ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உருகியதே என் உயிரே- முன்னோட்டம்

Status
Not open for further replies.

Vilacini

Well-known member
Wonderland writer

உருகியதே என் உயிரே- முன்னோட்டம்​

டீஸர் 1

அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடை பெற்றுக்கொண்டிருந்த வியாபார விருந்துபசரிப்பு.​

இந்த சூழல் அவனுக்கு புதிதல்ல. அடிக்கடி பார்த்து பழக்கப்பட்டது தான்.​

அதுதான் அவன் விழிகள் எந்த சுவாரசியமும் இல்லாமல் அந்த இடத்தை வலம் வந்து கொண்டிருந்தது.​

எதிரில் நின்று பேசுபரின் பேச்சில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்றாலும் மரியாதை நிமித்தமாக கேட்டு கொண்டிருந்தான்.​

அவ்விடத்தை அளந்து கொண்டிருந்த தருணின் கண்களில் சடாரென்று மின்னல் வெட்டியது போன்ற ஒரு உணர்வில் விழிவிரித்து பார்க்க அந்த இடத்திற்கு கொஞ்சமும் பொருத்தமில்லா அலங்காரத்துடன் இளம் பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.​

நவநாகரீகமாக உடை அணிந்து, ஸ்டைலாக நுனி நாக்கில் ஆங்கிலம் கலந்த தமிழில் உரையாடிக்கொண்டிருந்த இளமங்கைகளுக்கு மத்தியில் இளமஞ்சள் நிற புடவையில், தலையில் பூச்சூடியிருக்க அந்த குண்டுமல்லி சரத்தின் ஒரு பகுதி அவள் தோளில் படர்ந்து அவள் நடைக்கு ஏற்றாற்போல் அசைந்தாட, மாநிற மங்கையவள் ஒயிலென வந்துகொண்டிருந்தாள்.​

அவள் வைஷாலி. வைஷாலி கிருஷ்ணகுமார்.​

அவள் தோளில் புரண்ட குண்டுமல்லி சரம் அசைந்தாடியதில் அவன் மனமும் அசைந்தாடியதோ என்னவோ சுவாரசியமின்றி வெறித்துக் கொண்டிருந்தவனின் பார்வையில் இப்பொழுது ஆர்வம் கூடியிருந்தது.​

புடவைக்கு ஏற்றாற்போல் அதே நிறத்தில் அவள் காதுகளை அலங்கரித்த ஜிமிக்கியும் அவள் தலை அசைவுக்கேற்றபடி குலுங்க அவன் பார்வை அவளை விட்டு விலகாது அவள் மீதே நிலைத்திருந்தது.​

அவளது வளைக்கரங்கள் ஏதோ கோப்புகளை ஏந்தியிருக்க அவள் கால் கொலுசின் சிணுங்கல் அவ்விடத்தில் இரைச்சலாய் கேட்டுக்கொண்டிருந்த அத்தனை ஒலிகளையும் தாண்டி வந்து அவன் காதுகளை நிறைத்திருந்தது.​

கூட்டத்தில் நின்ற மானிடர்களுக்கிடையே புகுந்து அவர்களின் மீது உரசிவிடாமல் நிலைமைக்கேற்றவாறு உடலை குறுக்கி வளைந்து ஒதுங்கி வந்தவளின் மையிட்ட கருவிழிகளோ யாரையோ தேடிக்கொண்டிருந்தது.​

அந்த விழிகள் தேடுவது தானாக இருக்க கூடாதா என்ற எண்ணம் எங்கிருந்தோ மனதில் வந்து ஒட்டிக்கொண்டது அவனுக்கு.​

காதல் என்றால் முட்டாள் தனம்...அதுவும் கண்டதும் காதல் என்றால் அது பைத்தியக்காரத்தனம் என்று வசனம் பேசுபவன் இன்று அவளை கண்ட நொடியில் அவள் மீது காதல் கொண்டானோ...​

அவன் மனம் போகும் போக்கு புரிந்து தன்னை சுதாரித்து கொண்டு அவளிடம் இருந்து கஷ்டப்பட்டு அவன் பார்வையை திருப்பி கொள்ளும் முன்பே அவள் இதழ்களில் புன்னகை.​

அவன் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி தான் புன்னகைத்தாள்.​

அவள் விழிகள் தேடியதை கண்டுகொண்டுவிட்டது போலும். அதே புன்னகையுடன் அவனை நோக்கி அவள் நடந்து வர அவனுக்கு தான் இப்போது இருதயம் தருமாறாக துடித்தது.​

அவள் தன்னை தேடியிருக்க கூடாதா என்று யோசித்தவனுக்கு அவள் தன்னை நோக்கி வரவும் மனதிற்குள் இனம் புரியா படபடப்பு.​

இதுவரை அவன் அனுபவித்திராத புது உணர்வு அது.​

ஒரு பெண்ணை பார்த்து இதயம் படபடக்கும் என்று இதுநாள் வரை அவன் நினைத்ததில்லையே.​

*************************************************************************************************************************************************************

"ஹேய்...கோவிச்சுக்காதே என் செல்லமே. எனக்கு இன்னிக்கு எக்ஸாம் இருக்குன்னு தெரியும் தானே... அப்புறமும் இப்படி கோவிச்சுகிட்டா நான் என்னக்கா பண்ணட்டும். உன்னை யாரு எனக்கு எக்ஸாம் இருக்குற நேரம் கல்யாணத்தை வைக்க சொன்னது?" என்று இப்பொழுது செல்லக் கோபம் கொள்வது மதுஷிகாவின் முறையாகிற்று.​

"நான் என்னடி பண்ணுறது. அவர்...அவர் தான்..." என்று வைஷாலி நாணத்துடன் சிணுங்கலாய் இழுக்க அவள் குரலிலேயே தமக்கையின் பட்டு கன்னம் சிவந்திருக்கும் காட்சி மதுவின் கண்களில் வந்து போனது.​

அவளும் சிரித்து கொண்டே "போதும்...போதும் வைஷுக்கா. எல்லா வெட்கத்தையும் இப்போவே பட்டுடாதே. நாளைக்கு மாமா பார்குறதுக்கும் கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ. பாவம் அவரே உன்னை பிரிஞ்சு இருக்க முடியாம கல்யாணத்தை உடனே வைக்கணும்னு அவசர படுத்துறார்" என்று கேலி போல ஆரம்பித்தாலும் இறுதி வாக்கியத்தை சொல்லும் போது அவளின் குரலில் ஒருவகை ஆதங்கம் வெளிப்பட்டதை வைஷாலியும் உணர்ந்துகொண்டாள்.​

"என்ன மது இப்படி பேசுற... என் மேல கோவமா?" என்று கேட்க​

"உன் மேல எனக்கென்னக்கா கோவம். எல்லாம் உன் அவர் மேல தான். இப்படி அவசர அவசரமா கல்யாணத்தை வைக்கணுமா?? அதுவும் எனக்கு ஃபைனல் எக்ஸாம் இருக்குற நேரத்துல. உன் கல்யாணத்தை எவ்வளவு ஆசையா எதிர்பார்த்திருப்பேன். உன் கூட சேர்ந்து கல்யாண புடவை, நகை, மேக் அப் எல்லாம் செலக்ட் பண்ணனும், எனக்கும் டிரஸ் எடுக்கணும், உன்னை கிண்டல் பண்ணி வெட்கப்பட வச்சு உன் ரெண்டு குண்டு கன்னமும் சிவக்குறதை பார்த்து கேலி பண்ணனும், வீடு கல்யாணக் கலை கட்டியிருக்குறதை பார்த்து ரசிக்கணும், என்னதான் பொண்ணுக்கு கல்யாணம்னு அம்மாவும் அப்பாவும் சந்தோஷமா ஏற்பாடுகளை பண்ணுனாலும் எங்களை விட்டு போயிடுவியேன்னு கதவோரம் சாஞ்சு நின்னு உன்ன பார்த்துகிட்டே அம்மா ஃபீல் பண்ணும் போது...அவங்க தோள் சாஞ்சு 'அவள் போனால் போகட்டும் உங்களை தொல்லை பண்ண நான் இன்னும் இந்த வீட்டுல தானே இருக்க போறேன். கவலையை விட்டு கண்ணீரை துடைங்க சரோன்னு' அம்மாவுக்கு ஆறுதல் சொல்லணும். இப்படி எனக்கும் உன் கல்யாணத்துல எவ்வளோ எதிர்பார்ப்புகள் இருந்தது தெரியுமா. எல்லாத்தையும் கெடுத்து வச்சிட்டார் உன் ஹிட்லர்." என்று கடுகாய் வெடித்தாள் மதுஷிகா.​

தனது ஒரே அக்காளின் திருமணத்தில் அவளுக்கென்று கிடைக்க வேண்டிய இனிமையான அனுபவங்களை கெடுத்துவிட்டானே அவளின் வருங்கால மாமன் என்கின்ற கோபம் அவளுக்கு இருக்க தான் செய்தது. அதற்காகவாவது அவனை திருமண விருந்துபசாரிப்பின் போது எதாவது ப்ராங்க் செய்து கிண்டல் அடிக்க வேண்டும் என்று மனதில் கணக்கு போட்டு தான் வைத்திருந்தாள்.​

"அவர் வீட்டுல தான் சீக்கிரமா நடத்திடணும்னு சொன்னாங்க. இவ்வளவு நாள் கல்யாணமே வேண்டாமுன்னு சொன்னாராம். இப்போ அவரே சம்மதம் சொன்னதும் கல்யாணத்தை சீக்கிரம் முடிச்சிடணும்னு நினைக்குறாங்க. அதுக்கு அவர் என்ன பண்ணுவார். அவரும் பாவம் தானே" என்று வருங்கால கணவனுக்கு ஆதரவாக வந்து விழுந்தது வைஷாலியின் வார்த்தைகள்.​

தங்கையின் மனம் புரிந்தாலும் தன்னவனை தங்கையிடம் விட்டு கொடுக்க கூடாது என்கின்ற எண்ணம் தான் அதில் அதிகமாக பிரதிபலித்தது.​

"ஹ்ம்ம் சரி சரி... உன் அவரை நான் ஒன்னும் சொல்லலப்பா. இன்னும் கல்யாணமே நடக்கல அதுக்குள்ள உன் அவரை விட்டு கொடுக்க மாட்டுறியே. நீ ரொம்ப மாறிட்ட வைஷுக்கா" என்று மீண்டும் கிண்டலடித்தாள் மது.​

"ம்பச்...அதை விடு டி. நீ எப்போ தான் வருவ...எக்ஸாம் தான் காலையிலேயே முடிஞ்சுதுல." என்று கேட்க​

"எக்ஸாம் முடிஞ்சுது. ஆனால் இங்க இன்னும் கொஞ்ச வேலை இருக்கு. எல்லாம் முடிச்சிட்டு கிளம்பிடுவேன். நீ பயப்படாதக்கா நாளைக்கு நான் உன் பக்கத்துலயே தான் இருப்பேன் போதுமா. ஆனால், பார்த்துக்கா... உன் மேல காதல் மயக்கத்துல இருக்குற மாமாவை எதுக்கும் கொஞ்சம் தெளிவா இருக்க சொல்லு. அதே மயக்க நிலையில மணமேடைக்கு வந்திட போறாரு. அப்புறம் உனக்கு பதில் உன் பக்கத்துல நிக்குற எனக்கு தாலி கட்டிட்டாலும் ஆச்சரிய படுறதுக்கில்ல." என்று மீண்டும் கிண்டல் அடித்தாள்.​

கிண்டலடித்தவளுக்கு அப்போது தெரியவில்லை அவள் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த தேவதைகள் மிகச்சரியான நேரத்தில் அவள் இதழ்கள் உதிர்த்த வார்த்தைகளுக்கு ததாஸ்து சொல்லிவிட்டதை.​

அனைத்தையுமே கேலியும் கிண்டலுமாக கடந்து செல்லும் மது இதையும் மிகவும் இயல்பாக சொல்லிவிட்டாள். ஆனால், எதிலுமே உணர்ச்சிவயப்படும் வைஷாலியால் இந்த கிண்டலை சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஏனோ கோபமாக வந்தது.​

"என்ன பேச்சுடி இது. எனக்கு கொஞ்சமும் பிடிக்கல" வைஷாலியின் குரலில் கோபத்தின் சாயல் அப்பட்டமாக தெரிந்தது.​

அந்த குரலில் தான் அவள் சொல்லியது சற்று அதிகப்படி என்று உரைக்க நாக்கை கடித்துக்கொண்டு மதுஷிகா " அச்சோ, சாரி வைஷுக்கா. விளையாட்டா தான் சொன்னேன். பட் நான் அப்படி பேசியிருக்க கூடாது. பேச்சுக்காக கூட நீ மாமாவை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்னு எனக்கு தெரியும். உன்னை ஹர்ட் பண்ணிட்டேன்ல. ரொம்ப சாரிக்கா" என்று மது கெஞ்சியும் மறுமுனையில் வைஷாலி அமைதியாகவே இருக்க​

இவளுக்கு தான் தர்மசங்கடமாயிற்று.​

டீஸர் எப்படியிருக்கு...பிடிச்சிருந்தா கமெண்ட்டுல சொல்லுங்க தங்கங்களே...🥰

Last edited:

sugumari bala

New member

Super sister ❤️😍😍
 
Status
Not open for further replies.
Top