ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் இனிய தனிமையே-கதை திரி

Status
Not open for further replies.

T21

Well-known member
Wonderland writer
அத்தியாயம் 3



அறைக்குள் நுழைந்ததுமே "சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்க போறீங்களா மாமா? இல்ல ரெஸ்ட் எடுத்துட்டு சாப்பிட போறீங்களா?" என்று கேட்டபடியே அவர் உடைகளை எடுத்துக் கொடுக்க, அவரோ "குளிச்சுட்டு வரேன். காபி மட்டும் கொடும்மா, ரெஸ்ட் எடுத்துட்டு அப்புறம் சாப்பிடலாம்" என்று சொல்ல, அவளும் "சரி மாமா" என்று சொல்லிக் கொண்டே வெளியேற வம்சியும் குளியலறைக்குள் நுழைந்து கொண்டார்.

இதே நேரம் அறைக்குள் கோபமாக வசந்த் அமர்ந்து இருக்க, உள்ளே நுழைந்த ராதிகாவோ "அவளை அன்னைக்கே போட்டிருக்கணும், தப்பு பண்ணிட்ட" என்று சொல்ல, அவனோ "புள்ள பூச்சி போல இருந்தாடி, இந்த புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு நான் என்ன கனவா கண்டேன்?" என்று சொல்லிக் கொண்டே பழைய நினைவுகளை சுழல விட்டான்.

வசந்த் கிருஷ்ணா, தாய் இல்லாத பணக்காரப் பையன் என்றால் கேட்கவும் வேண்டுமா? பெண்கள் போதை, குடி கும்மாளம் என்று அலைந்து திரிபவனுக்கு பெண்கள் என்னவோ கிள்ளுக் கீரை தான். ஊரில் இருக்கும் அனைத்துப் பெண்களும் தன்னை சந்தோஷப்படுத்த தான் பிறந்து இருக்கின்றார்கள் என்னும் நினைப்பு அவனுக்கு. பெண்களின் குணநலம் அறிந்து அதற்கேற்ப வேடம் பூண்டு அவர்களை அடைவதில் கில்லாடி என்றால், காதலி என்னும் பெயரில் அவன் பணத்துக்காக அவனுடன் சுற்றித் திரிந்த ராதிகாவோ பார்த்தது என்னவோ மாமா வேலை தான்.

அவளுக்கு பெண்கள் என்றால் அவளுக்கு பணம் தான் முக்கிய நோக்கம். காதலன் எந்த பெண்ணுடன் சென்றாலும் அதை பற்றி அவளுக்கு கவலை இல்லை. இப்படியான அரக்கர்களிடம் சிக்கிக் கொண்ட பாவை தான் இந்த காதம்பரி.

ஒரு நாள் பகல் என்றும் பாராமல் பப்புக்கு சென்று விட்டு ராதிகாவுடன் திரும்பிக் கொண்டு இருந்தான் வசந்த். அப்போது ஒரு முக்கியமான கால் வர, காரை ஓரமாக பார்க் பண்ணி விட்டு போன் பேசிக் கொண்டு இருந்தவன் கண்ணில் தான் அங்கிருந்த பூ கடையில் நின்று பூ வாங்கிக் கொண்டு இருந்த காதம்பரி தென்பட்டாள். மாசு மருவற்ற அழகிய வதனம், வளைவுகளுடன் கூடிய மேனி என்று அவள் பேரழகியாக இருக்க, இவன் கண்களோ அவள் மேனியில் படிந்து மீள, "ஐ வில் கால் யூ பேக்" என்று சொல்லிக் கொண்டே போனை வைத்தவனோ "ப்பா" என்று வாய் விட்டு சொல்ல, அவன் அருகே இருந்து சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்த ராதிகா, எட்டி அவன் பார்வை போகும் இடத்தைப் பார்த்தாள்.

அவன் விழிகளோ அவள் மேனியில் படிவதைக் கண்டவள் "வேணுமா?" என்று கேட்க அவனோ "கிடைக்குமா?" என்று தான் கேட்டான். அவளோ "கொடுக்கிற பணத்தை பொறுத்து கிடைக்கலாம்" என்று சொல்ல, காதம்பரியையே பார்த்துக் கொண்டு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து அவள் கையில் திணித்தவன் "செமயா இருக்கா தானே" என்று கேட்க அவளோ "ம்ம் நாட் பேட் " என்று சொல்லிக் கொண்டே சிகரெட்டை அவனிடம் நீட்ட அவனும் அதனை புகைக்க ஆரம்பித்தான்.

புகையுடனேயே ராதிகாவை முத்தமிட, அவளோ பணத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு இந்த முத்தம் எல்லாம் ஒன்றுமே இல்லை தான். அடுத்த நாளே காதம்பரியைப் பற்றி விடயங்களை தேடி எடுத்தவள் அவள் தாய் தந்தை இல்லாத பெண்ணென்று அறிந்து கொண்டது மட்டும் இன்றி, அவளுக்கு ஒரு சகோதரியை தவிர யாரும் இல்லை என்று உறுதி செய்து கொண்டாள். "அப்போ நமக்கு ஈஸி டார்கெட் தான்" என்று நினைத்தவள், அவள் கெமிஸ்ட்ரியில் முது மாணி கல்வி கற்றுக் கொண்டு இருப்பதையும் அறிந்தவள் "ரொம்ப படிப்பாளி போல" என்று நினைத்துக் கொண்டே அவள் தினம் சென்று வரும் இடங்களைப் பற்றியும் தகவல் சேகரிக்க தொடங்கினாள். அவள் மாலை நேரத்தில் யோகா க்ளாஸ் போவதை அறிந்தவளுக்கு அது தான் சரியான தருணமாக பட, வசந்த்திடம் வந்தவள் விடயத்தை சொல்ல, அவனோ "இதுக்காக நாம யோகா க்ளாஸ் போகணுமா என்ன?" என்று சலித்தாலும் "படுற கஷ்டத்துக்கு அவ வேர்த் தான்" என்று சொல்லிக் கொண்டே அந்த வகுப்பில் ராதிகாவுடன் போய் சேர்ந்து கொண்டான். அங்கே போகும் முன்னரே, "எந்த பொண்ணுக்காகவும் இவ்ளோ கஷ்டப்பட்டது இல்ல ராதி, எல்லாருமே பணத்தை காட்டினா போதும் ட்ரெஸ்ஸை கழட்டுவாளுங்க" என்று தரம் தாழ்ந்து பேச, ராதிகாவோ "அது நம்ம சரவுண்டிங் பொண்ணுங்க தான் வசந்த், இவ ரொம்ப ஆச்சாரமான பொண்ணா இருக்கா, உனக்கு கஷ்டமா இருந்தா சொல்லு ஆள மாத்திடலாம்" என்று சொல்ல, அவனோ "நோ நோ செம செக்சியா இருக்கா, ஒரு கை பாத்துடலாம்" என்று சொன்னவன் யோகா வகுப்பில் தனது லீலைகளை ஆரம்பித்து இருந்தான். போதாதற்கு ராதிகா வேறு காதம்பரிக்கு கேட்கும் வண்ணம் "வசந்த் ஒரு ஜென்டில் மேன் தான், அவனை கட்டிக்க போற பொண்ணு கொடுத்து வச்சவ"என்றெல்லாம் பேசி அவளுக்கு வசந்த் என்றால் யார் என்று தேடும் அளவுக்கு ஆர்வத்தை அதிகரிக்க, அவளும் பக்கத்தில் இருந்த பெண்ணிடம் "வசந்த்னா யாரு?" என்று கேட்டாள்.

அந்த பெண்ணோ "நானும் இப்போ தான் யாருன்னு தேடி பார்த்தேன், அதோ நிக்குறாரே அவர் தான்" என்று சொல்ல, யோகா மாஸ்டருடன் பேசிக் கொண்டு இருந்த வசந்தை முதல் முறை பார்த்தான் அவன். வெண்ணிற குர்தாவில், நிமிர்ந்த தோற்றமுமாக, சிரித்துக் கொண்டே பேசிக் கொண்டு இருந்தவனின் சிரிப்பில் மயங்கியவள் அறியவில்லை, அந்த சிரிப்பின் பின்னே மறைந்து இருக்கும் குரூரத்தை.

அன்று யோகா க்ளாஸ் முடிய, அவளை தாண்டி சென்றவனோ ஒரு கணம் திரும்பி அவளை பார்த்து "ரொம்ப இன்வால்மெண்ட் ஆஹ் யோகா பண்ணுறீங்க. கீப் இட் அப்" என்று சொல்ல, மெலிதாக புன்னகைத்துக் கொண்டவளுக்கு இதயத்தில் ஒரு படபடப்பு. தினமும் குட் ஈவினிங் என்று ஆரம்பிப்பவர்கள் மென்மையான புன்னகையுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்க ஆரம்பிக்க ராதிகா வேறு வசந்தை சூப்பர் ஹீரோ ரேஞ்சுக்கு அவள் காது பட பில்ட் அப் பண்ணி வைத்து இருந்தாள்.

ஒரு நாள் யோகா கிளாஸ் முடிய காரில் ஏறிய வசந்த் "என்ன இழவுடி இது? குட் ஈவினிங், ரொம்ப அழகா இருக்கீங்க, சோ ஸ்வீட்ன்னு பேசிட்டே இருக்க வேண்டியது தானா?" என்று சீற அவளோ "கொஞ்சம் பொறு வசந்த், அடுத்த வாரம் லவ்வை சொல்லலாம்" என்று சொன்னாள். அவனோ "எத? லவ் ஆஹ்?" என்று கேட்க அவளோ "அப்படி சொன்னா தான் அவ பக்கத்திலேயே வருவா" என்று அழுத்தமாக சொல்ல "என்னவோ பண்ணி தொலை " என்று சொன்னபடி ஒரு கட்டு பணத்தை அவள் கையில் திணிக்க அவளும் தீயாக வேலை செய்ய ஆரம்பித்தாள். அதன் விளைவு, அடுத்த வாரம் நேரே காதம்பரியிடம் வந்த ராதிகா, "உன் கிட்ட பேசணும்" என்று சொல்ல, அவளும் "என்ன பேசணும்?" என்று கேட்டாள். ராதிகாவோ "வசந்த் உன்னை லவ் பண்ணுறானாம், உனக்கு ஓகே யா இல்லையான்னு கேட்க சொன்னான்" என்று சொல்ல, இதை எல்லாம் பழகி இருக்காத காதம்பரியோ "அச்சோ, என்னால முடியாது" என்று சொல்லி விட்டு அங்கிருந்து வேகமாக நகர்ந்து விட, தோல்வியுடன் காரில் ஏறிய ராதிகாவிடம் "என்னாச்சு?" என்று கேட்டான் வசந்த். அவளோ இதழ் பிதுக்கி இல்லை என்று தலையாட்ட, "இதுக்கு தான் இங்க வார கணக்குல வந்தோமா? போடி" என்று சொல்ல, அவளோ "நாளைல இருந்து நீ வராத, அடுத்த வாரமே அவ உன்னை தேடி வருவா" என்று சொல்ல, அவனோ "எனக்கு நம்பிக்கை இல்லை. நீ சொன்னாலும் வர்ற எண்ணம் எனக்கு இல்ல, நாளைல இருந்து பசங்க கூட ஒரு வாரம் கோவா போக போறேன்" என்று சொன்னான், அவளோ "நீ போய் வர்றதுக்கு இடையில் நான் அவளை செட் பண்ணி வைக்கிறேன், " என்று சொல்லி கையை நீட்ட, அவனோ "இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல" என்று சலித்தாலும் அவள் கையில் ஒரு கட்டுப் பணத்தை எடுத்து வைத்தான்.

அவனும் கோவா போய் விட, அடுத்த நாள் முதல் முறை காதம்பரியின் கண்கள் யோகா கிளாசில் வசந்தை தேடியது.
 
Status
Not open for further replies.
Top