ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- முன்னோட்டம்

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

டீஸர் 2

ஹோட்டலுக்கு வெளியில் அவளுக்காக காத்திருந்தான் தருண்.

கைகள் இரண்டையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி ஒற்றை காலை மடக்கி காரின் மீது ஊன்றி சாய்ந்து நின்றவனின் உதடுகள் அவனுக்கு மிக பிடித்தமான

‘முழுமதி அவளது முகமாகும்

மல்லிகை அவளது மணமாகும்

மின்னல்கள் அவளது விழியாகும்

மௌனங்கள் அவளது மொழியாகும்’

என்ற பாடலை விசில் அடித்துக் கொண்டிருந்தது. அடிக்கடி அவன் உதடுகள் முணுமுணுக்கும் பாடல் தான். ஆனால், இன்று அதன் இசையும் வரிகளையும் தாண்டி ஏதோ ஒன்று அந்த பாடலை இன்னமும் அழகு பெற செய்திருப்பதாக உணர்ந்தான்.

அவனுக்காகவே எழுதியது போன்ற உணர்வு... அவன் எண்ணங்களை நினைக்க அவனுக்கே சிரிப்பாக இருந்திருக்க வேண்டும். தலையை இருபக்கமும் ஆட்டியபடி தனக்குள் சிரித்துக்கொண்டே நிமிர்ந்தவனின் கண்களில் ஹோட்டலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்த வைஷாலி தென்பட்டாள்.

அவன் நல்ல நேரத்துக்கு அவன் காருக்கு சற்று தள்ளி தான் அவளுடைய காரை அவள் நிறுத்தியிருக்க அவனை கடந்து தான் சென்றாக வேண்டும்.

சட்டென்று காரின் மீது வைத்திருந்த காலை இறக்கி விட்டு நிமிர்ந்து நின்று அவளுடன் பேசுவதற்காக தயாராகி கொண்டான்.

கவிதையாய் நடந்து வந்தவள் அவனருகே வந்துவிட்டாள். அவனை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவனை கடந்து செல்லவும் தொடங்கி விட்டாள்.

தன்னை நெருங்கி கொண்டிருந்த தேவதை பெண்ணவளை மையலுடன் பார்த்திருந்தவனுக்கு அவள் தன்னை கடந்து சென்ற பின்னரே அவளுடன் பேசுவதற்காக தான் இத்தனை நேரம் காத்திருந்தது நினைவுக்கு வர சட்டென சுதாகரித்து கொண்டவன் அவளை நோக்கி

"வைஷாலி" என்று அவள் பெயர் சொல்லி அழைத்தான்.

அவனது உச்சரிப்பில் ஒரு அழுத்தம்.

அவனது ஆழ்ந்த குரலில் தனது பெயரை கேட்ட பெண்ணவளோ சட்டென நடையை நிறுத்தி தலையை மட்டும் சற்றே பக்கவாட்டாக திருப்பி அவனை பார்த்தாள்.

அவனது கூரிய விழிகள் அவளையே ரசனை மிகுந்த பார்வையுடன் அளவிட்டுக்கொண்டிருக்க ஒற்றை புருவத்தை உயர்த்தி "என்னையா கூப்பிட்டிங்க" என்றாள்.

"ம்ம்...கொஞ்சம் பேசணும்" என்றான்.

உயர்ந்திருந்த புருவம் இப்போது இடுங்க " என் கூடவா... சரியான ஆள் கிட்ட தான் பேசுறிங்களா" அவளது கேள்வியில் குழப்பம்.

அவள் யாரென்றே அறியாதவன் திடிரென்று அவளிடம் பேச வேண்டும் என்றால் அவளுக்கு குழப்பமாகத்தானே இருக்கும்.

அவன் இதழ்களில் ஒரு மென்புன்னகை.

"ரொம்ப சரியான ஆள் கிட்ட தான் கேட்குறேன். உன் கிட்ட தான் பேசணும்" என்றான்.

அவனை நோக்கி முழுமையாக திரும்பியவள் " என்ன பேசணும்" என்றாள்.

அவன் பாதங்கள் தானாகவே எட்டு வைத்து அவள் அருகே சென்று நிற்க அவளோ சற்றே பயத்துடன் ஒரு எட்டு பின்னால் எடுத்து வைத்து அவனை விட்டு சற்று தள்ளி நின்றாள்.

ஒரு முறை அவ்விடத்தை சுற்றி பார்த்துக்கொண்டாள். ஆள் நடமாட்டம் பெரியதாக இல்லை. அவனை சற்று நேரத்திற்கு முன்பு விருந்துபசரிப்பு நடந்து கொண்டிருந்த ஹாலில் பார்த்தது நினைவிருந்தது.

அதுதான் அவன் கூப்பிட்டதும் நின்று பேசிக் கொண்டிருக்கிறாள். இருந்தாலும் கொஞ்சம் பயம் இருக்க தான் செய்தது.

அவள் தள்ளி நின்றதையும் சுற்றும் முற்றும் பார்த்துக்கொள்வதையும் அவதானித்த தருண் " பயப்படாத...ஒன்னும் பண்ண மாட்டேன். உன் கிட்ட ரெண்டு விஷயம் கேட்கணும்" என்றான்.

"என்ன" என்றாள். அவள் உதடுகளில் சிரிப்பில்லை.

ஒருவித பதட்டம்.

அவள் பாதுகாப்பை எண்ணி தான் அந்த பதட்டம். இப்போதெல்லாம் யாரையுமே நம்ப முடிவதில்லையே. ஆபத்து எந்த ரூபத்தில் வரும் என்று சொல்ல முடியாதே.

"யாரையும் லவ் பண்ணுறியா" என்று கேட்டான்.

அவன் கேள்வியில் சற்றே எரிச்சலுற்றவள் "அது என் பர்சனல். உங்களுக்கு எதுக்கு சொல்லணும்." என்று தான் கேட்டாள்.

அவள் சொன்ன தொனியில் ஒரு நிமிர்வு.

அவனிடம் தைரியமாக பேசும் அவளை இதழ்களை பிதுக்கி புருவத்தை உயர்த்தி மெச்சுதல் பார்வை பார்த்தவன் இப்படி எல்லாம் அமைதியாக கேட்டால் அவளிடம் இருந்து பதில் வராது என்று தெரிந்துக் கொண்டான்.

அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தவன் திடிரென்று அவளை நோக்கி சற்றே குனிய பதறிய பெண்ணவளோ தலையை சட்டென பின்னுக்கிழுத்து "என்ன பண்ண போறீங்க?" என்றாள்.

பயத்தில் ஆழ்ந்த மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு அவள் விழி விரித்து நின்றது அவனுக்குள் சுவாரசியத்தை கூட்ட நாக்கின் நுனியை உள் கன்னத்துக்குள் முட்டி பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டான்.

"நான் கேட்ட கேள்விக்கு சமத்தா பதில் சொல்லிட்டா ஒண்ணுமே பண்ண மாட்டேன்." என்றான்

"இல்லனா?" என்றாள்.

"சுத்தி பார்த்த தானே...இங்க யாருமே இல்லை... யாரும் இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. எனக்கு பதில் சொல்லாத இந்த உதட்டை இழுத்து வச்சு கிஸ் அடிச்சுடுவேன்" என்றான் மிரட்டல் தொனியில்.

அவன் கூறியதை கேட்டு அதிர்ந்து நெஞ்சில் கையை வைத்து கொண்டவள் " நான் சத்தம் போடுவேன்" என்றாள்.

"நான் யாரு தெரியுமா. நீ கத்தி ஊரை கூட்டினாலும் நீ சொல்லுறதை இங்க ஒருத்தரும் நம்ப மாட்டாங்க" என்றான் அசால்டாக.

அவன் பேச்சும், தோரணையும், அவன் பிராண்டட் சூட் மற்றும் கைக்கடிகாரத்தையும் பார்த்தாலே தெரிந்தது அவனுடைய அந்தஸ்தும் உயரமும்.

அவள் கத்தினாலும் நிச்சயம் அவன் சொல்வது போல தான் நடக்கும் என்று புரிய ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்டு நிதானத்துக்கு வந்தவள் "இப்போ என்ன தெரியணும் உங்களுக்கு" கோபமாகத்தான் கேட்டாள்.

அவன் பதில் பேசவில்லை. மென்மையாக தெரிந்த பெண்ணவளின் கோபத்தையும் ரசித்து பார்த்தான்.

"ஹலோ" அவளது வளைக்கரம் கொண்டு அவன் முகத்திற்கு நேரே சொடக்கிட்டாள்.

"உங்களை தான் கேட்குறேன். என்ன தெரியணும்" மீண்டும் கேட்டாள்.

"காதலிக்குறியா" என்றான் அவள் விழிகளுக்குள் ஊடுருவி பார்த்துக்கொண்டே.

'அவனை காதலிக்கிறாளா என்று கேட்கிறானோ' என்று நினைத்து ஒரு கணம் அதிர்ந்தவள் "என்னது" என்று விழிவிரித்து பார்க்க

"ஐ மீன்…யாரையும் லவ் பண்ணுறியான்னு கேட்டேன்" என்றான்.

"ஓ...” என்று இழுத்துக் கொண்டே அவனை ஒரு மார்கமாக பார்த்தவள் “இல்லை" என்று இடமும் வலமும் அழுத்தமாக தலையாட்டியபடி சொன்னாள்.


அவனுக்குள் ஒரு நிம்மதி பெருமூச்சு. இதழ்களை குவித்து ஊதிக்கொண்டே இட பக்க மார்பை நீவி விட்டுக்கொண்டான்.​

அந்த கேள்வியை கேட்கும் போதே எங்கே 'ஆம்' என்று சொல்லி விடுவாளோ என்று அவன் மனம் பதறிய பதற்றத்தை அவன் மட்டுமே அறிவான். அவள் இல்லை என்றதும் தான் அவனுக்கு மூச்சே வந்தது.​

"ம்ம் குட்...... " என்றான் மென்னகையுடன்.

"ரெண்டு கேள்வி தானே கேட்கணும்னு சொன்னிங்க. அடுத்து என்ன தெரியணும்" என்று கேட்டாள் வைஷாலி.

"கல்யாணம் பண்ணிக்குறியா" என்று கேட்டு அவளை அதிர வைத்தவன்

அவள் 'யாரை?' என்று பதில் கேள்வி கேட்கும் முன்னரே "என்னை...என்னை கல்யாணம் பண்ணிக்குறியா" என்றான்.

அவன் காதலை சொல்லிவிட்டான்.


அவளை பார்த்த அடுத்த அரைமணி நேரத்தில் அவன் வாழ்க்கை முழுவதுக்கும் அவள் தான் துணை வர வேண்டும் என்று அவள் சம்மதத்தை அவளிடமே கேட்டும் விட்டான்.​


எப்படியிருக்கு டீ...

பிடிச்சிருந்தா ஒரு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க தோழிஸ்🥰


 
Last edited:

Vilacini

Well-known member
Wonderland writer

டீஸர் 3

"இது தப்பு" கண்களில் கலக்கத்துடன் இறைஞ்சும் குரலில் வந்தது மதுவின் வார்த்தைகள்.​

"நீ பண்ணுனதை விட ஒண்ணும் பெரிய தப்பில்ல" அவன் இதழ்கள் ஏளனமாக வளைந்தன.​

கையில் இருந்த மாலையை அவள் கழுத்தில் சூட்டினான்.​

அவன் இதழ்களில் ஏளனம். ஆனால், விழிகளில் ரௌத்திரம்.​

அவனுக்கு மட்டும் அவளை பார்வையாலேயே எரித்துவிடும் சக்தி இருந்திருந்தால் அவன் பார்வையின் அனலில் இந்நேரம் அவள் பொசுங்கி சாம்பலாகி இருந்திருப்பாள்.​

அவள் செய்த புண்ணியமோ அல்லது பாவமோ இன்னமும் அவள் உயிர் உடலை துறக்கவில்லை.​

கழுத்தில் கிடந்த மாலையை குனிந்து பார்த்தாள். கண் கலங்கி போய்விட்டது அவளுக்கு.​

இன்னொரு மாலையை அவள் கரத்தில் திணித்து "ம்ம்ம்...போடு" என்று அவளுக்கு வாகாக குனிந்து நின்றான்.​

கைகளில் இருந்த மென்மையான பூமாலை கூட இப்பொழுது அவளுக்கு இரும்பு சங்கிலியென கனத்தது. அவள் இதயமும் கூட.​

கரங்கள் நடுங்க அந்த பூமாலையை மேலும் இறுக்கமாக பற்றிக்கொண்டாள். அந்த அழுத்தத்தில் அவள் பற்றியிருந்த பகுதியில் சில பூக்கள் கசங்கி உதிர்ந்தன. அவர்களின் தற்போதைய மனநிலையை போல.​

"வேண்டாம் ப்ளீஸ்" என்றவளின் குரல் தழுதழுத்து ஒலித்தது.​

அதற்கும் அவனது மௌனமே பதிலாக... அவள் விழிகளை ஆழ்ந்து நோக்கி கொண்டே மணமாலையுடன் சேர்த்து அவள் இருக்கரங்களையும் இழுத்தவன் அவள் மறுக்க மறுக்க வலுக்கட்டாயமாக அவள் கரம் கொண்டே தனது கழுத்தில் அந்த மாலையை அணிவித்துக்கொண்டான்.​

அடுத்து ஐயரை நோக்கி "ஐயரே தாலி" என்க அவரும் தாலியை எடுத்து அவன் கையில் கொடுத்துவிட்டார்.​

அதை பார்த்ததும் அதற்கு மேல் கட்டுப்படுத்த முடியாமல் விழிநீர் இமையை கடந்து கன்னத்தில் உருண்டோட "அக்கா பாவம். இது வேண்டாமே. நான் வேணும்னா எங்கையாவது கண் காணாத இடத்துக்கு தொலைஞ்சு போயிடுறேன். உங்களுக்கும் அக்காவுக்கும் எந்த வகையிலும் இடைஞ்சலா இருக்கவே மாட்டேன். சத்தியம் வேணும்னாலும் பண்ணுறேன். இந்த கல்யாணம் மட்டும் வேண்டாமே ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.​

தருணுக்கு அதற்குமேல் கோபத்தை அடக்க முடியவில்லை.​

"ஷட் அப் மது" என்று அவளிடம் சீறியவன் அருகே அவர்கள் திருமணத்திற்கு சாட்சியாக நின்றிருந்த தனது போலீஸ் நண்பன் ரவியை பார்த்தான்.​

"ரவி, செக்ஸுவல் ஹராஸ்மென்ட் சட்டம் எல்லாம் பொண்ணுங்களுக்கு மட்டும் தானா? பாதிக்க பட்ட பசங்களுக்கெல்லாம் கிடையாதா?" என்று கேட்டான்.​

அவனும் "சட்டம் எல்லாருக்கும் பொதுவானது தருண். சட்டத்துக்கு தேவை எவிடென்ஸ். அது இருந்தா பொண்ணோ ஆணோ, யார் தப்பு செஞ்சாலும் தண்டனை நிச்சயம்." என்றான் சட்டத்தை பாதுகாக்கும் பொறுப்பு வகிக்கும் அந்த காவலன்.​

"அப்போ இந்த எவிடென்ஸ் போதுமா பாரு…பத்தலன்னா இன்னும் கூட ரெடி பண்ணிடலாம். " என்று சொல்லியபடி அவன் அலைபேசியில் காணொளி ஒன்றை தேடி எடுத்து ஓட விட்டவன் ரவியின் முன்னே நீட்டினான்.​

அதை பார்த்த ரவி ஆழ்ந்த மூச்செடுத்து கொண்டே ஒரு கணம் மதுஷிகாவின் மீது பார்வையை நிலைக்க விட்டு பின் தருணிடம் " இதை எவிடென்ஸ் ஆஹ் எடுத்துக்கலாம் டா" என்று கொண்டே அலைபேசியை மீண்டும் தருணிடம் நீட்டினான்.​

அந்த காணொளியில் பதிவாகியிருக்கும் காட்சி என்னவென்று அவளுக்கும் தெரியும். ஏற்கனவே தருண் அவளிடம் அதை காட்டியிருந்தான்.​

இப்பொழுது அந்த காட்சியை ரவியும் பார்த்து விட மது அவமானத்தில் கூனி குறுகி நின்றிருந்தாள். அழுகையை அடக்க முடியவில்லை அவளால்.​

"கேட்ட தானே. இப்போ மட்டும் இந்த கல்யாணம் நடக்கலன்னா...உன் மேல செக்ஸுவல் ஹராஸ்மென்ட் கேஸ் போடுவேன். அப்புறம் உன் பேர் மட்டும் இல்லை உன் கூட பிறந்த பாவத்துக்காக உன் அக்கா பேரும் கெட்டு போயிடும். மொத்த குடும்பமும் அவமான பட வேண்டியிருக்கும்." என்றான்.​

அவன் சொல்லியதை கேட்டு அதிர்ந்து விட்டாள் பெண்ணவள். அப்படி ஒரு அவப்பெயர் அவளுக்கு வருமானால் அது அவளை மட்டுமின்றி அவளை சார்ந்தவர்களையும் அல்லவா பாதித்துவிடும்.​

ஈரமான விழிகளுடன் தலையை இடமும் வலமும் ஆட்டியபடி இருக்கரங்களையும் கூப்பி அவன் முன்னே நின்றவள் "வேண்டாம். அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. அக்கா வாழ்க்கையே போயிடும். அவள் பாவம்." அழுகையுடன் வெளிவந்தது அவள் வார்த்தைகள்.​

 
Status
Not open for further replies.
Top