ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

?என் ஜீவன் என்றும் நீதானே!!? - கதை திரி

Sahithya varun

New member
Wonderland writer
பகுதி - 5




சாலையில் கண்களை சுழல‌ விட்டவளின் கண்களில் வேந்தன் தென்பட," இவன் இங்க என்ன பண்றான்???" என்ற கேள்வியை தாங்கியபடி அவனை பார்த்தாள்...

இரு கால்களும் இல்லாமல் இருந்த ஒருவர் கையை ஊன்றி சாலையை கடக்க காத்திருக்க, அவரிடம் சென்ற வேந்தன், அவரை தூக்கி கொண்டு சாலையை கடந்து அவர் சொன்ன இடத்தில் அமர வைத்து தன்னிடம் இருந்த ரூபாய் தாள்களை அவரிடம் குடுக்க அவர் பேசியது நிலாவுக்கு கேட்க வில்லை என்றாலும் மறுத்தது மட்டுமே தெரிந்தது.. வேந்தனும் ஏதோ சொல்லி அவர் மறுக்க மறுக்க அதை அவர் கையில் திணித்தவன் புன்னகையுடன் அகன்றான்..

"சிடுமூஞ்சி என் கிட்ட தவிர எல்லாத்துகிட்டயும் சிரிச்சு பேசும்.. என்கிட்ட மட்டும் வாயை திறக்க கூட காசு கேட்பான்..‌ ம்ம்ம்ம்ம்ம் இவனை‌ பேச வெச்சு... அதுக்கு அப்பறம்
காதலை‌ சொல்லி... இப்பவே கண்ணை கட்டுதே!! பேசாம நேரா அறுபதாவது கல்யாணம் பண்ணிக்கறது தான் இவனுக்கு சரிப்பட்டு வரும் போல!! நீ‌ சிங்கிளாவே தான் காலத்தை போக்கனும் போல! இது என்னடி நிலா உனக்கு வந்த சோதனை!!" என்று புலம்பியவாறு செல்லும் அவனையே வெறித்திருந்தாள்..

பகலன் வருவதை பார்த்ததும் சாதாரணமாக காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.. இருந்தும் அவளின் நினைப்பு முழுவதும் வேந்தனையே சுற்றி இருக்க, ரன்யா கேட்டதற்கும் ஏதேதோ சொல்லி மழுப்பியவளை நம்பாத பார்வை பார்த்தான் பகலன்..

வீட்டிற்கு வரும் வழியில் ஒரு வீட்டின் முன்பு செழியன் வாசலை பெருக்கி கொண்டிருப்பதை பார்த்த நிலா, காரை நிறுத்த சொல்லி இறங்கி அவனிடம் வந்தாள்..

"என்ன ஹேண்ட்செம் இன்னேரத்துக்கு வாசல் தெளிச்சு கோலம் போட போறீயா?? இது எல்லாம் பொண்ணுக வேலைனு உனக்கு இன்னும் தெரியாம இருக்கு ஜோ சேடு.. அவன் கூட இருந்தா உனக்கு எப்படி இது எல்லாம் தெரியும்.." என்று நிலா பாட்டுக்கு பேசி கொண்டே சொல்ல, செழியனோ கையில் விளக்குமாறை தட்டியபடி, புருவத்தை உயர்த்தி அவளை பார்த்தான்..

அவன் நினைப்பை அறிந்தவள் "என்ன அடிச்சிருவீயா?? அடிச்சுருவீயா??" என்று ரவுடி தோணியில் நிலா கேட்க, "ஏன் அடிக்க மாட்டேனு நினைக்கறீயா??" என்றான் கணீர் என்ற குரலில்..

"நீ அடிக்கற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சிட்டு இருக்குமா??? நானும் திருப்பி அடிப்பேன்" என்று முகவாயை இடித்தபடி நிலா சொல்ல, "நீ அடிக்கற வரைக்கும் என் கை என்ன மிளகா பறிச்சிட்டு இருக்குமா?? திருப்பி நான் ஒன்னு விட்டேன் அவ்வளவு தான்" என்று செழியனும் எகிற, "அதையை பறிச்சு உன் கூட இருக்கறவன் மூஞ்சில அப்பு அப்பவாவது வாயை தொறக்கறானானு பார்ப்போம்" என்றாள் சலிப்புடன்..

"அவனை பத்தி ஏதாவது சொன்னே.. சொன்னே.." என்று மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி கேட்ட செழியனை இடுப்பில் கை வைத்து பார்த்த நிலா," என்ன விளக்குமாறுல அடிப்பீயா?? அது வரைக்கும் என் கை என்ன..." என்று மறுபடியும் முதலில் இருந்து தொடங்கியவளின் பேச்சுக்கு இடையில் நுழைந்த பகலன் "என்ன தேங்காய் பறிச்சிட்டு இருக்குமானு கேளு??" என்றான் சிறு முறைப்புடன்..

"அதானே என் கை என்ன தேங்கா பறிச்சிட்டு இருக்கும்னு அவன் நினைக்கறானா????" கோவமாய் கேட்பது போன்று கேட்டவளை பார்த்து ஏகபோக கடுப்பான பகலன், "அடச்சீ கேவலமா நடிக்காதே.. பார்க்க முடில.. உனக்கு மேல இவன் நடிக்கறான்.. உங்களைய பத்தி எனக்கு எதுவும் தெரியாதுனு நினைச்சு என் காதுல பூ சுத்த பார்க்கறீங்களா???" என்றான் சுட்டெரிக்கும் பார்வையில்..

" ப்யூட்டி இன்னும் பயிற்சி வேண்டுமோ??? "என்று தீவிரமாக யோசனை செய்தபடி கேட்ட செழியனிடம், "நானும் அதைய தான் யோசிக்கறேன் ஹேண்ட்செம்.." என்று உதடு பிதுக்கி கூறினாள்..

வேந்தனை விட செழியனின் கிண்டல் பேச்சில் அவனோடு நிலாவும் நன்றாக ஒட்டி கொண்டாள்... இருந்தும் வேந்தனை பற்றி ஒரு வார்த்தை கூட அவனிடம் கேட்க விரும்பவில்லை.. வேந்தனை பற்றி அவனே சொல்ல வேண்டும் என்ற தீர்க்கத்தில் செழியனிடம் எதுவும் கேட்டு கொள்ளாமல் ஒரு தோழியை போல் ஒட்டி கொள்ள, பேச யாருமின்றி இருந்த செழியனுக்கும் அவளின் கள்ளமில்லா பாசம் நெகிழ தான் செய்தது..

செழியன் அவளிடம் பேசுவது வேந்தனுக்கும் தெரியும்.. இருந்தும் அவன் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.. தன்னிடம் மட்டும் தான் இப்படி இருக்கிறாள் என்று நினைத்த வேந்தனுக்கு அதையை பொய்யாக்குவது போன்று அனைவரிடமும் இதே போன்று நிலா இருக்க, இதை அவன் சாதாரணமாக எடுத்து கொண்டான்..

ஆனால் நிலாவின் மனது தெரிந்தால் இவனின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அவன் மட்டுமே அறிவான்...?????

முகத்தை சுருக்கி கொண்டு "என்ன ஹேண்ட்செம் நீ போய் இந்த வேலை எல்லாம் பார்க்கறே?? இதை யாராவது பார்த்தா சிரிப்பாங்க???" என்றவளை பார்த்து புன்னகையுடன், "எப்பவும் நான்தான் செய்வேன் ப்யூட்டி அடுத்தவங்க என்ன நினைப்பாங்கனு நினைச்சா நம்ம வாழ முடியுமா!??" என்க, "அதுவும் சரிதான்.. ஆனா எங்களைய வீட்டுக்குள்ள விட கூடாதுனு வாசல்யே நிற்க வெச்சு பேசறீயல்ல?? " என்று கேட்டாள் உதட்டை சுழித்து..

செழியன் பதறி, "நான் கூப்பிட்டா தான் நீ வருவீயா??? "என்று இவனும் உதட்டை சுழித்து கேட்க, "அட போ ஹேண்ட்செம்.. எனக்கு இப்பதான் உன் வீடே தெரிஞ்சுச்சு.. இதுல எப்படி நான் வர்றது" என்று சலித்து கொண்டே உள்ளே செல்ல போன நிலாவின் கையை பிடித்த பகலன், "எம்மா நிலாமா அங்க உன் அப்பன் நம்மளைய காணோம்னு போஸ்ட்டர் அடிச்சு ஒட்டிற போறாரு.." என்று பாவமான சொன்னவனுக்கு பதிலேதும் சொல்லாமல் துள்ளி குதித்தபடி வேந்தனின் வீட்டினுள் காலெடுத்து வைத்தாள் மென்னிலா..

ஒரு அறையுடன் கூடிய சின்ன வீடுதான்.. ஆனால் சுத்தமாக அவ்வளவு அழகாக இருந்தது பார்ப்பதற்கு.. வீட்டை பார்த்து கொண்டே, "என்ன ஹேண்ட்செம் வீட்டை இவ்வளோ சுத்தமா வெச்சிருக்கே?? எனக்கு எல்லாம் இது சுட்டுபோட்டாலும் கூட வராது" என்று திகைப்பில் கேட்டவளுக்கு சிறு புன்னகையை பதிலாய் தந்த செழியன், " நானும் உன் செட் தான் ப்யூட்டி.. இந்த வேலை எல்லாம் வேந்தனோடது தான்" என்றான் மெச்சுதலாய்..

வேந்தன் என்ற பெயரை கேட்டதும் சட்டென திரும்பிய நிலா, "அந்த சிடுமூஞ்சி பேரு வேந்தனா??" என்று கண்கள் விரிய கேட்டவளுக்கு "ம்ம்ம்ம் மகிழ் வேந்தன்.." என்றான் புன்னகையுடன்..

மேலும் "அவனும் நானும் ஒன்னா பிறந்தவங்க தான்.. ஆனா என்னவோ அவனை மாதிரி என்னால இருக்க முடில??" என்று சொல்ல, நிலாவோ மைண்ட் வாய்சில் "ஆளு மாதிரியே பேரும் சூப்பரா இருக்கே.". என்று நினைத்தவள், "அவன் உன் கூட பிறந்தவனு சொன்னா யாரும் நம்ப கூட மாட்டாங்க.. என்னாலயே நம்ப முடில" என்று இச் கொட்டி கூறியவளை பார்த்து சிரித்தான்..

"அதையை விடு ப்யூட்டி.. காபியா?? டீயா??" என்று குடிப்பதற்கு எது வேணுமென்று கேட்க, "அடேய் இங்க நானும் தான்டா இருக்கேன்.. என்று கதறிய பகலனிடம், "உன்னைய எப்படி மச்சி மறப்பேன்' என்றான் பகலனின் தோள் மீது கை போட்டபடி..

"அப்ப ஸ்ட்ராங்கா ஒரு காபி போடு மச்சி" என்று பகலனும் அவனின் தோள் மீது கை போட்டு சொல்ல, "அதுக்கு என்ன மச்சி தாராளமா போட்டு தர்றேன்" என்று கிச்சனுள் செல்ல போன இருவரையும் தடுத்த நிலா," நானே போட்டு தர்றேன்" என்றிட, பகலனுக்கு மயக்கம் வராத குறையாக தான் இருந்தது..

"அது எல்லாம் ஒன்னும் வேணாம் அமைதியா இரு.. எனக்கு என் உயிர் முக்கியம்" என்று மறுத்த பகலனை முறைத்து பார்த்து விட்டு "ப்ளீஸ் ஹேண்ட்செம் நான் போடறேனே" என்று கண்ணை சுருக்கி செழியனிடம் கேட்க, அவனுக்கு மறுக்க தோன்றாமல் "இதுக்கு எதுக்கு ப்யூட்டி ப்ளீஸ் எல்லாம்.. தாராளமா போடு" என்று அனுமதி தந்து விட, "ஜாலி ஜாலி முதன் முதலா காபி போட போறேன்" என்று மகிழ்ச்சியில் துள்ளி குதித்தபடி உள்ளே சென்றவளை பார்த்து "என்னது???" என்று அதிர்ந்து முழித்தான் செழியன்..

"ஹான் நொண்ணது?? நான்தான் வேணாம்னு சொன்னேனல்லடா?? என்னமோ தாராள பிரபு மாதிரி சம்மதம் குடுத்தே.. இனி நீ போனாலும் அந்த பிசாசு விடாது.. பேசாம அமைதியா உக்காரு" என்று தலையில் அடித்து கொண்டு செழியனை பிடித்து அமர வைத்த பகலன், ஏதோ தீவிரமாக யோசித்தபடி இருக்க, செழியனோ திகிலோடு அமர்ந்திருந்தான்..

திடீரென்று, "மச்சி ஒரு வகைல நீயும் அந்த பிசாசுக்கு மாமாவா தெரியற போல??" என்று முகவாயில் கையை வைத்து யோசித்தபடி கேட்டவனிடம், "என்னது மாமாவா??" என்று இவன் அதிர, "அடேய் மாமானா மாங்கா மடையனு அர்த்தம்டா.. உன்னையையும் மாங்கா மடையனு நினைச்சிட்டு போல?? எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது மச்சி உன்னைய நினைச்சு.." என்று வாயை மூடி கொண்டு சிரித்தான் பகலன்..

"அட கிரகமே!! தெரியாம இவங்க கிட்ட மாட்டிக்கிட்டனோ?? பேசாம வேந்தன் மாதிரியே முறைச்சிட்டு இருந்துருக்கலாம்" என்று காலந்தாழ்த்து யோசித்து கொண்டிருந்த செழியனின் முன்பு டம்ளரை நீட்ட, வாங்குவோமா?? வேணாமா?? என்று தீவிரமாக காபியை ஆராய்ச்சி செய்தவனுக்கு நுரை மட்டுமே தெரிந்தது..

முகத்தை சுருக்கிய நிலா, "என்ன ஹேண்ட்செம் வாங்க மாட்டிக்கற??" என்றிட," இப்படி பாவமா மூஞ்சியை வெச்சு வெச்சு எல்லாத்தையும் நல்லா வெச்சு செய்யறா.. டேய் பகலா இவன் குடிச்சதுக்கு அப்பறம் காபியை வாய்ல வெய்யுடா.." என்று மனதில் நினைத்து கொண்டு வெளியில் நல்ல பிள்ளையாய் நிலா குடுத்த காபியை வாங்கி கொள்ள, பகலன் வாங்கிய பிறகு செழியனும் யோசனையுடன் வாங்கி வாயில் வைத்தவன் கண்கள் இரண்டும் வெளியில் வந்து விடும் அளவிற்கு முழித்தான்..

"அய்யய்யோ" என்று துப்பி விட்டு வேகமாக எழுந்து கிச்சனுக்குள் ஓடிட, "அடியே என்னத்த போட்டு தொலைஞ்சே??" என்று தவிப்புடன் பகலன் கேட்க, "காபியை தான்டா போட்டேன் அதுக்கு எதுக்கு இவன் இப்படி ஓடறான்" என்றாள் பாவமான முகத்துடன்...

"மூஞ்சியை இப்படி வெச்சு வெச்சு ஏமாத்துனே வாய்லயே குத்துவேன் பார்த்துக்கோ" என்று தலையில் கொட்டிவிட்டு செழியனை தேடி கொண்டு பகலன் கிச்சனுள் செல்ல, உதட்டை பிதுக்கியவாறு தலையை தேய்த்து கொண்டு நின்றாள் நிலா..

வெளியில் யாரோ வரும் அரவம் கேட்டு எட்டி பார்த்தவளுக்கு இதயமே வெளியில் குதித்து விடும் அளவிற்கு படபடப்பு தொற்றி கொள்ள, கையை பிசைந்தவாறு நின்ற இடத்திலேயே நின்றிருந்தாள்.. தொங்கி போன முகத்துடன் உள்ளே வந்த வேந்தன், நடு வீட்டில் திருவிழாவில் காணாமல் போன குழந்தை போன்று திருதிருவென விழித்தபடி நின்றிருந்த நிலாவை பார்த்து முதலில் திகைத்தவன், பின்பு "இந்த லூசு இங்க என்ன பண்ணுது??" என்ற ரீதியில் அவளை பார்த்தான்..




தொடரும்..
 

Sahithya varun

New member
Wonderland writer



பகுதி - 6



வேந்தனை பார்த்து நிலா திகைத்து நிற்க, அவனோ "இந்த லூசு இங்க என்ன பண்ணுது" என்ற ரீதியில் அவளை பார்த்து வைத்தான்..

தான் பயந்தால் அவன் மிஞ்சுவான் என்று நினைத்தவள், முகத்தை சாதாரணமாக வைத்து கொண்டு, "வாங்க வாங்க சிடுமூஞ்சி.. ஏன் அங்கயே நிக்கறீங்க?? உங்களைய எதுவும் பண்ண மாட்டேன் பயப்படாம உள்ள வாங்க" என்று அழைக்க, "அடிங்க என் வீட்டுலயே இருந்துட்டு என்னையவே உள்ள கூப்படறீயா??" என்று மனதில் நினைத்து கொண்டு உள்ளே வந்த வேந்தன் அவளை கண்டு கொள்ளாமல் அறைக்கு சென்று விட்டான்..

"அதானே பார்த்தேன் இவனாவது என் கூட பேசறதாவது??" என்று முணுமுணுத்து கொண்டு "எங்க அதுக ரெண்டும்??" என்று யோசித்தபடி கிச்சனுள் எட்டி பார்த்ததும் பதறி அவர்களிடம் ஓடியவள், பகலனிடம் "அய்யய்யோ ஏன்டா என் ஹேண்ட்செமை கொல்ல பார்த்தே???" என்று எகிற, அவனோ "என்னது??" என்று திகைத்து நின்றான்..

"சொல்லுவேடி சொல்லுவே.. அநியாயமா அவனை கொல்ல பார்த்தது நீதான்டி.. நீ போட்ட காபியை குடிச்சனால தான் இப்படி இருக்கான்.. அப்படி எதுல காபி போட்டே???" என்று முதலில் எகிறியவன் இறுதியில் யோசனையாய் கேட்க, "இதோ இதுல தான்டா" என்று நிலா காட்டிய டப்பாவை பார்த்ததும் பகலனுக்கு மயக்கம் வராத குறை என்றால் செழியன் மயங்கியே விழுந்தான்..

"அடிப்பாவி மிளகாய் தூளையும் உப்புலயும் காப்பி போட்ட முதல் ஆள் நீ தான்டி.. அநியாயமா ஒரு வயசு பையனை கொல்ல பார்த்துருக்கே???" என்று பகலன் கதற, "அப்ப இது காபிதூள் இல்லையா??" என்று கேட்டவள், "சரி சரி விடுங்க தெரியாம பண்ணிட்டேன் நான் வேணா மறுபடியும் காபி போட்டு தர்றேன்" என்று சொன்னது தான் தாமதம் அவள் காலிலேயே விழுந்து விட்டான் செழியன்..

"எம்மா மென்னிலா மறுபடியும் என் உயிரை பணயம் வெக்க முடியாதுமா.. நீ காபி போட்டு பழக என் உயிர் தான் கிடைச்சுச்சா?? நீ முதல்ல இடத்தை காலி பண்ணுமா நீ காபி போடறேனு சொல்லிட்டு என்னைய காலி பண்ண பிளான் பண்ணிருக்கே??" என்று துரத்தாத குறையாக அவளை துரத்தி விட்டவன், "அடேய் மச்சி மச்சினு சொல்லிட்டு என்னைய வெச்சு டெஸ்ட்டு பண்ணிருக்கீயே உன்னைய என்ன பண்ணலாம்" என்றான் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியபடி..

"நான் தான் முதல்லயே அவளை வேணாம்னு சொன்னேனல்ல?? நீதான் என்னமோ தாராள பிரபு மாதிரி சம்மதம் சொன்னே?? அவளை பத்தி தெரிஞ்சும் எப்படி நான் அந்த காபியை வாய்ல வெப்பேன்" என்று பகலன் சாதாரணமாக கூற, "இனி உன்னைய தான்டா நம்பவே கூடாது" என்ற செழியன் அவன் முதுகில் மத்தாளம் வாசிக்க தொடங்க, சிரித்தபடி அவனை தடுத்த பகலன், "அடேய் நானல்ல ஒரு லட்சத்துக்கு நூறாவது முறைக்கு மேல என் உயிரை பணயம் வெச்சிருக்கேன்டா.." என்று பாவமாக சொன்னவனை அணைத்து கொண்ட செழியன், "உண்மையாவே அவளுக்கு நம்ம மாமா போல தான் தெரியறோம் போலடா" என்றான் கதறலுடன்..

இவர்கள் இப்படி இருக்க, வெளியில் வந்த நிலா, வேந்தன் என்ன செய்கிறான் என்று எட்டி பார்க்க, அவனோ முதுகு காட்டியபடி கட்டலில் அமர்ந்திருக்க, போவோமா?! வேணாமா? என்று யோசித்தவள், "எப்பவும் முன் வெச்ச காலை பின் வெக்க மாட்டா இந்த நிலா" என்று கெத்தாக, "சிடுமூஞ்சி" என்று அழைத்தவாறு அவனிடம் செல்ல, இவளின் அழைப்பில் கையில் வைத்திருந்த புகைப்படத்தை அவசர அவசரமாக மெத்தையின் அடியில் மறைத்து விட்டு எழுந்து நின்றான்..

"ரொம்ப பெரிய மனசை வெச்சிருப்ப போல.. அதுல எனக்கும் கொஞ்சம் இடத்தை தர்றது???" என்று சாலையில் பார்த்ததை நினைத்து கொண்டே கேலியாய் நிலா கேட்டதும், ஒன்றும் புரியாமல் என்னவென்று கூர்மையாக அவளை நோக்கினான்..

அவனின் பார்வையில், "ப்ப்ச் என்கிட்ட மட்டும் ஏன் வாயை திறந்து பேச மாட்டிங்கறே??.. என்னைய பார்த்தா மனுசி மாதிரி தெரியலயா?"!என்று சலிப்புடன் கேட்டவளிடம், "உன்கிட்ட நான் எதுக்கு பேசனும்" என்று அவன் பார்வையில் கேள்வி தாங்கி நின்றது..

"ரொம்பதான்டா பண்றே?? பேசறதுக்கு கூட காசு கேட்பே போல??? "நினைத்து கொண்டவள், "ஏன் ஏதாவது இருந்தா தான் பேசுவீங்களோ??" என்று குறும்புடன் கேட்ட நிலாவை அனல் பார்வையில் பார்த்தவன் "வெளில போ" என்று வாசலை கை காட்டினான்..

"ம்ம்ம்க்கும் இதைய கூட வாயை திறந்து சொன்னா என்ன உன் முத்து பல்லு கொட்டிருமா?? நான் எதுக்கு வெளில போகனும் முடியாது நான் இங்க தான் இருப்பேன்" என்று உதட்டை சுழித்து கொண்டு கட்டலில் அமர்ந்தவளை பல்லை கடித்து கொண்டு வேந்தன் பார்க்க, நிலாவோ, "நீங்க வேணா அப்படிக்கா உக்காருங்க" என்று சேரை கை காட்டினாள்..

அவளை பார்வையாலே சுட்டெரித்த வேந்தன் வாயை திறந்து, "பொண்ணுனு பார்த்து அமைதியா இருக்கேன் என் கோவத்தை கிளராம வெளில போய்ரு.. எந்த உரிமைல முதல்ல இங்க வந்தே??" என்று பல்லை நரநரவென்று கடித்தவாறு கேட்ட வேந்தனின் முன் வந்து நின்றவள், "எந்த உரிமைனு சொல்லியே தீரனுமா??" என்றான் அவனின் விழியை நேருக்கு நேராய் நோக்கி..

அவன் எதுவும் பேசாமல் அவளை முறைத்தபடியே நின்றிருக்க, உள்ளுக்குள் புன்னகைத்து கொண்ட நிலா, அவனின் முகத்தை ஆராய்ந்தபடி, "ம்ம்ம்ம் என் புருசன் என்ற உரிமைல தான்" என்று குறும்பு பார்வையில் கூறியவளின் பதிலில் உள்ளுக்குள் திகைப்புற்றவனின் முகம் பின்பு சிடுசிடுவென முகம் மாறியது..

அவளை அடிக்கவே கை ஓங்கியவன் கையை மடக்கி கண்களை இறுக்க மூடி திறந்து தன் கோவத்தை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் பார்வையாலே வாசலை காட்ட, அவனின் கோவ முகத்தை பார்த்தே உள்ளுக்குள் கலக்கமுற்றிருந்த நிலாவும் அச்சத்தை வெளி காட்டி கொள்ளாமல் அவனை நேருக்கு நேராய் திமிருடன் பார்த்தாள்..

"ம்ம்ம்ம் போறேன் போறேன்.. ஆனா ஒன்னு என்னைய விட்டுட்டு வேற எவளையாவது கரெக்ட் பண்ண பார்த்தே.." என்று விரல் நீட்டி எச்சிரிக்க வந்த நிலாவின் விரலை மடக்கி பிடித்த வேந்தன், "ஹான் என்னடி பண்ணுவே??? என் முன்னாடி விரல் நீட்டி பேசற வேலை வெச்சுகிட்டே அவ்ளோதான்.. நீ நடக்கறது எதுவும் நடக்காது.. இப்ப சொன்னதை எல்லாம் மறந்துட்டு உன் அப்பன் பார்க்கற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணுனோமா புள்ள குட்டி பெத்தோமானு இருக்கற வழியை பாரு.. இனி என் முன்னாடி வந்துட்டே பொண்ணுனு கூட பார்க்க மாட்டேன்" என்று ரவுத்திரத்துடன் கடுமையா குரலில் கத்தியவனின் முகமும் கோவத்தை தத்தெடுத்து கொண்டதை போன்று சிவப்பாக மாறியது..

நிலாவோ இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் அவனின் முதல் தொடுதலில் தனக்குள் தோன்றிய ஏதேதோ உணர்வுகளின் பிடியில் சிக்கி தவிர்த்தபடி அவனையே பார்த்தபடி நின்றிருக்க, அவளின் கையை உதறி விட்டதும் தான் தன்னிலைக்கு வந்தவள், அவனை பார்த்து சிறிது கலக்கமுற்றாள்..

இருந்தும், "உன் விருப்பத்தை எப்படி சொன்னீயோ அதே மாதிரி என விருப்பத்தையும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ.. உன்னைய உன்னைய மட்டும் தான் நான் கல்யாணம் பண்ணுவேன்.. நீ யாரு எப்படி பட்டவனு எனக்கு அது எல்லாம் தேவையில்ல.. உன்னைய பார்த்ததுமே உன்கிட்ட விழுந்துட்டேனு கூட சொல்லலாம்.. என்னைய விட்டு நீ தூரமா போனாலும் உன் முன்னாடி வந்து நிற்பேன்.. இந்த ஜென்மத்துல எனக்கு நீதான்டா.." என்று அவனின் காந்த விழிகளில் தன் விழிகளை கலக்க விட்டவாறு சொன்னவள் இறுதியில் உதட்டை சுழித்தாள்..

அவளின் விழியில் தன்னை தொலைத்து அவளையே வேந்தன் பார்த்திருக்க, நிலாவே தேடி கொண்டு வந்த பகலனும் செழியனும் இதை கேட்டு நெஞ்சை பிடித்து கொண்டு நின்றிருந்தனர்.. பகலனின் கையை சுரண்டிய செழியன், "மச்சி இது உண்மையாவே உன் மாமன் பொண்ணு தானா?? "என்று நம்பாமல் முடியாமல் கேட்க, பகலனும்" ம்ம்ம் அந்த பிசாசே தான்டா" என்றான் சாதாரணமாக..

"அடேய் என்னடா நீ இவ்ளோ சாதாரணமா சொல்றே??" என்று செழியனுக்கு தான் தலையை பிய்த்து கொள்ளாத குறையாக இருக்க, "தெரிஞ்சதுக்கு எதுக்குடா அதிர்ச்சியாகனும்" என்றதும், "என்னது அப்ப உனக்கும் தெரியுமா??" என்றான் திகைப்பில்..

"ம்ம்ம்ம் நிலாவோட அத்தனை அசைவுகளையும் எனக்கு அத்துப்படி மச்சி.. அவ வேந்தனை பார்த்ததுல இருந்து சரியில்ல.. அவளே சொல்லுவானு பார்த்தா அந்த லூசு நேராவே வேந்தன் கிட்ட சொல்லிருச்சு.." என்று அலுத்து கொண்டு சொன்னவனின் பேச்சில் செழியன் தான் திகைத்து நின்றிருந்தான்..

"இனி உன் நொண்ணனே நினைச்சாலும் அவ விட மாட்டாடா.. எந்த அளவுக்கு விளையாட்டு பிள்ளையா இருக்காளோ அதை விட அதிகமாகவே பிடிவாதம் பிடிச்சவே.. இதையை அவங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத.." என்று விட்டு செழியனை இழுத்து கொண்டு மீண்டும் கிச்சனுக்குள் சென்று விட்டான் பகலன்..

தன்னை பார்த்து நின்றிருந்த வேந்தனின் முன்பு சொடுக்கிட்டு நிலா அழைக்க, சுயநினைவிற்கு வந்தவன், "ச்சை என்ன பண்ணிட்டு இருக்கோம்?? என் வருவை தவிர வேற யாருக்கும் என் மனசுல இடமில்லை" என்று நினைத்தபடி அவளிடம், "உன்னைய வெளில போக சொன்னேன்" என்றான் குரலில் கடுமையை கூட்டி..

"ம்ம்ம்ம்க்கும்" என்று தோளை குலுக்கி கொண்டு உதட்டை சுழித்தபடி வெளியில் சென்ற நிலாவின் மீது வேந்தனுக்கு கோவம் கொழுந்து விட்டு எரிந்தது.. "விளையாட்டு பிள்ளைனு நினைச்சு சாதாரணமா எடை போட்டுட்டேன் இங்க இருக்கறது இனி சரி இல்லை" என்று ஏதோ யோசித்து கொண்டே அமர்ந்தான்..

"டேய் சீக்கிரம் வாடா.. நம்மளைய காணோம்னு ஹிட்லர் குதிக்காத குறையாக குதிச்சுட்டு இருப்பாரு" என்று பகலனை இழுத்து கொண்டு சென்ற நிலா, காரில் ஏறும்போது கூட தன்னை ஒருமுறை வேந்தன் பார்த்து விட மாட்டானா?? என்ற ஏக்கத்தில் உள்ளே பார்வையை செலுத்த, அவனோ கட்டலில் தீவிரமாக ஏதோ யோசித்தபடி அமர்ந்திருந்தான்..

செழியன் உள்ளே வந்ததும், ஒரு முடிவு எடுத்தவனாய் அவனிடம் வந்த வேந்தன், "இன்னும் ஒரு வாரத்துல இங்க இருந்து கிளம்பனும்.. இது நம்மளைய தவிர வேற யாராவதுக்கு தெரிஞ்சுச்சு அதுதான் என்னைய பார்க்கற கடைசி நாளா இருக்கும்" என்று கடைசி வார்த்தையில் அழுத்தத்தை கூட்டி சொன்னதை செய்வேன் என்ற அழுத்தத்தில் சொல்ல, செழியனோ நடுங்கியே விட்டான்..

நிலாவை பார்த்ததும் ராசு குதிகுதிவென்று குதிக்க, அவளோ அவரை கண்டு கொள்ளாமல் வேந்தனின் நினைவிலேயே நின்றிருக்க, தலையில் அடித்து கொண்ட பகலன் அவளின் கையை நறுக்கென்று கிள்ளியதும், பேந்தபேந்தவென முழித்து தன் தந்தையை பார்க்க, அவரோ," எல்லாம் உன் அம்மா குடுக்கற செல்லம்.. நீ வேலைக்கு போகலனு யாரு அழுதா.. போதும் இனி வீட்டுலயே இரு" என்றார் முடிவாக..

"ப்ரண்டு வீட்டுக்கு போனது கூட தப்போ..?? உங்களைய மாதிரி எல்லாம் என்னால இருக்க முடியாது.. என்னமோ நான் தினமும் இப்படி பண்ற மாதிரி பேசறீங்க?? நீங்களும் தான் எப்ப வரீங்க எப்ப போறீங்கனு தெரியாம இருக்கு அதுக்கு நாங்க ஏதாவது சொன்னோமா?? உங்களுக்கு ஒரு நியாயம் எங்களுக்கு ஒரு அநியாயமா?? அந்த வேலை நான் படிச்ச படிப்புல சொந்தமா வாங்கினது யாரு விட சொன்னாலும் விட மாட்டேன்" என்று ராசுவை விட இவள் குதித்து விட்டு கோவத்தில் பேக்கை தூக்கி எறிந்து விட்டு மாடியேறி சென்று விட்டாள்..

ராசுவோ கோவத்தில் "என்னடி புள்ள வளர்த்தி வெச்சிருக்கே?? "என்று செல்வியை அறைய போக, அவரின் கையை பிடித்த பகலன், "கட்டுன மனைவியை அடிக்கறது ஆம்பளைகளுக்கு அழகு இல்ல" என்று தீப்பார்வையுடன் சொன்னவன் செல்வியை அழைத்து கொண்டு அறைக்கு செல்ல, இதில் தனக்கு எதுவும் சம்மந்தமில்லை என்பதை போல் வனிதா தோளை குலுக்கி கொண்டு சென்றார்..

"ச்சை இந்த அப்பா வேற.. நேரங்காலம் தெரியாம பேசறது??" என்று புலம்பி கொண்டு அமர்ந்திருந்தவளின் மனக்கண்ணில் வேந்தனின் கோவம் முகம் வர, "உண்மையாவே என்னைய பிடிக்கலயாடா??! "என்று நினைத்ததும் அவளை மீறி கன்னத்தை நனைத்தது அவளின் கண்ணீர்..

அதே நேரம் வேந்தனும் அவன் வைத்திருந்த புகைப்படத்தை கையில் வைத்து கொண்டு, "வரு எங்க இருக்கடி?? எங்க இருந்தாலும் சீக்கிரம் என்கிட்ட வந்துருடி.." என்று புகைப்படத்தை வருடியவாறு நினைத்திருந்தான் கண்களில் வலியுடன்..

முதலிலயே வேந்தனின் மனதில் வேறு ஒருத்தி சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறாள் என்பது தெரிந்ததும் நிலாவின் நிலைமை??????




தொடரும்...
 

Sahithya varun

New member
Wonderland writer




பகுதி - 7



நிலாவின் கண்ணீர் அவளின் கன்னத்து மேன்மையை நனைத்து கொண்டு வழிந்தோட, ஏதோ யோசனையாய் அமர்ந்தவளை கலைத்தது கதவு தட்டப்படும் சத்தம்..

கண்ணை அழுத்த துடைத்து கொண்டு கண்ணாடியில் தன் முகத்தை ஒரு முறை பார்த்து விட்டு கதவை திறக்க, கையில் தட்டுடன் பகலன் தான் நின்றிருந்தான்..

அவனை அப்படி பார்த்ததும் அவளுக்குரிய குறும்பு தலை தூக்க, "என்ன பகலன் சார் பார்ட் டைம் ஜாப் பார்க்கறீங்களா?? வீட்டுக்குள்ளயே தட்டை கைல வெச்சுட்டு சுத்துனா எப்படி காசு கிடைக்கும்.. நேரா வெளில போய் அங்கிருந்த முக்குல இருக்கற கோவில் கிட்ட நின்னா நல்லா கலெக்சன் ஆகும்" என்று கேலியாய் கூறியவளை முறைத்தே பஸ்பமாக்கி விடுபவன் போன்று முறைத்திருந்தான் பகலன்..

"உனக்கு போய் சாப்பாடு கொண்டு வந்தேன் பாரு ச்சீ போடி" என்று அவளை மீண்டும் ஒரு முறை முறைத்து விட்டு நகர போனவனின் கையை பிடித்தவள் "ரொம்பதான்டா.." என்று இழுத்து கொண்டு உள்ளே சென்றாள்..

உள்ளே சென்றவன் அவளிடம் தட்டை நீட்ட, அவளோ மறுத்து தலையசைத்து ஊட்டி விடு என்பது போல் வாயை திறக்க, அவள் தலையில் செல்லமாக கொட்டிய பகலன் சாப்பாட்டை வாயில் திணித்தான்..

"மெதுவாடா.. பாப்பாக்கு விக்கிக்க போகுது அப்பறம் என் அத்தை வந்து உன்னைய திட்டியே காதுல இருந்து ரத்தத்தை வர வெச்சிருவாங்க" என்று ஐந்து வயது குழந்தை போன்று முகத்தை வைத்து கொண்டு சொன்னவளை பார்த்து, "அடிப்பாவி அடிக்கடி எப்படிடி முகத்தை மாத்தறே??" என்று வாயை பிளந்தான்..

சாப்பாட்டை பிசைந்தபடி "ஏன் அழுதுருக்கே நிலா??" என்று அவளை பாராமலே பகலன் கேட்க, "நான் எதுக்குடா அழுக போறேன்" என்று அவனை சமாளிக்க முயன்றவளை நிமிர்ந்து கூர்மையாக நோக்கிய பகலனின் பார்வையில் "உன்னை நான் அறிவேன்" என்றிருக்க, நிலாவோ எதுவும் பேசாமல் சுவரை வெறித்து பார்த்தாள்..

"வேந்தனுக்கு உன்னைய பிடிக்கலனு அழுகறீயா??" என்று நேரடியாகவே பகலன் கேட்டு விட, அவனை விழி விரித்து நிலா பார்க்க, "எனக்கு முதல்லயே சந்தேகம் இருந்துச்சு இப்ப க்ளியர் ஆகிருச்சு.. என் நிலாவை யாருக்காவது பிடிக்காம இருக்குமா?? நீ திடீர்னு சொன்ன நாளா கூட அவன் அதிர்ச்சி ஆகிருக்கலாம்.. இல்ல மாமாவை நினைச்சு பேசிருக்கலாம்.. காதலை சொன்னதுமே ஏத்துக்கனும்னு ஏன்டி நினைக்கறீங்க?? எங்களுக்கும் நேரம் வேணுமல்ல?? அவனை நீ உண்மையா காதலிக்கறேனா அவனை சம்மதிக்க வைக்கறது என் சாமத்தியம் தான்.. அதையை விட்டுட்டு இப்படி ஒப்பாரி வெச்சுட்டு இருந்தா எல்லாம் சரியாகிருமா??" என்று பொரிந்தும் இன்னும் ஏதோ யோசனையில் இருந்தாள் நிலா..

"ப்ச் இன்னும் என்னத்தடி யோசிச்சுட்டு இருக்கே?!" என்று அலுத்து கொண்டு கேட்டவனை பார்த்து, "உனக்கு எப்படிடா இவ்ளோ அறிவு வந்துச்சுனு தான்.. உன் காதலே டப்பா டேன்ஸ் ஆடிட்டு இருக்கறது தெரியாம என் காதலுக்கு நீ அட்வைஸ் சொல்ற பாரு.. அதையை தான்டா என்னால ஏத்துக்க முடில.. லேசா நெஞ்சு வேற வலிக்கற மாதிரி இருக்கு" என்று இச் கொட்டி சொன்னவளை பார்த்து ஏகபோக கடுப்பான பகலன் "ம்ம்ம்ம்க்கும் உன் கூட இருந்தும் என் லவ் செட்டாகும்னு இன்னுமா நீ நம்பிட்டு இருக்கே?? முதல்ல உன்னைய கலட்டி விட்டா தான் என் காதல் சக்ஸஸ் ஆகும்" என்றான் சலிப்புடன்..

"என்ன மாமா பொசுக்குனு இப்படி சொல்லிப்புட்டே?? என் காதலுக்கு நீ உதவி செஞ்சு என் கல்யாணத்தை முன்னால நின்னு நடத்தி.. வருச வருசம் ஒரு குழந்தையை நாங்க பெத்து தந்தா நீ அதையை எல்லாம் வளர்த்தி.. உனக்கு இன்னும் எவ்ளோ கடமை இருக்கு.. அதை எல்லாம் செய்யாம என்னைய இப்பவே கலட்டி விடறேனு சொல்றே??" என்று வராத கண்ணீரை துடைத்து விட்டவாறு நிலா சொல்ல, "ஆத்தி இவ சொல்றதை பார்த்தா அப்ப சம்பளமில்லாத ஆயா வேலை பார்க்க சொல்லுவா போல.. ஒரு வேளை அப்படியோ???" என்று யோசித்தவனின் மூளை எதிர்காலத்திற்கு சென்று விட்டது..

பத்து குழந்தைகளுக்கு நடுவில் பகலன் அமர்ந்திருக்க, முதலில் ஒரு குழந்தை "பெப்பு நேக்கு பசிகுது:" என்று அழுக ஆரம்பிக்க, அவனோ குழந்தையை சமாதானப்படுத்தி சாப்பாடு எடுத்து வருவதற்குள் மூன்று குழந்தைகள் போட்டிருந்த டவுசரை கலட்டியபடி நின்றிருக்க, இவனை பார்த்ததும், "பெரிப்பா எங்களுக்கு ஆய் கழுவி விடுங்க" என்று சொல்ல, பகலனுக்கு மயக்கமே வந்து விட்டது..

இன்னொரு குழந்தையோ ஏதோ கடிச்சுருச்சுனு கை காலை உதறி உருண்டு பிரண்டு அழுக தொடங்க, வேந்தனை போன்று இருந்த ஒரு குழந்தை பகலனை முறைத்து, "என் பாப்பாவை பார்த்துக்க கூட உங்களுக்கு என்ன???" என்று வயிற்றில் ஓங்கி குத்த, "அடியேய் நிலா குழந்தையை பெக்க சொன்னா பிசாசுகளை பெத்து வெச்சுருக்கே?? வந்து இதுகளை பாருடி" என்று கதறாத குறையாக கத்த," என் அம்மாவை ஏதாவது சொன்னீங்க??" என்று அவனை கீழே தள்ளி அவன் மீது அமர்ந்து கொண்டு அடிக்க தொடங்க, "அய்யய்யோ கொலை கொலை" என்று கதற தொடங்க, "அடேய்" என்று நிலா அவனை உலுக்கியதும் தான் தன்னிலைக்கு வந்த பகலன் அவளை பே வென்று பார்த்தான்..

"என்னடா இப்படி முழிக்கற???" என்று அவனை சந்தேகமாக நிலா பார்த்து வைக்க, "இப்ப நம்ம சொன்னோம் கலாய்ச்சே ஒரு வழியாக்கிருவா.. சோ கெத்தை மெய்ண்ட்டன் பண்ணுடா பகலு" என்று நினைத்து கொண்டு "அது எல்லாம் ஒன்னுமில்ல.. முதல்ல அவங்களைய பத்தி தெரிஞ்சுக்க முயற்சி பண்ணுடி அதுக்கு அப்பறம் அவனை சம்மதிக்க வைக்கலாம்" என்றிட, "எனக்கு அது எல்லாம் தேவையில்லடா" என்றாள் உதட்டை குவித்தபடி..

"அப்படியே ஒரு அப்பு அப்புனா வெய்யு அவ்ளோ தான்.. லூசாடி நீ?? லூசானு கேட்கறேன்.. அவனை பத்தி ஏதும் தெரியாம கல்யாணம் பண்ண போறீயா?? ஒரு வேளை முன்னாடியே அவன் மனசுல ஒரு பொண்ணு இருந்தா???" என்று பகலனால் கூட அதை நினைத்து பார்க்க முடியாமல் தடுமாற, "அப்படி இருக்கறது தெரிஞ்சுச்சுனா அது தான் என்னோட கடைசி நாளா இருக்கும்" என்றாள் வெறித்து கொண்டே..

பகலன் பதறிபோக, "ஹேலூசு அப்படி எல்லாம் இருக்காது" என்றிட, "இந்த சிடுமூஞ்சி யாரை பார்த்து முறைச்சாலும் அவங்க நிற்காம பத்து கிலோ மீட்டருக்கு மேல ஓடிவாங்க இவனாவது லவ் பண்றதாவது?? ஏன்டா நீ காமெடி பண்ணிட்டு???" என்று பகலன் சொன்னது போன்று இருக்காது என தனக்கு தானே ஆறுதல் சொல்லி கொள்வது போன்று அவனிடம் சொல்ல, அவளை குழப்ப வேண்டாம் என்று நினைத்து பகலனும் அதோடு விட்டு விட்டான்..

எழுந்ததும் வேந்தனை எதிர்பார்த்து நிலா காத்திருக்க, அவனோ அவள் கண்ணில் படாமல் இருந்தான்.. "பார்த்துக்கறேன்டா" என்று அவனை கருவி கொண்டே பகலனோடு கிளம்பியும் விட்டாள்..

அவள் சென்றதுமே உள்ளே வந்த வேந்தனை அழைத்த ராசு, வனிதாவை கோவிலுக்கு அழைத்து செல்ல சொல்ல, வேந்தனும் சென்று காரை எடுத்தான்.. கோவில் வந்ததும் வனிதா உள்ளே செல்ல, வேந்தன் வெளியிலேயே நின்று கொண்டான்..

அவனை தாண்டி ரவுடி போல் இருந்த நால்வர் உள்ளே செல்ல, ஏதோ தவறு என்று தோன்றியதும் வனிதாவை தேடி கொண்டு இவனும் உள்ளே சென்றான்.. ஒவ்வொரு இடமாக வேந்தன் தேட தொடங்க, வனிதா தான் அவன் கண்களுக்கு அகப்படவில்லை.. சிறிது பயத்துடன் வேகமாக கோவிலை சுற்றி கொண்டே தேடியவனின் கண்ணில் தூரத்தில் வனிதா நிற்பது தெரிந்து விட நிம்மதியுடன் அவளிடம் சென்றான்..

பின்னால் இருந்து வனிதாவை ஒருவன் அடிக்க வர, வேகமாக வந்த வேந்தன் வனிதாவை தள்ளி விட்டு இரும்பு கம்பியால் அடித்த அடியை இவன் கையில் வாங்கி கொண்டு அடித்தவனை ஒரு உதை விட்டான்..

முறுக்கேறிய கையாக இருந்தாலும் சுள்ளென்று வலி எடுக்க தொடங்க, வனிதாவிற்கு தெரியாமல் வலியை கட்டுபடுத்த கையை உதறினான்..

"அய்யோ கண்ணா" என்று வனிதா பதறி அழுது விட, "எனக்கு எதுவுமில்ல மேடம்... உங்களுக்கு ஒன்னுமில்ல தானே??" என்று கனிவுடன் கேட்டவனிடம் வார்த்தை வராமல் இல்லையென்று தலையசைத்தாள்..

கண்ணில் ரவுத்திரத்துடன் திரும்பிய வேந்தன் அந்த ரவுடியை பார்க்க, அவன் பார்வையிலேயே வெலவெலத்து போன அவன் கம்பியை கீழே போட்டுவிட்டு நிற்காமல் ஓடியும் விட்டான்.. கோவிலில் கூட்டம் அதிகம் இல்லாததால் இதை யாரும் கவனிக்கவும் இல்லை..

வேந்தனை பார்த்து பதறிய வனிதா, "கண்ணா ரொம்ப வலிக்குதா?? நம்ம வேணா ஹாஸ்பிட்டல் போலாமா?? நா வாங்க வேண்டிய அடியை நீ எதுக்கு கண்ணா வாங்குனே??" என்று கண்ணீருடன் கேட்ட வனிதாவை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன் "என் கண்ணு முன்னாலேயே என் அம்மா மாதிரி இருக்கற உங்களைய அடி வாங்க விட்டுருவானா??" என்று கேட்டான் பரிவுடன்..

அவனின் பதிலில் மகிழ்ந்த வனிதா, "ஆனா என்னால நீ அடி வாங்கிட்டியே??" என்று ஆதங்கம் தாளாமல் கேட்டவரிடம், "எனக்கு அந்த அடி சாதாரண கொசுகடி மாதிரி தான் மேடம்.. நீங்க மட்டும் அந்த அடியை வாங்கிருந்தீங்க இன்னேரம் ரத்தம் வெள்ளமே ஓடிருக்கும்" என்றான் கேலியாய்..

தன்னை சமன்படுத்த முயல்வதை உணர்ந்த வனிதா, "அப்ப எனக்கும் இனி ஜிம் டிரைனிங் குடு கண்ணா.. இந்த மனுசன் கிட்ட இருந்துட்டு உயிர் வாழனும்னு ஆசைப்பட்டா இது ஒன்னுதான் வழி.." என்று பாவமாக சொல்ல, அவர் கூற்றில் வேந்தனோ வாய்விட்டு சிரித்து விட்டான்..

அவனின் சிரிப்பை அன்புடன் பார்த்த வனிதா, முகத்தை மாற்றி கொண்டு, "என்னைய பார்த்தா சிரிப்பா இருக்குல்ல??" என்று கேட்க, இல்ல "இல்ல மேடம் உங்களைய நினைச்சா பெருமையா இருக்கு" என்றான் சிரிப்பை அடக்கியபடி..

"என்னைய தனியா விட்டராத கண்ணா.. அப்பறம் நான் முழுசா வீட்டுக்கு போக முடியாது போல.. அப்படியே என் பின்னாடி வந்து என் உயிரை காப்பாத்தி குடு.." என்று கிண்டலாக கூறிவிட்டு முன்னால் நடக்க, "இப்பதான் புரியுது அந்த லூசு பேசற பேச்சு எல்லாம் எங்கிருந்து வந்துருக்கும்னு" என்று நினைத்தபடி இவனும் வனிதாவின் பின்னே சென்றான்..

கோவிலை சுற்றி விட்டு இருவரும் வந்தமர, சரியாக வனிதாவின் போனும் அடித்தது.. எடுத்து பார்த்தவள் முகத்தை சுழித்தபடி காதில் வைத்தவர் "ம்ம்ம்ம்" என்று மட்டும் சொல்ல, அந்த புறம் என்ன கேட்டதோ இவர் கடுப்புடன் பதிலேதும் சொல்லாமல் கட் செய்து விட, ஒன்னும் புரியாமல் வேந்தன் அவரை பார்த்திருந்தான்..

அவனை பார்த்தவர் பெருமூச்சுடன், "என் அண்ணன்தான்.. ஊர் வம்பு, உலக வம்புனு எல்லாத்தையும் வாங்கிட்டு வருவாரு.. ஆனா அதுனால எங்களுக்கு என்ன ஆகும்னு கூட யோசிக்கறது இல்ல.. இப்ப நடந்தது அவரு காதுக்கு போய்ருச்சு போல அதான் ஒன்னுமில்லயானு கேட்க போன் பண்ணிருக்காரு எனக்கு வர்ற கோவத்துக்கு கேவலமா திட்டிருவேனு தான் கட் பண்ணிட்டேன்.. போன ஜென்மத்துல நான் பண்ணுன பாவமோ என்னவோ இந்த மனுசனுக்கு தங்கச்சியா பிறந்து தொலைஞ்சுட்டேன்" என்று விரக்தியாய் சொன்னவரின் குரலில் வலிகள் இருப்பது இவனுக்கும் உரைத்திட, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மௌனமாய் அமர்ந்திருந்தான்..

இந்த முறை வேந்தனின் போன் அடிக்க, எடுத்து பார்த்தவன் வனிதாவை ஒருமுறை பார்க்க, "என்ன அந்த மனுசனா?? வந்து தொலையறோம்னு சொல்லு" என்று கடுப்புடன் சொன்ன வனிதாவை நினைத்து மெலிதாய் புன்னகைத்து கொண்டவன், "அப்ப போலாம் மேடம்" என்றான் சின்ன சிரிப்புடன்..

காருண்யாவை விட சென்றவர்களை அவளின் பெற்றோர்கள் பிடித்து கொண்டு பாயாசம் குடித்து விட்டு தான் செல்ல வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, "அட என்னமா முதல்லயே பாயாசம் இருக்கும்னு சொல்லிருந்தா நீங்க கூப்பிடாமயே நான் உள்ளே போய்ருப்பேனே??" என்று விட்டு முதல் ஆளாக நிலா உள்ளே ஓடி விட, " அடியேய் தினமும் பஞ்சாயத்தை கூட்டறதையே வேலையா வெச்சிருக்கே போல?? அந்த மனுசன் என்ன கத்து கத்த போறாரோ??!" என்று புலம்பி கொண்டே இவனும் உள்ளே சென்றான்..

ரன்யாவை ஒரு கண்ணால் சைட் அடித்து கொண்டே பகலன் பாயாசம் குடித்திருக்க, அவனின் பார்வையை எதிர் கொள்ள முடியாமல் அவள் தடுமாறி கொண்டிருந்தாள்.. "இப்ப எல்லாம் இவன் எனக்கு புதுசா தெரியறானே?? ஒரு வேளை நானும் காதலிக்க தொடங்கிட்டனோ??" என்று நினைத்தபோதே அவளின் கன்னங்கள் செழுமை பூசியது போன்று சிவந்து போனது..

நேரங்காலம் தெரியாமல் நிலா வேறு, "என்ன காரு மேக்கப் இல்லாம உன் கன்னம் இப்படி சிவந்துருக்கு எனக்கும் எப்படினு கொஞ்சம் சொல்லேன்" என்று கேட்டு விட, நிலாவின் கேள்வியில் பகலனுக்கு புரையேறி விட, ரனுவோ திருதிருவென முழித்தாள்..

"இது உண்மையாவே லூசா?? இல்ல லூசு மாதிரி நடிக்குதா?? நானே கஷ்டப்பட்டு இத்தனை வருசத்துக்கு அப்பறம் அவளை வெக்கப்பட வெச்சா இது வேற நேரங்காலம் தெரியாம?? டேய் பகலு உனக்கு எதிரி வெளில இருந்து எல்லாம் வர தேவையில்லடா.. கூடவே வெச்சு சுத்திட்டு இருக்க பாரு உன் புத்தியை பிஞ்ச செருப்பாலயே அடிச்சுக்க.. அப்பவாவது உனக்கு புத்தி வருதானு பார்ப்போம்.." என்று நொந்து கொண்டிருந்தவனின் கதறலை கலைக்கவே அவனின் கைப்பேசி அடித்தது..

யோசனையுடன் எடுத்து பார்த்த பகலன்," அய்யய்யோ ஹிட்லர் தான்.. எல்லாம் உன்னால தான்டி" என்று சின்சியராய் பாயாசம் குடித்து கொண்டிருந்த நிலாவிடம் எகிற, அவளோ "எடுத்து பேசி தொலைடா இல்ல கட்டாகிர போகுது" என்றாள் சாதாரணமாக...

அவளை முறைத்து கொண்டே எடுத்தவன், அடுத்த நொடியே "இதோ வந்தறோம் மாமா" என்று விட்டு நிலாவை இழுக்காத குறையாக இழுக்க, அவளோ பாயசம் குடிக்காம நான் வர மாட்டேன் என்பதை போல் அமர்ந்திருந்தாள்..

"அடியேய் அங்க உன் அப்பா பாயசாத்தோட பொங்கலும் வெக்க காத்துட்டு இருக்காங்க வந்துதொலைடி" என்று கடுப்புடன் கத்த, "போடா அதைய விட இதுதான் டேஸ்ட்டா இருக்கு" என்று பாயாசத்தை ஸ்பூனில் குடித்தபடி சொல்ல, "அய்யோ இவளை" என்று தலையில் அடித்து கொண்டவன்,

"எம்மா ஷியா இந்த கிண்ணத்தை நாளைக்கு வாங்கிக்கமா.. அதை எடுத்துட்டு இப்பவாவது வந்து தொலைடி" என்று காலில் விழாத குறையாக அவளிடம் கெஞ்ச, நிலாவோ பெரிய மனது செய்ததை போன்று எழுந்தவள் அவனோடு கிளம்பினாள்..




தொடரும்..
 

Sahithya varun

New member
Wonderland writer




பகுதி - 8



இவர்கள் சென்றதும் ரனுவின் அம்மா, "தங்கமான பிள்ளைக இவங்க.. நம்ம பொண்ணுக்கும் அந்த தம்பி மாதிரி நல்ல பையனா பார்க்கனும்ங்க" என்று சொல்ல, ரனுவின் அப்பாவும் அதை ஆமோதித்து," நானும் அதைய தான் நினைச்சேன்மா.. அருமையான பையன்" என்று பகலனை நினைத்து கொண்டு சொன்னவர் முகத்தில் புன்னகை..

முதலில் பகலன் முகத்தில் பீதியுடன் உள்ளே வர, அவனின் பின்னே கூலாக நிலாவும் வந்தாள்.. மூக்கு விடைப்புடன் அமர்ந்திருந்த ராசு இவர்களை பார்த்ததும் முறைக்க, வனிதாவும் செல்வியும் டைனிங் டேபிளில் கையை தலையில் வைத்தபடி அமர்ந்திருந்தனர்..

வந்ததும் நிலா, "அம்மா பசிக்குது" என்று கத்தியபடி அவர்களிடம் செல்ல போக, அவளின் முன்னே பூச்சாடி உடைந்து சிதற, அப்பவும் சாதாரணமாக திரும்பி ராசுவை பார்த்தாள் நிலா..

"அய்யோ இவ வேற?? இந்த மனுசனோட கோவத்தை ஏத்தி விட்டுட்டே இருக்கா?? எப்பா குரங்கு சாமி ச்சீ ஹனுமாரே என்னைய இவங்க கிட்ட இருந்து காப்பாத்துப்பா.. ச்சை இந்த லூசு கூட சேர்ந்து எனக்கும் இப்ப அடிக்கடி டங்கு ஸ்லிப்பாகுது.." என்று நொந்தவன், தந்தையும் மகளும் சண்டை கோழிகளாய் முறைத்து கொண்டிருப்பதை பார்த்து, "மாமா அது வந்து.." என்று ஏதோ சொல்ல, அவனின் முன்னாடியும் பூச்சாடி விழுந்து சிதற, கப்பென்று வாயை மூடி கொண்டான் பகலன்..

"எப்ப பார்த்தாலும் எங்கையாவது போய் ஊர் சுத்த வேண்டியது உங்களுக்கு என்ன ஆச்சோனு பதறிட்டு இருக்கறது தான் என் வேலையா?? நான்தான் முதல்லயே சொல்லிருக்கேனல்ல.. வேலை முடிஞ்சா நேரா வீட்டுக்கு வந்தரனும்னு.. காலைல உன் அத்தையை யாரோ கொல்ல பார்த்துருக்காங்க இப்ப உங்களைய ஏதாவது பண்ணிருந்தா??? எதுக்கு சொல்றோம்னு யோசிச்சு கூட பார்க்க முடியாதா?!" என்று ஏகத்துக்கும் பிபி தலைக்கேறி அந்த வீடே அதிரும்படி ராசு கத்த, "இதைய நீங்க ஊர் வம்பை விலைக்கு வாங்கறதுக்கு முன்னாடி யோசிச்சுருக்கனும்.." என்றாள் ஒற்றை வரியில்..

"அதேதான் நானும் சொல்றேன்.. இவரே எல்லாத்தையும் செஞ்சுட்டு இவரே நம்மளைய பத்தி பயப்படுவாராமா?? நல்ல இருக்கு உங்க நியாயம்.. " என்று வனிதாவும் நிலாவிற்கு ஒத்து ஊத, "அய்யோ இந்த அம்மியும் இந்த லூசு கூட சேர்ந்திருச்சே.. டேய் பகலா பேசாம இவங்க கிட்ட இருந்து தப்பிச்சு எங்கையாவது ஓடிருடா.." என்று மனதில் நினைத்தவன் பாவமாக அவர்களை பார்த்து நின்றான்..

ராசுவின் கோவமோ எல்லை மீறி சென்று விட, நிலாவை அடிக்கவே கை ஓங்கியவரின் கையை பிடித்த வனிதா," அடிக்கற வேலையை எல்லாம் வெச்சுக்காத.. என் பொண்ணு மேல கை பட்டுச்சு அப்பறம் அவ்ளோதான்" என்று அவரின் கையை உதறி தள்ளியவர், "தெரியாம தான் கேட்கறேன் அவங்க எதுக்கு எங்களைய கொல்ல வர்றாங்க.. எல்லாம் நீ பண்ணுன வேலை தானே?? உன்னால பாதிக்க பட்டவங்க தானே எங்களைய கொன்னு உன்னைய கதற விடனும்னு நினைக்கறாங்க.. தான் நல்லா இருந்தா போதும்னு நினைச்சு தப்பு செய்யறவனை கூட விட்டரலாம்.. ஆனா அடுத்தவங்க நல்லா இருக்கறதை பார்த்து வயிறு எரிஞ்சு இப்படி வேலை செய்யறவங்களுக்கு மன்னிப்புனு ஒன்னே இல்ல.. நீயும் இந்த செட் தான்.. அனுபவிப்பே கண்டிப்பா நீ அனுபவிப்பே.. ஆரம்பத்துல இருந்தே உன்மேல எனக்கு ஒரு விசயத்துல சந்தேகம் இருந்துட்டே இருக்கு அது மட்டும் உண்மை ஆகட்டும் அப்பறம் இருக்கு உனக்கு" என்று ஏகத்துக்கும் கடுமையை கூட்டி சொன்னவரை ராசு கலக்கத்துடன் பார்த்தார்..

"இந்த அம்மா என்ன சொல்லுது எனக்கு ஒன்னுமே புரிலயே" என்று அந்த நிலையிலும் பகலன் மைண்ட் வாய்சில் நினைத்தபடி நின்றிருக்க, "ப்ச் அத்தை நீங்க ஏன் கத்தி கத்தி எனர்ஜியை வேஸ்ட் பண்றீங்க?? இவங்க கிட்ட கத்தறதுக்கு ஒரு மாட்டு கிட்ட கத்துனா கூட பலன் கிடைக்கும்.." என்று ராசுவை முறைத்து விட்டு சென்று விட, "வர வர இந்த வீட்டுல எனக்கு மரியாதை இல்ல" என்று ராசுவால் கத்த தான் முடிந்தது..

"இதுக்கு முன்னாடி எப்ப இந்த மனுசனுக்கு மரியாதை இருந்துச்சு.. இப்ப மட்டும் இல்லாம போக??" என்று தீவிரமாக யோசித்து கொண்டே பகலனும் உள்ளே சென்று விட, தன் கணவனை வெறுப்புடன் பார்த்து விட்டு செல்வியும் நகர்ந்தார்..

கட்டலில் அமர்ந்து திராட்சை சாப்பிட்டு கொண்டிருந்த நிலாவிடம் சென்றவன், அவளை சாப்பிட விடாமல் அவளின் கையை பிடித்து கொண்டு, "எம்மா மென்னிலா உன் அருமை அத்தை சொன்னது ஏதாவது உனக்கு புரிஞ்சுச்சா??" என்று முகத்தில் குழப்ப ரேகையுடன் கேட்ட பகலனை கொலைவெறியில் முறைத்து பார்த்தாள் நிலா..

"ஏன்டா ஏன்.. ஏன் இப்படி?? உனக்கு நானு என்னதான்டா பாவம் பண்ணி தொலைஞ்சேன்?? என்னைய பார்த்தா உனக்கு எப்படி இருக்கு?? இப்படி உயிரை வாங்கிட்டு இருக்கே??" என்று கடுப்புடன் கத்திய நிலாவை ஒன்றும் புரியாமல் பே வென்று பார்த்த பகலனின் மனமோ, "இது என் டையலாக் ஆச்சே.. இதைய நான்தானே சொல்லனும் என்ன இந்த பிசாசு சொல்லிட்டு இருக்குது" என்று குழப்பத்துடன் அவளை பார்த்திருந்தான்..

ஒன்றும் புரியாமல் தன்னை பார்த்திருந்தவனிடம்," இப்ப நான் பேசுனது உனக்கு புரியாத மாதிரி எனக்கும் அத்தை பேசுனது சுத்தமா புரிலடா.. இதுல என்கிட்ட வந்து டவுட்டு எல்லாம் கேட்டுட்டு இருக்கே.." என்று உதட்டை பிதுக்கி கையை விரித்து காட்ட, "அதையை நேராவே சொல்லி தொலையறதுக்கு என்னடி?? ஆமா யாரு நம்மளைய கொலை பண்ண நினைச்சிருப்பாங்க" என்று யோசனையுடன் கேட்டவனின் முதுகில் மொத்தினாள் நிலா..

"அடேய் உன் மூளை என்ன மூளைடா.. குழப்பவாதி மூளையா முதல்ல அதையை தூக்கி வெளில வீசிட்டு கம்முனு போய் தூங்கு.. ஏதாவது நிம்மதியா சாப்பிட விடறீயா?? இந்த ஹிட்லரை விட நீதான்டா என்னைய ரொம்ப படுத்தி எடுக்கறே??" என்று அவனை வெளியில் தள்ளாத குறையாக தள்ளி கதவை சாத்திய நிலா, மீண்டும் சாப்பிட தொடங்கினாள்..

விக்கல் எடுக்க தொடங்க, "ச்சை இது வேற?? அடிக்கடி டிஸ்டர்ப் பண்ணிட்டு??" என்று நிலா முணுமுணுத்தபடி கீழே வர, கேரிபேக்கில் டிப்பன் பாக்ஸை வனிதா எடுத்து வைத்து கொண்டிருந்தார்..

யோசனையுடன் அவரிடம் வந்தவள், "என்ன அத்தை கேரிபேக் எல்லாம் எடுத்துட்டு எங்க கிளம்பிட்டிங்க??" என்றிட," வேந்தனை பார்க்கடா.. நான் வாங்கற அடியை அவன் வாங்கிட்டு என்ன பாடுபடறானு தெரில.. மனசு வேற உறுத்துது அதான் அவனை பார்த்துட்டு அப்படியே சாப்பாடு குடுத்துட்டு வரலாம்னு கிளம்பிட்டேன்.. வந்ததுல இருந்து அந்த ஹிட்லர் எங்கயும் போகாம குத்து கல்லாட்டம் முன்னாடியே உக்காந்துட்டாரு.. அதான் வேந்தனை பார்க்க முடில.." என்று நிலா கேட்ட கேள்விக்கு மட்டுமின்றி கேட்க நினைத்த அத்தனை கேள்விக்கும் பதில் சொல்லி விட," ஐஐஐஐ என் ஆளை பார்க்க போறேன்" என்று மனதில் குத்தாட்டம் போட்டவள் வெளியில் நல்ல பிள்ளையாய் "நானும் வர்றேன் அத்தை" என்றாள்..

இருவரும் செல்வியிடம் சொல்லிவிட்டு கிளம்ப, "வீராதி வீரர்களே எங்க கிளம்பிட்டிங்க??" என்று கேட்டபடி பகலன் கீழே வந்தான்.. "அது எதுக்கு உனக்கு?? பேசாம தின்னுட்டு தூங்கற வழியை பாரு" என்று தோளை குலுக்கி கொண்டு நிலா சொல்ல, "அப்படி எல்லாம் இருக்க முடியாது.. யூ கோ மீ பாலோ" என்று சட்டை காலரை தூக்கி விட்டு சொன்னவனை சேர்ந்தே இருவரும் காறி துப்பி விட்டு செல்ல, "க்ரேட் இன்செல்ட்டா பகலா!!" என்று தனக்கு தானே சொல்லி கொண்டு அவர்களை பின் தொடர்ந்து சென்றான்..

வேந்தனின் வீட்டின் அருகே சென்றதும், "அய்யோ மம்மி இங்க எதுக்கு இவளை கூட்டிட்டு வந்தே???" என்று கத்த வரும்போது அவனின் வாயை மூடிய நிலா," மவனே ஏதாவது எடக்குமடக்கா பேசிட்டு இருந்தே காருவோட அப்பா கிட்ட சொல்லி சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் பண்ண சொல்லிருவேன் பார்த்துக்க" என்று மெல்லிய குரலில் மிரட்டியதும் பகலன் கப்சிப் தான்..

"ரெண்டு பேரும் அங்க நின்னு என்ன பேசிட்டு இருக்கீங்க???" என்று வனிதா கேட்டதும் சாதாரணமாக முகத்தை வைத்து கொண்டு, "அது ஒன்னுமில்ல அத்தை இந்த மாதிரி இவனுக்கு சாப்பாடு குடுத்துருப்பீங்களானு கேட்கறான்" என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு நிலா சொல்ல, "அய்யோ என்னைய பெத்த ஆத்தாவே இப்படி எல்லாம் நான் சொல்லவே இல்லமா.. எதுவா இருந்தாலும் வீட்டுல போய் நம்ம பஞ்சாயத்தை வெச்சுக்குவோம்" என்று கெஞ்சும் தோணியில் சொல்ல, வனிதாவோ, "பார்த்துக்கறேன்டா" என்று கருவினார் மனதில்...

கதவை திறந்த செழியன் இவர்களை பார்த்து ஆச்சரியத்துடன் வாயை பிளக்க, அவனை தள்ளி கொண்டு உள்ளே சென்றாள் நிலா.. வேந்தனோ கையில்லா பனியனில் அடிப்பட்ட கையை மறு கையால் பிடித்தபடி கண் மூடி அமர்ந்திருந்தான்..

இதை பார்த்து வனிதா பதறி, "வேந்தா ரொம்ப வலிக்குதாடா??" என்று கேட்க, அப்போது தான் கண்ணை திறந்தவன் இவர்களை பார்த்து திகைத்து எழுந்து நிற்க, அவனை அமர வைத்த வனிதா, ₹ப்ச் நான் அப்பவே ஹாஸ்பிட்டல் போலாம்னு சொன்னேன் நீ தான் கேட்கல இப்ப பாரு வலிக்குது" என்று அவனை அதட்டி கொண்டே வீங்கி இருந்த கையை மெதுவாக அமுத்தி பார்க்க, வலியில் வேந்தனோ முகத்தை சுருக்கினான்..

"அத்தை அவருக்கு வலிக்குது பாருங்க" என்று வேந்தன் முகத்தை சுருக்கியதை பார்த்து நிலா பதறி கத்த, "அய்யய்யோ இவ வேற ஓவர் பர்பாமன்ஸ் பண்ணிட்டு இருக்காளே!!" என்று பகலன் நினைத்திருக்க, அவனிடம் செழியனும் "நீ நினைச்சதை தான் நானும் நினைச்சேன் மச்சி" என்று மெதுவாக சொல்ல, "அடேய் என் மைண்ட்டை ஏன்டா நீ கேட்ச் பண்ணுனே!!" என்ற ரீதியில் அவனை முறைத்தான் பகலன்..

"வெந்நீர்ல இப்ப ஒத்தடம் குடுத்துட்டு காலைலயும் இப்படியே இருந்தா ஹாஸ்பிட்டல் போய் பார்த்துக்கலாம்" என்று வனிதா சொன்னதும், "இதோ நான் வெச்சு எடுத்துட்டு வர்றேன் அத்தை" என்று உள்ளே செல்ல போன நிலாவை இழுத்து பிடித்த பகலன், "நீ ஆணியே புடுங்க வேணாம் கம்முனு நில்லு" என்றிட, "உன்னோட குக்கிங் பத்தி அடியேனும் அறிவேன் ப்யூட்டி என் அண்ணன் பாவம் சோ நானே போறேன்" என்று விட்டு செழியன் உள்ளே செல்ல, "ம்ம்ம்ம்க்கும் ரொம்பதான்டா" என்று தோளை குலுக்கி கொண்டு முகத்தை உர்ரென்று வைத்து கொண்டு நின்றாள்..

வேந்தனோ இவர்கள் வந்ததில் இருந்து ஒருமுறை கூட நிலாவை பார்க்காமலயே இருக்க, "வலிக்கற நாளா தான் அவன் அப்படி இருக்கான்" என்று தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டு ஒருமுறையாவது என்னை பார்த்து விட மாட்டாயா?? என்ற ஏக்கத்தில் அவனையே பார்த்திருந்தான்..

வெந்நீரில் டவலை நனைத்து மெதுவாக வனிதா ஒத்தடம் குடுக்க, வலியில் முகத்தை சுருக்கி கொண்டு அமர்ந்திருந்த வேந்தன், ஓரக் கண்ணால் நிலாவை பார்த்தான்.. அவன் பார்த்தது இவளுக்கும் தெரிந்தும்‌ எதுவும் நடவாதது போல் நின்று கொண்டாள்..

உதட்டுக்குள் சிரிப்பை அடக்கியவள், அமைதியாக நின்றிருக்க, வேணுமென்றே இருமிய நிலா, அவன் பார்த்ததும் கண் அடிக்க, அவனின் முகம் கடுப்பில் சிடுசிடுவென மாறியது.. நிலா அதை ரசித்து கொண்டே வேந்தன் அவளை பார்க்கும் போதெல்லாம் கண் அடித்தே அவனுக்கு பிபியை ஏத்தி கொண்டிருந்தாள்..

நிலாவின் செயலில் பகலனோ, "மச்சி நீ பார்த்தே???" என்று பாவமாக செழியனிடம் கேட்க, அவனும், "மச்சி அப்ப நீயும் பார்த்தீயா??" என்று சிலையாக நின்றபடி கேட்க, "யூ பிளட் சேம் பிளட் மச்சி" என்று கதறினான் பகலன்..

"இருந்தாலும் உன் மாமன் பொண்ணுக்கு இவ்ளோ தைரியமாக கூடாது மச்சி இத்தனை பேரு இருக்கறப்பவே சண்டியர் மாதிரி இருக்கற என் அண்ணனோட கோவத்தை கிளரிட்டு இருக்காளே?? இதை நான் வன்மையாக கண்டிக்கறேன்" என்று சொன்னவனை கேவலமாக பார்த்த பகலன், "உன் நொண்ணன் என்ன கேசரியா?? இந்த பிசாசு கிளரரதுக்கு?? போய் ஒரு நாலு பக்கம் பேசறதுக்கு நல்ல டையலாக்கா யோசிச்சுட்டு வாடா முதல்ல" என்றான் பகலன் அவனின் காலை வாரியபடி..

அவனை வெறுப்பேத்தி வெறுப்பேத்தி சலித்து போன நிலா, வேந்தனின் அறைக்க சென்றவள் சாதாரணமாக ஒவ்வொன்றையும் பார்த்த படி இருக்க, கீழே ஒரு புகைப்படம் கிடப்பதை பார்த்து அதை எடுத்து பார்த்தவளின் மனமோ இரண்டாக பிளந்தது..


தொடரும்...
 

Sahithya varun

New member
Wonderland writer



பகுதி - 9





வேந்தனின் அறையை நோட்டமிட்டு கொண்டிருந்த நிலா, ஏதேச்சையாக கீழே கிடந்த ஒரு புகைப்படத்தை பார்க்க, குனிந்து அதை எடுத்து பார்த்தவளின் மனது இரண்டாக கிழிந்தது..

அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்திற்கு கீழே "எங்களைய பிடிக்காம தான் எங்களைய விட்டுட்டு போய்ட்டிங்களா?? பட் மிஸ் யூ மிஸ் யூ மிஸ் யூ மாம்" என்று இருந்ததை பார்த்து தான் நிலாவிற்கு நெஞ்சம் விம்மியது..

தன்னவனுக்கு அம்மா இல்லையா?? என்று நினைத்தவளின் யோசனைகள் தறிகெட்டு ஓட, அதை அடக்கியவள் "மகி பேபி கொஞ்ச நாள் பொறுத்துக்கோ அதுக்கு அப்பறம் மனைவியா மட்டுமில்லாம உனக்கே உனக்குனு எல்லாமுமா இருப்பேன்.. அம்மாவே ரொம்ப மிஸ் பண்றீயா மகி பேபி" என்று தன் போக்கில் நினைத்தவளுக்கு விழிகளிலும் நீர் கோர்த்திட, விம்மிய மனதை அடக்க வழி தெரியாமல் கண்ணீரை சிந்திய நிலா, கண்ணை துடைத்து கொண்டு வெளியில் வந்தாள்..

அவளை பகலன் யோசனையாக பார்க்க, நிலாவோ அவனை மட்டுமில்லாமல் வேறு யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் நின்றிருந்தாள்.. வேந்தன் கூட இவளுக்கு என்ன ஆச்சு?? என்ற
ரீதியில் அவளை பார்த்தான்..

கொண்டு வந்த இட்லியை வனிதாவே வேந்தனுக்கு ஊட்டி விட செல்ல, அவனோ அதிர்ந்து "நானே சாப்பிட்டுக்கறேன் மேடம்" என்று மறுக்க, "ப்ச் அமைதியா சாப்பிடு வேந்தா" என்று ஒரு அன்னையாய் அவனை அதட்டி ஊட்டி விட, வேந்தனுக்கு கூட கண்கள் கலங்கி விட்டது..

இதை பார்த்து செழியனும் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டு கிச்சனுள் சென்று விட, நிலாவுக்கோ கதறி அழுக வேண்டும் என்று தோன்றிய மனதை பெரும்பாடு பட்டு அடக்கி கொண்டிருந்தாள்..

வேந்தன் கலங்கியதையும் செழியன் கலங்கியதையும் பகலன் கவனித்து கொண்டு தான் இருந்தான்.. அவனுக்கு என்னவென்று புரியாமல் நின்றிருக்க, நிலாவை பார்த்தவன் ஏதோ சரியில்லை என்று மட்டும் நன்றாகவே தெரிந்தது..

வனிதாவின் முகத்தை பார்த்து கொண்டே துக்கத்தில் உள்ளே இறங்க மறுத்த இட்லியை வேந்தன் உண்டு கொண்டிருக்க, அவன் கண்ணில் தெரிந்த வலியை கண்டு கொண்ட நிலாவுக்கோ தன்னை மீறி வழிந்த கண்ணீரை கட்டுபடுத்த முடியாமல் வெளியில் சென்று விட, ஒன்றுமே புரியாமல் பகலனும் அவளின் பின்னே சென்றான்..

வெளியில் சென்ற நிலா, அங்கிருந்த ஒரு பென்ஞ்சில் அமர்ந்து கதறி அழுது கொண்டிருக்க, பகலன் பதறி "நிலா நிலாமா என்னடா ஆச்சு?? ஏன் இப்படி அழுகறே??" என்று ஆதரவாக கேட்டதும், அவளின் அழுகை தான் அதிகமாகியது..

பகலனின் தோளில் சாய்ந்து கொண்டு," பகலா நமக்கு அம்மா இல்லாம இருந்துருந்தா நம்மனால இவ்ளோ சந்தோசமா இருந்துருக்க முடியுமாடா?!" என்று தேம்பியபடி திக்கி திணறி கேட்டவளை குழப்பமான முகத்துடன் நோக்கினான்..

தான் பார்த்த புகைப்படத்தை பற்றி சொல்லிவிட்டு, " அத்தை மகிக்கு ஊட்டி விட்டதுல அவனோட கண்ணுல சந்தோசத்தை மீறியும் அவ்வளவு வலி தெரிஞ்சுச்சு.. அதே மாதிரி செழியனோட ஏக்கத்தை அவனோட முகமே அப்பாட்டமா காட்டுச்சு.. இந்த அளவுக்கு இருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கலடா" என்று விட்டு நிலா தேம்ப, பகலனுக்கே மனது பாரமாக மாறியது போன்று இருந்தது..

செழியனின் சிரிப்பிற்கு பின்னால் இப்படி ஒரு வலி இருப்பதை இன்னும் பகலனால் நம்ப முடியவில்லை.. இப்போது எல்லாம் கஷ்டத்தை மறைக்க பலர் அணிவது தான் சிரிப்பு என்ற முகமூடி.. ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் வலியை அவர்கள் மட்டுமே அறிவர்..

"ப்ச் லூசு இப்படி ஒப்பாரி வெச்சா எல்லாம் சரியாகிருமா?? முதல்ல கண்ணை துடைச்சு உள்ள போலாம் வா" என்று அவளின் முகத்தை வலுக்கட்டயமாக துடைத்து விட்ட பகலன் அவளை அழைத்து கொண்டு உள்ளே வந்தவன் இமைக்க கூட மறந்து நின்றான்..

திரும்பி நிலாவை பார்க்க, அவளும் சிறுதுளி நீருடனும் உதட்டில் புன்னகையுடனும் நின்றிருந்தாள்.. அங்கு வனிதாவின் மடியில் வேந்தனும் செழியனும் தலை வைத்து படுத்திருக்க, அவர்களின் தலையை கனிவுடன் தடவி குடுத்தபடி அமர்ந்திருந்தார் வனிதா..

எதுவும் பேசாமல் நிலாவும் பகலனும் வந்து அமர, சிறிது நேரம் எதுவும் பேசாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் அமர்ந்திருந்தனர்.. "ம்மா மாமா வந்துட்டா மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிச்சுருவாரு.." என்று இழுத்து சொன்ன பகலனை முறைத்த வனிதா," இப்ப எதுக்குடா அந்த மனுசனை நியாபக படுத்தி விடரே??" என்று நொந்தவர் இருவரும் தூங்கி விட்டார்களா?? என்று பார்க்க, செழியன் தான் நன்றாக கண் அயர்ந்திருந்தான்.. வேந்தனோ இவர்கள் பேசுவதை கூட கவனிக்காமல் சுவரையே வெறித்திருக்க, அவனை பார்த்த நிலாவுக்கு தான் அவனை இப்படி பார்க்க முடியாமல் ஏதோ போல் இருந்தது..

"ஹலோ வேந்தன் சார் நாங்க வீட்டுக்கு போகட்டுமா?? இல்ல இங்கயே பாயை விரிக்கட்டுமா??" என்று நிலா தான் மனதை கல்லாக்கி கொண்டு எப்போதும் போன்று அவனிடம் கேலியாய் கேட்க, அவளின் கேள்வியில் சுயநினைவிற்கு வந்த வேந்தன் பட்டென்று எழுந்து அமர்ந்தான்..

"சா..ரி.. மேடம்" என்று தடுமாறிய வேந்தனை முறைத்த வனிதா, "உன்கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது அம்மானு கூப்பிடுனு" என்று அதட்டியவர் மெதுவாக செழியனின் தலையை தன் மடியில் இருந்து எடுத்து கீழே படுக்க வைத்து விட்டு எழுந்தார்..

"அந்த மனுசன் இல்லனா இங்க இருக்கறது எல்லாம் எனக்கு பெரிய பிரச்சனையே இல்ல வேந்தா.. எங்களைய காணோம்னு செல்வியை தான் பிடிச்சு கத்துவாரு.. அதுதான் என் கவலையே" என்று ராசுவை நினைத்து கொண்டு வனிதா சொல்ல, "ஆமா ஆமா வேந்தா இவங்களைய நீயே வெச்சுக்கோ எனக்கு திட்டு வாங்கறதாவது மிச்சமாகும்.. இவங்கனால அந்த மனுசன் கிட்ட நான் தினமும் திட்டு வாங்கி வாங்கி மத்தவங்க திட்டுனா கூட ரோசமே வர மாட்டிங்குது" என்று பாவமாக பகலன் சொன்னதும், வேந்தனுக்கு சிரிப்பு வந்துவிட, அழுத்தமான உதட்டை சிறிது பிரித்து மெல்லிய புன்னகையை உதிர்த்தான்..

அவனின் சிரிப்பை ரசனையுடன் உள்ளுக்குள் ரசித்த நிலா வெளியில் உம்மென்று முகத்தை வைத்து கொண்டு பகலனை முறைக்க, மறுபுறம் வனிதாவும் அவனை முறைத்து பார்க்க, "ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளைச்சது இல்ல போல முறைக்குது பாரு வேந்தா.. இது எல்லா என்னனு கேட்க மாட்டியா??" என்று உதட்டை பிதுக்கி கொண்டு கேட்ட பகலனிடம், வேந்தனோ, "உன் வாய் தான் உனக்கு பெரிய எதிரி.. அதையை முதல்ல அடக்கு" என்றான் சின்ன சிரிப்புடன்..

"அப்படி சொல்லு வேந்தா" என்று வனிதா அவனுக்கு ஹைபை குடுக்க, "டேய் பகலா இது உனக்கு தேவை தான்டா தேவை தான்டா" என்று அவன் முகத்தின் முன்னே அவனே விரல் நீட்டி சொல்லி கொள்ள, நிலாவோ "அச்சோ பாவம் தான்டா நீ" என்றாள் இச் கொட்டியபடி..

வேந்தன் சாதாரணமாக மாறியதை உறுதி படுத்தி கொண்டு தான் மூவரும் கிளம்ப, வெளியில் சென்ற நிலா, மறுபடியும் அவனிடம் வந்து ஹஸ்கி குரலில், "நீ மட்டும் என் காதலுக்கு சம்மதம் சொல்லு உன் அம்மாவையும் என் கூடயே கூட்டிட்டு வந்தறேன்.. நீ என்னைய லவ் பண்ணல.. பண்ணல..." என்று கோவமாக முறைத்தவள் பின்பு கையை கட்டி குனிந்து கொண்டு "சத்தியமா அழுதுருவேன்டா அழுதுருவேன்" என்று பாவமாக சொன்னதும், உதட்டுக்குள் தோன்றிய சிரிப்பை அரும்பாட்டு பட்டு அடக்கிய வேந்தன் முகத்தை கடுகடுவென மாற்றி கொண்டு "கிளம்பு" என்று வாசலை காட்டினான்..

"ம்ம்ம்க்கும் ரொம்ப தான்டா பண்றே??" என்று தோளை குலுக்கிய நிலா "லவ் யூ சோ மச் மகி பேபி" என்று தலை சாய்த்து குறும்புடன் சொன்னவளை இமைக்க கூட மறந்து பார்த்திருக்க, அவனின் பார்வையை கலைக்க விரும்பாமல் துள்ளலுடன் வெளியேறி இருந்தாள் நிலா..

"ச்சை வர வர எனக்கு என்ன ஆகுது??" என்று தன்னிலைக்கு வந்த வேந்தன் தன்னை தானே அறைந்து கொண்டு அப்படியே அமர்ந்தும் விட்டான்.. "என்னால ஏன் இந்த லூசை மட்டும் வெறுக்க முடில?? அவ பக்கத்துல வந்தா என்னையவே மறந்து நிக்கறனே?? அப்ப நான் என் வருவை உண்மையா லவ் பண்ணலயா??" என்று சாதாரணமாக நினைத்ததுக்கே அவனின் இதயம் வலியை கொடுக்க, "நோநோநோ நான் என் வருவை மட்டும் தான் லவ் பண்றேன் இனியும் பண்ணுவேன்.." என்று தலையை பிடித்து கொண்டான்..

"முதல்ல இங்கிருந்து கிளம்பனும் அதுதான் நல்லது" என்று நினைத்து கொண்டே கதவை சாத்தி விட்டு செழியனிடம் அமர்ந்தவன் தூங்கி கொண்டிருந்தவனின் தலையை பரிவுடன் கோதி விட, தூங்கி கொண்டிருந்தவனோ எழுந்து வேந்தனின் மடியில் தலை வைத்து அவனின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு தூக்கத்தை மீண்டும் தொடர, வேந்தனும் புன்னகைத்தபடி சுவரில் தலை சாய்த்து கண் அயர்ந்தான்..

இரண்டு நாட்களாக நிலாவின் கண்களுக்கு அகப்படாமலே வேந்தன் கண்ணாமூச்சி விளையாட, அவன் எவ்வளவு தூரம் தான் செல்கின்றான் என்று நினைத்து நிலாவும் அமைதியாக இருந்தான்..

அன்றும் நிலா அவனை வறுத்தபடி காரில் அமர்ந்திருக்க, சாலை ஓரத்தில் நின்று போன் பேசி கொண்டிருந்த வேந்தனை இவள் பார்த்ததும் இன்னைக்கு இவனை விட மாட்டேன் என்று கடுப்புடன் அவனிடம் சென்றாள்..

"என்ன மகி பேபி கண்ணாமூச்சி விளையாட்டு காட்டறீயா?? அதுவும் என்கிட்டயே??" என்று பின்னால் இருந்து குரல் வந்ததும் திரும்பிய வேந்தன் நிலாவை பார்த்ததும் பதிலேதும் சொல்லாமல் பைக்கை எடுக்க போக, வண்டியின் சாவியை எடுத்தவள் அவனை திமிராக பார்த்தாள்..

"ப்ச் இப்ப உனக்கு பிரச்சனை???" என்று எரிச்சலுடன் கேட்ட வேந்தனிடம், "நீதான்டா பெரிய பிரச்சனை.." என்றாள் அலுத்து கொண்டே..

"நீ நினைக்கறது நடக்காதுனு நான் முதல்லயே சொல்லிட்டேன்.. உன் அப்பனுக்கு இது தெரியறதுக்கு முன்னாடி கிளம்பு" என்று அலட்சிய பார்வையில் வேந்தன் சொல்ல, "இப்ப என்ன அந்த மனுசன் தான் உனக்கு பிரச்சனையா?? அவரை சம்மதிக்க வெச்சா நீ சம்மதிப்பீயா??" என்று கேட்டாள் சிடுசிடுப்புடன்..

"இது என்ன விளையாட்டா?? அவங்களுக்கு சம்மதம்னா உனக்கும் சம்மதமானு கேட்க?? வாழ்க்கைமா வாழ்க்கை.. அதான் எனக்கு பிடிக்கலனு சொல்லிட்டேனல்ல?? திரும்ப திரும்ப வந்தா காதல் எல்லாம் வராது எரிச்சல் தான் வரும்" என்று சினத்துடன் சொன்னவனின் வார்த்தைகள் பெண்ணவளை தீண்டவே இல்லை என்பதை போல் கையை கட்டி கொண்டு நின்றிருந்தாள் சாதாரணமான முகத்துடன்..

"கத்தி முடிச்சிட்டிங்களா மகி பேபி.. நீங்க கத்தறதுக்கு எல்லாம் எனக்கு ரோசமே வராது அதுவும் உன்கிட்ட வரவே வராது... இப்படி பேசி என்னைய துரத்தி விட்டரலாம்னு பிளான்ல இருந்தா இப்பவே அதையை விட்டு வேற பிளான் யோசிச்சுக்க மகி பேபி.. அந்த ஹிட்லர் திட்டற திட்டுக்கு ரோசம் வந்துருந்தா நான் எல்லாம் இன்னேரம் நூறு கோடி தடவைக்கு மேல தூக்குல தொங்கிருக்கனும்" என்றாள் விழிகளை உருட்டி..

மேலும் அவனின் விழிகளை கூர்பார்வை பார்த்து மந்தகாச புன்னகையை அதில் தவழ விட்ட நிலா, "நீ எப்ப என் காதலை ஏத்துக்கறீயோ அது வரைக்கும் உனக்காகவே நான் இருப்பேன்.. இந்த ஜென்மத்துல நீ மட்டும் தான் என் கணவன்.. வேற யாரும் என்கிட்ட நெருங்க கூட முடியாது.. நீ நினைக்கலாம் பார்த்ததும் எப்படி காதல் வருதுனு.. அதுக்கான விடையை தான் நானே இன்னும் யோசிச்சுட்டு இருக்கேன்.. எனக்கு தெரிஞ்சதும் உனக்கு சொல்றேன் மகி பேபி.. டாட்டா" என்று சாவியை அவன் கையில் திணித்து விட்டு மான்குட்டியை போன்று துள்ளி ஓடியவளை பே வென்று வேந்தன் பார்த்திருக்க, அவன் மனமோ "என்ன பொண்ணுடா இவ???" என்று நினைக்க, "ச்சை" என்று தனது எண்ணத்தை மாற்றியவன் அங்கிருந்து கிளம்பினான்..

இதை அனைத்தையும் ஒரு ஜோடி கண்கள் நோட்டமிட்டு கொண்டிருந்ததை யாரும் அறியவில்லை போலும்!!?



தொடரும்...
 
Top