ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டியணைக்க வா காவலனே 4

Status
Not open for further replies.

kala Elumalai

New member
Wonderland writer
விஜய் சமையல் அறையில் அவன் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.. "மணி காபி எடுத்துட்டு வா.." என்று ஒரு குரல் கேட்டது.. விஜய் யாரென ஹாலை பார்க்க.. "தம்பி அவங்க தான் யாத்ராம்மாவோட அத்தை சரோஜா.. அவங்க பக்கத்தில் இருக்கிறது அவங்க பொண்ணு வித்ரா.." என அங்கு ஷோபாவில் அமர்ந்திருக்கும் இருவரையும் காட்டி சொல்ல ..

அதற்கு விஜய் "ம்ம்.. தெரியும்.. வீட்டைப்பத்தி விசாரிக்கும் போது தெரிஞ்சிகிட்டேன் .." என்றான் அவர்களை பார்த்துக் கொண்டே ..

"சரி வாங்க தம்பி.." என்று அவர் அவனை அழைக்க..

"எங்க.." என்றான் விஜய் அவரை உறுத்து விழித்து கொண்டே ..

" அவங்களுக்கு உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.. தம்பி.. " என்றார்..

"இதெல்லாம் எதுக்கு சொல்லிட்டு.." என அவன் சலித்துக் கொள்ள..

"சொல்லித்தான் ஆகணும் தம்பி.. இந்த வீட்டில் புதுசா எந்த ஒரு விஷயம் நடந்தாலும் அதனை உடனடியாக அவங்க காதுக்கு கொண்டு போய் சேர்க்கணும்.. இல்லனா நம்மளால இங்க வேலை பார்க்க முடியாது.." என்று பயமாக சொல்ல..

"ஏன்.. நமக்கு சம்பளம் குடுக்க போறது யாத்ரா இல்லனா நேத்ரா தானே.. இவங்க எப்படி நம்மளை வேலையை விட்டு தூக்குவாங்க.." என்று அவன் கேட்க..

"முடிவெடுக்குறது அந்த பொண்ணுங்கள இருந்தாலும்.. அந்த முடிவு சரி தானனு முடிவு எடுக்குறது இவங்கதான்.. வாங்க தம்பி.." அவர் பாவமாக அழைக்க.. சரியென அவனும் வந்தான்..

முன்னே வந்து நின்றவனை அம்மாவும் மகளும் பார்க்க.. "யாரு இவன்.." என மரியாதையே இல்லாமல் சரோஜா கேட்க.. விஜய்க்கு பற்றிக் கொண்டு வந்தது..

"இவன் என்னோட அக்கா பையன்மா.." என அவர் பணிவாக கூறிக் கொண்டே தாய்க்கும், மகளுக்கு காபி கொடுக்க..

"வரவன், போறவன் எல்லாம் தங்க இதென்ன சத்திரமா.. உன்னை பாக்க வந்தா பார்த்துட்டு கிளம்ப வேண்டியது தானே.." என அவர் சிடு சிடுக்க.. விஜய்க்கு கோபம் வந்தது ..

"தம்பி என்னை பார்க்க வரலம்மா.. இங்க வேலை பார்க்க வந்திருக்கான்.." என்று சொல்ல..

நிமிர்ந்து அவனை கண்களால் ஒருமுறை அளந்தவர்.. "அதான் நேத்ராவுக்கு ஆல்ரெடி ஒரு பாடிகார்ட் இருக்கானே.. அப்புறம் எதுக்கு இன்னொருத்தன்.." என விஜய்யின் கட்டுடல் அமைப்பை வைத்து அவர் கேட்க..

"இவன் பாடிகாட் இல்லம்மா.. சமையல்காரன்.." என்று சொல்ல..

"சமையக்காரனா" என வாயை பிளந்த வித்ரா .. "பாத்த அப்படி தெரியலையே.." என வித்ரா ..

"குக் தான்.." என அழுத்தமாக விஜய் கூறினான் ..

"நீ குக்னு நாங்க எப்படி நம்புறது.."என கிண்டலாக கேட்ட வித்ரா.."போய் நல்ல டேஸ்ட்டா ஏதாவது செஞ்சி எடுத்துட்டு வா அப்புறம் நம்புறோம்.. உன்னை வேலைக்கு சேத்துக்குறோம்.." என்று சொல்ல.. கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அவன் சமையல் அறையை நோக்கி செல்ல.. பின்னாலே சென்றார் மணி..

விஜய் கோபமாக கத்தியை எடுத்து காயை வெட்ட தொடங்க .. அங்கு வந்த மணி.. "தம்பி.. தம்பி அவங்க அப்படி பேசுன எதையும் தப்பா எடுத்துக்காதீங்க ..." என்று அவர் பாவமாக சொல்ல..

"என்னனா இது .. அந்த இரண்டு பொண்ணுங்களே அவ்வளவு அமைதியா சரினு சொல்லிட்டு போறாங்க.. இவங்க என்னடானா ஓவரா பன்றாங்க.." என கோபம் கொள்ள..

"நான்தான் சொன்னேன் இல்ல தம்பி.. அவங்க அப்படித்தான் அவங்களை நீங்க கணக்கிலே எடுத்துக்காதீங்க.." என சமாதானம் செய்தார் அவர்..

இதுவரை அவனை யாரும் அப்படி கேள்வி கேட்டதில்லை.. முதன் முதலில் நிற்க வைத்து மரியாதை இல்லாமல் பேசியது அவனுக்கு சற்று அவமானமாக இருந்தது.. தான் வந்த நோக்கத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தினான்..

ஜிம்மில் இருந்து அறைக்கு சென்ற யாத்ரா குளித்து முடித்து ஆபீஸ் செல்வதற்காக தயாராகி இருந்தாள்..

Olive கலர் Shiffon சாரீயை அழகாக மடிப்பெடுத்து கட்டி இருந்தாள்.. அவள் கலருக்கு மிகவும் அம்சமாக இருந்தது.. மென்மையான மயில் இறகாய் வெட்டி இருந்த கூந்தலை முழுவதுமாக விரித்து விட்டிருந்தாள்.. அது அவள் இடைவரை நீண்டிருந்தது.. மிதமான ஒப்பனை..ஒரு கையில் வாட்ச் மறுக்கையில் ப்ளாட்டினத்தினால் ஆனா பிரேஸ்லெட் ஒன்றை அணிந்திருந்தாள்.. கழுத்திலும், காதிலும் கூட ப்ளாட்டினத்தினால் ஆனா மெல்லிய செயின் மற்றும் தோடு ஒன்றை அணிந்திருந்தாள்.. மீடியமான ஹீல்ஸ் ஒன்றை அணிந்து கொண்டு ஹாண்ட்பேக்குடன் அறையில் இருந்து அவள் வெளியேற.. அவள் முன் வந்து நின்றான் அவளின் மாமன் மகன் ரிஷிகேஷ்..

அவள் என்னவென்று பார்வையாலே கேட்க.. "இன்னைக்கு ரொம்ப அழகா இருக்க.." என தினமும் கூறும் அதே வார்த்தைகளை இன்று அவன் கூற.. தினமும் போலவே இன்றும் கடுப்பானவள்.. "சொல்ல வந்ததை மட்டும் சொல்லு.. தேவையில்லாததை பேசாத.." என கோபமாக பேச..

சரி என வாயை மூடிக் கொண்டவன்.. " இன்னைக்கு கப்பலில் நம்ம கம்பெனிக்கான திங்கஸ் எல்லாம் வருது.. அதை எங்க இறக்கனுன்னு கேட்க வந்தேன்.." என்று சொல்ல..

"ஏன் உனக்கு தெரியாத.." என்றாள் கோபமாக..

"குடோன் full ஆகிடுச்சுனு நானும் உன்கிட்ட மூணு நாளா சொல்லிட்டு தானே இருக்கேன்.. நீ தான் அதைப்பத்தி கண்டுக்கவே இல்லை.." என அவள் மீது குற்றம் சாடினான் அவன்..

" ஒ.. நான்தான் மறந்துட்டேனா.. " என நெற்றியை தேய்தவள்.. "சரி இன்னைக்கு ஒரு நாள் ஹர்பார்ல இருக்கட்டும்.. இன்னைக்குள்ள ஏற்பாடு பண்ண முடியுதான்னு பாக்குறேன்.." என்று அவள் சொல்ல..

"ஹர்பார்ல வைக்குறது ரிஸ்க் யாத்ரா.." என்றான் பதட்டமாக..

"அதெல்லாம் ஒரு ரிஸ்க்கும் இல்லை.. நம்ம ஆளுங்க அங்க இருக்காங்க இல்ல.. அவங்க பார்த்துப்பாங்க.." என்றவள்.. "முடிஞ்சா நீயும் போய் பார்த்துக்கோ.. கோடிக்கணக்கான ரூபாய்.. நஷ்டமாகிடுச்சு தொலைச்சிருவேன்.." என அவனை பார்வையாலே மிரட்ட.. அவனும் சரியென தலை அசைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்..

ஆளுமை மிக்க பெண் அவள் யாத்ரா.. ஆண்களுக்கு நிகரானவள் கூட.. ஆண்கள் மட்டுமே கொடிகட்டி பறக்க வேண்டும் என நினைக்கும் அத்தனை இடங்களிலும் தைரியமாக கால் பதித்து வெற்றி காணும் வீரப்பெண் இவள்.. எதிரில் நிற்பது ஆண் என்றாலும் பயமின்றி எதிர்த்து நிற்பாள்.. மன தைரியமும்.. திடனும் அதிகம் உள்ள பெண்ணவள்.. தாயும் இல்லாமல்.. தந்தையும் வெளிநாட்டில் இருக்க தனியாக நின்று பிஸ்னஸ்யை இந்தியாவில் நன்றாக வழி நடத்தி வருகிறாள்.. கூடவே தங்கையின் கனவான காதநாயகி ஆசைக்கும் துணை நின்று அவள் பெரிய இடத்தை பெற அவளுக்கு வழி காட்டினாள்.. சினிமா துறை என்றால் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை இல்லாமல் இல்லை.. அப்படிபட்ட ஒன்றை இன்று வரை தங்கையிடம் வரவிடாமல் அவளை அரணாக நின்று காத்துக் கொண்டிருக்கிறாள்.. தங்கை ஏதாவது பிரச்சனை என்றால் அவளுக்கு முன்னாள் சென்று அதை சரி செய்வது இவளாக தான் இருப்பாள்.. பிசினஸ் ஃபீல்டில் இருக்கும் பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் இவளை கண்டால் பொறாமையாக தான் இருக்கும்.. அந்த அளவிற்கு இந்த சிறுவயதிலேயே புகழின் உச்சத்தை தொட்டவள் யாத்ரா.. பல அரசியல்வாதியின் மகன்கள்.. சினிமா ஹீரோக்கள் மற்றும் பிரபலமான மனிதர்கள்.. பிசினஸ் மேக்னட்கள் என பலரிடம் இருந்து காதல் மற்றும் திருமண ப்ரொபோசல்கள் வந்திருந்தாலும் அதனை எல்லாம் விழி அசைவினில் நிராகரித்து விட்டு இன்றளவும் சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவையவள்..

ரிஷியிடம் பேசிவிட்டு கீழே இறங்க படிக்கட்டை நோக்கி சென்றவளுக்கு அந்த முதல் தளத்திலே கண்ணாடிகளால் ஆனா நேத்ராவின் ஆபீஸ் அறையில் துருவன் மட்டும் அமர்ந்திருப்பது தெரிந்தது..

காபி அருந்திய வண்ணம் லாப்டாபில் ஏதோ வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனை கண்டதும் யாத்ராவிடம் மெல்லிய புன்னகை..

அதே புன்னகையுடன் நேத்ராவின் அறையை பார்க்க அதுவோ மூடி இருந்தது.. சரியென மனதில் எண்ணிக் கொண்டவள்.. துருவனை நோக்கி சென்றாள்..

லாப்டாபிலேயே கண்ணை வைத்திருத்தவன் தன் முன் ஏதோ நிலழடுவதை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க.. நின்றிருந்தாள் அவள்.

அவளை கண்டதும்.. "குட் மார்னிங் மேம்.." என எழுந்து நின்றவனின் கண்கள் அழகோவியமாய் தன் முன்னே நின்றிருந்தவளின் தலை முதல் கால் வரை மேய்ந்து.. கடைசியாக அவள் இதழில் பாய்ந்து மீண்டது..அதுவும் ஒரு நொடி தான் விழிகளை திருப்பிக் கொண்டான்..ஆனால் அதையும் அவள் கண்டுக் கொண்டாள்..

" நிறுத்தி நிதானமாகவே பார்க்கலாம்.. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டேன்.. " என்றவாறு தனது கூந்தலை கோதியவள்.. அவன் குடித்து மீதம் வைத்திருந்த காபியை எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்தாள்..

"அது நான் குடி .." என பதறிக் கொண்டு கூற வந்தவனின் வார்த்தைகள்.. அவள் விழி பார்வையில் அடங்கி போனது..

காபியை ஒருவாய் குடித்தவள்.. "என்ன முடிவு எடுத்துருக்க.." என கால்மேல் கால் போட்டவாரு கேட்க .. அவனிடம் பதில் இல்லை.. தலை குனிந்து நின்றிருந்தான்..

"ம்ம்.." என தலை ஆட்டியவள்.. "அப்போ கடைசி வரைக்கும் பதில் கிடைக்காது.." என அவனை பார்த்து கூற.. அதற்கும் அவன் வாயை திறக்கவில்லை..காபியை முழுதாக குடித்து முடித்தவள்.. எழுந்து நின்று.."அமைதியாவே இருந்தா விட்ருவேன்னு நினைக்காத..நீ எனக்கு சரியான பதில் சொல்ற வரைக்கும் நான் கேட்டுட்டே தான் இருப்பேன்.. கேக்கறது மட்டுமில்ல.. " என அவனை நெருங்கியவள்.. அவனின் சட்டையை பிடித்து இழுத்து உதட்டில் முத்தமிட.. நொடி பொழுதில் நடந்த விபரீதத்தில் அவளை விலக்கி நிறுத்தினான்.. சுற்றியும் யாரவது இருக்கிறார்களா என்று பார்க்க.. மேசையின் மீது சாய்ந்து நின்றவள்.. " இது என் வீடுடா.. யார் வந்தா எனக்கு என்ன பயமா .. " என கேட்டுக் கொண்டே மீண்டும் அவன் காலரை பிடித்து இழுக்க.. அவளின் மீது சாய்ந்தவன் அவளின் கையை பிடித்து டேபிளின் மீது வைத்து அழுத்தினான்.. "ப்ளீஸ் நேத்ரா மேம் வர போறாங்க.." என பயத்துடன் அவன் சொல்ல..

"அப்போ எனக்கு பதிலை சொல்லு.." என்றாள் புன்னகையுடன்..

அவனிடம் பெருமூச்சு மட்டுமே வந்தது..அந்த மூச்சு காற்று அவள் முகத்தில் பட.. அதனை ரசித்தாள்

அவனை பார்த்தாலும் பாவமாக இருக்க.. "சரி இப்போ விடுறேன்.." என அவனிடம் இருந்து கைகளை விடுத்துக் கொண்டவள்.. "ஈவினிங் மாட்டுவ.." என்று விட்டு அங்கிருந்து சென்றாள்..

அவள் போன பின்பு தான் அவனுக்கு மூச்சே வந்தது..

தொடரும் 🧡

1000091170.jpg
 
Status
Not open for further replies.
Top