Marlimalkhan
Member
Super ma
wow superb I can't resist to read the next episode.hats off sisஅத்தியாயம் 8
யாருக்கும் தெரியாமல் நடந்த அவர்கள் திருமணம் கரிகாலன் கேட்டுக் கொண்டதற்கு அமைய ரகசியமாகவே வைக்கப்பட்டது. அவனோ "இந்த கல்யாணம் பற்றி சொல்ல வேண்டிய சமயம் நான் சொல்லுவேன்" என்று உரைக்க, அவன் மீது நம்பிக்கை உள்ள எவரும் அதை பற்றி தூண்டி துருவவில்லை. அவளுக்கு பிரத்தியேக பாதுகாப்பை யாருக்கும் தெரியாமல் தனது வீட்டில் ஏற்படுத்திக் கொண்டவன் தனஜயனை தேடும் பணியில் தீயாய் இறங்கி இருந்தான்.
திருமணம் முடிந்து தாய் தந்தையிடம் விடை பெற்றவளுக்கு இன்னொரு தாய் தந்தையாக அமைந்து இருந்தார்கள் கரிகாலனின் தாயும் தந்தையும்.. வீட்டுக்கு வந்தவளை ஆரத்தி எடுத்து வரவேற்ற கரிகாலனின் தாயினதும் தந்தையினதும் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியவள் சாமி அறையில் விளக்கை ஏற்றி விட்டு வந்தாள். என்ன தான் பெயருக்கு நடந்த திருமணம் என்றாலும் அவர்கள் சம்பிரதாயத்தை செய்து கொண்டு தான் இருந்தார்கள்.
கரிகாலனுக்கோ அவளுடன் நிறைய பேச வேண்டி இருக்க, அவளை கண்களால் அழைத்தவன் குழந்தையையும் தூக்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் முன்னே அவள் தயங்கியபடி நிற்க அவனோ பெருமூச்சுடன் "மாதவி, இது உன் வீடு, ஜஸ்ட் ரிலாக்ஸ் ஆஹ் இரு" என்றவன் அவளை அமர சொல்லி இருக்கையையும் காட்டினான். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் "எனக்கு என்ன பண்றது ?எப்படி ரியாக்ட் பண்றது? இந்த கல்யாணம் சரியா தப்பா? ஊர் என்ன பேசும்? எதுவுமே தெரில சார்" என்று மனதில் உள்ள சங்கடங்களை அவனிடம் கொட்ட அவனோ அவன் மார்பில் தூங்கிக் கொண்டு இருந்த குழந்தையாய் தொட்டிலில் படுக்க வைத்தவன் "ஊர் பேசுறத விடும்மா, அண்ட் கல்யாணம் பற்றி முடிவெடுத்தாச்சு. சோ நடந்தத பத்தி பேசி ஒன்னும் ஆக போறது இல்ல. நீ உன் படிப்புல மட்டும் போகஸ் பண்ணு , மீதி எல்லாம் நான் பார்த்துகிறேன்.. " என்றவன் பெருமூச்சுடன் "சரி அத விடு, அம்மா கூட தூங்குறியா இல்ல, இங்க உனக்கு வசதியா? உன் சௌகரிகம் தான் எனக்கு முக்கியம்" என்று சொல்ல அவளோ "நான் இங்கேயே ஒரு ஓரமா படுத்துகிறேன் சார்" என்றாள். அவனோ அவளை சலிப்பாக தலை ஆட்டியபடி பார்த்தவன் "வாட்? ஓரமா படுத்துக்க போறியா? பெரிய கட்டில் தான் தாராளமா படுத்துக்கோ, நான் இதோட சேர்த்து ஒரு ரூம் இருக்கு, அங்க படுத்துகிறேன்.. பகலிலே நான் இருக்க மாட்டேன். அம்மா அப்பா உன்னை நல்ல படியா பார்த்துப்பாங்க, ஆதித்தும் உன் கூட விளையாடுவான்... காலேஜ் தொடங்கும் வரைக்கும் கொஞ்சம் போர் ஆஹ் இருக்கும் தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. கேஸ் முடியும் மட்டும் வீட்டுக்குள்ள தான் இருந்தாக வேண்டிய கட்டாயம்.. டி வி இருக்கு வேணுங்கிற நேரம் பார்த்துக்கலாம்" என்று சொல்ல அவளோ மௌனம் காத்தாளே ஒழிய வாயை திறக்கவில்லை.
அவனோ "ஊப் " என்று பெருமூச்சை விட்டவன் "இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்? பேசுனா தானே உன் மனசில என்ன இருக்குன்னு தெரியும் " என்று சொல்ல அவனை ஏறிட்டு பார்த்தவள் "நான் வேணும்னா அந்த ரூம்ல படுத்துகிறேன்,, நீங்க இங்கேயே தூங்குங்க சார்" என்றாள். அவனோ அவளிடம் வாக்கு வாதம் பண்ண விரும்பாமல் "ஓகே, உன் விருப்பம்" என்று சொல்ல, அவளோ "எனக்கு பேச வேற ஒன்னும் இல்ல சார்" என்றாள். அவனும் "தட்ஸ் குட், ஏதும்னா என் கிட்ட கேளு" என்று சொல்ல அவளும் சம்மதமாக தலை ஆட்டினாள்.
அன்று இரவு அவன் அவளுக்காக அறையுடன் சேர்ந்து இருந்த சிறிய அறையை சுத்தமாக்கி கொடுக்க உள்ளே நுழைந்தவளுக்கு இந்த புது இடம் கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. ஆனாலும் பழக வேண்டிய நிர்பந்தத்தில் தன்னை அந்த இடத்துக்கு ஏற்ற போல மாற்றிக் கொள்ள நினைத்து இருந்தாள். ஆழ்ந்த தூக்கத்தில் அவள் இருந்த போது ஆதித் பெரிதாக அழும் சத்தம் கேட்க பதறி விழித்தவள் கதவை திறந்து கொண்டு வெளியே வர, அங்கு கரிகாலனோ குழந்தையை தூக்காமல் பால் கரைத்துக் கொண்டு இருந்தான். ஓடி வந்து குழந்தையை தூக்கியவள் "என்னை எழுப்பி இருக்கலாமே சார்" என்று சொல்ல, அவனோ "இவ்ளோ நாளும் இரவு நேரம் அவனை நான் தனியா தானே பார்த்துக்கிட்டேன்" என்று சொன்னவன் குழந்தையை அவளிடம் இருந்து வாங்க கையை நீட்ட அவளோ "எனக்கும் பால் கொடுக்க தெரியும், முன் வீட்டு பாப்பாவை வளர்த்த அனுபவம் இருக்கு" என்றாள். அவனோ மெல்லிய புன்னகையுடன் "உனக்கெதுக்கும்மா சிரமம், நீ போய் தூங்கு, நான் பார்த்துகிறேன்" என்று சொல்ல, "அது ஒன்னும் சிரமம் இல்ல" என்றபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவள் அழுது கொண்டு இருந்த குழந்தையை மார்போடு அணைத்தபடி கையை நீட்ட அவனும் பால் பாட்டிலை அவளிடம் நீட்டினான்..
அவளும் குழந்தையை மார்போடு அணைத்து வைத்து பால் ஊட்ட, குழந்தையும் அவளின் கதகதப்பில் தூங்க, அதை பார்த்த கரிகாலன் மனம் சொல்ல முடியாத உணர்வில் தத்தளித்தது. இவ்வளவு நாளும் தாயின் அரவணைப்பு இல்லாமல் இருந்த ஆதித்துக்கு ஒரு புது உறவு கிடைத்த உணர்வு வந்தது. அவளும் குழந்தைக்கு ஏப்பம் எடுத்து விட்டு தொட்டிலில் வளர்த்தியவள் " எதுனாலும் எழுப்புங்க சார்" என்று சொல்ல அவனோ மௌனமாக அவளுக்காக தலையை மட்டும் ஆட்டினான்.
அவளும் சென்று தூங்கி விட, தனது கட்டிலில் படுத்த கரிகாலனுக்கோ அடுத்து என்ன செய்வதென்ற எண்ணமே ஓடிக் கொண்டு இருந்தது.
இதே சமயம், அடுத்த நாள் மதுபாலாவுக்கு கிடைத்த செய்தி என்னவோ மாதவியை காணவில்லை என்று தான்..அதைக் கேட்டு அவள் கண்கள் விரிய "அவ வீட்டுல யாரு இருக்கா?" என்று கேட்க வந்தவனோ "யாருமே இல்ல மேடம், அவங்க எல்லாரும் ஊரை விட்டு பொய்ட்டாங்கன்னு நினைக்கிறேன் ." என்று சொன்னான். அவளோ "ஒரு நாளுல எங்க போய் இருப்பாங்க? ஹாஸ்பிடல்ல டிஸ்சார்ஜ் ஆகி வீட்ட வரலைன்னா எங்க போய் இருப்பாங்க?" என்று கேட்டபடி யோசித்தாள். அவளுக்கு விருதாச்சலத்தின் மகன் தனஞ்சயனைக் காப்பாற்றி ஆக வேண்டிய கட்டாயம். அதுக்கு ஒன்று மாதவி உயிருடன் இருக்க கூடாது. அல்லது அவள் வாக்கு மூலம் கொடுக்க கூடாது.. அனைத்துக்கும் அவள் மதுபாலாவின் கண்காணிப்பில் இருந்தாக வேண்டும்... ஆனால் அவளையே காணவில்லை என்றால் என்ன செய்வது என்று யோசித்தவளுக்கு எதுவும் பிடிபடவில்லை.
அவர்கள் கண்டு பிடிக்காத போல அல்லவா கட்சிதமாக பிளான் போட்டு இருந்தான் கரிகாலன். வைத்தியசாலையில் இருந்து யாரும் பார்க்காத வண்ணமே அவர்கள் குடும்பத்தை அழைத்து வந்தவன் கோவிலில் தாலி கட்டி முடிய அவளது தாய் தந்தையை வேறு ஊருக்கு நம்பிக்கையானவர் வண்டியில் அனுப்பி இருந்தான்.
மாதவியோ முழுக்க முழுக்க அவன் வீட்டில் அவன் கட்டுப்பாட்டில் இருக்க, அவனை மீறியும் வாசலில் நிற்கும் காவலாளியை மீறியும் அவன் வீட்டுக்குள் யார் நுழைய முடியும்? மதுபாலாவின் ஆட்களோ மாதவியை உள்ளே இடமெல்லாம் தேடி தோற்றுப் போக, மதுபாலா தான் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பி விட்டாள். கரிகாலன் அவளை பார்க்க செல்வான் அதன் மூலம் அவள் எங்கு இருக்கிறாள் என்று அறியலாம் என்று நினைத்தவள் ரகசியமாக அவனை பின் தொடர்ந்தது மட்டும் அல்லாமல் அவன் போனை கூட ட்ரேஸ் பண்ண ஏற்பாடு பண்ணி இருந்தாள். அவனோ மாதவியினை தனது வீட்டில் தனது அறையில் அல்லவா வைத்துக் கொண்டு இருந்தான்.
இதே சமயம், கேஸ் முடியும் மட்டும் அவளை வீட்டில் வைத்து இருக்க யோசித்த கரிகாலன், தனஞ்சனை தீவிரமாக தேட போலீசாரை முடக்கி இருந்தான். இப்படியான ஒரு நாளில் தான் தனது அலுவலகத்தில் நடந்த மீட்டிங் ஒன்றுக்கு வந்து இருந்த மதுபாலா கண்ணில் அதே மீட்டிங்குக்கு வந்த கரிகாலன் பட்டான். அவளோ மீட்டிங் முடிய "கரிகாலன் உங்க கூட பேசணும், ரூமுக்கு வாங்க" என்றபடி செல்ல அவனும் பெருமூச்சுடன் அவளை பின் தொடர்ந்து இருந்தான்..
உள்ளே அமர்ந்தவள் தன் முன்னே இருந்த இருக்கையை காட்டி அமர சொல்ல அவனும் சாய்ந்து இருந்தவன் "சொல்லுங்க மேடம், ஏதும் ஆபீசியல் விஷயமா?" என்று கேட்க அவளோ அவனை அழுத்தமாக பார்த்து "மாதவி எங்க?" என்று கேட்டாள். அவனோ "யார் மாதவி " என்று புருவம் சுருக்கி கேட்க "உலக மகா நடிப்பு" என்று முணு முணுத்தவள் "அது தான் அந்த ரேப் கேஸ் மாதவி " என்றாள்.. அவனோ "ஓஹ் ? அந்த பொண்ணா? எனக்கு என்ன தெரியும்?" என்று கேட்க அவளோ "என் கோபத்தை கிளறாத கரிகாலன், அன்னைக்கு நீ தான் அந்த பொண்ண ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்க, அடுத்த நாள் இருந்து அவளை காணோம்" என்று சொல்ல அவனோ "ஆமா நான் தான் அட்மிட் பண்ணினேன். அதுக்கப்புறம் என் வேலைய பார்க்க பொய்ட்டேன்.. நான் ஒன்னும் வெட்டியா இல்லையே, " என்று சொல்ல அவளோ "உனக்கு தெரியும்னு எனக்கு நல்லா தெரியும்" என்று சொன்னாள்..அவனும் "அதெப்படி மேடம், நீங்க சொல்வீங்க? அது சரி அந்த பொண்ணு உங்களுக்கு எதுக்கு?" என்று கேட்க சற்று தடுமாறியவள் அடுத்த கணமே " சும்மா நலம் விசாரிக்க தான்" என்று சொல்ல நாடியை நீவியவாறு அவளை பார்த்தவன் "ம்ம் ரொம்ப பெரிய மனசு,, " என்று சொல்லி விட்டு எழுந்து நின்று "சாரி மேடம், எனக்கு தெரில, நீங்களே விசாரித்து பாருங்க" என்றபடி வெளியேற அவள் மனமோ "இவனுக்கு உண்மையாவே தெரில போல, அவன் அவளை மீட் பண்ணவும் இல்ல, போன்ல பேசவும் இல்ல, ஆனா இதெல்லாம் நம்புற போல இல்லையே" என்று யோசிக்க ஆரம்பித்து இருந்தாள்.
இப்படி அவர்கள் மாதவியை தேடி திரிய, போலீசாரே மும்முரமாக தனஞ்சயனை தேடி திரிந்தார்கள். ஒரு கட்டத்தில் தேடி களைத்து ஓய்ந்து போக, மதுபாலாவை சந்தித்து விட்டு வந்த கரிகாலன் அடுத்து அழைத்தது என்னவோ இன்ஸ்பெக்டருக்கு தான்.
அவரும் போனை எடுக்க " மேயர் மதுபாலாவோட கெஸ்ட் கவுஸ்ல பார்த்தீங்களா?" என்று கேட்க அவனோ "இல்ல சார் " என்று பதிலளித்தான்., உடனே கரிகாலன் "நேரே போலீஸ் போர்ஸ் உடன் அங்க போங்க, இன்னைக்கே அர்ரெஸ்ட் பண்ணிடலாம்" என்று சொன்னவன் போனை பாக்கெட்டில் போட்டு விட்டு ஒரு கேலி புன்னகையுடன் தனது ஜீப்பில் ஏறிக் கொண்டான்.
ஆம் மதுபாலா அறையில் அவன் சாதாரணமாக அமர்ந்து இருப்பது போல இருந்தாலும் அவன் கண்ணில் பட்டது என்னவோ அவள் மேசையில் வைக்கப்பட்டு இருந்த நான்கு சாப்பாட்டு பாக்கெட் மாத்திரமே,.. தனது கெஸ்ட் ஹவுசில் தங்க வைத்து இருந்தவள் அவர்களுக்கான சாப்பாட்டை அவள் தான் கொண்டு கொடுத்துக் கொண்டு இருந்தாள்..இது அனைத்தும் அவளது எம் எல் ஏ சீட்டுக்காக மட்டுமே..
அந்த நான்கு சாப்பாட்டை பார்க்க, அதில் "சிக்கன்" என்று எழுதி இருக்க, மதுபாலா கோழி சாப்பிடுவது இல்லை என்று நன்கு அறிந்த அவனுக்கு அந்த நான்கு உணவும் யாருக்காக இருக்கும் என்று தெளிவாக யூகிக்க முடிந்தது.. அவள் வீட்டில் எப்படியும் தங்க வைத்து இருக்க மாட்டாள் என்றும் அறிந்தவனுக்கு நினைவு வந்தது என்னவோ அவளது பகட்டான கெஸ்ட் ஹவுஸ் தான்..
உடனே போலீசுக்கு செல்ல, அவர்களும் அங்கே விரைய, நால்வரும் ஓட முடியாமல் போலீசாரிடம் அகப்பட்டுக் கொண்டார்கள்.