ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 9

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 9

அவர்கள் கைதான விஷயம் அறிந்த விருத்தாச்சலம் எடுத்து லெஃப்ட் ரைட் வாங்கியது என்னவோ மதுபாலாவை தான். உடனே அவள் "எப்படி பிடிபட்டாங்கன்னு எனக்கும் தெரில, " என்று சொன்னவளுக்கு கொஞ்சம் அழுத்தம் அதிகரிக்க, அவள் போன் அலறியது.. எடுத்தது வேறு யாருமல்ல கரிகாலன் தான். அவள் புருவம் சுருக்கிப் பார்த்து விட்டு போனை எடுக்க, " மேடம், அந்த நாலு சாப்பாட்டையும் இங்க நாலு பிச்சைக்காரங்க இருக்காங்க அவங்களுக்கு கொடுத்து விட்ருங்க, நான் கிளம்புறேன்" என்று சொல்ல "கரிகாலா " என்று அவள் ஆத்திரத்தில் கத்த போனை தள்ளி பிடித்தவன் இரு பக்கமும் தலையாட்டி சிரித்து விட்டு "வண்டிய எடு" என்று ட்ரைவரிடம் சொன்னான்.

அதே சமயம் வீட்டுக்கு வந்த கரிகாலனுக்கு கிடைத்த செய்தியில் அவன் முகம் வெளிறிப் போனது. அவன் தந்தைக்கு உடம்பு முடியாமல் இருக்க, மாதவியோ மருந்து வாங்க கடைக்கு தனியே புறப்பட்டு சென்று இருந்தாள். அவனோ ஆத்திரமாக "அம்மா வெளியே இருக்கிற பிரச்சனை தெரியும்ல, அவளை எதுக்கு தனியா விட்டிங்க," என்று சீற, அவரோ "உனக்கு எடுத்தென்பா, உன் போன் ஆப்" என்று சொல்ல அவனோ "ம்ம் மீட்டிங்கில் இருந்தேன்.. அட்லீஸ்ட் வாசலிலே நிற்கிற கூர்க்கா கிட்ட கொடுத்து இருக்கலாமே " என்று சொல்ல அவரோ "அவன் பேசுறது எனக்கு புரில, நான் பேசுறது அவனுக்கு புரில , அப்பாக்கு வேற இருமல் ஜாஸ்தியா இருக்கு, மாதவி தான் பக்கத்துல தானேன்னு சொல்லிட்டு கிளம்பி போனா.. வந்திடுவாப்பா" என்று சொல்ல அவரை முறைத்தவன் "கிழிச்சா? எந்த பார்மஸின்னு சொன்னாளா?" என்று கேட்டு இடத்தை அறிந்து கொண்டு ஜீப்பில் செல்வது உத்தேசமல்ல என்று அறிந்து ஆட்டோவில் புறப்பட்டு போனான். அவன் ஜீப்பை தானே பின் தொடர மதுபாலா பலரை வைத்து இருந்தாள், அது அவனுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?

அவன் தாய் சொன்ன பார்மஸிக்கு அருகே வண்டியை நிறுத்தியவன் இறங்கி மாதவியை தேடி பார்மசியை நோக்கி நடக்க ஆரம்பித்தான். அவளோ அப்போது தான் மருந்தை வாங்கி விட்டு வெளியே வந்தவள் , கரிகாலனை வாசலில் கண்டதுமே "சார் வந்துட்டிங்களா " என்று கேட்க அவளை அனல் தெறிக்க பார்த்தவன் அவள் கைகளை பிடித்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்க்க அவன் வந்த ஆட்டோவை பின் தொடர்ந்த மதுபாலாவின் அடியாள் அப்போது தான் அந்த இடத்தினை அடைந்து இருந்தான். அவன் கண்ணில் படக் கூடாது என்று நினைத்த கரிகாலனுக்கு கால அவகாசம் கொஞ்சமும் இருக்கவில்லை. கரிகாலனும் கண்களை மூடித் திறந்தபடி அந்த இடத்தை நோட்டம் விட அங்கு ஒருவர் நடந்து செல்லக் கூடிய ஒரு குறுக்கு சந்து இருப்பது தெளிவாக தெரிந்தது. உடனே அந்த இடத்துக்குள் அவளை இழுத்துக் கொண்டு நுழைந்தவன் அங்கிருந்த சுவரில் தனது தோளினை முட்டுக் கொடுத்து அவனுக்கு கரிகாலனின் முதுகு மட்டுமே தெரியும் வண்ணம் சாய்ந்து நின்றவன் அவளை முழுதாக மறைத்தபடி நிற்க அவளோ அவனை புரியாமல் பார்த்தாள். சின்ன பெண்ணவள் முழுதாக அவனது ஆறடி கட்டுடல் பின்னால் மறைந்து கொள்ள, அவனுக்கோ மேலும் ஒரு சந்தேகம் வந்தது. தனது பின் பக்க தோற்றத்தை வைத்து கண்டு பிடித்துவிட்டால் என்ன செய்வது என்று நினைத்தவன் அடுத்த கணமே இன் பண்ணி இருந்த ஷேர்ட்டை வெளியே எடுத்து விட்டு, சீராக இருந்த முடியையும் கலைத்து விட, அவளோ புரியாமல் "என்ன சார் பண்ணுறீங்க?" என்று சத்தமாகவே கேட்டாள்.

அவனோ அவளை முறைத்துப் பார்த்தபடி அவள் வாயை தனது கையினால் பொத்தியவன் அடுத்த கையால் தனது வாயில் சுட்டு விரல் வைத்து பேச வேண்டாம் என்று சொல்ல அவளும் சம்மதமாக தலை ஆட்டினாள். நூலளவு நெருக்கத்தில் இருவர் மூச்சுகளும் ஒன்றோடொன்று கலந்து செல்கிறது, அவன் கைகள் வேறு அவள் இதழ்களை தீண்டி இருக்கிறது....ஆனால் இருக்கும் பதட்டமான சூழ்நிலையில் அதை கவனிக்கும் நிலையிலோ அதை உணரும் நிலையிலோ இருவரும் இருக்கவில்லை. அதை உணர்ந்தால் கூட, காதலில்லாத காரணத்தினால் பதறி விலகுவார்கள் தவிர அந்த நெருக்கத்தினை அவர்கள் எப்படியும் ரசிக்க போவது இல்லை.

சிறிது நேரம் அப்படியே நின்றவன் "பின்னால கருப்பா உயரமா ரெட் டீஷேர்ட் போட்ட ஒருவன் பொய்ட்டானான்னு பார்த்து சொல்லு" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் ரகசிய குரலில் அவள் காதருகே குனிந்து சொன்ன சமயம் அவன் இதழ்கள் கூட அவள் காது மடலை தீண்டி தான் சென்றது.. அவளோ தனது வாயை மூடி இருந்த அவன் கையை கண்களால் குனிந்து பார்க்க அப்போது தான் அதை உணர்ந்தவன் கரம் அவள் இதழில் இருந்து அகல, "சாரி" என்றபடி கையை விலக்கி கொண்டான்.

அவளுக்கும் இப்போது நிலைமையின் விபரீதம் புரிந்து விட, அவள் மனமோ "இவ்ளோ உயரமா இருந்தா நான் எப்படி பார்க்கிறதாம் " என்று நினைத்தபடி அவனை ஏறிட்டு பார்க்க அதை உணர்ந்தவனோ மெல்லிய சிரிப்புடன் அவள் காலை கண்களால் காட்டினான். அவளும் தட்டையான செருப்பு அணிந்து இருந்ததால் பெருவிரலில் நிற்பது சிரமமாக இருக்கவில்லை. அடுத்த கணமே கால் பெருவிரலினை ஊன்றி எழுந்த போதும் கூட அவன் தோள்பட்டைக்கு மேலாக சென்று பார்க்கும் அளவுக்கு அவள் உயரம் போதவில்லை. அவளோ அவனை பார்த்து இதழ்களை பிதுக்க அவனோ பெருமூச்சுடன் மேலும் அந்த சுவரில் நன்றாக சாய்ந்து நின்றவன் இடுப்பை சற்று வளைத்து தனது உயரத்தை அவளுக்காக குறைத்துக் கொண்டான். அது அவளுக்கும் வசதியாக போக, அவன் தோளின் மேலே எம்பி கண்களை மட்டும் விட்டு மறு பக்கம் துழாவியவள் கண்ணில் யாருமே படவில்லை. இல்லை என்று தலையாட்டியவள் அப்படியே பார்த்துக் கொண்டு இருக்க, கரிகாலனை பின் தொடர்ந்தவனும் அந்த குறுக்கு சந்தை தாண்டி செல்ல அவளோ காலை நிலத்தில் ஊன்றி தன்னை முழுமையாக அவன் பின்னே மறைத்துக் கொண்டவள் கண்களை மட்டும் காட்டினாள். அவனும் கண்களை முடித்து திறந்து அப்படியே நிற்கும் படி சொல்ல, வந்தவனோ "எங்கே ஆளையே காணோம்? எதுக்கு ஆட்டோவில் வரணும்? " என்று குறுக்கு சந்தை திரும்பி பார்க்க அங்கு அவனுக்கு தெரிந்தது என்னவோ கரிகாலனின் முதுகு மட்டுமே, அவன் மறுபுறம் ஒரு பெண் இருப்பது மாதவியின் கால் மூலம் தென்பட "ஒரு குறுக்கு சந்து இருக்க வழி இல்ல, உடனே ஜோடி ஜோடியா உள்ளே புகுந்துட வேண்டியது" என்று பெருமூச்சை விட்டபடி திட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

சிறிது நேரம் அப்படியே நிற்க, மாதவியோ எட்டிப் பார்த்தவள் அங்கு அவன் இல்லை என்று உறுதிப் படுத்திக் கொண்டே, "அவன் பொய்ட்டான் " என்று சொல்ல அவளை முறைத்து பார்த்தவன் " உன்னை யாரு இப்போ வெளிய வர சொன்னா? நான் தான் சொல்லி இருக்கேன்ல கேஸ் முடியும் மட்டும் வெளிய வர வேணாம்னு.. சொன்னா கேட்க மாட்டியா? உன்னால பாரு எனக்கும் எவ்ளோ கஷ்டம்?" என்று கோபத்தில் சீற அவள் கண்களோ கலங்கி போனது.."சாரி சார், மாமாவுக்காக தான் வந்தேன். நான் உங்கள ரொம்ப கஷ்டப்படுத்துறேன்ல" என்று கேட்க அப்போது தான் பேசிய பேச்சின் வீரியம் அறிந்தவன் தன்னை தானே கடிந்தபடி "ஹேய், கோபத்துல பேசிட்டேன். அதெல்லாம் ஒன்னும் இல்ல, இப்போ தள்ளி இருக்கிற ஸ்டாண்டுக்கு போகணும்.. ஒண்ணா போக முடியாது.. ஒரே ஆட்டோவிலயும் போக முடியாது.. " என்றவன் கண்கள் அவள் ஷாலில் பதிய " கொஞ்சம் ஷாலை எடுத்து தலையையும் முகத்தையும் கவர் பண்ணிகிறியா ?" என்று கேட்டான். அவளும் ஷாலை எடுத்து தலையில் போட்டவள் முகத்தை ஒழுங்காக மூட முடியாமல் தடுமாற, அவனே ஷாலை எடுத்து அவள் மூக்கு வரை மூடியவன் "பின் இருக்கா?" என்று கேட்க அவளும் கைப்பையில் இருந்து பின்னை எடுத்தவள் , நீட்டி இருந்த அவன் கையை பார்த்து விட்டு "இத கையில குடுத்தா உறவு முறிஞ்சிடும்னு சொல்வாங்க" என்றவள் அவனிடம் கேட்காமலே அவன் ஷேர்ட்டில் குத்தி விட, அது அவன் மேல் தோலையும் பதம் பார்த்தது..

அவனோ "ஆ, என்னடி பண்ணுற?"என்று வலியுடன் அவளை முறைத்தபடி கேட்டவன் தனது ஷேர்ட்டில் இருந்த பின்னை கழட்டி எடுத்தபடி "எல்லா மூட நம்பிக்கையையும் நம்ப வேண்டியது" என்று சொன்னவன் அந்த பின்னினால் அவள் ஷாலை எடுத்து அழகாக சுற்றி விட்டு பின் பண்ணி விட்டான். அவளோ "என்னை கண்டு பிடிக்க முடியல தானே இப்போ" என்று சொன்னவள் "எப்படி இருக்கேன் ?" என்று கேட்க அவனோ பாக்கெட்டில் இருந்து சன் கிளாஸை எடுத்து கண்ணில் அணிந்து கொண்டவன் "நீயே பார்த்துக்கோ" என்று சொல்ல அவளும் அவன் கண்ணாடியில் தன்னை பார்த்தவள் "ஓகே" என்று தலையை ஆட்டியபடி சொன்னாள். அவனோ பெருமூச்சுடன் "நீ முன்னாடி போய் பெர்ஸ்ட் ஆஹ் இருக்கிற ஆட்டோவில் ஏறி, நம்ம வீட்டு சந்தியில இறங்கி நடந்து போ , ஆட்டோ காரனுக்கு கூட நீ எங்க போறான்னு தெரிய கூடாது, உன்னை நான் அடுத்த ஆட்டோவில் பின் தொடர்வேன்.. எனக்கு பின்னால அவன் வர்றதா தெரிஞ்சா அங்க இங்க பொய்ட்டு லேட் ஆஹ் தான் வருவேன்.. வீட்ட போனதும் ஒரு மிஸ் கால் மட்டும் போடு...அதுவும் லேண்ட் லைன்ல இருந்து போடு.. புரியுதா?" என்று அழுத்தமாக கேட்க அவளும் சரி என்று தலையை ஆட்டினாள்..

சொன்னபடி அவளும் முன்னால் சென்று ஆட்டோவில் ஏறியவள் கரிகாலனின் வீடு அமைந்து இருக்கும் வீதியை மட்டும் கூற, அந்த ஆட்டோ புறப்பட்டது. கரிகாலனோ ஷேர்ட்டை இன் பண்ணிக் கொண்டே நடந்து சென்றவன் கலைந்து இருந்த தலையினையும் கையினால் நேர்த்தி ஆக்கியபடி செல்ல, அவனைப் பின் தொடர்ந்தவன் கண்ணில் கரிகாலன் பட்டான். உடனே அவன் "ஓஹ் இங்க இருக்கானா?" என்றபடி அவனை தொடர ஆரம்பிக்க அவனும் ஆட்டோவில் ஏறியபடி தன்னை பின் தொடருபவனை பார்க்க அவனோ "ஐயோ பார்த்துட்டானே' என்றபடி அந்த இடத்தில இருந்த கடையை நோக்கி திரும்பியவன் "இந்த சீப்பு எவ்வளவு?" என்று கேட்க , கரிகாலனும் கேலி புன்னகையுடன் அவனைப் பார்த்து விட்டு "நாம போகலாம்" என்று ஆட்டோ காரனிடம் சொல்ல அவனும் ஆட்டோவை கிளப்பினான்.

மதுபாலாவின் ஆளும் அவன் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை பின் தொடர அந்த ஆட்டோ ஒரே பாதையில் மீண்டும் மீண்டும் சுற்றி வர பின் தொடர்ந்தவனோ "சுத்தி சுத்தி ஒரே ரோட்டுக்கு வர்றானே? இவன் என்ன லூசா? ஒரு இடத்துல கூட இறங்கவில்லை" என்று யோசித்தபடி இருக்க, கரிகாலனுக்கு வீட்டுக்கு சென்று அடைந்த மாதவி மிஸ் கால் பண்ணி இருந்தாள். அதைக் கண்டு பெருமூச்சு விட்ட பின்னரே அவன் ஆட்டோவை வீட்டுக்கு போக சொன்னான். ஆட்டோ காரனுக்கும் ஏன் இவன் ஒரே ரோட்டை இவ்வளவு நேரம் சுத்துறான்னு சந்தேகம் வர தான் செய்தது. ஆனால் அவன் பதவியை நினைத்து பயந்தவன் ஒன்றுமே கேட்கவும் இல்லை.

வீட்டுக்கு வந்தவன் நேரே தந்தையிடம் சென்று "இப்போ எப்படிப்பா இருக்கு?" என்று கேட்க அவரும் "சும்மா இருமல் தான்பா, உன் அம்மாவும் மாதவியும் தான் ரொம்ப படுத்துறாங்க " என்று சாதாரணமாக சொல்ல அவனும் "அது தெரியும்பா, எல்லாத்தையும் பெரிசா நினைச்சுட்டு பயப்பட வேண்டியது...ஆனாலும் நீங்க உடம்பை பார்த்துக்கோங்க" என்றவன் தாயிடம் "என்ன விஷயமானாலும் என் கிட்ட சொல்லுங்க. மாதவியை வெளியே போக அனுமதிக்க வேணாம்" என்று கண்டிப்பாக சொல்லி விட்டு அறைக்குள் நுழைய அங்கு அவளோ நடந்த கலவரத்துக்கு தனக்கும் சம்பந்தம் இல்லை என்ற ரீதியில் குழந்தையுடன் குழந்தையாக மாறி விளையாடிக் கொண்டு இருந்தாள். அவனோ அதைக் கண்டு மென் சிரிப்பை சிந்தியவனுக்கு அவளிடம் கடுமையாக பேசவும் வாய் வரவில்லை..அவர்களை பார்த்து விட்டு குளியலறைக்குள் நுழைந்து கொண்டான் ..அதே சமயம் மதுபாலாவை தேடி வந்த விருத்தாச்சலம் "மதுபாலா இப்போ என்ன பண்ணுறது? அந்த பொண்ணு எங்க போய் இருப்பா?" என்று கேட்டவரால் அவ்வளவு பண பலம் அதிகார பலத்தை வைத்துக் கூட மாதவியை கண்டு பிடிக்க முடியவில்லை.. உடனே மதுபாலா பெருமூச்சுடன் , பக்கத்தில் இருந்த வக்கீலிடம் " அவ சாட்சி சொல்லலைன்னா கேஸ் ஓகே தானே, ?" என்று கேட்க ஆமோதிப்பாக தலை ஆட்டிய வக்கீல் " தனிப்பட்ட பகைன்னு சொல்லி ட்ரைவர் வாக்கு மூலத்தை ஒன்னும் இல்லாம பண்ணிடலாம்... ஆனா அந்த பொண்ணு சாட்சி சொன்னா மொத்தமும் போச்சு.. இப்போ பப்லிக் இப்படியான கேஸுக்கு எல்லாம் எதிரா நிற்கிறாங்க..சோ தண்டனை கூட ரொம்ப கடுமையா தான் இருக்கும்.. " என்று சொல்ல மதுபாலாவுக்கும் எப்படி அவளை கண்டு பிடிப்பது என்று தெரியவில்லை..

யோசனையாக அமர்ந்து இருந்தவள் "கேஸ் எப்போ விசாரணைக்கு வருது?" என்று கேட்க "அடுத்த வாரமே... எப்படியும் ஆரம்ப கட்ட விசாரணை முடிந்து அந்த பொண்ண எப்படியும் அடுத்தடுத்த வாரத்துல கூப்பிடுவாங்க... அதுக்கு அந்த பொண்ணு வரலைன்னா கேஸ்ல ஈஸியா ஜெயிச்சுடலாம்.. ஆனா வந்துட்டான்னா தனஞ்சயனை யாராலயும் காப்பாத்த முடியாது.. இந்த கேஸ் மினிஸ்டருக்கு எதிராவும் பல பிரளயம் உருவாக்கும் .. அதனால அவனை நிரபராதின்னு ப்ரூப் பண்ணி ஆக வேண்டிய கட்டாயம்..அண்ட் இந்த விஷயத்துல நமக்கு சார்பா நிற்க போலீஸ் டிபார்ட்மென்ட் கண்டிப்பா பயப்படுவாங்க... ஏன்னா கரிகாலன் டைரக்ட் ஆஹ் இன்வோல்வ் ஆகிறான்னு கேள்வி பட்டேன்.. அவனை மீறி நடக்க இந்த டிபார்ட்மென்டுக்கு பயம்.. கையாலாகாத டிபார்ட்மென்ட்" என்று திட்ட கரிகாலன் புகழ் பாடியதில் மதுபாலா காதில் புகை வராதது தான் குறையாக இருந்தது. அவள் முகமோ எரிச்சலை அப்பட்டமாக காட்ட விருதாச்சலமும் நாடியை நீவியவாறு யோசித்தவருக்கு நேரடியாக கேசில் ஈடுபட அவரது அரசியல் தடையாக இருந்தது. சமீபத்தில் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட "என் பையன் தப்பு செய்ததாக நிரூபிச்சா கண்டிப்பா அவனுக்கு தண்டனை கிடைக்கணும்" என்று வீர வசனம் அல்லவா பேசி விட்டு வந்தார். அதே போல மதுபாலாவும் , தனஞ்சயனை கெஸ்ட் ஹவுசில் தனக்கு தெரியாமல் பதுக்கி வைத்து இருந்ததாக கூர்க்கா மேல் புகார் அளித்து அவனுக்கு காசை கொடுத்து உள்ளே தள்ளியவள் அந்த கேசில் இருந்து நைசாக நழுவியும் இருந்தாள்.
 
CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 9)

அடிப்பாவி மதுபாலா...! உனக்கு இருக்குடி ஆப்பு. அந்த மினிஸ்டரோட சேர்ந்து நீயும் பதவியை இழந்து நடுத்தெருவில பிச்சைக்காரி மாதிரி நிற்க தான் போற, அப்ப கரிகாலனும் மாதவியும் கார்ல வந்து உனக்கு பிச்சை கூட போடாம போகத்தான் போறாங்க.. நீ வேணா உன் ரெண்டு கண்ணால பாருடி.

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
jaisreepsk

New member

Sis really very very interesting . eagerly awaiting for the next episode
 
Top