ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் -21

T 24

Well-known member
Staff member
Wonderland writer
டெல்லி...!

அதிக பரப்பரப்பிற்கு பஞ்சம்‌ இல்லாமல் இருந்தது. இரவு பயணத்தில் அழுப்பில் தூங்கி தான் போனார்கள் இருவரும்.

காலை பொழுதில்
"சூர்யா" என்று ஆதி எழுப்பியவன்... வழக்கம்போல" அண்ணி ப்ளீஸ் இரண்டு நிமிஷம்...!" என்றுபோர்வை இழுத்துபோர்த்தி தூங்கினாள் சூர்யா.

அதை ரசித்தவன்" தூங்கு அம்மு...! நல்லா ரெஸ்ட் எடு" என்று ஆதி கூற..

அந்த குரல் எப்போதும் கேட்கும் குரல் அல்லவே என்று போர்வை விலக்கியப்பின்... தான் நினைவிற்கே வந்தாள்.

ஆதியை பார்த்தவள் கிளம்பி தயாராகி இருந்தான்...!

"ஆபிஸ் கிளம்பிட்டியா‌ ?" என்றுசூர்யா வேகவேகமாக எழுந்தாள்.

சூர்யாவை பேச விடாமல் ஆதியே பேசினான்.

"அம்மு வேண்டாம் நல்லா ரெஸ்ட் எடு...! சூடா டீ இருக்கு ஹாட்பாஸ்க்குல சாப்பாடு இருக்கு... வேணுமுன்னா சப்பாத்தி கூட இருக்கு நீ என்ன சாப்பிடுவேன்னு தெரியாது சோ எது வேணாலும் சாப்பிடு... ரெடியா இருக்கு...! நான் ஈவினிங் தானா வருவேன் ஆபிஸ்ல முக்கியமான மீட்டிங் நான் ஆபிஸ் போயிட்டு வரேன்‌ என்று சூர்யாவிடம் நெருங்கியவன்..

அவளது நெற்றியில் முத்தமிட்டவன்... "ஐ லவ்யூ சூர்யா ..!" என்று வேகமாக விலகினான்.

சூர்யாவிற்கு ஒரு நிமிடம்‌ எதுவும் புரியிவில்லை மீண்டும் போர்வையிலுள் தஞ்சம் அடைந்தாள் குளிர் வேறு காற்றாய் வருட போர்வையினுள் இறுக்கி கொண்டாள். மதிய வேளை எழுந்து தனது வீட்டில் உள்ளவர்களிடம் பேசினாள்.

அனைத்தும் முடிந்துவிட்ட பின்..‌.' என்ன செய்வது என்று தெரியாமல்...?' வீட்டை பார்த்தாள்.. தனது திங்ஸை எடுத்து வைத்தாள். ஒரு வாரம் ஆதி வழக்கமாக ஆபிஸ் செல்ல தனக்கு பிடித்தப்படி வீட்டை மாற்றி அமைத்தாள்.

வேக வேகமாக ஓடியவன் நிதானத்திற்கு வந்து நின்றான்.

"ஸாரி சூர்யா ரொம்ப நாள் லீவ் சோ பென்டிங் வொர்க்ஸ் நிறையா இருந்துச்சு அதான் உன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல ஆனா அம்மு இனி அப்படி இல்லை... எல்லாமே முடிச்சிருச்சு...!" என்று சூர்யாவை நெருங்கியவன்.

சூர்யாவிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. "சூர்யா " என்று அவளிடம்‌ கிறக்கத்தில் தன்னை தொலைத்தான் ஆதி.

ஆனால் சூர்யாவே ‘ஒரு வாரம் தன் வாழ்வில் என்ன நடந்தது இப்படியே தான் தன் வாழ்வு சொல்லுமோ 'என்ற குழப்பத்தில் மிதந்தாள்.

'தான் ‌எதற்காக கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டோம்... ஆதியை எவ்வளவு வெறுத்தாலும் ஏன் அவனை விட்டு விலகி செல்லவோ கஷ்டப்படுத்தவே தன்னால் முடியவில்லை ...!' இப்படி மனம். முழுவதும் பல சிந்தனையில் இருந்தாள்.

"அடங்க மறுக்கும்‌
என்‌ மனம்‌
அவளது விழிகளைக் ‌கண்டால் அடங்கி விடுகிறது.."

நினைவில் மிதந்தவளுக்கு நனவில் ஆதி அவளை தன் வசப்படுத்திக் கொள்ள துடிப்பதை பிறகே உணர்ந்தாள்..‌

ஆதி அவளை பின்னால் இருந்து அணைக்க.... சூர்யாவின் காதோரம் தன் மூச்சு காற்றின் வெப்பத்தை உணர வைத்தவன் அவளிற்குள்ளும் ஏதோ மின்சாரம்‌ பாய....! ஆதியை விலக்கிவிட முயன்றாள்... ஆனால் ஆதியோ அடுத்த கட்டத்தை நோக்கி சென்றான்.

சூர்யாவின்‌ தனது மொத்த கட்டுபாட்டையும் அவனிடத்தில் தொலைத்தாள். ஆதியின் செய்கைகள் எல்லாம் எல்லைகள் கடந்து அதிகமாகியது...

சூர்யாவை தன் புறம் திரும்பியவன்... அவளது முகத்தை தாங்கி நெற்றயில் தன்‌ முத்ததை இட்டவன்... கண் இமைகள் என்று தொடர... உதட்டின் அருகில் நெருங்கியவன்... சிரித்தவன் சூர்யாவின் மூக்கோடு மூக்கு உரசி சூர்யாவை நினைவிற்கு கொண்டு வந்தான்.

"இவ்வளவு ஆசைகளை உன்னுக்குள்ள பொதைச்சு வச்சுட்டு தான்... என்னை வேண்டாம் வேண்டான்னு சொன்னியா" என்று ஆதி கேட்க...

ஆதி தந்த சூட்டில் இன்னும் சூடேற்றி கொள்ளவே அவளது நாணங்கள் துடிக்க தன்னை கட்டுக்குள் கொண்டு வரவே பல நொடிகள் பிடித்தது‌.

அவன் தந்த மயக்கத்தில் இமை மூடியவளை ரசித்தவன்... தனது மூச்சு காற்றினால் சூர்யாவின் கன்னத்தில் ஊத... சூர்யாவின் உடலில் சிலிர்ப்பு மெல்லிட்டது.. கண்களை மெதுவாக திறந்தவள்... ஆதியின் கண் முன் நிற்க... ஆதியிடம் தோற்று தான் போனாள் சூர்யா..

"உனக்கு என்‌மேல அவ்வளவு ஆசையா.? ஒரு வாரமா அம்மு என்னால முடியலடி" என்று சூர்யாவை தூக்கியவன்....

அவளது அனுமதி இல்லாமலே அவளை தன் வசப்படுத்தினான். பெட்டில் கிடத்தியவன்... சூர்யாவின் மேல் ஆதி விழ தாகங்கள் கொண்ட இருமனம் தங்களது தாகத்தை தீர்க்க முனைந்தது.
அவனது முத்தங்கள் அனைத்தும் தீயாய் அவளுள் நெருப்பேற்ற.... ஓர் கட்டத்தில் அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டாள். மனம் முழுவதும் ஏதோ நெருடில் தவிக்க மனம் இல்லாமல் உடலை மட்டும் எப்படி இவனுக்கு பசியாற்றுவது என்று தவிப்பில் இருந்தாள் சூர்யா.

சூர்யாவின் செய்கையினால்... அவளிடமிருந்து விலகியவன்... ஒரே கேள்வியில் தன் மொத்த வேதனையும் வெளிப்படுத்தினான்.

"என்னை ‌உனக்கு பிடிக்கலையா...?" என்று கேட்கும் முன்பே ஆதியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து.

சூர்யாவிற்கோ தான் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல்... தவித்தாள்.

"ஆதி அது வந்து...!"

'பிடிக்கலேன்னு ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தா உன்னை இந்த அளவுக்கு கஷ்டப்படுத்தி இருக்க மாட்டேன்‌....! என்று பெட்டில் இருந்து எழுந்தான்.

அவனது விலகல்... சூராயாவை தீயாய் சுட்டெரித்தது "ஸாரி ஆதி ப்ளீஸ்...!" என்று சூர்யா ஆதியிடம் மன்னிப்பு கோரினாள்.

"இல்லை சூர்யா நீயும் என்‌ மேல் அதித காதலை வச்சு இருக்கியோன்னு தான் எல்லை மீறிட்டேன்‌ என்னை மன்னிச்சுடு" என்று கிளம்பினான் வெளியே.

"ஆதி உன்கிட்ட கொஞ்சம் பேசனும்‌ உடனே இந்த விஷயங்கள் எல்லாம் என்னால ஏத்துக்க முடியாது...?"

"அப்புறம்‌ ஏன்‌ நான்‌ உன்னை கட்டிபிடிக்கிறப்ப சும்மா இருந்த...! "

"ஆதி நீ என்‌மேல எவ்வளவு அன்பு வச்சு இருக்கேன்னு என்னால புரிஞ்சுக்க முடியுது அதனால தான் உன்னை காயபடுத்த என்னால முடியல..." என்று‌சூ ர்யாவின் ‌கண்கள் குளமாக...

"சூர்யா என்னை உனக்கு பிடிக்கலேயாடி.!"

"ஆதி என் மனசு முழுக்க வலி இருக்கு... ‌உன் அன்புக்கு பதில் நான்‌ என்ன‌ செய்ய‌ டியும் என் ‌உடலை தவிர வேற‌ எதுவும் கொடுக்க முடியாது‌...‌ உனக்கு வேணுமுன்னா எடுத்துக்க..." என்று சூர்யாவின் கண்களில் கண்ணீர் வர...

அவள்‌ கூறிய வார்த்தையில் தன்‌ ஆண்மையை‌ சந்தேகப்படுகிறாள்‌ என்ற‌ கோபத்தில் சூர்யாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான் ஆதி கோபமாக...

"என்ன நினைச்சுட்டு இருக்க நீ...! உடலா உடல் அது யாருக்குடி வேணும்... உன் மனசு உன் மனசு அது மட்டும் தான் வேணும் இந்த ஆதி தேடி வந்தது உடல் சுகத்துக்காக இல்ல டி மனசு மனசும் தவிக்குமே காதல் அதில இருந்து வெளிய வர முடியாத அளவுக்கு ஒரு போதை வருமே உனக்கு அடிமைபட்டு இருக்கிறது தான்டி என் வாழ்க்கையே உன் உடலுக்கு இல்லை உன் மனசுக்காக தான்...‌ உன்னை தேடி தேடி வந்தேன்...!"

அவன் ‌கூற‌ கூற‌ சூர்யாவிற்கு கண்ணீர் ‌மொழியாய் போயிற்று..

"உன் கண்ணுல ஒரு சொட்டு கண்ணீர் வந்தா கூட என்னால தாங்கவே முடியாது... சூர்யா அதுக்காக தான் என் ‌உயிர் போனாலும் பரவாயில்லைன்னு நீ உயிரா நினைக்கிற கயல் குட்டியை காப்பாத்தினேன்... என்னை புரிஞ்சுக்கோடி எனக்கு தேவை உன்‌ உடல் இல்லை உன் மனசு மட்டும் தான் புரியுதா...?" என்று சூர்யாவை பார்த்தவன்...

கண்களில் கண்ணீர் வந்துக் கொண்டே இருந்தது. சூர்யாவை நெருங்கியவன் அவளது கண்ணீரை துடைக்க வர சூர்யா விலகி போனாள்.

"இப்போ எதுவும் பேச வேண்டாம் நீ ரெஸ்ட்‌ எடு..! என்று அந்த ரூமை விட்டே வெளியே வந்தவன்.

"அவசரப்பட்டுட்டியே டா... எப்படி டா உனக்கு சூர்யாவை அடிக்க மனசு வந்துச்சு.... உயிருக்கு உயிரா நேசிக்கிறேன் அன்பு வைச்சு இருக்கேன்னு சொன்னியே டா...! அவ்வளவு கோபம் வந்தாலும் நிதானத்தோட இருந்து இருக்க வேண்டாமா... அடிக்கிற அளவுக்கு சூர்யாவும் தப்பா சொல்லவே இல்லையே.. மனசு தானே இல்லைன்னு சொன்னா... அந்த மனசை அவளே உனக்கே கொடுக்கிற‌ மாதிரி நீ அவளை பார்த்துக்கோடா...!" ‌என்று ஆதியின்‌ மனம் அவனுக்கு தெளிவாக எடுத்துரைத்து.

சூர்யாவின் நினைவிலோ தான் செய்தது பெரிய தவறு என்று பிறகே உணரந்தாள். "என்னை மன்னிச்சுடு ஆதி நீ நான் எனக்கு ரொம்பவே பிடிக்கும் உன் அளவுக்கு என்னை வேற யாராலேயும் பார்த்துக்க முடியாது... ‌ஆனா என் மனசு அந்த வலியில இருந்து நான்‌வெளியில வரனும் ஆதி... எப்ப எனக்காக நீ உன் உயிரா நினைக்கிற‌ உன் காதலையே தூக்கி போட துணிஞ்சியோ... அப்பவே உன் ‌மேல எனக்கு காதல் வந்திடுச்சு ஆனா.." என்னால இந்த கல்யாணம் வாழ்க்கை இது எல்லாம் புதுசு இதை மனசு ஏத்துக்கனும்...! இன்னும்‌ என்‌ மனசு அதுக்கு எல்லாம் பக்குவப்படல" என்று சூர்யா வருத்தமானாள்..

"என் மனசுல இருக்கிற... அந்த வலி அது தீராதது தான் ஆனா பழகிக்கிறேன்....! கொஞ்ச நாள்...ஆதி.." என்று சூர்யா ஆதியிடம்‌ மனதில் வேண்டி நின்றாள்.

மறு நாளிலிருந்து சூர்யாவை அதித அன்போடு தான் ‌பார்த்துக் கொண்டான்.. அவளை நெருகங்காமலே தனது அன்பை காட்டி தான் நின்றான்.

வெகு நாள் கழித்து சூர்யாவின் வீட்டில் இருந்து அனைவரும் வர கயல் வேறு வர... அனைவரையும் தன் அன்பினால் அணைத்தாள். வீடே கலகலப்பாக மாறியது. ஆதி வந்து விட்டாள் கயல் கூடவே நெருங்கி இருந்தான். அனைவரையும் வெளியில் அழைத்து செல்வது ஊர் சுற்றுவது என்று அனைவரையும்... சந்தோஷமாக வழியனுப்பி வைக்கும் வரை எந்த ஒரு ‌குறையோ சலிப்போ இல்லாமல் கவனித்துக் கொண்டான்.

அந்த அன்பு சூர்யாவை மேலும் கவர்ந்தது.

ஓர் நாள் ...!
"உள்ளே வரலாமா..? சூர்யா" என்று ஆதி கேட்டு உள்ளே வர..

" ஏய்‌ இது உன் வீடு என்‌ன பர்மிஷன்" என்று சூர்யா கோபமாக கூற..

"இது என் வீடு இல்லை நம்ப வீடு...! சரியா இது உன்னுடைய பர்ஷனல் ரூம்‌ சோ உனக்கும்‌ பிரைவசி வேணும்ல...!" என்று ஆதி வந்தமர்ந்தான்.

'சூர்யா நீ ஏன் எதையோ பறிகொடுத்த மாதிரி இருக்க...!"

சூர்யாவிடம் பதில் வரவில்லை

"ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில ஏதாவது ஒண்ணை நாம இழந்து தான் ஆகனும்... ‌அதுக்காக அப்படியே இருந்திட முடியுமா என்ன லைப்புல மூவ் ஆகி தானே ஆகனும்..சூர்யா..!"

"என்னால எப்படி மூவ் ஆகன்னு தெரியாம தான் தவிக்கிறேன்...!" என்று சூர்யா சோர்ந்து போனாள்.

"விடு என்னுடைய காதல் உன்னை மாத்தும் உனக்கு ஆறுதலா நான் இருப்பேன்.... என்னை காதலி.. நான் விட்டு எல்லாம் போக மாட்டேன்... தாலி கட்டி இருக்கேன்ல... உன் கூட என் ‌உயிர் இருக்கிற வரை வருவேன்னு சத்தியம் பண்ணி உன்னை தூக்கிட்டு வந்திருக்கேன்‌...!" என்று ஆதி புன்னகைக்க...

"இடியட்" என்று சூர்யா புன்னைக்க

"ஏன் அம்மு உடைய லவ் ஸ்டோரியை சொல்லேன்...! என் அம்மு எப்படி எல்லாம் காதலிப்பான்னு நானும் தெரிஞ்சுக்கிறேனே" என்று ஆதி தலையணை எடுத்து தனது மடியின் மீது வைத்து கதை கேட்க ஆவலாகும் குழந்தைப்போல்... ஆர்வமானான்.

"ஆதி அவன் யாருன்னே தெரியாது ஆனா அவன் மேல பைத்தியமா காதலிச்சுட்டு இருந்தேன் அப்புறம் அவன் ‌யாருன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்‌ என்னையே அவனுக்குள்ள தொலைச்சுட்டேன்.. ஆதி அது எல்லாம் பழைய விஷயங்களை...! இப்ப எதுக்கு" என்று சூர்யாவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

அதற்கு மேல் சூர்யாவால் பேச டியவில்லை... "மறக்க நினைக்கிற விஷயங்களை திரும்ப திரும்ப கிளறாத...! என் கழுத்தில நீ எப்ப தாலியை கட்டினியோ அப்பவே நான் உனக்கானவாளா ஆகிட்டேன்... அந்த நினைவுகளை மறக்க தான்...‌ நினைக்கிறேன.. ப்ளீஸ்" என்று சூர்யா கெஞ்ச...

"எனக்கானவளா ஆகனுமுன்னா உன் மனசு வேணும் அம்மு...! அப்ப தான்‌ முழுசா நீ எனக்கானவளா ஆக முடியும்...‌ பழைய பேச்சுக்கள் வேண்டாம் ஆனா புதுசா பேசலாம்ல..." என்று ஆதி கண்ணடிக்க...

"என்ன புதுசா...? புரியல" என்று சூர்யா கேட்க...

"நான்‌ உனக்கு புதுசு தானே...‌! என்னை பத்தி தெரிஞ்சுக்கோ...‌ அப்புறம் நாம பிரண்ஸ்ஷா இருக்கலாமா..?" என்று ஆதி கேட்க..

"நாம என்ன பிரண்ஷா...?" என்று சூர்யா கேட்க...

ஆதி சிரித்தவன் "எந்த ஒரு உறவா இருந்தாலும்... அடிப்படையா ஒருத்தவங்களை ஒருத்தவங்க புரிஞ்சுக்கனும்...‌ அதுக்கு நட்பு தான் சிறந்த வழி" என்று ஆதி கூற..

"ரொம்ப தெளிவா தான் பேசற சரி சொல்லு... ‌என்னை எதுக்காக உனக்கு பிடிச்சது...?" என்று சூர்யா ஆதியிடம் பேச ஆர்வமானாள்.

'கல்யாணம் ஆகி சூர்யா தன்னிடம் இப்படி பேசியதே இல்லையே ஆதி இதை நீ ஏன் முன்னாடியே யூஸ் பண்ணல பரவாயில்லை இப்போவாது பேசி சூர்யா மனசுல இடம் பிடிடா' என்று ஆதியின் மனம் குதுகலம் ஆகியது...

"ஹலோ ஆதி..." என்று ஆதியின் ‌முன் சூர்யா சொடக்கிட்டவள்.

"ஹான்...! சொல்லறேன் அதுக்கு முன்னாடி நாம பிரண்ஸ்.. ஷா அதை சொல்லு...!"

"ஓகே வீ ஆர் பிரண்ஸ் ஓகே சொல்லு என்னை எதுக்காக உனக்கு பிடிச்சது...?"

"ஒரு அழகான மழைக்காலம்...! அந்த மழைக்கு நடுவுல ஒரு தேவதை...! அப்படியே ஒரு‌ மின்னல் அடிக்க எங்கடா இந்த மின்னல் அப்படின்னு பார்த்தா அப்படியே பார்த்தா..."

"போதும் போதும் .. உன்‌கதையை நிறுத்திட்டு சொல்லு... ஆதி...?"

"அட இது தான்‌ சூர்யா நடந்திச்சு... அந்த மின்னல் மனசுக்குள்ள என் மனசுக்குள்ள அந்த தேவதையே நீ தான்... உன் கண்ணு அது என்னை பார்க்கனு முன்னு ஆசை உன் மனசுல நான் நிறைச்சு இருக்கனும்... உன் ‌முகத்தில் ஒவ்வொரு தடவை புன்னகைக்கிறப்ப அது என்னாலேயா தான் இருக்கனும் நீ பிரிஞ்சு இருந்து தவிக்கும் ‌போது கூட எனக்காக தான் இருக்கனும் ‌என்று ஆதி அடுக்கிக்கொண்டே போக...

சூர்யாவின் மனதினுள் தான் தவறு இழைக்கிறோமோ என்ற‌ எண்ணம் மோலோங்கி தான் இருந்தது அவன் காதல் சொட்ட சொட்ட பேசியது தான் அவள்‌ மனதினுள் ‌ஓடியது.. அவன் கூறிய‌ ஆசை வார்த்தைகள‌ சூர்யா கண்களில் கண்ணீர்‌ பெருக்கெடுத்தது திடீரென்று சூர்யா..." எனக்கு தூக்கம் வருது நான் தூங்கிறேன்..." என்று‌படுத்துக் கொண்டாள்‌ ஒரு‌புறமாக..

"அம்மு ‌என்னாச்சு...? நான் ‌ஏதாவது தப்பா பேசிட்டேனா..?" என்று ஆதி கேட்க

"இல்லை தலை வலிக்குது " என்று சூர்யா ‌ஓரே வார்த்தையில் முடிக்க...

"சூர்யா‌ முதல் எழுந்திரி ஹாஸ்பிட்டல் போலாம்... பீவர் அடிக்குதா" ‌என்று சூர்யாவின் கையை‌ உரிமையோடு ஆதி பிடிக்க...

"ப்ளீஸ் என்னை விடேன்...‌ ஆதி நான்‌கொஞ்ச நேரம் தனியா இருக்கனும்‌...! என்று சூர்யா அழுகையோடு வெடித்தவள்.

"என்ன‌ சூர்யா‌ இப்படி அழற..? நீ அழாத எனக்கும் வலிக்கும்..." ‌என்று ஆதிக்கு தொண்டை அடைத்து.

"நான்‌ அழ கூடாதுன்னா ப்ளீஸ் என்னை விட்டு விலகியே இரு நானே மாறி வருவேன்...! ‌என்று சூர்யா படுத்துகொண்டாள்.

"ஸாரி சூர்யா‌..." என்று ஆதியின் கண்கள் குளமாகியது அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மறைத்தான்... சூர்யாவின் ரூம் கதவை சாற்றிக் கொண்டு வந்தவன் தன் அறையில் தஞ்சம் புகுந்தான்.

வேதனையின் உச்சத்தில் இருந்தான் காதல் தோல்வியினால் உடைந்து போயி இருந்த தனது சூர்யாவை தன் காதலில் மீட்டு எடுக்க நினைத்தவன்.. இப்போது அவள் அருகில் இருந்தும் என்னவள் அல்லாமல் இருக்கிறாள் கூடாது ஆதி சூர்யாவை இப்படி விடகூடாது...!"

'எப்படியாவது என் சூர்யாவா நான்‌ மாத்திடனும் என் அம்மு இவ்வளவு வலிகளை உனக்குள்ள தாங்கிட்டு இருந்து கஷ்டத்தை அனுபவிக்கிற அம்மு‌ என்கிட்ட சொல்லிட்டேல உன் கஷ்டத்தை இனி‌உன் சந்தோஷமா நான்‌மாத்தி காட்டறேன்..' என்று ஆதியின் ‌மனம் ‌முழுவதும் ‌சூர்யா நிறைந்து இருந்தாள்..

ஆதியின் மொபைல் ரிங் ஆக...! திரையில் பார்த்தவன் சஞ்சு என்று தெரிந்தது.

"சொல்லுடா..!" என்று வருத்ததின் உச்சத்தில் இருந்தான் ஆதி.

"என்னடா சுரத்தையே சரியில்லை..! மறுபடியும்‌ஏதுவது ப்ராப்ளமா டா.." என்று சஞ்சு கேட்க...

"சஞ்சு என்‌ லைப்புல மட்டும்‌ ஏன்டா இப்படி நடக்குது" என்று ‌தனது மனதில் இருந்த குமுறல்களை கெட்டி தீர்த்தான் சஞ்சயிடம்

"அண்ணி உன் மேல எவ்வளவு அன்பு வச்சு இருந்தா அவங்களுடைய காதல் கைக்கு எட்டற தூரத்தில இருந்தும் நீதான் வேணு முன்னு வந்தாங்க... அவங்களுக்கு டைம் கொடுடா...‌ ஒருமாசம் தானே ஆகி இருக்கு... அப்படி சட்டுன்னு மாறிட முடியாது டா இடியட்..."

"என்னடா பண்ணட்டும் நானும் சூர்யாவை இப்படி பார்க்கவே முடியல...?"

"பொறுடா நான் சொல்லற மாதிரி செய் அண்ணி உன்கிட்ட வருவாங்க..."

"என்னடா செய்யறது...?"

"விலகி போடா...!"

"என்னது விலகியா அது நடக்காதுடா..."

"அட ஆதி...! நான் விலகி இருக்க சொல்லறதே நெருங்கி வரதுக்காக தான்டா...! அவங்களுக்கும் நீ எப்படின்னு தெரியனும்.. உன் அன்பை கொட்டி தீர்த்துட்டு இருந்தா புரியாதுடா கொஞ்சம் விலகி நின்னுபாரு அந்த அன்புக்காக தவிச்சு போய் தான் இருப்பாங்க...!"

"சரிடா நீ சொல்லற நான் முயற்சி பண்றேன்..!"

"ம்ம்ம்..! சரி இப்போ நிம்மதியா தூங்கு... நாளைக்கு ஆபிஸ்ல பார்க்கலாம்..!"

"ம்ம்ம்" என்று போனை‌ வைத்துவிட்டு உறங்கச் சென்றான்.
தொடரும்
 
Top