ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 78

pommu

Administrator
Staff member
நிலவு 78

ஜீப்பினுள் இருந்து பை ஒன்றை எடுத்தவன், "இங்கயே நில்லு..." என்று வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சோளக் காட்டினுள் நுழைய, அவனையே பார்த்துக் கொண்டு நின்று இருந்தாள் பெண்ணவள்.

என்ன ஒரு ஆளுமை, என்ன ஒரு கரிசனம்! அவன் கன்னத்தை முத்தமிட்ட அவள் இதழ்களில் இன்னுமே குறுகுறுப்பு. அதனை நினைத்த அவள் இதழ்கள் வெட்கத்தில் விரிந்து கொண்டன. அவன் முகம் முழுதும் முத்தமிட்டு, அவனுடன் ஒன்றி அவன் குழந்தையை சுமக்க வேண்டும் என்று நினைக்கும் போதே, மேனியெல்லாம் சிலிர்த்து அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. சட்டென நிதானத்துக்கு வந்து விட்டாள்.

விஜய் மீது மோகம் கொள்கின்றாளா? ஆச்சரியமாக இருந்தது. என்னதான் இத்தனை நாட்கள் அவனது அன்பில் திளைத்துக் கொண்டு இருந்தாலும், கலவி என்று நினைத்தாலே அவளுக்கு கோரமான நினைவுகள் தான் மனதில் தோன்றிக் கொண்டு இருந்தன.

உடல் ரீதியாக விஜய்யுடன் இணைந்துவிட முதல், மனதில் ஒரு தெளிவு அவளுக்கு வேண்டும் என்று தோன்றிக் கொண்டு இருந்தது. இன்று அவளை அறியாமலே அவன் மீது மோகம் வருகின்றது. அதிர்ச்சியாகவும் அதே சமயம், ஆச்சரியமாகவும் இருந்தது. தனது கூட்டில் இருந்து வெளியில் வந்து அவனுடன் சிறகடித்துப் பறக்க மனதளவில் அவள் தயாராகி விட்டாள். இதனை உணர்ந்தவள் மனம் எல்லாம் பரவசம். திருமணமாகி இத்தனை வாரங்கள் அவனை காக்க வைத்து விட்டாள்.

இனியும் காக்க வைக்க முடியாது. அவளும் மனதளவில் தயாராகி விட்டாள். இதற்கு மேல் எதற்கு இந்த விலகல் வேண்டும் என்று தனக்குத் தானே கேட்டும் கொண்டாள்.

இதனிடையே அவனும் சோளங் குலைகளைப் பறித்துக் கொண்டு வந்து சேர்ந்தவன், அதனை வண்டியின் பின்னே வைத்து விட்டு, வண்டியில் ஏறிக் கொள்ள, "நம்ம வீட்டுக்கு போறோமா?" என்று கேட்டாள்.

அவனோ, "நம்ம வீட்டுக்கு தான், ஆனா இப்போ பழைய வீட்டுக்கு..." என்றான்.

அவன்தான் சக்திவேலுக்கு பக்கத்து வீட்டில் வந்தனாவுக்காக வந்து குடியேறி இருக்கின்றானே? பூர்வீக வீட்டின் மேல் அவனுக்கு ஒரு பிரியம். அவன் தாய், தந்தை வாழ்ந்த வீடு அது. அதனை அடிக்கடி வந்து பார்த்து, துப்பரவு செய்துவிட்டு செல்வான். இன்று வந்தனாவையும் அழைத்து வந்து இருந்தான். மிகவும் பசுமையான இடம் அது. அவர்கள் வீட்டின் முன்னாலேயே குளம் இருந்தது. வீட்டை சுற்றி அத்தனை மரங்கள் இருந்தன.

வண்டியை வாசலில் நிறுத்தி விட்டு அவன் இறங்கிக் கொள்ள, "இந்த குளத்துல குளிக்கலாமா?" என்று கேட்டாள்.

"குளிக்க போறியா?" என்று கேட்டான்.

"மாத்து உடுப்பு இல்லையே?" என்றாள்.

"குளிக்க போறியா? இல்லையானு மட்டும் சொல்லு." என்று கேட்க, "குளிக்க ஆசைதான்..." என்றாள்.

"ஆசைப்பட்டா பண்ணிடணும்டி..." என்றான்.

"அப்போ மாத்திக்க?" என்று அவள் கேட்க, "எப்படியும் சமைச்சு சாப்பிட்டுட்டு இரவுதான் வீட்டுக்கு போவோம். இங்க யாரும் இல்லை. நானும் நீயும் மட்டும் தான். வெயில்ல போட்டா புடவை காய்ஞ்சிடும்." என்று சொல்ல,

அவளும், "புடவை காயுற வரைக்கும் நான் என்ன பண்ணுறது?" என்று கேட்டாள்.

"என்னோட வேஷ்டியை கட்டிக்கோ, இங்க என்னோட உடுப்பெல்லாம் இருக்கு தானே?" என்றான்.

இலகுவாக சொல்லி விட்டான். அவளோ அதிர்ந்து விட்டாள்.

"என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க?" என்று சிணுங்க, "நீ சரி வரமாட்ட..." என்று அவள் அருகே வந்தவன், அவளை இரு கைகளாலும் தூக்கிக் கொள்ள, "ஐயோ விடுங்க..." என்று அவள் கத்தியது அவன் காதில் விழவே இல்லை.

குளம் அருகே வந்து அவளை இறக்கி விட்டவன், அவளை அணைத்துக் கொண்டு குளத்தினுள் பாய்ந்து இருக்க, "யாரும் பார்த்திட போறாங்க..." என்று அவள் சொல்ல,

"நான் மட்டும் தான் இருக்கிறேன்..." என்று நீருக்குள் அவளுடன் அமிழ்ந்து எழுந்தவன், அவள் இதழ்களில் முத்தம் பதித்து விலக, "ஹையோ..." என்று சொல்லிக் கொண்டு முகத்தை வெட்கத்துடன் பக்கவாட்டாக திருப்பிக் கொண்டாள்.

"நீச்சல் தெரியுமா?" என்று அவள் காதருகே வந்து கேட்டான்.

அவனைத் திரும்பிப் பார்த்துக் கொண்டு, "இல்லையே..." என்று சொல்ல, "கத்து கொடுக்கட்டுமா?" என்றான்.

அதற்கும் இல்லை தான்.

"அப்போ நான் நீந்தட்டுமா?" என்று கேட்க, "ம்ம்..." என்று அவள் சொன்னதுமே, ஷேர்ட்டை கழட்டி குளக்கட்டில் போட்டவன் வெற்று மார்புடன் நீந்த, அவனையே பார்த்துக் கொண்டு குளத்தினுள் இடைவரை நீரினுள் நின்று இருந்தாள்.

நீண்ட தூரத்துக்கு போய் விட்டான்.

"மாமா!" என்றாள்.

கையை மட்டும் காட்டிக் கொண்டான். குளத்தின் நடுவே தாமரை மலர்கள் இருந்தன. பறித்துக் கொண்டு அவளை நோக்கி வந்தான். இளஞ்சிவப்பு நிற தாமரை மலர்கள் அவை. அவள் முன்னே வந்து நீருக்குள் மூழ்கி எழுந்தவன், ஒற்றைக் கையால் முகத்தில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டு அவளிடம் மலர்களை நீட்டி இருக்க, "ரொம்ப அழகா இருக்கு!" என்று சொல்லிக் கொண்டு வாங்கிக் கொண்டாள்.

அவற்றைத் தன்னுடன் அணைத்துக் கொண்டு அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ அதில் இருந்த சின்ன தாமரை மலரைக் கொய்து, அவள் தலையில் வைத்து விட்டவன், "அழகா இருக்க வந்தனா!" என்று அவளையே இமைக்காமல் பார்த்துக் கொண்டு சொன்னவன், எச்சிலையும் கூட்டி விழுங்கிக் கொண்டான்.

அவன் பார்வை வீச்சைத் தாங்க முடியாமல் அவள் விழிகளைத் தாழ்த்திக் கொள்ள, அவள் தாடையைப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி இருந்தான். அவளுக்கோ அவனைப் பார்க்க பார்க்க மூச்சடைத்தது. அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறந்தது. அவன் பெருவிரல் அவளது சிவந்த அதரங்களை வருட, ஒரு உஷ்ணப் பெருமூச்சுடன் கண்களை மூடிக் கொண்டாள். அவளை மோகமாக பார்த்துக் கொண்டு அவள் இதழ்களில் இதழ் பதித்து இருந்தான் விஜய்.

வழக்கமாக அவன் இதழ் தீண்டும் போது அவள் அதனை உள்வாங்கிக் கொள்வாள் அவ்வளவு தான். இன்று அவளிடம் உண்டான மாற்றத்தின் விளைவு, அவன் கொடுத்த முத்தத்துக்கு அவள் பதில் முத்தமும் வழங்க, அவனுக்கோ கிளர்ச்சியுடன் கூடிய சந்தோஷம். இந்த நாளுக்காக தானே அவன் காத்துக்கொண்டு இருந்தான்.

அவள் கையில் இருந்த தாமரை மலர்கள் பிடிமானம் இன்றி விழுந்து நீரில் மிதந்து செல்ல, சட்டென நிதானத்துக்கு வந்த விஜய் மெதுவாக அவளில் இருந்து விலகி அவளையே பார்த்து இருக்க, வெட்கம் தாளாமல் பார்வையைத் தாழ்த்திக் கொண்டவளோ, "போயிடலாம்..." என்றாள்.

அவனும் ஒரு குறும்பு சிரிப்புடன் மிதந்து கொண்டு இருந்த தாமரை மலர்களை சேகரித்துக் கொண்டு அவள் கையைப் பற்றியவன் குளக்கட்டில் ஏறிக் கொள்ள, அவன் ஷேர்ட்டை அவளே குனிந்து எடுத்து இருக்க, இருவரும் வீட்டை நோக்கி நடந்தார்கள். ஒரே முத்தத்தில் இருவரின் உணர்வுகளும் தாறுமாறாக கிளர்ந்தெழ ஆரம்பித்து விட்டன.

வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவனோ பூக்களை அவளிடம் கொடுத்து விட்டு, அறைக்குள் நுழைந்து ஒரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்தவன், "இத கட்டுடி, ஈரமா இருக்க..." என்றான்.

"ஷேர்ட்டும் கொடுங்க..." என்றாள் வெட்கத்துடன்.

"ஷேர்ட் எதுக்கு? இது மட்டும் போதும்..." என்றான்.

"ச்சீ..." என்று வேஷ்டியை வாங்கிக் கொண்டு அவள் அறைக்குள் செல்ல, அவனும் உடையை மாற்றி வேஷ்டி ஒன்றை அணிந்து கொண்டு, சமையலறைக்குள் நின்று சோளங் குலைகளை சுட ஆரம்பித்து இருந்தான்.

கொலுசு சத்தம் கேட்டது. சமையலறை வாயிலைப் பார்த்தான்.

"புடவையை காய போடணும்..." என்றாள்.

அவள் மார்பு வரை அவன் வேஷ்டி இருக்க, அவளைப் பார்த்து எச்சிலை கூட்டி விழுங்கிக் கொண்டு, புடவையை வாங்கிக் கொண்டு வெளியே சென்றவன், அதனை காயப்போட்டு விட்டு மீண்டும் உள்ளே வந்த சமயம், அவளோ சுட்டெடுத்த சோழங் குலைகளை ஒரு தட்டில் வைத்து, முன்னறைக்குள் கொண்டு வந்து வைத்து இருந்தாள்.

அவளை அந்த கோலத்தில் பார்த்ததுமே மீண்டும் அவனிடம் உஷ்ண பெருமூச்சு.

"சாப்பிடலாமா?" என்று விழிகளை உருட்டிக் கொண்டு கேட்டாள்.

"சாப்பிடலாமே..." என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்துக் கொண்டு சொல்ல, "அப்படி பார்க்காதீங்க..." என்று அங்கிருந்த இருக்கையில் அமர, அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான்.

அவன் வெற்று மார்பும் அவள் வெற்று தோள்களும் தாராளமாக உரசிக் கொண்டன. இருவரும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அவனுக்கு தான் உணவே இறங்கவில்லை. ஒரு கட்டத்தில் அதனை வைத்து விட்டு அவளையே பார்க்க, "சாப்பிடலையா?" என்று கேட்டாள்.

எம்பி அவள் இதழில் இதழ் பதித்து விலகியவன், "தோனும் போது இங்க சாப்பிட்டுக்கிறேன்." என்று சொல்ல, அவளும் ஒரு மென் சிரிப்புடன் அவனைப் பார்த்தவள், "உங்களுக்கு இப்போ என்ன தோனுது?" எனறு கேட்டாள்.

"என்னென்னவோ தோனுதுடி..." என்றான் மோகம் நிறைந்த குரலில்.

"தோனுறத பண்ணலாமே..." என்றாள்.

அவளை அதிர்ந்து பார்த்தான்.

"எனக்கும் தோனுது..." என்று சொன்னதுமே, அவள் முகத்தைத் தாங்கி இதழ்களை ஆழ்ந்து கவ்வி இருந்தான்.

அப்படியே அவளைத் தூக்கிக் கொண்டு அறைக்குள் நுழைந்து இருந்தான்.

கட்டிலில் அவளுடன் சரசமாடி முத்தமிட்டதில், இருவரிடமும் இருந்த வேஷ்டிகள் அநாதரவாக கிடந்தன. அவனுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. முத்தமிட்டு அவள் விழிகளைப் பார்த்தவன், "பிடிக்கலைன்னா சொல்லிடு..." என்றான்.

"ரொம்ப பிடிச்சு இருக்கு மாமா." என்று அவள் இதழ்களை அவன் இதழ்களில் பதிக்க, அது போதுமே அவனுக்கு.

அவளை மொத்தமாக ஆட்கொண்டு விட்டுதான் விலகி இருந்தான். ஒரு வேஷ்டி மட்டுமே இருவரையும் மறைத்துக் கொள்ள, அவன் கைவளைவினுள் படுத்து இருந்தவாறே விட்டத்தைப் பார்த்துக் கொண்டு இருந்த வந்தனா, "ஐ லவ் யூ மாமா!" என்றாள்.

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

திரும்பிப் பார்த்தான், "எதுக்கு இப்ப அழுகை?" என்று கேட்டான்.

"சந்தோஷத்துல அழுறேன்..." என்று சொன்னபடி அவன் மேல் சரிந்து படுத்துக் கொண்டு அவன் கழுத்தினுள் முகம் புதைக்க, அவனும் அவளை ஆசையாக தழுவி இருந்தான்.

இத்தனை நாட்கள் தடுமாறிக் கொண்டு இருந்த வாழ்க்கை, இன்று சீராக பயணிக்க ஆரம்பித்து இருந்தது. இருவரின் மனங்களும் நிறைந்து போய் இருந்தன. அவள் பயந்தவள் என்று எல்லோருமே நினைத்து இருந்தாலும், மனதால் மிகவும் உறுதியானவள்.

அவள் காதலும் அவள் விஜய்யும் அவளை உறுதியாக்கி மீட்டு எடுத்து இருக்க, தன்னவனுடன் சேர்ந்து சிறகடித்துப் பறக்க ஆரம்பித்து இருந்தாள் வந்தனா.

அன்று மதியம் முத்தமும் முனகலுமாக தான் உணவு சமைத்தார்கள்.

"கிஸ் பண்ணிட்டே இருக்கீங்க மாமா..." என்று அவள் செல்லமாக சிணுங்க, "பண்ணிட்டே இருக்கணும் போல இருக்குடி..." என்றான் அவன்.

ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். மாறி மாறி ஊட்டியும் விட்டார்கள்.

மாலை நேரம் போல அவனது வேஷ்டி மற்றும் ஷேர்ட்டை அணிந்திருந்த பெண்ணவளோ மரத்தில் சாய்ந்து நிற்க, அவள் அருகே வேஷ்டியுடன் நின்று இருந்தான் விஜய்.

"ஆம்பிள போல இருக்கேனா?" என்று அவள் கேட்க, "ஹா... ஹா..." என்று சிரித்துக் கொண்டு, "இல்லையே..." என்று சொன்னவன் விழிகள், அவள் கழுத்தைக் கடந்து கீழிறங்க, "மாமா, அத கேக்கல..." என்று சொன்னாள் அவன் விழிகளை மூடிக் கொண்டு.

"எல்லாம் பார்த்து தானே பதில் சொல்லலாம்..." என்று அவன் குறும்பாக சொல்லி அவள் கையை அகற்றி இருக்க, "உங்ககிட்ட கேட்டது என் தப்பு." என்று சொன்னபடி அவள் நடக்க ஆரம்பித்து விட்டாள்.

கையைப் பற்றி இழுத்தான். அவன் மீதே மோதி இருந்தாள்.

"ஷேர்ட்டை கொடுடி..." என்றான் அவளை மயக்கமாக பார்த்துக் கொண்டு.

"என் புடவை இன்னும் காயலயே?" என்றாள்.

"ஷேர்ட்டை கொடுக்க மட்டும் தான் சொன்னேன், புடவை கட்டிக்க சொல்லவே இல்ல..." என்று சொல்லிக் கொண்டு அவளைத் தூக்கிக் கொள்ள, "மாமா..." என்று அவள் சிணுங்கலாக அணைத்துக் கொண்டு அவன் கழுத்தில் முகம் புதைக்க, இருவரும் மீண்டும் வீட்டினுள் நுழைந்து விட்டார்கள்.

வந்தனாவின் கஷ்டமான நாட்கள் எல்லாம் விஜய்யுடனான சந்தோஷமான நாட்களின் மத்தியில் காணாமல் போய் இருந்தன. குற்றம் செய்தவர்கள் தான் வாழ தகுதி இல்லாதவர்கள். பாதிக்கப்பட்டவர்கள் சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள என்றும் தகுதியானவர்கள். வந்தனாவும் தனது சந்தோஷமான வாழ்க்கையை அவளது விஜய்யுடன் ஆரம்பித்து இருந்தாள்.
 
Top