ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 76

pommu

Administrator
Staff member
நிலவு 76

அன்று வந்தனாவுக்கு திருமணம். பெரிதாக யாரையும் அழைக்கவில்லை. அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடிவெடுக்கப்பட்டது. காலையில் அர்ஜுனுக்கு அலைபேசியில் அழைத்து இருந்தான் கஜன்.

அவனும் ஒரே அழைப்பில் எடுத்தவன், "சொல்லுங்க." என்று சொல்ல, "இன்னைக்கு வந்தனாவுக்கு கல்யாணம்." என்றான்.

மறுமுனையில் மௌனம். ஒரு பெருமூச்சுடன் குரலை செருமியவன், "அவ நல்லா இருக்கணும், கண்டிப்பா நல்லா இருப்பா." என்றான்.

"சரி அர்ஜுன் நான் வச்சிடுறேன், சொல்லணும்னு தோனுச்சு. அதுதான் சொன்னேன்..." என்றான்.

"என்னையும் மனுஷனா மதிச்சு சொன்னதுக்கு தேங்க்ஸ்!" என்றான். அந்த வார்த்தைகளில் எவ்வளவு வலி?

கஜனும் பெருமூச்சுடன் அலைபேசியை வைத்தவன் கையை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு நின்று இருந்தான். எப்படி இருந்த குடும்பம் இப்படி சிதைந்து போய் இருக்கின்றதே! எல்லாமே கைமீறிப் போய் விட்டது. அதிரடியாக எதனையும் சரி செய்ய முடியாது. காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். என்னதான் அவன் தன்னை நிதானமாக்கி இருந்தாலும், இப்போது வரை ஒரு கேள்வி மனதில் அரித்துக் கொண்டு இருந்தது.

ராகவியிடம் கேட்க வேண்டிய கேள்வி அது. முடிந்து விட்டது, இனி கேட்டு பயன் இல்லை என்று தெரியும். ஆனாலும் மனம் அவனை நிம்மதியாக இருக்க விடமாட்டேன் என்கின்றது. அடுத்த கணமே ராகவியின் அறைக் கதவைத் தட்டினான் கஜன்.

அவளும் திறந்தவள், "ரெடி ஆயிட்டேன்..." என்று சொல்ல, "உன்கிட்ட பேசணும்." என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்து கதவைத் தாழிட்டவன் கட்டிலில் அமர, அவளும் அமர்ந்தாள்.

"கேட்கவே கூடாதுனு நினைச்சிட்டு இருந்தேன் ராகவி. ஆனா முடியல..." என்று சொல்ல, அவளும் அவனைப் புரியாமல் பார்த்தாள்.

"அர்ஜுன் உனக்கு இவ்ளோ பண்ணி இருக்கான். ஏன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்ல தோனல? உனக்கு என் மேல அவ்ளோ தான் நம்பிக்கையா? அன்னைக்கு நீ பிடிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாதா சொன்னதால தானே, நான் உன் குடும்ப விஷயத்துல தலையிடாம ஒதுங்கி இருந்தேன். அன்னைக்கு ஒரு வார்த்தை நீ சொல்லி இருந்தா, இன்னைக்கு இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதே..." என்று ஆதங்கமாக கேட்டான்.

அவளிடம் பதில் இல்லை. தவறுதான், சொல்லி இருக்க வேண்டும். கஜன்மீது நம்பிக்கை வைத்து இருக்க வேண்டும். கஜனை மீறி அர்ஜூனால் என்ன செய்துவிட முடியும் என்று யோசித்து இருக்க வேண்டும். எதையுமே யோசிக்காமல் விட்டு விட்டாளே? அவன் மிரட்டலுக்கு பயந்து விட்டாளே?

இக்கணம் என்னதான் பிரச்சனை வேறு திசையில் சென்று கொண்டு இருந்தாலும், ஆரம்ப புள்ளி அவள் திருமணம் தானே?!

கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தவள், "தப்புதான்... அன்னைக்கே நான் எல்லாமே சொல்லி இருக்கணும். இப்போ எல்லாமே கைமீறி போயிடுச்சு. முட்டாள்தனமா நடந்து இருக்கேன் அண்ணா..." என்றாள்.

"அர்ஜூன் மட்டும் வந்தனா விஷயத்துல பாதிக்கப்படாம இருந்து இருந்தா, அவன் உனக்கு செய்த வேலைக்கு அவனை இப்போ கொன்னு இருப்பேன். அடிபட்டு மனசு வருந்தி இருக்கிறவன திரும்ப திரும்ப அடிக்க மனசாட்சி விடமாட்டேங்குது. இத உன்கிட்ட சொன்னா நீ வருத்தப்படுவனு தெரியும். ஆனா உன் மேல எனக்கு ரொம்பவே வருத்தம். என்னால கேட்காம இருக்க முடியல. உன் அண்ணனா நான் எந்த இடத்துல மிஸ் ஆனேன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்கேன்." என்றான் தழுதழுக்க.

"அண்ணா நீங்க சரியா தான் இருந்து இருக்கீங்க. நான் உங்கள நம்பி இருக்கணும், அப்பாவை நம்பி இருக்கணும். மிரட்டுனதால எதையும் யோசிக்காம பண்ணிட்டேன்." என்று முகத்தை மூடி அழுதவளை அணைத்துக் கொள்ள,

"அர்ஜுனை எதுவும் பண்ணிடாதீங்க அண்ணா..." என்றாள் விம்மலுடன்.

"மனம் திருந்தி வருந்துறவன தண்டிக்கிற அளவு உன் அண்ணன் மோசமானவன் இல்ல. அவனுக்கு உன்னை ரொம்பவே பிடிக்கும்..." என்று சொன்ன கஜனை, அவள் ஏறிட்டுப் பார்த்தாள்.

மெலிதாக புன்னகைத்தவனோ, "கல்யாணத்துக்கு கிளம்பணும், நாம ரெண்டு பேரும் போய்தான் விஜய்யை அழைச்சு வரணும். அவனுக்குன்னு நம்மள விட்டா யாரும் இல்ல." என்று சொல்லி அவளைக் கையுடன் அழைத்துச் சென்றான்.

***

இதே சமயம், கண்ணாடி முன்னே அமர்ந்து இருந்தாள் வந்தனா. அழகான சிவப்பு புடவை அணிந்து, தலை நிறைய பூக்களை வைத்து இருந்தாள். அவள் ஆசைப்பட்ட திருமணம், அதுவும் ஆசைப்பட்டவனுடன். ஆனால் மனதில் ஒரு வெறுமை. சந்தோஷமாக சிரிக்க முடியவில்லை. இன்னுமே அவளால் தனக்கு நடந்த கொடூரத்தில் இருந்து மொத்தமாக வெளிவர முடியவில்லை. ஆட்களுடன் இருக்கும் போது சந்தோஷமாக இருக்கின்றாள். ஆனால் தனிமையில் தவிக்கின்றாள்.

அழுது பயன் இல்லை என்று தெரியும்தான். இதில் இருந்து மீண்டுவிட வேண்டும் என்று நினைக்கிறாள். ஆனாலும் முடியவில்லை. தான் சோர்ந்து போனால் மொத்த குடும்பமும் உடைந்துவிடும் என்பதால், தான் திடமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றாள். அவள் ஆசைப்பட்டவன் அவளை இப்போது விழுந்து விழுந்து காதலிக்கின்றான்.

அவளுக்காக எல்லாமே செய்கின்றான். ஆனால் அதனை எல்லாம் ரசிக்க முடியாதளவு அழுத்தமாக இருக்கின்றது. அவனுடன் அவளால் கண்டிப்பாக உடனே வாழ்க்கையைத் தொடங்க முடியாது. அதற்கான நேரம் வேண்டும். அவள் சொன்னால் விஜய் புரிந்து கொள்வான் என்று அவளுக்கும் தெரியும். அவள் வாழ்க்கை சிறப்பாக அமைந்து விடும். விஜய் அவள் வாழ்க்கையை பூந்தோட்டமாக மாற்றி விடுவான். அவளுக்காக எதையும் செய்யக்கூடியவன் அவன் என்று அவளுக்கு இப்போது தெரிந்தது.

மாற வேண்டியது அவள் மனம் மட்டும் தான், மாறி விடுவாள். விஜய்க்காக மாறி விடுவாள். அவள் அழுது கொண்டு இருப்பது அவனுக்கு பிடிக்காது.

அவள் சிரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றான். எல்லாமே மாறிவிடும் என்ற நம்பிக்கையில் இன்று விஜய்யின் கையால் தாலியை வாங்க ஆயத்தமாகி விட்டாள். தன்னையே பார்த்து இருந்தாள். கண்கள் கலங்கி இருந்தன. அழுதுவிடும் தோரணையில் இதழ்கள் கீழ்நோக்கி வளைந்து இருந்தன. அழவே கூடாது என்று நினைக்கின்றாள். கஷ்டப்பட்டு கீழ்நோக்கி வளைந்த இதழ்களை மேல் நோக்கி வளைக்க முயன்றாள். மீண்டும் கீழ்நோக்கி தான் வளைந்தன.

கண்களை மூடி ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள். மனதில் விஜய்யின் எண்ணம் மட்டுமே! அவன் சிரிப்பு, அவன் ஆளுமை, அவன் கொடுத்த முத்தம். இவை மட்டுமே அவள் மனதில் ஓடின. இப்போது மெதுவாக கண்களைத் திறந்தாள். அவள் இதழ்கள் கஷ்டமே இல்லாமல் மேல் நோக்கி வளைந்தன. அழகாக சிரித்துக் கொண்டாள். அவன் நினைவே அவள் முகத்தில் அழகான புன்னகையைத் தோற்றுவித்து இருந்தது.

அவனுடனான வாழ்க்கை இன்னுமே அவள் வாழ்க்கையினை அழகாக்கி விடும் என்று அவளுக்குள்ளும் நம்பிக்கை பிறக்க, மெதுவாக எழுந்து கோவிலுக்கு செல்லும் பொருட்டு வெளியே வந்தாள்.

அழகாக ஆயத்தமாகி வந்தவளை முதலில் வந்து அணைத்து விடுவித்த பல்லவி, "ரொம்ப அழகா இருக்க வந்தனா!" என்று சொல்ல, "தேங்க்ஸ் அண்ணி!" என்றாள்.

விஜயாவுக்கு அவளைப் பார்க்க பார்க்க அழுகை வந்தது.

அடக்கிக் கொண்டு அவள் அருகே வந்தவள், "என் கண்ணே பட்டிடும்..." என்று சொல்லி சுற்றிப் போட்டுக் கொள்ள, தயாளனும் அவளை அணைத்து விடுவித்து அவள் நெற்றியில் முத்தமிட்டு, "நீ சந்தோஷமா இருக்கணும். அத நாங்க பார்க்கணும்..." என்றான்.

அவளும் ஆம் என்கின்ற ரீதியில் தலையசைத்து விட்டு, "அண்ணா எங்க?" என்று கேட்க, "விஜய்யை கோவிலுக்கு அழைச்சு வர போய் இருக்காங்க. நம்ம கிளம்பலாம், வா." என்று சொன்ன சக்திவேல், வந்தனாவை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றான்.

பார்த்தீபனுக்கு உடல்நிலை சரி இல்லை என்பதால், இவ்வளவு தூரம் இப்போது பயணம் செய்ய முடியாது என்று அவனும் பைரவியும் வரவில்லை. அலைபேசியில் அழைத்து வந்தனாவுடன் பேசி இருந்தான். இனியனும் துளசியும் மட்டும் வந்து இருந்தார்கள். எல்லோரும் இங்கிருந்து கோவிலுக்கு கிளம்பி இருக்க, கஜனும் ராகவியும் விஜய்யின் வீட்டை அடைந்து கதவைத் தட்ட, அவனும் கதவைத் திறந்தான்.

பட்டு வேஷ்டி, சட்டையில் நின்றவனைப் பார்த்த கஜனோ, "செமயா இருக்கடா, ரெடியா?" என்று கேட்க, "ம்ம்..." என்று சொல்ல, "அப்போ கிளம்பலாம், வா." என்று சொல்லி, அவனை கோவிலுக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கே எல்லாருமே வந்து சேர்ந்து இருக்க, தனக்கு அருகே வந்து நின்ற வந்தனாவைத் திரும்பிப் பார்த்தான் விஜய்.

அவளும் அக்கணம் அவனைப் பார்க்க, "ரொம்ப அழகா இருக்க!" என்றான் மென் சிரிப்புடன்.

"நீங்களும் தான்..." என்றாள்.

"நீங்களும் தான் மாமான்னு சேர்த்து சொல்ல வேண்டியது தானே?" என்றான்.

"கூப்பிட வேணாம்னு நீங்க தானே சொன்னீங்க..." என்று அவள் கண் சிமிட்டி சொல்ல, "கூப்பிடுற நேரம் என்னோட கன்ட்ரோல் போயிடுமோனு கூப்பிட வேணாம்னு சொன்னேன். இனி கன்ட்ரோல் போனா தப்பில்லையே?" என்று கண்ணடித்து சொல்ல, அவளோ இதழ் பிரித்து சிரித்துக் கொண்டு, "மாமா..." என்றாள்.

அவள் சிரிப்பையே பார்த்து இருந்த சக்திவேல், அருகே நின்று இருந்த துளசியைப் பார்க்க, "அவ இனி சந்தோஷமா இருப்பா சண்டியர் மச்சான்..." என்று அவர்களையே ரசனையாக பார்த்துக் கொண்டு சொன்னாள் அவள்.

எல்லோரும் ஒருவித நெகிழ்வுடனேயே நின்று இருக்க, ஐயரும் தாலியை கொண்டு வந்து விஜய்யிடம் கொடுக்க, அவனும் அதனை வாங்கி மந்திரங்களின் நடுவே அவள் கழுத்தில் கட்டி அவளை தன்னவளாக்கி இருந்தான்.

இருவரின் விழிகளும் இப்போது கலந்து கொண்டன. தாலி கட்டி முடிய அவள் விழிகளைப் பார்த்த விஜய்யோ, "உன் கூட வாழ்க்கை முழுக்க நான் இருப்பேன்டி." என்றான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் அவளுக்கு சட்டென அழுகை வந்து விட்டது. கண்ணில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, "எனக்கு தெரியும் மாமா." என்றாள்.

எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி வீட்டுக்கு புறப்பட்டு இருந்தார்கள். சக்திவேலின் வீட்டுக்கு பக்கத்து வீட்டிலேயே எல்லா ஏற்பாடும் செய்து இருந்தான் கஜன். அவளை தனியாக விட விஜய்க்கும் சம்மதம் இல்லை, கஜனுக்கும் இஷ்டம் இல்லை. அருகே இருந்தால் கூடவே வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டார்கள்.

அன்று இரவு மஞ்சள் நிற புடவை அணிந்து அலங்காரங்களுடன் விஜய்யின் அறைக்குள் நுழைந்தாள் வந்தனா. கையில் இருந்த பால் செம்பை அவனிடம் நீட்ட, அவனோ அதனை வாங்கி மேசையில் வைத்து விட்டு, அவள் கை பற்றி கட்டிலில் அமர்ந்து கொண்டு, "என்ன சொல்லணுமோ சொல்லு." என்றான்.

அவள் மனதில் ஆயிரம் இருக்கும் என்று அவனுக்கு தெரிந்து இருக்கின்றதே!?

அவனை ஏறிட்டுப் பார்த்து, "இதுக்கெல்லாம் நான் ஆசைப்பட்டேன் தான் மாமா. ஆனா அதுக்கான மனநிலை இப்போ இல்லை." என்றாள்.

அவளையே பார்த்து இருந்தான்.

"நீங்க ஒன்னும் வருத்தப்படாதீங்க, கண்டிப்பா நான் என்னை மாத்திக்குவேன்." என்றாள்.

அவனுக்காக பேசுகின்றாள். என்ன பெண் இவள்? இப்படியும் ஒரு பெண்ணால் நேசிக்க முடியுமா என்று தோன்றியது.

"நான் எங்க வருத்தபட்டேன்? உனக்கு தோனுற நேரம் சொல்லு, வாழ ஆரம்பிச்சுடலாம்." என்றான்.

அவள் விழிகள் கலங்கிப் போக, "நான் என்ன மாமா தப்பு பண்ணுனேன்? எனக்கு ஏன் இப்படி ஆச்சு?" என்று தன்னை அதற்கு மேல் அடக்க முடியாமல், மனம் விட்டு கதற ஆரம்பித்துவிட, அவன் உடைந்து போய் விட்டான்.

"ஹேய் என்னடி இது? நான் இருக்கேன்ல..." என்று சொல்லிக் கொண்டு அவளை இறுக அணைத்தவனின் கண்களிலும் கண்ணீர் வழிந்தது.

அவள் முகத்தைப் பற்றி, அழுது கொண்டு இருந்தவளைப் பார்க்க, அவன் விழிகளைப் பார்த்தவள். "நீங்க ஏன் அழுறீங்க?" என்று கேட்டாள்.

"நீ அழுதா நானும் அழுவேன்." என்றான்.

"சரி, நான் அழ மாட்டேன்..." என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் கண்களையும் துடைத்துவிட, அவளுடன் நெற்றி முட்டியவன், "எத பத்தியும் யோசிக்க கூடாது, புரியுதா? நீயும் நானும் இனி வரப் போற நம்ம குழந்தைங்க மட்டும்தான் உன் மனசுல இருக்கணும்." என்றான்.

"அதுக்குள்ள குழந்தைங்களா?" என்று விழிகளை உருட்டிக் கேட்க, "நிறைய குழந்தைங்க பெத்துக்க ஆசைப்பட்ட தானே?" என்றான்.

அவளுக்கு அவன் கேட்ட தோரணையில் சிரிப்பு வந்து விட்டது.

"ஆசைப்பட்டேன் தான்..." என்று இழுவையாக சொல்ல, "அப்புறம் என்ன?" என்று சிரித்துக் கொண்டே கேட்டவனோ, அவள் முகத்தைத் தாங்கி நெற்றியில் முத்தமிட, அவள் கண்களை மூடிக் கொண்டாள்.

கன்னம் தீண்டினான், நாசி தீண்டினான், இதழ்களையும் தீண்டினான். அசையாமல் இருந்தவளோ மெதுவாக விழிகளைத் திறந்து கொள்ள, "தூங்கலாமா?" என்று கேட்டான்.

"ம்ம்..." என்று சொல்ல, "இந்த நகை எல்லாம் போட்டுட்டு எப்படி தூங்குவ? கழட்டிடலாம்..." என்று சொன்னவன், அவள் நகைகளை கழட்டி வைக்க உதவியும் செய்தான்.

இருவரும் தூங்கினார்கள். அவளை இழுத்து அணைத்து மார்பில் போட்டுக் கொண்டு படுத்து இருந்தான்.

"என்ன இப்படி கல்லு போல இருக்கு? நிறைய எக்சர்சைஸ் பண்ணுவீங்களோ?" என்று கேட்டாள்.

"ம்ம்..." என்றான்.

விழிகளை உயர்த்தி அவனைப் பார்க்க, அவனும் அவளை விழிகளைத் தாழ்த்திப் பார்க்க, எம்பி அவன் கன்னத்தில் முத்தம் பதித்தவள், அவனை அணைத்துக் கொண்டு தூங்கி இருக்க, அவளை ஒரு கையால் அணைத்தபடி படுத்து இருந்தவனுக்கு தூக்கம் வரவே இல்லை.

விட்டத்தைப் பார்த்துக் கொண்டு நீண்ட நேரம் படுத்து இருந்தான். வந்தனா என்ன பாவம் செய்தாள்? ஏன் இந்த கஷ்டம் அவளுக்கு என்கின்ற ஆதங்கம் இருந்தாலும், அவளை வாழ்க்கை முழுவதும் இனி அழவே விட கூடாது என்ற உறுதியும் அவன் மனதில் ஆழமாக இருந்தது.

இத்தனை நாட்கள் அவனைத்தான் அவள் துரத்தி துரத்தி காதலித்துக் கொண்டு இருந்தாள்.

இனி அவன் முறை. அவன் காதல் எப்படி இருக்கும் என்று அவளுக்கு காட்ட தயாராகி விட்டான்.
 

Deepa.S

Member
😍😍😍😍
கல்யாணத்துக்கு வந்த எங்களுக்கு வடையை விருந்து இல்லை
 

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 76)


எல்லாமே அர்ஜூன் ராகவி கல்யாணத்துல இருந்து ஆரம்பிச்ச பிரச்சினைகள் தான்.
அப்பவே கஜன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா...
இத்தனை தூரம் ஆகியிருக்காது. எப்பவுமே
ஒரு தப்பை மூடி மறைக்கப் போய் தான் பல தப்புகளும், குற்றங்களும் நடக்கின்றன.
தும்பை விட்டு வாலைப் பிடிச்ச கதையா ஆகிடறது. இதுக்கு காரணம் ராகவி மட்டுமே.
அவ தன் அண்ணன் கஜன் மேலேயும் நம்பிக்கை வைக்கலை. அவளோட அப்பா சக்திவேலையும் நம்பலை..
இதான் வில்லங்கமாயிடுச்சு, விபரீதத்தையும் கொண்டு வந்திடுச்சு. தப்பு செய்யறது சுலபம்... ஆனா, அந்த தப்பா நேர் செய்யுறதுக்கு தென் கெடறது தான் ரொம்பவே கஷ்டம்.


இதுக்குத்தான் நான் முதல்ல இருந்தே சொன்னேன். சைல்டிஷ்ஸா இருக்கிறவங்களைக் கூட நம்பிடலாம். ஆனா, சைல்டிஷ்ஸா பிகேவ் பண்றவங்களை நம்பவே கூடாது. இதுல சைல்டிஷ்ஸா பிகேவ் பண்ணது
ராகவி, சைல்டிஷ்ஸா இருந்தது
வந்தனா.


எஸ்... குழந்தைத்தனம் கள்ளம் கபடறமற்றது, சூதுவாது அறியாதது. எதையும் வெளிப்படையா பேசிடுவாங்க, செஞ்சிடுவாங்க. ஸாரி கேட்கவும் தயங்க மாட்டாங்க. அந்த குழந்தைத்தனம் தான்
வந்தனா கிட்ட இருக்கு. ஆனா, இந்த சைல்டிஷ்ஸா பிகேவ் பண்றதுங்கறது இருக்கே, யப்பா... அதுவொரு ரெண்டுங்கெட்டாத்தனம். அப்படி பெரியவங்களாவும் இருக்க மாட்டாங்க, இப்படி சின்னவங்களாவும் இருக்க மாட்டாங்க. எல்லாம் தனக்கேத்
தெரியும்ங்கற அரைகுறைங்க.
இவங்களால ஜென்டிலா மன்னிப்பும் கேட்க முடியாது, கீழிறங்கி செய்த தப்பை ஒத்துக்கவும் மாட்டாங்க...
இதான் சைல்டிஷ்ஸா பிகேவியர். அழுத்தமும், ஆணவமும் அதிகமிருக்கும்.


எஸ்.. ராகவி இன்னை வரைக்கும், இப்பவும் கண்ணீர் விட்டு அழறான்னா அதுக்கு காரணம் அவளோட இம்மெச்சூர்ட் பிகேவியர் மட்டும் தான் காரணம். அர்ஜூன் மிரட்டினான்னு கல்யாணம் பண்ணிக்கிட்டா சரி, ஆனா அதற்கப்புறம் அவன் தானே எல்லா விஷயத்துலயும் விட்டுக் கொடுத்தான். தவிர, அவன்
இவ பேச்சுக்கும், இவளுக்கும் மட்டும் தானே அடங்கினான்.
இவத்தான் அதை சரியா யூஸ் பண்ணிக்கலை.


ஆனா... வந்தனா தனக்கு நடந்த கொடுரத்துப்கு அந்த பாவிங்களை 'கொன்னுடுங்க' என்கிற ஒரே வார்த்தையிலயே அவங்களுக்குரிய தண்டனையும் கொடுத்து, தன்னோட மொத்த களங்கத்தையும் துடைச்சு எறிஞ்சுட்டா. தவிர, ரொம்பவே தெளிவா முடிவெடுத்து... தன்னோட கனவுகளையும், காதலையும் சிதைச்சுக்க விரும்பாம... விஜயோட மணவறை வரைக்கும் வந்திருக்கான்னா
அது தான் அவளோட குழப்பமற்ற தெளிவான சிந்தனை... குழந்தைத் தனமான மனசுங்கறது. எவனோ செய்த தப்புக்கு தான் எதுக்கு துக்கப்படணும், வெட்கப்படணும், மூலையில உட்கார்ந்து அழணும்ங்கறது தான் வந்தனாவோட எண்ணம்.
தேவையே இல்லை வந்தனா. உனக்கு நீயேத்தான் மீண்டு எழுந்து வரணும்... உன்னை கை கொடுத்து தூக்கி விட உன் மாமன் விஜய்யும், அண்ணனும் , அண்ணியும், பெத்தவங்களும், மத்தவங்களும் கரம் கோர்த்து ஒன்றிணைக்குபொழுது அதை பற்றிக் கொள்வதில் தயக்கம் தேவையில்லை. யாரும் கரம் கொடுக்கவில்லை என்றாலுமே கூட உனக்கு நீயே மீண்டு, எழுந்து, நிமிர்ந்து, துணிந்து வர வேண்டும். நிமிர்ந்து எழுந்தால், அந்த வானம் கூட உன் தலையை முட்டுமடி பெண்ணே..!


"உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...
என் கண்ணில் பாவையன்றோ..
கண்ணம்மா...
என்னுயிர் நின்னதன்றோ...!"


காட்டு...விஜய் காட்டு..!
உன் காதல் வேகம் எப்படி இருக்கும்ன்னு... வந்தனாவுக்கு
பொறுமையா காட்டு.


😅😅😅
CRVS (or) CRVS 2797
 
Top