ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காத்திருந்தாயா காதலே -Rerun

Status
Not open for further replies.

swwee

Active member
Wonderland writer
5

கொடிய விஷநாகம் தன் தூக்கத்தை தடைசெய்த தலைவனை நோக்கிவர கண்டுகொண்டாள் வதன இளவரசி. அவள் வீசி எறிந்த வாள் அதன் தலையை பாதியாக்கி பறந்து சென்றது.தளபதியை அவள் பார்த்த பார்வையோ இது நகரமல்ல தளபதி,வர்ணிக்க வார்த்தையின்றி போகுமளவுக்கு அழகு சுமந்து நிற்கும் பூபோல கொடிய விஷம் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் முட்கள் பூக்கும் காடும்கூட என்றது.
இம்முறை அழுத்தமாக மிளிரும் அழகு, வீரமும் நிறைந்த இளவரசியே சாம்ராஜ்யம் திரும்புவோமென அவன் சொல்ல எங்கே என்னை தூக்கி கொண்டுபோ பார்க்கலாம் என்றாளாம் அழகிய மங்கை. பொன்மேனி பெண்ணே உன்னை தீண்டும் ஆசையை தூண்டாதே..! எண்ணிய தளபதி தலை தாழ்த்திகொண்ட நேரம் அழகியின் திண்மையை அறிந்திருந்தான் மாக்கியவல்லி.


காரில் அமர்ந்திருந்தவனால் காரை இயக்க முடியுமென தோன்றவில்லை. ஆராதனா பால்கி கையை பிடித்து அமர்ந்திருந்ததை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘ஆக்சிடெண்ட் முத்தத்திற்கு இவ்வளவு பொசசிவ்னஸ் ஆகாதுடா அருணு’ அவனை அவனே தேற்றிகொண்டு நடுங்கும் கைகளையே பார்த்து அமர்ந்திருந்தான்.

ரிச்மண்ட் நகரம். மாலை ஆறு மணி, திருமதி சவிதா விக்ரமன் அவர் வக்கீலிடம் சீக்கிரம் இந்த கேஸ் முடித்து கொடுங்கள் என பேசிகொண்டிருந்தார். கணவர் மாய்ந்துவிட்டாரே என்று அழுதுகொண்டிருக்க அவரால் முடியவில்லை. டிரெண்ட் கார்ப்ரேஷன் உலகளவில் விற்கும் பிராண்டட் ஆடைகளின் தேர்ந்த ஆரம்பபுள்ளி.அவர்களிடம் கிடைக்காத துணி ரகமே இல்லை. ஆர்கானிக் நூல் தொடங்கி செயற்கை நூல் வரை பலவிதமான பல நாட்டு வகை துணிகளும் அவர்களிடம் கிடைக்கும்.
விளம்பரங்களில் ‘டிரெண்ட் கார்ப் ஃபேபிரிக்ஸ்’ என தனியாக குறிப்பிடும் அளவிற்கு தனிபெருமை கொண்ட நிறுவனம். ஃபேஷன் உலகில் தனி இடம் வசிக்கும் நிறுவனம். அப்படியான டிரெண்ட் நிறுவனத்தை அவர் காப்பாற்றியாக வேண்டும்.

விக்ரம் இழப்பு அவரை உருகுளைத்துவிட்டதுதான், மகளையும் அவள் எதிர்காலத்தையும் காத்து சீர் செய்து கொடுத்தாகவேண்டும். அந்த ஒரு எண்ணம் மட்டுமே அவரை நடமாட வைத்திருக்கிறது.விக்ரம் மரணம் விபத்து என்று உறுதி செய்து,ஆருவை காப்பாற்றி உடல்நிலை தேற்றி வீட்டுக்கு கூட்டிவரும் வேளை, அவர்கள் நிறுவனத்தின் மீது ஆசைப்பட்டு,சவிதாவுக்கு நெருக்கடி கொடுக்க விக்ரம் மரணம் விபத்து அல்ல கொலை என்றும், ட்ரெண்ட் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் சட்டத்திற்கு புறம்பான வியாபாரம் நடக்கிறது என்றும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வழக்குப் பதிவு செய்த ஆள் யாரென்று கண்டுபிடித்து என்ன வேண்டும் என்று கேட்க, கம்பெனி அவர்களுக்கு மாற்றி கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர், இத்தனை நாள் முடியாது என்பது போல் இருந்தவர்.இனி இங்கிருக்கும் சொத்தை எல்லாம் விற்று இந்தியாவில் போய் மகளுடன் செட்டில் ஆகிவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

மகளின் பாதுகாப்பை பற்றிய எண்ணம் எழுந்ததும் வக்கீல் விஸ்வநாதனுக்கு அழைத்தார். நண்பன் விக்ரமன் மீது பாசம் வைத்துள்ள விஸ்வநாதன் சவிதாவின் அழைப்பை ஏற்ற விவரம் தெரிந்துகொண்டு ஆறுதலாக "நீ உன் இஷ்டம் போல செய்யம்மா, கவலைபடாத ஆருதான் எனக்கு மருமகள்" என்றார். எப்போதும் மகளைக்கேட்டே முடிவுசெய்யும் சவிதா இந்த விஷயத்திலும் அவளை கேட்டு முடிவு செய்யலாம் என்று நினைத்தாலும் அதை விஸ்வநாதானிடம் வெளிப்படுத்தவில்லை. கணவனை இழந்து மகளை கரைத்தேற்ற நினைக்கும் பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் நல்லுள்ளத்தை மறுதலித்து பேச தோண்றவில்லை அவருக்கு.

சவீதாவின் இப்போதைய எண்ணமெல்லாம் எங்கேனும் ஆராதனா நல்வாழ்வு வாழவேண்டும். விஸ்வநாதனின் ஆறுதலான வார்த்தைகளைக் கேட்டு தற்காலிக நிம்மதி அடைந்த சவிதா மகளுடன் பேசுங்கள் அண்ணா, எப்படியிருக்கிறாள் கேளுங்கள் என்று கூறி அழைப்பை துண்டித்தார். உடனே ஆராதனா நினைவு வர விஸ்வநாதன் ஆராதனாக்கு மெசேஜ் அனுப்பினார் எப்படி இருக்கிறாயென கேட்டு. நன்றாக இருப்பதாக பதில் சொன்னவள் கைக்கு எட்டாது போனை தூரமாக வைத்துவிட்டாள். யாருக்கும் பதில் சொல்லும் தெம்பு இல்லை.

மெத்தையில் விழுந்து கண்மூடியவனுக்கு குற்ற உணர்ச்சி இருந்தும் உறக்கம் வந்தது ஏனோ?! ஐயோ! என்று குற்றவுணர்ச்சியில் அடித்துக்கொண்ட நெஞ்சம் தூக்கம் வராமல்தானே தவித்திருக்க வேண்டும் இது என்ன இது அதிசயமாக இருக்கிறது..!

மேற்கொண்டு வரும் குழப்பத்திற்கு அணை கட்டிவிட்டது வேலைகள்.

மூன்று நாட்கள் வீட்டில் இருந்துகொண்டே யூனிட் வேலையை தொடக்கி அதை உயர்த்த திட்டம் தீட்டி எடுத்துக்கொண்டு வந்தாள் ஆராதனா. வாங்கிப் பார்த்த பால்கிக்கு ஆச்சரியம் மீறி நிம்மதியாக இருந்தது.

அருணும் பால்கியும் பூர்ணாவிற்கு சென்று வேலை செய்யத்தொடங்கிய நாள்முதல் பால்கி அவன் கார் எடுத்துக்கொண்டு பாட்டி வீட்டுக்கு வந்து அருணை கூட்டி போவான். இருவருக்கும் காரோட்ட இஷ்டம் என்றாலும் அருண் ஏதாவது பேசிக்கொண்டே வர பால்கி கார் ஓட்ட; பயணம் செய்வார்கள். அருண் மேனேஜிங் டைரக்டராக அமர்ந்துகொள்ள, பால்கி ஜெனரல் மேனேஜர் என்று சொல்லிக்கொண்டாலும் அருணுக்கு உயர் ரக அசிஸ்டன்ட்டாக இருந்தான். பாட்டி இவர்களை கண்டு ஒன்றும் சொல்லவில்லை.அவன் அப்பாதான் “என்னடா செய்யற நீ? பேசாம நம்ம தொழில் வந்து பாரு” என்று மிரட்டினார். ஆனாலும், அதெல்லாம் இல்லப்பா நான் அருண் கூட இருக்கேன் என்று சொல்லி அவனுடன் இருக்கிறான்.அப்படியான பாசக்கார மச்சானை பாட்டி இன்று சீண்டி விட்டார்.'என்னடா அருண் இல்லாமல் புது கம்பெனியில் வேலை எதுவும் செய்ய தெரியலையோ' கேட்டு விட்டார். முணுக்கென்று இதயத்தின் ஓரத்தில் ஒரு வலி எழுந்தது.சுயகௌரவம் கிள்ளி பார்த்த வலி விடாமல் வலிக்க, நேரம்பார்த்து ஆரு திட்டத்தைத் தீட்டிகொண்டு வந்து கொடுக்க “குட் மேற்கொண்டு டிஸ்கஷன் செய்து பாட்டியிடம் பேசி செய்யலாம்” என்றான்.கண்களை விரித்து தலையை இடமும் புறமும் தலையை அசைத்தவள் செய்கையில் ஆலோசனைகள் செய்யலாம் பாட்டியிடம் இப்போது எதுவும் சொல்ல வேண்டாம் என்றாள்.
அவனும் முகம் சுருக்கி கேள்வியாக பார்க்க ஒவ்வொரு அடியாக செய்துவிட்டு சொல்லலாம்,செய்வதற்கும் முன் சொல்லி நடக்காமல்போனால் கேள்வி கேட்பார்கள். நம்மால் முடியும் என்று காட்டலாம் கம்பீரமாக நம்பிக்கையுடன் அவள் செய்கையில் சொல்ல பால்கி மெல்ல புன்னகைத்தான் .

தேவைப்படும் வேலை ஆட்கள் எண்ணிக்கை, வசதிகள் என்று மேற்கொண்டு பேசிக்கொண்டிருக்க ஒரு முடிவுக்கு வரும் நேரம் அருண் வந்து சேர்ந்தான். இருவரும் பேசி முடிக்கும்வரை அமைதியாக இருந்தவன் சாந்தமான குரலில் காரில் கீறல் இருக்கிறது அது எப்படி ஆனது?அவளை கேள்வி கேட்டான்.

ஆராதனாவும் பொறுமையாக சிக்னலில் ஒரு ஆள் இடிச்சுட்டு போயிட்டான்,அவளும் அங்கே கம்பெனி வந்துதான் பார்த்தாள் சொல்ல இவன் முறைத்தான்.அருணை திசைதிருப்ப பால்கி “மச்சான் பாரு நாங்க இதையெல்லாம் செய்யபோறோம்” சொல்ல “மச்சான் இதெல்லாம் இவளே கவனிக்கட்டும், நீ நம்ப அணிமேஷன் கம்பெனிக்கு தேவையான விஷயங்களை தயார் செய்” பொறுமையில்லாமல் சொல்ல ஆராதனா எரிச்சலானாள்.

அருணை முறைத்துக்கொண்டே போனில் வேக வேகமாக டைப் அடித்தாள். “இது என்ன சின்னபிள்ளைத்தனமாக இருக்கு! ஒரு ஆள் ஒரு வேலையைதான் செய்யமுடியும், அப்போதுதான் அதை சரியாக செய்து முடிக்க முடியும் நீ பழசை பார், பால்கி இந்த புது யூனிட் பார்க்கட்டும், நான் பால்கி சொல்வதைச் செய்கிறேன்” வாய்ஸ் ஆப் பேசியது.

அருணும் கோவமாக,வேலைக்குதான சேர்ந்திருக்க வேலைய மட்டும் பாரு எஜமானர்களை வழிநடத்தும் வேலையாள் இங்க இருக்க முடியாது மிரட்டினான்.

ஆராதனா குறிப்பு எழுதும் புத்தகத்தை சட்டென மேஜைமீது அடித்துவிட்டு பால்கியை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்து கடகடவென்னு வெளியே நடக்க சென்றாள். ஏய் இரு! அதிகாரமாக அழைத்தவன் அவள் என்ன என்று பார்க்க, “பாஸ் வந்து பேசிட்டு இருக்கேன் இப்படி எகத்தாளமா எழுந்து போற நீ” கேட்க கோணலாக வாயை இழுத்து “போடா” பார்வையில் பேசி திரும்பினாள். கவனிக்க தவறவில்லை அவன். “நான் இங்க முதலாளி, நான் சொல்றதை செய்யணும்” அவன் அதிகாரமாக பேசும் தொனி பிடிக்காமல் கோபம் உச்சந்தலைக்கு ஏற திரும்பி வேகமாக நடக்க போனவளை இரு என்று கையை பிடித்து இழுத்தான் சட்டென கண்கள் இருண்டு தடுமாறிப்போனாள் ஆராதனா. ‘பாடி சோடா’ என்று அவளைக் கிண்டல் செய்து சிரித்தான் அருண். உடனே அவளும் "நீயும் தலையாட்டி பொம்மை" என்று தலையை ஆட்டிக்காண்பித்தாள். இம்முறை திமிர் பார்வையும் கிண்டல் பேசும் முகமும் கொள்ளை அழகாக தெரிய அந்த நிமிடம் அமைதியாகிப் போனான் அருண்.

அவன் இலகுவான முகம் கண்டவள் தீவிரமாகப் பேசினாள் “அடுத்த மூணு மாசம் டைம் எடுத்துக்கொள்ளலாம் இந்த யூனிட் ரன்னிங் நிலைமைக்கு வர வேண்டும்” என்றாள்.

தண்ணீர் விழுந்த தனல் போல இருந்தவன் திரும்ப பக்கென்று பற்றிக்கொண்டான்.“நீ என்ன சொல்றது, டேய் மச்சான் அந்த அணிமேஷன் கம்பெனிக்காரங்க கூப்பிட்டு இன்வெஸ்ட்மெண்ட் டீடைல்ஸ் பத்தி நீ பேசுற…”அருண் சொல்ல கோபத்தில் முகம் சிவந்து ஆராதனா பால்கி கையை அழுத்தி பிடித்துக்கொண்டு பால்கி என்கூட மட்டும் தான் இருப்பான் அழுத்தமாக செய்கையில் சொல்ல, “பால்கி என் மச்சான், என் சொந்தக்காரன் நான் சொல்றதைதான் செய்வான்” அருண் உரிமையாக சொல்ல பல்லை கடித்துக்கொண்டு கண்களை விரித்து “பால்கி என் ஃப்ரெண்ட்” என்று அவளும் செய்கையில் சொல்ல மச்சான் நீ வாடா என்று அருண் அவனை தரதரவென்று இழுத்துக்கொண்டு சென்றான். கடக்கும் பால்கி கையை இருக பிடித்துக்கொண்டு இவள் இழுக்க “ஐயோ ப்ளீஸ் விடுங்க” உரக்கக் கத்திய பால்கி “மூணு வேலையை மூன்று பேர் சேர்ந்து செய்வோம் கொஞ்சம் சும்மா இருங்க” என்றான்.
“இம்” என்று அடுத்தவருக்குப் புரியவேண்டும் என்று இருவரும் பிடித்திருந்த கையை வேகமாக விட ஆடம்பர ஆபிஸ் க்ரானைட் தரையில் "ஊப்ஸ்"என்று சரிந்து விழுந்த பால்கியை பிடிக்க முயன்று மூவரும் கீழே விழுந்தனர்.

“சரியான வாழப்பழத்தோல்டா இவ,எப்ப பாரு எவனையாவது கீழே தள்ளி விட்டுட்டு இருக்குறா” அருண் திரும்ப தொடங்கினான்.

பால்கி வேங்கை ஒரு பக்கம் சிங்கம் ஒருபக்கம், நடுவில் நான்தானே ஆடு கமல்ஹாசன் பாடுவது போல “மச்சான் ப்ளீஸ் பேசாதடா” என்று அவனையும் “ஆரு,அவன் உன்ன விட பெரியவன் மரியாதையாக நடத்தணும்”அவளையும் அடக்கினான்.

“சரி வா மச்சான் நம்ப ஆடிட்டர் பார்க்க போகலாம்” அருண் கூப்பிட “நானும் வருவேன்” ஆருவும் கிளம்ப தயாராக பால்கி அருணிடம் “வரட்டும்டா பிளீஸ்,தனியா இருக்க முடியாது” கெஞ்சி கேட்டு கூட்டிக்கொண்டான்.

“கிலுகிலுப்ப” அருண் சொல்ல ஆராதனா புரியாமல் என்ன சொல்கிறான் இவனென முழித்து பால்கியை பார்த்தாள். பால்கி “குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை, சதாசர்வகாலமும் சத்தமிட்டுக் கொண்டு இருக்கும்” என்றான்.அதாவது மேடம் தலைவலி கூட்டுறாங்களாம். உட்கருத்து புரிந்து கொண்டவள் “எவ்வளவு உயர்ந்த மனசு,தான் என்ன என்று வெளியே சத்தமாக சொல்லிக்கொள்ளும் உன் பண்பு உன்னை ஒருநாள் உயர்த்தும்” என்றாள்.

அவள் வாய்ஸ் ஆப் கேட்டு முறைத்துக் கொண்டே இருந்தவன் பால்கியை பார்த்து “இரு மச்சான்” ட்ரைவர் சீட்டில் ஏற போனவனை தடுத்து “நாங்க உட்கார்ந்து வரோம், நீ ஓட்டு” என்றான்.பயந்தாலும் தன் சுயமரியாதையை விட்டுகொடுக்கமாட்டாதவள் "எனக்கு என்ன நான் ஓட்டுறேன்" என செய்கையில் சொன்னாள்.
பால்கியை கூகுள் மேப்பில் வழி போட்டுக்கொடுக்க சொல்லிவிட்டு மாற்று வழி ஏதாவது இருந்தால் முன்கூட்டியே சொல்ல சொன்னாள். பால்கி சங்கடமாக முழிக்க, “இரு மச்சான் ஊர் தெரிஞ்சிக்கணும் இல்லையா?” கேட்டான் அருண்.

பயணத்திலும் அருண் வெறுப்பேற்றிக்கொண்டே வர ஆராதனா காரை இடிக்கப் போவது போல ஓட்டினாள். கோபத்தில் இவன் கத்த அவள் வேண்டுமென்றே இன்னமும் செய்ய, டாம் அண்ட் ஜெர்ரி போல சண்டையிட்டு கொண்டு ஆடிட்டரை பார்த்து பேசினார்கள்.

ஆடிட்டரும் அவர் பங்குக்கு ஓர் உண்மையை போட்டு உடைத்தார். சொத்தென்று காற்று போன பலூன் போல சூம்பி போனார்கள் நண்பர்கள் மூவரும்.
 

swwee

Active member
Wonderland writer
6

தேவி! யான் ஆண் என்பதும் போரில் வாள் ஏந்துபவன் என்பதும் அறிந்திருப்பீர்கள்; அப்படியிருக்க மல்யுத்தமூம், இப்பஞ்சுபொதி மேனி தூக்க சக்தி இல்லாதவன் இல்லை என்பதையும் அறிவீர்கள் தானே என்றான் அவன். உதடு வளைந்து சின்னபுன்னகை கொடுத்தவள் கேள் தளபதி பூமி யாவருக்கும் ஒன்று ஆபத்தை கொடுத்தால் வேட்டை ஆடலாம், அழிக்கலாம் மற்றபடி இன்னொரு உயிரை துன்புறுத்துவது நியாயமற்றது.அடுத்தவரை துன்புறுத்திக்கொண்டு அடுத்த நாட்டை பிடித்து அதர்மமாக நடக்கும் கிரேக்க இளவரசன் ஒருபோதும் யான் மணக்கமாட்டேன். எம் பிரதேசத்திற்கு தனி ராணியாய் இருந்து மக்களை வழி நடத்துவேன் என்றாள் அவள்.
அப்படியான எண்ணமிருக்கும் அரசி ராஜ்ஜியம் திரும்பாமல் எதிர்திசை பயணம் ஏனோ என கேட்கமுடியாமல் தொடர்ந்தான் அவன்.

நான்கு வருடங்களுக்கு முன்பே கட்டிவிட்டாலும் அதை ‘புது யூனிட்’ என்றே அழைக்க,அதை திறப்பது பற்றி ஆடிட்டர் விவரித்தார். அந்த யூனிட் கட்டும் சமயம் இல்லாத சட்டதிட்டம் அதற்கான லைசன்ஸ் வாங்கும் சமயம் கண்டிப்பாக இந்த சில அம்சங்கள் இருக்கவேண்டும் என்று வந்துவிட்டது. அதனால் கட்டிடம் மாற்றி அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. அதிலும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனுமதி பெற, அதற்கு வேலை செய்யும் ஆள் அதிக லஞ்சம் கேட்கிறான்.மூன்றாவதாக இந்த யூனிட்டை டேக்ஸ்ஃபிரி செய்ய நினைத்த மரகதம் அம்மாள் அதை அவர் பெயரில் வாங்காமல் பார்ட்னர்ஷிப் போட்டு வாங்கியிருக்கிறார். அதிலும் பார்ட்னர் இறந்துபோக,காலத்தில் முடிக்கவேண்டிய வேலை முடிக்காமல் சொதப்பி சில சட்ட சிக்கல் உருவாகியிருக்கிறது.

இடியாப்பச் சிக்கல்கள் கேட்டு நொந்து நொந்து போனான் அருண்.

எப்படிப்பட்ட சதி இது..! எப்போது இந்த சிக்கல்கள் எல்லாம் சரி செய்வது, எப்போது வேலையை தொடங்குவது,எப்போது பத்து லட்ச ரூபா காசு பார்ப்பது..? கோபம் தலைக்கேறியது.

“இந்த கிழவியை…” பல்லை கடித்தான்.ஆடிட்டரை சட்ட சிக்கல் பற்றிய தெளிவான அறிக்கை கொடுக்க சொல்லிவிட்டு வெளியே வந்தனர் மூவரும். விறுவிறுவென சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்தவன் அடுத்து காரை நிறுத்தியது அவர்கள் வீட்டில்தான்.
“பாட்டி... பா...ட்டி” கூவி அழைத்தவன் “என்ன ஆள் நீங்கெல்லாம்? அப்படி என்ன பாட்டி அகங்காரம்? உங்களுக்கு எது கொடுத்தது இப்படியான எண்ணத்தை? எப்படி, எப்படி அந்த யூனிட் ஓடவிட்டு அதுல 10 லட்ச ரூபாய் பார்த்து அதை நான் எடுத்து என் கம்பெனி தொடங்கணும், உங்கள போய் நம்புனேன் பாருங்க” அவன் உரக்க பேசப்பேச அமைதியாக வந்து சோபாவில் அமர்ந்தவர் கண்களில் அதிர்ச்சி கலந்த வலி அப்பட்டமாக தெரிந்தது.

இளம் தலைமுறை அவர் வகையில் சிக்கலை தீர்ப்பார்கள் என்றெண்ணியிருந்தார். யார் பேரன் அவன், மரகதம் பேரன்,செய்யாமல் போவானா செருக்கும் இருந்தது அவரிடம்.

பால்கியும் “சிக்கல் இருக்குன்னாச்சும் சொல்லி இருக்கலாம் தானே பாட்டி, ஏன் இப்படி செஞ்சீங்க”கேட்க, அமைதியாக இருந்த இடத்தில் வாய்ஸ் ஆப் குரல் கேட்டது.“மூணு பிரச்சனைதான்.அதை தீர்த்துட்டா, எல்லாம் சரியாகிடும். இந்த கோபம் எல்லாம் அனாவசியம்.எதுக்கு ஓவர் ரியாக்ட் செய்யுறீங்க”

பாட்டி மீதிருந்த கோபம் அவள் பக்கம் திரும்பியது “இது என்ன உங்க நாடா? இந்தியா,இது இந்தியா. இங்கே எல்லாமே ஆம வேகம்தான் தெரிஞ்சுக்கோ எதுவும் தெரியாம வெத்து வார்த்தைய சொல்லிட்டு சுத்தாத” எரிந்து விழுந்தான் அருண்.

“என்ஜினியரை கூப்பிட்டு என்ன செய்யவேண்டுமோ செய்யலாம், மாசுக்கட்டுப்பாடு வாரியம் கொடுத்திருக்கும் ரூல்ஸ்படி எதெல்லாம் சரி இல்லையோ அதை சரிசெய்யலாம், மூன்றாவது விஷயம் தெளிவாக தெரிந்து கொண்டு என்ன செய்ய முடியுமோ அதையும் செய்யலாம்.இதெல்லாம் ஒரு பிரச்சனையா” தன்னம்பிக்கையோடு பேசும் பெண்ணை அதிசயமாக மரகதம் பார்த்தார்.

பால்கிக்கும் ஒரு முயற்சி கொடுத்து பார்க்கலாம் என்ற எண்ணம் வர, அருண் மட்டும் “துட்டு,துட்டுக்கு எங்க போவ? இதோ காதுல இருக்கே,கைல ஒன்னும் காணோம், கழுத்துல மெல்லிசா போட்டிருக்கியே வித்து செய்வியா? இதை வைத்து கல்லமிட்டாய் வாங்க முடியுமா” நக்கலாக கேட்டான்.

“அதுதான் உன்கிட்ட பத்து லட்சம் இருக்கே” ஆராதனா சாதாராணமாக சொல்ல கண்கள் தெறித்து விழுமளவிற்கு விழித்து முறைத்து பார்த்தவன் பால்கியைப் பார்த்து “நான் சொல்லல நம்மளை பிரிக்கிற எலிமெண்ட் இது மச்சான்” என்றான்.
ஆரு நம்பிக்கையாக பேசும் நேரம் பால்கி அதை ஆமோதிப்பது போல இருந்ததை கவனித்திருந்தான் அருண்.
“பச்... மச்சான்” பால்கி சமாதானம் செய்ய எத்தனிக்க “எந்த 10 லட்சமும் நான் யாருக்கும் கொடுக்கமாட்டேன் இனி நான் பூர்ணா இண்டஸ்ட்ரீஸ் டைரக்டர் இல்லை நான் போறேன்” என்றான்.

“டேய்... அருண்” பால்கி அதிர்ச்சியாக பேச மரகதம் அம்மாள் ஆடிபோனார். முகத்தில் அப்பட்டமாக தெரிய, நிமிடத்தில் மூப்பு கூடியது. அதைக் கவனித்த ஆருவால் பொறுக்க முடியவில்லை “என்ன மாதிரி பேசுறோம் புரிஞ்சுதான் பேசுறியா” அவள் செய்கையில் கேட்க அவனோ சோர்ந்துபோய் அமர்ந்தான், “நம்ம குடும்பம் தானே நம்மை நம்பும், நம் குடும்பம் தானே நம் கனவுகளை ஆதரிக்கவும் செய்யும், குடும்பமே நம்மள நம்பளைன்னா யார் நம்புவா? எனக்கு இங்கே அப்படிதான் நடக்குதா என்ன? என்னை ஏமாத்துறாங்க, என்னை அவங்க இஷ்டம் போல நடக்க வைக்குறாங்க.நான் என்ன பொம்மையா?நானும் மனுஷன் தானே, எனக்கும் மனசு,அறிவெல்லாம்இருக்கும் தானே, போதும் எனக்கு எதுவும் வேண்டாம் நான் போறேன் எனக்கு யாரும் இல்ல. குடும்பம் இல்லவே இல்லை”

அவன் குழந்தைத்தனமான கம்ப்ளைன்ட் என்றாலும் மனவலியை கேட்டவள் “சரி, நீ உன் கனவை ப்ரொசீட் பண்ணு,நாங்க ஹெல்ப் பண்றோம்.கொஞ்சம் டைம் கொடு இப்போதைக்கு இந்த பத்து லட்சம் கடனாகக் கொடு”

புரியாத பார்வை பார்த்தான். வாய்ஸ் ஆப்பிலும் செய்கையில் மாற்றி மாற்றி அவளால் முடிந்த அளவு விளக்கம் கொடுத்தாள். “பார் உன் பொசிஷனில் நாங்கள் உட்கார்ந்து வேலை பார்க்கிறோம், நீ உன் கனவுக்காக வேலை செய். நான் என் வேலையை தொடங்குகிறேன்”
புரியாத பார்வை மாறாமல் இருக்க “எனக்கு நான் இங்கே இருக்கிற இந்த காலம், அந்த கார், என் பாதுகாப்புக்கு அக்கறை எடுத்துக்கொள்ளும் ஆட்களுக்கு ஏதாவது திருப்பி செய்ய நினைக்கிறேன்.புது யூனிட் தொடங்க என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்ய போகிறேன்”
"பார்ரா" அவன் முகபாவனை மாற "பாட்டி என்னை நம்புங்க எனக்கு நிறுவனம் மேனேஜ் செய்வதில் அனுபவம் இருக்கிறது."

பால்கி கையை கட்டிக்கொண்டு நின்றுவிட்டான். அருண் அமைதியாக இருக்க, அவன் பாட்டியிடமிருந்தும் எந்த பதிலும் வராததால், மேற்கொண்ட அவளே திரும்பவும் பேசினாள்
“பார் நீ இன்வெஸ்ட்மெண்ட் வேலையை தொடங்கு. ஒரு மாதம் டைம் கொடு, உன்னிடம் வாங்கும் பத்துலட்சம் திருப்பிக்கொடுக்க என்னால் முடியும்.புதுசு பழசு எல்லாமே சேர்த்து நான் பாக்குறேன் பாட்டி” பாட்டிக்கு தெம்பு கொடுக்க நம்பிக்கையாக பேசினாள்.

இந்த நிமிடம் மகனை திரும்பி வரச்சொல்லி அவரை கவனிக்கும் படி சொன்னால், காரியம் நடக்க போகிறது. இதோ இந்த பையன் குடும்பம் இல்லை, ஏமாந்து போனேன் என்று புலம்புகிறானே! அவனை பார்க்க கஷ்டமாக இருக்கே..! செல்ல பேரன் என்னமோ அவனை பொம்மை போல பாட்டி நடத்துகிறார் என்றெல்லாம் பேசுகிறான். அவன் இஷ்டப்படி அவனை அவர் இத்தனை நாள் விட்டது தெரியவில்லையா அவனுக்கு?

கொஞ்சம் முன்ன பேசியதை மனதில் ஓட்டிப் பார்த்தவன் இன்னமும் பாட்டி எதுவுமே பேசாமல் இருப்பதை கவனித்தான். தளர்ந்திருந்தவர் அவன் பார்வை கண்டுகொண்டு “என்னவோ செய்யப்பா உன் இஷ்டம்” என்றார்.
அவர் குரலில் சோகம் கண்ட பால்கி “பாட்டி…” என ஆறுதலாக அழைக்க
“கிட்டத்தட்ட 500 குடும்பம் நேரடியாக நம்மை நம்பி இருக்கிறது. ஆயிரம் குடும்பம் நிம்மதியாக சாப்பிடுது, தலைக்கு மேல் கூரை கட்டி வாழுது.எத்தனை பொம்பளைங்க தாலி ,எத்தனை குடும்பத்தோட பசங்க ஸ்கூல் பீஸ் இருக்கு தெரியுமா இந்த நம் உழைப்பில்?லாபம் எதிர்பாக்கல நஷ்டம் வந்துட்டா..!” அவர் கேள்வியில் ஐயோ கடவுளே... வந்து விடக்கூடாதே என்ற மன்றாடலும் இருந்தது.

“ஓ பாட்டி டோன்ட் வர்ரி ஜஸ்ட் ஒரு ஆறு மாசம் கொடுங்க.ப்ளீஸ்,எங்க வயசுக்கு அறிவுக்கு எங்களால முடிஞ்ச நல்லத நல்லாவே செய்வோம் நாங்க” என்றாள் ஆராதனா. பாட்டி அளவுக்கு கற்பனையில் கவலைப்படுவதோ , அருண் போல உணர்ச்சிவசப்படவோ இல்லை.

பெருமூச்சுவிட்டு எழுந்தவன் “நான் ஏமாந்துட்டேன். நீங்க ஏமாத்திட்டீங்க. அதுக்கு இந்த கண்டிஷனுக்கு நீங்க ஒத்துகிட்டுதான் ஆகணும்" கறாராக சொன்னான்.மேற்கொண்டு பேச எதுவும் இல்லை என்பது போல் “ரங்கா காபி டிபன் கொண்டு வாங்க”கிச்சன் நோக்கி கூவினான்.

காபி அருந்திக்கொண்டே பால்கி பூர்ணா கார்மெண்ட்ஸ் பார்த்துக் கொள்ளப்போகிறான், அருண் பூர்ணா எலெக்ட்ரிக்கல்ஸ் பார்த்துக்கொண்டே மும்பையில் இருக்கும் அந்த அனிமேஷன் நிறுவனத்தில் முதலீடு செய்யும் வேலை பார்க்கப்போகிறான், ஆரு புது யூனிட் வேலைகள் செய்யப்போகிறாள். முடிவு செய்து பேச்சை முடிக்கும் சமயம் “திரும்பவும் சொல்கிறேன் கண்ணுகளா ஆயிரம் குடும்பம் இதை நம்பி இருக்கிறது கூடவே இத்தனை வருட உழைப்பும்” மெல்லிய குரலில் கூறினார் மரகதம்.

'டோன்ட் வர்ரி பாட்டி' என பாட்டி கன்னம் இரண்டையும் கில்லி ஆட்டி உற்சாகமாக ‘கிளம்புகிறேன், லீகல் வேலை செய்யுங்க’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாள் அவள்.

அவளுக்குப் பின்னாலேயே வந்தவன் அவள் கார் திறக்கும் சமயம் கதவு மேல் கைவைத்து தடுத்து பாதி சிறைகொண்டு “இது ஃபேன்டஸி உலகம் இல்ல,எல்லாம் ஈஸியும் இல்ல” என்றான். “அதேபோல கஷ்டமும் அல்ல” பார்வை பார்த்தாள் அவள்.

அலட்சிய எதிர் பார்வைக்கு தலை சிலுப்பி சிரித்தவன் “10 லட்சம்” என்றான்.அவன் கொடுக்கபோகிறானாம், பாவனையாக சொல்ல அவனை நெருங்கி அவன் கண்களை “ஆமா, வெறும் பத்து லட்சம்” ஆமோதித்து பார்வை பார்த்தாள்.

அவள் துறுதுறு பாப்பாவை பார்த்தவன் மனதில் புயல் சூழ்கொண்டது. அனிச்சை செயலாக நெருங்கி நின்ற முகத்தின் செவ்விதழில் பேப்பரில் ஸ்டாம்பு அடிப்பது போல சடார் முத்தம் கொடுத்தவன் “நம்புகிறேன்” என்று சொல்லி நகர்ந்துவிட்டான். ஆராதனாவுக்கு அடி வயிற்றில் பட்டாம்பூச்சி கூட்டம் மையம் கொண்டது.
 

swwee

Active member
Wonderland writer
7

தேவி! நாடு தழைத்தோங்க விரிவடைவதால் தப்பில்லையே பிற பிரதேசத்துடன் நல்லிணக்கம் கொள்வது தவறில்லை தானே கேட்டான் அவன்.
வெற்று வாள் வீசி போரிடும் முட்டாள் தளபதி! பிறர் சூழ்ச்சி புரியாத தளபதி! கிரேக்கப் படை எம்மைக் கடந்தும் கீழ்திசை நோக்கி செல்லும், அது உண்மை என்றாலும் என்னால் முடிந்தளவு தடுப்பேன். ஈவு இரக்கமின்றி படைபலம் கொண்டு மக்களை துச்சமாக வெட்டி வீழ்த்தும் அரக்கனை ஆதரவளிக்கும் தளபதி இனி இங்கே பேச்சிற்கு இடமில்லை. அவள் கையில் இருக்கும் ரக்ஷ கலசத்தை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். கருணை என்பது துளியளவேணும் இருப்பவன் பிறஉயிரை துச்சமென நினைப்பானா. ப்ரதேசம் என்பதும் ராஜ்ஜியம் என்பதும் மக்கள் அல்வா, அரசியலும்,அறிவியலும்,ஆன்மீகமும் கற்றுத்தந்த குரு இன்று அவரவர் நன்மைக்கு சமராஜ்யத்தை வேற்றொருவானுக்கு அடிமை சாஸனம் எழுதிக்கொடுக்க உதவுவதும், நினைப்பது சரியா?சாமராஜ்யத்தில் அவள் தந்தையின் ஆட்சி காலத்தில் நியாயம் தருமம் பேசி கொண்டிருந்த மாக்கியவல்லி திடிரென இப்போது கிரேக்க சம்மராஜியத்திற்கு அடிபணிவது துரோகம் அல்லவா..!


வீடு அமைதி கொண்டது.பால்கி அவன் வீடு திரும்பினான்.அருண் இரவு உணவு உண்டு அவன் மெத்தையில் சாய்ந்தான்; அதுவரை அனுபவிக்காமல் ஆழ்மனதின் மறைத்து வைத்திருந்த இனிமையான உணர்வு மேலெழுந்தது.

அவனுக்கென்று யார் கூட்டி வந்தார்கள் இந்த தேவதையை.திமிராய் பார்க்கிறாள் கோபமாக பேசுகிறாள், ஏளனம் செய்கிறாள், விளையாட்டாய் தீவிரமான முடிவெடுக்கிறாள்.
யார் இவள்?அவன் கேட்காமலேயே அவனுக்கு உரிமை கொடுக்கிறாள் அவன் கொடுக்காமலே அவனிடம் உரிமை எடுக்ககிறாள்.

என்னது? முத்தம் கொடுத்து பதிலுக்கு கன்னம் பழுக்க அறையவில்லை என்றால் அது உரிமை கொடுப்பதா?மூளை கேட்க.மனம், அவளிடம் நெருக்கமாக உணர்வதை வார்த்தையில் மொழிபெயர்க்க முடியவில்லையே குழம்பிபோனது. திரும்பவும் மூளை ‘அது நெருக்கமா இல்லை ஈர்ப்பா’ கேட்டது. ஜீன்ஸ் போட்டாலும் மேலே ஸ்டோல் போர்த்தி மறைக்கும் தமிழ் பெண்களை கண்டுவிட்டு, குளிர்பிரதேச ஆப்பிள் போல உடல், பளிச்சென்று மிளிரும் நிறம், எல்லாவற்றுக்கும் மேலாக பேசாமடந்தை,கண்ணில் பேசும் குமரி என்று ஈர்ப்பின் சிக்கிக்கொண்டாயோ கேள்வி கேட்டது.
‘ஆமாம்ல ஜீன்ஸ் டி-ஷர்ட், கூட ஒரு ஷூதான் போட்டிருக்கா,பொட்டு கூட இருந்ததா ஞாபகம் இல்லையே அப்படி என்ன ஈர்ப்பு இவளிடம்? கேட்டுக்கொள்ள ‘அப்போ உனக்கு அவமேல ஒரு மார்க்கமான ஈர்ப்பு போல அருண், இது தப்பு’ என்று மனசாட்சி கோபமாக உடல் கவர்ச்சியை பற்றி எச்சரிக்க ‘ஐயோவென தலைபிடித்து கொண்டு உருண்டு புரண்டான். இது இரண்டாம் முறை அவள் அனுமதி இல்லாமல் முத்தம். ‘ஆமா இது தப்பு நான்தான் ஏதோ ஆகிட்டேன்’ சொல்லிக்கொண்டான்.
அப்படியும் ஒருவர் அவர் சுயகட்டுப்பாடு மீறி நடந்து கொள்வாரா என்ன? அருண் அப்படிப்பட்டவனா என்ன? அவன் அறிந்து பெண்களை தொட்டு பேசும் ஆள் கூட இல்லை அவன். நட்பாக பழகும் பெண்ணை கிண்டலாக பேசுவான், அவ்வளவே! இப்படி ஈர்ப்பு சுழலில் சிக்கி தவித்து எல்லாம் கிடையாது. “இப்படி நடுராத்திரி வரை புலம்ப வச்சிட்டாளே குட்டச்சி” புலம்பி விடியல் நேரம் தூங்க சென்றான்.

அடுத்த ஒரு வாரத்தில் பூர்ணாவின் மேனேஜிங் டைரக்டர் பால்கி என்று அறிவிக்கப்பட, இனி எப்போதும் பூர்ணா எலக்ட்ரிக்கல்ஸில் அருண் இருப்பான் என்றானது.ஆராதனா விஸ்வநாதனிடம் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பற்றி ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வர முயற்சிகள் தொடங்கியிருந்தாள்.

ஜங்குரோ தலைவனுக்கு விக்ரமன் மகள் மூன்று மாதமாக காணவில்லை. விசாரித்ததில் அவள் மருத்துவ அறிக்கைகள் எல்லாம் நார்மல் என்று காட்டுகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின் இரவு நேரம், விகாஸ் கேஸிலில் சவீதா அவர் அறையில் உறக்கம் வராமல் போராடி கண் அயரும் சமயம் வீட்டின் நடுக்கூடத்தில சலசலப்பு தொடங்கியது. ஓய்வற்ற மூளை விழிக்க பாடுபட்டு முடியாமல் போனது.

நான்கு ஜோடி கால்கள் ஒவ்வொரு அறையும் அலசி பார்த்துகொண்டிருந்தது.நெடுநாள் கழித்து தேடுதல் வேட்டையில் இறங்கியிருக்கிறான் அவன். புத்துணர்ச்சி பெற்ற மூளை சவிதாவின் வர்கிங் டேபிளில் இருக்கும் கணினியில் ஆராய சொன்னது.ஆராய்ந்ததில் தகவல் கிடைக்கப்பெற்றதும் கிளம்பலாம் செய்கை செய்தான்.வந்தது போனது தெரியாதவாறு அவர்களும் அகன்று சென்றுவிட்டனர்.

ஆராதனா அறையில் அவள் மெத்தைக்கு கீழே உள்ள சேஃப்ட்டி லாக்கரைத் திறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்த பெருச்சாளி மாற்றி எதையோ அழுத்த பர்குலர் அலாரம் அடித்தது. மாட்டிக் கொண்டான்.

என்ஜினீயர் கட்டிடத்தின் ஒரு பக்கம் மட்டும் மாற்றி அமைத்தாலே போதுமென அறிவுறுத்த,அதற்கான செலவு 5 லட்சம் பக்கம் ஆகும் என்று பட்ஜெட்டும் போட்டு கொடுத்தார். அருண் நெஞ்சம் புகை மண்டலமானது.ஆராதனா முகத்தில் மாற்றம் எதுவுமில்லை. பால்கி பிசியாகி விட இப்போதெல்லாம் அருணும் ஆருவும் எங்கு போக வேண்டுமென்றாலும் சேர்ந்து செல்கிறார்கள்.ஒருவரை ஒருவர் இன்னமும் அடிக்காத குறை. ஆராதனா பொறுமை அவனை சோதிக்கிறது.அவன் முன்கோபம், அவசரம் அவளை பேசவைக்கிறது. இவள் யார் இவள், ஊட்டி உருளைக்கிழங்குக்கு கை கால் முளைத்தது போல இருந்துகொண்டு அவனுக்கு அட்வைஸ் செய்வது? அருண் எரிச்சல் சில நேரம் எரிமலை வெடிப்பது போல வெடிக்கிறது.

பால்கி பொறுப்பு எடுத்துக்கொண்டதில் அவன் தந்தையின் கர்வம் கூடியது. அவன் பாட்டியிடம் ‘என் பையன் தானே பொறுப்பெடுத்து பார்க்கிறான் உங்க லாபத்தில ஒரு பங்கை இந்த பக்கம் தள்ளுங்க’ என்று பேச, பாட்டி பொறுமை காத்தாரெனில் பால்கியும் பாட்டிக்கு பேரன் நானே என்று எதுவும் பேசாமல் இருந்து கொண்டான்.

நண்பர்கள் மூவரும் அவரவர் வேலை முடித்து இரவு யார் என்னென்ன செய்தார்,செய்ய வேண்டிய வேலை என்ன இருக்கிறது, என்னவெல்லாம் புது சிக்கல் எழுந்திருக்கிறது பேசி தீர்வைத் தேடினார்கள். அடுத்தவர் வேலை இதுவென இல்லாமல் மூவரும் ஒரே அலைவரிசையில் இயங்க, வேற்றுமைகள் இருந்தாலும் அங்கே நட்பும் பலப்பட்டது.

அடுத்த நாள் மாசு கட்டுப்பாடு வாரியம் ஆள் ஒருவரை காண திட்டம் போட்டார்கள். கடைசி நிமிடம் பால்கி வர முடியாதுபோக அருணும் ஆராதனா மட்டுமே சென்றார்கள். மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி பணம் விழுங்கும் முதலையாக இருந்தான்.பூர்ணாவின் புது யூனிட் என்றும், அதற்காக பேச அப்பாயின்மென்ட் வேண்டும் என்று கேட்கிறார்களென தெரிந்துகொண்ட நிமிடம் நகரத்தின் காஸ்ட்லியான நட்சத்திர விடுதியில் பிரைவேட் அறை புக்செய்யச் சொல்லியிருக்கிறான். அதைக் கேட்டதுமே அருணுக்கு கோப கொந்தளிப்பு தொடங்கிவிட்டது. இதில் பால்கி வர முடியாது என்றதும் பெண் அவளை மட்டும் அழைத்துப் போவதில் நெருடல் அவனுக்கு.

“உன்னை கூட்டிப்போக இஷ்டம் இல்லை எனக்கு” சலிப்பாக அவன் சொல்ல கோபமாக பார்த்தாள் “சேஃப்டி இல்லை” என்றான். “பார்த்துக்கொள்ளலாம் என்று அவள் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆள் இருக்கிறது என்று காண்பித்தாள்”திருப்தி அடையவில்லை என்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் எழுந்தது அவனுக்கு.

இவர்கள் போகும் முன்னரே டேபிளில் வந்தமர்ந்து மதுவகைகள் முழு பாட்டில்கள் வாங்கி வைத்துக்கொண்டு ஸ்நாக்ஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தார் பண முதலை. இவர்கள் சென்றமர்ந்தத நொடிமுதல் அருண் பக்கம் கூட திரும்பவில்லை அவர். ஆராதனாவை பார்த்து “பாப்பா 8 பவுன் தங்க சங்கிலி ஒன்னு,ஒரு லட்சம் கேஷ், வெளிநாட்டு டூர் ஏற்பாடு செய்யுங்க. ஃபைல் நகரும்” என்றார்.

“ஆமா, இவரு எங்க வீட்டு மாப்பிள்ள பாரு, தங்கசங்கிளி போட்டு டௌரி கொடுத்து டூர் அனுப்புறதுக்கு.மரியாதை கெட்டுப்போயிடும் பார்த்துக்கோங்க. ரூல்ஸ் எல்லாம் முறையா தெரிஞ்சு,அதுக்கு ஏத்தாப்ல கட்டியாச்சு.”

“ஆமா தம்பி,இப்போ கட்டியாச்சு. ஆனா அதுக்கு முன்னாடி மரகதம் அம்மா லஞ்சம் கொடுக்கிறேன் சொன்ன ஆதாரம் நம்மகிட்டே இருக்கே இத வச்சி என்னால அந்த இடத்தையே வாங்கமுடியும்.பார்க்குறீங்களா”

ஆராதனா அமைதியாக செய்கிறேன் என்பது போல தலையை அசைத்து செய்கையில் முடித்தாள். அருண் கோபத்தில் கொந்தளித்தான். இவர்கள் கிளம்பலாமென எழபோக “அட இருங்க! எங்க எழுந்து போறீங்க. நான்தான் முன்னே போகணும், நீங்க பில் கட்டிட்டு கிளம்பி போகணும்,ஏன்னா நான் கெஸ்ட் பாருங்க” சொல்லிவிட்டு வாங்கிய பாட்டில்கள், பார்சல் சாப்பாடு மூட்டைக்கட்டினார்.அதிர்ந்து பார்த்த இருவரையும் வார்த்தையில் செல்லமாக மிரட்டினார். “ஒரு வாரம் டைம்ங்க, இல்லீன்னா சீல் வைக்க வருவாங்க. கண்ணா பாட்டியை கேட்டதா சொல்லுங்க.நான் வரேங்க பாப்பா”

ஆராதனா தலையசைத்தாள்.எப்போதும்போல பாட்டி மேல் கோபம் பீறிட்டது இவனுக்கு.“இந்த கிழவிய…” கருவினான். அவன் வாய் மீது பட்டென்று அடித்தாள்.

“ஏய்…” அவன் மிரட்ட போனில் டைப் அடித்தாள் “நம்மீது பாசம் வைத்திருக்கும் ஆளை கோபித்துக்கொள்வது மகாபாவம். கோபித்து கொள்ள ஆள் இருக்கே என்று சந்தோஷப்படு. எதையும் அடுத்தவர் மீதே திணிக்க பார்க்காதே. உழைப்பாளி,அவர் பிசினஸ் மூளை என்ன செய்தேனும் தொழில் ஓடவேண்டும் என்று நினைத்திருக்கும். அதையும் யோசி. இதிலிருந்து லாவகமாக வெளியே வரப்பார்க்க வேண்டும் நாம்” என்றாள்

அவனும் “இதோ நல்லா செஞ்சு வைச்சிருக்கு இவங்க பிஸ்னஸ் மூளை” எரிச்சல் அடைந்தான்.

அவள் நினைவு பின்னோக்கி நகர்ந்தது.இன்றைக்கு அருணுக்கு அறிவுரை சொல்லும் பெண்ணுக்கு அவள் கோபத்தை காட்டகூட அந்த ஆள் இல்லையென்ற பாரம் கூடியது.

அது மழைக்காலம்.அப்பாவின் ஆபிஸ் அறையில் அவளும் அப்பாவும் தீவிரமாக விவாதித்துக்கொண்டிருந்த சமயம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நெடுங்காலமாக தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் நோவா சிஹாரி அவள் தந்தையை காண வந்தார்.
‘வாங்க’ என்று வரவேற்பதை கூட பொருட்படுத்தாமல் சுற்றி வளைக்காமல் விஷயத்துக்கு வந்தார். இந்தோ-கிரேக்கர்கள் காலத்து தொல்பொருள் ஒன்று, அதாவது கிமு 180களில் கிரேக்கர்கள் பாரதநாடு நுழைந்த ஆரம்பகாலத்தில் வித்தியாசமான உலோகத்தால் செய்த குப்பி ஏலத்திற்கு வருகிறது. வாங்கி கொடுக்க முடியுமா?அந்த உலோகத்தின் பருப்பொருட்கள் தெரிந்துகொண்டால் புதுவிதமான உலோகம் கிடைக்கும் என்றார்.ஏலத்தை நடத்தும் இடத்தில் என்னை போல சாமானியர்களுக்கு அனுமதி இல்லை,அதனால் நீங்கள் போய் வாங்கி வர முடியுமா என்று கேட்டார்.

தந்தையோ “ஏன் நான் போய் வாங்கி வரவேணும்” கேட்க அவர் “தெரியல, உங்ககிட்ட உதவி கேட்டால் நடக்கும் என்று தோன்றியது” என்றார்.
அவ்வளவு நேரம் மகள் தந்தையிடம் தான் முடித்திருக்கும் ப்ராஜெக்ட் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தாள்.அவள் குழு வடிவமைத்து தயாரித்த ஆடைகளை சந்தையில் இறக்குவது பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள். புது பெண்கள் ப்ராண்ட் தயாரிப்பதுதான் அவள் கனவு. பிரத்யேக நூல்வகை ஆடைகள் தயாரித்துவிட்டனர்.அதை சந்தையில் இரக்குவது மட்டுமே பாக்கி. அப்பா வேண்டாம் கொஞ்ச காலம் போகட்டும் சொல்ல, மகள் இப்போதே செய்யலாம் அடம்பிடித்து நிற்கிறாள்.
அவர்கள் ஆடைகளை அந்த ஏல விழாவுடன் சேர்த்து பேஷன் பரேட் நடத்திக்காட்டினால் என்ன என்று தோன்ற “கண்டிப்பாக அப்பா செய்வார்” அவசரக்குடுக்கை அவள் பதில் சொன்னாள். அதன்பிறகு எதுவுமே சரியாக போகவில்லை அப்பா உயிர் போனதுதான் மிச்சம்.

அந்த ஏலத்தில் எடுத்த குப்பியால் அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்திருக்கிறார்.அவளிடம் மறைத்துவிட்டார்.அப்பாவிடம் வேறுபாடு தெரிந்து இவள் கண்டுபிடித்து தீர்வை தேடுவதற்கு முன் அந்த விபத்து நடந்துவிட்டது.

மாலை நேரம் நகரத்திலிருந்து வெளிவந்து, கார் மலைச்சரிவில் இறங்கி கொண்டிருந்த சமயம் ‘முடிவு எடுக்கும் போது நான்கு விதமாய் யோசித்து எடுக்கவேண்டும் குட்டிமா’ அட்வைஸ் செய்து கொண்டிருந்தார். அப்பாவும் மகளும் அவரவர் அறிவாளித்தனத்தை வெளிப்படுத்தி காரசாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் வந்த ட்ரக் அவர்கள் காரை உரசி தள்ளி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. கார் பள்ளத்தில் விழுந்து உடலெல்லாம் காயம், அசையக்கூட முடியவில்லை. “ஹெல்ப் ப்ளீஸ்” என்று கூச்சலிட்டுக்கொண்டே இருந்தாள். ஆட்கள் உதவிக்கு வந்த நேரம் அப்பா உயிர் பிரிந்திருந்தது. மருத்துவமனையில் ஐந்து மாதம் கடந்தது. குரல் வராது போகவும் தன்னம்பிக்கை இழந்தாள். பழசை நினைக்க நினைக்க அவளையும் மீறி அழுகை வந்தது.

கிளம்பலாம் என அவன் ஷோல்டேரில் தட்டி அவள் எழ பில் பார்த்து மலைத்துப்போய் குமுறலாக பேசிக்கொண்டிருந்தவன் அவள் முகம் பார்த்தான். பளீர் வெள்ளைநிற முகத்தில் சிவந்த கண் வித்தியசாமாக தெரிய “ஏன் என்னாச்சு” கேட்டான்.அவன் கேள்வியை தவிர்த்து அவனையும் தவிர்த்து வேகமாக முன்னே நடந்தாள்.

“கேட்குறேன் தானே சொல்லு”
“...”
“ஏய் நில்லு என்ன ஆச்சு உனக்கு”
“...”
“விட்டா இந்தஆள் சொத்தை வாங்கிடுவான்னு பயப்படுறியா”
“...”
பதில் இல்லாமல் போக,லிப்டுக்குள் நுழைந்தவள் போனிடைல் பிடித்து இழுத்தவன் “என்ன அழுகை உனக்கு, யார் என்ன சொன்னாங்க” கேட்டு அணைத்துக்கொண்டான். அணைத்தவனுக்குள் அவள் ஒடுங்க ‘ஒன்னுமில்ல ஒன்னுமில்ல’ சொல்லி ஆறுதல் சொன்னவன் அவள் உச்சந்தலையில் முத்தமிட்டான்.நெற்றியில் முத்தமிட்டான். கண்கள் மேல் உதடு ஒற்றி எடுத்தவன் தடையை பிடித்து கட்டை விரலால் அவள் உதட்டை தடவ கண் திறந்து பார்த்தாள். கழுத்தில் கைகொடுத்து இழுத்து அவள் அதரம் கவ்வினான்.அதிர்ச்சியில் தள்ளி விட்டவள் “ஹக்” என்று சத்தம் கொடுக்க அந்த நிமிடம் அவளையும் அவள் முகத்தில் பரவிய புன்னகை கண்டவன் தைரியம் கூட திரும்பவும் தன்புறம் இழுத்தான்.தன் முகத்தை நோக்கி வந்த அவன் முகத்தில் அறைந்தவள் ஒரு விரல் நீட்டி காட்டி கோபமாக மிரட்டி லிப்ட் திறந்ததும் குடுகுடுவென வெளியே ஓடி தன் கார் எடுத்து கிளம்பிவிட்டாள்.
 
Status
Not open for further replies.
Top