அத்தியாயம் 2
நிலாவும் ருக்மணியும் பாடசாலைக்குள் சென்றனர்.
தரம் 1 தொடக்கம் 5 வரைக்குமான சிறுவர்களுக்கான ஆரம்ப பள்ளி ஆனது சற்று தள்ளியும், 6 தொடகம் 10 வரைக்குமான பள்ளி கட்டிடங்கள் இடைவெளி ஓடும் இருக்கும்.
இவர்களோ வேர்த்து விழுந்து பள்ளி முழுவதும் சல்லடை போட்டு தேட முருகனோ இவர்களை பார்த்த வண்ணம் வந்தார்.
"டீச்சர் என்னாச்சு எதை ஆச்சும் தொலைச்சிட்டிங்களா என்ன?"
"அண்ணா என் பொண்ணு மொழியும், அத்துவையும் காணம் நீங்க எங்கயாச்சும் அச்சும் பாத்திங்களா?"
"இல்லையே டீச்சர் நான் எல்லாம் பாத்து தான் கேட் (gate) மூடினேன்."
"இவங்க எங்க தான் போனாங்க"
கண்களில் இருந்து தாரை தாரை ஆக கண்ணீரை துடைத்த வண்ணம் அவள் கண்களோ அவளின் உயிரின் பெயரை ஜெபித்த வண்ணமும் இருந்தாள்.
"அமுலு கால் எடு
அமுலுஉஉஉ....."
என்ற கால் டியூன் (tune)
அவர்களின் காதை அடைய
தொலைபேசியில் ஜெசி காலிங் (calling)
என்று வந்ததும்
இவளோ அந்த காலை கட் பண்ணி விட்டு குழந்தைகளை தேடும் பண்ணியை தொடர்ந்தனர். தொலைபேசி ஆனது தனது வேலையை தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தது.
ருக்மணி தொலைபேசியை வாங்கி
அவர்கள் பேசும் முன்பு
"டீச்சர் கொஞ்சம் வேலை அஹ்ஹ் இருக்காங்க ப்ளீஸ் லேட்டா கால் பண்ணுங்கோ" என்ற வண்ணம் கால் கட் பண்ண போக.
"அம்மா அஹ்ஹ்ஹ "
என்று மழலைகுரல் அவள் செவியை நிரப்பியது.
"அத்து.. அத்து எங்கடா போனீங்க?
மொழி உங்க கூடதான் இருக்காளா?
ஹலோ...
ஹலோ.."
"ருக்மணி நான் ஜெசி லொகேஷன் அனுப்புறன் உடனே நீங்களும் நிலவிழியும் வாங்க."
நிலா தொலைபேசியை பறித்து
"ஹலோ... ஹலோ.."
கால் ஆனது கட் ஆகி இருந்தது.
"வாங்க அக்கா அங்க போவம்.
அக்கா இது அந்த வெள்ளை பூக்கள் இருக்குமே அந்த பக்கம் அக்கா
பின் கேட் வழியா தான் இவங்க போய் இருக்காங்க."
"சரி வா போய் பார்ப்போம்."
அங்கு சிறுவர்கள் கண்ணில் கண்ணீருடன் அவன் கைகளில் அகப்பட்டு இருந்தனர்.
ஜெசிக்காவோ குழந்தைகளை
விசாரிக்க ஆரம்பிக்க
மொழி, அத்து இருகுரல்கள் அவர்கள் செவியை வந்தடைத்தது.
"அம்.. அமுலு" என்று ஓடி சென்று அவர்களை அணைத்தவர்கள்.முத்தமழையை பொழிந்தார்கள்.
குழந்தைகள் கண்ணில் கண்ணீருடனும் ஆடைகளில் ரத்த திட்டுக்களும் இருக்க பதறியவர்கள் அடி ஏதும் பட்டு இருக்கா என சோதனை செய்ய
அவர்களின் ஆடையில் மாத்திரமே ரத்ததிட்டுக்கள் இருக்க உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்ற பிறகே சற்று ஆசுவாசம் ஆனார்கள்.
"இந்த பக்கம் வர கூடாது எண்டு எத்தனை தடவை சொல்லி இருக்கேன். ஏன் வந்தீங்க? ட்ரெஸ்ல என்ன இது சொல்லுடா."
அந்த சில்வண்டுகளோ முகத்தை சுருக்கி மீண்டும் அழுகைக்கு தயாராக. :போதும் இப்பதான் அவங்கள சமாதானப்படுத்தி இருக்கேன். திரும்ப அழ வைக்காதீங்க" என்ற வண்ணம் வந்தாள் ஜெசி.
முதல்ல அங்க பாருங்க" என்ற வண்ணம் மற்ற இருவரின் பார்வையின் திசையை மாற்றினாள்.
அங்கு 6 அடி உயரத்தில் தன் உடல் முழுவதையும் சாலையை அடைத்த வண்ணம் பாதி மயக்கத்திலும் மீதி இவர்கள் உரையாடலை கேட்டபடி விழுந்து கிடந்தான்.அவனது ராயல்என்பீல்ட் (royal enfield)பைக் ஆனது அவன் கால்களில் தனது ஒட்டு மொத்த பாரத்தையும் போட்டு அவன் மேல் சாய்த்து இருந்தது.
நிலாவோ அவன் அருகில் சென்று "இவரை முதல் வெளியில் எடுக்கோணும்.
வாங்க பைக்கை தூக்குவோம்."
அவர்கள் தூக்க முயன்றதில் பைக்கின் பாரம் தாளாது கீழே விட மீண்டும் பட்ட இடத்தில் பட்டு இரத்தபோக்கு அதிகமானது. அதன் விளைவாக அவன் அடி தொண்டையில் இருந்து சிறு முனகல் ஆனது வெளிப்பட்டது.
ஜெசி,
"ருக்மணி அக்கா நீங்க பைக்க நான் சொல்லும் போது கொஞ்சம் மேல துங்குங்கோ
நான் அவங்கள வெளில எடுத்துடுறன்."
"ம்ம் சரிக்கா."
அவர்களை பார்த்து "1 2 3" என்றதும் அவர்கள் பைக்கை தூக்கவும் இவனை வெளியில் இழுக்கவும் சரியாக இருந்தது. அவள் மனசாட்சியோ "பைக்கை விட இவன் செம பாரமா இருக்கானே சப்பா முடியல." என உள்ளுக்குள்ள அழுத வண்ணம் இருந்தது.
அவனோ வெளியில் வந்ததும் அரைமயக்கத்திற்கு சென்றான்.
"ரொம்ப அடி பட்டு இருக்கு மருத்துவமனைக்கு கூட்டிடு போகணும்" என ருக்மணிகூற
ஜெசி "வேணாம் அக்கா என்ன நடந்திச்சு எண்டு தெரியல
நான் வரும் போது பசங்க அவங்க கைகளுக்குள்ள இருத்தாங்க
பார்க்கவும் பெரிய இடத்து ஆளா இருக்கார் போலீஸ் கேஸ் எண்டு திரிய போறிங்களா?
பேசாம வீட்ட கூட்டிட்டு போய் மருந்து கட்டி விடுங்கோ"
"என்னதுது...!
என் புருஷனே சரியான சந்தேகப்பிராணி இதுல இம்புட்டு பெரிய ஆம்பிளைய கூட்டடடு போய் இப்புடி ஆச்ச்சு எண்டு சொன்னோ என்னை நம்பிட்டுத்தான் மிச்சம்."
"ஏன்டி நீ வேற
இப்பிடிப்பட்டவர் ஓட வாழணுமா?
சரி அத பிறகு பாப்பம் இப்ப இவரை என்ன பண்ணுறது"
அப்போது நிலாவின் கையடக்க தொலைபேசி தன் இருப்பை உணர்த்த
"ஹலோ! அப்பா
மொழி கிடைச்சுட்டாள் நீங்க டென்ஷன் ஆகாம இருங்க "
"சரிமா நீங்க எப்ப வரீங்க."
"அப்பா இங்க கொஞ்சம் பிரச்சனை ஆயிடுச்சு" என்று நடந்தவைகளை அவரிடம் கூற
அவர் "நிலாம்மா ஜெசி சொல்லுறது சரி நீ பேசாம அந்த தம்பிய இங்க கூட்டிட்டு வா நாம பாத்துக்கலாம்"
"ஆனா அப்பா "
"நிலா"
"சரி கூட்டிட்டு வரேன் ஆனா எனக்கு பிடிக்கல"
என்ற வண்ணம் தொலைபேசியை கட் பண்ணினாள்
"ஜெசிஅக்கா அப்பா இவங்கள வீட்டுக்கு கூட்டிடு வர சொல்லுறாங்க"
"ம்ம் நல்லது தான் ஆட்டோலா கூட்டிக்கொண்டு போவம்."
என் புருஷன் வரதுக்கு முதல் போய் இவனுக்கு ஆடை மாத்தி விடணும். பிறகு எனக்குதான் அபிஷேகம் நடக்கும்
ஜெசி நீ செய்த உதவிக்கு ரொம்ப நன்றி டி "
"ஆமா டா சரியான நேரத்துல அந்த கடவுள்தான் உன் கண்ணுல இவங்களை காட்டி இருக்கார். நானும் நிலாவும் இவ்வளவு பதறிட்டம் தெரியுமா?மிக்க நன்றி டா."
"அச்ச்சோ அக்கா, டீச்சர் இது என்ன மனுஷனுக்கு மனுஷன் உதவி தானே முதல் அவங்கள கவனிங்க பிள்ளைகளும் பயந்துட்டாங்க.
தூரத்தில நம்ம சுப்பையா அண்ணா வண்டி வருது ஏறி போங்க.
நான் போயிட்டு வரேன்."
கேசவமூர்த்தியோ தனது வீட்டு வாசலில் கேட்ட ஆட்டோ சத்தத்தில் வெளியில் வந்தார்.
ருக்மணி முதலில் இறங்கி
மகனை தூக்கி கொண்டு
"நிலா குறை நினைக்காத அவர் வார நேரம் ஆஜிட்டு நான் போய் இவனை சமாதானப்படுதோணும் நாளைக்கு காலைல வந்து பார்க்குறேன்."
"ஒரு பிரச்சனையும் இல்ல அக்கா நான் பாத்துக்கிறேன்.
அப்பா வாங்க ஒரு கை பிடியுங்கோ"
அவனை கைத்தாங்கல் ஆக அவனை கூட்டி செல்ல அவன் அவள் மேல் மொத்த பாரத்தையும் போட்டான். அவன் கரங்களோஅவள் சேலை மூடியும் மூடாமல் இருந்த இடையில் பதிந்தது.
பெண்ணானவள் ஒரு நிமிடம் தன் நடை நிறுத்தி அவனை உற்று நோக்க அவனோ கொஞ்சம் கொஞ்சமாக ஆழ்மயக்கத்துக்கு சென்று கொண்டு இருந்தான்.
"நிலா நிலா."
"அஹ்ஹ்.."
" என்னமா நிண்டுட்டாய் வா என்னால இவன் கனத்தை தாங்க முடியல. என்னதான் சாப்புடுவாங்களோ"
அவள் முகத்தில் மெல்லிய முறுவல்.
அவன் கைகளை தன் தோள் மேல் போட்டவண்ணம் "சரி வாங்க."
அந்த ஒரு அடுக்கு வீட்டில் காலியாக இருந்த அறையில் அவனை தங்க வைத்தார்கள்.
"அம்மாடி நான் டாக்டர் சுகனை வர சொல்லி இருக்கேன்.
இன்னும் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிஷத்தில வந்துடுவான்.
கவலைப்படாதடா நீ போய் மொழியை பார் அவளுக்கு சாப்பாடு கொடு நீயும் போய் குளிச்சுட்டு டிரஸ் மாத்திட்டு வா."
"சரி அப்பா"
சுகன் அவன் பெயரை கூறியதும் அவள் முகம் இருண்டு போனது.
"நிலா நிலா"
"ஆஹ்ஹ் அப்பா"
"என்னம்மா அப்போ அப்போ விறைச்சு போய்டுறாய்."
"ஒண்ணும் இல்லப்பா நீங்க இவங்கள பாருங்கோ
நான் டிரஸ் மாத்திட்டு வரேன்."
அவரின் பதிலுக்க கூட காத்து இருக்காமல் மேலே மொழியை காண சென்றாள்.
அவரோ போகும் தனது மகளை யோசனையோடு நோக்கினார்.
சிறிது நேரத்துக்கு பிறகு வாசலில் அழைப்புமணி கேட்க
கேசவமூர்த்தி கதவை திறந்து சுகனை அழைக்க வந்தவனின் முகமோ அவரை நோக்க
பார்வையோ வீட்டை நாலா புறமும் சுற்றி வட்டமிட்டது.
அவன் தேடிய இரை கண்ணில் சிக்கியதும் விழிகளானது பளிச்சிட அந்த இரையான மங்கையை தன்விழி கொண்டு பூஜிக்க ஆயுதமானான்.
அவன் பார்வையை கண்டுகொண்ட மங்கையோ காளி ஆக உருமாறி அவனை கொன்றால் என்ன என்று ரௌத்திரத்துடன் நோக்கினாள்.
அவனோ அவளின் அந்த பார்வையை சற்றும் கண்டுகொள்ளாமல்
அவள் அழகி என்பதை உணராதது போன்ற சாதாரண ஹாட்டன் ஊதா நிற சுடிதாரில் வெண்ணிற பூக்கள் போட்டது போன்ற டாப்பும் வெள்ளை நிற ஜீன்சும் துப்பாடவும் அணிந்திருந்தாள்.
அவளின் இடைவரை நீண்டு இருந்த ஈர கூந்தலை துண்டு ஒன்றால் சுற்றி வைத்து இருந்தாள். அதற்குள்ளேயும் அடக்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும் சிறு சிறு முடி கற்றைகள் அவள் கன்னத்தோடும்
நெற்றியிலும் விளையாடிய வண்ணம் இருந்தன.
அவன் கண்களுக்கு அவள் அத்தனை அழகையும் எப்பொழுது
தன் உடமை ஆக்கலாம் என்ற வெட்கையோடு காத்திருந்தான்.
திருமணம் ஆகி மனைவி நிறைமாத கர்ப்பிணி ஆக இருக்கும் பெண்ணின் கணவன் மற்றும் அந்த வயிற்றில் இருக்கும் குழந்தையின் தந்தையும் ஆன
டாக்டர் சுகன்.
"டாக்டர்"
"ஆஹ்ஹ்"
"சரியா போச்சு நீங்களும் நின்று படி கனவு கண்ணுறீங்களா என்ன?
ஹாஹா அப்புடி இல்லை ஏதோ ஒரு ஞாபகத்தில நின்றுவிட்டேன். வாங்க நோயாளியை பார்க்க போகலாம்."
"இவருக்கு தலையில் இருக்கும் காயத்துக்கு ஒரு கிழமை கழிச்சு இப்ப கட்டி இருக்க பேண்டேஜ் கழட்டி இந்த மருந்தை தடவிவிடுங்கோ , காலுக்கு இந்த மருந்தை வடிவா கழுவிட்டு பூசி விடுங்கோ அப்புறம் இந்த மருந்துகளையும் மூன்று நேரமும் சாப்பிட்ட பிறகு கொடுங்க. இன்றைக்கு தேவை இல்லை நான் ஊசி போட்டு இருக்கிறதால் நல்ல தூங்குவார் நாளையில இருந்து கொடுங்கோ.