ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உயிர் -13

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஒருவருடத்திற்கு முன்பு...

வர்மா தன்னிடம் பேசியதே... சூர்யாவிற்கு நிலை கொள்ளாச் சந்தோஷம்...‌ யாரிடம் இந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளாது தனக்குள்ளே நினைத்து நினைத்து ஆனந்தம் கொண்டாள்.

வர்மாவின் நிலையோ அதைவிட மோசமாகியது.... சூர்யா இல்லாமல் தன்னால் உயிர் வாழ இயலாது என்ற நிலைக்கு அவளது அன்பிற்கு தள்ளப்பட்டான்.

ஒரு வாரம் கூட‌ ஆகவில்லை...! மெயிலிலே அவர்கள் காதல் வசந்தம் ஆனது.

"கண்ணம்மா...! "

"ம்ம்ம்...! சொல்லுடா..."

"கண்ணம்மா...!"

"ம்ம்மம்ம்ம்...! என்ன‌டா வேணும்...!"

"எனக்கு நீ வேணும் கண்ணம்மா...!"

"நான்‌ உனக்கு தான் வர்மா...‌ இந்த சூர்யாவுடைய உடலும் உயிரும் உனக்கு மட்டும்‌தான் ....! "

"நீ என் பக்கத்திலேயே இருக்கனும் டி...! நான் தோல்வியை சந்திச்சாலும் வெற்றியை சந்திச்சாலும்..."

"இருப்பேன் டா‌ உன்‌ கூடவே என்‌ நினைவுகள்ல இருந்து இப்போ என் நிஜத்திற்கு வந்து இருக்க உன்னை அவ்வளவு சீக்கிரம் விட்டு விட முடியாது..."

"அவ்வளவு அன்பாடி என் மேல..."

"ஆமாண்டா என் அன்புக்கு எல்லையே இல்லைடா...! எனக்கு ஒரு ஆசை செய்வியா...!"

"என்ன கண்ணம்மா...! வேணும்...!"

"எனக்காக ஒரு கவிதை எழுதறியா..! ஒண்ணே ஒண்ணு ப்ளீஸ்" என்று சூர்யா வழக்கம் போல் தனது மெயிலில் கெஞ்ச...

"இப்படி என் கண்ணம்மா கெஞ்ச வேண்டிய அவசியமே இல்லை...! இதோ...."

" உறவாடி என்னை வென்றவளே...!
களவாடி என் பொழுதுகளை கழித்தாயே...!
இரவாடி உன் நினைவில் நான் கரைத்தேனடி...!
காதலாகி என்னை உரிமை கொள்ள உன்னால் மட்டுமே‌ முடியும்‌ கண்ணம்மா...!

அதை படித்த சூர்யாவிற்கு..." என்ன கொல்லறியே டா உன் எழுத்துகளால...! எப்படி டா ‌உன்னால மட்டும்‌ இப்படி எழுத முடியிது...! "

"உன்னை நினைச்சாலே எனக்கு தோணுதுடி..! இதுல இருக்கிற ஒவ்வொரு வார்த்தையும் உனக்கானது டி...."

"ரொம்ப தேங்ஸ் டா..! "

"அடிதான் விழும் தேங்ஸ் னா...! நாம என்ன அப்படியாடி பழகிறோம்...!"

"வர்மா...! "என்று சூர்யா கரைத்தாள்.

"சொல்லு கண்ணம்மா...!"

"ஐ லவ் யூ டா...! உன்னை நான் எவ்வளவு மிஸ் பண்றேன்‌ தெரியுமா...?"

"நானும் தான் கண்ணம்மா‌ உன்னை ரொம்பவே மிஸ் பண்றேன்...!"

"என்ன‌ பண்ணலாம் டா... "

"உன்னை இப்பவே பார்க்கனும்... கண்ணம்மா.! "

"எனக்கும் தான் டா...! "

"நான்‌ ஆயிரம் தொலைவு கடந்து இருக்கேன் டி..."

"அப்ப உன்னை பார்க்கவே முடியாதா...?" என்று சூர்யா சோகமானாள்

"ஒரேஒரு நிமிஷம்" என்று தனது வாய்ஸ் மெயிலை சூர்யாவிற்கு அனுப்பினான்.

அதை ஓடவிட்டவள் அவன் வசம் தஞ்சம்‌ புகுந்தாள்.

"ஏன் ‌முடியாது சூர்யா உன் கண்ணை மூடு டி...! என்னை நினைச்சுக்கோ... உன்‌ பக்கத்திலே தான் நான் இருக்கேன்... ‌உன்‌ கையை இறுக்கமாக பிடிச்சுட்டு இருக்கேன்...‌ நீ என்‌தோள்ல சாயிஞ்சுட்டு இருக்க... உனக்கும் எனக்கும் நிஜத்தில் ஆயிரம் மைல் தொலைவு இருக்கலாம் ஆனா... மனசு அளவுல நூல் அளவு கூட இடைவெளி இல்லை டி... ஐ லவ் யூ கண்ணம்மா..‌" என்று அந்த குரல் பதிவு முடிய... சூர்யிவின் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது.

"வர்மா " என்று சூர்யா மீண்டும் மெயில் அனுப்ப...

"நான்‌ ஒரு‌ நாள் இல்லாமா ‌போனா என்ன பண்ணுவ..?" என்று சூர்யா‌ மெயில் அனுப்ப...

"சாவடிச்சுடு வேன்டி உன்னை...! இப்படி எல்லாம் பேசாத சூர்யா‌ எனக்கு ரொம்ப வலிக்குது சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏக்கதோட வாழ்றவன் நான்... இவ்வளவு அன்பு ஒரு வாரத்தில எனக்கு கிடைச்சதே என் வாழ்க்கையவே திரும்பி போட்டுச்சு... எப்ப இந்த வார்த்தையை நீ கேட்டியோ அப்பவே... எனக்கு பயமா இருக்கு..."

"நான் உன்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் வர்மா...‌ உன் கூடவே தான் இருப்பேன்... நீயே போன்னு சொன்னாலும் போக மாட்டேன்..." என்று சூர்யா அழுகையோடு கூற..

"அன்பு முதலில் வெளிப்படுத்த வைக்கும்...!
உள்ளூர ரசிக்க வைத்து ஏங்க வைக்கும்...!
அதீத அன்போடு எதிர்பார்க்க வைக்கும்...!
எதிர்பார்ப்பு‌ ‌முடியாமல் போனால்
தவிக்க வைக்கும்..!
தவிப்பு வெறுப்பாய்‌மாற...
விலகிவிட்டு நிற்க வைக்கும்...!
அன்பு போதை தான்‌ அளவிற்கு
அளவிற்கு அதிகமானால்...
நஞ்சாய்‌ மாறி நசுக்கவும் செய்யும்...!
அன்பில் எதிர்பார்ப்பு ‌இல்லாமல்..!
ஏக்கதோடு பாசமாய் வாழ்ந்தால்...!
அன்பு
ஏமாற்றம் இல்லாமல் ....!
கண்ணீர்‌ இல்லாமல்...!
சுகத்தை மட்டுமே கொடுக்கும்..!

அதீத அன்பும்‌ ஓர் நாள்...! ஆபத்தாய் மாறிடுமே... இருவருக்குள்ளும் மாறியது. திகட்டாத அன்பு இப்போது திகட்ட தொடங்கிவிட்டது.

"எங்கடி போன...?"

"அண்ணி ரிலேடிவ் வந்து இருந்தாங்க டா அதான் பேசிட்டு இருந்தேன்...!"

"என்‌கூட பேசறதை விட அவங்க கூட பேசறது தான் முக்கியமா போச்சுல...!"

"அப்படி இல்லைடா...! அவங்களை மறுக்க முடியல கையைப் பிடிச்சு உட்கார வச்சுட்டாங்க ..."

"இரு இரு நான் நேர்ல வரும் போது... உன்னை பேசிக்கிறேன்...!" என்று கோபமாக வர்மா கூற...

"நீ நேர்ல் வரும் போது பார்த்துக்கலாம்....!"

"பாரு வந்து உன்னை கடிச்சு வைக்க தான் போறேன்...டி...! என்னை எவ்வளவு ஏங்க வைக்கிறடி நீ...!

"பார்டா ..."

"பார்க்கதானே போற வர்மா யாருன்னு....!"

"போடா‌ அதிகமா வெட்கபட வைக்காத..."

"என் சூர்யா‌ வெட்கப்படறாளா...? ஐய்யோ வர்மா என்ன டா பண்ற இங்க உன்‌ சூர்யா‌ வெட்கபடற அழகை ரசிக்காமா‌....! என்று ‌அவன் மனம் தவிப்பில் தொலைந்தது.

"வர்மா...! "

"சொல்லுடி ..."

"நான் வேற‌ யார் கூடயாவது பேசுனா‌ உனக்கு என்ன...

"என்னை தவர நீ வேற யார்க்கிட்டேயும்‌ பேச கூடாது என்கிட்ட‌ மட்டும்‌ தான்‌ பேசனும் ...!"

"பொறாமையா...!"

"ஆமாண்டி... ‌நான்‌ மட்டும்‌ நேர்ல வந்தா..."

"நேர்ல் வந்தா..."

"உன்னை எனக்குள்ள பூட்டி வச்சுக்குவேன்..."

"‌காதல்
என்னும்‌ சிறையில்
உன்னை ஆயுள்‌கைதி ஆக்கிவிடுவேன்...!
டி கண்ணம்மா...!"

"உன்‌ஆயுள்‌ கைதியாகும்‌ அந்த நொடிக்காக தவமிருக்கிறேன் டா.."

"வரேன்டி சீக்கிரமே.."

காதலினுள் பொறாமை வந்தால்..! அது பெரிதாக மாறிப்போனால்...!

"சூர்யா..." ‌என்று நித்திலா அழைக்க...

சூர்யாவிடமிருந்து பதில் இல்லை.‌‌...

அவளது அறைக்குள் வந்தவள்..." எப்ப பாரு லேப்டாப் கையுமா தான் இருப்பியா சூர்யா...! என்ன‌ஆச்சு...?" என்று நித்திலா கவலையாக கேட்க..

"அண்ணி பைனல் இயர்ல பிராஜெக்ட் வொர்க் ஹெவியா இருக்கு... கயல் கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே இல்லை" என்று சூர்யா கவலையாக மனதினுள் வர்மா கூட பேசறதே இல்லை நேரமே இல்லை இன்னைக்கு எப்படியாவது பேசனும் என்று வேகவேகமாக தனது வேலைகளை முடித்தாள்.

நித்திலாவோ சூர்யாவை காண சோர்வாக தெரிய விட்டு விட்டாள் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் தன் வேலைகளில் முழ்கினாள்.

இரவு...!

"வர்மா " என்று சூர்யா மெயில் அனுப்ப...

வெகு நேரம் கழித்தே பதில் வந்தது. சூர்யாவும் மீண்டும் ‌பிராஜெட் வேலையில் முழ்கி போக... அவளும் கவனியாது விட்டு விட்டாள். வர்மா மனம் ‌உடைந்து போனான்.

மணி 12 லேப்டாப்பை மூடி வைக்க முனைத்தவள் மெயில் ஒன்று வர்மாவிடம் இருந்து...! அச்சோ என்று வேகவேகமாக ஓபன்‌சொய்தவள்.

"ஐ லவ் யூ ஐ மிஸ் யூ" என்று அனுப்பி இருந்தான்.

கடவுளே என்று தலையில் அடித்தப்படி பதில் மெயில் அனுப்பினாள்.

"ஐயம் ஸாரி டா ஐயம் ரியலி ஸாரி.. நான் மெயில் பார்க்கல மார்னீங் பேசறேன்‌.." என்று லேப் டாப்பை ஆப் செய்தாள்.

"அப்போ உன் நினைவுகள்ல நான் இல்லையாடி...‌ சொல்லு உன் மனசுல.. இல்லையா..!" என்று வர்மா உடனே பதில் அளிக்க... தூங்கிப்போனாள் சூர்யா.

விடியற்காலை பொழுதில் காலேஜ்ஜிற்கு பறந்தாள்‌.. வேகமாக நிமிடங்கள் நகர... மதிய வேளையில் தான் மூச்சு விடுவதற்கே நேரம் கிடைத்தது சூர்யாவிவிற்கு.

அந்த மெயிலை பார்த்தவளுக்கு அதிர்ச்சி...!

"என்னடா பேச்சு இது...!" என்று சூர்யா கேட்க...

பதில் உடனே வந்தது...‌" அது தானே உண்மை என்‌ நினைவுகள் கூட இல்லாம உன்னால வாழ முடியும்ல..."

"முடியாது டா.. என்னால" என்று கண்ணீர் முட்டியது சூர்யாவிற்கு காலேஜ் என்று கூட பாராமல் அழுது தான் தொலைத்தாள்.

"நாம பேசி எத்தனை நாள் ஆச்சு..? நேத்து தான் அதிசயமா மெயில் பண்ண அதுவும் அடுத்தது தொலைஞ்சு தானே போச்சு..."

"உன் சூர்யாவை சந்தேகப்படறியா டா..?"

"என் சூர்யாவா இருந்தா இப்படி செஞ்சு இருக்கவே மாட்டா..."

"நான் உன் சூர்யா தான்டா ஐ லவ் யூடா இப்படி எல்லாம் பேசாதாட... ஒரு வாரம் பிராஜெக்ட் அதான்... பேச கூட நேரமில்லை..."

"பிராஜெக்ட் முக்கியம் தான்டி நான் இல்லைன்னு சொல்லல...‌ ஒரே ஒரு மெயில்.. நான் நல்லா இருக்கேன்டான்னு ஒரே ஒரு மெயில் அனுப்ப மாட்டியாட்டி உன்னை ‌என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேச சொல்லவே இல்லை...! உன் படிப்பு ரொம்ப முக்கியம்..."

"புரியிது டா இனி‌ அப்படி பண்ண மாட்டேன்‌ உன்‌ சூர்யாவை மன்னிப்பியா.."

"மன்னிக்க மாட்டேன்.. என்னை விட்டு இனி போக மாட்டேன்னு ப்ராமிஸ் பண்ணாதான் பேசுவேன்..."

"ப்ராமிஸ்ஸா இப்படி பண்ண மாட்டேன் டா... "

"கண்ணம்மா...."

"ம்ம்ம்...! நீ இல்லாத ஒரு நொடி கூட‌ என்னால நினைச்சு பார்க்கவே முடியாது... டி உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு தான் நினைக்க தோணுது..."

"புரியிது டா இனி இந்த தப்பை பண்ண மாட்டேன்..."

நிஜம்...!

ஆமாண்டா அந்த தப்பை நான் பண்ணவே இல்லையே நீ தானே பண்ண... நான் ‌எவ்வளவு சொன்னேன்... என்னை புரிஞ்சுக்கல நீ தான் விலகி போன... என் அன்பை சந்தேகப்பட்ட... புரிஞ்சுக்கல விலகி நிற்கறது தான் நல்லதுன்னு பேச ஆரம்பிச்ச...‌இப்ப மொத்தமும் தொலைஞ்சுப்போச்சு டா ஆனா உன் சூர்யா அப்படியே தான்டா இருக்கா...!

"காதலே...!
விலகி
இருந்து கொல்லாதே...!
நெருங்கி வந்து
கொல் ...!
நிம்மதியாக இறந்துவிடுவேன்..
உனக்காக..!
உன்னை தாங்கிய இதயம்
உன்‌பிரிவை தாங்கி
நிற்க மறுக்கிறது...!
வந்துவிடு இல்லையேல்...!
கொன்று விடு..!"

அனுவிற்கு சூர்யா ‌என்ன செய்கிறாள் என்று புரியவில்லை சூர்யாவிற்கே தான் என்ன செய்கிறோம் என்று புரியாமல் தவிக்கும் போது அனு மட்டும் ‌என்ன விதிவிலக்கா...

சூர்யா கூறியது போலவே...! இரவு 9 மணிக்கு... நித்திலாவிடம் இருந்து அழைப்பு...! மறுக்க முடியாமல் அனு எடுத்தாள்.

'அண்ணி...!"

"சூர்யா...!" என்று நித்திலா கூற..

"நான் அனு பேசறேன்... அண்ணி இப்போ எப்படி இருக்கீங்க.. ஆபிஸ் வொர்க் அதான் வீட்டுக்கு வரமுடியல..."

"பரவாயில்லை அனு... சூர்யா ‌எங்க...?" என்று நித்திலாவிடம் கோபம் தான் தெறித்தது.

"சூர்யா மீட்டிங்கல இருக்கா அண்ணி...!"

"சரி வந்ததும் கால் பண்ண சொல்லு அனு..."

"அண்ணி ஹெவி வொர்க் இரண்டு பேருமே ஆபிஸ்ல தான் இருக்கோம் நாளைக்கு வரைக்கும் பிஸி" என்று சூர்யா கூறியது போல் அனுகூற..

"சாப்பிடீங்களா இரண்டு பேரும்..!"

"சாப்பிடோம் அண்ணி...! நீங்க கவலை இல்லாம் நிம்மதியா தூங்குங்க நான்சூர்யாவை பார்த்துக்கிறேன்" என்று அனு கூற...

"காலையில இருந்தே சூர்யா சரியில்லை அனு எனக்கு பயமா இருக்கு... காலையில சாப்பிட உட்கார்ந்தவ திடீர்னு ‌எழுந்திரிச்சுட்டா என்ன‌ ஆச்சுனே புரியல...!"

"ஆபிஸ் டென்ஷன் தான் அண்ணி முக்கியமான பிரசண்டேஷன்... முடிக்கனும்..."

"நீங்க இரண்டு பேர் தான் முக்கியமா ஆபிஸ்ல இருக்கீங்காள மத்தவங்க இல்லையா..."

"இருக்காங்க அண்ணி ஆனா இந்த ப்ராஜெக்ட் எங்க இரண்டு பேருடையது நாங்க தானே முடிக்கனும்‌..."என்று அனு கூற...

"ம்ம்ம வர வர நீயும் சூர்யா மாதிரி மூடி மறைச்சு பேச கத்துக்கிட்ட" என்று நிந்திலா கூற..

"ஐய்யோ இல்லை அண்ணி...! உண்மை தான் சூர்யா நல்லா இருக்கா மீட்டிங் போயிட்டு இருக்கு அண்ணி.. மார்னீங் கூப்பிடறோம்‌" என்று அனு கூற.

அனுவின் பேச்சில் சிறு நம்பிக்கை வந்தவளாய்..! போனை வைத்தால் நித்திலா.
-தொடரும்
 
Top