ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சுட்டெரிக்கும் சூரியனை குளிர்த்தென்றலாய் அணைத்தவளே!!-கதை திரி

Madhusha

Well-known member
Wonderland writer
முகிலனுக்கும் குயிலுக்கும் மூன்று குழந்தைகள்.. சஷ்டிகா தேவி, ஆதிரன், கிருத்திகா தேவி..


ஆல்பர்ட்டுக்கும் அன்னத்துக்கும் மூன்று குழந்தைகள்.. தான் ஒற்றை பிள்ளையாய் பிறந்ததாலோ என்னவோ ஆல்பர்ட்டுக்கு இரண்டு குழந்தைகள் போதுமென்று தோன்றவில்லை... மூத்தவன் நரசிம்மன், அடுத்ததாக ஆத்மிகா தேவி, மூன்றாவதாக மயூரன்...



சரணுக்கும் ஜீவ தாரணிக்கும் இரண்டு குழந்தைகள்.. ஒரு பெண் மற்றும் ஒரு ஆண்... மூத்தவள் மஹதி, அடுத்ததாக தீக்ஷன்...


கார்த்திக் தன்யாவிற்கு இரண்டுமே பெண்.. ஸ்ருதிகா, தான்விகா...


சிவனேஷ்வரன் தீபிகாவிற்கு இரண்டுமே ஆண் குழந்தை இரட்டை வாலுங்க ரெண்டும்... சாத்வீகன், ரித்வீகன்


விக்னேஷ்வரனுக்கும் பார்கவிக்கும் ஒரு பெண் குழந்தை பிரணவீகா தேவி... அனைவருக்கும் இளையவள்.... வீட்டின் கடைக்குட்டி.. ரெட்டை வாலுங்களுடன் இவள் செய்யும் சேட்டையில் வீடே ரெண்டு படும்.. முகிலனின் செல்லக்குட்டி...

சுட்டெரிக்கும் சூரியனை குளிர்த்தென்றலாய் அணைத்தவளே!!


முதல் அத்தியாயம்


இலங்கையில் உள்ள கொழும்பு மாகாணத்தில் பணக்காரர்கள் மட்டும் வசிக்கும் பகுதி அது... கிட்டத்தட்ட இருபது ஏக்கர் பரப்பளவில் நான்கு மாடியில் இருந்த பங்களா.. ம்ஹும்ம் பங்களா என்று சொல்ல முடியாத அளவிற்கு பெரிய பேலஸ் என்றே சொல்லலாம்..


அந்தளவிற்கு பெரியதாக தரையெங்கும் வெள்ளை நிறத்தை கொட்டியதைப போல் பளிங்குத்தரை பளபளவென மின்னியது.. ஹாலின் உள்ள அலங்கார பொருட்கள் பிரேத்தியகமாக பல நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது.. அதன் அழகே அதன் விலையையும் தரத்தையும் நிர்மாணித்தது...


ரெட் கார்பெட் படிகளில் அலங்கரிக்கப்பட்டு வீட்டின் இருபக்கமும் படிகளில் செல்வதற்கு ஏதுவாக இருந்தது.. உள்ளே வலது புறத்தில் தங்கியிருந்தார் காயத்ரி.. வி.கே.குரூப்ஸ் கம்பெனியின் ஒன் ஆஃப் த பார்ட்னர்..


இவர்களுக்கு ஏகப்பட்ட தொழில்கள்... நறுமணப் தயாரித்து ஏற்றுமதி செய்வது... தரமான துணிகளை நெய்வது ஏற்றுமதி செய்வது... இதைத்தவிர விவசாயம் செய்தார்கள்.. ஆர்கனிக் விதைகளால் விதைக்கப்பட்ட பழங்கள் காய்கறிகள் உள் நாட்டில் நல்ல வரவேற்பில் இருந்தது.. வி.கே.. காலேஜ்... வி.கே.. ஹாஸ்பிடல் என பல கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் கட்டி தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுத்து வருகின்றனர்...


அந்தத்தளம் முழுவதும் அவருக்காக ஒதுக்கி விடப்பட்டது.. இரண்டாவது தளம் முழுவதும் விருந்தாட்கள் வந்தால் தங்குவதற்கு என ஒதுக்கப்பட்டிருந்தது.. மூன்றாவது தளமும் நான்காவது தளமும் பிரேத்தியேகமாக அமைக்கப்பட்டது அவன் ஒருவனிற்காக..


கதிரவன் தன் வேலையை செவ்வென செய்ய... நிலவு மகள் தன் வேலையை செய்து கொண்டிருந்தாள்.. கிங் சைஸ் பெட்டில் ஷார்ட்ஸ் மற்றும் டீஷர்ட்டில் படுத்திருந்தவனின் உடல் முழுவதும் தொப்பலாக நனைந்திருந்தது..


அந்த அறையில் ஓடிக் கொண்டிருந்த ஏசியையும் மீறி வேர்த்து ஒழுகியது.. "அப்ப்ப்பாஆஆஆ" என்று அலறியவாறே எழுந்தமர்ந்தவனுக்கு இருபது வருடத்திற்கு முன்பு நடந்தது இப்பொழுதே நடப்பது போல் கண் முன்னே தோன்றி இம்சித்தது..


"இன்றா?? நேற்றா?? இவ்வாறு நடக்கிறது". கிட்டத்தட்ட இருபது வருஷமாக தன் நெஞ்சினில் பகையை சுமந்து கொண்டிருக்கிறான்.. அவனை அழிக்கும் வரை என்றும் ஓயப்போவதில்லை என்ற வெறியுடன் இருக்கிறான்..


கனவிலிருந்து விழித்தவனுக்கு அடுத்து தூக்கம் வருவதாக தெரியவில்லை.. ரஜாயை தூக்கி எறிந்தவன் நேராக சென்றது நான்காவது மாடியில் இருக்கும் நீச்சல் குளத்திற்கு தான்.. டீஷர்ட்டை கழட்டி எறிந்தவன் தொப்பென நீச்சல் குளத்தில் இறங்கினான்..


இரண்டு மணி நேரம் நீச்சல் குளமே தஞ்சமென இருந்தான்.. எழுந்து வந்தவனுக்கு அடித்துப் போட்டது போல தூக்கம் வர, அப்படியே தன் உடையை கூட மாற்றாமல் படுத்து விட்டான்.. அவனின் நெஞ்சில் எரிந்துக் கொண்டிருக்கும் பகையின் முன்னால் இந்தக்குளிர் என்ன செய்யும் என்ற எண்ணமே இருந்தது..



காலையில் ஐந்து மணியளவில் அன்றும் இன்றும் தன் மன்னவனின் நெஞ்சமதில் தஞ்சமான மொழி முதலில் எழுந்தாள்.. தன்னை அணைத்தவாறே படுத்திருந்த தன்னைவனைப் பார்த்ததும் முகம் முழுவதும் ஜொலிக்க.. சிரித்தவாறே அவன் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தவள் குளித்து முடித்து வெளியே வர.. அப்பொழுது தான் தமயந்தியும் வெளியே வந்தார்..


"ஆச்சி" என்ற சொல்லில் திரும்பி பார்த்த தமயந்தி.. "என்னாத்தா இன்னைக்கும் நீதான் சிக்கீரம் முழிச்சியாக்கும்.. உன் தங்கச்சிக எல்லாம் இழுத்துப் போத்திட்டு தூங்குறாளுவளாக்கும்.. இப்படியே நீயும் ஒம் புருஷனும் செல்லங் கொடுத்திங்கன்னு வச்சிக்கோங்க.. அதுக எல்லாம் உருப்புட்ட மாதிரி தான்" என திட்டிக் கொண்டே, பூஜையறைக்கு சென்றவர் அங்கிருந்த முருகனை கூம்பிட்ட பிறகே வேலையை ஆரம்பித்தார்..


அவருக்கு செய்வதற்கென்று பெரியதாக எந்த வேலையும் இல்லை.. ஆனாலும் காலையில் எழுந்தே பழக்கப்பட்டவருக்கு எழாமல் இருக்க முடியவில்லை.. இந்த வயதிலும் அவர் ஆரோக்கியமாக தான் இருந்தார்...


கங்காவும் மீனாவும் மதியம் இரவு சமையலை பார்த்துக் கொள்வார்கள்... காலை சமையல் மட்டுமே குயிலு பார்த்துக் கொள்வாள்.. ஸ்கூலில் மொத்த பொறுப்பும் இவளும் அன்னமும் எடுத்துக் கொண்டதால்... ஒவ்வொருவருக்கும் ஒரு சில வேலைகளை பிரித்தேக் கொடுத்திருந்தனர்..


முகிலனோ, ஆல்பர்ட்டோ அந்த பக்கமே செல்வதில்லை... அப்படியே சென்றாலும் அது அவர்களை பிக்கப் செய்வதற்காக மட்டுமே... ஆனால் குழந்தைகள் அனைத்தும் இங்கேயே தான் வளர்ந்தது...


தன் பெற்ற பிள்ளை, தம்பி பிள்ளை என எந்த பாகுபாடு இல்லாமல்... எந்தப் பிள்ளை தப்பு செய்தாலும் அதை ஒருவர் கண்டித்தால் மற்றவர்கள் தலையிட மாட்டார்கள்... முகிலனின் முன்னால் குழந்தையை யாராவது அடித்தால் அவ்வளவு தான் தன் பார்வையால் அவர்களை சுட்டெரித்து விடுவான்... அதில் பலியாகுவது சரணும் விக்கியும் தான்..


அனைவரும் காலை முழித்து எழுந்து வருவதற்குள் இட்லி ஊற்றி வைத்தவள், ஒரு அடுப்பில் பருப்பை வேக வைத்து, ஒரு அடுப்பில் காஃபி போடுவதற்காக பாலை வைத்தவள்.. தேங்காயை கீழே அமர்ந்து துருவிக் கொண்டிருந்தாள்..


"ஆச்சி அவுக யாரும் சும்மா இல்லையே... தன்யா பாவம் ஆச்சி... சென்னை கோயம்புத்தூர் திருச்செந்தூர்னு மாத்தி மாத்தி அலையுறா.. நிம்மதியா சாப்பிடுறாளான்னு கூட தெரியல்ல... அலைச்சல் தான் அதிகம்.. அதுல குழந்தையை வாரத்துல இங்க இருக்கிற ரெண்டு நாள் தான் பாத்துக்கிறா.. இங்கேயாவது நிம்மதியா தூங்கட்டுமே ஆச்சி"....



சிவ்வுக்கு எந்த ஊருக்கு டிரான்ஸ்ஃபர் அவனுக்கே தெரியல்ல.. அவனை தனியா விடவும் நம்மளால முடியல... அதுனால தான தீபியையும் அவனுக்கு துணையா அனுப்பி வைக்கிறோம்...


"சரி யாத்தா நீ சொன்னது எல்லாம் ஒத்துக்கிறேன்... இன்னும் ரெண்டு பேர் இருக்காளுகளே.. வாயாடி கழுதைங்க.. அன்னமும் பாருவும் அவளுக ரெண்டு பேத்துக்கும் என்னங்குற" என திட்ட கொண்டிருந்தவரை சமாதானப்படுத்தும் நோக்கில் திரும்பியவள் எதிரே ஒருவரின் மேல் ஒருவர் சாய்ந்து தோள்களைப் பிடித்தபடி நின்றிருந்த அன்னத்தையும் பார்கவியையும் பார்த்ததும் பக்கென சிரித்து விட்டாள்..


ஏனெனில் பார்கவி அப்படியே ஆச்சியைப் போல் சைகை செய்து... வாயை அசைத்துக் கொண்டிருந்தாள்...



குயிலுவின் சிரிப்பில் திரும்பி பார்த்த தமயந்தி... அங்கிருந்த இருவரையும் கழுத்தை நொடித்து திரும்பியவர்... "வந்துட்டாளுக ஜாடிக்கேத்த மூடி.. மூடிக்கேத்த ஜாடி மாதிரி.. எம் பேரனுக இதுக கிட்ட சிக்கிக்கிட்டு என்ன பாடுபடுறானுகளோ... முருகா.. நீதான் இதுக வாயை கொஞ்சம் அடக்கணும் முருகா" என்றவரை பார்த்து சிரித்தவாறே,


"ஆச்சி.. ஒம் பேரனுக நிலைமையை நான் வேண்ணா வீடியோ எடுத்து அனுப்புறேன்.. பாக்கீயலா??"... என்ற பாருவை முறைத்துக் கொண்டு சென்றார்..


குயிலின் அருகில் சென்றவர்கள்.. ஆளுக்கொரு வேலையை செய்தனர்.. காலை சமையலை விரைவாக முடித்தவர்கள். பால் சூடேற, அனைவருக்கும் காஃபி போட்டு வைத்தாள்..


. ஜாக்கிங் செல்லும் இளையவர்களுக்கு சத்து மாவு கஞ்சியையும் காய்ச்சி வைத்தவள் அனைவரையும் எழுப்புவதற்குள் படாதபாடு தான் பட்டாள்..


ஒரு வழியாக அனைவருக்கும் காஃபி கொடுத்தவள்.. தன் வேலைகளை பார்த்தபின்பு எட்டு மணியளவில் தன்னுடைய ரூமிற்கு சென்றவள்.. அங்கு முகிலன் இல்லை.. இந்நேரத்திற்கு அவன் எங்கிருப்பான் என தெரிந்தவள்..


நேராக ரூமின் பால்கனிக்கு சென்றவள்... கீழே தோப்பில் பார்க்க.. அங்கே தான் டம்பிள்ஸ் துக்கிக் கொண்டிருந்தான்... அவனை சிறிது நேரம் ரசித்தவளுக்கு ஸ்கூலுக்கு செல்ல நேரமானதால் வேகமாக குளியலறைக்கு சென்றாள்...


அதுவரை வீட்டிற்கு தோதாக உடித்தியிருந்த சாதாரண சேலையை மாற்றியவள்.. ஸ்கை ப்ளூ நிற காட்டன் புடவையில் நீண்டிருந்த கூந்தலை அழகாக பின்னி கொண்டை போட்டு கவ்வி கிளிப்பில் அதை அடக்கியவள்... காதில் எப்பொழுதும் நர்த்தனமாடும் ஜிமிக்கி இன்று அங்குமிங்கும் நடனமாடியபடி இருந்தது.. இடது கையில் ப்ரௌன் நிற வாட்சும் வலது கையில் இரண்டு காப்புகளை அணிந்தவள்..


"கழுத்தில் தாலியும் முகிலன் முதன் முதலில் மாட்டிய செயினை தவிர எல்லாம் வேறு எந்த நகையும் போடவில்லை"....


"மடிப்பு கலையாமல் கீழே இறங்கி வந்தவளை அனைவரும் சிறு மதிப்புடனும் பயத்துடனே பார்த்தனர்.. ஒருவனின் கண்கள் மட்டும் ரசனையுடன் பார்த்தது.. அவனின் ரசனை கலந்த காதல் பார்வையை உள்ளுக்குள் ரசித்தாலும் வெளியில் சாதாரணமாக முகத்தை வைத்திருந்தாள்"...


முகிலனும் குயிலும் இளையவர்கள் முன்பு அதிகமாக பேசிக் கொள்ள மாட்டார்கள்... தேவைக்கு தான் பேசுவர்.. அதில் கொஞ்சல் பேச்சுக்கள் என்பது சிறிதும் இருக்காது...


வெளியே வந்தவளை பார்த்து இதழ்களில் சிறிய புன்னகையுடன் பார்த்தவன்... "சிம்மா" என்ற குரலில் ஓடி வந்தான்.. நரசிம்மன்.. ஆல்பர்ட் வடநாட்டு சாயலில் இருந்தான்.. ஆனால் நரசிம்மனோ ஆல்பர்ட்டின் தந்தையை உரித்து வைத்திருந்தான்...


"ஆங்... சொல்லுங்க பெரியப்பா" என வேகமாக வந்தவன்..



மொழி தயாராகி இருப்பதை பார்த்ததுமே, "ஓஹ் ஸ்கூலுக்கு ரெடியாகிட்டாங்களா பெரியம்மா.. இதோ ஒரு நிமிஷம் பைக் சாவி எடுத்துட்டு வந்துடுறேன்" என ஓடியவனை பார்த்து புன்னகைத்தவாறே திரும்பியவள்,


"ம்ம்.. ஆம்பளைப் பையன் காலையில எந்திரிச்சி குளிச்சி முடிச்சிட்டான்.. ஆனா இந்த மூத்தக் கழுதையை பாத்தீங்களா??.. இன்னும் தூங்கிட்டு இருக்குது... அதுக்கு துணையா கோவேரிக் கழுதை மாதிரி... அந்த கிருத்தி வேற... இதுங்க ரெண்டும் எப்போதான் உருப்புட போகுதுகளா??"...


மொழியின் இந்த பாராட்டுக்கெல்லாம் சொந்தக்காரிகளான சஷ்டிகாவும் கிருத்திகாவும் ஒருவரின் மேல் ஒருவர் கால் போட்டு அணைத்தவாறே படுத்திருந்தனர்...


"மொழி.. பசங்களுக்கு தெரியும் எப்போ எந்திரிக்கனும்னு.. நேத்து சஷ்டிக்கு ஆபீஸ்ல ரொம்ப ஓர்க் அதிகம்.. கிருத்தி அந்த கேஸ்க்காக ரொம்ப அலைஞ்சிட்டு இருக்கா... அதுனால பசங்க காலையில கொஞ்ச நேரம் எக்ஸ்ட்ரா தூங்கட்டும் ஒன்னும் பிரச்சினையில்லை." என மகள்களுக்காக போர்க்கோடி தூக்குபவனை பார்த்து உதட்டை சுழித்தவள்...


"இவிய எப்போ அவியலெல்லாம் விட்டுக் கொடுத்துருக்காவ... இப்படியே செல்லங் கொடுக்க வேண்டியது. நான் ஏதாவது சொல்லிட்டா போதும். உடனே ஏதாவது சொல்லி என் வாயை அடைச்சிற வேண்டியது. நல்ல அப்பா நல்ல பொண்ணுக உருப்புட்ட மாதிரி தான்" என அங்கலாய்த்து நரசிம்மனின் பின்னால் சென்றாள்...


ஒரு தெரு கூட தாண்டியிருக்க மாட்டாள்.. காலையில் ஒரு பையனை போட்டு வெளுத்து எடுத்துக் கொண்டிருந்தாள் மஹதி... மாநிறமாக இருந்தாலும் முகம் முழுவதும் கலையாக இருப்பாள்...


அவள் அடிப்பதை பார்த்த சிம்மா, "பாத்தீங்களா பெரிம்மா எவனையோ வெளுத்து வாங்கிட்டு இருக்கா... ஏன் பெரிம்மா ஊர்ல ஒருத்தனை விட மாட்டேங்குறா... எவேன் கண்ணுல பட்டாலும் அவனுக்கு அன்னைக்கு சனி தான்... அடில வெளுத்து வாங்கிறா.. இது பொண்ணா இல்லை பிசாசான்னு தெரியல்ல.. வர்றா.. வர்றா பெரிம்மா.. நான் சொன்ன எதையும் அவகிட்ட சொல்லிராதிய"... என்று சற்று பம்மியவாறு பேசியவனை புன்னகையுடன் பார்த்தவள்...


"அத்தே... எப்படி இருக்கீய??.. மச்சான் ஏதும் போன் போட்டாவளா??... எல்லாரும் சேர்ந்து ஆதி மச்சான பாரின்க்கு போய் படிச்சா தான் ஆச்சின்னு அனுப்பி வைச்சிட்டிக" என கழுத்தை நொடித்தவளின் செய்கை அப்படியே காவேரியை ஒற்றுப் போய் இருந்தது..


"இன்னும் ஒரு மாசத்துல படிப்பை முடிச்சிட்டு வர்றான்... அவன் வந்ததும் உன் கையில ஒப்படைச்சிர்றோம்.. அப்புறம் நீயாச்சி அவனாச்சி... என்ன சந்தோஷமா??" என வெட்கத்தில் சிவந்த கன்னங்களை மறைப்பதற்காகவே ஓடி விட்டாள்...


ஆதிரனுக்கு மஹதிக்கும் பெரியவர்களால் திருமணம் பேசப்பட்டிருந்தாலும்... சிறியவர்களின் சம்மதம் தெரிந்த பின்பே இருவரின் கல்யாணத்திற்கும் சம்மதித்தான் முகில்... ஆதி படிப்பை முடித்து வந்ததும் கல்யாணம் என பேசப்பட்டது.. இன்னும் ஒரு மாசத்தில் கல்யாணம் என கோவிலில் வைத்து முடிவாக்கப்பட்டது..


குயிலு ஸ்கூலுக்கு சென்றதும் முகிலன் நேராக சென்ற இடம் சஷ்டியின் அறைக்கு தான்... "சஷ்டி.. சஷ்டி" என கதவை தட்டுவதற்குள்... "ஆங்.. அப்பா வர்றேன்" என சோம்பல் முறித்தபடி எழுந்தவள் பக்கத்திலிருந்த கிருத்தியை எட்டி ஒரு மிதித்து விட்டு வெளியே ஓட பார்த்தவளின் ஜடையை ஒரே இழுவில் இழுத்து கட்டிலின் மேல் போட்டவள்.. அவளை ஓங்கி ஒரு மிதித்தாள்...


"ஹேய்.. என்னையே... மிதிக்கிறிய்யா???"...


நீ மட்டும் என்னை மிதிச்ச என்றவள் வேகமாக சென்று கதவை திறந்தாள்.. அங்கு நின்றிருந்த முகிலனின் பின்னால் பதுங்கியவாறே நின்றவள்.. "அப்பா.. அப்பா.. அடிக்க வர்றாப்பா" என முகத்தை மட்டும் பாவமாக வைத்து எட்டிப் பார்த்து சொல்ல...


"அப்பா.. அவதான் என்னை மிதிச்சிட்டு வந்தாப்பா". ..


"நீதாண்டி முதல்ல மிதிச்ச"..


"நீதாண்டி"...


"நீதான்"....


"நீதான்"...


"இரண்டு பேருமே வாலுப்பசங்க தான்... இப்போ ரெண்டு பேரும் கிளம்புனா தான் வேலைக்கு போக முடியும்.. கிருத்தி நீ கோர்ட்டுக்குப் போக முடியும்... இன்னைக்கு பத்து மணிக்கு ஹீயரிங் சொன்னல்ல... நியாபகம்

இருக்கா??" என்றவனை பார்த்து அசடு வழிந்தவள்..


"ஆமாப்பா... மறந்தே போயிட்டேன்... இதோ கொஞ்ச நேரத்துல ரெடியாயிடுறேன்...

இருவரும் கிளம்பவும் இன்னோவா காரை வெளியே எடுத்தவன் அவர்களை கோர்ட்டிலும் ஆபீஸிலும் இறக்கி விட்ட பின் தன் ஆஸ்தான இடமான ஹார்பருக்கு சென்றான்...

சுட்டெரிப்பான்...
 
Last edited:

Madhusha

Well-known member
Wonderland writer

அத்தியாயம் 2


சில மணி நேரத்தில் ஹார்பருக்கு வந்து இறங்கினான் முகிலன்.. வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் கம்பீரமாக கட்டுக்களையாத உடல்கட்டுடன் வந்து இறங்கியவனை செல்வம் ரசித்துப் பார்த்தான்... முன்பெல்லாம் முகம் இறுகி இருக்கும்.. ஆனால் இப்பொழுதெல்லாம் இதழ்களில் புன்னகை உறைந்திருக்கும்...


செல்வத்தை பார்த்து புன்னகைத்தவாறே ஆஃபீஸ்க்கு சென்றவனுக்கு, வீடியோ கால் வர அதைப் பார்த்தவனின் முகம் மென்மையாக புன்னகைத்தது.. இது அவனின் செல்லக்குட்டி அல்லவா... அவன் போனை ஆன் செய்ததது தான் தாமதம்.... படபடவென தவுசண்ட் வாலா பட்டாஸாய் வெடிக்க ஆரம்பித்து விட்டாள்..



"எல்லாம் உங்களால தான் பெரிப்பா... இந்த மீசைக்கிழவன் தொல்லை தாங்கலை... என் மருமகன் இப்படி... என் மருமகன் அப்படின்னு அப்பாவை பத்தி பேசிப்பேசியே எனக்குத் தலைவலியை வர வைக்கிறாரு.. இதுல மீசையை வேற முறுக்கி விட்டுக்கிட்டு... நல்லா கெடா மீசைக்காரு எனக்குப் புடிக்கவே இல்லை பெரிப்பா.. என்னை இப்போ வந்து கூட்டுப் போறீங்களா? இல்லையா?... இல்லை.. இல்லை நான் சிம்மா அண்ணாகிட்டையே சொல்லிடறேன்... வந்து கூப்பிட சொல்லி... நீங்க ஒன்னும் வர தேவையில்லை... நீங்க அந்த ஹார்பரையே கட்டி அழுவுங்க.. போங்க உங்க பேச்சு கா" என முகிலன் பேசுவதற்கு சிறிதளவு கூட இடம் கொடுக்காமல் போனை வைத்து விட்டாள் பிரணவீகா..


பதினைந்து வயது பாவையவள்.. வீட்டில் எல்லாருக்கும் சின்னவள் என்பதால் இவள் மீது எல்லாருக்குமே ப்ரியம் அதிகம்...


போனை பார்த்தவனின் இதழ்கள் அழகாக விரிந்தது... அவனுக்கு எப்பொழுதும் பிரணவீ ஸ்பெஷல்.. அவரின் ஆச்சியை உரித்து வைத்திருந்தாள்.. இவளின் ஆளுமை பேச்சுத்திறன் என அனைத்தும் தமயந்தி தான்...


மாணிக்கமும் சண்முகமும் "என்னை பெத்தவளே" என ஒரு வார்த்தை சொன்னால் போதும் எங்கிருந்தாலும் தாத்தா என இருவரையும் கட்டிக் கொள்வாள்..அந்தளவிற்கு அனைவருமே இவளின் மேல் உயிரையே வைத்திருந்தனர்..


பத்து வயதிலே அந்த வீட்டிலே அல்லி ராஜ்ஜியமே நடத்த ஆரம்பித்து விட்டாள்... அந்த வீட்டிலே பெருங்கவலை என்றால் இன்னும் ப்ரணவீ வயதுக்கு வராதது தான்..



அப்பொழுது தான் ஹார்பரில் நுழைந்தான் நரசிம்மன்... எல்லாரும் 'சிம்மா' என அழைக்கப்படுபவன்.. முகிலனுக்கு உதவியாக ஹார்பரை பார்த்துக் கொள்பவன்.. இவனுக்கு வாய் பேசுமோ இல்லையோ கை நன்றாகவே பேசும்...


ஆல்பர்ட்டுக்கு என்றும் சிம்மாவை நினைத்து பெருமையே.. தன் தந்தை போல் இருப்பதால் சற்று மரியாதையாக தான் பேசுவான்..


எதிர்ப்பட்ட அனைவரின் வணக்கத்தை ஏற்று கொண்டபடி... நேராக சென்றது முகிலனின் அறைக்குத் தான்... நேற்று எக்ஸ்போர்ட் பண்ணிய கணக்கு வழக்குகள் அனைத்தையும் துல்லியமாக ஒப்படைத்தவன்... அதை சஷ்டிக்கு மெயில் அனுப்பி விடுவான்..


சஷ்டி எம்.கே.. குரூப்ஸ் ஆப் கம்பெனியின் சீப் ஆடிட்டர்.... முகிலன் படிப்பிலோ வேலையிலோ தலையிடுவதே இல்லை.. அது அவர்களின் விருப்பம் என்று விட்டு விட்டான்...



அவனின் கணக்கு வழக்கையெல்லாம் சரி பார்த்தவன்.. "எப்போ பார்த்தாலும் யாரையாவது அடிக்கிறீயாம்.. கம்ப்ளெட் வருது.." என்ற சற்று குரலை கடினமாக்கி கேட்ட முகிலனை பார்த்து சற்று தலை குனிந்தவாறே "எந்த பக்கி பண்ணாடையோ.... போட்டுக் கொடுத்துடுச்சி போல" என முணங்கியவனை..


"இல்லை... பெரிப்பா... அது வந்து" என இழுத்தவனை கண்டிக்கும் பார்வை பார்த்தவன்..


"டக்குன்னு கையை நீட்டுறது உன் வயசுக்கு நல்லது இல்லை சிம்மா"...


"ம்ம் சரி பெரிப்பா" என நல்ல பிள்ளை போல் தலையாட்டியபடி சிறிது தூரம் சென்றவனை... "சிம்மா" என்ற குரலில் டக்கென திரும்பினான்...


"அந்த பக்கி பண்ணாடை உங்கப்பா தான்" என்றதும் டக்கென நாக்கை கடித்து ஒரு கண்ணை மூடியவாறே வெளியே சென்றவனை பார்த்து இதழில் புன்னகை தான் வந்தது...


"அவங்கப்பனுக்கு அப்படியே நேர்மாறா வந்து பொறந்துருக்கான்... இவனுக்கெல்லாம் அவ அம்மா தான் கரெக்ட்" என்றவன் சிறிது நேரத்தில் திருநெல்வேலியை நோக்கி வண்டியை விட்டிருந்தான்..


சில மணி நேரத்தில் வேலையை முடித்த நரசிம்மா... நேராக சென்றது தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில்.. தன் டூகாட்டியை நிப்பாட்டி உள்ளே செல்ல முயன்றவனுக்கு... சப்பென அறையும் சத்தத்தில் திரும்பி பார்த்தான்...


'கேடி வக்கீல்' என அனைவராலும் அழைக்கப்படும் கிருத்திகா தேவி... ஒன்றரை வருடங்களாக வக்கீலாக பணிபுரிகிறாள்.. எடுத்த முதல் கேஸில் தன்னை விட சீனியரை திறமையாக வாதாடி... அனைவரின் பாராட்டையும் பெற்றவள்..


தந்தையின் கோபத்தையும் தாயின் அழகையும் கொண்டு பிறந்தவள்.. இன்று நடந்த கேஸில் ஆளுங்கட்சிகாரனின் கையாளை ஆதாரத்துடன் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டாள்... அதனால் தரக்குறைவாக பேசிய கட்சிக்காரன் ஒருவனை சப்பென அறைந்திருந்தாள்...


"ஆரம்பிச்சிட்டாடா" ஆனாலும் இந்த பெரியப்பாவுக்கு ஏன்தான் இவ்ளோ ஓரவஞ்சனையோ??? இதுங்க யாரை அடிச்சாலும் கேக்குறதில்லை... தப்புன்னு தெரிஞ்சா டக்குன்னு கையை நீட்டுது.. காலையில அந்த பிசாசு ஒரு குடிகாரனை போட்டு அடிச்சிட்டு இருந்தா... இப்ப இவ .... நம்ம கையை நீட்டுனா எங்கயிருந்தாவது நீயூஸ் போனா பத்து நிமிஷம் அட்வைஸ் பண்ணி காதுல ரத்தம் வர வைக்குறாரு... ஓஹ் மை காட்" என்று புலம்பினாலும் கிருத்தி என்ன பண்ணுகிறாள் என வேடிக்கை தான் பார்த்தான்..


"என்னடா சொன்ன??.. ஹான் சின்ன பொண்ணுன்னு பாக்குறேன் இல்லை செதைச்சிருவீய்யா??.. என் மேலே கை வைச்சி பாருடா??.. அப்போ தெரியும் நான் யாருன்னு வந்துட்டான் அண்டாவுக்கு சட்டை போட்ட மாதிரி"... என சற்றும் பயம் இல்லாமல் எகிறியவளை, அடிக்க செல்வதற்குள்,


அந்தக் கட்சியை சேர்ந்த நாலைந்து பேர் அவனை இழுத்து சென்றனர்.. "ஏம்ல ஆக்கங்கெட்ட கூவ.. வரைமொறை தெரியாம... அவ மேலே கை வைக்கப் போற??"...


"ஏன் அவ என்ன அவ்ளோ பெரிய ஆளா??" என அப்போதும் அடங்காமல் எகிறியவனை,


"ம்ம... நீ சொன்னாலும் சொல்லாட்டியும்... அவ பெரிய ஆளுதாண்டி.. இவ்ளோ பேர் இருக்கோமே... அவகிட்ட கூட போகாம ஏன் நிக்கிறோம்ல.. முகிலன் அண்ணாச்சி பொண்ணுல அது.. அந்த நரசிம்மன் உனக்கு கட்டம் கட்டிட்டான்னு நெனைக்கிறேன்.. அங்க பாரு.. என கை நீட்டிய திசையில் பார்த்தவனுக்கு அள்ளு கிளம்பியது..


நரசிம்மன் இவனை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான்.. அவனின் நல்ல நேரம் அதற்குள் கிருத்திகா நேரே வந்தவள்... சிம்மு வீட்டுக்கு போகலாம்.. இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன்கிட்ட மோதுறதுக்கு போற.. அவன் கிடக்கான் சல்லிப்பய... நீ வா.. கை கோர்த்து அழகாக கூப்பிட்டு சென்றாள்... தன் தம்பியை...


திருச்செந்தூர் நோக்கி செல்லாமல் டூகாட்டி நேராக திருநெல்வேலியை நோக்கி செல்ல.. கிருத்தி ஒரே ஹாப்பி..


கொழும்புவில் எப்பொழுதும் போல் காலையில் மகன் ஆபீஸ் செல்வதை பார்ப்பதற்காக அமர்ந்திருந்த காயத்ரி நிமிடத்திற்கு ஒரு முறை வாசலையும் லிப்டின் கதவையும் மாறி மாறி பார்த்தார்... இவன் இறங்கி வருவதற்குள் அவன் வர வேண்டுமே.. என மனதுக்குள் நினைத்தவாறே இஷ்ட தெய்வமான அம்மனை வேண்டி திரும்பி பார்த்தவரின் நெஞ்சில் பாலை வார்த்ததுபோல் வந்து நின்றான் சர்வானந்த்..


" சர்வா" என அழைக்கப்படுபவன்... காயத்ரி தன் சொந்த மகனாக நினைப்பவன் அவனுக்கு ஒரு தங்கை மட்டுமே ப்ரியம்வதா... இருவரும் அவ்வளவாக பேசிக் கொள்வதில்லை.. கட்டுப்படுத்த அனைவரும் திணறும் ஒருத்தனை தன் சிரிப்பால் கட்டிப்போடுபவன்..


"குட்மார்னிங் ம்மா"...


"குட்மார்னிங் டா" என சற்று கலங்கிய குரலில் சொன்னவரின் இரு கரங்களையும் பிடித்தவாறே,


"என்னாச்சி ம்மா.. அண்ணா ஏதாவது சொன்னாரா??".. என்றவனைப் பார்த்து "இல்லை" என தலையாட்டியவர்...


"அவன் ரொம்ப ஒரு மாதிரியா இருக்காண்டா... என்னால பாக்க முடியல.. யார்கிட்டையும் பேசவே மாட்டிக்கிறான்.. யார் பேசினாலும் அவன் அக்னி பார்வையாலேயை எரிச்சிறான்... சரியா தூங்கவே மாட்டேங்குறான்... கல்யாணமாவது பண்ணி வைக்கலாம்னு பார்த்தா கொஞ்சங்கூட பிடிகொடுக்க மாட்டேங்குறான்" என தன் கவலையெல்லாம் தன் வளர்ப்பு மகனிடம் சொல்ல..


"ஒன்னும் ஆகாதும்மா... நான் பார்த்துக்கிறேன்" என ஆறுதல் சொல்லியவன்... நேராக மேலே செல்ல பார்க்க அதற்குள் லிப்ட் திறந்தது.. இருவரின் கவனமும் லிப்ட்டின் அருகில செல்ல... கோர்ட் சூட்டில் கம்பீரமாக ஆணவமும் திமிரும் கலந்து வந்து கொண்டிருந்தான்...


'அக்னி' என அழைக்கப்படுபவன்... தொழில் வட்டாரத்தில் அனைவரையும் தன் கண் பார்வைக்கே அடிபணிய வைப்பவன்.. அவன் ஒருவனிடம் சாந்தமாக பேசுகிறான் என்றால் அது சர்வா தான்...


"குட்மார்னிங் அண்ணா" என்றவனுக்கு தலையாட்டல் மட்டும் தான் குட்மார்னிங் சொன்னது... ஆனாலும் சின்ன சிரிப்புடனே... டைனிங் டேபிள் போய் அமர... இருவருக்கும் பரிமாறிய காயத்ரி..



காயத்ரி திருநெல்வேலியில் உள்ள தென்காசியை பூர்வீகமாக கொண்டவர்.. பெற்ற மகனை தம்பி என அழைக்கும் ஒரு சிலருக்கு இன்றும் வழக்கத்தில் இருக்கிறது.. காயத்ரியும் அவ்வழக்கத்தில் உள்ளவர்..


ஒரு சில காரணங்களால் இருபது வருடத்திற்கு முன்பு இங்கு வந்து சிறிய அளவில் தொழிலை ஆரம்பித்தவர்.. அக்னி வளரும் வரை சாதாரணமாக சென்ற தொழிலை பதினோரு வருடத்தில் தன் அசுரத்தனமான உழைப்பால் பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருந்தான் அக்னி..


அந்த உழைப்பு தந்த திமிரும் ஆணவமும் அவனை பேரழகனாக காட்டியது...


"தம்பி" என்றதும் தலையை நிமிர்த்தி பார்த்தவனைக் கண்டு உள்ளுக்குள் திகிலடித்தாலும்...


"நான் இந்தியா போகலாம்னு இருக்கேன்" என்றவரின் பயம் கலந்த தயக்கமாக வந்த வார்த்தை எதுவும் அவன் கவனத்திற்கு வரவில்லை..


"ஏன்" என்ற தெறித்து வந்து விழுந்தன வார்த்தைகள்...


காயத்ரி சர்வாவிடம் "ஹெல்ப் பண்ணுடா" என்று கண்ணை காட்டியதும்..


" என்னண்ணே இப்படி சொல்றீங்க.. அம்மாவோட பெரிய வேண்டுதலே உங்களுக்கு கல்யாணம் ஆகணும்ங்கிறது தான்.. 31 வயசாயிடுச்சி இன்னமும் நீங்க கல்யாணம் பண்ணாம இருந்தா அம்மா கவலைப்படாம இருப்பாங்களா??... அம்மா மட்டுமா கவலைப்படுறாங்க நானும் தான்.... இப்பவே எனக்கு இருபத்தி எட்டு வயசு ஆகுது... நீங்க எப்போ கல்யாணம் முடிச்சி அப்புறம் நான் எப்போ கல்யாணம் பண்ணி.. புள்ளை குட்டின்னு பொறந்து படிக்க வைக்கிற ப்ராசஸ்ல இறங்குறது.... சோ.. சேட்" என்றவனை தீப்பார்வை பார்த்தவன்...


"கல்யாணம் மனசுக்கு எவளோ புடிக்குதோ அவ கூட தான் நடக்கணும்... நீங்க சொல்றீங்க அப்படிங்குறதுக்காக என்னால கல்யாணம் பண்ண முடியாது மாம்... சாரி மாம்... நீங்க இந்தியா போக எல்லா அரெஞ்ஜ்மெண்டும் நாளைக்கு காலையில ரெடியா இருக்கும்" என்றவன் வேகமாக எழுந்து செல்ல சர்வா சாப்பாட்டு தட்டை தூக்கிக் கொண்டு பின்னாடியே ஓடினான்...


அவன் ஓடி வருவதை பார்த்தவன் அவனையும் பிளேட்டையும் மாறி மாறி பார்த்தான்.. அவன் பார்வையிலையே புரிந்து விட்டது.. "இப்படித்தான் மீட்டிங் வர்றீயா" என கண் பார்வையை உணர்ந்தவன்...


'ஹ்ஹ்ஹிஹிஹி' என்ற பல்லை காட்டியவாறே "இல்லைண்ணா பிளேட் வைச்சிட்டு வந்துர்றேன்" என வேகமாக டைனிங் டேபிளில் ஓடிச்சென்று அவசர அவசரமாக எல்லாத்தையும் வாயில் அள்ளி போட்டவனை காயத்ரி "மெதுவாடா... இந்தா தண்ணீ" என்றதும் ஒரே மடக்கில் அனைத்தையும் குடித்தவன்...


"போய்ட்டு வர்றேன் ம்மா.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க... அண்ணா யாரையோ லவ் பண்றாங்க" என்றதும் அதிர்ச்சியில் காயத்ரியின் கண்கள் விரிய..


"ஆமாம்மா.. உண்மையா... அண்ணாவோட செல்லுல ஒரு வீடியோ இருக்கு.. அந்த பாட்டு அண்ணா ரொம்ப டிப்ரஷன் ல இருக்கும் போது கேட்பாரு.. பாட்டு கேக்குறாருன்னு நினைச்சேன்.. ஆனா அது இல்லை.. அவரு அந்த வீடியோவுல இருக்கிற பொண்ணைத் தான் பார்க்கிறாரு.. அவளை தான் காதலிக்கிறாருன்னு நினைக்கிறேன்"..


"உனக்கு எப்படித் தெரியும்???".. என வாய் திறப்பதற்குள் "சர்வா" என்ற கர்ஜனையில் ஓடியே விட்டான்...


மீட்டிங் சென்ற சில மணி நேரத்தில் ப்ராஜெக்ட் வி.கே.. குரூப்ஸ்க்கு கிடைத்தது.. சிலர் பொறாமைப்பட்டாலும் சிலர் உண்மையாக வாழ்த்து சொன்னபவர்களுக்கெல்லாம் அளவான புன்னகையே பதிலாக கொடுத்தான்... அதுதான் இவன்... இவன் சிரித்து இதுவரை யாருமே பார்த்ததில்லை... காயத்ரி உள்பட..


நெஞ்சில் பழிவெறியை சுமந்து கொண்டிருந்தவனால் சிரிக்க முடியவில்லை... எல்லார் முன்னாடியும் சாதாரணமாக முகத்தை வைத்திருந்தாலும்... அவனின் நெஞ்சில் இருக்கிற ஆறா வடு அது.. பகைவன் இரத்தத்தை பார்த்த பின்பே ஆறும்...


பகைவன் சாமானியனாய் இருந்தால் அவனின் எண்ணம் ஈடேறும்... அவனே சத்ரியனாவும் சாணக்கியனாவும் இருந்தால் இருவர் மோதிக் கொள்ளும் பகையில் புள்ளி மான் ஒன்று மாட்டிக் கொண்டால்.. புள்ளி மானை காப்பாற்ற யார் வருவார்??...
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3


மீட்டிங் முடித்து விட்டு வந்தவனை கண்களால் மயக்கி காதல் வலை வீசி, தான் அணிந்திருந்த அல்ட்ரா மாடர்ன் டிரெஸ்ஸின் முன்பாகத்தை சற்று இறக்கி விட்டபடி, அடர்நிற லிப்ஸ்டிக் போட்டு வந்த ஷ்ரேத்தாவை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் கடந்து சென்றான்...


"ஹாய் தி கிரேட் அக்னி சார்" என்று தேன் ஒழுகும் குரலில் அழைக்க... அவளை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் அவள் அழைத்ததையும் காதில் வாங்காமல் சென்று கொண்டிருந்தான்...


அருகில் நின்றிருந்த சர்வா க்ளுக்கென ஒரு சிரிப்பை உதிர்க்க.. அவனின் கேலிச்சிரிப்பில் அவனை கோபமாக முறைத்தவளின் அருகில் சென்றவன்..


"என்ன லுக் ஹனி.. அண்ணா தான் அப்பவே அவரோட முடிவை சொல்லிட்டாரு.. உன்னை புடிக்கலைன்னு.. அப்புறம் ஏன் பேபி அவர் பின்னாடி சுத்தி டைம் வேஸ்ட் பண்ற" என்றவனை சொடக்கிட்டு அழைத்தவள் திமிருடன்..


"உங்க அண்ணா அவ்ளோ பெரிய ஆளா?? உங்க அண்ணாவை மடக்கிட்டா என்னடா பண்ணுவ??" என்ற அகங்காரமாக பேசியவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்..


"ஏற்கனவே அண்ணாவோட ஹார்ட்ல அந்த க்யூட்டிபை லவ் அம்பை விட்டுட்டாரு... அண்ணாவோட இதயத்தை ஒரு பொண்ணு அலுங்காம குலுங்காம கையோட எடுத்துட்டுப் போயிட்டா??" என்றதும் முகம் கறுக்க நின்றிருந்தாள்..


"இவன் லவ் பண்றானா" இருக்காது இவன் பொய் சொல்லுவானா இருக்கும்" என நினைத்தவள்,


"பாக்குறேண்டா இவன் கூட அப்படி எந்த பேரழகி வாழப் போறான்னு??" என கோபத்தில் கருவியவளை கண்டுகொள்ளாமல்,


"எனக்கொரு கேர்ள் ப்ரெண்ட் வேணுமடா..

கேர்ள் ப்ரெண்ட் இல்லா வாழ்க்கை வேஸ்ட் அல்லவா" என இரண்டு லைனையும் மாற்றி மாற்றி பாடியவனை கண்டு ஒற்றைப் புருவத்தை உயர்த்தி பார்த்தான் அக்னி..


"என்ன வேணும்" என்றதும் கப்சிப்பென வாயை மூடிக் கொண்டான் சர்வா...


"நீங்களும் அண்ணியை கண்ணுல காட்ட மாட்டேங்குறீங்க??.. எனக்காவது கேர்ள் ப்ரண்ட் அமையுமான்னு பாக்குறேன்.. எவளும் கிடைக்க மாட்டேங்குறாளுக??.. ஏன்ணேன் நாட்டுல பொண்ணுங்களுக்கு எவ்ளோ பஞ்சம் பாருங்களேன்" என புலம்பியவனை கண்டு முறைத்தவன்.


"வண்டியில ஏறுடா முதல்ல.. எப்போ பார்த்தாலும் ஏதாவது தொணதொணன்னுக்கிட்டு".. என சிடுசிடுத்தவனை,


"இவரும் கல்யாணம் பண்ண மாட்டாரு.. என்னையும் பண்ண விடமாட்டாரு.. பேசாம நீ இமயமலைல போய் உக்கார்ந்துக்கோ.. அதுதான் நாளைய உன் நிலைமை போல"... என புலம்பியவனை பொருட்டாக கூட மதியாமல் வேகமாக வண்டியை எடுத்துக் கொண்டு ஆபீஸிற்கு சென்றான்..


அங்கிருந்த அனைவரின் வணக்கத்தையும் ஏற்றுக் கொண்டு நேராக உள்ளே சென்றவன் நேராக சென்றது ஆபீஸில் இருந்த அவன் பெர்சனல் ரூமிற்கு... யாராவது வந்து அவனை நெருங்கி மயக்க பார்த்தால் கூட இவனுக்கு அவள் நியாபகம் வந்து விடும்...அவளின் நியாபகத்தை தேடி ஓடி விடுவான்..


உள்ளே சென்று கோர்ட்டை கழட்டி வீசியவன்.. அங்கிருந்த ஒரு ரூமிற்கு செல்ல.. அந்த அறை ஆறடியில் ஒரு போட்டோவை மாட்டி வைத்திருந்தான்... அதன் அருகில் ஒரு ஓவியம் இருந்தது..


இவன் கையால் பரிசு வாங்கி முகம் கொள்ளா புன்னகையுடன் நின்று கொண்டிருந்தாள் சஷி என இவனால் அழைக்கப்படும் சஷ்டிகா தேவி..


ஆறு வருடங்களுக்கு முன் கொழும்புவில் இண்டர்நேஷனல் அளவில் ஓவியப்போட்டி நடைபெற்றது... அது வி.கே.கல்லூரியில் நடைபெற்றதால் இவன் தான் அனைத்தையும் பொறுப்பற்று நடத்திக் கொண்டிருந்தான் அக்னி.. முதலில் விருப்பமில்லை என்றாலும் போக வேண்டிய கட்டாயம் என்பதால் சென்றான்...


ஒரு சிலருக்கு அவார்ட் கொடுக்கும் போது உம்மென்று உட்கார்ந்திருந்தவன்... முதல் பரிசை தட்டிச் செல்லும் ஓவியம் இதோ என பெரிய எல்இடி ஸ்கீரினில் போட... பார்த்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது..


ஒரு ஆண் பிரசவ அறையில் ஒரு குழந்தையை ஏந்தி நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை அவ்வளவு தத்ரூபமாக வரைந்திருந்தாள்... இவனுக்கே ஓவியத்தை பார்த்ததிலிருந்து கண்ணை விட்டு அகலாமல் இருந்தது.. அந்தப் படத்திற்கு கீழ் இரண்டே வரிகள் இருந்தது...


"பெண்களின் தாய்மை மார்பில் சுரக்கும்


ஆண்களின் தாய்மை இதயத்தில் சுரக்கும்"


என எழுதி அதில் சஷி என கையெழுத்திட்டுருந்தாள்... அதைப் பார்த்தவனின் இதழ்கள் "சஷி" என மென்மையாக சொல்லிப் பார்த்தது..


முகிலனின் ஓவியத்திறமையையும், குயிலின் பயத்தையும் ஒருங்கே பெற்றவள்.. யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவாள்... கொஞ்சம் தத்திப்பிள்ளை சஷ்டிகாதேவி.


அவளுக்கு பரிசு கொடுக்க சென்றவன் அங்கு மஞ்சள் நிற சுடிதாரில் அழகாக தலை பின்னி அதில் மல்லிகைப்பூ வைத்திருந்தவளை ரசனையுடனும் காதலுடனும் பார்த்தான்... பல பெண்கள் மாடல் டிரெஸ் என்ற பெயரில் அரையும் குறையுமாக திரிந்து கொண்டிருக்கும் பொழுது... எந்த வித கவர்ச்சியில்லாமலேயே இவனை சுண்டி இழுத்தாள்..


பரிசு வாங்கியதும் பல பேர் வாழ்த்தையும் கைத்தட்டலையும் பெற்றவள்... சிரித்து கொண்டே சந்தோஷத்தில் வேகமாக வெளியே சென்றவள் நேராக அங்கு நின்றிருந்த ஆதியை அணைத்துக் கொண்டாள்...


சஷ்டி வெளியே செல்லவும் இவனும் பின்னாடியே சென்றான்.. சஷியை தேடி வந்தவனுக்கு அவள் யாரையோ அணைப்பது கோபத்தை தான் கொடுப்பது...


ஆதியை தூக்கிப் போட்டு மிதிக்கலாம் என கோபத்தில் விறுவிறுவென சென்றவன் அவர்கள் போட்டுக் கொண்டிருந்த சண்டையில் கால்கள் தானாக நின்றது...


"தாங்க்ஸ் அண்ணா" என சஷியை முறைத்து நின்ற ஆதி.. "நான் உனக்கு அண்ணா இல்லை தம்பி.. நீதான் முதல்ல பொறந்த.. நான் அப்புறம் தான் பொறந்தேன்.. சோ நீ தான் எனக்கு அக்கா" .. என அவள் கன்னங்களை பிடித்து கிள்ள... அதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அவன் கையை உடைக்க மாட்டோமா என இருந்தது...


"இதெல்லாம் செல்லாது நீதான் என் அண்ணா.. செல்ல அண்ணா.. பட்டு அண்ணா.. ஜ்ஜ்ஜுஜுஜு" என நாய்க்குட்டியை போல் கொஞ்சியவளை சின்ன சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் ஆதி..


"ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்" என சொல்லி விட்டு ஆதி சென்று விட..


சஷ்டியும் முகிலனிடம் போனில் பேசிக் கொண்டிருந்தவள் எதேச்சையாக திரும்பி பார்க்க அங்கே நின்று கொண்டிருந்த அக்னியின் மேல் ஒரு பெரிய கல் ஒன்று விழ பார்த்தது..


என்றும் எச்சரிக்கையாக இருப்பவன் இன்று சஷ்டியை பார்த்ததிலிருந்து அவளின் மேல் பித்தாகி சுத்திக் கொண்டிருந்தவனால் தன்னை நோக்கி வரவிருக்கும் ஆபத்தை உணராமல் அப்படியே நின்று கொண்டிருந்தான்...


சட்டென அவனை தள்ளிவிடலாம் என வேகமாக சென்றவள் தள்ளிவிடுவதற்குள்.. அவன் கோட் பட்டனில் இவளின் ப்ரைஸ்லெட் மாட்டி அவளையும் சேர்த்து இழுத்து விட்டது... அது சற்று சரிவான பகுதி என்பதால் இருவரும் சேர்ந்தே உருள ஆரம்பித்து விட்டனர்...


பக்கத்தில் கிட்டத்தட்ட நாற்பது கிலோ எடையுள்ள கல் வேகமாக விழுந்து "டக்கென்று" சத்தத்தில் அந்தத்தரையை பெர்த்தெடுத்தது.. அது மட்டும் அக்னியின் தலையில் விழுந்தால் அக்னிக்கு மரணம் நிச்சயம்..


தன்னைக் காப்பாற்றியவளை மெதுவாக திரும்பி பார்க்க... அவளோ பயத்தில் இறுக்கமாக காதை ரெண்டையும் பொத்தியவாறே அவனின் மேல் விழுந்து கிடந்தாள்...


அவளின் ஜடை இருவரின் கழுத்தையும் சுற்றி பின்னி கிடந்தது... சஷ்டியை இவ்வளவு அருகாமையில் பார்த்தவனுக்கு மனதில் ஜில்லன்று உணர்வு தோன்றியது.. மாநிறமாக இருந்தாலும் வில் போன்று புருவம் வளைந்து, பளபளவென இருந்த மூக்கில் சின்னதாக வைரத்தில் மூக்குத்தி மின்னியது.. இதழ்கள் ரோஸ் நிறத்தில் இருந்தது.. அதுவே அவளுக்கு அவ்வளவாக மேக்கப் செய்து பழக்கமில்லை என்பதை பறை சாற்றியது..


சின்னதாக செயினில் ஓம் டாலர் வைத்து போட்டிருந்தாள்.. கிட்டத்தட்ட ஒரு நிமிடத்தில் அனைத்தையும் தன் கண்ணில் நிறைத்து வைத்தான்... மிகவும் சிரமப்பட்டு அவனிடமிருந்து பிரிந்தவள்...


"சாரி சாரி சார்.. நான் வேணும்னே உங்களை தள்ளி விடலை... அதோ அந்த கல்லு உங்க தலை மேலே விழ பார்த்துச்சி.. அதான் உங்களை தள்ளிவிடப் பார்த்தேன்... பை ஷிலிப் நானும் விழுந்துட்டேன்.. சோ சாரி சார்" என்றவாறே சற்று பயந்தவாறே பேசியவளை,


"சஷ்டி.. ப்ளைட்க்கு டைமாச்சி வா போகலாம். சித்தப்பா சென்னை ஏர்போர்ட்ல பிக்கப் பண்ணீப்பாங்களாம்" என்றவாறே வேகமாக கையை இழுத்துக் கொண்டு சென்றதில் அவள் கையிலிருந்த ப்ரெஸ்லேட் அறுந்து அவனின் கோட்டில் மாட்டியிருந்தது...



அவள் செல்வதை பார்த்தவனுக்கு இதழ்கள் தானாகவே பாடல் ஒன்றை முணுமுணுத்தது...


"ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்


நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்


இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்


கொடி தான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட கொடி தான்

என் எண்ணம் என்னவோ


கிளி தான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி தான் உன்னை கொஞ்சும் எண்ணமோ"



என்றவாறே பாடிக்கொண்டிருந்தவனுக்கு ஏனோ அன்று நாள் முழுவதும் சந்தோஷத்தில் தான் சுற்றிக் கொண்டிருந்தான்...


அவளுக்கு எந்த வித உணர்ச்சியோ காதலோ எதுவுமே இல்லை.. ஒருவரை காப்பாற்றி விட்டோம் என மட்டுமே நினைத்துக் கொண்டாள்... அதன் பிறகு அவன் நினைவு அவளுக்கு வரவேயில்லை...


ஆனால் இவனுக்கோ அவளின் தேகம் தந்த உணர்வுகள் அவனுக்குள் இருந்த காதல் ஹார்மோன்களை தட்டி எழுப்பியது... அவள் சென்றும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன்... ப்ரோக்ராமில் பரிசு வாங்கி அவள் இறங்குவதை படமாக பிடித்திருந்த போட்டாகிராபரிடம் அதை வாங்கி இவன் வீடியோவாக மாற்றி எடிட் செய்து அவனுக்குப் பிடித்த பாட்டை வைத்திருந்தான்...


அவன் எப்பொழுதெல்லாம் தனிமையை உணறுகிறானோ அப்பொழுதெல்லாம் அவனின் ஆறுதல் ஸ்வீம்மிங்ஃபூலும், இந்த வீடியோவும் தான்...


ஒருவன் தன்னை ஆறு வருடமாக காதலிப்பதோ.. தன் புகைப்படத்துடன் வாழ்வது என எதுவுமே தெரியாமல் சஷ்டி சிம்மாவுடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தாள்...


" அப்புறம் கேஸ் என்னாச்சிடி??".... என்ற சஷ்டியிடம்..


கட்டை விரல் ஒன்றை தூக்கி தூக்கி காட்டியவள்... "சக்ஸஸ்" என்றதும் சின்ன சிரிப்புடன் பார்த்தவள்...


"ஆமா இப்போ நாம மூணு பேரும் எங்க போறோம்" என்ற சஷ்டியை பார்த்து கண்ணடித்தவாறே, "ரொம்ப சீக்ரெட்டான இடத்துக்கு" என்ற கார் திருநெல்வேலியை நோக்கி சென்றதும் அங்கு சூடாக போட்டிருந்த அல்வாவையும் வாங்கிக் கொண்டு, வந்து நின்றது "தாரணி பொட்டிக்"குக்குத் தான்..


உள்ளே சென்றவர்கள் அங்கு நின்றிருந்த பெண்களுக்கு இன்ஸ்ட்ர்கஷன் கொடுத்து கொண்டிருந்த ஜீவியின் பின்னால் "அத்தை" என கூவியபடி மூன்று பேரும் ஒன்று போல் கத்த, பயத்தில் "ஆஆஆ" என அலறியே விட்டாள்..


"பாவிங்களா.. நீங்க மூணு பேரும் தானா.. ச்சே.. கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன்.. ஏன்டா இப்டி இருக்கீங்க" என்ற ஜீவியை கட்டியணைத்து முத்தம் ஒன்றை வைத்தவாறே அவளுக்கு அல்வாவை ஊட்டி விட்டாள் சஷ்டி..


"ச்சோ. ஸ்வீட் அத்தை நீங்க" என்பதற்குள்


"ஹைய்யோ ஹைய்யோ.. இதெல்லாம் யாருக்காவது அடுக்குமா..??" என்ற கூக்குரலில் திரும்பி பார்க்க அங்கு சரண் தான் நின்று வாயில் அடித்தவாறே கத்திக் கொண்டிருந்தார்..


அவனைப் பார்த்ததுமே நரசிம்மன் வேண்டுமென்றே ஜீவிக்கு ஊட்ட, "அடப்பாவி டேய்.. அத்தைக்கு மட்டும் மாறி மாறி ஊட்டுறீங்களே.. எனக்கு யாராது ஊட்டுறீங்களா??".. என்றதும் எல்லாரும் அவனை அல்ப்பமாக ஒரு பார்வை பார்க்க...


ஜீவியோ "த்த்தூதூ" என்றதும் அதை துடைத்து போட்டவன்.. "நீங்க எல்லாரும் கொடுக்காட்டி என்ன நானே சாப்பிட்டுக்கிறேன்" என்றவாறே வாங்கிட்டு வந்த அல்வாவை புல்கட்டு கட்டியவன்...


அங்கிருந்த கடைப்பையனிடம் ஒரு பார்சலை எடுத்துட்டு வர சொல்லியவன் "என் கார்ல வச்சிருப்பா" என்றதும் வேலை செய்யும் பையன் சென்று விட...



"இதுல இப்போ வந்திருக்கிற நியூ கலெக்சன் டிரெஸ் எல்லாம் இருக்கு.. முக்கியமா சின்னக்குட்டிக்கு இருக்கு.. என் காரை எடுத்துட்டு போங்க..நான் உங்க பைக்ல வந்துர்றேன்" என்றதும் எல்லாருமே சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினர்...



மஹதி அந்த ஊரின் விஏஓ வாக இருக்கிறாள்.. ஊரில் எந்த பிரச்சினை என்றாலும் அதை ஸ்பெஷலாக கவனிப்பதே அவள் தான்.. அன்றும் வேலைப்பளுவிற்கு நடுவில் போன் ஒன்று வர, ஆதி என வந்தது..


"ஹைய்.. மச்சான் கூப்பிடுறாங்க??"... என்றவள் சந்தோஷமாக போனை எடுத்து அட்டென்ட் பண்ணியவளுக்கு எதிர்முனையில் வந்த செய்தி தலையில் இடியை இறக்கியது....
[/ISPOILER][/ISPOILER]
 
Last edited:

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 4



மஹதிக்கு போன் வந்த சில மணி நேரத்தில் முகிலனின் வீட்டில் அனைவருமே கூடியிருந்தனர்.. சிவனேஷ்வரன் தீபிகாவை தவிர... சிவனேஷ்வரன்க்கு குஜராத்தில் டிரான்ஸ்ஃபர் என்பதால் அவனால் வரமுடியவில்லை...


ஆனாலும் தங்கை மகளை பற்றிய வேதனை ஆழமாக தன் நெஞ்சில் பதிந்தது... அவ்வளவு பெரிய சோபாவில் ஆளாளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருக்க... அனைவரின் விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து மனதில் கவலையும் வேதனையும் அதிகரித்தது...



மஹதியின் கண்களில் கண்ணீர் வழிந்ததே தவிர.. கத்திக்கூச்சல் போடவில்லை... ஜீவியோ தன் அண்ணன் என்ன முடிவு எடுப்பான் எதிர்பார்த்து அமர்ந்திருந்தாள்... வாழ்க்கையில் சில தருணங்கள் நம் சொந்தமே நம்மை திசை திருப்பும்... அப்பேற்பட்ட சூழ்நிலையில் தான் அனைவருமே இருந்தனர்..



சிறு வயதிலிருந்தே ஆதியின் மேல் தீரா காதல் கொண்டிருந்த மஹதியால் சட்டென அவனின் முடிவை ஏற்க முடியவில்லை... இதயத்தில் சிறு வயதிலிருந்தே சுமந்திருந்த காதலின் வலியால் முதன் முறையாக வாழ்வின் என்ன முடிவு எடுக்க என்று தெரியாமல் நின்றிருந்தாள்...


இவ்வளவு கலவரத்திற்கு காரணமானவன் சில நிமிடங்களில் வந்து நின்றான்... சட்டென வீட்டு வாசலில் காரை நிறுத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த முகிலனும் குயிலும் இரண்டு வருடங்கள் படிக்க சென்ற மகனை ஓடிச்சென்று ஆரத்தழுவும் நிலையில் அவர்கள் இல்லை.



அவனைத் தொடர்ந்து பின்னால் இறங்கினாள் பல்லவி.... ஆம்.. ஆதிரனுக்கும் மஹதிக்கும் திருமணம் பேசியிருக்கும் நிலைமையில் ஆதிரன் வேறு ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதாக" வந்த போன் காலே அது...


மாநிறத்திற்கு சற்று குறைவான நிறத்தில் குழந்தை போல் மலங்க மலங்க விழித்தவள் அங்கு சுற்றி நின்றிருந்த அத்தனை பேர்களையும் பார்த்த பின் பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது...


அவளின் பயத்தை உணர்ந்தவன் அவளின் கைகளை இறுக்கமாக பற்றியபடி முன்னே சென்றவனுக்கு வேண்டா வெறுப்பாக வந்து ஆராய்த்தி எடுத்தார் கங்கா... அவரால் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை...


இவர்களின் கல்யாணமே ஒரு புதிராக இருக்கும் நிலையில்... பல்லவியை பார்க்க பார்க்க தன் பேரனுக்கு இவள் இணையா என்னும் கோபம் பல மடங்கு இருந்தது.. மஹதியின் கண்ணீருக்கும் இவள் தான் காரணம் என இரு கோபத்தையும் அவளின் மேல் போட்டு அவளை பார்வையாலே ஒரு முறை முறைத்தவர் தோள்களை சட்டென "ஹூக்கும்" என்று குலுக்கிக் கொண்டு போனவரை பார்த்து பல்லவியின் கை, கால்கள் வெளிப்படையாகவே நடுங்கியது...


பல்லவியின் நிலைமையறிந்தவன் மெதுவாக அவளின் கை கோர்த்தவாறே உள்ளே சென்றான்... அங்கு சோபாவில் அமர்ந்திருந்த ப்ரணவீக்கு கூட பல்லவியை சுத்தமாக பிடிக்கவில்லை...


மஹதி இதுவரை எதற்கும் தலை குனிஞ்சதே இல்லை... ஆனால் இன்று யாரையும் ஏறிட்டுப் பார்க்க முடியாமல் அமர்ந்திருந்தவளை கண்டு அனைவருக்கும் சுருக்கென வலித்தது..



"அப்பா" என்று சற்று கலங்கிய குரலில் கூப்பிட்ட மகனை சிறிதும் கண்டுகொள்ளாமல்,


"ஏன்?? எப்படி?? என்னாச்சின்னு நான் கேட்கப்போறதில்லை... உன்னால நாங்க யாரும் பாதிக்கப்படலை... இதோ இவ தான்.. உன் மேல சின்ன வயசிலயிருந்து ஆசைப்பட்டவ இவளோட ஆசைக்காக தான் உங்களுக்கு கல்யாணம் பண்ணலாம்னு எல்லாரும் யோசிச்சாங்க... அப்போ கூட உங்க ரெண்டு பேர்கிட்டையும் சம்மதம் கேட்டேனா??? இல்லையா??? " சற்று கடினமான குரலில் சொல்ல... மற்றவர்கள் எப்படியோ பல்லவிக்கு அவனின் குரலும் அவன் சொன்ன அழுத்தமான வார்த்தைகளும் உள்ளுக்குள் கிலி பரவச் செய்தது..



சற்று தலைகுனிந்தவாறே, "இவுங்க மேலே எந்தத் தப்பும் இல்லை... என்னோட வாழ்க்கை நல்லா இருக்கனும்னு அவுங்க ஆசையெல்லாம் மனசுக்குள்ள போட்டு புதைச்சிட்டு எனக்கு இத கட்டுனாரு " என கழுத்தில் மஞ்சள் கயிற்றில் கட்டிய தாலியை தூக்கிக் காட்டினாள்...


அவள் பேச ஆரம்பித்ததும். மஹதிக்கு கூட அவளின். மேல் இரக்கம் சுரந்தது.. பல்லவியோ அங்கிருந்த யாரையும் கவனிக்காமல், "என் மாமா உயிரோட இருந்திருந்தா என்னை. கூப்பிட்டு போய் நல்லா வாழ வைச்சிருக்கும்.. ஆனா இப்போ என் மாமாஹ்... மாமாஹ்" என ஏங்கி ஏங்கி அழுதவளை அன்னம் பார்கவி குயிலு அனைவரும் அவளை அணைத்துக் கொள்ள,


அவர்களின் தோள்களில் சாய்ந்து. அழுதவள்... சற்று நிமிடத்தில் தெளிந்து, "நான் உங்க எல்லார்கிட்டையும் மன்னிப்பு கேட்டுக்கிறேன்... என்னைக் காப்பாத்துறதுக்கு அப்போ இவங்களுக்கு வேற வழி தெரியல்ல."...


"என் மாமாவோட ப்ரண்ட் தான் இவுங்க.. என் கல்யாணத்துக்காக அரசம்பட்டிக்கு வந்திருந்தாங்க.. விடிஞ்சா கல்யாணம் அப்படிங்குற நிலைமையில் தான் என் மாமாவும் இவுங்களும் பேச்சிலர் பார்ட்டின்னு குடிக்கிறதுக்காக போயிருக்காங்க"..


அப்போ இவுங்க போதையில நடந்து வரும் போது தெரியாம பாம்பை மிதிச்சிட்டாங்க.. அது இவுங்களை கொத்துறதுக்குள்ள என் மாமா குறுக்கே விழுந்திடுச்சி... கடிச்சது கட்டுவிரியன் பாம்பு அதுனால என் மாமா காலையில இறந்திட்டாங்க "... என்றதும் அனைவரும் பேரதிர்ச்சியாக அவளைப் பார்க்க.


"என் மாமா இறந்து ஒரு மணி நேரம் கூட ஆகலை... மாமாவோட பொணத்தை புடிச்சி வச்சிக்கிட்டு... என்னைக் கல்யாணம் பண்ணி வச்சாதான் மாமாவை எடுக்க விடுவேன்னு தகராறு பண்ணான் வட்டிக்காரன்.... அவனுக்கு ஆள் பலம் அதிகம் எங்க ஊர்ல அதுனால யாராலையும் எதுவும் செய்ய முடில... அந்தாளுக்கு 56 வயசாகுது.. அவருக்கு என்னைக் கல்யாணம் பண்ணி வைக்க ஊரே முடிவு பண்ணிடுச்சி… இவுங்க எவ்ளோ சொல்லிப் பார்த்தாங்க காசு எல்லாத்தையும் நானே கொடுக்கிறேன்னு... ஆனா அங்கிருந்த யாரும் அதை கண்டுக்கவேயில்லை.. எனக்கு வலுக்கட்டாயமா தாலி கட்ட வரும். போது இவரு என்னைக் காப்பாத்துறதுக்கு வேற வழியில்லாமல் எனக்கு தாலி கட்டிட்டாரு"..


"நீங்க எல்லாரும் என் மேலே ரொம்ப கோபமா இருப்பீங்கன்னு தெரியும்... எனக்கு என் மாமன்னா உசிரு... அவரை என் புருஷனா தான் மனசுக்குள்ள நெனைச்சி வாழ்ந்திட்டு இருந்தேன் "...


" என்னால. எம் மாமனை மறக்க முடியாது... நீங்க இவுங்களுக்கு அந்த அக்காவை கல்யாணம் கூட பண்ணி வைங்க... நான் எதுலையும் தலையிட மாட்டேன்... நான் இந்த வீட்டுல கூலி வேலை பார்த்தாவது எம் பொழப்பை பாத்துக்கிறேன்." என்றவளின் வெள்ளந்தி மனது அனைவரையும் வாயடைக்க செய்தது...


இதில் யாருக்கும் யாரின் மேல் குற்றம் சொல்ல என்று தெரியவில்லை.. முடிவு எடுக்க வேண்டியவள் அமைதியாக இருந்தாள்.. முகிலனாவது ஏதாவது சொல்வான் என எதிர்பார்க்க முகிலனோ அவனின் வாய்ப்பூட்டை அவன் திறப்பதாக யாருக்கும் தெரியவில்லை "...


சிறிது நேரம் அமைதியில் கழிய, " என்ன அண்ணா முடிவெடுத்துருக்க??? "... என்ற தங்கையை ஏறிட்டுப் பார்த்தவன்...


"இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை... இதுல சம்பந்தப்பட்டவங்க மூணே மூணு பேர்... அவுங்க தான் அவுங்க வாழ்க்கையை டிசைட் பண்ணனும்."....



"இந்தப் பொண்ணு சொல்ற மாதிரி மஹியை ஊரறிய கல்யாணம் பண்ணி வைக்கணும்னாலும் எனக்குச் சம்மதம்" என்றதும் தான் தாமதம்..


"மாமாஆஆ"" என்று கத்தியவாறே எழுந்து நின்றாள் மஹதி..


"நான் காதலிச்சது என். மச்சான்... உங்க பையனைத் தான்... இன்னொருத்தியோட புருஷனை இல்ல.. அந்தளவுக்கு தரம் தாழ்ந்து போக மாட்டா இந்த மஹதி... வலி தான் சின்ன வயசிலைருந்து காதலிச்சது வலிக்க தான் செய்து... ஆனாலும் நான் இப்படியே இருந்து எல்லாரையும் கஸ்டப்படுத்த மாட்டேன்....


கொஞ்ச நாள் எனக்கு டைம் வேணும்... நான் எல்லாத்தையும் மறக்குறது... சோ நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு எங்கேயாவது போகலாம்னு இருக்கேன்.. என்னால யாருக்கும் கஷ்டம் வேண்டாம் மாமா" என்று நிமிர்ந்தவாறே சென்றவளை புன்னகையுடனே பார்த்து நின்றான்...


இவளிடம் பிடித்ததே இந்த தைரியம் தான்... எதற்கும் அஞ்சாமல். யாருக்கும் பாதகம் இல்லாமல் நடைமுறை வாழ்க்கையை ஏற்று வாழ்பவள் தான் மஹதி.. காவேரியின் வாரிசு அல்லவா...


சரணும் ஜீவியும் மஹதி பின்னாடி சென்று விட்டனர்.. எந்தக் கலவரமும் இல்லாமல் ஒரு பிரச்சனையை சுலபமாக முடிந்தது என அனைவரும் அவரவரின் வேலையை பார்க்க செல்ல... சப்பென அறையும் சத்தத்தில் அனைவரின். நடையும் அப்படியே நின்றது...


திரும்பி பார்த்தவர்களுக்கு நம்பவே முடிவில்லை... முகிலன் ஆதியை அடித்ததை... எப்பொழுதும் முகிலனுக்கு பிள்ளைகள் மீது கை நீட்டி பழக்கமேயில்லை.. அப்படிப்பட்டவன் இன்று ஆதியை அறைந்ததை நம்ப முடியாமல் பார்த்து நின்றனர்...


"சோ... நீ ஃபாரின்ல இருந்து ஒரு வாரத்துக்கு முன்னாடியே ஊருக்கு வந்துருக்க... ஆனா எங்க யாருகிட்டையும் போன் பண்ணி ஒரு வார்த்தை சொல்லணும்னு தோணலை" என்று சற்று கடினமான குரலில் கேட்டவனைக் கண்டு இப்பொழுது ஆதிக்கு குளிர் ஜூரமே வரத் தொடங்கியது..


"இல்லைப்பா உங்களுக்கெல்லாம் சர்ப்ரைஸ் பண்ணலாம்னு" என. இழுத்தவனைக் கண்டு சிரித்தவன்..


"ஆமாம்மா.. பெரிய சர்ப்ரைஸ் தான் நாங்க யாரும் இதை எதிர்பார்க்கவே இல்லை.. குடிக்கிறேன்னு நீ மட்டும் அந்தப் பையனை வெளியில கூப்பிட்டு போகாம இருந்திருந்தா... இவ்வளவும் நடந்திருக்கவே நடந்திருக்காது " என இன்னொரு கன்னமும் முகிலன் கைபட்டு சிவந்தது...


பல்லவி பயந்த சுபாவம் இல்லையென்றாலும் இவர்களின் தோரணையான பேச்சும் இவர்களின். பணக்காரத்தன்மையும் அவளை சற்று அல்ல ரொம்பவே மிரள வைத்தது.. அவளின் மிரளும் பார்வையை பார்த்தவன் வேகமாக மாடியேற,


முகிலன் மாடியேறும் பொழுது குயிலுக்கு கண்ணைக் காட்டினான்.. பொறுப்பை தன் கையில் எடுத்தவள். பல்லவியை தனியாக அழைத்து அவளை புடவை மாற்றி வர சொன்னாள்...


தன்னிடமிருந்த நகைகள் சிலவற்றை கொடுத்தவள் சாமியறையில் விளக்கேற்ற வைத்தாள்.. இருவரும் சாமி கும்பிட்டாலும் அவர்களின் வேண்டுதல் ஒன்றே ஆகும் "இருவரும் பிரிய. வேண்டும்" என்பதே...
 

Madhusha

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 5


"மனம் முழுவதும் வலித்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் நிர்சலனமான முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் மஹதி"...


"காதலின் காயங்கள் சற்று ஆழமாகவே இருந்தது.. சிறு வயதிலிருந்தே தான் நேசித்த ஒருவன் இன்று வேறு ஒருத்தியின் கணவனாக பார்க்க மனம் சற்று முரண்பட்டே நின்றது"...


வீட்டிற்கு வந்ததும் தஞ்சமடைந்தது காவேரியின் மடியில் தான்... தன் மடியில் விழுந்து அழுது கரையும் பேத்தியின் துன்பத்தை கண் கொண்டு பார்க்க இயல முடியவில்லை.



"என்ன மஹிக்குட்டி என்னாச்சி?? ஆதி உன்னை வேணும்னே ஏமாத்திட்டான்னா சொல்லு?? அவனை ஒரு வழி பண்ணிறலாம்?? என்ற காவேரியை கண்களில் வலியுடன் பார்த்தவள்.. அங்கு நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்புவித்தாள்


"அதான் ஆச்சி.. நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போகலாம்னு இருக்கேன்... என்னால முடியல ஆச்சி.. இங்க உள்ளவங்களை எந்த முகத்தை வச்சிட்டு ஆச்சி நான் பார்ப்பேன்... எல்லாரும் கேலி கிண்டல் பேசுவாங்க ஆச்சி.. அதை தாங்கிக்கிற சக்தி எனக்கில்லை".. என்று கேவிக்கேவி அழுதவளை முறைப்பாக ஒரு பார்த்தவர்..


"என்னத்துக்கு நீ ஊரை விட்டுப் போகணுங்கிற?? நீ தப்பு பண்ணிய்யா??"..


"இல்லை" என வேகமாக தலையாட்டினாள்..


"அப்புறம் எதுக்கு கண்ட நாய்ங்க ஏதாவது பேசும்னு நீ ஊரை விட்டு கிளம்புறேங்குற??.. உன்னை எவனாவது ஏதாவது பேசின பேசிற நாக்கை அறுத்து எரிங்குறேன்.. அதை விட்டுப்பபுட்டு சவளைப்புள்ள மாதிரி அழுதுக்கிட்டு திரியுறவ"....


"இங்க பாரு மஹி.. இந்த உலகம் ரொம்ப பெருசு... நாம ஒவ்வொருத்தர் நாக்குக்கும் பயந்து ஓடிட்டு இருந்தோம்னு வையேன்.. உலகம் நம்மளை விடாம தொரத்தும்ல.. எதிர்த்து நில்லு.. மொதல்ல வலிக்கும்.. நீ திருப்பி கொடுக்க ஆரம்பிக்கும் போது.. உன்னை எதிர்த்து நிக்கிறவன் பயப்படுவான்"..


"உனக்கு ஒரு வருஷம் டைம் தர்றேன்.. அதுக்குள்ள ஒம் மனச மாத்திக்க... அப்புறம் நாங்க பாக்குற மாப்ளையே கல்யாணம் பண்ணிக்கிறே" என்றதும சரி சரி என சிறுபிள்ளை போல் தலையாட்டியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்...


ஆனாலும் ஆதியின் மேல் கோபம் வந்தது காவேரிக்கு.. ஜீவிக்கு வருத்தம் இருந்தாலும் ஆதி ஒன்றும் திட்டமிட்டு ஏமாற்றவில்லையே... சூழ்நிலை எதிராக அமைந்து விட்டது என நினைத்தாலும்.. தன் அண்ணன். மகனுக்கே கட்டிக் கொடுக்க வேண்டும் என ஆசைப்பட்டாள்...


காயத்ரி திருநெல்வேலி செல்வதற்கான அத்தனை வேலையையும் பார்த்தான் சர்வா.. அக்னி அதை மேற்பார்வை பார்த்தானே ஒழிய.. காயத்ரியிடம் பேச வேண்டுமென அவனுக்கு தோன்றவில்லை... சாதாரண முகத்தை வைத்து காயத்ரி புறப்படும் போது "டேக் கேர் மாம்" என சம்பிராதயமாக பேசும் மகனை சற்று வருத்ததுடன் பார்த்தார்..


காயத்ரியின் வருத்தத்தை பார்த்த சர்வாவிற்கும் கஷ்டமாக இருந்தது.... "அம்மா நீங்க இப்படி அண்ணன் முகத்தையே பார்த்துட்டு அதுல ரியாக்சன் வருமா ?? வராதான்னு எதிர்பார்த்தா கண்டிப்பா வராது.. ஏன்னா அண்ணா எப்பவும் அப்படி தான்ம்மா..


"நீங்க நல்லபடியா ஊருக்குப் போயிட்டு அண்ணா மனசுக்குள்ள நினைச்சிருக்கிற பொண்ணே கல்யாணம் பண்ணனும்னு வேண்டிக்கிட்டு வாங்க" என்ன சரியா??..


சர்வா பேச ஆரம்பித்ததுமே தன் கவலைகளை மறந்த காயத்ரி, "ஆமாடா கண்டிப்பா வேண்டிக்கனும்.. அவனுக்கு கல்யாணம் நடந்தா உனக்கு மொட்டை போடுறேன்னு வேண்டிக்கிறேன்" என அவன் தலையை கோதி விட்டவரை கண்டு ஜெர்க்கானவன்..


"ஏதுதுது?? அவருக்கு கல்யாணம் நடந்தா எனக்கு மொட்டை அடிப்பீங்களா?? அடிப்பீங்க?? அடிப்பீங்க?? யாராவது என் தலையில கை வைக்கட்டும் காதை கடிச்சி துப்பிர்றேன்"... என்ற தன் போக்கில் சபதம் இட்டவனை,


அங்கிருந்த ஏர்ஹோஸ்டஸ் 'பைத்தியம்' என்ற ரேஞ்சில் அவனை மேலும். கீழும் பார்த்தவாறே சென்றாள்..



வீட்டின் மொட்டை மாடியில் நின்றிருந்த ஆதிக்கு மனதே ஆறவில்லை.. வாழ்க்கையின் முதன் முறையாக தன் தந்தை கை நீட்டி அடித்திருக்கிறார்... அதன் வலியின் தாக்கமே அவனுக்கு கண்ணீரை வரவழைக்கும் போல் இருந்தது..


ஆனாலும் ஆண் மகன் அழக்கூடாது என கட்டுப்படுத்தினாலும்... தந்தை அடித்ததே தன் மனக்கண்ணில். மீண்டும் மீண்டும் தோன்றி இம்சித்தது..


தன் ப்ரெண்டுக்காக செய்த ஒரு செயல் தன் வாழ்க்கையை புயலடித்து ஓய்ந்த இடம் சின்னாபின்னமாகி கிடப்பதை என்ன செய்வதென்றே அறியாமல் நின்றிருந்தான்..


ஏதோதோ யோசனையில் உழன்றவனுக்கு தலைவலி கூடியதே தவிர சிறிதும் குறையவில்லை... திடீரென்று தன் தோளில் ஒரு கரம் விழவும் திடுக்கிட்டு திரும்பி பார்த்தவனுக்கு, அங்கு நின்றிருந்த தந்தையை சிறிதும் எதிர்பார்க்கவில்லை...


முகிலனோ ஆதியின். கன்னத்தில் படிந்த தன் கை விரல்களின் அச்சைப் பார்த்துக் கொண்டிருந்தான்... வெள்ளை நிறத்திலிருக்கும் ஆதியின் கன்னத்தில் சிவப்பாக தடித்து அது பாதி தாடிக்குள் மறைந்தும் மறையாமலும் காட்டிக் கொடுத்தது... முகிலனின். அரக்கத்தனத்தை..


"ரொம்ப வலிக்குதா ஆதி?? " என்று சற்று கலங்கிய குரலில் கேட்ட முகிலனை ஏறிட்டுப் பார்த்தவன்..


"இல்லைப்பா.. நான் தப்பு பண்ணதுனால தான நீங்க அடிச்சிங்க பரவால்லப்பா" என்றாலும் முகிலனின் கைகள் அவனின் கன்னத்தை வருட, தன் தந்தையின் ஸ்பரீசத்தில் தானாக கண்ணீர் பொலபொலவென கொட்ட... முகிலனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்...


"ஐயம் சாரிப்பா.. ரியலி சாரிப்பா... என்னோட விளையாட்டால ஒரு உயிர் போகும்னு நான் நினைச்சிக் கூட பார்க்கலைப்பா... என்னால் முடியலப்பா.. அவனோட கடைசி ஆசையே பல்லவியை நான் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறது தான்"...


"என்னாலையும் மறுத்து பேச முடியலப்பா.. மரணத்தோட போராடுற ஒருத்தன் என் கிட்ட பிச்சையா கேட்குறேன்னு சொல்லும் போது எனக்கு எதுவும் தோணலப்பா.. மஹதியோ நம்ம குடும்பமோ. எதுவுமே நியாபகத்துக்கு வரல்லப்பா"...


"என்னைக் காப்பாத்துறதுக்கு ஒருத்தன் உயிரை கொடுத்துருக்கான்... அவனோட கடைசி ஆசையே பல்லவியை நல்லா வச்சிக்கணுங்கிறது தான்.... அதான் யோசிக்காம கல்யாணம் பண்ணிட்டேன் " என சிறுபிள்ளை போல் தேம்பி அழுபவனை ஆறுதல் படுத்தியவன் திரும்பிப் பார்க்க...


அங்கே மொழிதான் நின்று கொண்டிருந்தாள்... அவளின் கண்கள் கலங்கியிருந்தாலும் கண்ணீரை முறைத்தவாறே, "ஆச்சி உங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டாக" என ஆதியிடம் ஒரு. வார்த்தை கூட பேசாமல் சென்றவளைப் பார்க்க மனது கனத்தாலும்,


இதில் தான் தலையிட வேண்டாம் என ஒதுங்கியே இருந்தான்.. இருவரும் கீழே செல்ல அங்கு பல்லவியை சுற்றி ஆளாளுக்கு ஒன்றொன்று சொல்லியபடி கத்திக் கொண்டிருந்தனர்..


சற்று நேரத்திற்கு முன்பு வீட்டில் தனியாக நின்று கொண்டிருந்த பல்லவியை 'ரெஸ்ட் எடு' என சொல்லி ஆதியின் ரூமில் விட்டு சென்றாள் அன்னம்..


அன்னம் சென்றதை உறுதிபடுத்தியவர்கள் தடாலென அந்த அறைக்குள் நுழைய பயத்தில் வார்த்தை கூட வர மறுத்தது பல்லவிக்கு...


சஷ்டிகா, கிருத்திகா, ஸ்ருதிகா, தான்விகா, ஆத்மிகா, ப்ரணவிகா என ஆறுவர் சுற்றி வளைத்து நின்றனர்.. அவர்களை பார்த்ததும் பயத்தில் உள்ளுக்குள் ஜுரமே வந்தாலும் வெளியே அவர்களை பார்த்து சிரித்தவளை பார்த்து, சம்பிரதாயமாக சிரிக்க,


"ராகிங்ன்னா என்னன்னு தெரியுமா??" என்ற கிருத்திகாவிடம் தெரியும் என்பதைப் போல் தலையாட்டினாள்..


"ம்ம்ம் இப்போ நாங்க எல்லாரும் உன்னை ராக்கிங் பண்ணப் போறோம்" என்ற கிருத்தியை சற்று பயத்துடன் பார்த்தவள்,


"உன் பேர் பல்லவின்னு சொன்ன முழுப்பேர் அதானா??".. என்ற ஸ்ருதியிடம்


"இல்லை" என தலையாட்டியவள் அனுபல்லவி என்றாள்..


" ம்ம்ம... நல்ல பேர் தான்.. உன் வயசென்ன??"...


" ம்ம்.. பதினெட்டு ஏன்டி பார்த்தாலே தெரியல்ல ஒரு இருபத்திரண்டு வயசு இருக்கும்"..


"இல்லை அக்கா.. என் வயசு பதினெட்டு தான்"... அணுகுண்டை பத்த வைத்து அசால்ட்டாக கையாலே தூக்கி அனைவரிடமும் வீசியே விட்டாள்...


"ஏஏஏதுதுது பதினெட்டா??? என நெஞ்சைப் பிடித்தவாறே விழப்போன ஆத்மியை அணைத்த ஸ்ருதி"..


"இவ ஒருத்தி பெரிய சிவாஜின்னு நினைப்பு ஆளப்பாரு . ஆக்ட்டிங்க குறைடி".


"உனக்கு நிஜமாவே பதினெட்டு தானா"..


"ஆமா அக்கா"...


"நீ என்ன வேணும்னாலும் சொல்லு தாயீ.. ஆனா அக்கானு மட்டும் சொல்லாத.. தாங்க முடியல்ல"... என்று நெஞ்சை பிடித்து வசனம் பேசியவர்களை கண்டு சிரிப்பு தான் வந்தது...


"பதினெட்டு வயசில கல்யாணம் பண்ணுவாங்களா??" என ஆச்சர்யமாக கேட்ட சஷ்டியை


"ஆமா அக்கா.. பண்ணுவாங்க.. மைனர் பொண்ணை கல்யாணம் பண்ணா செயில்ல தூக்கிப் போட்ருவாகன்னு.. இப்போல்லாம் பதினெட்டு வயசுப் பொறந்ததும் கட்டிக் கொடுத்துருவாக"..


ஆமா.. ஒம் மாமேன் படிச்சவன் தானே அவேன் ஏன் இந்த சின்ன வயசில உன்னை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சான்..


அதுவா அக்கா... "எங்க சித்தி எனக்கு ரொம்ப கொடுமைப்படுத்திச்சா அதான் மாமா என்னைக் கட்டிட்டு மெட்ராஸுக்கு கூட்டிப் போய் நல்லா படிக்க வைக்கிறேன்.. நல்லா பாத்துக்குவேன்... எனக்குப் புடிச்சதெல்லாம் வாங்கித் தரேன்னு சொல்லிச்சி.. எனக்கு நீங்க யாரும் வேணாம் நான் என் மாமா கூடையே போறேன்... உங்க யாரையும் எனக்குப் புடிக்கலை" என கத்தியவாறே வேகமாக சென்றவள்.. தடதடவென படிகளில் இறங்கி ஓடியவளின் பின்னால் அனைவரும் "புடிங்க... புடிங்க.. அவளை யாராவது புடிங்க" என்ற கூச்சலில் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்று கூட..


பல்லவியை புடித்து நிப்பாட்டி வைப்பதற்குள் எல்லாருக்கும் வேர்த்து விறுவிறுத்து ஒழுகியது. ப்ரணவீகாவுக்கே டஃப் கொடுத்தாள் பல்லவி...


வேண்டா வெறுப்பாக உட்கார்ந்திருந்த பல்லவிக்கு கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது.. இதை ஆதி தான் சரி செய்ய வேண்டுமென ஆதியையும் அழைத்து வர சொல்லியவர்.. அப்படியே முகிலனையும் கூப்பிட்டு வர சொல்லினார் தமயந்தி...


தன் வீட்டின் நான்காவது அறையில் அவனுக்காக உருவாக்கப்பட்ட பப்பில் உட்கார்ந்திருந்து கண்ணாடி குவளையில் ரெட் ஒயினை ஊற்றி சிப் சிப்பாக அருந்திக் கொண்டிருந்தனர் அக்னியும் சர்வாவும்...


அண்ணா.. நான் உங்க கிட்ட ஒன்னு கேட்பேன் மறைக்காம உண்மையை மட்டும் சொல்லணும் என்றவனை ஒரு புருவத்தை ஏற்றி இறக்கிய வாறே,



"ம்ம் எனக்கு பதில் சொல்லணும்னு தோணிச்சின்னா சொல்லுவேன்.. இல்லை சொல்ல மாட்டேன்"..


"நீங்க ஏன் அண்ணா யார் கூடயும் ஒட்டாம இருக்கீங்க??.. இன்னைக்கு அம்மா ஊருக்கு போனாங்க.. ஆனா நீங்க ஏதோ பக்கத்து தெருவுக்கு போற மாதிரி ரொம்ப கேஷுவலா இருக்கீங்க??"..


"ஏன் அண்ணா உங்க உண்மையான தோற்றத்தை மறைச்சிட்டு போலியான ஒரு முகமூடியை போட்டுருக்கீங்க?? ".. என்றவனின் கேள்வியில் இருந்த உண்மை அவனையும் சுட்டது..


"வாழ்க்கை இப்படித்தாண்டா.. இப்படி தான் வாழணும்னு நான் தீர்மானிக்கலை.. என்னை தீர்மானிக்க வச்சார் ஒருத்தர்.. அவருக்காக மட்டும் தான் இப்போ நான் இருக்கேன்.. அவர் உயிர் என்னைக்கு என் கையால போகுதோ அப்ப நான் நிம்மதியா சிரிப்பேன் " என்றவனின் நெருப்பை கக்கும் வார்த்தையில்,


தான் அடித்த போதே கூட இறங்கி அடி வயிற்றில் ஜில்லென்று உணர்வில் பாத்ரூமிற்கு ஓடிச்சென்றான் சர்வா.. அவனின் கண்களில் இருந்த பழிவெறியும் குரோதமும், இதுவரை பார்க்காத அக்னியை பார்த்தான்..


குடிபோதையிலும் கால்கள் சிறிது கூட தள்ளாடாமல் வேகமாக மூன்றாவது தளத்திற்கு சென்றவன்.. அங்கிருந்த ஒரு அறையை திறந்தான்... அதில் எந்த பொருட்களும் இல்லாமல் வெறுமையாக இருந்தது...


அதில் நேராக சென்றவன் அங்கிருந்த கண்ணாடியில் தன் கைவிரலை பதித்தான்... சட்டென அந்த அறையின் பக்கவாட்டில் ஒரு கதவு திறந்தது... கதவின் வழியே நேராக சென்று கொண்டிருந்தவளுக்கு, நீண்ட வழிதான் வேகமாக சென்றவன்... அங்கிருந்த லைட்டை உயிர்ப்பித்தவனின் கண்களில் இருந்த குரோதமும் வன்மமும் இதுவரை யாரும் அறியாதது..


அந்த அறையின் இருந்த புகைப்படங்களை பார்த்தவனுக்கு இரத்தமெல்லாம் சூடேறி எதிரில் நிழலாய் இருப்பவரின் இரத்தத்தைக் எப்பொழுது தன் கையில் ஏந்துவோம் என இராட்சஷனாய் இருபது வருட தவம் இருக்கிறான்.. அவனை எதிர்க்கும் நாளிற்காக...


அங்கிருந்த டேபிளில் இருந்த சிறு கத்தியை எடுத்து பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் வைத்தவன் ஒரு கண்களை மூடி எதிரில் இருந்த போட்டோவினை குறி வைத்து எறிய.. அந்த சிறு கத்தி நேராக சென்று நிழல் உருவமாய் இருந்த கார்முகிலனின் நெஞ்சில் சொருகியது...


"தட்ஸ் மை பாயிண்ட்" என்றவனின் இதழ்களில் குரோதப் புன்னகை ஒன்று அரும்பியது...


கிட்டத்தட்ட அங்கிருந்த எல்லா கத்தியையும் எடுத்து போட்டோவை நோக்கி வீசினான்.. அது ஆங்காங்கே சொருகி நின்றது... அனல் கக்கும் பார்வையை மட்டும் சுமந்தவாறே அதன் அருகில் சென்றவன்...


"ஒரு நாள் இதே போல் உன்னை நேர்ல குத்துவேன் கார்முகில்ல்லாஆஆ".. என்றவனின் பழி வெறியும் வன்மமும் பல மடங்கு கூடியது.. கண்கள் சிவப்பேறி கை நரம்புகள் ஒன்று கூடி ஒரே இடத்தில் இரத்தம் புது வேகத்தில் கூட...


"ஆஆஆஆஆஆஆ" என ஆக்ரோஷமாக கத்தியவனின் சட்டை கூட கிழிந்தது.. அவனின் அகன்ற தோள்களும் இறுகிய மார்பும், படிக்கட்டு தேகமும், முறுக்கேறிய புஜங்களும் அவன் வயிற்றில் ஒட்டியிருந்த எய்ட் பாக்கும் அவனை இராட்சஷனாக காட்டியது..


"உன்னை தேடி உன் ஊருக்கு வர்றேன். உன் ஊர்லையே உன்னை அழிக்கிறேன். அப்படி நான் பண்ணல்லை நான் "இரணிய்யகர்பன்" (இதுதான் என் ஹீரோ பேரு) இல்லைடா"... என கர்ஜித்தவனின் கர்ஜனையில் அவன் வார்த்தைகளை சுவற்றில் மோதி எதிரொலித்து அந்த அறையை அதிர வைத்தது...
 
Top