று சொல்லி விட்டு ராகவியைப் பார்க்காமலே அறைக்குள் சென்றான்.

அவனைத் தொடர்ந்து பின்னே சென்ற பல்லவி, "இப்போ வர மாட்டான்னு எதுக்கு ராகவிகிட்ட சொன்னீங்க? அவ முகம் சோர்ந்தே போயிடுச்சு..." என்றாள்.

"எதிர்பார்த்து அவன் வரலைன்னா அது பெரிய ஏமாற்றம் பல்லவி. இன்னைக்கு பேசுனதுல இருந்து அவன் வருவான்னு தோனல." என்று சொல்லிக் கொண்டு குளிக்க சென்றவன், குளித்து விட்டு குழந்தையைத் தூக்கியபடி மொட்டை மாடிக்கு சென்று இருந்தான்.

"யாழி குட்டி!" என்று அவன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டு இருக்க, அவன் அருகே வந்து நின்ற சக்திவேலோ, "யாழி குட்டி என்ன சொல்றா?" என்று கேட்க, "சிரிக்கும் போது செம்ம அழகா இருக்கா..." என்றான் கஜன்.

சக்திவேலும் குழந்தைக்கு முத்தமிட்டு கஜனைப் பார்த்தவன், "அந்த பையன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கான்?" என்று கேட்டான்.

"வலுக்கட்டாயமா இழுத்துட்டா வர முடியும்பா?" என்று கஜன் கேட்க, "எனக்கு அவன் மேல நல்ல அபிப்ராயமே இல்லை கஜன். வந்தனா விஷயத்துல அவன் தப்பு பண்ணலைன்னாலும், ராகவியை அவ்ளோ கஷ்டப்படுத்தி இருக்கான். அதெல்லாம் நினைக்கும் போது அவ்ளோ கோபமா இருக்கு. இவன் மேல அவளுக்கு இப்போ காதல் வேற எப்படி வந்து தொலைச்சுதோ தெரியல..." என்று சலித்துக் கொள்ள,

கஜனோ அவன் சலிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டு, "காதல் எப்போ வரும், எப்படி வரும்னு தெரியாது போல..." என்றான்.

சக்திவேலோ, "இன்னைக்கு முழுக்க முகத்தை தூக்கி வச்சுட்டே இருக்கா. பார்க்கவே பாவமா இருக்கு. அவளுக்காக நான் அவனை ஏத்துக்கலாம்னு யோசிக்கிறேன். ஆனா அவன் இப்போ எதுக்கு இவ்ளோ முரண்டு பிடிக்கிறான்? நம்ம குடும்பத்துல அவன் மேல யாருமே வந்தனா விஷயத்துல கை வைக்கலையே? அப்புறம் என்னவாம்?" என்று ஆதங்கமாக கேட்டான்.

"அவனுக்கு நம்ம மேல கோபம் இல்லப்பா, ராகவி மேல கோபம். அவ, அவனை நம்பலன்னு ஆதங்கம். அவன் அம்மா செய்யாத தப்புக்கு அடிச்ச கோபம். காரணமே இல்லாம அத்தனை நாள் ஜெயில்ல இருந்து இருக்கான். அதுதான் மனசு வெறுத்துப் போய் இருக்கான். அவனும் ஒரு வகைல ரொம்பவே பாவம். குழந்தையை பார்க்க ஆசைப்படுறான் தான். ஆனா ராகவி கூட வாழ வேண்டி வந்திடுமோனு தவிர்த்திடுறான்." என்று சொல்ல,

சக்திவேலோ, "அவ வாழ்க்கையை நினைச்சு மட்டும் தான் கஜன் எனக்கு இப்போ மனசு கஷ்டமா இருக்கு. வந்தனா வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா இவ இப்படி ஒரு நிலைமைல இருக்கிறா. ஒரு மாதிரி மனசை பிசையுது. அவ ராணி போல வாழணும்னு ஆசைப்பட்டேன். இப்போ படிச்சு முடிக்காம, வயித்துல குழந்தையோட நிக்கிறத பார்க்க முடியலடா..." என்று மனம் வருந்தியவனுக்கு கண்களும் கலங்கி விட்டன.

கஜனோ அவனையே பார்த்து இருந்தவன், "இப்போ இல்லன்னாலும் எப்பவாச்சும் அவங்க வாழ்க்கை சரி ஆகும் அப்பா. நான் இப்படியே விட்டுட மாட்டேன். கொஞ்சம் டைம் கொடுங்க, அவன் மனச கொஞ்சம் கொஞ்சமா மாத்திடலாம். அவன் நீங்க நினைக்கிற அளவுக்கு மோசமானவன் இல்லை... நல்லவன் தான்... இப்போ நிறையவே மாறி இருக்கான்... ராகவி மேல உயிரையே வச்சு இருக்கான்... கண்டிப்பா அவங்க நல்லா வாழுவங்கன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு" என்று யாழினியைத் தூக்கி அவனிடம் நீட்டியவன்,

"கண்டதை நினைச்சு மனச குழப்பிக்காம இவ கூட விளையாடுங்க." என்று சொல்ல, சக்திவேலும் குழந்தையுடன் விளையாட ஆரம்பித்து விட்டான்.

***

கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த ராகவிக்கு மனம் எல்லாம் வலித்துக் கொண்டு இருந்தது. தனது நிறைமாத மேடிட்ட வயிற்றைக் குனிந்து பார்த்தாள்.

'வரமாட்டேன்' என்று சொல்லி விட்டானே!? கண்கள் கலங்கி போயின. தன்னைப் பார்க்க வரவில்லை என்றாலும் பரவாயில்லை, குழந்தையைப் பார்க்க அவன் வந்து இருக்கலாமே என்கின்ற ஆதங்கம் அவளுக்கு. சற்று கோபமும் வந்தது, அழுகையும் வந்தது. இது அவனுடைய குழந்தை. குழந்தை மீது சின்ன ஆசை கூட இல்லாமல் போய் விட்டதோ என்று ஆதங்கமாக இருந்தது. கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

'வர மாட்டேன்னு சொன்ன அப்புறம், எதுக்கு கூப்பிடணும்?' என்று அவள் தன்னை சமாதானப்படுத்த முயன்றாலும், இந்த மனம் அவனை தானே சுற்றி சுற்றி வந்தது. அவனுடன் வாழ்க்கையினை ஆரம்பித்த தருணத்தில், அவனை அவளுக்கு பிடிக்காமல் இருந்து இருக்கலாம். அதன்பிறகு அவளை சிறுக சிறுக ஈர்த்து இருந்தானே! இப்போது மொத்தமாக ஈர்த்து விட்டான்.

அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். ஆனால் வேண்டாம் என்று விலகி நிற்கின்றான். அவள் மீதும் தவறுதான். விசாரித்து விட்டு முடிவு எடுத்து இருக்கலாம். குற்றவாளிக்கு கூட அவன் பக்க நியாயம் சொல்ல வாய்ப்பு கொடுப்பார்கள். அதனைக் கூட அன்று அவனுக்கு அவள் கொடுக்கவில்லை. அதனை நினைக்க இப்போது வலித்தது. காரணமே இல்லாமல் அவனைத் தண்டித்து விட்டாள்.

அவள் தானே தவறு செய்தாள்? அவளிடம் காட்ட வேண்டியது தானே? இந்த குழந்தை என்ன பாவம் செய்தது என்று ஆதங்கம் அவளுக்கு. ஒரு அழுத்தத்துடனேயே அவளும் தூங்கிப் போனாள்.

அந்த வாரம் விரைவாக நகர, அவளது பிரசவ நாளும் நெருங்கி இருந்தது. பார்த்தீபனும் பைரவியும் அவளைப் பார்க்க வந்து இருந்தார்கள். ராகவியின் கையைப் பற்றி தனியாக அறைக்குள் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தாள் பைரவி. அர்ஜுனை நினைத்து அவள் தினமுமே அழுது கொண்டு இருக்கின்றாள். அவனைப் பார்க்க வேண்டும் போலவே இருக்கும். 'இப்போது வேண்டாம்' என்று தடைகள் இருக்க, அவளும் என்னதான் செய்வாள்.

"அர்ஜுன் வருவானா ராகவி?" என்று தழுதழுத்த குரலில் கேட்டாள்.

தலையைத் தாழ்த்திக் கொண்டு, "வர மாட்டேன்னு சொல்லிட்டார் அத்தை." என்றாள்.

"அவன் குழந்தையை பார்க்க அவனுக்கு கொஞ்சமும் ஆசை இல்லையா?" என்று சற்று ஆதங்கமாக கேட்டு விட்டாள்.

அப்படியாவது மகனைப் பார்த்துவிட மாட்டோமா என்கின்ற ஏக்கம் பைரவிக்கு.

"அவரை திட்டாதீங்க அத்தை, தப்பு என்னோடது தான். அன்னைக்கு நான் நிதானமா இருந்து இருக்கணும், விசாரிச்சு இருக்கணும், அவர் பேசுறதுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கணும்." என்று சொன்னவளோ, கலங்கிய கண்களுடன் பைரவியைப் பார்த்துக் கொண்டு,

"அன்னைக்கு நான் அவர் பக்கம் நின்னு இருந்தா, அவருக்கு நீங்க அடிச்சு இருக்க மாட்டிங்கள்ல?" என்று கேட்டாள்.

அழுது விடுவாள் போல இருந்தது. ஆம் என்று சொன்னால் குற்ற உணர்வில் தவித்துப் போவாள் என்று,

"இல்லம்மா... அப்படி இல்ல..." என்று ஆரம்பிக்க, "பரவாயில்லை, உண்மையை சொல்லுங்க. அடிச்சு இருக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். தப்பு என் மேலதான்..." என்று சொல்லும் போதே கண்ணீர் வழிய,

அதனை பைரவியே துடைத்து விட்டபடி, "எதுக்கு அழுதுட்டு இருக்க?எல்லாம் சரி ஆயிடும், அவன் கண்டிப்பா வருவான். நானும் உன் மாமாவும் இங்கதான் கொஞ்ச நாள் இருக்க போறோம். அவனை கையோட அழைச்சிட்டு போகணும்னு அவர் வந்து இருக்கார்." என்று சொல்ல,

"என் கூட அவர் இல்லன்னாலும் பரவாயில்லை, உங்ககூட வச்சுக்கோங்க. இப்படி அவர் தனியா இருக்க வேணாம், என் கூட வாழ சொல்லி கட்டாயப்படுத்தாதீங்க. அப்போ அவர் உங்ககூட வர வாய்ப்பிருக்கு." என்றாள்.

பைரவியும் பெருமூச்சுடன் அவள் தலையை வருடிக் கொண்டு, "சரி ரெஸ்ட் எடு, நாளைக்கு ஹஸ்பிடல் போகணும்ல..." என்று சொல்லிவிட்டு வெளியேறி இருந்தாள்.

வெளியே நின்று, பார்த்தீபனும் கஜனும் பேசிக் கொண்டு இருந்தார்கள்.

"உடம்பு எப்படி இருக்கு மாமா?" என்று அவன் கேட்க, "இப்போ நல்லா இருக்கு மாப்பிள்ளை." என்று சொன்னவனோ, ஒரு மௌனத்தின் பின்னர், "அர்ஜுன் என்ன சொன்னான்?" என்று கேட்டான்.

மகனை நினைத்து பார்த்தீபன் தவிப்பது கஜனுக்கு புரிந்தது.

இதழ் குவித்து ஊதிக் கொண்டு, "அவனை கொஞ்சம் கொஞ்சமா தான் சரி பண்ணணும். அன்னைக்கு பேசுனதுல இருந்து, குழந்தையை பார்க்க அவனுக்கு ஆசையா இருக்குன்னு புரிஞ்சுது, ஆனா ரொம்ப அழுத்தமா இருக்கான்" என்றான்.

"அவன் சரியான அழுத்தக்காரன் தான்..." என்று பார்த்தீபன் சொல்ல,

"ம்ம்... குழந்தை பிறக்கட்டும், அவன் பார்க்க வரலைன்னா என்ன? ராகவியை அழைச்சிட்டு போய் குழந்தையை காட்டலாம்னு எனக்கு தோனுது. அப்போ கொஞ்சமா மனசு மாறுவான். அதுக்கப்புறம் நீங்க போய் பாருங்க, மனசு விட்டு பேசுங்க, உங்க கூட கண்டிப்பா வருவான். வீட்டுக்கு அழைச்சிட்டு போயிடுங்க. அவன் இப்படி தனியா இருக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

ராகவி கூட அவன் உடனே வாழணும்னு அவசியம் இல்லை. மனசு மாறி ஒரு நேசத்தோட அவங்க சேரணும்னு நான் ஆசைப்படுறேன். கொஞ்சம் இடைவெளி கொடுத்தாலும் தப்பில்ல, அவ படிச்சு முடிக்கட்டும்." என்று நீளமாக அவன் திட்டத்தை எல்லாம் சொல்ல,

அவனையே பார்த்து இருந்த பார்த்தீபனோ, "யாரை எப்படி ஹாண்டில் பண்ணணும்னு உங்களுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சு இருக்கு. உங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டு இருக்கேன். சிதைஞ்சு போயிடுச்சுன்னு நினைச்ச என் பொண்ணு வாழ்க்கைக்கு, உயிர் கொடுத்து இருக்கீங்க. அவ இப்போ சிரிக்கும் போது எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? யாருமே என் பையன நம்பாத நேரம், நீங்க நம்பி இருக்கீங்க.

அவனுக்கு எல்லாமே பண்ணி கொடுத்து இருக்கீங்க. நீங்க இல்லன்னா அவன் அந்த நேரத்துல மொத்தமா உடைஞ்சு போய் இருப்பான்." என்று சொன்னவன் கண் கலங்கி விட்டான்.

ஒரு தந்தையாக அவன் வலி கஜனுக்கும் புரிய மெலிதாக புன்னகைத்தவன், "இத எல்லாம் நினைச்சு மனசை கஷ்டப்படுத்திக்காதீங்க, உடம்ப பார்த்துக்கோங்க. எல்லாம் நல்லதா நடக்கும். தோப்பு வீட்ல தானே நிற்க போறீங்க?" என்று கேட்க,

"ம்ம்... அர்ஜுனை அழைச்சிட்டு தான் ஊருக்கு போறதா இருக்கேன்." என்றான்.

"குழந்தை பிறக்கட்டும், அவன் மனசை கொஞ்சம் கலைச்சுட்டா போதும், உங்க கூடவே வந்திடுவான்." என்று சொல்ல, பார்த்தீபனும் மெலிதாக புன்னகைத்துக் கொண்டான்.
 
Sugumari

New member

Super 🤩 🤩
 
Top