என்னை மாற்றும் காதலியே....
அத்தியாயம் – 1
அந்த வீடே மிகவும் அமைதியாக இருந்தது,
அந்த அமைதியை கெடுப்பது போல், காதை அடைப்பதுப் போல்
"சூர்யா டேய் சூர்யா " என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தாள் மாதவிதேவி.
"ஏன்டி இப்படி கத்தார நீ கத்தர கத்துல என் காதுல இருக்கற சவ்வு கிழிந்துரும் போல" என்று கூறிக்கொண்டு தன் காதை தன் கை கொண்டு தேய்த்துக்கொண்டான் சூர்யா.
“போடா” என்று கூறிக்கொண்டே அவனை தள்ளிவிட்டு உள்ளேச் சென்றாள்.
அங்கு அவனின் தாய் சாரதா உள்ளே இட்லி சுட்டுக்கொண்டு இருந்தார். நேராக உள்ளே சென்று சமையல் மேடையின் மேல் அமர்ந்துக்கொண்டு அங்கு உள்ள இட்லியை போட்டுச் சாப்பிட தொடங்கிவிட்டாள்.
அத்தை சூப்பரா இருக்கு என்று ருசித்துக்கொண்டே கூறினாள்.
சூர்யா ரெடியாகிக்கொண்டு நேராக சமையல் அறைக்குச் சென்றான்.
“அம்மா டிப்பன் ரெடியா” என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தான் சூர்யா.
“கொஞ்சம் இருப்பா இட்லி ஆகிட்டு இருக்கு” என்றார்.
“பசிக்குது அம்மா” என்றான்.
மாதவியோ அங்கு இருந்த இட்லியை வெட்டிக்கொண்டு இருந்தாள். அதை பார்த்த சூர்யா அவள் அருகில் சென்று
“டைனின் டேபில் எதுக்கு இருக்கு அங்க சாப்பிடலாம் அல்ல, எப்போ பார்த்தாலும் இந்த சமையல் மேடையிலே சாப்டரா” என்று கூறிக்கொண்டே அவளின் தட்டில் இருந்த உணவை எடுத்து சாப்பிட துவங்கினான்.
“எனக்கு இங்க சாப்பிடதா பிடிச்சுருக்கு” என்றாள்.
“விடுப்பா அவளுக்கு இங்க உட்கார பிடிச்சுருக்க அங்க இருக்கட்டும்” என்று கூறிக்கொண்டே இட்லி வைத்தார்.
இருவரும் உணவு அருந்தி விட்டு சூர்யாவின் வண்டியில் ஏறி இருவரும் கல்லுரிக்கு சென்றனர்.
அவங்க கல்லுரிக்கு போகட்டும் நம்ம அவங்கல பத்தி தெரிஞ்சிக்கலாம்...
சூர்யாதேவ் MBA படித்துக்கொண்டு இருக்கிறான் அதோடு MODELING துறையில் சேர்வதற்கு முயற்ச்சித்து கொண்டுள்ளான். இவனுடைய உயரமும் அதற்க்கு ஏற்ப அவனுடைய உடல் வாகும் அனைத்து பெண்களையும் ஈர்க்கும் அதுவும் அவன் கண்ணில் உள்ள வசீகர பார்வை அனைத்தும் பெண்களை கட்டிப்போடும்.
ஆனால் நம் நாயகன் அதற்கு எல்லாம் சரிப்பட்டு வரமாட்டான். யாராவது வந்து பேசுனா கூட ஓரிரு வார்த்தைகயோடு முடித்துக் கொள்வான். அவன் அதிகம் பேசும் பெண் மாதவி மட்டுமே.
மாதவிதேவி 22 வயது பார்த்தவுடன் அனைவரையும் திரும்பி பார்க்கும் அழகு fashion technology படித்துக்கொண்டு இருக்கிறாள். இவளுக்கு மிகவும் பிடித்த விசியம் பேசுவது மட்டுமே. சூர்யாக்கு பல முறை தோன்றி உள்ளது. இவள் உறங்கும் போதாவது அமைதியாக இருப்பாளா என்பது,
சூர்யாவும் மாதவியும் சிறு வயது முதல் நண்பர்கள். அவளின் தந்தை சதா சிவம் ஒரு தொழில் அதிபர். பணக்கர வரிசையில் எப்பொதும் முதல் ஐந்து இடத்தில் இருப்பவர். கடந்த 20 ஆண்டுகளாக தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டு உள்ளார். அவருக்கு தன் மகள் என்றால் உயிர். அவளுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய கூடியவர். தாய் லட்சுமி இல்லத்தரசி. லட்சுமிக்கு மகள் மற்றும் கணவன் மட்டும் தான் உலகம் என்று வாழ்பவர்.
இருவரும் ஒரே கல்லுரியில் தான் படிக்கின்றனர்.
இருவரும் ஒன்றாக கல்லூரிக்குள் நுழைந்தனர்.
மாதவி அவளின் வகுப்புக்குள் சென்றாள்.
“ஹாய் நிவி” என்று கூறிக்கொண்டே அவளின் இடத்தில் அமர்ந்தாள் மாதவி.
“ஹாய் மாது நேத்து உனக்கு ரொம்ப நேரம் கால் பண்ண ஆனா கால் ரீச் ஆகல” என்றாள் நிவேதா.
“நேத்து நான் சூர்யா கூட வெளிய போய்ருந்த அங்க சுத்தமா டவர் இல்லடி அதன்” என்றாள் மாதவி.
“ஏன் எதாவது முக்கியமான விசியமா” என்றாள் மாதவி.
“ஆமா ********** ஈவன்ட் வருது அல்ல, அதுல நம்ம காலேஜ் சார்பா யாரெல்லாம் கலந்துக்க போறாங்கனு கேட்டாங்க, அத உனக்கு சொல்லலாம்னு” என்றாள் நிவேதா.
“யாரெல்லாம் கலந்துக்க போறாங்க, எத்தன காலேஜ் வராங்க” என்று கேட்டாள்.
அதை பற்றி சிறிது நேரம் பேசிவிட்டு வகுப்பை கவனிக்க தொடங்கிவிட்டனர் இருவரும்.
மாலை சூர்யா மற்றும் மாதவி இருவரும் வீடு திரும்பும்போது இதை பற்றி மாதவி சூர்யாவிடம் கூறினாள்.
இதை பற்றி கேட்ட சூர்யா “ ம்ம் இது உன் CAREER க்கு நல்லதுனு நினைக்கற அம்மு TRY பார்க்கலாம்” என்றான் சூர்யா.
இதை பற்றி பேசிக்கொண்டே இருவரும் அவர்களின் வீடு நோக்கி சென்றனர்.
( ஹாய் நண்பர்களே, நான் உங்க MathiRathi. இந்த நாவலா ஏற்கனவே ATM site ல எழுதி இருந்த, ஆனா என்னோட தனிப்பட்ட காரணத்தால் இந்த நாவல தொடர முடியல, எல்லாரும் என்ன மன்னிச்சுருங்க. இனிமே தினமும் இந்த site ல உங்கள பார்க்க நான் வருவேன். தினமும் உங்களுக்கு ஒரு epi காத்துட்டு இருக்கு )