ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கவிழ்ந்தேனடி உன் காந்தவிழிகளில்-கதைத்திரி

Status
Not open for further replies.

Fathi habi

Member
Wonderland writer
அத்தியாயம் - 04



அடுத்த நாள் அதிகாலைவேளை கொழும்பை வந்தடைந்த ரயிலிலிருந்து தன் உடைமைகளுடன் கீழிறங்கினாள் சாக்ஷிதா..


அந்த காலைவேளையிலும் பரபரப்பாய் இருந்த அந்த புகையிரத நிலையத்திலிருந்து வெளியேறிவந்தவளோ அடுத்து அழைத்தது என்னவோ அவள் அன்னைக்கே..


ஊரை சென்றடைந்ததும் தனக்கு அழைத்து சொல்லவேண்டும் என ஆயிரம் முறையாவது கூறியிருந்த அன்னையின் பேச்சு காதில் ஒலிக்க சிறு புன்னகையுடன் அவருக்கு அழைப்பை விடுத்தாள்..


மகளின் அழைப்பிற்காக காத்திருந்தாரோ அவரும் ஒரு அழைப்பிலே மறுபுறம் ஏற்கப்பட்டிருந்தது..


"ஹலோ அம்மு பத்தரமா போய்ட்டியாடா?? ஏதும் பிரச்னையில்லையே??" என அக்கறையுடனும் கவலையுடனும் அவர் குரல் ஒலித்திட..இவளுக்கோ தாயின் தவிப்பில் மனதில் கவலை கூடியபோதிலும் தன் மனதை மறைத்தவளாய்..


"அம்மா நான் சேஃபா ரீச் ஆகிட்டேன்..எந்த பிரச்சினையும் இல்ல நல்லா இருக்கேன்.." என்ற அவள் குரலை கேட்டபின்பே சற்று ஆசுவாசமடைந்தார்..


"சரிடா என்ன டைம் ஹாஸ்பிடல் போகனும்..??" என கேட்டவருக்கு பதிலாய்..


"ஒன்பது மணிக்கு தான் ஹாஸ்பிடல் போகனும்மா..இன்னும் நேரம் இருக்குறதுனால இப்போதைக்கு ஒரு ரூம் ஒன்ஹவர் போல தங்கி ப்ரெஷ்ஷப்பாகிட்டு கிளம்பினா ஓகேவா இருக்கும்.." என்க..அவரும் சரியென்றவர் சிலநிமிடம் அவளுடன் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தார்..


அதன்பின் சாக்ஷியோ அருகிலிருக்கும் ஓர் விடுதியில் சிறிதுநேரம் தங்கி தயாராகியவள் பின் ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றாள்..


.........


இங்கு அஜயின் வீட்டிலோ தயாராகி கீழே வந்தவனோ ஹாலில் அமர்ந்திருந்த தாயின் அருகே சென்றமர்ந்தவன்..
"மாம் ராம் அங்கிள் கால் பண்ணியிருந்தாங்க.. நம்ம அனுவ பார்த்துக்குறதுக்கு ஒருஹவுஸ் சேர்ஜேன்ட் அரேன்ஜ் பண்றதா சொல்லியிருந்தாரு..அத பத்தி பேச நான் ஹாஸ்பிடல் போறேன் மாம்" எனக் கூறிட..


லஷ்மியும் " ம்ம் சரி கண்ணா முதல்ல வந்து சாப்பிடு அப்புறம் போகலாம் .. என்றவர் அவனை அழைத்துக் கொண்டு சென்று அவனுக்கான உணவை பரிமாறியவர் தானும் அவனுடன் அமர்ந்து உணவை உண்டு முடித்தார்..


உணவை முடித்துக் கொண்டு தாயிடம் விடைபெற்று அஜய்யும் கிளம்பும் நேரம் வீட்டினுள் நுழைந்தனர் அஜய்யின் நண்பர்கள் பட்டாளம்...


"உள்ளே வரலாமா??" என கோரசாய் கேட்வாறே உள்நுழைந்தவர்களை கண்ட இருவரும் மகிழ்ச்சியுடன் அவர்களை பார்த்தனர்..


"டேய் வாங்கடா.. என்னடா எல்லாரும் சொல்லாம வந்து இருக்கிங்க.." என்ற அஜய்யின் அருகே வந்த நண்பர்கள் மூவரும் .."அதான் மச்சி சர்ப்ரைஸ்.." என அவன் காதிற்குள் கத்திட அவனோ காதை குடைந்து கொண்டான்..


லஷ்மியோ புன்னைகையோடு அவர்களை பார்த்தவர் அவர்களோடு வந்த மீனா நந்தினி இருவரையும் புன்னைகை முகமாய் உள் அழைத்தார்..


சஞ்சய்யோ நந்தினியோடு சேர்ந்து தம்பதி சகிதமாய் லக்ஷ்மியின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட..மனப்பூர்வமாய் இருவரையும் வாழ்த்தியவர் சாமியறையில் அவர்களுக்கென வாங்கிவைத்திருந்த சீர் தட்டையும் அவர்களுக்கு கொடுத்திட மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டனர்..


கிஷோரோ "அம்மா ரொம்ப பசியா இருக்குமா??" என உரிமையாய் அவரிடம் கேட்டிட சிரித்துக் கொண்டவர் அனைவரையும் அழைத்துக் கொண்டு அவர்களுக்கு வயிறார உணவை பரிமாறினார்..


தாயாய் மதிக்கும் அவரிடம் அவர்களுக்கும் எவ்வித தயக்கமும் இதுவரை இருந்ததில்லை..என்பதை விட லக்ஷ்மியும் சரி அஜய்யும் சரி அவர்களுக்குள் ஆரம்பத்தில் உண்டாகிய அந்த தயக்கத்தை முற்றிலும் வெட்டி முறித்ததாலோ இன்று வரை சொந்தப் பிள்ளை போல் உரிமையாய் அவரிடம் அன்பை பெற்று வருகின்றனர்..


அதன்பின்னர் நேரம் நண்பர்களுடன் கழிந்திட சிலமணிநேரத்தில் அவர்களும் கிளம்பிச் சென்ற பின்பே ஹாஸ்பிடல் நோக்கி கிளம்பிச் சென்றான் அஜய்..


..........


AAR என்ற பெயர் பொறிக்கப்பட்டு ஏழடுக்கில் உயர்ந்து நின்ற அந்த ஹாஸ்பிடல் வளாகத்தினுள் நுழைந்தாள் சாக்ஷிதா..


ஹாஸ்பிடல் கட்டிடத்தினுள் நுழைந்தவளோ அங்கிருந்த ரிசெப்ஷனிஸ்ட் பெண்ணிடம் விசாரித்திட அவளும் ஓர் அறையை சுட்டிக் காட்டி அதனுள் காத்திருக்குமாறு கூற அவளிடம் நன்றி கூறி விடைபெற்றவள் அவ்வறையினுள் நுழைந்து கொண்டாள்..


அங்கு இவளைப் போல சிலர் இருக்க அங்கிருந்த ஒரு பெண்ணின் அருகில் அமர்ந்து கொண்டாள்..


அருகிலிருந்த பெண்ணை பார்த்தவள் அவளிடம் நட்பாய் பேச முயன்றிட அவளோ எதுவும் பேசாது அமைதியாகவே அமர்ந்திருக்க சாக்ஷியும் அதற்குமேல் எதுவும் பேசிடாது அமைதியாகினாள்..


அவர்களுக்கான நேர்முகத்தேர்வு நடைபெற ஒவ்வொருவராய் உள்ளே சென்று வெளியேறிச் சென்றனர்..சாக்ஷியும் அவளுக்கான அழைப்பு கிடைத்தவுடன் உள்ளே சென்று வெளியேறிச் சென்றாள்..


அங்கு வந்தவர்களில் ஐந்துபேர் தெரிவு செய்யப்பட்டிருக்க. அதில் சாக்ஷியும் ஒருத்தியாய் தேர்வாகியிருந்தாள்..


புன்னகையோடு வெளியேறியவள் தாய்க்கு அழைத்து விசயத்தை கூறிட மறுபுறம் பார்வதியும் மகிழ்வுடன் வாழ்த்தினார்..தாயிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள் அங்கிருந்து கிளம்பும் நேரம் யாரோ அழைக்கும் குரல் கேட்டு அந்த திசையில் திரும்பினாள்...


அங்கோ உள்ளே கண்ட அந்தப் பெண் நின்றிருந்தாள்.. உள்ளே அவளருகில் அமர்ந்திருந்த அவளே..


சாக்ஷியோ அவளை என்ன என்பது போல் புருவம் உயர்த்திக் பார்த்திட அதிலே அவளது கோபத்தை புரிந்து கொண்ட மற்றையவளோ


"ஹேய் ஸாரிங்க..ஸாரி கோபப்படாதிங்க.." என ஆரம்பத்திலே அவள் மன்னிப்பு படலத்தை தொடங்கிவிட இருந்தும்
சாக்ஷியோ அப்போதும் விடாதவளாய் "ஹா நீங்க பேசுவிங்களா?? நீங்க ஊமைன்னு நினைச்சேன்" என வேண்டுமெனக் கூறிட.. சிரித்துவைத்தாள் மற்றையவள்..


"ஸாரிபா ..ஐம் ஸ்வேதா பெர்ஸ்ட் டைம்னால கொஞ்சம் நேர்வஸ்ஸா இருந்தேன் அதான் சைலென்ட்டா உங்கார்ந்துயிருந்தேன்..தப்பா நினைக்காதிங்க ஸாரி" என குழந்தை போல கெஞ்சுபவளை பார்க்கும் போது உதட்டில் சிறு புன்னகை அரும்பியது சாக்ஷிதாவிற்கு...


அவள் சிரிப்பை கண்டுகொண்டவளும் சிரித்துக் கொண்டே அவளுடன் பேசத் தொடங்கிவிட்டாள்..


சிறிதுநேரத்தில் இருவரும் ஒருத்தருக்கொருத்தர் நன்றாய் அறிமுகமாகிக் கொண்டனர்..


சாக்ஷியின் கரத்திலிருந்த பையை கண்டவளோ "என்ன கைல பேக்கோட வந்து இருக்க ஊரவிட்டு ஓடி வந்திட்டியா" என சிரித்துக் கொண்டே கேட்டவளை போலியாய் முறைக்க முயன்று முடியாதவள் தானும் சிரித்துக் கொண்டு


"ஊர் விட்டு எல்லாம் ஓடிவரல மேடம்...இன்னைக்கு மோர்னிங் தான் இங்க ரீச் ஆனேன் இனிதான் லேடிஸ் ஹாஸ்டல்ல சேரனும் என்று விளக்கமாய் கூறியவள் அவளிடம் " நீயும் இந்த ஊருக்கு புதுசா? ?? " எனக் கேட்டிட..


அவளோ"இல்ல இது என் சொந்த ஊர்தான் என் வீடு கூட இங்க கொஞ்சம் தள்ளித்தான் இருக்கு.." என்றாள்..


"அப்போ உனக்கு எந்த கஷ்டமும் இல்ல வந்து போக..எனக்கும் இந்த பக்கமா ஒரு ஹாஸ்டல் கிடைச்சா ஈஸியா இருக்கும் " என்றவளின் பேச்சை மறித்த..
ஸ்வேதாவோ "என்கூட தங்கிக்கிறீயா சாக்ஷி " என பட்டென்று கேட்டுவிட
சாக்ஷியோ தயங்கியவளாய் "இல்ல ஸ்வேதா உனக்கெதுக்கு சிரமம்" எனக் கூறி தன் மறுப்பை தெரிவித்தாள்...


ஸ்வேதாவும் அவள் தயக்கம் உணர்ந்தவள்.. "இதுல எனக்கென்ன சிரமம் சாக்ஷி..நீ என்கூட வந்தா ரொம்ப சந்தோஷப்படுவேன்..
அப்புறம் நீ பயப்புடாத ..என்வீட்ல சொல்லிக்கிற அளவுக்கு எனக்குனு சொந்தம் யாரும் இல்லப்பா.. நான் ஒரு சிங்கிள் லேடி தான்" என்று தனது கவலைகளை மறைத்து சிரிப்புடன் பேசியவளை பார்த்த சாக்ஷிக்கோ அவள் உள் மனவலி புரியாமல் இல்லை..


தாயையும் சகோதரர்களையும் ஒருவருடம் பிரிந்து வருவதற்கே ஏதோபோல் இருந்த அவளுக்கு இவளின் வலி எந்தளவு என்பது புரிய அவள் கரத்தை ஆறுதலாய் பற்றிக் கொண்டாள்..


ஸ்வேதாவோ சிரித்துக் கொண்டவள் தானும் அவள் கரம் பற்றியவள்..
இத்தனை நாளா தனியாவே இருந்துட்டேன்..இனி ப்ரெண்ட் ஆ நீ கிடைச்சியிருக்கன்னு தான் உரிமையோட கேக்குறேன்.. என்கூட தங்கிக்குறீயா " என்றிட அவளுக்கும் அதை மறுக்கமுடியாமல் தான் போனது..


அவளின் சம்மதம் கிடைத்ததும் சந்தோஷமாய் அவளுடன் தன் வீடு நோக்கிக் கிளம்பினாள்..


போகும் வழி முழுவதும் ஓயாது பேசியவளின் பேச்சிலே புரிந்தது அவளின் சந்தோஷ மனநிலை..


கண்டதும் காதல் போல இங்கும் கண்டதும் ஓர் நட்பு உருவாகித்தான் போனது..


……


மதியநேரவேளையில் ஹாஸ்பிடல் வந்த அஜய்யோ அந்த ஹாஸ்பிடலின் தலைமை மருத்துவரும் அவனின் தந்தை கிருஷ்ணதேவ்வின் நண்பருமான ராமின் அறை வாசலில் நின்றவன் "ஹாய் அங்கிள் உள்ளே வரலாமா" என அனுமதி கேட்டு நிற்க அவனைக்கண்டு புன்னகைத்தவர்..


"ஹாய் அஜய் ஹம்மின்..வா உட்காரு" என அவனை உள்அழைத்து அமரச் செய்தார்..


சிறு தலையசைப்புடன் அதை ஏற்றுக் கொண்டு அமர்ந்தவன்...
"ஸாரி அங்கிள் வேர்க் டைம்ல டிஸ்டர்ப் பண்ணிடேனா??" என்றவனின் கேள்வியில் புன்னகைத்தவர்..


"இது உனக்கும் சொந்தமான ஹாஸ்பிடல்..அஜய் நீ எப்போ வேணாம் இங்க வரலாம் போலாம்" என்றார்..


ஆம் அஜய்யின் தந்தை கிருஸ்ண தேவ் மற்றும் ராம் இருவருடைய முயற்சியில் உருவாக்கப்பட்டதே AAR ஹாஸ்பிடல் ஆகும்..


அவர் பதிலில் புன்னகைத்தவன்..
"ஸாரி அங்கிள் காலையில ப்ரெண்ட்ஸ் வீட்டுக்கு வந்ததுனால இங்க என்னால வர முடியல"என்றான் மன்னிப்பை யாசிக்கும் குரலில்..


"அதைத்தான் போன்ல சொல்லிடியப்பா விடு" என்றார் ராம்..


"அங்கிள் அனுவோட ட்ரீட்மெண்ட்க்கு ஒரு டாக்டர அனுப்ப சொன்னனே..அந்த விசயம் என்னாச்சு" என்றான்..


"ம்ம் ஆமா அஜய் நேத்து புது ட்ரெய்னிங்க வந்திருந்தாங்க அவங்களில் ஒருத்தங்கள செலெக்ட் பண்ணியிருக்கேன் இன்னும் ஒரு டூடேய்ஸ்ல அவங்கள அனுப்புறேன" என்றிட சரியென்றவன் சிறிது நேரம் அவருடன் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப முற்பட அவனைத் தடுத்தார் ராம்..


"அஜய் எத்தனை நாளைக்குடா இப்பிடி இருக்க போற உனக்குன்னு ஒரு லைஃப் அமைச்சிக்கோ" என்றவரைப் பார்த்து உதட்டோரம் ஒரு சின்ன சிரிப்புடன் பதிலேதுமின்றி அமைதியாய் விடை பெற்றுச் சென்றான் அஜய்தேவ்..


போகும் அவனைப் பார்த்திருந்தவர்
"உனக்கான மாற்றம் வரும் போது நீ மாறித் தானே ஆகனும் அஜய்..சீக்கிரமே உனக்கான மாற்றம் வரனும்" என்று மனதில் நினைத்து ஒரு பெருமூச்சை விட்டு தன் வேலையில் மூழ்கிப் போனார்.


........


ஸ்வேதாவின் அன்புக்கட்டளைக்கிணங்க அவள்வீட்டில் தங்கிய சாக்ஷியோ தாயிடமும் தகவலை கூறிட பார்வதிக்கும் அதில் முழு சம்மதமே..


மகள் கஷ்டப்படுவாளோ என்று கவலையோடு இருந்தவருக்கு இது பெரிதும் ஆறுதலை கொடுத்தது..அதனூடு ஸ்வேதாவின் நிலை கேட்டவர் அவளுக்காக கவலை கொண்ட போதிலும் இனி தாங்கள் அவளுக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டவர் அதன்பின் அவளோடு பேசிப் பேசியே அவளோடு ஒன்றிப் போனார்..


அவர் மட்டுமல்ல அக்ஷி ஆரவ் இருவரும் கூட ஸ்வேதாவோடு நெருங்கிப் போனார்கள்..


இங்கு வந்த இரு நாட்களில் சாக்ஷியோடு பேசியதை விட இப்போதெல்லாம் ஸ்வேதாவுடன் பேசிய நேரமே அதிகமாகிப் போனது அவர்களுக்கு..


அலைபேசி உரையாடலிலே அங்கு அழகிய உறவுகள் மலர்ந்து போயின..


அடுத்த நாள் விடியலில் எழுந்து கொண்ட சாக்ஷியோ குளித்து முடித்து தயாராகி வந்த போதிலும் இன்னுமே தூக்கம் களையாது கட்டிலில் புரண்டு கொண்டிருந்த ஸ்வேதாவைக் கண்டவளோ தலையிலடித்துக் கொண்டாள்..


"கடவுளே இவ என்ன விட பெரிய கும்பகர்ணியா இருப்பா போலயே" என புலம்பிக் கொண்டவள் அவளை எழுப்பத் தொடங்கினாள்..


"ஸ்வேதா எழுந்திரிடி நேரமாச்சு பாரு முதல் நாளே லேட்ஆ போனா நல்லா இருக்காது எழுந்திரிடி" என எழுப்பியும் எழும்பாது..


"இன்னு ஒரு பை மினிட்ஸ் ப்ளீஸ்" என்று தூக்க கலக்கத்தில் கூறியவளை அதட்டி உருட்டி எழுப்பி தயாராக வைத்தவள் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடல் நோக்கிச் சென்றாள்..


.......


ஹாஸ்பிடலுக்குள் நுழைந்தவர்களுக்கு முதல் நாள் என்பதால் அவர்களுக்கென ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அதில் அனைவரும் அமர்ந்திருந்தனர்..


முதலில் ராம் தன் பேச்சை தொடங்கியவராய் ஆரம்பித்தார்..


Hi everybody wellcome to our hospital என்று வரவேற்றவர் தங்கள் ஹாஸ்பிடல் பற்றியும் அதிலுள்ள விதிமுறைகளை பற்றியும் கூறியவர் பின் தலைமை மருத்துவராய் அவர்களது பணி சார்ந்த அறிவுரைகளையும் வழங்கினார்..


"உங்களுடைய அளப்பரிய சேவைகளை இங்குள்ள நோயாளிகளுக்கு செய்யனும் என்பதுதான் என்னுடைய எதிர்ப்பார்ப்பு அதை நீங்க பண்ணுவீங்கன்னு மனமார நம்புகிறேன்" என்றிட அனைவரும் ஆம் என்பது போல் பதிலளித்தனர்..


மேலும் " உங்க ஒவ்வொருத்தருக்கும் டியூட்டி டைம் போடப்பட்டிருக்கு அதன்படி உங்க வேலையை எப்போதும் ஈடுபாட்டோட செய்ங்க.. என்றவர் அங்கிருந்து கிளம்பு முன்னர் சாக்ஷியிடம் "மிஸ் சாக்ஷி நீங்க என்னோட வாங்க" என்று அவருடைய அறைக்கு செல்ல சாக்ஷியும் அவரை பின் தொடர்ந்து சென்றாள்.


அறைக்குள் நுழைந்தவர் அவளை அமரச் சொல்லியவர் அவளிடம் தன் பேச்சை தொடங்கினார்...


சாக்ஷி நான் உங்களுடைய டிடெய்ல்ஸ் எல்லாம் பார்த்தேன் ரொம்ப பிரில்லியன்ட் அன்ட் ஆக்டிவ் பெர்சன் ஆ இருக்கிங்க குட்.." என அவளை பாராட்டிட புன்னகையுடன் அவரிடம் நன்றியை கூறினாள்..


"மெடிகல் கேம்ப் அன்ட் சோஷியல் வேர்க்ஸ்னு ஏகப்பட்ட நல்ல விசயங்கள் செய்து இருங்கிங்க.. இப்பிடி தான் செய்ற வேலையில முழு ஈடுபாட்டோட செய்றவங்க பியூச்சர்ல நல்லா நிலைக்கு வருவீங்க" என அவளிடம் கூறியவர் பின்..


நேத்து உங்க பைல பார்க்கும் போதே உங்களுக்குனு ஒரு வேலையை மனசில பிக்ஸ் பண்ணிட்டேன்..அன்ட் நீங்களும் அதை கண்டிப்பா செய்விங்கன்னு நம்புறேன்" என அவளைப் பார்த்திட..


அவளும் "கண்டிப்பா ஸார் என்னால முடிஞ்சளவு செய்வேன்.." என உறுதியாய் கூறிட புன்னகைத்தவர் அவளிடம் ஒரு பைலை நீட்டிட அதை வாங்கிப் படித்து முடித்தவள் அவரைப் பார்க்க..


அவரோ "பேசென்ட் நேம் அனுபமா ஒருவருசமா கோமாவுல இருக்காங்க நிறைய டெஸ்ட் பண்ணியாச்சு நிறைய ட்ரீட் பண்ணியாச்சு எல்லாத்துலையும் மூளைல எந்தவிதமான ப்ரோப்ளமும் இல்லன்னு தான் ரிசல்ட் வருது..
எப்பிடி இந்த கேஸ்ஸ ஹேண்டில் பண்றதுன்னு தெரியல..
மூளையில பாதிப்புன்னா மருத்துவத்தால குணப்படுத்த ஏதோ ஒரு வழில முயற்சிக்கலாம் ஆனா இங்க பிரச்சனையே வேற பேர்சென்ட் எனக்கும் இந்த ஹாஸ்பிடலுக்கும் ரொம்ப வேண்டபட்டவங்க சோ அதனால தான் அவங்கள வீட்ல வெச்சி பார்த்துக்க ஒரு ஹவுஸ் சேர்ஜென்ட் அப்போய்ன்ட் பண்ணலாம்னு யோசிச்சேன்..


மருத்துவத்தால முடியாதத சைக்கோலஜிக்கலா ட்ரீட் பண்ணலாம்னு யோசிச்சேன்.. அதுக்கு பெஸ்ட் நீங்கன்னு எனக்கு தோணுது.. என்றவர் அவளின் பதிலை எதிர்பார்த்து அமர்ந்திருந்தார்..


"கண்டிப்பா என்னால முடிஞ்சளவு முயற்சி பண்ணுவேன் ஸார்" என நம்பிக்கையாய் உரைத்தவளின் பதில் மென்மையாய் புன்னகைத்தவர்..


"ஓகேமா நான் அவங்களுக்கு இன்போர்ம் பண்ணிடுறேன்..அப்புறம் இந்தாங்க இது அவங்க அட்ரெஸ்.." என ஒரு கார்டை அவளிடம் நீட்ட பெற்றுக் கொண்டாள்..


"அப்புறம் சாக்ஷி ஒரு த்ரீ மன்த்ஸ் பார்த்துக்கோங்க அதுக்கப்புறம் நீங்க இங்க ஹாஸ்பிடல்ல வேலை பார்த்துக்க நான் ஏற்பாடு பண்ணுறேன்..நீங்க புது ட்ரெய்னி உங்களுக்கும் வெளிநோயாளர்களையும் ட்ரீட் பண்ணா தான் இந்த பணிய நல்லவிதமா தொடரலாம்" என்றிட சரியென்று கூறியவள் அவரிடம் விடைபெற்று அங்கிருந்து வெளியேறினாள்..


.......


"ஹேய் நில்லுடி" என ஓட்டமும் நடையுமாக அவளை நோக்கி வந்த ஸ்வேதாவைக் கண்டவள்..


"ஹேய் பார்த்துடி..இப்போ எதுக்கு இந்த ஓட்டம் ஓடி வார" என்று கேட்டுவைக்க அதையெல்லாம் கண்டுகொள்ளாதவள்..


"என்ன விசயம்டி முதல் நாளே சீப் உன் கூட பேசியிருக்காரு" என்று கேட்க.. அவளிடம் அனைத்தையும் கூறினாள் சாக்ஷிதா..


"அச்சோ வந்த முதல் நாளே நம்மள பிரிச்சிட்டாங்களா...ம்ம் உன்கூட சேர்ந்து வேர்க் பண்ணலாம்னு நினைச்சேன்" என சோகம் இழையோடக் கூறியவள் கரத்தை பிடித்துக் கொண்டவள்..


"ஹேய் விடுடி அதான் நாம ஒரே வீட்லான இருக்கோம் ..இது கொஞ்சநேரம் தானே போகட்டும்..அப்புறம் மேடம் முதல் நாள் தான் என்கூட வாய் ஓயாம பேசினிங்க ஆனா அதுக்கப்புறம் எல்லாம் உனக்கு தான் ஆளுங்க கிடைச்சிட்டே" என அவள் தன் தாய் தங்கை தம்பியோடு பேசுவதை கூறிட..


அதில் முகம் மலர்ந்தவள் "ஆமா ஆமா அதான் எனக்குனு மூனு ஜீவன்கள் இருக்கே...நீ போனா போ நான் அவங்க கூட டைம் ஷ்பென்ட் பண்ணிக்குறேன்" என்றவளை அடிப்பாவி எனும் விதமாய் பார்த்து வைத்தாள் சாக்ஷிதா...


"சரி நீ சொன்னா அட்ரெஸ் இங்க இருந்து கொஞ்சம் தொலைவா இருக்கு..உனக்கு போய் வாரது சிரமமா இருக்குமே" என்க..


"ம்ம் பஸ்ல போய் மேனேஜ் பண்ணிக்குவேன் அதவிடு.." என்றாள்..


"ம்ம் நீ பஸ்ல எல்லாம் போகத் தேவையில்லை உன்கிட்ட தான் லைசன்ஸ் இருக்கு தானே..சோ என் வண்டியில போ" என்றவள் அவள் ஏதோ மறுப்பு கூற முன் "எனக்கு வீட்லயிருந்து ஹாஸ்பிடல் பக்கம் தான் நான் நடந்து கூட வந்துடுவேன் நீ ஸ்கூட்டில போ...போற" என முடிவாய் முடித்திட அதற்கு மேல் பேசமுடியாது அமைதியாகிப் போனாள்..


.....

 

Fathi habi

Member
Wonderland writer
அடுத்தநாள் காலை இருவரும் கிளம்பிட ஸ்வேதாவிடம் விடைபெற்று அவள் வண்டியை கிளப்பிச் சென்றாள்..

அந்த சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்தவளுக்கோ திடீரென்று வண்டியில் ஏற்பட்ட கோளாறால் கட்டுப்பாட்டை இழந்திட வண்டியை நிறுத்த முடியாது தடுமாறியவளோ அங்கே வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மோதி கீழே சரிந்திட தானும் வீழ்ந்தாள் சாக்ஷிதா..

நல்ல வேளையாய் அதிக வேகத்தில் வராது மிதமான வேகத்தில் வந்ததாலும் தலைக்கவசம் அணிந்திருந்ததாலும் பெரிதாய் அடியேதும் படாவிடினும் கீழே வீழ்ந்ததில் ஆங்காங்கே கைகளில் சிறுசிராய்ப்புகள் ஏற்பட்டிருக்க மெல்லத் தடுமாறியபடி எழுந்து நின்றாள்..

அவள் கீழே வீழ்ந்ததைக் கண்டதும் சிலர் அங்கே கூடிட ஒரு பெணோ தண்ணீரை கொடுத்து குடிக்க வைத்திட அருந்திக் கொண்டிருந்தவள் பின்னே வந்து நின்றவனோ கத்தத் தொடங்கினான்..

" ஹேய் இடியட் அறிவில்ல நீ விழுந்து சாக ஏன் வண்டிதானா கிடைச்சிச்சா.. ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியல..சும்மா நிற்குற வண்டிலையே இப்பிடி கொண்டு மோதுற உனக்கெல்லாம் யாரு லைசன்ஸ் கொடுத்தா இடியட்..படிக்குற வயசில வண்டிய எடுத்துகிட்டு ஊர் சுத்த வேண்டியது பிறகு இப்பிடி ஆகி சாக வேண்டியது.. என்றவனின் திட்டுக்கு என்ன பதில் கூறுவது எனத் தெரியாது திருதிருவென முழித்து நின்றவளுக்கு அவன் முகம் பார்க்கவும் பயமாகவே இருந்தது.. எங்கே திரும்பினாள் அடித்துவிடுவானோ...இத்தனை பேச்சு பேசுபவன் அடிக்கவும் கூடும் என்றே அவனுக்கு முதுகு காட்டி குனிந்து நின்றாள்..

அவனுக்கோ ஏற்கனவே இருந்த கோபம் அவள் அமைதியில் மேலும் எகிறிட..
"ஹேய் உன்னதான் காது கேக்குதில்லையா இங்க பாரு" என்றிட இதற்கு மேல் அமைதியாய் இருப்பது சரியில்லை என்றுணர்ந்தவளும் தயக்கத்துடன்அவன் பக்கம் திரும்பியவள்..

"ஸாரி ஸார் என்னோட மிஸ்டேக் தான் வண்டியில் ஏதோ ப்ரோப்ளமாகிட்டு அதான் கன்ட்ரோல் பண்ண முடியல" என தன் தப்பிற்கு மன்னிப்பை வேண்டி அவன் முகம் நோக்கி நிமிர்ந்தவள் விழிகளோடு சிக்கிக் கொண்டது அவன் விழிகள்..

என்னவென்று சொல்லமுடியா ஓர் உணர்வில் அவன் சிக்கிக் கொள்ள அவளோ அவன் அசையா பார்வை உணர்ந்து எங்கு இன்னும் கோபம் கொள்வானோ எனப் பயந்தவளாய் "ஸாரி ஸார்...தப்பு என்மேல தான் உங்க கார்ல ஏதும் டேமேஜ்னா அதுக்கு நான் பணம் கொடுக்கிறேன்..ப்ளீஸ் இத பெருசுபடுத்த வேணாம்" என கெஞ்சலாய் கேட்டிட ..அதில் மீண்டவன் ஏதோ பேச வாயெடுக்கும் முன்னே அங்கு வந்த கிஷோரோ நண்பனை பிடித்துக் கொண்டவன் அவள்புறம் திரும்பி .."இட்ஸ் ஓகே இனி கவனமா போங்க" என்றுவிட்டு நண்பனை அழைத்துக் கொண்டு வண்டியில் ஏறி வண்டியை செலுத்திட..

அஜய்யின் விழிகளோ அவன் விம்பம் அவன்கண்ணை விட்டு மறையும் வரை அவளிருந்த திசை பக்கமே நிலைத்திருந்தது...




தொடரும்...
 
Status
Not open for further replies.
Top