அத்தியாயம் 8
மகாலிங்கம் வீட்டு வாசலில் ஏறி உள்ளே நுழைய போனவனை மறித்த விஷ்வா, "நீ எதுக்கு இங்க வந்த? வெளிய போ" என்று சீற அவனை கூர்மையாக பார்த்தவன் நிதானமாக, "என் திங்ஸ் எல்லாம் எடுத்து போக வந்தேன்..." என்று கூறினான்.
கெளதம் எகிறி இருந்தால் விஷ்வாவும் எகிறி இருப்பான். ஆனால் அவனின் பணிவினால் அவன் தடையை அகற்றினான். கெளதம் பணிய ஒரே காரணம் அவனின் முக்கியமான எல்லா பைல்சும் அந்த லாப்டாப்பில் இருப்பதாலேயே ஆகும்.
அவனுக்கு எதிரிகளை சிங்கமாக நின்று எதிர்க்கவும் தெரியும் குள்ள நரியாக மாறி காலை வாரவும் தெரியும்.
மாடியேறி கயலின் அறையை நோக்கிச் சென்று கதவை தட்ட, கட்டிலில் கண் மூடி படுத்தவள் எழும்பி வந்து கதவை திறந்தாள்.
அவனை பார்த்து அவள் அதிர்ந்து நிற்க, உள்ளே நுழைய போனவனை கை நீட்டி தடுத்தவள், "ப்ளீஸ் வெளிய போங்க" என்று சீறினாள்.
'இவ இம்சை வேற...' என்று மனதுக்குள் நினைத்தவன், "ப்ளீஸ் என் திங்ஸ் எடுத்துட்டு போயிருவேன் உள்ள விடு" என்றான்.
அவளோ, "முடியாது வெளிய போங்க..." என்று சீற எரிச்சலடைந்தவன், "ஏதோ இந்த அறைக்குள் நான் வந்ததே இல்ல போல பேசாம ப்ளீஸ் வழி விடு" என்றான்.
"ஒரு தரம் வந்து என் குடும்பத்தை சீரழிச்சது போதும் வெளிய போங்க" என்று கத்தியவளை வெட்டு காட்டி உள்ளே போக முயற்சி செய்தவன் அவளும் அவன் செல்லும் திசையில் நகர களைத்த படி இடுப்பில் இரு கைகளையும் வைத்து நிமிர்ந்து பார்த்து, "என்னடி வேணும் உனக்கு?" என்று கேட்டான்.
"அதே கேள்வியை தான் நானும் கேட்கிறேன் உங்களுக்கு என்ன வேணும்?" என்று மாறி கேட்க அவனோ பெருமூச்செடுத்து விட்டு, "என் திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு போன பிறகு உன் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டேன். ப்ளீஸ் என்னை எரிச்சல் படுத்தாதே வழி விடு" என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பணிவாக உரைத்தான்.
அவன் நடவடிக்கைகளும் பதிலும் அவளுக்கு சினத்தை கூட்ட, "இப்போ என்ன பிளான்ல உள்ள வர போறீங்க? ஏதும் போதை பொருளை வைத்து என்னையும் அர்ரெஸ்ட் பண்ண போறீங்களா?" என்று கேட்க,
"சப்பா..." என்று பெரு மூச்சு விட்டவன், "அந்தளவுக்கு நீ வஒர்த் இல்ல... கொஞ்சம் தள்ளு ப்ளீஸ்" என்று கெஞ்சியவனிடம், "என் பிணத்தை தாண்டி தான் உள்ள போக முடியும்" என்று கூற, 'இவ என்ன சினிமா டயலாக் எல்லாம் பேசுறா' என்று மனதுக்குள் யோசித்தவன், "அதுக்காக உன்ன கொல்ல முடியுமா?" என்று கேட்டான்.
"அதுவும் செய்வீங்க யாருக்கு தெரியும்?" என்று கூறியவள் பேச்சில் கோபம் மட்டுமே இருந்தது.
அவளை எப்படி வழிக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் தவித்தவன், "இப்போ கடைசியா என்ன சொல்ல வர்ற?" என்றவனிடம் அகங்காரமாக அவனை வெறித்து பார்த்தபடி, "என்ன தாண்டி உள்ள போக முடியாது." என்றாள்.
"உன்னை தள்ளி விட்டு போறதுக்கு எனக்கு ஒரு நிமிஷம் போதும் ஆனா உன்ன திருப்பி காயப்படுத்த கூடாதுனு நினைக்கிறேன். சோ ப்ளீஸ் தள்ளு" என்றவனை சட்டை செய்யாது கைகள் இரண்டையும் நீட்டி கதவை அடைத்தபடி நின்றாள்.
அவள் நின்ற தோரணையை மேலிருந்து கீழ் பார்த்தவன் கண்கள் தன்னையும் மீறி அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தன.
பைஜாமா போட்டு இறுக்கமான ஸ்லீவ்லெஸ் ட்ஷிர்ட் போட்டு மெல்லிய அளவில் வெண்ணிற இடை தெரிய நின்றவளை பார்த்து அவன் ஒரு கணம் ஆடி தான் போனான். கோபத்தில் சிவந்த அவள் நாசியும் இயற்கையிலேயே சிவப்பான அவள் அதரங்களும் அவனை போதை கொள்ள செய்தது.
அவளறையிலேயே அவளுடன் இருந்த போதும் அவளை அரைகுறையாக பார்த்த போதும் அடிக்கடி வந்த உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவனால் இப்போது கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினான். பழைய நினைவுகள் வேற வந்து அவனை ஆட்டி படைத்தது.
"கடைசியா சொல்றேன் கயல் இப்போ நீ விலகலனா நானே உன்னை விலக வைப்பேன் அதுக்கு பிறகு நீ தான் வருத்தப்படுவ" என்றவன் மனதுக்குள் அவள் விலக கூடாது என்று மானசீகமாக கடவுளை வேண்டினான். அவன் நினைத்தபடி அவளும் விலகாமல் நிற்க…
அவளை எப்படியாவது முத்தமிட வேண்டும் என்று துடித்த உணர்ச்சிகளுக்கு வடிகாலாக அவள் செயலை சாக்காக பயன்படுத்தியவன் அடுத்த நொடியே அவளை கண நேரத்தில் நெருங்கி அவள் வெற்றிடையில் ஒரு கை வைத்து அடுத்த கையால் அவள் முகத்தை பிடித்தவன் குனிந்து அவள் இதழ்களை அழுத்தமாக கவ்விக் கொண்டான்.
அவனின் இந்த செயலால் அதிர்ந்தவள் கைகளை கதவு நிலையிலிருந்து எடுத்து அவனை மார்பில் வைத்து அவனை தள்ளி விட முனைந்தாலும் அவனின் இறுகிய அணைப்பில் அவளால் ஒரு இன்ச் கூட நகர முடியவில்லை.
அப்படியே அவளை தன் பக்கமும் அவள் அறைப்பக்கமும் திரும்பியபடி அவளை விட்டவன் மேலும் அவளை இறுக்கி முத்தமிட்டு அவளுள் மூழ்க துடித்த தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் விறு விறு வென சென்று அலுமாரியை திறந்து தனது பையை எடுத்தான்.
அவன் பையை கூட அவள் இதுவரை திறந்து பார்த்ததில்லை. எவ்வளவு ஏமாளியாக இருந்து இருக்கிறேன் என்று அப்போது தன்னை தானே நொந்துக் கொண்டாள்.
அவன் முத்தமிட்ட அதிர்ச்சியில் வாயை பர பரவென துடைத்தவள் கண்களில் கண்ணீர் வழிய அவன் அருகில் சென்றவள் அவனின் பையை கோபத்தில் பறித்தாள்.
அவளை கை கட்டி கூர்ந்து பார்த்தவன், "நீ இப்போ தராவிட்டால் மறுபடி கிஸ் பண்ணுவேன் பரவாயில்லையா?" என்று அவள் இதழ்களை தாப பார்வை பார்த்தவாறு கேட்க அதிர்ந்தபடி அவனிடம் பையை திரும்பி அளித்தாள்.
கன்ன குழி தெரிய முத்து பற்களை காட்டி சிரித்தபடி பையை வாங்கியவன் அதற்குள் இருக்கும் பொருட்களை சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டவனின் செயலை ஸ்தம்பித்து நின்று பார்க்க மட்டுமே அப்போது அவளால் முடிந்தது.
வாசலுக்குச் சென்றவன் திரும்பி பார்த்து, "எனக்கு கடன் வைத்து பழக்கமில்லை அது கெடுதல் ஆனாலும் சரி முத்தம் ஆனாலும் சரி" என்றவன் மேலும், "வாயை துடைக்கும் அளவுக்கு முத்தம் ஒன்றும் உனக்கு புது விஷயமில்லையே." என்று கேலி குரலில் அடக்கப்பட்ட சிரிப்புடன் சொன்னதும் சற்று அதிர்ந்தவள் வெட்கத்தாலும் அவமானத்தாலும் கன்னம் சிவந்து தலையை குனிந்துக் கொண்டாள்.
செல்ல எத்தனித்தவன் மீண்டும் திரும்பி அவளை நோக்கி சொடக்கிட சங்கடத்துடன் நிமிர்ந்து பார்த்தவளை கூர்ந்து பார்த்தபடி, "நீ எனக்கு முத்தமிட்டது மட்டுமல்ல... நான் தூங்கி கொண்டிருப்பதாக நினைத்து என் முன்னால் உடை மாற்றியதும் எனக்கு தெரியும்" என்று கூறியவன் கண்கள் அவள் உடலை மேய்ந்தபடி சில அந்தரங்க விஷயங்களை பச்சையாக சொல்ல சங்கடத்துடன் அதிர்ந்தவள் வாயில் கை வைத்து சுவரில் சாய்ந்து நின்றாள்.
கடமைக்காக திருமணம் பண்ணியவன் மன நலம் குன்றிய போல் இருந்த தன்னை அவள் கவனித்ததில் அவள் மேல் மிகுந்த மரியாதையும் காதலும் கொண்டிருந்தான். ஆனால் அவன் காதல் அவனின் பல சாதனைகளுக்கு தடையாக இருப்பதாக எண்ணியவன் அதனை மறைக்க நினைத்தாலும் அவனை மீறி இப்படியான சில சந்தர்ப்பங்களில் வெளி வந்தது.
அவன் சென்றதும் சுவற்றில் சாய்ந்து கண் மூடி நின்றவளுக்கு பழைய நினைவுகள் சுழல தொடங்கின. ஜீப்பில் ஏறியவனுக்கும் அதே நினைவுகள் ஆட்கொள்ள தொடங்கின.
*************************************************************************************
பெண் பார்க்க வந்த அன்று கயலை அறைக்குள் அழைத்துச் சென்ற மகாலிங்கம் கதவை சாத்தி விட்டு சடுதியாக மகள் என்றும் பாராமல் அவள் கால்களில் சாஷ்டாங்கமாக விழுந்து விட்டார்.
"ஐயோ அப்பா" என்று பதறி விலகியவள் கீழே உக்கார்ந்து, "என்னப்பா ஆச்சு???" என்று கேட்க... எழுந்து அவள் பக்கத்தில் உட்காந்தவருக்கு கண்ணீர் மட்டும் வழிந்தது. "சொல்லுங்கப்பா என்னாச்சு?" என்று உலுக்க...
"என்னை ஒன்னும் கேட்காதம்மா... நீ இந்த கல்யாணம் செய்யாவிட்டால் நான் சாகிறது தான் வழி" என்றவரை அதிர்ச்சியாக பார்த்தவள் கண்களில் நீர் ததும்ப, "அப்பா அவருக்கு மன நிலை சரி இல்லப்பா... எனக்கும் எத்தனை ஆசை கனவு இருக்கும். ப்ளீஸ் என்ன புரிஞ்சிக்கோங்க." என்று கெஞ்சினாள்.
"சரிம்மா... ஆனா என்னை நீ உயிரோட பார்க்கிற நாள் இன்று தான் கடைசி" என்று தொய்ந்து சொல்லி விட்டு எழும்ப போனவரை கையை பிடித்து இருக்க வைத்தவள், "ப்ளீஸ்பா... என்னாச்சுனு மட்டும் சொல்லுங்க நான் அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்" கண்ணீர் வழிய கூறியதும் அவர் கண்கள் பளபளத்தது.
"என்கிட்ட ஒண்ணும் கேக்காதம்மா... நான் வாழ்வா சாவா என்ற நிலையில இருக்கிறேன். என் மகளை பாழும் கிணத்துல தள்ளி விட எனக்கு மட்டும் ஆசையா?" என்று வருத்தம் தொனித்த குரலில் கை கூப்பி வணங்கியவர் உடல் அழுததால் குலுங்கியது.
"அப்பா கடைசி ரீசன் ஆவது சொல்லுங்கப்பா." என்று கடைசியாக கேட்க, "வேணாம்மா... நான் சாகிறேன்" என்று எழும்பி வாசலை நோக்கிச் சென்றவரை தாண்டி ஓடியவள் அவரை நிறுத்தி, "உங்களுக்காக இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன்" என்றாள் கண்களில் கண்ணீர் வழிய, "அப்போ நீயே வெளிய வந்து சொல்லும்மா" என்றபடி இருவரும் வெளி வந்தனர்.
அவளை கல்யாணம் பண்ணியதும் அவளுடன் ஒரே அறையில் தங்க தொடங்கிய கெளதம் கிருஷ்ணா அவளை விட்டு விலகியே இருந்தான்.
அவனை மேல படுக்கவைத்து அவள் கீழே வெறும் நிலத்தில் படுப்பதை கையாளாக தனத்துடன் பார்த்து கவலை பட்டிருக்கிறான்.
அவள் சாப்பாடு ஊட்டும் நேரம் தவிர அவள் தன்னை தீண்ட அவன் அனுமதிப்பதில்லை. எங்கே தனது கட்டுடலை வைத்து தன்னை கண்டு பிடித்து விடுவாளோ என்ற பயத்திலாகும்.
ஒரு நாள் புது உடையை வாங்கி வந்தவள் எப்போதும் தொய்வாக உடை அணிந்திருக்கும் அவன் உடையை அவள் கழட்ட அருகில் வந்த போது அவள் கீழே விழுமளவுக்கு வேகமாக தள்ளி விட்டுச் சென்றிருந்தான்.
அதன் பிறகு அவனை உடை விஷயத்தில் அவள் கட்டாயப்படுத்தியது கிடையாது. அவள் மேல் அவனுக்கு சில சமயம் தாப தீ கொழுந்து விட்டெரியும் அதை அணைக்க தெரியாமல் தடுமாறியதும் உண்டு.
கூடிய நேரம் தூக்கத்திலேயே செலவழித்து விடுவான். அவள் வேலைக்குச் சென்றதும் தனது உளவு வேலையை தொடங்கி விடுவான். ஒரு நாள் விரைவாக எழுந்தவன் கீழே படுத்திருந்த கயல் விழியை பார்க்க அவளின் இரவு டிஷர்ட் மேலெழும்பி அவள் வெண்ணிற வயிறு அப்பட்டமாக தெரிய அவன் உணர்வுகள் உடைப்பெடுக்க தொடங்கியது. அவளை நெருங்கி வந்தவன் கஷ்டப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியபடி குளியலறைக்குள் புகுந்துக் கொண்டான்.
இதே போல் ஒரு நாள் குளித்து முடித்தவள் அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான் என்ற தைரியத்தில் டவலை சுற்றிக் கொண்டு குளியலறையில் இருந்து வந்திருந்தாள். அவன் விழித்திருப்பதை அறியாமல் உடைமாற்ற தொடங்க, கண்ணை மெதுவாக திறந்து பார்த்தவனுக்கு அவள் நின்ற நிலை போதை கொள்ள செய்தது.
'என்னை படுத்துறடி' என்று மனதுக்குள் முனகியவன் உணர்வுகளை அடக்கவும் அவளை மீண்டும் மீண்டும் அதே நிலையில் பார்க்க தூண்டிய மனதை அடக்கவும் குப்பற படுத்துக் கொண்டான்.
இதேபோல் அவன் வீட்டை விட்டுச் சென்ற கடைசி நாள் கயல் எழும்பிய போது தூங்கிக் கொண்டிருந்த கௌதமை நோக்கிச் சென்றவள், அவன் முகத்தை பார்த்ததும் அவன் மேல் உள்ள அன்பால் குனிந்து வேறெந்த பாகமும் அவனை தொடாதபடி நின்று அவன் உணராதபடி அவன் இதழில் ஒரு சிறிய முத்தத்தை பதித்தாள்.
தூங்கிய போல நடித்தவனுக்கு அதிர்ச்சியில் உடல் விறைத்தது. அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களை சுவைக்க எழுந்த தாபத்தை அடக்கியவன் முனகியபடி மற்றைய பக்கம் திரும்ப படுத்துக் கொண்டான். அவளோ தூக்கத்தில் முனகுகிறான் என்று நினைத்து சிரித்தபடியே வெளியேறி இருந்தாள்.
அனைத்தையும் நினைத்தவளுக்கு தான் வைத்த அன்பு பொய்த்து போனதை நினைத்து கண்ணீர் மட்டுமே அப்போது வடிக்க முடிந்தது. அவளால் இந்த துரோகத்தை கொஞ்சம் கூட ஜீரணிக்க முடியவில்லை.
அதே சமயம் வீட்டுக்கு வந்த கெளதம் முடிக்க வேண்டிய வேலைகள் அனைத்தையும் அன்றே முடித்தான். சாணக்கியனை பார்க்க யாரையும் கெளதம் அனுமதிக்கவில்லை.
அடுத்த நாள் விடிந்ததும் மகாலிங்கம் வீட்டுக்கு தன் காரை தானே ஓட்டியபடி வந்த சாணக்கியன் தளர்ந்த நடையுடன் உள்ளே நுழைந்தான்.
ஹாலுக்குள் இருந்தவர்கள் அனைவரும் கோர்ட்டுக்குச் செல்லாமல் நேரடியாக வீட்டுக்கு வந்தவனை பார்த்து இன்பமாக அதிர்ந்தனர்.
அவனை அணைக்க போனவர்களை பார்வையாலேயே எட்ட நிறுத்தியவன் தன்னறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டான்.இப்படி அவன் தளர்ந்து முதல் முறை பார்த்த அனைவரும் விக்கித்து நின்றனர்.