5.நந்தவனப் பூக்கள்
" தபு ஏன் டென்சன் ஆகுறீங்க. கூல் டவுன்.என்னால உங்களுக்கு வேலை போய்டுச்சு.அதே சமயம் என் கம்பெனியில் ஒரு வேலைக்கு இன்டர்வியூ நடக்க போகுது.சோ உனக்கு ஒரு சான்ஸ் தரலாம் ன்னு" என ரகு பொறுமையாக எடுத்து கூறியும் அவள் முகம் கடுகடுவென இருப்பதை கண்டவன் " என்ன தபு " என்றான் அவள் அருகே சென்று.
" இன்டர்வியூ கார்டுக்கு யார் சார் காண்டு ஆனது? அன்னிக்கு நான் சொல்லியும் என் பேர் தங்கபுஷ்பம் ன்னு எப்படி சார் சொல்லலாம்? இதுல இந்த டோமரு அதை நல்ல பேருன்னு சொல்றான் " என பி.ஏ.ராகவ் இடம் பாய்ந்தாள்.
" கூல்.தபுன்னு மாத்த சொல்றேன்.நீங்க எப்போதும் தபு தான்.ஓகே வா " என்று தபுவை அமைதிப்படுத்தியவன் அவளை நோக்கி ஒரு புன்னகையை வீசினான்." அய்யோ சார் இந்த களேபரத்துல நான் ஜூஸை ஒழுங்காக குடிக்கவே இல்லை " என அவள் சிணுங்க,ரகு மீண்டும் ஒரு இத்தாலியன் க்ரேப் ஜூஸை வரவழைத்து விட்டு அவன் தன் மடிக்கணினியில் மூழ்கினான்.நிதானமாக ஜூஸை ரசித்து குடித்தவள் அவனிடம் விடைபெற்று கொண்டு சென்றாள்." ஆல் தி பெஸ்ட் பார் இன்டர்வியூ " என சிரித்த முகத்துடன் அவளை வழியனுப்பினான்,ரகு.
பிருந்தாவனம் பில்டர்ஸ் அலுவலகம்,எம்.டீ அறை.உள்ளே எம்.டீ சிவக்குமார் தன் சுழல் நாற்காலியில் ஒயிலாக அமர்ந்திருக்க எதிரே பி.ஏ ரஞ்சித் மற்றும் மேனேஜர் தினேஷ்." சார் இந்த ரகுபையன் காலையில் எட்டு மணிக்கெல்லாம் ஆஃபிஸ் வர்றான் சார் .ஆஃபிஸை கூட்டுகிற ஆயா கூட எட்டு மணிக்கு அப்புறம் தான் வருதாம்.இவன் சரியான சின்சியர் சிகாமணி சார்.காலை எட்டு மணி முதல் நைட் எட்டு மணி வரை ஆஃபிஸ் தான்.அதுக்கு அப்புறம் வீடு.எங்கே போனாலும் கங்காரு மாதிரி மடிக்கணினியை கட்டிட்டி திரியறான் இவனுக்கு எப்படி சார் கெட்ட பழக்கத்தை உண்டு பண்ணுறது " என்று புலம்பினான், ரஞ்சித்.
" ஹான் பிரண்ட்ஸ் உடன் அவுட்டிங் அப்புறம் பொண்ணுங்க சகவாசம் " என இடைமறித்தார் , சிவக்குமார்." எதுவும் இல்லை சார்.அவனுக்கு ஒரே ஒரு ப்ரண்ட் தான்.அவனும் போலீஸ் இன்ஸ்பெக்டர்.சுருங்க சொல்லணும்னா அவன் கடமையே கண் என இருக்கிற ஒரு ரோபா " என தினேஷ் தொடர்ந்தான்." சார் ஆனால் நேத்து ஒரு பெண் " என ரஞ்சித் ஏதோ சொல்ல வருகையில் வேகமாக கதவை திறந்து முகில்குமார் உள்ளே வந்தான்; முகில் சிவக்குமாரின் மகன்.
" ஹாய் டாட்.எனக்கு கொஞ்சம் பணம் " என தொடங்கியவன் தந்தையின் முகத்தை கவனித்து விட்டு , " என்னாச்சு டாட்.உங்க முகமே சரியில்லை.டென்சன் ஆக இருக்க மாதிரி இருக்கு " என படபடத்தான்.அவர் அமைதியாக இருக்க ரஞ்சித் எல்லாவற்றையும் முகில் இடம் ஒப்பித்தான்.
அனைத்தையும் பொறுமையாக கேட்டு விட்டு கைகொட்டி கடகடவென சிரித்தான், முகில். " ஓ மை காட்.மது வாம் மாது வாம் சூது வாம்.சுத்த முட்டாள் தனமான யோசனை.இதுல இரண்டாவது விடயம் கூட கொஞ்சம் ஓகே.ஏன்னா பெண்ணாசையில் அழிந்தவர்கள் எத்தனையோ.என்ன டாட் இதெல்லாம் உங்க கூட இருக்க முட்டாள்கள் சொன்னாங்களா ? " என ரஞ்சித்தையும் தினேஷையும் ஜாடையாக பார்த்தான்.
" பேசாத டா.நீயெல்லாம் அந்த ரகு மாதிரி தொழிலை கவனிச்சுக்கிட்டா நான் ஏன்டா இப்படில்லாம் யோசிக்க போகிறேன் " என்றார் சிவக்குமார் சலிப்பாக." கூல் டாட்.எனக்கு இதெல்லாம் இப்போ சரிவராது.இன்னும் கொஞ்ச நாள் வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கிறேன் .இப்ப என்ன டாட்.அந்த நந்தவனம் பில்டர்ஸை நாசமாக்கணும்.இதுதான.நீங்க ஏன் ரகுவையே டார்கெட் பண்றீங்க.நந்தகோபாலுக்கு அவன் மட்டும் தான் பையனா ?
தெளிவாக கேளுங்க டாட் ரகு உயர்ந்து நிற்கிற எல்.ஐ.சி பில்டிங் மாதிரி.அவனோட அஸ்திவாரத்தையும் கட்டிடத்தையும் அவ்ளோ ஈஸியாக அசைக்க முடியாது.ஆனால் அவரோட ரெண்டாவது பையன் அபிநந்தன் தொழில் னா என்ன தெரியாத பஜ்ஜா .கேள்விப்பட்டேன்.
அவன் தனியாக தொழில் தொடங்க பேங்க் பேங்க் ஆக ஏறி இறங்கிட்டு இருக்கானாம்.ஷ்யூரிட்டு இல்லாம டிரை பண்றான்.இப்போ நாம அவனுக்கு ஷ்யூரிட்டி தந்து தொழிலில் நுழைய வச்சா, இந்த மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யத்தில் அவன் சீட்டு கட்டுகளால் அடுக்கப்பட்ட மாளிகை மாதிரி.ஈஸியாக அவனை தரைமட்டம் ஆக்கலாம்.எப்படியும் அவன் நந்தன் பேருல தான் தொழில் ஆரம்பிப்பான்.அவனால் அவங்க தொழில் குழுமத்தோட புகழ் பயங்கரமாக சரியும். இப்போ சொல்லுங்க டாட்.எல்.ஐ.சி பில்டிங் வோட முட்டி மோதி சோர்ந்து போய் நிக்க போறீங்களா.இல்லை சீட்டுக்கட்டு மாளிகையை வாயாலே ஊதி தள்ள போறீங்களா ? " என விரிவாக பேசி கேள்வியாக நிறுத்தினான், முகில்.
" டேய் முகில் இன்னிக்கு தான் நீ உருப்படியாக பேசுற . சூப்பர் டா கண்ணா.அவனை என்ன பண்றேன் பாரு " என்றார் சிவக்குமார், உற்காசமாக;முகத்தில் தன் மகனை குறித்து பெருமிதம் வேறு." இதெல்லாம் கவனமாக பண்ணணும்.இதில் இன்னொரு ஒரு நல்ல விடயம் இருக்கு.ஒருவேளை அவனோட தொழில் நல்லா போனா கூட நாம் ஷ்யூரிட்டி தந்ததை சொல்லி அவங்க குடும்பத்திற்கு அவன் மேல் அக்கறை இல்லாத மாதிரி காண்பித்து அவன் மனசை கலைத்து நம்மளோட சேர்த்துக்கலாம்;அவனை வச்சே அந்த நந்தன் குடும்பத்தில் குட்டையை குழப்பலாம்.இவனை முறையாக தூண்டி விட்டு அந்த நந்தன் குழுமத்தையே இரண்டாக பிரிக்கலாம்.இதெல்லாம் நாம் அவனுக்கு கொடுக்க போற ஷ்யூரிட்டி இல் இருக்கு.ஆல் தி பெஸ்ட் டாட் " என்றான் தகப்பனின் கை குலுக்கி." சூப்பர் டா மை பாய் " என மகனின் கன்னத்தில் தட்டியவர் மகன் கைச்செலவிற்கு கேட்ட தொகைக்கு செக் எழுதி தந்தார்.வாங்கியதும் " பாய் டாட் " என மின்னலாக மறைந்தான்." பாத்தீங்களாடா.என் மகனோட அறிவை.நீங்களும் தான் இருக்கீங்களே.போய் அவன் அடுத்து எந்த பேங்க் க்கு போறான்னு கண்காணிங்க. இதையாச்சும் ஒழுங்கா பண்ணுங்க " என்றார் அலட்டலாக.' ம்க்கூம்.அடுத்தவன் குடி கெடுக்கிறதுல அப்பனுக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு ' என மனதிற்குள் நினைத்துக் கொண்டான், ரஞ்சித்.
இரவு , நந்தன் வீடு.ரகுவும் ருக்மணியும் உணவு மேசையில். " சாப்பிடு டா கண்ணா " என்றார் ருக்மணி பரிவாக." அவன் வரட்டும் அம்மா.சேர்ந்து சாப்பிடுவோம் " என்றான் ரகு வாயிலை பார்த்த படி." அட போடா.வெளியே போன உன் தொம்பி( கேலியாக ) வீட்டில் சாப்பிடுவான்னா நினைக்கிற.நீ சாப்பிடு ரகு " என்றார் கனிவாக." சரிம்மா.நீங்களும் என்னோட சாப்பிடுங்க" என வாய் கூறும் போதே அம்மாவுக்கு ஒரு தட்டில் உணவு பரிமாறினான்,ரகு; தனக்கும் ஒரு தட்டில் உணவு எடுத்து போட்டு கொள்ள இருவரும் உண்ணத் தொடங்கினர்.அன்னையின் முகம் வாடி போன ரோஜா போல் காட்சியளிக்க " என்னம்மா " என்றான்,ரகு அக்கறையாக." ம்ஹூம்.இதுநாள் வரை அப்பாவோட சேர்ந்தே சாப்பிட்ட நான், இன்னிக்கு அவருக்கு கோதுமை கஞ்சி கொடுத்து தூங்க வைத்து விட்டு நான் மட்டும் நல்ல சோறு தின்பது ஒரு மாதிரி மனதை பிசைகிறது டா " என ருக்மணி ஒரு பெருமூச்சு விட்டார்." அய்யோ அம்மா.அப்பாவிற்கு ஏற்ற உணவு கொடுத்திருக்கீங்க.இதுக்கு ஏன்ம்மா.நீங்க சாப்பிட்டு தெம்பாக இருந்தா தான் அப்பாவை நல்லா பாத்துக்க முடியும்.ப்ளீஸ்ம்மா " என மகன் தனக்காக பேசுவதை ரசித்தவர் " சரி டா " என புன்னகைத்தார்.
பைக்கை உரிய இடத்தில் நிறுத்தி விட்டு உள்ளே வந்தான்,அபி.வீடு வழக்கத்திற்கு மாறாக இருப்பது போல் தோன்றியது அவனுக்கு; வழக்கமாக வீட்டில் நுழையும் போது ' ஏய் தண்டம் எங்கடா சுத்திட்டு வர ' என்ற தந்தையின் கணீர் குரல் கேட்கவில்லை; எப்போதும் ஹால் சோஃபாவில் அமர்ந்து ஏதாவது புத்தகம் படிப்பவரை இன்று காணாமே என யோசித்தான். அன்னையும் அண்ணனும் மட்டும் உணவருந்துவதை கண்டவன் அங்கே சென்றான்." எங்கம்மா போனாரு இந்த வீட்டின் பெரிய மீசைக்காரர் ? ஆளையும் காணோம் சத்தத்தையும் காணோம் " என்றவன் கண்களை சுழற்றி நோட்டமிட்டான்." ஏன்டா அப்பா ன்னு சொன்னா ஆகாதா " என கடிந்து கொண்டார்.
"சரி சரி சொல்லுமா எங்க அவரு " என்று மீண்டும் கேட்டான்,அபி."அப்பா இன்னிக்கு சீக்கிரம் சாப்பிட்டு தூங்குறாங்க.நீ சாப்பிட்டாயா அபிக்குட்டி " என்றான் ரகு இயல்பாக." ம்ம்ம்.சாப்பிட்டேன் " என்றவன் குரலில் சுரத்தை இல்லை." குட்நைட் ம்மா குட்நைட் ரகு " என்று தன் அறைக்கு நோக்கி நடந்தவனிடம் ஏனோ தடுமாற்றம்.ஏதோ தோன்ற தந்தையின் அறைக்கு சென்றான்; ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார், நந்தகோபால்.' ச்சே இவரு திட்டினாலும் கஷ்டமா இருக்கு.திட்டாட்டி இன்னும் கஷ்டமாக இருக்கே ' என மனதிற்குள் எண்ணியபடி அங்கேயே நின்று அவரை பார்த்து கொண்டிருந்தான்.
பிருந்தாவனம் குடும்பத்தினர் வீடு.சிவக்குமாரும் அவரது மனைவி ரேகா வும் உறங்க சென்றிருந்தனர்.டிஸ்கோதே சென்ற முகில் இன்னும் திரும்பவில்லை.எப்போதும் இரவு உணவிற்கு பின் உறக்கத்திற்கு முன் இசையருவி அல்லது சன் மியூசிக் சேனல் பார்ப்பது பனிமலரின் விருப்பம் .இசை மனதை அமைதிப்படுத்தும் என்பாள்.இன்றும் அதே போல் பார்த்து கொண்டிருக்கையில் மழை என்கிற திரைப்படத்தில் இடம்பெற்ற ' மண்ணிலே மண்ணிலே வந்து உடையுது வானம் ' என்ற பாடல் டிவி திரையில் வந்தது; நீலநிற தாவணி அணிந்து நடிகை ஸ்ரேயாவும் வெள்ளை டீ-சர்ட் உடன் ஜெயம் ரவியும் மழையில் ஆடை நினைய ஆடிக் கொண்டிருந்தனர் . அதுவும் கோவிலில்.இதை கண்டவளுக்கு நேற்று பார்த்தசாரதி கோவிலில் பெய்த மழை நினைவுக்கு வந்தது.கூடவே அவன் முகமும்.' தைரியம் தான்.இரண்டு முறை பார்த்த பெண்ணுக்கு குங்குமம் தருகிறான்.சரியான கள்ளன்.' என்று நினைத்தவள் முகத்தில் புன்முறுவல்.
டி.வியில் தெரியும் மழை மற்றும் கோவில் அவள் மனதை ஏதோ செய்தது; அவன் முகம் மீண்டும் மீண்டும் கண் முன்னே வந்து சென்றது.எனவே தொலைக்காட்சியை அணைத்து விட்டு காற்று வாங்க பால்கனி சென்றாள்.வானத்தை பார்த்தால் நிலா நட்சத்திரம் எதுவும் இல்லை.மழை மேகம் இப்பவோ அப்பவோ என நீர் சொரிய தயாராக இருந்தது.இவளை கண்டதும் ஆசிர்வதிப்பது போது மேகம் தான் சேமித்து வைத்திருந்த நீரை பூச்சிதறலாக பூமிக்கு அனுப்பியது . ஒவ்வொரு துளியிலும் அவன் முகம் கண்டவள் ' மலரு இது சரியில்லை.இதெல்லாம் தப்பு.அப்பாவுக்கு தெரிந்தால் கொன்று போட்டுவிடுவாரு ' என தன் மனதிற்கு ஒரு ரெட் அலர்ட் தந்து விட்டு உறங்க சென்றாள்.
- பூக்கும்