ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கனவுகள் கனலாய் மாறுமா! - கதை திரி

Status
Not open for further replies.

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 15







ஆதிரனை கொஞ்சமும் எதிர்பார்க்காதவளாய் யாழினி அதிர்ந்துப் போய் நிற்க, ஆதிரனோ தன் கழுகுப் பார்வைக் கொண்டு அவளையேதான் ஆழ்ந்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.



"அது... அது வந்து... நா.. நீங்க... அது..." என்று யாழினி தடுமாற, "என்ன இப்போதான் பேச கத்துக்குறியா?" என்று ஒற்றைப் புருவத்தைத் தூக்கி மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறுக் கேட்டான் அவன்.



"அது... உங்கள பத்திதான் தேஷ்வா. உங்கள மாதிரி பெரிய ஆளு கூட என்னை மாதிரி ஒரு வேலைக்காரிய சேர்த்து வச்சு பேசியிருக்காங்களே! அந்த மன ஆதங்கத்தை தான் என் பழைய கிட்சன் மேட்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்" என்று வராத கண்ணீரை அவள் துடைத்துக்கொள்ள, "இப்படியெல்லாம் நீ எங்கதான் பேச கத்துக்குறியோ?" என்று நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்ட ஆதிரன், "முக்கியமான அகௌன்ட்ஸ் செக் பண்ணணும், நீயும் போய் ஹெல்ப் பண்ணி வேலைய கொஞ்சம் கத்துக்கோ!" என்றுவிட்டு அங்கிருந்து நகரப் போனான்.



ஆனால், "தேஷ்வா..." என்ற அழைப்பு அவனை நிறுத்த, யாழினியை திரும்பி கேள்வியாகப் பார்த்தான் ஆதிரன்.



"இல்லை.. நீங்க தப்பா எடுக்கலன்னா என்னை கொஞ்சம் வீட்டுல ட்ரோப் பண்றீங்களா? உடம்புக்கு ரொம்ப முடியல, நாளைக்கு வேணா நான் அந்த கணக்கு வழக்கெல்லாம் பார்த்துக்குறேன்" என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு அவள் சொல்ல, இடது புருவத்தை நீவி விட்டவாறு, "என்னை பார்த்தா உனக்கு என்ன கேனயன் மாதிரி தெரியுதா?" என்று கேட்டான் அவன் எரிச்சலாக.



"ச்சே ச்சே! நான் அப்படி சொல்லல. எல்லாமே உதவிதானே! பண்ண பாவத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுங்க" என்று கடைசி வசனத்தை மட்டும் அவனின் காதிற்கு கேட்காதவாறு யாழினி முணுமுணுக்க, அவளை முறைத்துப் பார்த்தவன், "வண்டில ஏறு!" என்றுவிட்டு கார் கதவை திறந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டான்.



'அப்பாடா! வேலையில இருந்து தப்பிச்சாச்சு. என்னை போய் வேலை பார்க்க சொல்றானே!' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டவள், அவனுக்கு பக்கத்தில் சென்று அமர்ந்துக்கொள்ள, காரை மின்னல் வேகத்தில் செலுத்தியவனோ அடுத்த பத்தே நிமிடங்களில் ஒரு மாலின் முன்னே காரை நிறுத்தினான்.



யாழினியோ கார் கண்ணாடி வழியே அந்த பெரிய மாலை ஏதோ அதிசயத்தைப் பார்ப்பது போல் பார்க்க, "காருக்குள்ளயே இரு, எனக்கு கொஞ்சம் ஷாப்பிங் பண்ணணும், சீக்கிரமா வந்துடுவேன்" என்றுக்கொண்டே காரிலிருந்து இறங்கப் போனவன் மீண்டும் அவள் புறம் திரும்பி, "உள்ளயே இரு" என்று அழுத்தமாக சொல்லிவிட்டு இறங்கிச் செல்ல, அவனை முறைத்துப் பார்த்தவளுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.



'இவன் சொன்னா நான் கேக்கணுமா! அவ்வளவு சீக்கிரம் இவனுக்கு சாதகமா நான் நடந்துக்குவேனா என்ன!' என்று பற்களைக் கடித்துக்கொண்டு நினைத்தவள், விஷம சிரிப்போடு காரிலிருந்து இறங்கி

ஆதிரனை நோக்கிச் செல்ல, அவனோ அலைப்பேசியை நோண்டியவாறு எஸ்கலேட்டரை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்தவன், திடீரென தனக்கு பின்னால் கேட்ட, "தேஷ்வா..." என்ற குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.



"நீயா!" என்று அவன் அதிர்ந்துப் போய் கேட்க, "ஹிஹிஹி... நான் இந்த மாதிரி இடத்தை முதல் தடவை பார்க்குறேன். அதான் ஒரு ஆர்வத்துல..." என்று இழுத்த யாழினி வாயைப் பிளந்துக்கொண்டு சுற்றிமுற்றி பார்க்க, இவனுக்கோ கோபம் ஏகத்துக்கும் எகிறியது.



"ஹவ் டேர் யூ.. உன்னை கார்லதானே இருக்க சொன்னேன், நான் சொல்றதை கேக்குற எண்ணம் உனக்கு கொஞ்சம் கூட இல்லையா என்ன! இல்லன்னா... மேடமுக்கு என் கூட சேர்த்து வச்சு பேசுறது இனிக்குதோ?" என்று ஆதிரன் பற்களைக் கடித்துக்கொண்டு கேட்க, "நினைப்புதான் பொழப்ப கெடுக்குமாக்கும்!" என்று நொடிந்துக்கொண்டவள், "நிஜமாவே உள்ள எப்படி இருக்கும்னு பார்க்குற ஆசையிலதான் வந்தேன், நீங்க நம்பலன்னாலும் அதான் நெசம்" என்றுவிட்டு முன்னே நடந்தாள்.



'ஷீட்!' என்று கோபத்தில் காலை தரையில் உதைத்துக்கொண்டு அவளை விட்டு சற்று தள்ளியே இவன் அவளின் பின்னால் செல்ல, எஸ்கலேட்டரின் முன்னே சட்டென நின்றவள், "அடங்கொப்புரானே! இதுல எப்படி ஏறி போறாங்க, விழுந்துர மாட்டோமா என்ன" என்று சற்று சத்தமாகவே கேட்க, அவளை கடந்து சென்றவர்களோ அவளை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாகப் பார்த்துவிட்டு சென்றனர்.



'தனக்கும் இவளுக்கும் சம்பந்தமே இல்லை' என்பது போல் ஆதிரனும் அவளைக் கடந்து அதில் ஏறிக்கொண்டு எங்கோ பார்த்துக்கொண்டு செல்ல, "ஏங்க... தேஷ்வா... என்னை விட்டுட்டு உங்க பாட்டுக்கு போறீங்க" என்று இடம் பொருள் பாராது யாழினி கத்த, வேகமாக சுற்றிமுற்றிப் பார்த்தவன், "ஷட் அப் இடியட், அது வரும் போது வேகமாக ஏறிக்க, அதுவே உன்னை கொண்டு வந்து மேல விடும்" என்றான் கடுப்பாக.



அவனைப் பாவமாகப் பார்த்தவள், 'யாராவது உதவிக்கு வர மாட்டார்களா?' என்று கைகளைப் பிசைந்துக்கொண்டு பயந்தபடி சுற்றிமுற்றி பார்த்தாள். ஆனால், யாருமே கண்டுகொள்வது போல் தெரியவில்லை.



வேறு வழியில்லாமல் இருக்கும் எல்லா கடவுள்களையும் வேண்டியவாறு அணிந்திருந்த சேலையை உயர்த்தி ஒரே பாயாக பாய்ந்த யாழினி, மேலே சென்றதும் மீண்டும் தரைக்கு பாய்ந்து இறங்கி ஏதோ பெரிதாக சாதித்தது போல் உணர்ந்துக்கொண்டாள்.



அவள் வந்த விதத்தை மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டியவாறு பார்த்துக்கொண்டு நின்ற ஆதிரன், "ஹிஹிஹி..." என்று இவள் அசடுவழியவும், "ஆல் மை ஃபேட்!" என்று எரிச்சலாக விழிகளை உருட்டியவன், "என்னை விட்டு தள்ளியே வா! மானம் போகுது" என்றுவிட்டு முன்னே நகர்ந்தான்.



ஆதிரன் அங்கிருந்த கடைகளுக்குள் நுழைந்து தனக்குத் தேவையான பொருட்களை வாங்க ஆரம்பிக்க, அவன் சொன்னது போல் அவனை விட்டு தள்ளி நின்றவாறு அவன் போகும் இடங்களுக்கு எல்லாம் பின்னாலேயே சென்றாள் யாழினி.



சரியாக, அவளுக்கு ஒரு அழைப்பு வர, அதில் தெரிந்த சித்தார்த்தின் எண்ணைப் பார்த்தவள் அழைப்பையேற்று பேசியவாறு ஆதிரனின் விழிகளிலிருந்து மறைய, எதேர்ச்சையாக திரும்பியவனுக்கு தன் கண் பார்வையில் அவள் இல்லாததைப் பார்த்ததும் பக்கென்று இருந்தது.



"ஹெலோ சித்தார்த், என்ன விஷயம்?" என்ற யாழினி, "ஹெலோ யாழினி, பரவாயில்லையே! அந்த ஆதிரன் கூட எல்லாம் ஷாப்பிங் வார அளவுக்கு நீங்க நெருக்கமோ?" என்று சித்தார்த் சொன்னதும், வேகமாக தலையை நிமிர்த்தி சுற்றிமுற்றிப் பார்த்தாள்.



"அப்போ... அப்போ நீங்க இங்கதான் இருக்கீங்களா?" என்று அங்குமிங்கும் தேடியவாறு அவள் பாட்டிற்கு முன்னே செல்ல, யாழினியைத் தேடி வந்த ஆதிரனோ அவள் செல்லும் திசையைப் பார்த்துவிட்டு, பதறியேவிட்டான்.



"யாழ்..." என்று கத்தியவாறு ஆதிரன் அவளை நோக்கி ஓட, "ஹெலோ... ஹெலோ சித்தார்த் பேசுங்க... ஹெலோ..." என்று கத்திக்கொண்டு கீழே இறங்கிக் கொண்டிருக்கும் எஸ்கலேட்டரை கவனிக்காமல் அதனை நோக்கிச் சென்ற யாழினி, அந்த படிகளில் காலை வைக்கப் போக, அடுத்தகணம் அவளின் முழங்கையைப் பற்றியிழுத்தது ஒரு வலிய கரம்.



அவளோ அந்த ஆடவன் இழுத்த வேகத்தில் அவன் மார்பில் மோதி தடுமாறி விழப் போக, அவனோ அவளின் இடையை வளைத்து தாங்கிப் பிடித்துக்கொண்டான். சில கணங்களில் நடந்து முடிந்ததை யாழினி சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.



தலையை நிமிர்த்தி தன்னை தாங்கியிருந்தவனை அவள் பார்க்க, அவளுடைய விழிகளையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டிருந்தான் சித்தார்த். அதேநேரம் ஆதிரனுக்கு இருவரும் ஒருவரையொருவர் பார்த்தபடி கட்டியணைத்திருப்பது போலிருந்த காட்சியைப் பார்த்து ஒருகணம் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.



அவன் மெல்ல இருவரையும் நெருங்க, சித்தார்த்தோ தன்னை மீறி அவளுடைய விழிகளையே பார்த்தவாறு அவளிதழை நோக்கி குனிய, முதலில் சுதாகரித்தது என்னவோ யாழினிதான்.



உடனே அவனை விட்டு அவள் விலகி நிற்க, அப்போதுதான் தான் செய்ய போன காரியத்தை உணர்ந்தவன் விழிகள் தடுமாற, "அது வந்து யா..." என்று அவள் பெயரை சொல்ல வர, சரியாக அங்கு வந்து நின்றான் ஆதிரன்.



அவனைப் பார்த்ததுமே யாழினி, "ரொம்ப நன்றிங்க, நீங்க இல்லன்னா நான் அவ்வளவுதான்" என்று யாரென்றே தெரியாதது போல் பேச, புருவங்களை குழப்பத்தில் நெறித்த சித்தார்த்திற்கு ஆதிரனை கவனித்ததும்தான் விடயம் மூளைக்கு உரைத்தது.



"பரவாயில்ல, இருக்கட்டும். எனிவேய் ஐ அம் சித்தார்த்" என்று அவன் கைக்குலுக்க கரத்தை நீட்ட, யாழினியும் தன் பெயரை சொல்லி சித்தார்த்தின் கரத்தோடு தன் கரத்தைக் கோர்க்க, இறுகிய முகமாக இருவரையும் மாறி மாறிப் பார்த்திருந்த ஆதிரனுக்கு அத்தனை எரிச்சலாக இருந்தது.



கோப பெருமூச்சை இழுத்துவிட்டவன், "ஹ்ர்ம் ஹ்ர்ம்.. ஹெலோ மிஸ்டர் சித்தார்த், நைஸ் டூ மீட் யூ. உங்க அப்பாவ ரொம்ப நல்லாவே தெரியும்" என்று வராத புன்னகையை வரவழைத்துச் சொல்ல, "நைஸ் டூ மீட் யூ டூ ஆதிரன், அரசியல்ல நம்ம கட்சிங்க எதிரியா இருந்தாலும் பர்சனல்லா நான் உங்க ஃபேன்" என்ற மற்றவன் அவனோடு கைக்குலுக்க, யாழினியோ எதுவுமே தெரியாதது போல் முகத்தை வைத்திருந்தாள்.



"இதுக்கப்பறமாச்சும் ரொம்ப ஜாக்கிரதையா இருங்க, என்ட் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. உங்க பெயர் மாதிரி நீங்களும் ரொம்ப அழகா இருக்கீங்க யாழினி" என்று அவளையே ரசித்தவாறு சித்தார்த் சொல்ல, ஏனோ பெண்ணவளுக்கே அவனுடைய பேச்சில் சற்று வித்தியாசம் தெரிந்தது.



"ஹிஹிஹி... ரொம்ப நன்றி" என்று அவள் அசடுவழிந்தவாறு சொல்ல, "நாம கெளம்பலாம் யாழ்" என ஏனென்று புரியாத கோபத்தில் அவசரப்படுத்தினான் ஆதிரன்.



"ஓஹோ... உங்களுக்கு தெரிஞ்சவங்கதானா?" என்று ஆச்சரியமாக விழிகளை விரித்த சித்தார்த், "மறுபடியும் நாம எப்போ மீட் பண்ணலாம்?" என்று மீண்டும் அவளிடமே ஒரு கேள்வியைக் கேட்டு வைக்க, ஆதிரனோ பற்களைக் கடித்துக்கொண்டு பொறுக்க முடியாமல் கை முஷ்டியை இறுக்கினான்.



"நான் முன்னாடி போறேன், சீக்கிரமா வா" என்றுவிட்டு ஆதிரன் முன்னே வேகமாக செல்ல, "அது... அது வந்து... பார்க்கலாம்" என்றுவிட்டு விழிகளால் அலைப்பேசியை காண்பித்தவள் பின் வேகமாக ஆதிரனின் பின்னே ஓட, ஏனோ சித்தார்த்தின் பார்வையோ யாழினியின் மீது ரசனையாகப் பதிந்திருந்தது.



அங்கிருந்து வெளியேறி இருவரும் காரில் செல்ல, தன் மொத்த கோபத்தையும் கார் ஸ்டீயரிங்கில் காண்பித்து அவன் சென்ற வேகத்தில் இவளுக்குதான் உயிர் பயமே வந்துவிட்டது.



மின்னல் வேகத்தில் செலுத்தி அவள் தங்கியிருக்கும் வீட்டின் முன்னே ஆதிரன் காரை நிறுத்த, "கொஞ்சம் மெதுவாதான் போனா என்ன! ரொம்ப பயந்துட்டேன்" என்று பயத்தில் மூச்சு வாங்கியவாறு சொன்ன யாழினியை, 'வெட்டவா குத்தவா' என்ற ரீதியில் பார்த்து வைத்தான் அவன்.



"ஷட் அப் யூ இடியட்! மொதல்ல வண்டிலயிருந்து இறங்குடீ" என்று ஆக்ரோஷமாக அவன் கத்த, திகைத்துப் போய் அவனைப் பார்த்தவள் வண்டியிலிருந்து இறங்கிய அடுத்தகணம் அவளை திரும்பியும் பார்க்காது ஆதிரன் அசுர வேகத்தில் சென்றிருக்க, எதுவுமே புரியாமல் போகும் அவனை வெறித்துப் பார்த்திருந்தாள் யாழினி.



அடுத்தநாள்,



"எல்லாமே ரெடியா இருக்கு தஷ்வந்த், உங்க வீட்டுக்கு தெரியாமதான் இதை பண்ண போறியா?" என்று அலைப்பேசியில் தஷ்வந்துடைய நண்பன் கேட்க, அவனிடமோ பதிலில்லை.



"தெரியலடா, ஆனா என்னால இதுக்கு மேல முடியலடா. எனக்காக எதுவும் இங்க கிடைக்க போறதில்லன்னு தெரிஞ்சிருச்சு. அப்பறம் எதுக்கு?" என்று அவன் சலித்துக்கொள்ள, "ஓகேடா, எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சுக்கோ! என்ட், உன் அண்ணனுக்கு இது தெரியவே கூடாது" என்று அலெர்ட் செய்துவிட்டு அழைப்பைத் துண்டித்தான் அவன் நண்பன்.



தஷ்வந்திற்கு மனம் முழுக்க அத்தனை குழப்பமாக இருந்தது. தலையைத் தாங்கியவாறு யோசித்தவன், ஒரு முடிவு எடுத்தவனாக மாடியிலிருந்து ஹாலுக்கு வர, அங்கு உணவு மேசையில் அமர்ந்திருந்தாள் கௌரி.



ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு அவளுக்கு முன்னே இருந்த இருக்கையில் அவன் அமர, விழிகளை மட்டும் உயர்த்தி ஒரு பார்வைப் பார்த்துவிட்டு குனிந்துக்கொண்டாள் கௌரி.



இவனும் சாப்பிட்டுக்கொண்டே அடிக்கடி அவளையே பார்த்திருந்தவன், "இப்போ என்ன பண்றதா இருக்க, இங்கேயே குழந்தைய பெத்துட்டு இருக்கலாம்னு ஐடியால இருக்கியா?" என்று கேட்க, அவளோ அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை.



"உன்கிட்டதான் பேசிக்கிட்டு இருக்கேன் கௌரி, பதில் சொல்லு!" என்று தஷ்வந்த் சற்று குரலை உயர்த்திக் கேட்க, அவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு குனிந்துக்கொண்டவள், வாயைத் திறக்கவே இல்லை.



அவள் பதில் சொல்லாததில் இவனுக்குதான் பிபி எகிறிக்கொண்டே போக, "லுக் கௌரி, உன்கிட்ட ஒன்னு சொல்லணும். நா.. நான் இன்னும் டூ வீக்ஸ்ல..." என்று தஷ்வந்த் ஏதோ சொல்ல வர, திடீரென தன் அறைக் கதவைத் திறந்துக்கொண்டு வேகமாக தன் சகோதரனை நோக்கி வந்தான் ஆதிரன்.



"தஷ்வந்த்..." அவனுடைய குரல் கர்ஜனை போல் ஒலிக்க, மற்றவனுக்கோ தன் அண்ணனின் அழைப்பே சற்று வித்தியாசத்தை உணர்த்தியது.



"என்னாச்சு அண்ணா?" என்று அவன் காரணம் புரியாமல் கேட்க, "இதை நீ தெரிஞ்சுதான் பண்றியா, ஹவ் டேர் யூ தஷ்வந்த்?" என்று ஆதிரன் கத்தியதும், கௌரியோ புரியாமல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்தாள்.



தஷ்வந்திற்கு தன் சகோதரன் எதைப் பற்றி பேசுகிறான் என்று நன்றாகவே புரிந்தது. ஆனால், எப்படி கண்டுபிடித்தான் என்றுதான் ஆச்சரியமே!



"உனக்கு எப்.. எப்படி?" என்று அவன் சிறு தடுமாற்றத்தோடுக் கேட்க, "தஷ்வந்த், இங்க சின்னதா ஒரு அணு அசைஞ்சாலும் என் கண்ணுக்கு சிக்காம இருக்காது. ஐ ஹெவ் ஆல் த டீடெயில்ஸ்.. எதுக்காக எல்லாத்தையும் விட்டுட்டு நீ லண்டன் கெளம்பணும், அதுவும் சார் அங்கேயே செட்ல் ஆக போறதா கேள்விப்பட்டேன். நிஜமாவா?" என்று இரு புருவங்களையும் ஏற்றி இறக்கிக் கேட்டான் மற்றவன்.



கௌரியோ ஒருகணம் அதிர்ந்துப் போய் தஷ்வந்தைப் பார்க்க, அவனோ கௌரியை ஒரு பார்வைப் பார்த்தவன், "ஆமா, நான் போகத்தான் போறேன். என்னால இங்க இருக்க முடியாது" என்று எங்கோ பார்த்தபடி சொல்ல, "ஆர் யூ மேட், வாட்ஸ் யூவர் ப்ராப்ளம் தஷ்வந்த்? எந்த தைரியத்துல அந்த பொண்ண விட்டு போகலாம்னு முடிவு பண்ண, அவ வயித்துல வளர்றது உன் குழந்தை ஞாபகம் இருக்கா இல்லையா?" என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினான் ஆதிரன்.



"இப்போ இங்க இருந்து என்னை என்ன பண்ண சொல்ற? அப்பாவுக்கு அடுத்து கட்சிய நடத்தப்போறது நீதான்னு அவரே சொல்லிட்டாரு, எல்லாத்துக்கும் உன் பேச்சுதான், நீ சொல்றதுதான். அப்போ.. நான் எதுக்கு?" என்று கத்திய தஷ்வந்த், "என்ட், கௌரி விஷயத்துல தப்பு பண்ணிட்டேன்தான், அதுக்காக எல்லாம் இப்போவே குழந்தைக்கு அப்பாவாகி என் வாழ்க்கைய என்னால நாசம் பண்ண முடியாது. இவ்வளவு பேசுறியே, நீயும் ஒரு பொண்ண ஏமாத்தினல்ல, எனக்கு தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கியா?" என்று முகத்திற்கு அடித்தாற் போல் பேசி முடிக்க, ஒருகணம் ஸ்தம்பித்துப் போய் நின்றான் ஆதிரன்.



**************



கனவுகள் கனலாய் மாறுமா! முழுக்கதை இப்போ கிண்டல்ல Available ஆ இருக்கு. சோ... Happy Reading 😍😍



அரசியல்வாதியான நம் நாயகனுக்கும் சாதாரண பெண்ணான நம் நாயகிக்கும் இடையிலான காதலே இது. பக்கா ஆன்ட்டீ ஹீரோ நாவல்.



நாயகிக்கு பின்னாலிருக்கும் ரகசியங்கள், எதிர்பார்க்காத திருப்பங்கள் என காதல், காமம், வலி, துரோகம், பிரிவு, மர்மங்கள் கலந்த காரசாரமான காதல் கதையே கனவுகள் கனலாய் மாறுமா 😘


India link 👇

https://amzn.in/d/8MeULcz


Usa link 👇
https://a.co/d/07rBsdZ



-ஷேஹா ஸகி ✌
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 16







தஷ்வந்த் கேட்ட கேள்வியில் ஒருகணம் அதிர்ந்துப் போய் நின்றான் ஆதிரன்.



"கம் அகைன்..." என்று ஒரு அடி முன்னே வைத்து ஆதிரன் கேட்க, அவனின் பார்வையில் சற்று ஜெர்க்காகினாலும், "அது.. அது என்னை மட்டும் குத்தம் சொல்ற. இவ அப்பனோட ரகசியத்தை கண்டுபிடிக்க நீ யாழினிய யூஸ் பண்ணல, அவள நீ ஏமாத்தல? உன் மேல தப்ப வச்சுக்கிட்டா என்னை திருத்த வர்ற?" என்று அவனை நேருக்கு நேராகப் பார்க்க பயந்து எங்கோ பார்த்தபடி கேட்டான் மற்றவன்.



"தஷ்வந்த், நான் அவள காதலிக்கல" என்று இவன் அழுத்தமாக சொல்ல, "காதலிக்கல சரி.. யாழினி கூட நெருங்கி பழகாமலா இருந்த. அப்போ இது ஏமாத்துறது கிடையாதா?" என்று கேட்ட தஷ்வந்த், "நான் இந்த முடிவு எப்போவோ எடுத்தது. கௌரி விஷயத்துல நான் கட்டுப்பாட்டை இழந்துட்டேன். அதான் என்னோட தப்பு. ச்சே! அவ கர்ப்பமா இருக்குறான்னு தெரிஞ்ச அடுத்த செக்கன் அவள விட்டுட்டு போகணும்னு கூட நினைக்கல, கூடவே அந்த குழந்தைய ஏத்துக்கவும் முடியல. அபார்ட் பண்ணுன்னு பல தடவை சொன்னேன், அவ கேக்கல. அப்போ நான் என்ன பண்ண முடியும்? இதையெல்லாம் சாக்கா வச்சு என்னை கன்ட்ரோல் பண்ணாதீங்க. அப்பாகிட்ட சொல்லணும்னா கூட சொல்லிக்கோ, நான் போகத்தான் போறேன்" என்றான் அழுத்தமாக.



ஆதிரனோ அவனையே தீர்க்கமாக பார்த்திருந்தானே தவிர எதுவுமே பேசவில்லை. கௌரிக்கு விழிகளிலிருந்து விழிநீர் விடாமல் ஓட, அழுகையை அடக்கிக்கொண்டு கண்ணீரை துடைத்தெறிந்தவள் தனதறைக்குள் சென்று அடைந்துக்கொள்ள, போகும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் தஷ்வந்த்.



அதேநேரம், கட்சி ஆஃபீஸில்,



"இந்த கணக்கு வழக்கெல்லாம் ரொம்ப முக்கியம். இப்பொ செலவு பண்றதை எல்லாம் ஆட்சிக்கு வந்ததுமே மீட்டெடுக்க வேணாமா என்ன! அதனால எல்லாத்தையும் நோட் பண்ணிக்கோ!" என்று ரகுவீர் சொல்ல, யாழினியும் கையிலிருந்த புத்தகத்தில் அவர் சொன்னதை குறித்துக்கொண்டாள்.



ஆனால், ரகுவீரின் பார்வையோ யாழினியை ஆழ்ந்துப் பார்க்க, ஏனோ புத்தகத்தில் பார்வையை பதித்திருந்தாலும் அந்த பார்வையின் வீரியத்தை உணர்ந்தவளுக்கு அத்தனை அசௌகரியமாக இருந்தது.



"ஆரம்பத்துல உன்னை பார்க்கும் போது எங்கேயோ பார்த்த மாதிரி இருந்துச்சு. இப்போவும் அதேதான். ரொம்ப பழக்கப்பட்ட முகமா இருக்கு. உன் அப்பா பேரு என்னன்னு சொன்ன?" என்று அவர் கேட்க, விழிகளை மட்டும் உயர்த்தி அவரை ஒரு பார்வைப் பார்த்தவள், "எனக்கு சரியா ஞாபகத்துல இல்லை" என்று இறுகிய குரலில் சொன்னாள்.



"ஓ..." என்றுவிட்டு யோசனையோடு புருவத்தை நெறித்தவர், "எப்போவாச்சும் ஞாபகம் வந்தா சொல்றேன். ஆனா... எனக்கொரு டவுட். என் பையன் ஆதிரன் உன்னை ஏமாத்தியும் எப்படி உன்னால எங்ககிட்டயே வேலை பார்க்க முடியுது, அவன் மேல கோபம் வரல?" என்று ஏளனமாகக் கேட்க, "ஏமாத்துறவங்கள விட ஏமாறுறவங்க மேலதான் தப்பு. அதுமட்டுமில்லாம அவர் என்னை காதலிக்கிறதா ஒரு வார்த்தை கூட சொல்லல. நான்தான் ரொம்ப இடங் கொடுத்துட்டேன். பரவாயில்ல, அந்த நெருங்கி பழகின பாவத்துக்கு எனக்கு நிறைய நல்லது பண்ணியிருக்காரு. அதனால கோபம் வரல" என்று சாதாரணமாக சொல்லி விட்டு மீண்டும் புத்தகத்தில் பார்வையை பதித்தாள் அவள்.



ரகுவீரின் இதழ்கள் கேலியாக வளைந்தன. "தரையில தூங்கிட்டு இருந்த உனக்கு சொகுச காமிச்சிருக்கான். அந்த நன்றி விசுவாசம் இருக்கத்தான் செய்யுது" என்றவர் எழுந்து அங்கிருந்து நகர, போகும் ரகுவீரைப் பார்த்திருந்தவளின் விழிகள் தீப்பிழம்பைக் கக்க, அவளுடைய கரங்களோ கோபத்தில் கையிலிருந்த புத்தகத்தை கசக்கி தூரப் போட்டன.



இங்கு சங்கரபாண்டியின் வீட்டில், சித்தார்த்தின் நினைவு முழுக்க யாழினிதான். தட்டிலுள்ள உணவை பிசைந்தவாறு அவன் தானாக சிரிக்க, தன் மகனை கவனித்துக்கொண்டிருந்த சங்கரபாண்டியோ யோசனையில் புருவங்களை நெறித்தார்.



"சித்து, சாப்பிடுற தட்டுல ஏதாச்சும் காமெடி படம் ஓடுதா, இல்ல... தானா சிரிக்குறியே அதான் கேட்டேன்" என்று அவர் சாப்பிட்டுக்கொண்டு கேட்க, "அதெல்லாம் ஒன்னும் இல்லைப்பா, சும்மாதான்" என்று சமாளித்தவனுக்கு ஏனோ இப்போதே யாழினியை பார்க்கத் தோன்ற, அரைகுறையாக சாப்பிட்டு விட்டு எழுந்தவனை சந்தேகமாகப் பார்த்தார் பெரியவர்.



சித்தார்த்தோ வேகமாக வெளியேறியவன், தன் புல்லட்டை உயிர்ப்பித்தவாறு உடனே யாழினிக்கு அழைக்க, அடுத்து என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தவளோ எண்ணைப் பார்த்துவிட்டு அழைப்பை ஏற்றாள்.



"யாழ் அது..." என்று இவன் ஏதோ கூற வர, அதற்குள் "சித்தார்த், நான் உன்கிட்ட முக்கியமான விஷயம் சொல்லணும். ரொம்ப பொறுமையா நம்ம திட்டத்தை கொண்டு போற மாதிரி தோனுது. இனி நமக்கு அவ்வளவா நேரம் இல்லை. ஏதாச்சும் பண்ணணும். என்கிட்ட ஒரு நல்ல ப்ளான் இருக்கு, வெளியில எங்கேயாச்சும் உன்னை பார்க்க முடியுமா? என்னால ரொம்ப நேரம் பேச முடியாது" என்று யாழினியே கேட்டுவிட, இவனுக்கு இதுவே போதும் என்றிருந்தது.



"அதுக்கென்ன யாழ், பார்க்கலாமே..." என்று இவன் சொன்னதுமே, "அப்போ நான் சொல்ற கோயிலுக்கு வா, இன்னும் பத்து நிமிஷத்துல நான் அங்க இருப்பேன்" என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவள் வேகமாக அங்கிருந்து வெளியேறப் போக, சரியாக ஆஃபீஸுக்குள் நுழைந்தான் ஆதிரன்.



"எங்க கெளம்புற?" என்று அவன் கழுகுப் பார்வையோடுக் கேட்க, "அது... அது வந்து.. மனசு சரியில்ல அதான் கோயிலுக்கு போறேன்" என்று யாழினி சிறு தடுமாற்றத்தோடு சொல்ல, "ஓ..." என்று இடது புருவத்தை நீவி விட்டவாறு யோசித்தவன், "நானும் வரேன்" என்றுவிட்டு மீண்டும் காரை நோக்கி நடக்க, இவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.



"இப்.. இப்போ எதுக்கு நீங்க வரீங்க? ஏற்கனவே நம்ம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சு பேசுறது போதாதா? அதுமட்டுமில்லாம உங்களுக்கு எப்போதிலிருந்து கடவுள் பக்தி பொறந்துச்சு? அதெல்லாம் நீங்க வர தேவையில்ல, நானே போயிடுவேன்" என்று யாழினி பதற்றமாகச் சொல்ல, "லுக், நான் என்ன பண்ணணும், பண்ண கூடாதுன்னு எனக்கு சொல்லாத! ஐ கான்ட் அக்செப்ட் தட். எனக்கு தோனுறத நான் பண்ணுவேன். எனக்கும் இப்போ அங்க வந்தா கொஞ்சம் ரிலாக்ஸ்ஸா இருக்கும்னு தோனுது. உன்னை அழைச்சுட்டு போகணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. நீ என்னோட ஜஸ்ட் ஸ்டாஃப்தான். நீ ஆட்டோவுல போனா கூட ஐ ஜஸ்ட் டோன்ட் கெயார்" என்று படபடவென பொரிந்துக்கொண்டே போனான் ஆதிரன்.



அவனின் வார்த்தைகளைக் கேட்ட பின் யாழினியால் எதுவும் பேச முடியவில்லை. எச்சிலை விழுங்கிக்கொண்டவள், "ஹிஹிஹி... இதுக்கெல்லாம் போய் ஏன் சின்னபுள்ளத்தனமா கோபப்பட்டுக்கிட்டு. அதென்ன என் அப்பா கட்டின கோயிலா, நீங்க தாராளமா போகலாம்" என்று அசடுவழிந்தவாறு சமாளிக்க, "அப்போ கார்ல ஏறு" என்றுவிட்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்துக்கொண்டான் அவன்.



யாழினியும் மறுப்பு கூறாமல் காரில் ஏறிக்கொள்ள, அடுத்த பத்தே நிமிடங்களில் கோயிலுக்கு முன்னே வண்டியை நிறுத்தினான் ஆதிரன்.



அவளோ இறங்கி கைகளைப் பிசைந்தவாறு முன்னே செல்ல, அவளுக்காவே கோயில் தூணில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்தவாறு நின்றிருந்தான் சித்தார்த். வாசலையும் கடிகாரத்தையும் மாறி மாறிப் பார்த்திருந்த அவனின் விழிகள் யாழினியைப் பார்த்ததுமே மின்னின.



"யாழ்..." என்றுக்கொண்டே அவளை நோக்கி அவன் ஒரு அடி முன்னே வைக்க, சரியாக அவனின் விழிகளுக்கு சிக்கினான் ஆதிரன். 'இவன் எதுக்கு வந்திருக்கான்?' என்று நினைத்தவனின் புருவங்கள் யோசனையில் சுருங்க, சரியாக யாழினியின் விழிகளிலும் தென்பட்டான் சித்தார்த்.



அவனைப் பார்த்ததுமே விழிகள் விரிய, தன் முட்டை விழிகளை உருட்டி ஆதிரனைக் காட்டி எச்சரிக்கை செய்தவள், கோயில் சன்னிதானத்திற்கு சென்று கைகளைக் கூப்பி விழிகளை மூடிக்கொள்ள, அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் ஆதிரன்.



சித்தார்த்தோ அடுத்து என்ன செய்வதென்று தெரியாது தடுமாறியவன் ஒரு முடிவு எடுத்தவனாக யாழினியை நோக்கிச் செல்ல, தான் மாட்டிக்கொள்ளக் கூடாதென்று இருக்கும் எல்லா கடவுள்களையும் வணங்கிவிட்டு திரும்பியவள், சித்தார்த் வருவதைப் பார்த்து அதிர்ந்துப் போய் வேகமாகத் திரும்பி அங்கு நின்றிருந்த ஆதிரனை மிரண்டு போய் பார்த்தாள்.



அவனும் சித்தார்த்தை தான் கூரிய பார்வையோடு பார்த்தவாறு யாழினியை நோக்கி வர, இருவரும் ஒருசேர அவளருகே வந்து நின்றனர்.



"ஹாய் யாழினி, என்ன இந்த பக்கம்? உங்கள மறுபடியும் பார்ப்பேன்னு நினைச்சும் பார்க்கல" என்று அவளையே ரசித்தவாறு அவளுக்கு ஏற்றாற் போல சித்தார்த் பேச, "ஹிஹிஹி... நானும்தான், நீங்களும் கோயிலுக்கு எல்லாம் வருவீங்களா?" என்று போலி ஆச்சரியத்தோடுக் கேட்டாள் அவள்.



ஆதிரனோ பேன்ட் பாக்கெட்டில் கையை இட்டு இருவரையும் மாறி மாறி உறுத்து விழிக்க, "உங்களையும் இங்க நான் எதிர்பார்க்கவே இல்லை, அவ்வளவா உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லன்னு கேள்விப்பட்டேனே" என்று சித்தார்த் கேட்க, "தெரியல, இன்னைக்கு கடவுளே என்னை வர சொன்னாரு. இப்போதான் அது ஏன்னு தெரிஞ்சது" என்றவனின் குரல் இறுகிப் போயிருந்தது.



"சரி அப்போ நான் வரேன்..." என்று மெல்ல அங்கிருந்து நழுவப் போன யாழினி, கால் தடுக்கி கீழே விழப் போக, இடையில் கை வைத்து பிடித்துக்கொண்டான் சித்தார்த். இருவருமே அதிர்ந்துப் போய் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, ஆதிரனின் விழிகள் கோபத்தில் சிவந்தன.



அதை யாழினியும் கவனிக்காமல் இல்லை.



"எப்போவும் தரையை பார்த்து நடக்கவே மாட்டியா?" என்று சித்தார்த் உரிமையோடு பேச, அவனை கொலை வெறியோடு பார்த்திருந்த மற்றவனுக்கோ ஏனென்று தெரியாத ஒரு உரிமை உணர்வு தலைத்தூக்க, தன் கட்டுப்பாட்டை இழப்பதை உணர்ந்து விறுவிறுவென்று காரை நோக்கி சென்றுவிட்டான்.



"சரியா கவனிக்கல சித்தார்த், நாம அப்பறமா பார்த்துக்கலாம்" என்று நெற்றியை நீவி விட்டவாறு சொன்ன யாழினி, ஆதிரனின் முகபாவனையை யோசித்தவாறு அங்கிருந்து நகரப் போக, "ஜாக்கிரதையா இரு யாழ், உன் காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன், நானும் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்று சிறு புன்னகையோடு ஹஸ்கி குரலில் சொன்னான் சித்தார்த்.



"ஏதோ சரியில்ல.." என்று அவனின் காதிற்கு விழவே சத்தமாகச் சொன்னவள் காரை நோக்கிச் செல்ல, அங்கு கட்டுக்கடங்காத கோபத்தில் ஸ்டீயரிங்கை ஓங்கிக் குத்தினான் ஆதிரன்.



'ச்சே! இப்போ என்ன நடந்துச்சுன்னு நீ கோபத்துல இருக்க, அவ அவன் கூட பழகினா உனக்கென்னடா? இதுக்கு எதுக்கு நீ இவ்வளவு எமோஷனல் ஆகுற? நோ ஆதிரா... இந்த மாதிரியான ஃபீலிங்க்ஸ் உன்னை பலவீனமாக்கவே கூடாது. ஆனா... இதுல ஏதோ ஒன்னு டவுட்டா இருக்கே!' என்று நெற்றியைத் தட்டி யோசித்தவாறு அவன் அமர்ந்திருக்க, சரியாக காரில் ஏறி அமர்ந்தாள் யாழினி.



அடுத்தகணம் மின்னல் வேகத்தில் ஆதிரன் வண்டியை செலுத்த, இவளுக்கோ திக்திக் நிமிடங்கள்தான்.



ஐந்து நிமிடத்தில் ஆள் அரவமில்லாத ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திய ஆதிரனின் பார்வை யாழினியைத் துளைத்தெடுக்க, அந்தப் பார்வையை சந்திக்க முடியாமல் பெண்ணவளின் விழிகள் தடுமாறின.



அவளுடைய இரு கரங்களும் கையிலிருந்த அலைப்பேசியை மறைக்க முயற்சிக்க, அவளே எதிர்பார்க்காது அவளிடமிருந்து அதை பிடுங்கிக்கொண்டவன், அவள் பேசிய அழைப்புக்களை அலச ஆரம்பித்தான்.



"என்ன பண்றீங்க தேஷ்வா?" என்று யாழினி அலைப்பேசியை பிடுங்கப் போக, அதற்கு விடாது ஒவ்வொன்றையும் அலசியவனின் புருவங்கள் யோசனையில் சுருங்கின.



"ஒன்னுமே இல்லை..." என்று இவன் சொன்னதும், வேகமாக அவனிடமிருந்து தன் அலைப்பேசியை எடுத்துக்கொண்டவள், "எப்படி இருக்கும், கொடுத்தது டப்பா ஃபோனு. இதுல ஆயிரம் செக்கிங் வேற... இப்போ உங்களுக்கு என்னதான் பிரச்சனை?" என்று எரிச்சலாகக் கேட்க, அவனோ நாடியை நீவி விட்டவாறு அவளை ஆழ்ந்துப் பார்த்தான்.



யாழினிக்கு அவனின் பார்வையில் திக்கென்று இருந்தது. சித்தார்த்தோடு பேசிவிட்டு காரில் ஏறும் அந்த சிறு இடைவெளிக்குள்ளேயே சித்தார்த்தின் எண்ணோடு சேர்த்து அவன் சம்பந்தப்பட்ட அழைப்புக்களையும் அவள் தன் அலைப்பேசியிலிருந்து அழித்திருக்க, இப்போது எதுவுமே தெரியாதது போல் அவனைப் பார்த்தாள் அவள்.



ஆதிரனோ தன் சீட் பெல்ட்டை கழற்றிவிட்டு அவளின் மூச்சுக்காற்று படும் தூரத்திற்கு நெருங்க, ஏனோ யாழினிக்கு இதயம் படுவேகமாகத் துடிக்க, எச்சிலை விழுங்கிக்கொண்டாள்.



"அது எப்படி பேபி, நாம போகும் போது அவன் கரெக்ட்டா வந்தான்? எனக்கென்னவோ நீ டபிள் கேம் ஆடுறியோன்னு தோனுது" என்று அவன் சொல்ல, "நா.. நான் என்ன பண்ணேன். எனக்கு எதுவுமே தெரியாது" என்றுக்கொண்டே முன்னே வந்தவளின் வயிற்றில் கை வைத்து கதவோடு சாத்தினான் ஆதிரன்.



அவனின் தொடுகையிலும் ஸ்பரிசத்திலும் நெருக்கத்திலும் யாழினிக்கு வார்த்தைகள் வராது தொண்டை அடைக்க, அந்த ஏசி குளிரிலும் வியர்க்கத் தொடங்கியது.



"அப்போ உனக்கு எதுவுமே தெரியாது அப்படிதானே!" என்று அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அவனின் ஒவ்வொரு செயலையும் தன்னை மீறி ரசிக்க ஆரம்பித்தாள் யாழினி. ஆனால், ஆடவனோ அவளையே ஊடுருவும் பார்வைப் பார்த்துக்கொண்டிருந்தான்.



"அவன் இன்னொரு கட்சிய சேர்ந்தவன், எங்க கூடவே இருந்துக்கிட்டு நீ அவனுக்கு ஹெல்ப் பண்ண மாட்டேன்னு என்ன நிச்சயம்? ஏன் இப்படி சொல்றேன்னா... மேடம் ரொம்பதான் அவன் கூட உரசுறீங்க, குழைஞ்சுக்கிட்டு பேசுறீங்க. உன் கூட அவ்வளவு நெருக்கமா அவன்? பதில் சொல்லுடீ" என்று அடக்கப்பட்ட கோபத்தோடு ஆதிரன் பேச, ஏனோ இப்போது அவன் பேசிய விதத்தில் யாழினிக்கும் கோபம் உச்சத்தை தொட்டது.



அவன் மார்பில் கை வைத்துத் தள்ளிவிட்டவள், "நீங்க எப்படி என்கிட்ட இப்படி பேசலாம்? அவர் வேற கட்சியா இருக்கலாம். அதுக்காக நான் தப்பானவளா ஆகிருவேனா? இரண்டு தடவை எதேர்ச்சையா சித்தார்த்த பார்த்தேன், என் கூட நல்லா பழகுறாரு. எனக்கும் பிடிச்சிருக்கு. அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?" என்று ஆதங்கத்தில் கத்திக்கொண்டே போக, ஆக்ரோஷமாக அவள் தாடையைப் பற்றி தன் முகம் பார்க்கச் செய்தான் அவன்.



"ஹவ் டேர் யூ... எனக்கு என்ன பிரச்சனைன்னு கேக்குற. ஆமாடீ, அவன் உன் கூட பழகுறதுல எனக்கு பிரச்சனைதான்" என்று அவன் மனதிலிருப்பதை கோபமாகக் கொட்டிவிட, "அதான் ஏன்னு கேக்குறேன்?" என்றவளுக்கு ஏதோ ஒன்று மூளைக்கு உரைத்தது.



அவளுடைய கேள்விக்கான பதில் ஆதிரனிடத்தில் இல்லை. முதல் தடவை தடுமாறியவன், அவளுடைய விழிகளைப் பார்த்தவாறு யோசிக்க, தானாக அவனின் பார்வை அவளிதழின் மீது பதிந்தது.



இருவரின் இதழ்களுக்கும் நூலிடைவெளிதான்.



யாழினியோ இமை கொட்டாமல் அவனையே பார்த்துக்கொண்டிருக்க, தன் கட்டுப்பாட்டை இழந்து அவளிதழை நோக்கி நெருங்கினான் ஆதிரன். இருவரின் இதழ்களும் உரசிக்கொள்ள, இருவரின் உடலிலும் மின்சாரம் பாய்ந்த உணர்வு.



அவனோ விழிகளை மூடி மெல்ல இதழைப் பிரித்து அவளிதழை சுவைக்கத் தொடங்க, பெண்ணவளுக்கும் தடுக்கத் தோன்றவில்லை. அவனுடைய கரங்கள் மெல்ல அவளிடையை வளைத்துக்கொள்ள, சிலை போல் அவனின் கை வளைவுக்குள் இருந்தவள் பிடிமானத்திற்காக அவனின் சட்டைக் காலரைப் பற்றிக்கொண்டாள்.



ஆதிரனோ அவள் இதழ் தேனை மொத்தமாக உறிஞ்சு விடுவது போல் அவளிதழுக்குள் மூழ்கிக்கொண்டே போக, மெல்ல அவனுடைய கரங்களும் அத்து மீறத் தொடங்கின. ஆனால், திடீரென யாழினியின் நினைவுகளுக்குள் அந்த சம்பவம் உதிக்க, அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் அவள்.



***************

மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க மக்களே...

https://aadvikapommunovels.com/threads/கனவுகள்-கனலாய்-மாறுமா-கருத்து-திரி.2375/
 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 17




ஆதிரனோ அவளிதழை சுவைத்துக்கொண்டே போக, திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாக அவன் மார்பில் கை வைத்து தள்ளி விட்டு அவனிடமிருந்து பதறியபடி விலகினாள் யாழினி.



"என்னடீ?" என்று அவன் மாய வலை அறுக்கப்பட்ட எரிச்சலில் கேட்க, "இப்போவும் இது காதல் இல்லல்ல தேஷ்வா?" என்று விழிகளில் கண்ணீரோடுக் கேட்டாள் அவள்.



"வாட்! இதை நீ விடவே மாட்டியா யாழ்? இந்த மாதிரி இருக்குறது இரண்டு பேருக்குமே பிடிச்சிருக்கு. அப்போ எதுக்கு இந்த காதல் மண்ணாங்கட்டி எல்லாம்? எனக்கு இதுல சுத்தமா இன்ட்ரெஸ்ட் இல்லன்னு முன்னாடியே சொல்லிட்டேன், ஆனா நீ திரும்ப திரும்ப... ச்சே!" என்று அவன் கடுப்பாகச் சொல்ல, யாழினிக்கோ முகமே கறுத்துவிட்டது. மீண்டும் மீண்டும் அவனிடம் தன் கட்டுப்பாட்டை இழந்து அவமானப்படுவதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.



"காதல் இல்லாத காமம் எனக்கு தேவையில்ல. நான் ஒன்னும் விபச்சாரி கிடையாது. உங்க ஆசைய எல்லாம் தேவைப்படுறப்போ தீர்த்துக்க..." என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவள் முழங்கையைப் பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், "ஷட் அப் யூ ப்ளடி ****... இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினேன்னா நானே உன்னை கொன்னுடுவேன்" என்று ஆக்ரோஷமாக கர்ஜித்தான்.



அவனை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடுப் பார்த்தவள் திடீரென என்ன நினைத்தாளோ, "என்னை மன்னிச்சிருங்க!" என்று அவனுடைய கரத்தை உதறிவிட, அவளை புரியாமல் பார்த்தவனோ, "இப்போ எதுக்கு இது?" என்று கோபமாகக் கேட்டான்.



ஆனால் அழுகை தொண்டையை அடைக்க, முகத்தைத் திருப்பிக்கொண்டு எதுவும் பேசாமல் ஏதோ ஒரு இடத்தை வெறிக்கத் தொடங்கினாள் யாழினி. ஆதிரனும் காரை உயிர்ப்பித்தவாறு பக்கவாட்டாகத் திரும்பி அவளை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தவன், "இடியட்!" என்று முணுமுணுத்தவாறு மின்னல் வேகத்தில் காரை செலுத்த, அடுத்த சில நிமிடங்களிலேயே ஆஃபீஸிற்கு முன் கார் நின்றது.



அன்றைய நாள் முழுக்க யாழினி அவனை திரும்பிக் கூட பார்க்கவில்லை. சூரியன் அஸ்தமனமாகும் முன்னரே அவள் அங்கிருந்து வெளியேறியிருக்க, போகும் அவளை வெறித்துப் பார்த்த ஆதிரனுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு குழப்பம்.



அங்கிருந்த தன் ஆட்களில் ஒருவனை அழைத்தவன், "நான் சொல்றது அப்பாவுக்கு கூட தெரியக் கூடாது. இன்னும் இரண்டே நாள்ல நான் சொல்ற டீடெயில்ஸ் எனக்கு வேணும்" என்று அழுத்தமாகச் சொல்ல, அவனும் ஆதிரன் சொன்னதை செவிகளைத் தீட்டி கேட்டுக்கொண்டான்.



அடுத்தநாள்,



தனதறையில் அமர்ந்திருந்த கௌரிக்கு அடுத்து என்ன செய்வதென்று கூடத் தெரியவில்லை. தன்னவன் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் ஏனோ கண் முன் இருக்கிறானே என்ற சிறு திருப்தியில் இருந்தவளுக்கு இப்போது தஷ்வந்த் சொன்ன செய்தியைக் கேட்டதிலிருந்து மனம் ஒரு நிலையிலில்லை.



'நா.. நான் எதுக்கு இங்க இருக்கேன்? ஒருவேள இந்த குழந்தையும் இல்லன்னா நான் நடுத்தெருவுலதான் நின்னிருக்கணும் போல! என.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. இப்படியொரு வாழ்க்கைய நீ வாழணுமா கௌரி? யாருக்கும் பாரமா இருக்கத் தேவையில்ல. யாருக்கும் தெரியாம இங்கயிருந்து போயிடலாம். என்னால உனக்கும் ரொம்ப கஷ்டம் பேபி, தெரியாதனமா என் வயித்துல நீ உருவாகிட்ட. என்னை மன்னிச்சிரு! அம்மாவால இதை ஒன்னுதான் கேக்க முடியுது'



என்று தன் வயிற்றை வருடி குழந்தையோடு பேசிக்கொண்டவளுக்கு கண்ணீர் அருவியாய் ஓடியது. எத்தனை கஷ்டங்களை அனுபவித்தாயிற்று.



உணர்வுகள் மரத்துப் போனவள் போல் அமர்ந்திருந்தவள், கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவும் அறைக்கதவைத் திறந்தாள். சரியாக அவளெதிரே நின்றிருந்தான் அந்த வீட்டு வேலையாள்.



இவளோ கேள்வியாகப் பார்க்க, "அம்மா, சாப்பாடு ரெடியாகிட்டு. வயித்துல குழந்தைய வச்சுக்கிட்டு ரொம்ப நேரமா சாப்பிடாம இருக்கீங்க. ஐயா உங்கள சாப்பிட சொல்ல சொன்னாரு" என்று அவன் சொல்லிவிட்டு செல்ல, "ஐயாவா?" என்று தன்னவனோ என நினைத்து சிறு ஆச்சரியத்தோடுக் கேட்டாள் அவள்.



"ஆதிரன் ஐயாம்மா..." என்று அவன் சொன்னதும், இவளுக்கோ சப்பென்று ஆகிவிட, எதிர்பார்க்கும் தன் மனதை கடிந்துக்கொண்டவள் தன் குழந்தைக்காக எண்ணி மாடியிலிருந்து கீழே இறங்குவதற்காக தஷ்வந்தின் அறையைக் கடந்து செல்லப் போக, அவளுடைய விழிகளில் சிக்கியது அந்தக் காட்சி.



உடைப்பெட்டியில் தனக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து அவன் அடுக்கிக்கொண்டிருக்க, தன் மேடிட்ட வயிற்றில் கரத்தைப் பதித்தவாறு தன்னவனை வெறித்துப் பார்த்தாள் கௌரி. அதேநேரம் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த தஷ்வந்தின் மனம் அவளுடைய பார்வையை உணர்ந்ததோ என்னவோ! அவனும் அவள் நின்றிருந்த திசைக்குத் திரும்பிப் பார்த்தான்.



ஏனோ அவளுடைய பார்வை அவள் மேல் அப்படியே நிலைக்குத்தி நிற்க, ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி அவனுக்குள். அவளுடைய பார்வையை அவனால் நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை.



சிறு தடுமாற்றத்தோடு பார்வையைத் திருப்பிக்கொண்டவன், தரையை வெறித்திருக்க, விரக்திப் புன்னகையோடு கண்ணீரை அழுந்தத் துடைத்தவள் அதற்கு மேல் அங்கு நிற்காது அந்த அறையைக் கடந்து சென்றாள்.



'ச்சே!' என்று கோபத்தோடு கையிலிருந்த ஆடையை தூர எறிந்தவனுக்கு, உள்ளுக்குள் பல குழப்பம். தலையைத் தாங்கிக்கொண்டு கட்டிலில் தொப்பென்று அமர்ந்த தஷ்வந்திற்கு அவளின் சிறிய மேடிட்ட வயிறே மனக்கண் முன் வந்து சென்றது. அன்று அந்த சிறிய உருவத்தை கணினித் திரையில் பார்த்ததிலிருந்து அவன் மனம் அல்லோலப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது.



'நோ தஷ்வந்த், இதுக்கெல்லாம் மயங்காத! உன்னோட வாழ்க்கைய நீ பார்க்கணும், அப்பாவையும் ஆதிரனையும் மீறி நிறைய விஷயங்கள பண்ணி இந்த வாய்ப்பு எடுத்திருக்க. இப்போ நீயே எல்லாத்தையும் கெடுத்துக்காத!' என்று அவனின் மூளை அவனுக்கு எச்சரிக்க, மனமோ தன்னை மீறி கௌரியின் புறம் சாய ஆரம்பித்தது.



*************



அதேநேரம் ஆஃபீஸில், ரகுவீரின் அறைக் கதவைப் பார்ப்பதும் நேரத்தைப் பார்ப்பதுமாக அமர்ந்திருந்த யாழினிக்கு உள்ளுக்குள் பல திட்டங்கள் ஓட, அங்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவனின் குரல் அவளுடைய காதிற்கு எட்டியது.



"நேரங்கெட்ட நேரத்துக்குதான் அந்தப்பயல் வரணுமா என்ன! இத்தனை நாளா இருந்தேன், அப்போ எல்லாம் அந்த கேமராவ ஃபிக்ஸ் பண்ண தோனல. இப்போ என் பொண்டாட்டி ஆஃபீஸ்லயே கெடக்குறேன்னு என்னை கிழிச்சு தொங்கவிடுறா, இந்த நேரமா பார்த்து அவன கூப்பிட்டிருக்காங்க. எம்புட்டு நேரம் போகுமோ? எனக்கு டைவர்ஸ் வாங்கி கொடுக்காம விட மாட்டாய்ங்க போல" என்று ஒருவன் சலிப்பாகச் சொல்ல, "ஆதிரன் தம்பி வரும்ல, அவர்கிட்ட சொல்லிட்டு நீ கெளம்பிரு. நான் வேணா பார்த்துக்குறேன்" என்றான் மற்றவன்.



இது அத்தனையும் யாழினியின் காதில் விழ, ஏனோ அவளுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போலிருந்தது. ரகுவீரின் அறைக்குள் நுழைவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகத் தெரிய, விஷமமாக புன்னகைத்துக்கொண்டவள் மெல்ல அவர்களை நோக்கிச் சென்றாள்.



"இதுக்கு எதுக்கு கவலைப்படுறீங்க? அதான் நான் இங்க சும்மாதானே இருக்கேன். நான் கவனிச்சுக்குறேன்" என்று அவளாகவே வந்து இவ்வாறு சொல்ல, அவளை யோசனையோடுப் பார்த்தவனுக்கு முதலாளி சொன்ன வேலையை கவனிக்க ஒருத்தி சிக்கிவிட்டாள் என்றுதான் தோன்றியது.



"ரொம்ப நன்றிம்மா, ஐயாகிட்ட சொல்லிராத! நான் சீக்கிரமா போயிட்டு வந்துடுறேன். இதோ ஐயாவோட ரூம் சாவி. கொஞ்சம் கவனிச்சிக்கோ!" என்றுவிட்டு அவர் ஓடிவிட, சாவியை கைக்குள் பொத்திக்கொண்டவள் அடுத்த ஐந்தே நிமிடங்களில் கேமராவை பொருத்தவென வந்த நபரை அழைத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தாள்.



அவனோ தன் வேலையில் தீவிரமாக, அவனை நோட்டமிட்டவாறு மேசை மீதிருந்த ஃபைல்களை கவனிக்க ஆரம்பித்தாள் யாழினி. ஏகப்பட்ட பெயர்களில் ஏதேதோ ஃபைல்கள் இருக்க, இவளுக்கோ எதுவுமே புரியவில்லை.



'ச்சே! ஒரு மண்ணாங்கட்டியும் தெரியல. இவன் பண்ற தில்லுமுல்லு ஏதாச்சும் ஒரு ஃபைல்ல இருக்கும். ஆனா என்னன்னு புரிஞ்சாதானே திருட முடியும்?' என்று தனக்குள்ளேயே பேசிக்கொண்டவள், அவனைப் பார்ப்பதும் மீண்டும் ஃபைல்களை புரட்டுவதுமாக தடுமாறிக்கொண்டிருக்க, திடீரென "இங்க என்ன பண்ற?" என்றொரு குரல் அறை வாசலிலிருந்து கேட்டது.



யாழினியோ தூக்கி வாரிப்போட்டவளாக திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, அங்கு பேன்ட் பாக்கெட்டில் கையை இட்டு வாசலை மறைத்தவாறு நின்றுக்கொண்டிருந்தான் ஆதிரன். அவனுடைய கழுகுப்பார்வை அவளை துளைத்தெடுக்க, இவளுக்கு பயத்தில் உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட ஆரம்பத்துவிட்டது.



"அது... அது வந்து... கேமரா ஃபிக்ஸ் பண்ண வந்திருக்காரு. அதான் பக்கத்துலயே இருந்து பார்த்துக்கிட்டு..." என்று அவள் பதற்றத்தில் தடுமாற, ஆதிரனோ சந்தேகமாக அவள் கையிலிருந்த ஃபைல்களைப் பார்த்தான்.



"இது... நா.. நான் சும்மா பார்த்துட்டு இருந்தேன் தேஷ்வா. இது வேற தத்தபித்தன்னு இங்லீசுல இருக்கு. ஒன்னுமே புரியல, ஹிஹிஹி..." என்று அவள் அசடுவழிய, அந்த ஃபைல்களை எடுத்து அங்கிருந்த கபோர்டில் வைத்தவன், நூலிடைவெளிக்கு அவளை நெருங்கி நின்று "என்னை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்த முடியாது யாழ்" என்று மர்மப் புன்னகையோடு சொன்னான் அழுத்தமாக.



யாழினிக்கு உள்ளுக்குள் பயம் உச்சகட்டத்தில் இருந்தாலும் அதை மறைத்துக்கொண்டு அவள் புன்னகைக்க, அவளையே பார்த்தவாறு அங்கிருந்து அவன் வெளியேறியதும் 'ஊஃப்ப்...' என்று பெருமூச்சு விட்டுக்கொண்டாள் அவள்.



அதன் பிறகு அங்கிருந்து வெளியே வந்தவளுக்கு வேறு ஏதாவது ஒரு சிறு துரும்பு கிடைக்காதா என்றிருந்தது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாது இவள் யோசித்துக்கொண்டிருக்க, சரியாக, அவளுக்கு அழைத்தான் சித்தார்த்.



அழைப்பையேற்றவள் "இன்னைக்கு மதியானத்துக்கு அப்பறம் அந்த கோயில் பக்கத்துல இருக்குற பார்க்கிட்ட வெயிட் பண்ணு, நான் வரேன், பேசலாம்" என்று மெல்ல சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டிக்க, அதேநேரம் யாரோ ஒரு பத்திரிகையாளனை இழுத்துக்கொண்டு ரகுவீரின் ஆட்கள் உள்ளே வர, ஆதிரனோ அவன் முன்னே காலுக்கு மேல் கால் போட்டு முகம் சிவக்க அமர்ந்திருந்தான்.



"இந்த மீடியாக்காரன் ரொம்பதான் ஐயாவ சீண்டிக்கிட்டு இருக்கான் தம்பி. பேசாமா இவன் கதைய முடிச்சிட்டா ரொம்ப நல்லது. இல்லன்னா நம்ம கட்சிய மொத்தமா சரிச்சிருவான்" என்று ஆட்களில் ஒருவன் கத்த, அந்த பத்திரிகையாளனான வரதனோ கேலியாக இதழை வளைத்தான்.



"நீங்க ஒரு மீடியாகாரன்கிட்ட பேசிட்டு இருக்கீங்க, நான் நினைச்சா உங்கள அரசியல்ல இருந்தே அழிச்சிர முடியும். பேசுறத பார்த்து பேசுங்க, உங்களால ஒரு மயிரையும் புடுங்க முடியாது" என்று அவன் பேசிக்கொண்டு போக, ஆதிரனோ கை முஷ்டியை இறுக்கிக்கொண்டவன் எந்த பதிலும் பேசவில்லை.



"ஏய் எவ்வளவு தைரியம் இருந்தா தம்பி முன்னாடி இப்படி பேசிக்கிட்டு இருப்ப. ஒழுங்கு மரியாதையா ஐயாவ பத்தி எங்க கட்சிய பத்தி தப்புத் தப்பா வீடியோ போடுறத நிறுத்திரு! இல்லன்னா அவ்வளவுதான்" என்று அங்கிருந்த ஆட்களில் ஒருவன் கத்த, "அமைதியா இருங்க!" என்ற ஆதிரன், "நீ கெளம்பு!" என்றான் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல்.



வரதனோ தன் ஷர்ட் காலரைப் பற்றியிருந்தவனை உதறிவிட்டு ஆதிரனை ஒரு பார்வைப் பார்த்தவாறு அங்கிருந்து நகர, "ஏன் தம்பி அவன சும்மா விட்டீங்க?" என்று கேட்டான் அங்கிருந்த ஒருவன்.



'ஊஃப்ப்...' என்று பெருமூச்சுவிட்டவனோ, இருக்கையில் கைகளை அடித்து எழுந்து, "எல்லாத்துக்கும் ஒரு நேரம் இருக்கு. இன்னும் தேர்தலுக்கு ஒரு வாரம்தான் இருக்கு. இப்போ நாம ஏதாச்சும் பண்ண போய் அது நம்ம அரசியல பாதிச்சிர கூடாது. மொதல்ல ஆட்சிய பிடிப்போம், அப்பறம் இவன் கதைய பார்த்துக்கலாம்" என்று விவேகத்தோடு சொல்ல, யாழினியோ அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.



அன்று மாலை,



"நானும் நீயும் மீட் பண்றதே ரொம்ப கஷ்டமா இருக்கு. நீ வேணா எங்க கட்சிக்கு வந்துடு யாழ், நான் உன்னை மகளிர் கவுன்சிலர் எலெக்ஷன்ல நிக்க வச்சு உன்னை எங்கேயோ கொண்டு போறேன்" என்று சித்தார்த் சொல்ல, அவனை ஏற இறங்கப் பார்த்தவள், "எனக்கு இந்த அரசியல்ல பதவி ஆசையெல்லாம் இல்லை" என்றாள் உணர்ச்சிகளற்ற குரலில்.



'பதவி அதிகாரம் ஆசையில்லாத ஒருத்தியா! இதனாலதான் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு யாழ்' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டவன், "சரி, நெக்ஸ்ட் நம்ம ப்ளான் என்ன?" என்று கேட்க, "இப்போ வரைக்கும் ரகுவீருக்கு எதிரா எந்த ஆதாரமும் கிடைக்கல. ஆனா இதை இப்படியே விட்டுர முடியாது. இன்னும் ஒரு வாரத்துல தேர்தல், அதுக்குள்ள என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியல" என்று எரிச்சலாக நெற்றியை நீவி விட்டுக்கொண்டாள் யாழினி.



"ஏன் இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற, கண்டிப்பா என் கட்சிதான் ஜெயிக்கும். நாங்க அந்த அளவுக்கு நிறைய சேவைகள் பண்ணியிருக்கோம். எங்க மவுசு அப்படிம்மா" என்று சித்தார்த் காலரை தூக்கி விட்டுக்கொள்ள, "உங்க கட்சிய விட ரகுவீரோட கட்சிக்கு ஆதரவு அதிகம், இது உனக்கே தெரிஞ்ச உண்மை சித்தார்த். இந்த ஒரு வாரத்துல எதுவும் பண்ண முடியாது. நாம தோத்துட்டோம்னு தோனுது" என்று இயலாமையோடு சொன்னாள் அவள்.



ஆனால், சித்தார்த்தோ கேலியாக சிரிக்க, அவனை புரியாமல் பார்த்தாள் அவள்.



"அய்யோ யாழினி, அவங்க கட்சிய பத்தி அப்பப்போ என் ஃப்ரென்ட்ட வச்சு கிழிச்சு தொங்க விட்டுக்கிட்டுதான் இருக்கேன். ஆதிரனோட ஆளுங்க கூப்பிட்டு மிரட்ட கூட செஞ்சிருக்காங்க. அதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்லை" என்று அவன் சொல்ல, "அவன் பேரு என்னன்னு சொல்ல முடியுமா?" என்று சந்தேகமாகக் கேட்டாள் யாழினி.



"வரதன், **** சேனல்ல வர்க் பண்றான். நீ கவலைப்படாத! அந்த கட்சி ஜெயிக்கவே முடியாது" என்று இவன் உறுதியாகச் சொல்ல, அது யாரென்று நன்றாகவே புரிந்தது அவளுக்கு.



"இது உன் வேலைதானா?" என்று கேட்டவாறு நெற்றியை நீவி விட்டுக்கொண்டவள், "ஆஃபீஸ்ல எதுவும் பண்ண முடியாது, இதுக்கப்பறம் நடக்குறது நடக்கட்டும். எதுக்கும் உன் ஃப்ரென்ட்ட ஆதிரன்கிட்ட ஜாக்கிரதையா இருக்க சொல்லு" என்றுவிட்டு காரிலிருந்து இறங்கப் போக, சட்டென அவள் கரத்தைப் பற்றியிழுத்தான் சித்தார்த்.



யாழினியோ அதிர்ந்துப் போய் அவன் முகத்தைப் பார்க்க, "இல்லை... நான் உன்கிட்ட ஒன்னு கேக்கணும்" என்று சித்தார்த் சிறு தடுமாற்றத்தோடு ஆரம்பிக்க, இவளோ அவன் பற்றியிருந்த கரத்தையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தாள்.



ஆனால், சித்தார்த்தோ அதையெல்லாம் உணரவில்லை. அவள் கரத்தோடு தன் கரத்தைக் கோர்த்துக்கொண்டவன், "இல்லை.. அந்த ஆதிரன் எப்போ பாரு உன் பின்னாடியே திரியுறானே, ஒருவேள அவனுக்கு உன் மேல ஏதாச்சும்..." என்று தன் காதலை சொல்வதற்கு முன்னால் தன் சந்தேகத்தைக் கேட்டுவிட, யாழினியோ உணர்ச்சிகளற்ற முகத்தோடு அவனை வெறித்துப் பார்த்தாள்.



அவனோ ஆர்வமாக அவளின் பதிலை எதிர்பார்த்து அவளையே பார்த்திருக்க, ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, "அவனுக்கு எதுவும் இல்லை. எனக்குதான். நான்தான் அவன காதலிக்கிறேன்" என்று சட்டென யாழினி சொல்லிவிட, சித்தார்த்திற்கு தூக்கி வாரிப்போட்டது.



அவனுடைய கரங்கள் தானாக அவள் கரத்திலிருந்து விலகிக்கொள்ள, திகைத்துப் போய் அவன் பார்த்திருக்க, அதற்கு மேல் எதுவும் பேசாமல் காரிலிருந்து இறங்கிச் சென்றாள் யாழினி.



ஆனால், இந்தக் காட்சி அந்த ஒரு ஜோடி விழிகள் கண்டுகொண்டதை யாழினி அப்போது அறியவில்லை.



*************

மற்ற கதைகளை அமேசன் கிண்டலில் படிக்க 🏃🏃

India link 👇https://www.amazon.in/ஷேஹா-ஸகி/e/B08ZYCHG6C/ref=dp_byline_cont_ebooks_1


USA link 👇
https://www.amazon.com/%E0%AE%B7%E0..._a_mng_rwt_scns_share?ref_=d6k_applink_bb_dls



 

Sheha zaki

Member
Wonderland writer
அத்தியாயம் 18




"இன்னும் ஒரு நாலு நாள்ல தேர்தல், ஆனா நீ எல்லாத்தையும் உதறி தள்ளிட்டு இங்கயிருந்து போறேன்னு சொல்லுற... என்ன விளையாடுறியா தஷ்வந்த்?" என்று ரகுவீர் நடு ஹாலில் கத்த, தஷ்வந்தோ இறுகிய முகமாக தரையை வெறித்தவாறு நின்றிருந்தான்.



ஆதிரனோ அங்கிருந்த சோஃபாவில் அலைப்பேசியை நோண்டியவாறு அமர்ந்திருக்க, மாடியிலிருந்து நடப்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கௌரி



"பதில் சொல்லு தஷ்வந்த்" என்று பெரியவர் கத்தியதும், "எனக்கு இங்க இருக்க பிடிக்கலப்பா, லண்டன்லயே செட்ல் ஆகலாம்னு யோசிக்கிறேன். என்னை மன்னிச்சிருங்க" என்று நிமிர்ந்தும் பார்க்காமல் பதில் சொன்னான் அவன்.



ரகுவீரோ உச்சகட்ட கோபத்தோடு தன் மகனை எரிப்பது போல் பார்த்தவர், "அப்போ நம்ம வீட்டுல இருக்கே அந்த பொண்ணு?" என்று கேட்க, எச்சிலை விழுங்கிக்கொண்டவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



"அது.. அது வந்து... அண்ணாதானே கூட்டிட்டு வந்தான், நான் ஒன்னும் அழைச்சுட்டு வரல்லையே!" என்ற அலட்சியமான அவனின் பதிலில், கிட்டத்தட்ட ரகுவீர் அடிப்பது போல் தன் கரத்தை ஓங்க, அப்போதும் மரம் போல் நின்றுக்கொண்டிருந்தான் தஷ்வந்த்.



"இங்கயிருந்து போயிட்டேன்னா இந்த வீட்டுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சொல்லிட்டேன்" என்று ஆக்ரோஷமாக கத்திவிட்டு அவர் அங்கிருந்து நகர்ந்து விட, ஆதிரனோ சோஃபாவிலிருந்து எழுந்து தன் சகோதரனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மாடிக்குச் சென்றான்.



தஷ்வந்தோ அப்போதும் மனம் இறங்கவில்லை. 'ஷீட்!' என்று எரிச்சலாக முணுமுணுத்தவாறு தலையை அழுந்தக் கோதியவன், தன் அறைக்குச் செல்லவவெனத் திரும்ப அவன் விழிகளில் சிக்கினாள் அவனையே பார்த்தவாறு மாடியில் நின்றிருந்த கௌரி.



உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட பார்வைப் பார்த்துவிட்டு அவள் தனதறைக்குள் நுழைய, சட்டைக் கையை மடித்துவிட்டவாறு மாடிப்படிகளில் தாவிச் சென்றவன், கௌரியின் அறைக்கதவை தடாலடியாக திறந்துக்கொண்டு உள்ளே நுழைய, அவளோ தஷ்வந்தை சிறு அதிர்ச்சியோடுப் பார்த்தாள்.



"இப்போ சந்தோஷமா? உன்னாலதான் எல்லாமே... உன்னாலதான் அப்பாவும் அண்ணாவும் என்னை ரொம்ப மோசமானவனா பார்க்குறாங்க. இல்லன்னா, நான் லண்டனுக்கு கெளம்புறதுக்கு இந்தளவுக்கு அவங்க ரியேக்ட் பண்ண மாட்டாங்க. ச்சே! உன் சுயநலத்தால என்னோட வாழ்க்கைய அழிக்க பார்க்குற நீ!" என்று அவன் அளவுகடந்த கோபத்தில் கத்திக்கொண்டு போக, ஒவ்வொரு அடியாக வைத்து அவனருகே மெல்ல வந்தவள் அவன் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்து, "ஒரு தடவை கூட என்னையும் என் குழந்தையையும் ஏத்துக்கன்னு உன்கிட்ட நான் கெஞ்சல. நீ என்ன வேணா பண்ணிக்கோ, என் குழந்தைக்கு அம்மா மட்டும்தான்னு நான் முடிவு பண்ணிட்டேன்" என்றாள் தீர்க்கமாக.



அவளின் வார்த்தைகளில் ஆடவனோ திகைத்துதான் போனான். ஆனால் அடுத்தகணமே முகபாவனையை மாற்றியவன், "ஓஹோ... அப்போ எதுக்குடீ இங்க இருக்க, என் கண்ணு முன்னால இருந்து ஏன் என்னை சாவடிக்குற? எனக்கு குற்றவுணர்ச்சிய வரவைச்சு நீ நிம்மதியா இருக்கணும், அதானே! தொலைஞ்சு எங்கேயாச்சும் போயிரு!" என்று நாக்கில் விஷத்தைத் தடவியது போல் வார்த்தைகளை விட, ஒருகணம் அவளுக்கு இதயமே நின்றுவிட்டது.



விழிகள் கலங்க, வலி நிறைந்த பார்வை ஒன்றைப் பார்த்தவள், "சாரி!" என்று மட்டும் வார்த்தைகளைக் கோர்த்து சொல்ல, அவளின் வலி நிறைந்த குரலையும் பார்வையையும் உணர்ந்தவனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.



கௌரியும் அவனிடமிருந்து விலகி நகரப் போனவள், கால் இடறி விழப் போக, "கௌரி..." என்று பதறிய தஷ்வந்த் ஒரு கரத்தால் அவள் முழங்கையைப் பற்றி மற்ற கரத்தால் அவள் வயிற்றில் கரத்தை வைத்தான்.



அவனுடைய சிசு அவனை உணர்ந்ததோ என்னவோ அவனை அழைப்பது போல் அவள் வயிற்றுக்குள்ளிருந்து உதைக்க, அதிர்ச்சியில் விழி விரித்த ஆடவனுக்கு இது என்ன வகையான உணர்வென்றே தெரியவில்லை. கௌரிக்கும் அதே ஆச்சரியம்தான். காரணம், இன்றுதான் முதல் தடவை அவனின் கரம் பட்டதும் குழந்தை உதைத்திருக்கிறது.



அதிர்ச்சி குறையாமல் தன்னவளின் விழிகளையே அவன் பார்த்திருக்க, தன் வயிற்றின் மீதிருந்த அவன் கரத்தைப் பார்த்துவிட்டு தன்னவனை அதே அதிர்ச்சியோடுப் பார்த்த கௌரி, சட்டென அவன் கரத்தை உதறித் தள்ளிவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் சென்று மறைந்து விட, கணங்கள் கடந்தும் அதே இடத்தில் நின்றிருந்தான் தஷ்வந்த்.



சில நிமிடங்கள் கழித்தே நடப்பை உணர்ந்து அங்கிருந்து அவன் வெளியேறியிருக்க, குளியலறைக் கதவில் சாய்ந்து நின்றிருந்தவளுக்கு விழிகளிலிருந்து விழிநீர் அருவியாய் ஓடியது.



அடுத்து வந்த நாட்கள் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடக்க, கட்சித் தலைவர்களோடு சேர்த்து மக்களும் பரபரப்பாகத்தான் இருந்தனர். ஆதிரனும் தேர்தல் வேலைகளால் பெரிதாக யாழினியை கண்டுகொள்ளவில்லை.



ஆனால், பெண்ணவளின் மனமோ ஆதங்கத்தில் கொதித்துக்கொண்டிருந்தது. அந்த ரகுவீரை வீழ்த்த சரியான சிறு துரும்பு கூட கடைசி வரை அவளுக்கு கிடைக்கவில்லை. சித்தார்த்தாலும் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை. கூடவே, யாழினியின் காதலைப் பற்றி அறிந்ததிலிருந்து அவளை தொடர்பு கொள்வதையே கிட்டத்தட்ட குறைத்திருந்தான் அவன்.



அன்று, தேர்தலுக்கான நாள்...



உள்நாட்டு மக்களோடு சேர்த்து நாட்டை விட்டு வெளியேறிச் சென்றிருந்த நாட்டிலேயே பொறந்து வளர்ந்தவர்களும் வாக்களிப்பதற்காக சொந்த நாட்டிற்கு வந்திருக்க, எல்லா இடங்களிலும் போலீஸ் பாதுகாப்போடு பரபரப்பாக இருந்தது.



எல்லோரும் தங்களின் வாக்குகளை தாங்கள் சார்பாக இருக்கும் கட்சிக்கு போட்டுவிட்டு இப்போவாவது தங்களின் நாட்டுக்கு விடிவு காலம் பிறக்காதா என நினைக்க, பதவி பண ஆசையோடு தன்னுடைய சின்னத்துக்கே வாக்களித்துவிட்டு வெளியேறினார் ரகுவீர்.



"இந்த முறை கண்டிப்பா நமக்குதான் ஆட்சி. உங்கள தோக்க விட மாட்டேன்ப்பா. பதவி ஏற்பு விழாவுக்கு இப்போவே தயாரா இருங்க ஃப்யூச்சர் சீஃப் மினிஸ்டர்" என்று ஆதிரன் கெத்தாகச் சொல்ல, "நீதான்டா என் சொத்தே... நீ இல்லன்னா இவ்வளவும் இல்லை. மொதல்ல ஆட்சி நம்ம கைக்கு வரட்டும், அப்பறம் நமக்கு வினையா நின்னவங்கள பார்த்துக்குறேன்" என்றார் அவர் பற்களைக் கடித்துக்கொண்டு.



ஆதிரனோ வெற்றிப் புன்னகை புரிய, அன்று நடந்த தேர்தலில் கிட்டத்தட்ட எழுபத்தைந்து சதவீதமான ஆட்கள் வாக்களித்திருந்தனர். எல்லா கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்க, சரியாக, அன்று முடிவுகளை அறிவிக்கும் நாளும் வந்தது.



யாராக இருக்கும் என்ற கேள்வி பல பேரிடத்தில் இருந்தாலும் சில பேர் சரியாக யூகித்துதான் வைத்திருந்தனர். கட்சி ஆஃபீஸில் அமர்ந்திருந்த மொத்தப் பேருமே செய்திகளைதான் ஆர்வமாகப் பார்த்திருந்தனர், யாழினி உட்பட



'கடவுளே இவனுக்கு ஆட்சி கிடைக்கவே கூடாது' என்று பரபரப்போடு நகத்தை கடித்தவாறு ஒவ்வொரு முடிவுகளையும் அவள் பார்த்துக்கொண்டிருக்க, தன் தந்தைக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த ஆதிரனோ பதற்றத்தில் வியர்வையை துடைத்துக்கொண்டிருந்த தன் தந்தையின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டான்.



"நமக்குதான்" என்று அவன் அழுத்தமாக சொல்ல, அந்த வார்த்தைகள் கொடுத்த புதுத் தெம்போடு சற்று அமைதியாகி மீண்டும் செய்திகளை கவனித்துக்கொண்டிருந்தார் ரகுவீர்.



இதற்கிடையில், "சார், நீங்க புக் பண்ண கேப் வந்தாச்சு, கொஞ்சம் சீக்கிரம் வாங்க" என்று அலைப்பேசியில் கேப் ஓட்டுனர் சொன்னதும், தன் தோள் பையை போட்டு உடைப்பெட்டியை தள்ளிக்கொண்டு மாடியிலிருந்து இறங்கினான் தஷ்வந்த்.



கௌரியோ விழிகள் கலங்க இறுகிய முகமாக தரையை வெறித்துக்கொண்டு அமர்ந்திருக்க, அவளை ஒரு பார்வைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் அவளைக் கடக்கப் போக, ஏனோ மனம் கேட்கவில்லை.



சட்டென நின்றவன் திரும்பி அவளெதிரே வந்து நிற்க, அரவம் உணர்ந்தாலும் நிமிர்ந்தே பார்க்கவில்லை அவள். அவனும் சிறிது நேரம் எதுவுமே பேசவில்லை.



"கௌ.. கௌரி... நான் போயிட்டு வரேன். இது.. இதுக்கப்பறம் நான் உன்னை எப்போ பார்ப்பேன்னு தெரியல. ஆனா... ஆனா ஐ அம் சாரி! பத்திரமா இரு!" என்றவன் மெல்ல குனிந்து அவள் வயிற்றின் மீது கரத்தை வைத்தான். அழுகை தொண்டையை அடைக்க, தன் வயிற்றின் மீதிருந்த அவன் கரத்தைப் பார்த்தவளுக்கு அதை தட்டி விடக் கூட ஏனோ மனம் வரவில்லை.



அவள் விழிகள் கலங்கி அந்த விழிநீர் அவளின் கன்னத்தின் வழியே உருண்டோடி அவன் கரத்தில் பட்டுத் தெறிக்க, தஷ்வந்தோ அவள் முகத்தை சட்டெனப் பார்த்தவன் மீண்டும் உருவான குற்றவுணர்ச்சியில் சட்டென தன் கரத்தை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறியிருக்க, விழிநீரை அழுந்தத் துடைத்தாள் பெண்ணவள்.



காரில் சென்றுக்கொண்டிருந்தவனுக்கு மனம் முழுக்க வேதனை. இனி மாறப் போகும் தன் வாழ்க்கையை நினைத்து அவன் முயன்று தன் சிந்தனையை திசைத் திருப்ப நினைத்தாலும் அவனையும் மீறி கௌரியுடனான நினைவுகள் வந்துச் செல்ல, கூடவே அன்று குழந்தை உதைத்தது வேறு அவனை சற்று உலுக்கிப் பார்த்தது.



அடுத்த பல நிமிடங்களில் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவன், செக்கிங் எல்லாவற்றையும் முடித்துவிட்டு விமானத்திற்காகக் காத்திருக்க, மனம்தான் இங்கில்லை.



'தஷ்வந்த், எதை பத்தியும் யோசிக்காத! இது உன் லைஃப்ல டர்னிங் பாய்ன்ட். எதையாச்சும் யோசிச்சு அதை கெடுத்துக்காத! வேணாம்... இங்க எதுவுமே வேணாம்...' என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், ஒருபக்கம் தன்னவளுடைய நினைவுகளிலிருந்து அவனால் வெளியிலேயே வர முடியவில்லை.



முட்டியில் இரு கரங்களைக் கோர்த்து ஊன்றி இறுகிய முகமாக அவன் தரையை வெறித்திருக்க, சரியாக விமானத்திற்கான அறிவிப்பும் வந்தது. 'ஊஃப்ப்...' என்ற பெருமூச்சோடு எழுந்து தன் தோள் பையை எடுத்துக்கொண்டு அவன் செல்ல, இங்கு கௌரியோ அழுது வீங்கிய முகத்தோடு நடை பிணம் போல் வீட்டிலிருந்து வெளியேறியிருந்தாள்.



இங்கு வீட்டில் இவ்வாறு இருக்க, ஆஃபீஸில் அத்தனை பேரும் செய்தியை ஆர்வமாகப் பார்த்திருக்க, தேர்தலுக்கான முடிவு சொல்லும் தருணமும் வந்தது.



"நடந்து முடிந்த தேர்தலில் அதிக வாக்குகளை பெற்று ***** கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது" என்று அறிவிக்கப்பட்டதுமே, அங்கிருந்த அனைத்து தொண்டர்களும் கத்தி கரகோஷம் எழுப்பி கொண்டாட, ரகுவீரோ தன் மகனை கண்ணீரோடு அணைத்துக்கொண்டார். ஆதிரனின் இதழ்களோ வெற்றிப் புன்னகையில் விரிய, "நான்தான் சொன்னேனே டாட், நாமதான் ஜெயிப்போம்னு. இனி ஆட்சி நம்ம கையில..." என்றான் அழுத்தமாக.



ஆனால், யாழினியோ அதிர்ந்துப் போய் நின்றுக்கொண்டிருந்தாள். அவள் ஏற்கனவே அறிந்து வைத்ததுதான், ஆனாலும் ரகுவீரின் முகத்தில் தெரியும் சந்தோஷத்தைப் பார்க்கப் பார்க்க அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. விழிகள் சிவக்க, பழி வெறி மின்ன அவரையே அவள் பார்த்திருக்க, சரியாக ஆதிரனின் ஜோடி விழிகள் அவளின் முகத்தில் தெரிந்த ஆக்ரோஷத்தை கண்டுகொண்டது.



"ஐயா இதுக்கு பார்ட்டீ கொடுத்தே ஆகணும்" என்று அங்கிருந்த ஒருவன் கேட்க, "அதுக்கென்னடா! பதவி ஏற்பு விழா முடிஞ்ச அன்னைக்கே நம்ம பீச் ஹவுஸ்ல பார்ட்டீ பண்ணிடலாம். இனி நாம போடுறதுதான் சட்டம்" என்று தன் தோளிலிருந்த துண்டை சரியாகப் போட்டவாறு ரகுவீர் சொல்ல, யாழினியைத் தவிர அங்கிருந்த மொத்தப் பேருமே அவளை சுற்றி கத்தி கூச்சல் போட்டனர்.



அதேநேரம் சித்தார்த்திடமிருந்து அழைப்பு வர, திரையைப் பார்த்தவள் மெல்ல அங்கிருந்து நகர்ந்து சென்று அழைப்பை ஏற்க, "ஹெலோ யாழ் வாட்டிங்ல..." என்று கவலையோடு ஆரம்பித்தான் அவன்.



"எனக்கு தெரியும், ஆனா எனக்கு இதை பத்தி கவலை இல்லை. இந்த ரகுவீருக்கு எதிரா இப்போவுமே ஒரு ஆதாரம் கிடைச்சாலும் அவன மொத்தமா சிதைச்சிடலாம். ஆனா... என்ன பண்றதுன்னுதான் தெரியல. அவன் சிரிக்குறத பார்க்க பார்க்க எனக்கு வெறியாகுது" என்று அவள் எரிச்சலாக சொல்ல, "அப்பா ரொம்பவுமே சோர்ந்து போயிட்டாரு, எனக்குமே இதை ஏத்துக்க முடியல. ஆனா ஒன்னு..." என்று சட்டென நிறுத்தினான் சித்தார்த்.



"என்ன?" என்று அவள் கேள்வியாக புருவத்தை நெறிக்க, "இல்லை... நீ ஆதிரன காதலிக்கிறேன்னு சொன்ன, அப்பறம் எப்படி நீ அவங்களுக்கு எதிரா இருக்கேன்னு சொல்ற. எனக்கு என்னவோ நீயும் கூட..." என்று அவன் தடுமாறியபடி அவள் மேலிருக்கும் தன் சந்தேகத்தை சொல்ல, "இப்போ நீ என்ன சொல்ல வர்ற, நான் உன்னை ஏமாத்தினேன்னா?" என்று கோபத்தோடுக் கேட்டாள் யாழினி.



"அப்படியே வச்சுக்கலாம்" என பட்டென்று சொன்னவனுக்கு தன் காதல் கைக்கூடாத கோபம் வேறு. ஆனால், யாழினிக்குதான் கோபம் உச்சகட்டத்திற்கு எகிறியது.



"உனக்கே சந்தேகம் வந்ததுக்கு அப்பறம் இனி எதுவுமே வேணாம். நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன். நீ நினைச்சதை கூடிய சீக்கிரம் நான் பொய்னு உணர வைக்கிறேன்" என்றுவிட்டு அவள் அழைப்பைத் துண்டித்து விட, 'ஷீட்!' என்று கோபத்தில் அலைப்பேசியை தூக்கி எறிந்தான் சித்தார்த்.



இங்கு இவ்வாறு இருக்க, அங்கு ரகுவீரின் வீட்டின் முன்னே நிறுத்தப்பட்ட காரிலிருந்து வேகமாக இறங்கினான் தஷ்வந்த்.



"ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் கௌரி..." என்று சொல்லிக்கொண்டு வீட்டுக்குள் ஓடியவன் சுற்றி முற்றி அவள் இல்லாததைப் பார்த்து மாடிப்படிகளில் தாவி குதித்து கௌரியின் அறையை நோக்கிச் சென்றான்.



கதவை திறந்துப் பார்க்க, அந்த அறையே வெறிச்சோடிப் போயிருந்தது. "கௌரி... கௌரி..." என்று அழைத்தவனுக்கு ஏதோ ஒரு பயம் உள்ளுக்குள் தொற்ற மீண்டும் வேகமாக ஹாலுக்கு வந்து அங்கிருந்த இரண்டு வேலையாட்களை அழைத்து விசாரித்தான்.



யாரிடமும் எந்த பதிலும் இல்லை. சரியாக, அவனிடம் ஓடி வந்த வாட்ச்மேன், "சின்னய்யா, நீங்க வந்துட்டீங்களா! நீங்க போன கொஞ்ச நேரத்துலயே அந்த பொண்ணு அழுதுக்கிட்டு வெளியில போனத பார்த்தேன். நான் கூப்பிட கூப்பிட காதுக்கே கேட்காத மாதிரி போச்சு" என்று பதற்றமாகச் சொல்ல, அதிர்ந்துப் போய் அவனைப் பார்த்த தஷ்வந்துக்கு இப்போதுதான் நிதர்சனம் புரிந்தது.



"அப்போ... அப்போ கௌரி என்னை விட்டுட்டு போயிட்டாளா! அப்போ எல்லாமே அவ்வளவுதானா?" என்று அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்தவன், "அவ எந்த வழியால போனா?" என்று கேட்டு அந்த வழியே அங்குமிங்கும் அவளைத் தேடி அலைந்துக்கொண்டு செல்ல, நேரமும் வேகமாக ஓடியது.



ஒருகட்டத்தில் அலைந்து திரிந்து அவள் கிடைக்காமல் சோர்ந்துப் போய் அப்படியே தெருவோரத்தில் அவன் அமர்ந்துவிட, மேடிட்ட வயிற்றோடு அவள் நின்றிருந்த உருவம் மனக்கண் முன் தோன்றி அவனை பாடாய்படுத்தியது.



கலங்கிய விழிகளோடு பித்து பிடித்தவன் போல் அவன் அமர்ந்திருக்க, சரியாக அவனெதிரே வந்து நின்றது ஆதிரனின் கார்.



காரிலிருந்து இறங்கிய ஆதிரன், "நம்ம வீட்டுல எவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு. பிச்சைக்காரன் மாதிரி தெருவுல இருக்க. சீஃப் மினிஸ்டர் பையன் பண்ற காரியமாடா இது?" என்று மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு காரில் ஒற்றைக் காலை மடக்கி சாய்ந்தவாறு கேட்க, அழுது அழுது சிவந்து வீங்கிய முதத்தோடு நிமிர்ந்துப் பார்த்த தஷ்வந்த், "அவ என்னை விட்டு போயிட்டா அண்ணா" என்றான் பாவமாக.



"ஓஹோ.. இதுதான் சங்கதியா! அவ போனா என்ன, நீ ஜாலியா லண்டனுக்கு போக வேண்டியதுதானே! கௌரி என்ன கௌரி... கலர் கலரா பொண்ணுங்க இருப்பாங்க" என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு அவன் சொல்ல, தலையைக் குனிந்துக்கொண்டவனோ அழுகை வர கீழுதட்டைக் கடித்துக்கொண்டான்.



"நீ அழுறதும் நல்லாதான் இருக்கு. இருந்தாலும் ரொம்ப அழாத! ஐ ஹேவ் அ சர்ப்ரைஸ் ஃபார் யூ!" என்று அவன் கார் பின்சீட்டுக் கதவைத் திறக்க, அங்கு கைகளைப் பிசைந்தவாறு அமர்ந்திருந்தாள் கௌரி.


தஷ்வந்தோ உச்சகட்ட அதிர்ச்சியோடு அவளைப் பார்த்து விட்டு ஆதிரனைப் பார்க்க, அவனோ தன் சகோதரனைப் பார்த்து இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டான்.
 
Status
Not open for further replies.
Top