ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கட்டியணைக்க வா காவலனே 1

Status
Not open for further replies.

kala Elumalai

New member
Wonderland writer
இதில் வரும் அத்தனையும் கற்பனையே..

சென்னை மாநகர கமிஷனர் அலுவலகம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது.. கலந்துரையாடல் அறையின் உள்ளே காவல் துறையில் மிக முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் குழுமி ஏதோ விவாதம் செய்துக் கொண்டு இருந்தனர்..

ஒருபக்கம் இது முடியும் என்றும் மறுப்பக்கம் இது முடிவே முடியாது என்று விவாதித்து கொண்டிருக்க.. அவர்களுக்கு நடுநாயகமாக அமர்ந்து இரு தரப்பினரும் கூறும் கருத்துக்களை காதுக் கொடுத்து பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் கமிஷனர் பரதன்.. குறைந்தது ஐம்பது வயதை நெருங்கி கொண்டிருந்தார் அவர்..

"சார்.. இவங்க சொல்றது தான் உண்மைனு நிரூபிக்கிற மாதிரி நம்மகிட்ட எந்தவொரு ஆதாரமும் இல்ல சார்.. அதனால இப்போ இறங்கினோம் ரிஸ்க்கு நமக்கு தான்.." என ஏசி ராஜேந்திரன் சொல்ல..

"அதுக்காக இறங்கி பாக்கவே இல்லனா.. நிலைமை இன்னும் மோசம் ஆகிடும் சார்.. அப்போவும் நம்ம தலையை தான் உருட்டுவாங்க.." என மற்றொரு ஏசியான கிருஷ்ணன் சொல்ல.. அவர் பக்கம் இருப்பவர்களும் அவர் சொல்வது தான் சரி என்பது போல் தலை அசைத்தனார்..

"சார் நாளைக்கு பதில் சொல்ல பயந்துட்டு இன்னைக்கே கிணற்றில் குதிக்க முடியுமா.. என்ன.. அந்தமாதிரி தான் இருக்கு நீங்க சொல்றது.. என்னைக்கோ வர போற பிரச்சனைக்கு இப்போவே தீர்வு காணனுன்னு துடிக்கிறது.." என இன்னுமொரு காவலர் பிரபு கூற..

"சார் துடிக்க வேண்டிய இடத்தில் தான் நாம இருக்கோம்.. மக்கள் நம்மளை நம்பி தான் இருக்காங்க.. அவளுக்கு இப்படி ஒரு கெட்ட விஷயம் நடக்கும் போது பார்த்துட்டு நம்மளால எப்படி சும்மா இருக்க முடியும்.. அதுக்காக வா நாம கைநீட்டி சம்பளம் வாங்குறோம்.." என நேர்மையான அதிகாரியான விஜய் துடித்தான்..

"சார் நீங்க இளரத்தம் அப்படிதான் கொதிப்பிங்க.. ஆனா நாங்க அப்படி இல்லையே.. இப்போவே 45 வயசு தாண்டிடுச்சி.. இதுக்கு மேலையும் முடியாது.. அதனால வர போற நாள் எல்லாம் எந்த பிரச்சனைக்கு போகாம அமைதியா இருந்துட்டு போயிடலானு இருக்கோம்.." என்றார் பிரபு..

அவரின் வார்த்தையை கேட்டு கொந்தளித்த விஜய்.. "சார் கொஞ்சமாச்சும் மனச்சாட்சியோட பேசுங்க.. இந்த மாதிரி இல்லீகலா ட்ராக்ஸ் தமிழ்நாட்டுகுள்ள வரதால அதிகமாக பாதிக்கப்படுறது பெண்பிள்ளைகள் தான்.. உங்க வீட்டில கூட காலேஜ் படிக்கிற இரண்டு பொண்ணுங்க இருக்கு.. உங்களுக்கு நினைவு இருக்கா.." என்று கேட்க.. அவனின் வார்த்தை பிரபுவுக்கு சுருக்கென குத்தியது

"பாவம் சார் அந்த பொண்ணு நிக்கிதா.. நம்ம எல்லோரும் தானே போய் பார்த்தோம்.. எப்படி சுயநினைவே இல்லாம கடந்தா..ஒருத்தன் தன்னை ரேப் பண்ணது கூட அந்த பொண்ணுக்கு தெரியல..அதுக்கு காரணம் என்ன..அந்தளவுக்கு அந்த பொண்ணு உடம்பில் ட்ராக்ஸ் ஏத்தி இருக்காங்க.. பாவமில்லையா.." என்றவன் இடை நிறுத்தி.. "இத்தனைக்கும் அந்த பொண்ணுகிட்ட தப்பா நடந்துகிட்ட அந்த பையனுக்கும் சுயநினைவு இல்ல.. அவனும் எடுத்துட்டு அந்த பொண்ணுக்கும் வலுகட்டாயமாக குடுத்துருக்கான்.. ஏற்கனவே இங்க எவ்வளவு பிரச்சனை போய்ட்டு இருக்கு.. இப்போ இந்த ட்ராக்ஸ் பிரச்சனையும் அப்படியே விட்டுட்டோம்னு வைங்க.. இங்க நிறைய இழப்புகளை நாம சந்திக்கணும் சார்.. குறிப்பாக பெண்களோட இழப்புகளை.. அதனால உடனடி இந்த case யை எடுத்து விசாரிக்கணும்.." என தனது கருத்தை முன் வைத்தான் விஜய்..

சமீப காலமாக சென்னையில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஏரியாவை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இளம் வயதான இன்ஸ்பெக்டர் விஜய்.. அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் அத்தனை ரவுடிசத்தையும் ஒழித்து அங்கு இருக்கும் மக்களின் நலனுக்காக நேர்மையாக உழைப்பவன்.. அவன் வந்தபின்பு அந்த ஏரியாவில் நிம்மதி என்ற ஒன்றே நிலவி வருகிறது என்றால் அது அத்தனை மிகையாகாது..

"விசாரிக்கனும்.. விசாரிக்கணும்னு மட்டும் சொன்னா யாரை விசாரிக்கிறது.. எப்படி விசாரிக்கிறது.. இது எங்க இருந்து வருது.. யார் கொண்டு வராங்க.. எப்படி கை மாறுது.. அதை எங்க வச்சி யாரு டிஸ்ட்ரிபியூட் பன்றாங்க அப்படினு நமக்கு ஒரு விவரமும் தெரியாத அப்போ.. எங்கிருந்து ஆரம்பிக்கிறது..அதுமட்டுமில்லாம இதுல நம்மளால மட்டும் எப்படி முடிவு எடுக்க முடியும்.. அரசியல்வாதிகளையும் சேர்த்து கலந்தாலோசிக்க வேண்டாமா.. அவங்ககிட்ட சொல்லாம நாம மட்டும் எந்தவொரு ஆக்ஷன் எடுத்தாலும் பின்னாடி அதோட பாதிப்பு நமக்கு மட்டும் தான்.. அவங்க எல்லாம் நம்மள சும்மாவே விடமாட்டாங்க.." ஏசி ராஜேந்திரன் சலித்துக் கொள்ள..

"சார்.. எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க.." என்றான் விஜய்..

"அதுக்குள்ள எல்லாத்தையும் கண்டுபிடிச்சிடுவீங்களா.." என கிண்டலாக கேட்டார் பிரபு..

"என்னால முடிஞ்ச அளவுக்கு இது எங்க ஸ்பிரட் ஆகுதுன்னு கண்டுபிடிக்கிறேன்..இதுல யார் யாரெல்லாம் சமந்தப்பட்டு இருக்காங்க.. யார் மூலமா நாம அடுத்த மூவ் பண்ணலாம்.. எந்த அரசியல்வாதியாவது இதுல சமந்தபட்டு இருக்காங்களானு விசாரிக்கிறேன்.. அதுக்கு அப்புறமா.. அவங்ககிட்ட நாம பேசலாம்.." என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்ல..

அவனின் மீது அசையாத நம்பிக்கை இருந்ததால் கமிஷனரும் சரியென தலை அசைத்தார்.. அவன் அவருக்கு சல்யூட் அடித்து விட்டு வேகமாக அங்கிருந்து வெளியேற.. கிருஷ்ணவும் வெளியேறினான்..

"சார்.. நீங்க ரிஸ்க் எடுக்குறீங்கனு தோணுது.. இதுக்கு பின்னாடி யாராவது பெரியப்புள்ளி இருந்தா என்ன பண்ணுவீங்க.." என தான் பயம் கொண்டது மட்டுமல்லாமல் கமிஷனருக்கும் பயத்தை கொண்டு வர முயன்றான் ராஜேந்திரன்..

"யோவ் அதுக்காக இந்த பிரச்சனையை அப்படியே விட சொல்றியா.." என கோபம் கொண்டார் பரதன்..

"இல்ல சார்.. எதுக்கு வீண் வம்புனு தான்.."பிரபு தலையை சொரிந்தார் அவரை பொறுத்த அளவிற்கு எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் மிச்சம் இருக்கும் கொஞ்ச காலத்தையும் தள்ளி விடலாம் என்ற எண்ணம் ..

"உங்களால தான் ஒன்னும் பண்ண முடியல.. அவனாவது பன்றேன்னு சொல்றான்.. அந்த தைரியத்துக்காகவே அவனை நம்பலானு எனக்கு தோணுது.." என்று விட்டு எழுந்தவர்.. "நாம பேசுன ஏதாவது வெளிய போச்சி.. நீங்க இரண்டு பேரும் அவ்வளவு தான்.." என அவர்கள் இருவரை பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருந்த கமிஷனர் எச்சரித்து விட்டு வெளியேறினார்..

"நம்மளை எங்க கொண்டு போய் விட போறாங்களோ.." என புலம்பிக் கொண்டே அவரின் பின்னே வெளியேறினர் இருவரும்..

விஜயும், கிருஷ்ணனும் சேர்ந்து சென்னை முழுக்க ட்ராக்ஸ் பற்றிய விவரங்களை தேடி அலைந்தனர்.. அதனை உபயோகிப்பவர்களை தேடி கண்டுபிடித்து.. அடித்து வெளுத்தனர்.. உண்மையை சொல்லுமாரு அவர்களிடம் கேட்க .. அதை பயன்படுத்தும் யாருக்கும் உண்மையான விவரங்கள் எதுவும் தெரியவில்லை.. கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது.. ஆனாலும் விஜய் மனம் தளராமல் வேலை பார்த்தான்..ஸ்பைகளை சென்னை சிட்டி முழுக்க ஏவி விட்டான்.. இரவு, பகல் பாராமல் ரோந்து பணியில் ஈடுபட்டான்.. தனக்கு கீழ் வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் சென்னையின் முக்கிய பகுதிகளை பிரித்து தந்து மஃப்டியில் அலைய விட்டு கண் மூடவிடாமல் வேலை வாங்கினான்.. ஏதாவது ஒரு விவரத்தையாவது கண்டறிந்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இறங்கி வெறிக் கொண்ட வேங்கையாக வேட்டையாட சுற்றி திரிந்தான்.. அந்த ஒரு வாரத்தில் சரியாக உறங்க மறந்தான்.. உண்ண மறந்தான்.. இவ்வளவு ஏன் சொந்தக் குடும்பத்தையே மறந்து வேலை வேலை என்று மட்டுமே கிடந்தான்.. அந்த ஒரு வாரத்தில் அவன் முகம் சிரிப்பையே மறந்திருக்க.. கிருஷ்ணாவுக்கு அவனை எண்ணி வருத்தமாக இருந்தது..

ஒருவாரம் கழித்து அதே போல் ஒரு காலையில் மீண்டும் அதே இடத்தில் இந்த ஐந்து பேரும் கூட.. பரதன்.. விஜயின் முகத்தை பார்த்தார்..

"என்ன விஜய் விசாரிக்கிறேன் என்று போனீங்க.. இப்போ வெறும் கையோட வந்துருக்கீங்க.." என ராஜேந்திரன் கிண்டல் அடிக்க ..

"இருட்டில ஊசியை தேடினா எப்படி கிடைக்கும்.. அந்த மாதிரி தான் உங்க கதையும்..தெரிஞ்சிக்கவே முடியாத ஒரு விஷயத்தை தேடி ஒரு வாரத்தை வேஸ்ட் பண்ணிட்டீங்க.. இதுக்கு பேசாம உங்க ஸ்டேஷன் வேலையையாவது சரியா பண்ணிருந்தா ப்ரோமோஷனாவது கிடைச்சிருக்கும்.. எதுக்கு இந்த தேவையில்லாத வேலை " என பிரபுவும் சேர்ந்து கிண்டல் அடித்தான்..

அவர்களை முறைத்த பரதன்..விஜயிடம் திரும்பி.. "என்ன விஜய் என்னாச்சி..ஏதாவது க்ளு கிடைச்சதா.." என்று ஆர்வமாக கேட்க..

அவரின் முன் ஒரு பென்ட்ரவை வைத்தான் அவன்... அவர் என்னவென்று விழி விரித்து பார்க்க மற்றவர்களின் கண்களிலும் ஆச்சரியம் மின்னியது .. அதை எடுத்து ப்ரொஜெக்டரில் போட்டு ஒளிர விட்டான் விஜய் .. எல்லோரும் அதை பார்க்க.. அதில் ஒரு நாட்டின் வரைபடம் இருந்தது..விஜய் பேச தொடங்கினான்.. "இந்த நாட்டோட பேரு கன்யா... (கற்பனையான பெயர் )மிகவும் சிறிய நாடு தான் ஆனால் வளர்ச்சியிலும், செல்வ செழிப்பிலும் உயர்ந்த நாடு.. அது மட்டுமில்ல சுற்றிலும் கடல் வளமும், பசுமையும் நிறைந்த நாடு.. உலகத்தில் இருக்கிற பணக்காரங்க எல்லாம் தங்களுக்கு போதுமான அளவு செல்வத்தை சேர்த்தபின் வளமாக வாழ தேர்ந்தெடுக்குற முதன்மையான நாடு இதுதான்.." என்று சொல்ல...

"சரி அதுக்கும்.. நம்ம கேஸ்சுக்கும் என்ன சம்மந்தம் விஜய்.." என குறுக்கே கேள்வி கேட்டார் ராஜேந்திரன்..

"இருக்கு.. அதாவது இப்போ நம்ம நாட்டில் பரவி இருக்குற ட்ராக்ஸ் எல்லாம் இந்த நாட்டில் விளையுறது தான் .." என்று இடியை இறக்க..

எல்லோரின் முதுகு தண்டும் ஒரு நொடி நிமிர்ந்தது..

"என்ன சொல்றிங்க விஜய்.." என கமிஷனர் பரதன் அதிர்ச்சியாக கேட்க..

"ஆமா இந்த வகையான ட்ராக்ஸ் அதிகமாக உருவாகுற நாடு இதுதான்.. இவங்க இதை பல நாடுகளுக்கு பர்மிஸ்ஸினோட லீக்கலா ஏற்றுமதி பண்ணிட்டு இருக்காங்க.. ஆனா அவங்க பெர்மிஸ்ஸின் இல்லாம இல்லீகலா விக்கிற இடம் தான் நம்ப தமிழ்நாடு.." என்று தான் சேகரித்த விவரங்களை விஜய் சொல்ல..

"இதை யாரு பண்றா.." என அதிமுக்கியமான கேள்வி ஒன்றை பரதன் விஜய்யின் முன் வைக்க..

"கன்யா நாட்டில் உட்கார்ந்துட்டு இந்த வேலையை எல்லாம் பண்றது அந்த நாட்டோட பெரிய பிஸ்னஸ்மேனான மகேஷ் யாதவ் தான்.." என அந்நாட்டின் பெரும் புள்ளி ஒருத்தரை குறித்து விளக்க.. அதிர்ந்து போயினர் எல்லோரும்..

"அவன் அந்த நாட்டில் உட்கார்ந்து இங்க என்னை விக்கணும்.. எப்போ விக்கணும்.. ஏன் எவ்வளவு விலைக்கு விக்கனும்.. யாருக்கு விக்கனும்னு எல்லாத்தையும் முடிவு பண்ணிட்டு இருக்கான்.. " என்று கை முட்டிகள் இறுக கோபமாக சொன்னான் விஜய் ..

"அப்போ அவனோட ஆளுங்க இங்க இருந்து அவனுக்காக வேலை பாக்குறாங்கனு சொல்ல வரிங்களா.." என்று ராஜேந்திரன் கேட்க..

"ஆமா.." என்றான் விஜய் ..

"அவங்க யாருனு கண்டுபிடிச்சிட்டீங்களா.." என்று பரதன் கேட்க ..

"அது யாருனு கண்டுபிடிக்க முடியல சார்.. ஆனா பதிலுக்கு அது யாரால கொண்டு வர படலானு ஐடியா இருக்கு.." என்றான் முகத்தில் தீவிரத்தை கொண்டு ..

"யாரு அது.." என்று பிரபு ஆர்வமாக கேட்க ..

"அவரோட பொண்ணுங்களால தான்னு தோணுது .." என்றான் விஜய்..

"பொண்ணுங்கள.. யாரு அவரோட பொண்ணுங்க..அவங்க எங்க இருக்காங்க " என்று பிரபு கேட்க..

"இங்க தான் இருக்காங்க.." என்றவன்.. " NY குரூப்ஸ் ஒப் கம்பெனி MD. யாத்ரா யாதவ் .. AND த கிரேட் இந்தியன் அக்டரஸ் நேத்ரா யாதவ் .. " என அவர்களின் புகைப்படங்களை ஓட விட்டான் விஜய் ..

"அவங்களா..." என திகைத்த கமிஷனர்..

"யாத்ரா கூட பரவாயில்லை விஜய்.. ஆனா நேத்ரா.. அவங்களை நம்மளால கஷ்டடில் எடுத்து கூட விசாரிக்க முடியாது.. அதை மீறி அவங்கமேல கை வச்ச பின் விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்.." என்று அவர் உணர்ந்து சொல்ல..

"அது எனக்கும் தெரியும் சார்.. கூடவே எந்த ஆதாரமும் இல்லாம அவங்களை நம்மளால விசாரிக்க முடியாது.. கூடவே அந்த மகேஷ் வேற நாட்டில் இருக்கிறதால அவனை நம்மளால தொடக் கூட முடியாது.. அவரை கைது பண்ண அந்த நாடும் நம்மளை அனுமதிக்காது.. ஏன்னா அந்த ஆளு அந்த நாட்டோட சிட்டிசனா மாறிட்டான்.. தக்க ஆதாரம் இருந்தாலே ஒழிய நம்மளால அடுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.." என்று விஜய் கூற..

"ஆதாரத்துக்கு எங்க போறது.." என்றார் ராஜேந்திரன்..

"வேற எங்க அவங்களோட வீட்டுக்கு தான் போகணும்.." என விஜய் சொல்ல..

"விஜய் இது ரொம்ப ரிஸ்க்கு.." என்றான் கிருஷ்ணன்..நண்பனின் மீது கொண்ட அக்கறையில் அவன் சொன்னான்

"ரிஸ்க்கு தான்.. ஆனா நாம பண்ணித்தான் ஆகணும்.. அப்போதான் இதை நம்மளால தடுக்க முடியும்..தப்பு பண்றவங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் " என்று விஜய் ஆவேசமாக சொல்ல..

"விஜய்.. எனக்கு கொஞ்சம் டைம் குடு.. நான் யோசிச்சி சொல்றேன்..கூடவே அமைச்சர்கிட்டயும் பேசிட்டு சொல்றேன் " என பரதன் எழுந்து சென்று விட.. விஜய் அவர் பதிலுக்காக காத்திருந்தான்..

"ஆமா இதையெல்லாம் ஒரே வாரத்தில் எப்படி கண்டுபிடிச்ச.." என பிரபு அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேட்க..

"ஆல்ரெடி கொஞ்சம் கண்டுபிடிச்சி இருந்தேன் சார்.. இப்போ ஆள் யாருனு மட்டும் தான் கண்டுபிடிச்சேன்.." என நிமிர்ந்து நின்றான் விஜய்..

தொடரும் 🧡
 

Attachments

  • InShot_20260107_123859775.jpg
    InShot_20260107_123859775.jpg
    468.4 KB · Views: 1
Status
Not open for further replies.
Top