ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதிகள் இல்லையடி பாப்பா கதை திரி

Status
Not open for further replies.

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் ப்ரெண்ஸ் இது என்னோட இரண்டாம் குறுநாவல் போட்டிக்காக ஒன்னு எழுதுனேன் இது அடுத்து இதுவும் குறுநாவல் தான்.. கதையின் தலைப்பு ஜாதிகள் இல்லையடி பாப்பா….

சாதி னு சொல்லிடா சாதி கலவரம் இல்ல சாதி மாத்தி கல்யாணம் பண்ணி அதுல வர பிரச்சனை அப்படில நினைக்காதிங்க மக்கா….

அவ்ளோ உள்ள போய் எழுதலா எனக்கு மண்டைல மசாலா இல்ல…

Just . இப்போ இருக்கிற சமுகத்துல சாதி எப்படி இருக்கு எல்லோருக்கும் ஒரு கண்ணோட்டாம் இருக்கும் இல்லையா அது போல தான்…

இப்போ ஏன் இவ்ளோ மூச்சுவிடாமா பேசுரனு கேட்டிங்க நா….

கதை படிச்சிட்டு எதாவது குத்தம் குறை இருந்த குணமா சொல்லுங்கயா ஆயுதம் ஏந்த வேண்டாம் என்பதற்காகவே இந்த செல்ஃப் டப்பா….

படிச்சிட்டு கருத்தை சொல்லுங்க..

எண்ணம் போல் வாழ்க்கை???

Happy Diwali friends
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
டீசர்

ஏய் மச்சான் அவ அங்க தான் இருக்க பாருடா….

ஆமா மச்சான் இன்னிக்கி அவ நம செய்ற செய்கைய லைஃப் லாங் மறக்கவே கூடாது டா…என்று கூறியவன் தன் கையில் இருந்த கத்தியை இறுக்கி பிடிக்க….

"ஆமா மச்சான் போன வருசம் அவ பண்ண வேலையால என்னால விட்டுக்கே போக முடியல டா இன்னிக்கு இருக்க அவளுக்கு…"

"அந்த பக்கம் ரிஷி இருக்கான் லா …"
கால் பண்ணுடா அவனுக்கு "..

டேய் மச்சான் எல்லாம் ரெடியா….

ரிஷி " மாப்பி இங்க எல்லாம் ரெடி நீங்க வந்த போட்டுட வேண்டியது தான்…
சரி அசோக் எங்க டா…

அசோக் " டேய் மாப்பி நானும் இங்க தான் இருக்க..

இங்க எல்லாம் பக்க நானும் ரகுவும் எல்லாம் பண்ணிடோம்…

ரகு " இது அவ எப்பும் வர வழி தான் சோ எந்த ப்ராப்ளமும் இல்ல மச்சான்...என்க

தன்னை சுற்றி நடக்கும் எந்த செயலும் அறியாத பெண்ணவள் தன் செல்லில் எதையோ தேடிக்கொண்டு இருக்க…

மின்னி மின்னி ஒளிர்ந்த தெருவிளக்கு
திடிர் என்று அனைந்துவிட…இருள் மாயம்
சூழ

ஆ….ஆ…..ஆ…. என்ற ஒரு பெண்ணின் அலறல்…. குரல்…


அவ்விடத்தை நிறைத்தது….

கதை வரும் மச்சிஸ்
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 1

காரிருளை வாரியிறைக்கும் வானத்தின் கொடையில் என் பங்கு இதோ என்று வெண்மதியான் ஒளிரும் வேலை..
தெரு விளக்கு மின்னிமின்னி ஒளிர ஓவிய பாவை அதனடியில் நின்றவள்

தன் தொல்லை பேசியுடன் சாரி தொலைபேசியுடன்…நின்றிருந்தாள் இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் விபரிதம் அறியாமல்..

"ஏய் மச்சான் அவ அங்க தான் இருக்கா பாருடா….

ஆமா மச்சான் இன்னிக்கி அவ நம செய்ற செய்கைய லைஃப் லாங் மறக்கவே கூடாது டா…என்று கூறியவன் தன் கையில் இருந்த கத்தியை இறுக்கி பிடிக்க….

"ஆமா மச்சான் போன வருசம் அவ பண்ண வேலையால என்னால விட்டுக்கே போக முடியல டா இன்னிக்கு இருக்கு அவளுக்கு…"

"அந்த பக்கம் ரிஷி இருக்கான் ல …"
கால் பண்ணுடா அவனுக்கு "..

டேய் மச்சான் எல்லாம் ரெடியா….

ரிஷி " மாப்பி இங்க எல்லாம் ரெடி நீங்க வந்த போட்டுட வேண்டியது தான்…
சரி அசோக் எங்க டா…

அசோக் " டேய் மாப்பி நானும் இங்க தான் இருக்கேன்..

இங்க எல்லாம் பக்கா நானும் ரகுவும் எல்லாம் பண்ணிடோம்…

ரகு " இது அவ எப்பவும் வர வழி தான் சோ எந்த ப்ராப்ளமும் இல்ல ….மச்சான்...

தன்னை சுற்றி நடக்கும் எந்த செயலும் அறியாத பெண்ணவள் தன் செல்லில் எதையோ தேடிக்கொண்டு இருக்க…

மின்னி மின்னி ஒளிர்ந்த தெருவிளக்கு
திடிர் என்று அனைந்துவிட…இருள் மாயம் கொண்ட இடத்தில்

ஆ….ஆ…..ஆ…. என்ற ஒரு பெண்ணின் அலறல்…. குரல்…


அவ்விடத்தை நிறைத்தது….


அவள் குரலுடன் இணைந்து இன்னும் சில குரல் கேட்க மறைந்த ஒளி மீண்டும் வர

மாவுகரைச்சலில் குளித்து இருந்தாள் நம் நாயகி..

ஹாப்பி பர்த்டே மகி………

மகி" அடேய் என்ன கண்றாவி டா இது….

அசோக் " இது கண்றாவி இல்ல செல்லம் இப்போ வர போது பாரு… மாப்பி ரெடியா……

ரகு "எப்போவோ மச்சான்…. என்று கையில் இரு முட்டையுடன் நிற்க..

மகி " ரகு வேணா சொன்னா கேளுடா இல்ல பின்னாடி வருத்த படுவ…

ரிஷி காப்பபாத்து ….'என்று ரிஷி பின்னால் ஒளிய…

"சாரி ஸ்விட் ஹார்ட் …."என்று கையில் தக்காளியுடன் நின்றான்…

ஐயோ….. ஓன்னுகூடிட்டாங்கயா….. ஓன்னுகூடிட்டாங்க ….

மகி ஓடுடுடுடு……..

என்று காத்தியவள் ஓட முயற்சிக்க
அவளை வலைத்து பிடித்து முட்டையும் தக்காளியும் அடிக்க..

தலையில் முட்டை மாவு கரைசலும் முகத்தில் தக்காளி என நிற்க..

மூவரும் அவளை கண்டு hi - fi போட்டுக் கொண்டு சிரிக்க

அவள் முறைத்து கொண்டு நின்றாள்.

அசோக் " ஓகே ஓகே.. ட்ஸ் கேக் கட்டிங் டைம்…
மச்சான் அந்த கேக்க கொண்டா"...என்க

ரிஷி "இந்தா மாப்பி …."

ரகு" இந்த மகி கேக் வெட்டு என்று
ஒரு பெரிய கத்தியை நீட்ட.."

"அடோய் ரக்கு என்னடா இது…."

"கத்தி கேக் கட் பண்ண "..

"அதுக்கு இந்த பெரிசா…"

"ஆமா மச்சி இத இப்போ ட்ரென்ட் நீ டிக்டாக் லா பாக்கலா…

அதுல இப்படி தான் பர்த்டே செலப்ரேட் பண்ணுவாங்க…"என்க

" ரக்கு அதுக்கு அப்ரோம் வர வீடியோவ நீ பாத்தது இல்லையா டா..

இத மட்டும் அந்த இன்ஸ் பாத்தான்..நம்பல பாடார்னு பிடிச்சி போடோல்ல போட்டுடுவான் டா…

அசோக் " மச்சி சொல்லுரது கரேக்ட் டா அவன் அல்ரேடி நம்ப மேல காண்டுல இருக்கான்…."

" ம்ம்ம் ... அதனால இத தூக்கி ஓரமா போடு…

" அப்றோம் கேக் சாப்டுரவங்களுக்கு தான் கத்தி வேணும் நமக்கு இல்ல டா…"
என்று சொல்லிக்கொண்டே.

கேக்கின் ஒரு பதியை எடுத்து ரகுவின் மீது அப்பிவிட...

ரகு "அடிப்பாவி என்னடி பண்ற"...

ம்ம்ம் பழிக்கு பழி… என்று சிரிக்க.

இன்னோரு கரத்தில் இன்னும் கேக்கை எடுத்து ரிஷி இடம் செல்ல..

"மகி டார்லிங் இது பிரியா வாங்கி தந்த சட்டை டி..

அழுக்கான அடிப்பா பீளிஸ் … பீளிஸ்
உன்னோட ஃப்ரேட் பட்டர்ட்ஷ்காட்ச் ஐஸ்கிரிம் கேக் டி வேஸ்ட் பண்ணாத .."என்க..

"ஹா ஹா என் மேல பூசுனிங்கள அனுபவிங்க "என்று

நால்வரும் மாறி மாறி பூசிக்கொள்ள

அழகிய நட்பின் பிணைப்பில் அவளின் பிறந்தநாள் தொடங்கியது…

இவர்கள் ஆட்டத்தை கண்டு தெருவில் இருக்கும் நாய்கள் குரைக்க…

"மச்சான்.. "மாப்பி... "நம்ப தம்பிங்கல முறைக்கிறானுங்க கடிக்க வரதுக்குள்ள கலம்பிடுவோமா டா.."

"கலம்பலாம்... கலம்பலாம்..". என்று

அவர்கள் காலனியை நோக்கி நகர அவர்களுக்காய் காத்திருந்தார்..

மகியின் அன்னை மகாபாரதி…

இவர்கள் கோலத்தை கண்டு "இதுகளுக்கு இதே வேலையா போச்சி".. என்று நினைத்தவர்.

அவர்களை முறைத்துக்கொண்டு நின்றார்..

அதை கண்டு நால்வரும் ஹீஹீ ஹீ என்று பல்லை காட்ட..

"முதல இந்த பல்ல காட்டுறத நிறுத்துங்க இதான் வீட்டுக்கு வர நேரமா.. ஒரு போன் பண்ணி சொன்னா என்ன உங்களுக்கு ம்ம்ம்…."

ரிஷி" மீமீமீ அது வந்து… இன்னிக்கு மகி பர்த்தடே தானே...அதான்…'"


""அதுக்கு ….".

"."சாரிரிரி….. மீஈஈ ….ம்மா…. "என்று நால்வரும் அவரை நெருங்கி வர

"ஏய் ..ஏய் …"அங்கையே நில்லுங்க.
முதல பின்னாடி தண்ணி,துணி, டவல்ல, எடுத்து வைச்சி இருக்கேன் போய் குளிச்சிடு வாங்க "என்று அனுப்பி வைத்தார்...

இது அடிக்கடி நடக்கும் நிகழ்வு என்பதால் நால்வரும் அதிகம் தங்குவது மகி வீட்டு மொட்டை மாடியில் தான்..

அவர்கள் துணிகளும் அங்கு இருக்கும்

"ரிஷி… அம்மா அப்பா இப்போ தான் ஊருல இருந்து கிளம்புனாங்கலாம் உன் கிட்ட சொல்ல சொன்னாங்க டா.."

"ஹான் சரி ம்மா.. நா அம்மா கிட்ட பேசுறேன்..

"ம்ம் சரி போய் ப்ரெஸாயிட்டு வாங்க".
என்க சரி என்று நால்வரும் சென்றனர்.

மகாபாரதி கணவனை இழந்து கையில் குழந்தையுடன் இவ்வூர் வந்தவரை காத்து நின்றவர் ரிஷியின் தந்தை மூர்த்தி தான். மகாபாரதியின் அண்ணின் நண்பன் தான் மூர்த்தி.

அவர்களின் நிர்கதியான நிலையில் தூணாய் நின்று உதவி செய்தவர். தான் இருக்கும் காலனியில் தாங்க ஒர் இடம் தந்து வேலையும் தேடி தந்தவர்..
அவரின் மனைவி லட்சுமியும் நல்ல தோழமையுடன் பழக. அவர்கள் காலம் இனிதாய் கடந்தது..

இவ்வாறு தோன்றியதே ரிஷி மகியின் நட்பு. தனியாய் பிறந்தவன் தனக்கு துணையாய் வந்த மகியுடன் கைகோர்த்தான். அவர்கள் பள்ளியில் இணைந்தவர்கள் தான் அசோக் மற்றும் ரகு…
நால்வரும் இணைப்பிரியா நண்பர்கள்…

ஓரே காலனி வாசிகளுமாக இருக்க
நட்பை பிரிய மனமில்லாமல் ஒரே கல்லூரி ஒரே துறையை தேர்ந்தெடுத்து இப்போது ஒரே அலுவலகத்தில் பணிபுரிகின்றனர்…

இவர்கள் நட்பை கண்டு பெரியவர்களும் அதே நட்புடன் பழக அதில் சற்று வித்யாசம் பார்பவர் ரகுவின் தந்தை மட்டுமே…. அவருக்கு ஏனோ மகி பிடித்தமில்லை. இன்னும் அக்கால மனிதராய் இருப்பவர் தரம் பார்த்து பழகுபவர்.. இனம் சாதி என்று பிதற்றுபவர்.. அதனாலே அங்கு அதிகம் செல்ல மாட்டாள் அதையும் தாண்டி சென்றுவிட்டாள் சண்டையுடன் தான் திரும்பி வருவாள். ரகுவிற்காகவும் அவன் அன்னை மற்றும் சகோதரிக்காய் மட்டுமே அமைதி காப்பாள்.


"அடோய் இன்னுமா… குளிக்கிறிங்க சீக்கிரம் வாங்க டா.. சாதம் சூடா இருக்கும் போதே சாப்பிடுங்க.." என்றார் மகா…

நால்வரும் வந்து அமர..

மகி "மீ... நீ சாப்டியா….."

"நா சாப்டேன் நீங்க சாப்பிட்டு எல்லாதையும் எடுத்து வெச்சிட்டு படுங்க…". என கூறிவிட்டு சென்றார்.

மகி " மச்சான் சீக்கிரம் சாப்ட்டு சீக்கிரம் தூங்கனும் நாளைக்கு நமக்கு முக்கியமான வேலை இருக்கு ஞயாபகம் இருக்குல…

அசோக் கார் ரெடி பண்ணிட்டியா மச்சி..

மச்சி கார் ரெடி ராம் அண்ணா கார் தான்.

ரகு "அடோய் அவருக்கு தான் இந்த வேலைய செய்ய போரோம் அவர்கிட்டையே கார் வாங்கி இருக்க…

ரிஷி "அண்ணா தான் டா கொடுத்து விட்டார் வெளியலாம் ரெடி பண்ண வேணாணு.."..

மகி" சரி சரி எல்லாம் பாக்கவா இருக்கனும் மாப்பிஸ்..சிக்குனோம் சென்ட்ரல் தான்…

அசோக். " நீ ஒன்னும் கவலைபடாத மாமே மேர்சல் பண்றோம்.."

"என்ன ரிஷி ரொம்ப யோசிச்சிட்டு இருக்க…

ஒன்னும் இல்லை மகிமா இந்த இன்ஸ் கிட்ட நம்ப ரொம்ப ஓவர தான் போய்டோமா… நம்பல ரொம்ப டார்கேட் பண்றார்…

"அதுலா ஒன்னும் ஓவர பண்ணலா மாப்பி "..

"அவன் லஞ்சம் வாங்குனா நாம வீடியோ எடுத்து நீயூஸ் ல போட்டோம்.."

"தப்புக்கு சாரி சொல்லவான் ஏதாவது எஸ்கியூஸ் கேப்பானு பாத்த."

" நான் யார் தொரியுமா .MLA என் சாதிகாரன் இதுல இருந்து எப்படி வெளிய பாருனு சாவல் விடுறான்.."

ரகு" என்ன இருந்தாலும் அவன் சொன்னது தான் நடந்துச்சி நம்பலால ஒன்னும் பண்ண முடியலையே'"…

"அவன் சொன்ன மாதிரி வெளிய வந்து இதோ நம்ப முன்னாடி தான் நிக்கிறான் எப்போ நம்ப கிடைப்போம் வெச்சி செய்யலாம் பாத்துனு இருக்கான்."...


மகி "நம்ப மீடியா பார்சன் டா அவனால நம்பல இசியா நெருங்க முடியாது இருந்தாலும் அலர்ட்டா இருப்போம்.
இது நம்ப ராம் அண்ணாக்காக செய்றோம்…" ஓகே...

"டன் மச்சான் ."..என்று நால்வரும் கோரசாக சொல்ல..

"டோய் இன்னும் நீங்க தூங்க போலையா…... என்ற பாரதியின் குரலில் நால்வரும் மாடி ஏறினர்.

மாடியில் ஒரு பெரிய கூடாரம் போன்ற அமைப்பு கொண்ட இடத்தில் பெரிய நீள் விரிக்கை தரையில் இருந்து இரண்டு அடி உயரத்தில் இருக்க. அதனை சுற்றி கொசுவலையும் மெல்லிய திரையும் அமைத்து மாடி தோட்டத்தின் நடுவில் இருக்கும்.

நால்வரும் ஓன்றாய் இருக்கும் பொழுது இங்கு தான் கழியும். இன்றும் அவ்வாறே..

மீண்டும் ஒரு முறை மூவரும் மகிக்கு சிறு அணைப்பில் பிறந்தநாள் வாழ்த்து கூறி உறங்க சொல்ல.. அவளும் அவர்களுடன் படுத்து கொண்டாள்.

இது அவர்களின் சிறுவயது பழக்கம்.

அசோக்" சரி நா மார்னிங் சீக்கிரம் எழ அலாரம் வைக்கிறேன்..

மகி" நீ வெக்காதா ரக்கு நீ வைடா.

"ஏன் ஏன் ஏன் நா வைக்க கூடாது.. "

"பாரதேசி போனா தடா அந்த ரவ்டி கேஸ்க்கு காலையில ஆறு மணிக்கு அலராம் வைக்க சொன்னா சாய்ந்திரம் ஆறு மணிக்கு அலராம் வெச்ச ஆள் தானா நீ ..

நீ மூடிட்டு தூங்கு அவன் வெப்பான்."

"ஹா ஹா ஹா "...என்று ரகுவும் ரிஷியும் சிரிக்க.

ரிஷி " ஹா ஹா ஹா அசிங்கப்பட்டான் அசோக்கு…..

"அடிங்க ...என்று தலையணைக் கொண்டு அடிக்க.

சிறு ஊடலுக்கு பின் உரங்கி போயினார்..

நாளைய நாள் நால்வருக்கும் என்ன வைத்து காத்திருக்கிறதோ…




எண்ணம் போல் வாழ்க்கை.??

 

Lakshmi

Active member
Sema comedy ah irukku. Starting la acid versa poraanga, adikka poranga, kathi kutthu nadakka poguthu bayangara paraparappa irundhuchu tucknu birthday celebration athuvum maavu muttai thakkali oda. Super. Waiting for next epi sis.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அத்தியாயம் 2

மதியவன் மென்மையில் தூயில் கொண்ட துரிஞ்சுகள் ஆதவனின் வெம்மைக் காத்திருக்க.. தன் கதிர் கரம் கொண்டு வாரியணைக்க வந்தான் செங்கதிரோன்..

அவன் வந்ததை கூட உணராது நால்வரும் உரங்கிக் கொண்டு இருந்தனர்..

ரகு வைத்த அலாரம் தன் பணியை செய்ய தொடங்க.. அதன் தலையில் ‘டங்’ என்று அடித்தவன்..

"எவன்டா அவன் அர்த்த ராத்திரல அலாரம் வைச்சது. மனுசனை நிம்மதியா தூங்கவிடாமா.." என்று புலம்பியவன் மீண்டும் தூங்க..

"ஓ…. பிரியா பிரியா
என் பிரியா பிரியா..
ஓ…. பிரியா.. பிரியா
என்…. பிரியா பிரியா….”

என்ற ரீங்டோன் கேட்க…

"எந்த அக்கா இப்போ என்ன ஃப்ரியானு கேக்குது ….ம்ம்ம்…"என்று தலையை உயர்த்தி பார்க்க.. அங்கு ரிஷியின் போன் அலறியது…

"அடேய் ரிஷி எழுந்து உன் பிரியாவ என்னனு கேளுடா.. எவ்ளோ நேரம் காத்துறா பாரு….”

ரிஷி " கனவுல தான் காத்துறானா நேருலையுமா… நான் இல்லன்னு சொல்லுடா அவகிட்ட…"

"லைன்ல தான் இருக்கா.. நீயே சொல்லிட்டு தூங்கு ராசா…" என்று சொன்னவன் மீண்டும் உறங்க போக…

அடித்து பிடித்துக்கொண்டு எழுந்த ரிஷி..

"அடேய் கிராதகா.. ஏன்டா இப்படி….”

"ஐய்யயோ…."

"ஹலோ ரியா பேபி……"

"டேய் எரும.. நான் உன்ன கத்துறனடா..
பக்கி ..”

”நாளைக்கு முக்கியமான வேலை இருக்கு 6 மணிக்கா கால் பண்ணி எழுப்புன்னு நீ தானடா சொன்ன…”
என்று அவள் பொறிய தொடங்க..

"ஐய்யோ பேபிமா பிலிவ் மீ.."

"நான் சும்ம கனவுல உன் கூட டூயட் பாடிட்டு இருந்தேன், அத சொன்னேன்டா…"

"அத இந்த குரங்கு கோத்துவிட்டுடுச்சி…
சாரி பேபி பீளிஸ்…. பீளிஸ் …"என்று கெஞ்சி கொஞ்சி அவளை மலையிறக்க…

அவன் மார்பில் வந்து ஒரு கால் விழுந்தது...

"ஜயோ….. அம்மா…… " என்று ரிஷி கத்த..
"
"ரிஷி என்னாச்சி…. ஏன் கத்துற…"

"ஒன்னும் இல்ல ரியா.. இந்த பக்கி கால தூக்கி போட்டுடான்.. " என்றவன் ரகு காலை தள்ளிவிட.. அவன் அசோக்கை கட்டிக்கொண்டு படுக்க….

”நீ வாடி செல்லம்..” என்று அசோக்கும் கட்டிக்கொண்டான்..

அதை கண்ட ரிஷி தலையில் அடித்துக்கொண்டு அவன் காதலியுடன் காலை வேலை கடலை போட தொடங்கினான்…

"ஏய் ரிஷி இன்னிக்கு மகிக்கு பர்த்டே லா நான் விஸ் பண்ணணு சொல்லு…"

"ஏன் உன் கிட்ட மகி நம்பர் இல்லையா.." என்று சற்று கோபமாக கேட்க..

"சரி சரி உடனே கோவ படதா நானே விஸ் பண்ற எங்க அவ…"

"இங்க தான் இருக்கா.. " என்று திரும்பியவன் மகியை பார்க்க ..

அவள் அப்போது தான் உருண்டு படுகையின் இறுதியில் இருந்து விழ போக…

"ஏய் இருடி... இருடி..." என்று பதறியவன் தாவி மகி விழும் முன் பிடித்தான்…

"ப்பூ கும்பகர்ணி விழ போறது கூட தெரியாம தூங்குறத பாரு…" என்று அவளை ஒழுங்குபடுத்தி…

பக்கத்தில் இருந்த தலையணையை எடுக்க…

"நயன் என்ன விட்டு போகாதா…. பீளிஸ் போகாதா "என்று ரகு தூக்கத்தில் உளர

"ஏது இது நயன்தாரா... என்னடா நயன்தாராக்கு வந்த சோதனை.. கடவுளே…
கமிட்டட் ஆனா என்ன, இந்த முரட்டு சிங்கல்ஸ் கிட்ட கோத்துவிட்டு வேடிக்கை பாக்குறியே…" என்று புலம்பியவன்.

அந்த தலையணை கொண்டு மகி விழாமல் இருக்க அணையிட்டான் அந்த அன்பு நண்பன்.

"ஓகே ரியாமா.. லவ் யூ டி நான் போய் கிளம்புறேன் உனக்கு லொகேஷன் ஷேர் பண்றேன் வந்துடு பாய்ய்… லவ் யூ.. "

"லவ் யூ டா.. டேக் கேர்.. பாய்ய்.."

"அசோக் ரகு எழுந்திரிங்க டா.. இனி அலாரம் வைக்க உங்கள தான்டா கூப்டனும் எழுந்திரிங்க டா…"

அசோக் "குட் மார்னிங் மாப்பி…"

ரகு "குட் மார்னிங் மச்சான்."

"மார்னிங் மார்னிங்...." சீக்கிரம் எழுந்திரிங்க டா….

இருவரும் எழுந்து அமர….

"அசோக் நீ போய் ராம் அண்ணா காரை எடுத்துட்டு வந்துடு…"

"ரகு நீ போய் ராம் அண்ணாக்கு கொஞ்சம் வேலை இருக்காம் அத முடிச்சிட்டு, அசோக் கூடா வந்துடு வேலை முடிஞ்சி நா இங்க வந்துடுறேன் "

"எல்லாம் ப்ளான் படி நடக்கனும் டா.. சோதபிடாதீங்க சரியா? பீ சீரியஸ்.." என்க..

இங்கு ரகுவும் அசோக்கும்..

"அசோக் இவன பாத்தியா மச்சான்.. இவ்ளோ நேரம் அவன் ஆளு கூட மொக்க போட்டு நம்பல வேளை வாங்குறான்…"

"இவள பாரு 'யாம் அறியோம் பரம்பொருளே' ரேங்ஜீக்கு தூங்குறா.."

ரகு "ஆமா மச்சான் நாம தான் கஷ்டப்பட்டு உழைக்கிறோம்…"

ரிஷி "என்னடா அங்க சத்தம் …"

"பேசிக்கிட்டு இருக்கோம் மாமா…" என்று கோரசாக சொல்ல…

"அடிங்க கிளம்புங்க டா… "என்று சொல்லி சென்றான்..

"இங்க இவ்ளோ கலவரம் நடக்குது இந்த மாரியத்தா தூங்குறத பாரேன்... ” வாடா" என்று இருவரும் மகி அருகில் சென்று ஆளுக்கொரு பக்கம் நின்று அவள் காதில் கத்த…

பதறி எழுந்தவள்… தன் முன் சிரித்து கொண்டு நின்ற இருவரையும் அடி பின்னி எடுத்தாள்..

இவ்வாறாக காலை பொழுது விடிய.. தங்கள் திட்டத்தை செயல் படுத்த ஆளுக்கொரு பக்கமாய் கிளம்பி அவரவர் இல்லம் சென்றனர்…

"மகிமா …. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இந்த அம்மா கிப்ட்…"
'
"மீமீ சம்ம சம்ம… "

"மகிமா குளிச்சிட்டு இந்த ட்ரேஸ் போட்டுக்க.. அப்றோம் அப்பா கிட்ட விளக்கு எத்தி கும்பூட்டு வேலைக்கு கிளம்பு.. அம்மாக்கு டைமாயிடுச்சி டா வரேன் ." என்று தன் பள்ளி வேலைக்கு சென்றார்…

அன்னை சொன்னது போல் செய்தவள்.

தன் தந்தை படத்திற்கு முன் கண் மூடி நிற்க..

கண் திறந்தவள் முன் ஒரு கிப்ட் பாக்ஸ்.

வருடம் வருடம் நடக்கும் வினை இது ..
அதை செய்வது யார் என்றும் அறிவாள்…

அந்த பரிசை திறக்க அதில் ஒரு அழகிய தங்க செயின் இதய வடிவ டாலரும் இருக்க.. அதை அணிந்தவள் இதழ்
அதை தந்தவருக்கு நன்றி உரைத்தது…

மீண்டும் தந்தையின் படத்தை பார்க்க
அதில் தெரிந்த நிழலை கண்டு சிரித்தாள்…...

"மேடம் போதும் போதும் சீக்கரம் வாங்க இங்கயே நின்னா நம்ப ப்ளான் அவ்ளோதா".. என்று ரகு சொல்ல..

"இதோ இதோ வந்துடேன் ரகு கிளம்பலாம்…"

"மகி வீட்ட பூட்டிடியா…."

"ஹான் ரிஷி பூட்டிடேன்…"

"அம்மா கிட்ட சாவி கொடுத்துடு வா.."

"அம்மா வந்துடாங்களா டா…"

"ம்ம் நேத்து நைட் தான் "

"ஓஓஓ" என்று இவர்கள் பேசி கொண்டு வர

மகிமா… இந்தா டா..” என்று ரிஷியின் அம்மா லட்சுமி விபூதியிட்டு

”பிறந்த நாள் வாழ்த்துகள் டா .." என்றார்

"தாங்ஸ்மா.."

"மகிமா இந்தா இது அப்பா கிப்ட் " என்று வாட்ச் ஒன்றை வழங்கினார் மூர்த்தி…

"தாங்கஸ் பா..” என்று அதை கையில் அணிந்து கொண்டாள்…

ரகுவின் அன்னை சாரதாவும் அவன் தங்கை மின்மினியும் வாழ்த்து கூற.. சிறு சிரிப்புடன் ஏற்றாள்.

"சரி மா நாங்க போய்டு வாறோம் டாடா டாடா …." என்று கிளம்பவும்

அசோக் காருடன் வரவும் சரியாய் இருக்க.. நால்வரும் ஏறிய பின் அக்கார் மத்திய சாலையில் பறந்தது…

சீராக சென்ற கார் தாம்பரம் மெப்ஸ் (mepz) (madras export pressing zone) உள்ளே செல்ல

"மச்சான் இங்க வெச்சி தான் கடத்தனுமாடா…”

ரிஷி ".வேற வழி இல்ல மகி.. இங்க இருந்து கடத்துனா தான், எந்த பிராப்ளமும் வராது.."

10.30க்கு தான் அவங்க கம்பேனி திறப்பாங்க.. இங்க பத்து மணிக்கு எல்லாம் ஆள் நடமாட்டம் இருக்காது…

ரகு " உள்ள என்ரண்ஸ் ல பிடிப்பாங்களே டா…"

ரிஷி "இந்த கார் கண்ணாடில ஒரு ஸ்டிக்கர் தெரிது பாத்தியா அது மெப்ஸ் உள்ள போறதுகான பர்மிசன் சோ ஒன்னும் ஆகாது…”

”மகி கரேக்ட்டா… பண்ணிடுவல்ல…"

"ம்ம்ம்…"

”அடேய் பொறந்த நாள் அதுவுமா.. புழல் ல புளி சோறு திங்க வைச்சிடாதீங்க டா…”

ரகு " மாப்பி இந்தா மயக்க மருந்து அடிச்ச கர்ச்சிஃப்.. "

"பத்தரம் உன் மூஞ்சில வச்சிகாதா சரியா….."

”போதும் அடங்கு டா…”

அசோக் "ஏ ஏ ஏ மச்சீஸ் அவ வந்துடா…. அவ வந்துடா… ”

'அடேய் அவசரத்துக்கு பொறந்தவனே கத்தாத டா இரு போறேன்." என்றவள்

நடந்து சென்ற அந்த பெண்ணின் முன் நிற்க..

மகியை கண்ட அந்த பெண் மென் சிரிப்புடன்..

"ஹாய் மகிமா நீ எங்க இங்க ….” என்று முடிக்கும் முன்.

ஹாய் என்று சொன்னவள் அவள் முகத்தில் கர்ச்சீப்பை வைத்து அழுத்த..

அவள் மீதே மயங்கி சரிந்தாள் அந்த பெண்…

அதை காரில் இருந்து கண்ட மூவரும் வேகமாய் வந்து அவளை தூக்கி செல்ல..

அப்போது தான் கூட இந்த பெண் அதிர்வில் இருந்து விடு பட்டு,

"காப்பாத்துங்க….. யாராவது காப்பாத்துங்க…..” என்று கத்தினாள்..

"மாப்பி இந்த பிள்ள கத்தியே கைது பண்ண வெச்சிடும் போலயே.. ஏதாவது பண்ணுங்க டா " என்று ரகு சொல்ல..

மகி " நீங்க இவள தூக்கிட்டு போங்க.."

ரிஷி "அப்போ நீ …"

"வரேன் டா."

"அக்கா இங்க பாருங்க நான் சொல்லுற கொஞ்சம் கேளுங்க பிளீஸ்…"

"என் ஃப்ரெண்ட எங்க கடத்திட்டு போறீங்க டா... இருங்க இப்பவே போலீஸ் கிட்ட சொல்லுறேன். " என்று போனை எடுக்க…

அசோக் "மாமே இது வேலைக்காவாது மண்டைல ஒன்னு போடு மயங்கிடுவா…”

"சம்ம மாமே …." என்று சொன்னவள்.

தன் கையில் இருந்த கர்ச்சிப்பை அவர் முகத்திலும் அழுத்த..

அவளும் மயங்கி சரிந்தாள் சரிந்தவளை பிடித்து அவள் கம்பெனி நுழைவாயிலில் சாய்த்து விட்டு,

ஓடி வந்து காரில் ஏறிக்கொண்டாள்..

காரில் ஏரிய பின்னே நிம்மதி மூச்சை விட்டவள் .

தன்முன் இருந்தவர்களை கண்டு அதிர்ந்தவள்

"டேய் மச்சான்ஸ் என்னடா கோலம் இது, அதான் அந்த பொண்ணு அப்படி கத்துனாலா…." என்க…

"ஏன் எங்களுக்கு என்ன.." என்று கேட்டுக்கொண்டே
முகத்தில் இருந்த முகமூடியை கழட்ட..

"துரோகிங்களா..! நீங்க மட்டும் மாஸ்க்கு போட்டு இருக்கீங்க..”. என்று சிணுங்கினாள்.

ரிஷி " ஸ்வீட் ஹார்ட், நீ மாஸ்க் போட்ட அந்த ஹாக்கிங் கிட்நாபிங் கேட்டு போய்டும் அதன் … "

"போங்க டா …"

அசோக். "இப்போ என்ன மாஸ்க் தானே வேணும் இந்தா இத போட்டுக்க..” என்று
பக்கத்தில் இருந்த துணியை எடுத்து மகி முகத்தில் கட்ட.. அவளும் மயங்கி போனாள்…"

ரகு ”அடேய்! அது எக்ஸ்ட்டா வச்சி இருந்த மயக்க மருந்து அடிச்ச கட்சீஃப் டா…" என்று தலையில் கை வைக்க..

"ஐய்யோ மகி….. மகிமா…." என்று எழுப்ப அவள் எழுந்தாள் தானே..

இப்படியான ரணகலத்துடன் அவர்கள் சொல்லும் இடம் நோக்கி கார் பயணித்தது…..


மயங்கிய பெண் யார்?
ஏன் இவர்கள் கடத்தினார்கள்?

எல்லாதையும் அப்புறம் சொல்றேன்..

எண்ணம் போல் வாழ்க்கை ?

 
Status
Not open for further replies.
Top