ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சுட்டெரிக்கும் சூரியனை குளிர்த்தென்றலாய் அணைத்தவளே!!-கதை திரி

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5


திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் தம்பதி சமேதராக நின்று கொண்டிருந்தனர் இரணிய்யகர்பனும் சஷ்டிகாவும்...



வேஷ்டி சட்டையில் பாந்தமாய் புது மாப்பிள்ளைக்குரிய தோரணையில் நின்றிருந்தவனின் நெற்றியில் சின்னதாய் குங்குமத்தீற்று மட்டுமே இருந்தது.. அவன் முகத்தில் சிறு கர்வமான புன்னகை தோன்றியது....


அவன் ஒன்றும் சாதாரண ஒருவனுடன் மோதி வீழ்த்தவில்லையே.. சற்று கர்வமாகவும், திமிருடன் முகிலனைப் பார்த்து கொண்டிருந்தான்...


முகிலனை எந்தளவிற்கு பழிவெறியும் குரோதத்துடன் பார்த்தானோ அதேயளவு காதலுடன் பார்த்தான் சஷ்டிகாவை...


சஷ்டிகா இளஞ்சிவப்பு நிறத்தில் சேலை அணிந்து.. இவன் அவளுக்காக வாங்கியிருந்த நகையை மட்டும் போட்டுக கொண்டிருந்தாள்.. இதற்கெல்லாம் மேலாக அவன் கட்டிய தாலிக்கொடி அவள் நெஞ்சில் உறவாடிக் கொண்டிருந்தது.. ..


சஷ்டிகா அப்பாவிற்காக திருமணம் என ஏற்றுக் கொண்டாலும்.. முதன் முறையாக திருமண பந்தத்தில் இணையும் போது வரும் பதட்டமும் பயமும் அவளைத் தடுமாற வைத்தது...



வீட்டிலிருந்து அனைவரும் திருமணத்திற்கு வந்திருந்தாலும் யார் முகத்திலும் சுத்தமாக மகிழ்ச்சி என்பது இல்லை.. குயிலின் முகத்தில் பயம் பயம் மட்டுமே.. முகிலனை விட்டு விலகவேயில்லை..


அவளின் பயத்தை கூட அவன் அறியவில்லை.. முகிலனைப் பார்க்க அவனோ குற்றவுணர்ச்சியில் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வருத்ததுடன் இறுகிய முகத்துடன் நின்று கொண்டிருந்தான்..


இரணியனை பார்க்க அவனோ சர்வாவுடன் ஏதோ திவீரமாக பேசிக் கொண்டிருந்தான்… சஷ்டியோ 'முகிலனிடம் பேசலாம்' என முகிலனின் அருகில் சென்றவள் "அப்பா" என கூப்பிட்டது தான் தாமதம்... பக்கத்திலிருக்கும் முகிலனுக்கு கேட்டதோ இல்லையோ பத்தடி தூரத்திலிருக்கும் இரணிய்யனின் காதில் தெளிவாக விழுந்தது...


வேகமாக அவளருகில் வந்தவன்.. அவளின் முழங்கையை பற்றி தன்னை நோக்கி இழுக்க.. அவன் நெஞ்சில் பூமாலையாய் வந்து விழுந்தாள்… அவன் அழுத்திப் பிடித்ததினால் வந்த வலியில் சிறு முகம் சுழித்தவாறே, இருந்தவளின் வலி கண்ணில் பட்டாலும் முகிலனின் முன்னால் மிகவும் சாதாரணமாகவே முகத்தை வைத்திருந்தான்..


"இங்க பாரு.. உனக்கு அப்பா அம்மா சொந்த பந்தம் எல்லாம் நான் தான்.. நான் மட்டுந்தான்... உன்னை யாராவது பாக்கணும்னா கூட அவங்க எல்லாரும் என்னைத் தாண்டிதான் வரணும்." என அவளின் கையைப் பற்றியவன் தரதரவென இழுக்காத குறையாக சஷ்டியை இழுத்துக் கொண்டு சென்றான்...


அங்கிருந்த அனைவருக்குமே நன்றாக புரிந்தது... இனிமேல் சஷ்டியை பார்க்க வேண்டுமென்றால் இவனைத் தாண்டிதான் செல்ல வேண்டுமென்பது...


முகிலனுக்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சியே பேச விடாமல் செய்தது.. அங்கிருந்த யாரையும் கண்டுக்காமல் நேராக காரை நோக்கி சென்றவன் எடுத்த வேகத்தில் நின்ற இடம் அவனின் வீடு தான்..


வீட்டில் நுழைந்தவனுக்கு மனமெல்லாய் ரணமாக வலித்தது... தன் பெண்ணை கல்யாணம் என்ற பெயரில் பாழுங்கிணற்றில் தள்ளி விட்டதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறினான்..


சோபாவில் அமர்ந்து அண்ணாந்து விட்டத்தைப் பார்த்தவனின் இதழ்கள் விட்டேற்றியாக ஒரு புன்னகையை சுமந்திருந்தது...


விக்னேஷ்வரன், "இப்போ உங்களுக்கு சந்தோஷமா அண்ணா"...


கார்த்திக், "ஏன் அண்ணா அமைதியாவே இருக்கீங்க??.. எங்ககிட்ட சொல்லியிருந்தா எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்திருப்போம்.. இப்போ பாருங்க நம்ம எல்லாரும் இருக்கும் போதே அவளை நாய் மாதிரி தரதரன்னு இழுத்துட்டுப் போறான்.. நம்ம இல்லாதப்போ நம்ம பொண்ணை என்னெல்லாம் கொடுமைப்படுத்துவான்னு நெனைச்சுப் பார்க்கவே பயமா இருக்கு??"...


"இப்போ அவளுக்கு இப்படியொரு கல்யாணம் பண்ண வேண்டிய அவசியம் என்னன்னா??" என மாறி மாறி கேள்வி கேட்ட தம்பிகளை வெற்றுப்பார்வையுடன் பார்த்தான்... அவனின் பார்வையே அங்கிருந்த அனைவரையும் கொன்று கூறு போட்டது...


அவர்கள் அனைவருக்கும் பதிலாய் வந்து நின்றாள் ப்ரணவீகா.. "பெரியப்பா" என ஓடி வந்து அணைத்துக் கொண்டவளை பார்த்த பின்பு தான் நிம்மதியே வந்தது...


இவளுக்காக தானே இத்தனை பேரையும் எதிர்த்து சஷ்டியை பாழுங்கிணற்றில் பிடித்து தள்ளியிருக்கிறான்.. என்பதே மனதுக்குள் ரணமாக வலித்தது...


இரண்டே நாளில் முகிலனின் குடும்பத்தின் தலையெழுத்தையே மாற்றி எழுதியிருந்தான் இரணிய்யகர்பன்...


இரண்டு நாட்களுக்கு முன்பு ஹார்பரில் நின்றிருந்த முகிலனுக்கு போன் வர, அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்த அடுத்த நொடி, "ஹலோ மாமா சவுக்கியமா" என நக்கல் பொதிந்த வார்த்தைகளில் சட்டென கோபம் வந்தது..


"யாருடா நீ??"..


"என்ன மாமா இப்டி கேக்குறீங்க??.. உங்க பொண்ணை கட்டப் போற நான் உங்களுக்கு மாப்ள தானே".. என்றவனின் பேச்சை கவனிக்கும் நிலையில் சுத்தமாக இல்லை...


ஆல் இண்டியா டூர் செல்வதாக ஸ்கூலில் இருந்து சென்ற ப்ரணவீயிடம் நேற்றிலிருந்து பேசமுடியவில்லை... அவளின் செயினில் மாட்டியிருந்த ஜிபிஎஸ்ஸும் வேலை செய்யவில்லை... நேற்று இரவு பேசியதோடு சரி.. அதன் பின்பு அவளை தொடர்பு கொள்ளவே முடியவில்லை"..



அதே கவலையில் இருந்தவனுக்கு இந்த போன் கால் சிறிதும் ரசிக்கவில்லை...


"என்ன மாமா.. என் மச்சினிச்சியை காணும்னு தேடுறீங்களா?? ".. என நக்கலாக சிரித்தவனின் வார்த்தையில்

அனைத்துமே புரிந்து விட்டது..


இவன் சாதாரணமாக போன் போட்டு விளையாடவில்லையென.. "எங்கடா எம் பொண்ணு" என்ற முகிலனின் கர்ஜனையில் இகழ்ச்சியான புன்னகையை சிந்தியவன்..


"என்ன மாமா நீங்க.. இவ்ளோ நடந்ததுக்கப்புறம் நீங்க இப்டி கேட்டா எப்படி??.. நாந்தான் உங்க தம்பி பொண்ணை கடத்தி வச்சிருக்கேன்.. நான் சொல்றதை நீங்க அப்படியே உங்க வீட்ல போய் சொல்வீங்களாம்.. அப்புறம் உங்கதம்பி பொண்ணுக்கு நான் சோறு போடுவேனாம்".. என்றவனின் பேச்சை கேட்க வேண்டிய தருணத்தில் இருந்தான் முகிலன்...


"இங்க பாரு நீ பிரச்சனை பண்ணணும்னா அது எங்கூட தான் பண்ணு.. பாவம் அவ சின்ன பொண்ணுடா" என தன்னிலை விட்டு இரங்கிக் கேட்டவனின் வார்த்தையில் இடியென விழுந்து சிரித்தான் இரணிய்யகர்பன்...



"தி கிரெட் கார்முகிலன் கெஞ்சுறாரா??.. தன் தம்பி பொண்ணுக்காக கெஞ்சிறதை பாக்கும் போது அப்படியே உச்சி குளிர்ந்து போகுது மாமா". உதட்டில் விரக்தியான. புன்னகையுடன் சொல்லியவன்...


"இங்க பாருங்க உங்களுக்கு எந்த ஆப்சனும் கிடையாது... நீங்க நான் சொல்றதை கேட்டுத்தான் ஆகணும்.. அவன் சொல்ல சொல்ல கார்முகிலனுக்கு கோபம் கரை தாண்டினாலும், பெரிப்பா என் தன்னையே சுற்றி வரும் பீரணவீயின் பாசம் கட்டிப் போட்டது"..


.நேராக வீட்டிற்கு செல்லும் வழியிலெல்லாம் அவளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டான்... அவன் செல்லும் வழியெல்லாம் தனக்குத் தெரிந்த ஆட்களை வைத்து ஊரெல்லாம் தேட ஆள் அனுப்பியிருந்தான்.. எல்லா இடத்திலையும் வந்த ஒரே பதில் கிடைக்கவில்லை என்ற வார்த்தையே கிடைத்தது...


"தங்கள் வீட்டுப் பொண்ணின் மேல் கை வைத்தவன் மேல் இன்னும் கொலைவெறியாக இருந்தாலும், அவன் ஏன் சஷியை திருமணம் செய்ய கேட்கிறான் என்பது மட்டுமே பிரதானமாக இருந்தது"..


அவனின் சிந்தனை தடுபடுவது போல் வீடும் வர, வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு குயிலு, அன்னம், கங்கா, மீனா தமயந்தி தாத்தா மட்டுமே இருந்தனர்...


முகிலு வந்ததுமே சிரித்தவாறு வந்து நின்ற தமயந்தியை பார்த்தவனுக்கு குற்றவுணர்ச்சியாக இருந்தது... "இவர்களின் சந்தோஷம் நிலைக்குமா?? " என மனதுக்குள் சிந்தித்தவனுக்கு அவன் எடுத்த முடிவை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்..



"நான் உங்க எல்லார்கிட்டையும் ஒரு விஷயம் சொல்லணும் " என்றதும் அனைவரும் ஒரு வித எதிர்பார்ப்புடன் வந்து நின்றனர்..


"நான் சஷ்டிக்கு மாப்பிள்ளை பாத்துருக்கேன்".. என்றதும் அனைவரின் முகமும் பூவாய் மலர, அவன் அடுத்து சொன்ன வார்த்தையில் அனைவரும் விக்கித்து நின்றனர்....


"நாளைக்கு அவளுக்குக் கல்யாணம்" என்றதும் அனைவருமே பேரதிர்ச்சியில் இருந்தனர்..


குயிலுவோ முகிலனின் முகத்தைப் பார்க்க அவன் முகமோ பாறையென இறுகிப் போய் இருந்தது...


"யாருங்க மாப்பிள்ளை??.. என்ன பண்றாரு??" என்றவளின் கேள்வி சரியாக இருந்தாலும் அதற்கான பதில் தெரியாமல் தானே அல்லாடுகிறான்..


அவர்களிடம் என்ன சொல்லி சமாளிக்கலாம் என நினைப்பதற்குள் போன் அடிக்க, சட்டென அவர்களின் பேச்சைக் கூட காதில் வாங்கிக் கொள்ளாமல் படிகள் அதிர வேகமாக படியேறி தங்கள் அறைக்கு சென்று விட்டான்...


உள்ளே சென்றவன் நேராக பாத்ரூமிற்கு சென்று, "நீ சொன்ன மாதிரியே நான் சொல்லிட்டேன்.. ப்ரணவீயை விட்டுரு.. அவ சின்ன பொண்ணுடா".. என்றதும் கடகடவென சிரித்தவன்...


"இவ்ளோ சின்ன விஷயம் சென்றவுடனே... நான் ப்ரணவீயை விட்டுரணுமா??.. அதுக்கா நான் கஷ்டப்பட்டு அவளை கடத்துனேன்.. அவ்ளோ கெடுபுடில இருந்த பொண்ணை கடத்துறதுக்கு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா??. எனக்குத் தேவை ஒங்க பொண்ணு சஷ்டிகா" என ஆணவமாக சொல்லியவனை கண்டு பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது..


"சிக்கீரம் ஏர்போர்ட்ல வந்து என்னை பிக்கப் பண்ணிக்கோங்க" என்றதும் வெளியில் அவனிடம் பேசலாம் என கட்டிலில் அமர்ந்திருந்த குயிலை கூட கவனிக்காமல் வேகமாக வெளியே சென்று விட்டான்..


முகிலன் வந்தததும் பேசலாம் என நினைத்திருந்த குயிலு அவன் வேக வேகமாக சென்றது... ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது.. கேட்டாலும் சின்னதாக சிரிப்பால் சமாளிப்பானே தவிர.. கண்டிப்பாக வாயைத் திறந்து பதில் சொல்ல மாட்டான் இத்தனை வருஷ வாழ்க்கையில் தெளிவாக தெரிந்தது....


ஏர்போர்ட்டுக்கு வந்த முகிலன் அங்கு இரணியனுக்காக காத்திருந்தான்.. முகிலன் காத்திருப்பது தெரிந்தாலும் வேண்டுமென்றே அவனைத் தாண்டி இகழ்ச்சியான புன்னகையுடனே கடந்து சென்றனர் இரணியனும் சர்வாவும்....



ஏர்போர்ட்டிற்கு வெளியே கால் டாக்ஸியை கூப்பிட்டவனின் பின்னால், "என்னை வர சொல்லிட்டு நீங்க தனி கார் புடிச்சி போனா என்ன அர்த்தம் மிஸ்டர்.. இரண்யகர்பன் " என்றதும் சட்டென திரும்பி பார்த்தவனின் பார்வையில் இருந்த பகையும் கண்களில் தெரிந்த வெறியையும் புரியாத புதிராக பார்த்தான் முகிலன்...


"நான் எப்போ சார் உங்களை வர சொன்னேன்???"


"தூத்துக்குடி ஏர்போர்ட் வாங்கன்னு சொல்லும் போதே.. நான் உங்களோட பிலைட் டீடெய்லை கலெக்ட் பண்ணிட்டேன்.. இங்க இருக்கிற எல்லா பிசினஸ்மேனையும் எனக்குத் தெரியும். தெரியாதவர்னா அது நீ மட்டும்தான்.. அப்போ நீதான் எனக்கு போன் பண்ணி மிரட்டுறது??"...


"பரவாயில்லை மாமனாரே.. செம்ம ப்ரைன் தான் உங்களுக்கு வாங்க போகலாம்" என்றவாறே முகிலனின் காரில ஏற, சர்வாவும் தொடர்ந்து ஏறினான்...



கார் நேராக சென்று நின்றது என்னவோ ஹார்பருக்கு தான்.. அந்த இடத்தைப் பார்த்ததுமே சர்வாவிற்கு சற்று திகிலடிக்க, "என்னாச்சி அண்ணா இப்டி ஒரு இடத்துக்கு கூப்பிட்டு வந்துருக்காரு"...


"ம்ம்.. அமைதியா இரு" என்ற இரணியனின் கண்களில் துளியளவு கூட பயமில்லை..



"நீ இந்த இடத்தை விட்டுப் போனா தானே, ஒனக்கும் எம்பொண்ணுக்கும் கல்யாணம் நடக்கும் " என்றவனின் கர்ஜனையில் யாராக இருந்தாலும் சற்று நடுங்கிதான் போவர்...



"இரணியனுக்குத் தான் பயம் என்பது சிறிதுமில்லையே... "என்ன மாமனாரே ப்ரணவீ.. இப்போ என் கையில இருக்காங்குறதை மறந்துட்டுப் பேசுறீங்க???"..


"ப்ரணவீயை கண்டுபிடிக்க எனக்குத் தெரியும்" என்றவனின் பேச்சில் கலகலவென சிரித்தவாறே,


தன் போனை எடுத்து ஒரு வீடியோவை ஓட விட... அதில் சேரில் கட்டப்பட்டு சோர்ந்த நிலையில் தலை தொங்கியவாறே இருந்த ப்ரணவீயை பார்த்ததும்.. நெஞ்சில் சுருக்கென வலித்தது முகிலனுக்கு.


"ப்ரணவீயை தம்பி மகள் என்று என்றுமே அவன் பார்த்ததில்லை.. வீட்டிலேயே அவள் மிகவும் செல்லப்பிள்ளையும், துருதுருவென இருப்பவளும்.. ப்ரணவீக்காகவே தன் மகளின் வாழ்க்கையை அடகு வைக்க துணிந்தான்.. இருவரையும் கோபத்துடன் முறைத்தவாறே காரில் ஏறியதும்.. முகிலனை நக்கல் சிரிப்புடன் பார்த்தவாறே பின்னால் ஏறினர் இரணிய்யனும், சர்வாவும்..


நேராக வீட்டிற்கு வண்டியை நிறுத்தியவன்.. உள்ளே செல்ல.. அவனைத் தொடர்ந்து உள்ளே சென்றனர் இரணிய்யனும், சர்வாவும்.. இருவரையும் அங்கிருந்த அனைவருக்கும் அறிமுகப்படுத்தியவன் மேலே ஒரு அறையை விருந்தாட்கள் அறையில் தங்கிக் கொள்ள சொல்லிவிட்டு சென்றான்..


வீட்டின் மாடிப்படிக்குச் சென்று கொண்டிருந்த இரணியனின் கண்ணில் விழுந்தாள் சஷி... அரைத்தூக்கத்தில் ஒரு கண்ணை மூடியவாறே படிக்கட்டில் ஆடி அசைந்து வந்தவளின் அழகு இரணியனை மொத்தமாக வீழ்த்தியது...


அவன் நிற்பதைக் கூட பார்க்காமல் லாங் ஸ்கேர்ட்டும் ஆதியின் சட்டையையும் போட்டுக் கொண்டிருந்தாள்.. அவளின் டிரெஸ் எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும் என்பதால் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..


"சஷியோ அங்கிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் .. சோபாவில் சோர்ந்த நிலையில் அமர்ந்திருந்த முகிலனின் மடியில் தலை வைத்து படுத்தவள்.. அவனின் கைகளை எடுத்து தன் கன்னத்தில் வைத்தவாறே நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள்.. அவனின் மடியில் சொகுசுப் பூனையாக படுத்திருந்தவளை சற்று எரிச்சலுடன் பார்த்தான் இரணியன் "...


"இதே மாதிரி தன் மடியிலும் படுத்துத் தூங்கும் நாள் எப்பொழுதும் வரும்" என ஏங்கிய மனதை அடக்கிக் கொண்டு பார்த்தான்.


சஷ்டிக்கு கல்யாணம் என தெரிந்த நொடியில் இருந்து வீட்டில் உள்ள அனைவரையும் காச்மூச்சென கத்திக் கொண்டிருந்தாள் கிருத்திகா.. அவளுக்கு சஷ்டியின் அவசர கல்யாணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை..
 

Madhusha

Well-known member
Wonderland writer
ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்தவளுக்கு சஷ்டியின் செய்கை இன்னும் கடுப்பேற்ற, "நாம எல்லாரும் இவ வாழ்க்கையை நினைச்சி கவலைப்பட்டா.. இவ என்னடான்னா இப்போ தான் பச்சைப்பிள்ளை மாதிரி படுத்துருக்கா" என கோபத்துடன் கத்திக் கொண்டிருந்த


"ஏன்ப்பா இப்டி ஊரு பேர் தெரியாதவனுக்கு கட்டி வைக்கிறதுக்கு.. நாங்க பொறந்தப்போவே எங்களை பாழுங்கிணத்துல பிடிச்சி தள்ளி விட்ருக்கலாம்ல" என்றவளின் கேள்வியில் அனைவருமே அதிர்ந்து விட்டனர்..



மொழியோ சப்பென அறைந்தே விட்டாள்.. முகிலனுக்கு அவள் சொல்லிய வார்த்தையில் சுருக்கென வலிக்க ஆரம்பித்தது..


"என்னடி சொன்ன.. என்னச் சொன்ன??... ஒங்களையெல்லாம் பெத்தது மட்டுந்தான் நான்.. ஒங்களை தோள்லையும் மார்லையும் தூக்கிப்போட்டு வளர்த்தவிய அவுக தான். அவுகளைப் போய் இப்டி ஒரு வார்த்தை கேட்க எப்படிடி உனக்கு மனசு வந்திச்சு" என கண்ணீருடன் கேட்டவளுக்கு மனது ஆற மறுத்தது.. "என்ன வார்த்தை சொல்லி விட்டாள்.. தன்னவனை.. பாழுங்கிணற்றில் பிடித்து தள்ளி விடும் அளவிற்கு முகிலனை கெட்டவனாக நினைத்து விட்டாள் " என உள்ளத்தில் தோன்றிய வலியை மறைத்துக் கொண்டு,


"கார்த்தி" என்ற குரலில் அப்பொழுது தான் வீட்டில் நுழைந்த கார்த்தியும், "சஷி கல்யாணம் முடிஞ்சதும் இவளை நீங்க சென்னைக்கு கூப்ட்டுப் போயிருங்க... இவளுக்கு புடிச்ச மாதிரி மாப்பிள்ளையே இவளை செலெக்ட் பண்ணட்டும்.. கல்யாணம்னா பத்திரிக்கை மட்டும் அனுப்பி விடச் சொல்லுங்க" என்றவளின் பேச்சில் சட்டென கிருத்தியின் கண்ணில் கண்ணீர் வந்தது...


"அம்ம்மா" என்பதற்குள் "போதும் நிறுத்து" என்பதை போல் கையை காட்டியவள்.. "இதுக்கு மேலே ஒரு வார்த்தை நீ பேச தேவையில்லை".. என்றவளின் கையைப் பிடித்த சஷ்டி..


"அம்மா.. ப்ளீஸ்மா நீ நினைக்கிற மாதிரி இல்லைமா.. சஷ்டி வாழ்க்கை நல்லா இருக்கணும்ங்கிற அக்கறையில அப்படி பேசிட்டேன்.. ஸாரிம்மா.. ப்ளீஸ் மா" என இறைஞ்சியவாறே கேட்டவளை முறைத்துக் கொண்டு நின்றாள் குயிலு..



இருவரின் சண்டையையும் பார்த்த சஷ்டி கண்களை கசக்கிக் கொண்டே எழுந்து நின்றவள், "நான் எல்லாருக்கும் பொதுவா சொல்றேன்.. எனக்கு இந்தக் கல்யாணத்துல முழுக்க முழுக்க சம்மதம்.. மாப்பிள்ளை யாரா இருந்தாலும் நான் கட்டிக்க சம்மதிக்கிறேன்" என்றவளை கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள் மொழியை..


நன்றாக சென்று கொண்டிருந்த குடும்பத்தில் இரண்டே நாளில் தலைகீழாக புரட்டி திருமணத்தை நடத்தி முடித்திருந்தான்..










 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 6


வீட்டில் உள்ள அனைவரையும் சமாளிக்க முடிந்த குயிலால் முகிலை சமாளிக்க முடியாமல் திணறினாள்.. நேற்றிலிருந்து ஒரு சொட்டுத்தண்ணீர் கூட குடிக்காமல் பிடிவாதமாக இருந்தவனை கண்டு மனது தாங்காமல் தவித்தாள்... சஷ்டியின் திருமணம் முடிந்ததிலிருந்து எல்லாரும் மனதில் இனம் தோன்றா வலி ஒன்று எழுந்தது..


தங்கள் அறைக்குச் சென்று குயிலுக்கு முகிலனின் சோர்வான முகமும், எதையோ பறிகொடுத்து நிற்கும் சிறுவனைப் போல இருந்தவனை கண்டு மனது மிகவும் வலித்தாலும்... தான் துவண்டாள் தன்னவன் தாங்கமாட்டான் என்பது புரிய,


"சாப்பிடுங்க முகில்" என்றவனின் தோளின் மேல் கை வைத்ததும் தான் தாமதம்,


"என்னால முடியல குயிலு.. ரொம்ப வலிக்குதுடி.. பொண்ணைப் பெத்தவங்க ஒரு நாள் பிரியனும்னு எனக்குத் தெரியும்டி.. ஆனா இவ்ளோ வலிக்கும்னு தெரியாது.. மனசெல்லாம் ரணமா இருக்குதுடி"...


"ப்ச்.. முகில் நீங்களே உடைஞ்சிட்டா.. அப்போ நாங்க எல்லாம் என்னாகுறது" என்றவளின் கண்களில் கண்ணீர் வழிந்தோட முகிலனை அணைத்துக் கொண்டாள்..


"ஏன் குயிலு... சஷ்டி சாப்பிட்டிருப்பாளா??? அவன் எம் பொண்ணை என்ன பண்ணியிருப்பானோன்னு நெனைக்க நெனைக்க மனசு தாளலை குயிலு.. சஷ்டியை பார்க்கணும்னு மனசு தவிக்குது" என்றவன் குயிலின் மடியில் தலை வைத்து படுத்து சிறிது நேரத்திலேயே உறங்கியும் விட்டான்...


சிறிது நேரத்திலேயே கதவு தட்டும் சத்தத்தில் வேகமாக எழுந்து திறந்தவளுக்கு வெளியே கண்கள் கலங்க நின்று கொண்டிருந்தாள் ப்ரணவீகா...


"பெரியப்பா" என கம்மிய குரலில் கூப்பிட்டவளை.. அதற்குள் கதவு திறக்கும் சத்தத்தில் கண் முழித்த முகிலன் தன் முகத்தை சரி பண்ணியவன்... "என்ன குட்டிம்மா" என்ற முகிலனை அணைத்தவளுக்கு கண்ணீர் ஊற்றெடுத்தது...


"எல்லாம் என்னால தான பெரியப்பா.. என்னை அடிங்க பெரியப்பா.. இப்போ சஷ்டி அக்கா கஸ்டப்படுறதுக்கு நான் தானே காரணம்" என ஏங்கி ஏங்கி அழுதவளின் கண்ணீரை துடைத்தவன்...


"நீ ஏன்டா அப்படி நினைக்கிற.. உன்னால எதுவும் இல்லைடா.. நீயா ஏதாவது மனசுல போட்டு குழப்பிக்காதம்மா.. போ போய் நல்லா படிக்கனும் என்ன???" போய் சாப்பிடு" என ஆறுதல் சொல்லியவன்..


மனதை அரிக்கும் கேள்வியை கேட்டு விடுவதே மேல் என் "ப்ரணவீ அங்க உனக்கு எந்த சங்கடமும் இல்லையே.. நான் என்ன சொல்ல வர்றேன்னு என்பதற்குள்" என திணறிய முகிலனை பார்த்தவள்...


"இல்லை பெரியப்பா... நான் சங்கடப்படக்கூடாதுன்னு அங்க எனக்குத் துணையா ஒரு பாட்டியும் ஒரு அக்காவும் இருந்தாங்க.. அவுங்க என்னை கேர் பண்ணிட்டாங்க.. நான் சங்கடப்படுற மாதிரி எதுவுமே இல்லை பெரிப்பா" என்றதும் நிம்மதி பெருமூச்சு விட்டவன்...


"சரிம்மா போம்மா" என்றவளுக்கு கதவை நெருங்கு முன்பே "அம்மாஆஆ" என வயிற்றைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தவளை பார்த்து முகிலன் பயந்தே விட்டான்...


"ப்ரணவீ... ப்ரணவீ" என்பதற்குள் ஓரளவிற்கு என்ன நடக்கிறது என்பதை யூகித்த குயிலு... முகிலனை வெளியே அனுப்பியவள்... தமயந்தியை வரவைத்து பெண்கள் அனைவரும் ஒன்று கூட அனைவரின் பெரும் கவலையும் தீர்ந்தது ஒரு வழியாக... "ப்ரணவீ பெரிய மனுஷியாகி விட்டாள்" என சொல்லியதும் பார்கவிக்கு கண்ணீரே வந்தது..


என்னதான் வெளியே ஜாலியாக இருந்தாலும் ப்ரணவீயின் உறவுகள் குத்திக்காட்டிப் பேசாமல் இல்லை.. அப்பொழுதெல்லாம் சிரித்த முகமாக கடந்து விட்டாலும் ஒரு தாயாய் மனம் மிகவும் வலித்தது...


இந்த விஷயம் அறிந்ததுமே "இன்னும் வயசுக்கு வரலையா??" என்ற வாயையெல்லாம் அடைக்கும் விதமாய் ஊரை வளைத்து பந்தல் போட்டு மூன்றாம் நாள் கிடா வெட்டி திருவிழாவாய் கொண்டாடி விட்டனர் முகிலன் குடும்பத்தினர்..


சஷ்டி வராதது பெரிய குறையாக தான் இருந்தது.. இரண்யனுக்கு போன் பண்ணி சொன்னாலும் வரமுடியாது என சொல்லி விட்டான்..


தென்காசியில் உள்ள தங்கள் பரம்பரை வீட்டிற்கு தான் அழைத்து வைத்திருந்தான் சஷ்டியை...


காயத்ரி தென்காசியில் இருந்ததால் அங்கே மாலையும் கழுத்துமாய் மணக்கோலத்தில் வந்து நின்ற தன் பையனை கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார்...


"தான் காண்பது கனவா இல்லை நிஜமா" என புரியாமல் இருவரையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்த காயத்ரியை சற்று கடுப்புடன் பார்த்தவன் அவரை திட்ட வாயெடுக்குமுன்.,


"அம்மா.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க???.. அண்ணாவே எத்தனையோ பிரச்சினையை பண்ணி கல்யாணம் பண்ணிருக்காங்க.. நீங்க என்னடான்னா வாசல்லையே நிக்க வச்சிருவீங்க போல்"..


"பிரச்சனையா?? என்னடா சொல்ற?? யார்கிட்ட பிரச்சனை??" என அப்பொழுதும் வழவழத்துக் கொண்டிருந்தவரை எரிச்சலுடன் பார்த்த இரணிய்யன்...


"கொஞ்ச நேரம் உங்க கேள்வி எல்லாம் நிறுத்தி வைக்குறீங்களா?? போங்க.. போய் ஆராய்த்தி எடுக்குற வழியை பாருங்க" என்பதற்குள் வேலைக்காரி கொண்டு வந்த ஆராய்த்தி எடுத்தவர்... வீட்டுக்குள் கும்பிட்டு சாமி கும்பிட்டவர் பாலும் பழமும் கொடுக்க சென்றவரின் கையைப் பிடித்து நிறுத்தியவன்...


"மாம்.. நான் கொழும்புக்கு கிளம்பணும்" என்ற இரண்யனை குழப்பமாக பார்த்தார் காயத்ரி..


" என்னப்பா சொல்ற??" நீங்க வந்து உட்கார கூட இல்லை அதுக்குள்ள என்னப்பா இதெல்லாம்" என மனத்தாங்கலாக கேட்ட வரை,


"என்னை என்ன பண்ண சொல்றீங்க?? இவ அப்பா தான் எல்லாத்துக்கும் காரணம்... அங்கே கம்பெனி காலேஜ் எல்லாம் ரைடு நடந்திட்டுருக்கும்மா?? என்றவனின் கோபமும் கொழும்பு செல்ல வேண்டிய அவசரமும் புரிந்ததால்,


"சரிப்பா நீங்க கிளம்புங்க".. என்றதும் சஷ்டி கையைப் பிடிச்சதும் தான் தாமதம்..


"நான் வரலை" என்றவளை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவன்...


"ஷே இட்... ஒன் மோர் டைம்.. இன்னொரு முறை இதே வார்த்தையை சொல்லிப் பாருடி.. கன்னம் பழுத்துரும் ஜாக்கிரதை" என கை நீட்டி அடிக்க வந்தவனை சர்வா தான் பிடித்துக் கொண்டான்..


"என்ன அண்ணா பண்றீங்க??"..


"நான் கொழும்புவுக்கெல்லாம் வர மாட்டேன்... எனக்கு எங்க அப்பாவை பாக்கணும் நீங்க யாரும் எனக்கு வேண்டாம்" என அங்கிருந்த வேகமாக செல்ல முற்பட்டவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன்...


பளாரென அறைந்து விட்டான்... அவன் அறைந்த அறையில் அங்கிருந்த சோபாவில் இடித்து, கீழே விழுந்தாள்... அவன் கையிலிருந்த மோதிரம் அவளின் இதழ்களில் பட்டு இரத்தம் கசிந்ததை பார்த்தவனுக்கு இதயத்தில் சுருக்கென வலித்தாலும் வெளியில் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்...


அவன் அடித்த வலியும் இதழ்களில் வழியும் இரத்தத்துடன் அவனை ஏறிட்டு பார்த்தாள்... அவளின் கண்ணீரை பார்த்தவனுக்கு இதயத்தில் ரத்தமே வந்தது... அவளின் இரத்தத்தை துடைக்கப் போக,


எங்கே மறுபடியும் அடிக்க வருகிறானோ?? என பயத்தில் சட்டென தலையை பின் தள்ளியவள்... பயத்திலேயே "நான் உங்க கூட வந்துர்றேன்.. நான் எதுவும் பேச மாட்டேன்.. ப்ளீஸ் அடிக்காதீங்க... ரொம்ப வலிக்குது" என தன் கன்னங்களை கைகளால் மறைத்தவாறே பேசியவளை கண்டு சட்டென கண்கள் கலங்கினாலும் வெளியே விறைப்பாக இருந்தான்...


"பயப்படாதடி... எனக்கு ரொம்ப வலிக்குது" என மனதுக்குள் பேசியவனின் வார்த்தைகள் சஷ்டியின் காதில் விழ வாய்ப்பேயில்லை...


மனம் ரணமாக வலித்தது காதலித்தவள் தன்னைப் பார்த்து பயப்படுவதை தாங்க முடியாமல் கண்ணீர் கூட எட்டிப் பார்த்தது சட்டென கூலிங்கிளாஸை எடுத்து மாட்டியவன்.. "போகலாம்" என்றவன் பல மணி நேரங்களில் இலங்கையை வந்தடைந்தான்..


சஷ்டிக்குத் தான் பட்டுசேலையில் இருப்பதற்கே கசகசவென்று இருந்தது.. இடுப்பு தெரிகிறதா? முந்தானை விலகுகிறதா?? என மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாளே, தவிர வந்து இறங்கிய இடத்தை கவனிக்க கூடவில்லை.


அவளுக்கு தான் இங்கே வருவதற்கே இஷ்டமில்லையென்றாலும் மறுபடியும் அடி வாங்க தெம்பில்லாமல் வந்து சேர்ந்தாள்..


இறங்கியதிலிருந்து இரணியனுக்கு வேலை வரிசை கட்டி நின்றதில் சஷ்டியை கவனிக்க கூட அவனுக்கு தோன்றவில்லை... நான்கு நாட்களாக அவனால் வீட்டிற்கு செல்ல கூட முடியவில்லை... இவர்களின் பின்னாலேயே காயத்ரியும் கிளம்பி விட்டார் தன் மகனின் குணம் புரிந்து…


இவளுக்கோ அவன் நினைவு கூட சுத்தமாக இல்லை... நன்றாக வீட்டை சுத்திப் பார்ப்பது, காயத்ரியுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது என தன் நேரத்தை பிசியாக வைத்தாலும் அவளையும் மீறி வரும் குடும்பத்தின் நினைவுகள் வரும் போது கண்ணீர் தன்னால் வரும்..


தனியறையில் சென்று ஆசை தீர அழுது ஓய்ந்து வருவாள்.. அவளின் கண்ணீரை பார்த்த காயத்ரிக்கு தான் தன் மகனின் மீதே கோபம் ஊற்றெடுத்தாலும் அவனை எதிர்த்து கேட்டாலும் பதில் வருமா என்று கேட்டாள் அதன் பலன் பூஜ்ஜியம் என்பது அவர் அறிந்ததே ஒன்றே..


அதனால் தான் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் மகன் கல்யாணம் பண்ணினாலும் சஷ்டிக்கு துணையாக இருப்பதென முடிவெடுத்துள்ளார்...


நான்கு நாட்கள் கழித்து அசந்து போய் வந்தான் இரணியன்.. அவனுக்கு ரைடை சமாளித்து அனுப்புவதற்குள் ஒரு வழியாகி விட்டான்.. அவன் நேர்மையாக செய்தாலும் அதில் குற்றம் கண்டுபிடிக்கவே அனுப்பியிருந்தான் முகிலன்..


சோர்ந்து வந்து தூங்கியவனுக்கு எப்பொழுது உறங்கினான் என்றே தெரியாது... சில நிமிடங்களில் தன் நெஞ்சின் மேல் ஏதோ கனமாக கிடப்பது போல் தோன்ற.. அசதியிலும் கண்ணை திறக்க முடியாமல் திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது...


இலங்கையில் தொழில் வட்டாரத்தில் அக்னியாய் இருப்பவன்.. சுட்டெரிக்கும் சூரியனாய் எரிப்பவனின் நெஞ்சில் காலை போட்டு தலைகீழாக படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள் சஷ்டி...
 
Top