அத்தியாயம் -01
அதிகாலை வேளை சூரியன் தன் வேலையிலிருந்து ஒதுங்கிக்கொள்ள அங்கே கார் முகில்களும் கடும் மழை துளிகளும் தங்கள் ஆட்சியை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் அந்த மழைக் காலநிலையில் வீசிய குளிர்காற்றின் குளுமையில் போர்வையை நன்றாக இழுத்து போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தாள் சாக்ஷிதா..
பிறைநெற்றி.. மூடிய மீன்விழிகள் தூங்கும் போது சற்றே பிளந்திருந்த மெல்லிய இதழ்கள்..வட்ட முகம் மஞ்சள் நிறம் என அழகி என்ற வார்த்தைக்கு பொறுந்திய அழகோடு இதமான காலைவேளையில் உறங்கிக் கொண்டிருந்தவள் தூக்கத்தைக் களைக்கவென சத்தமிட்டுக் கொண்டிருந்தார் அவள் அன்னை பார்வதி..
"ஏய் எழுந்திரிடி இன்னுமாடி தூங்கிட்டு இருக்க" என்று தன் மூத்த மகளின் துயில் களைக்க சத்தமிட்டார் பார்வதி..
கணவனை இழந்து தனித்திருந்த போதிலும் தனியொருவராக தன் பிள்ளைகளை நன்றாக வளர்த்து தாய்க்குத் தாயாய் தோழிக்குத் தோழியாய் தன் பிள்ளைகளோடு சேர்ந்து லூட்டி அடிக்கும் கலகலப்பானவர்..
தாயின் குரலைத் தொடர்ந்து ஒலித்தது அவ்வீட்டின் கடைக்குட்டி இளவரசியின் குரல்..
"ம்மா ம்மா அவள எழுப்புமா லேட் ஆகுது" என்று தாயிடம் கெஞ்சினாள் அக்ஷிதா.. தமக்கைக்கு ஈடான அதே அழகு மஞ்சள் நிறம் வட்டமுகம் என அழகியாய் மின்னும் வாயாடி..
தாய் மகள் இருவரும் பேசிக் கொண்டிருக்க துள்ளளான குரலோடு வந்தான் அவன் ஆரவ்..
"நான் ரெடியாகிட்டேன்" என்று தன் ஆடையை சரி செய்தவாறு வந்தவன் நெடுவென வளர்ந்த உயரம் ஒல்லிய உடல்வாகு குழந்தை மனம் கொண்ட வளர்ந்த குழந்தை..
மூவரும் தாயாராகி வந்திருக்க இன்னுமே உறக்கம் களையாத பெண்ணவளை பார்த்து முழித்து நின்றனர்..
குடும்பமாய் அருகிலிருக்கும் கோவில் செல்ல முடிவெடுத்து தயாராகி வந்தவர்களுக்கு இன்னுமே தூக்கத்தை தொடரும் பெண்ணவளை எப்படி எழுப்புவது என தெரியாமல் நின்றனர்..
பாருவோ சின்ன மகளிடம் "அக்ஷி குட்டி போய் அக்காவ எழுப்புடா" என்ற தாயை முறைத்தவள்..
"ம்மா என்னால முடியாது இங்க பாரு போன முறை நான் எழுப்பினதுக்கு உன் பொண்ணு தந்த பரிசு இன்னுமே அப்படியே இருக்கு என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரும் இத பார்த்துட்டு எப்பிடி கிண்டல் பண்ணாங்க தெரியுமா??" என்று தன் உதட்டை பிதுக்கி அதில் உள்ள காயத்தை காட்டிட பாருவோ பவமாய் முழித்தார்..
அவர் அறிந்த ஒன்று தானே தன் மூத்தமகளை தூக்கத்தில் இருந்து யாரும் எழுப்பினாள் அவர்களின் உதட்டை கடிக்கும் விசித்திர பழக்கம் உடையவள் தான் அவள் என்று..
பாவமாய் சின்ன மகளை பார்த்த பார்வதியோ மகனிடம் "ஆரவ் கண்ணா நீயாச்சும் போய் எழுப்புடா" என்க..
அவனோ ஓரடி பின்நகர்ந்தவன் பாவமாய் "ம்மா மீ பாவம் மா" என்றான்..
இருவரும் மறுத்திட "அப்போ யாருதான் அவள எழுப்புறது"என்று சோகமாய் கூறிய தாயிடம்..
அக்ஷியோ"வெய்ட் பண்ணுவோம் அதுக்குன்னு ஒரு பலியாடு சிக்காமலா போகும்" என
அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாக்ஷியின் இரண்டு உயிர்த் தோழிகள் காவ்யா காயத்ரி இருவரும் வீடு நுழைந்தனர்..
வீட்டினுள் நுழைந்தவர்களை கண்கள் மின்ன பார்த்த அக்ஷியோ தாயிடம் "ம்மா நான் சொன்னன்ல பலியாடு சிக்கிடுச்சி ஒன்னு இல்ல இரண்டு அங்கே பார்" என இருவரையும் கை காட்டினாள்..
அங்கோ "ஹாய் பாரும்மா ஹாய் இரட்டைக் கதிரே" என்றவாறு உள் நுழைந்தனர் இருவரும்..
"ஹாய் குட்டிங்களா வாங்க" என்ற பார்வதி அவர்களை அமர வைக்க ..
அக்ஷி ஆரவ் இருவரும் கள்ளச்சிரிப்புடன் "ஹாய் அக்காஸ் வாங்கோ வாங்கோ வாங்குறதுக்கு வாங்கோ என்றனர்..
காவ்யாவோ "என்ன உங்க இரண்டுபேரோட வரவேற்பெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு வட் இஸ் த மேட்டர் என சந்தேகமாய் கேட்டவளிடம்..
"ஹிஹி அதுவா அக்கா உங்க உயிர் தோழி இன்னும் எழுந்திரிக்கல அதான் நீங்க போய் எழுப்பி கூட்டிடு வருவிங்கன்னு வரவேற்குறோம்.."என்றிட
காயத்ரியோ "என்னது அந்த கும்பகர்ணி இன்னும் தூங்குறாளா..அவள என வேகமாய் உள்நுழைந்த சில நிமிடத்திலே "ஆஆஆ" என்ற அவளின் அலறல் சத்தம் கேட்க.. அனைவரும் உள்ளே செல்ல அங்கு காயத்ரி இருந்த நிலைகண்டு கொள்ளென சிரித்தனர்..
கீழ் உதட்டை தடவிய படி காயத்ரி விழுந்து கிடக்க..அதை பார்த்து சிரித்து வைத்தனர்..
சாக்ஷியோ அப்பாவி போல கண்ணை கசக்கிக் கொண்டு அரைத் தூக்கத்தில் "அம்மா காபி" என்றவள் சிரிப்பு சத்ததில் நன்றாய் விழி விரித்து
"ஹேய் என்னப்பா எல்லாரும் சிரிக்கிறிங்க.. என்றவள் அங்கே நின்ற தோழியை கண்டு "ஹேய் கவி நீ எப்போடி வந்த எங்க காயு அவ வரல.." என்க அனைவரின் பார்வையும் கீழே பார்ப்பதை கண்டு தன் பார்வையையும் திருப்பியவள் கீழிருந்த தோழியை கண்டாள்..
"ஹேய் காயு கீழே என்னடி பண்ற ஏதாச்சும் விழுந்துடிச்சாடி" என்று அப்பாவி போல கேட்டபடி அவள் அருகில் செல்ல அவள் தலையில் கொட்டி வைத்தாள் காயத்ரி..
"ம்மாஆ ஏன்டி குரங்கு இப்டி பண்ற வலிக்குதுடி" என தலையை தேய்த்திட காயத்ரி பொங்கினாள்..
"நானாடி குரங்கு நீ தான்டி ரெத்த காட்டெறி, குட்டி சாத்தான்" என்று திட்டியவள் வலித்த உதட்டை தேய்க்க அப்போதுதான் புரிந்து கொண்டாள் என்ன நடந்திருக்கும் என்பதை..
"அச்சோ சாரிடி உனக்கு தான் தெரியும்ல தூக்கத்துல இருந்து எழுப்பினா இப்பிடி பண்ணுவன்னு..அப்புறம் எதுக்குடி வந்த" என்றவளிடம் முழித்தவள்..
"அ.. அது உன்ன எழுப்புற ஆர்வக்கோளாறுல வந்துடன்டி" என்றாள்..
இவர்கள் இருவரின் சம்பாஷனையும் கேட்டுக் கொண்டிருந்த மற்ற நால்வரும் சிரித்துக் கொண்டனர்..
..
டேய் கார்த்தி எங்கடா இவன காணல.. நேரமாச்சுடா வருவானா மாட்டானா என்ற சஞ்சய்யின் பதட்டத்திற்கு மாறாக
"கூல் மச்சான்...நம்ம கிங் எப்போவுமே ஷார்ப்ஆ வந்துடுவான்" என்ற கிஷோரை..சஞ்சய் கார்த்தி இருவரும் முறைத்து வைத்தனர்..
"டேய் கார்த்தி அவனுக்கு போன போடு" என்க அழைப்பை விடுத்தான் கார்த்தி..மறுபுறம் அழைப்பு ஏற்கப்பட
"டேய் சீக்கிரம் வாடா எல்லோரும் உனக்காகதான் வெய்ட் பண்றோம்"
"ஓன்தவே மச்சான்" என்று அழைப்பை துண்டித்தான்..
நிமிடங்கள் நகர புழுதியை கிளப்பியபடி வந்து நின்றது டுகாட்டி வண்டி..அதிலிருந்து தன் ஹெல்மேட்டை கழட்டியபடி அடங்கா சிகை காற்றிலாட அதை கரங்களால் கோதிவிட்டபடி நடந்து வந்தான் அஜய்தேவ்..
அவனது மிடுக்கான தோற்றமே அவன் செல்வச்செழிப்பை எடுத்துக் காட்டியது..கண்ணில் மின்னிய திமிரும்,அலட்சியமுமே நான் யாருக்கும் அடங்காதவன் என்பதை காட்டினாலும் அவனையும் அடக்கும் வல்லமையுடையவர் ஒருவர் உண்டு என்றால் அது அவன் தாய் லக்ஷ்மி மட்டுமே.. தாயின் அமைதியான அன்பிற்கு மட்டுமே அவன் திமிரும் கர்வமும் தலைவணங்கும்..
தன்சிகையை கோதியவாறு தனக்காக காத்திருக்கும் நண்பர்களை நோக்கிச் சென்றவன்"ஹாய் ஹேய்ஸ்.."என்க..அவர்களும் "ஹாய் மச்சான்" என்றனர்..
அனைத்தையும் ஓர் நொடி தன் கூர்விழிகளால் அளந்தவன்
"எல்லாம் ரெடியாடா ?? ஆரம்பிக்கலாமா" என்று கேட்டிட..அதற்காகவே காத்திருந்தவர்கள் போன்று
"எல்லாம் பக்காவா ரெடி மச்சான்" என்றனர்..
"இதுல மட்டும் ஜெயிச்சிட்டன்னு வை பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்டா" என்ற நண்பனிடம் திரும்பிய அஜய்யோ அழுத்தமாய்
"பணம் முக்கியமில்ல மச்சி நமக்கு கிக்கு தான் முக்கியம் அதுமட்டுமில்ல இந்த அஜய் தேவ் யாருன்னு அவனுங்க தெரிஞ்சிகனும்டா."என்றவன் தன் பைக்கை கிளப்பி போட்டி நடக்கும் இடம் நோக்கிச் சென்றான்...
ஆம் அங்கு நடைபெற இருப்பது பைக்ரேஸ்..அதில் ஒருவனாய் களமிறங்கியிருந்தான் அஜய் தேவ்..
போட்டியும் ஆரம்பமாக சிறிது நேரத்திலே அந்த இடம் முழுவதும் "ஹூஹூஹூ அஜய் அஜய்"
என்ற கூக்குரல் ஒழிக்க வெற்றிக் கொடியை கையில் ஏந்தியபடி வந்தவனை நோக்கி ஓடியது மொத்தக் கூட்டமும்..
நண்பர்களோ"ஹேய் மச்சான் ஜெய்ச்சிட்டடா" என்ற குதூகலத்தோடு அவனை தூக்கி தூக்கி கொண்டாடியபடி
அவனோடு போட்டியிட்ட மற்றைய பசங்களையும் கலாய்த்துவிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் அங்கிருந்து நண்பர்கள் பட்டாளத்து கிளம்பியவர்கள் வெற்றியை கொண்டாடு முகமாக நண்பர்கள் நால்வரும் தங்களது பிளாட்டிற்கு வந்தனர்..
"டேய் ரொம்ப ஹெப்பியா இருக்குடா"என்ற கிஷோர் மகிழ்ச்சியாய் கூறியவன் கையிலிருந்த பியரை வாயில் கவிழ்த்துக் கொண்டான்..
சஞ்சய்யோ"இத கண்டிப்பா செலிப்ரேட் பண்ணியே ஆகணும்டா. லெட்ஸ் என்ஜோய தி பார்ட்டி" என்று தன் கையிலிருந்த பீரை திறந்து விட அதுவோ பொங்கி வழிந்தது..
நண்பர்கள் நால்வரும் ஆட்டம் பாட்டம் என சந்தோஷமாய் கொண்டாடியவர்கள் பின் களைத்துப் போய் இருக்கையில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க..
பேச்சின் நடுவில் "சந்ருவும் இப்போ இருந்து இருந்தா இதே போல ரொம்ப என்ஜாய் பண்ணி இருப்பான்ல" என்ற கார்த்தியின் வார்த்தையில் அத்தனை நேரமிருந்த சந்தோஷம் வடிய அனைவரும் அமைதியாகினர்..
அவர்களது அந்த மௌனமே அவர்கள் மனதின் வலியை எடுத்துக் காட்டியது..
அஜய்யோ அந்த மௌனத்தை கலைத்தவனாய் "சரி மச்சான் நான் கிளம்புறன்டா ரொம்ப டயர்டா இருக்கு நீங்க என்ஜாய் பண்ணுங்க." என்றவாறு எழ முயல அவனை தடுத்த
சஞ்சய்யோ" நீ இல்லாம நாங்க மட்டும் எப்போடா என்ஜாய் பண்ணியிருக்கோம் வாடா" என்க..
அவனோ மறுப்புடன்..
"இல்ல மச்சான் நான் பேறன்டா நாளைக்கு பார்க்கலாம்" என்றவன் நண்பர்களின் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றான்..
தன்னால் தான் நண்பன் பாதியில் சென்றுவிட்டானோ என்ற வருத்ததில் கார்த்தியோ "ஸாரி டா எல்லாம் என்னால தான்" என சோகமாய் கூறிட..
அவனை சமாதானம் செய்தவனாய் "விடுடா.. சந்ரு இல்லங்குறது நமக்கு எவ்வளவு கஷ்டமோ அத விட பல மடங்கு கஷ்டத்தை அஜய் தான் அனுபவிக்குறான்.."என்ற சஞ்சய்யையும் சோகமாய் அமர்ந்திருந்த கார்த்தியையும் மாறி மாறி பார்த்த கிஷோரோ சூழ்நிலையை மாற்றும் பொருட்டு
"அட போங்கடா பீல் பண்ணியே சரக்கடிக்கிற சான்ஸ் எல்லாதையும் கெடுத்திடுங்கடா படுபாவிங்களா" என்று சோகமாய் கூற அவர்களோ அவனது கேலியுணர்ந்து அவனை துவைத்தெடுத்தனர்..
தொடரும்..