அத்தியாயம் 8
அவனை முறைத்த மருதநாயகமோ, "இங்க பாரு, உன் சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நான் சொல்றத கேளு" என்றார்...
அவரை அழுத்தமாக பார்த்தவனோ, "கல்யாணம் வரைக்கும் தான் நீங்க சொல்றத கேட்க முடியும்" என்றான்...
அவனுக்கு குறையாத அழுத்தத்துடன் அவனை பார்த்தவர், "உனக்கு ஆறு மாசம் தான் டைம்... ஆறு மாசத்துல நான் ஒன்னும் மண்டையை போட்டுட மாட்டேன்... எனக்கு நல்ல சேதி வரலைனா இப்போ மிரட்டிட்டு இருக்கிற போல மிரட்டிட்டு இருக்க மாட்டேன்... சொன்னதை செஞ்சிட்டு தான் அடுத்த வேலை" என்று சொன்னவர் சாப்பிட, அவரை முறைத்து விட்டு சாப்பாட்டு தட்டில் கையை வைத்த சர்வஜித்துக்கு சாப்பாடு இறங்க மறுத்தது...
இதே சமயம் இருவரையும் மாறி மாறி பார்த்த ஆதிரையாழுக்கு அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்று புரியவே இல்லை...
தான் கர்ப்பமாக வேண்டும் என்று மருதநாயகம் ஆசைப்படுகிறார் என்று மட்டும் அவளுக்கு புரிந்தது...
மருதநாயகம் பேசுவதும் அதிகப்படியோ என்று தான் அவளுக்கு எண்ணம் உருவானது... பெருமூச்சுடன் சாப்பிடலானாள்...
சாப்பிட்டு விட்டு வெளியேறிய சர்வஜித், வர இரவு ஆகி விட்டது...
ஆதிரையாழை அழைத்துச் செல்லும் வேலைகளை பார்க்க தொடங்கி இருந்தான்...
இல்லை என்றால் மருதநாயகத்திடம் அவன் சிக்கி சின்னா பின்னமாகி விட வேண்டும் அல்லவா?
அவன் வீட்டுக்கு வந்த போது அவள் தூங்கி இருந்தாள்.
அடுத்த நாள் அவள் எழுந்ததுமே, "இன்னைக்கு பாஸ் போர்ட் எடுக்கணும், ரெடியா இரு" என்று சொன்னவன் அவளை அழைத்துக் கொண்டே முத்துவுடன் பாஸ்போர்ட் எடுக்க காரில் புறப்பட்டு இருந்தான்...
ஆதிரையாழிடம் மௌனம்...
சர்வஜித்தோ சாதாரணமாக பேசினான்...
முத்து இருக்கும் போது அவளுக்கு திட்டவும் முடியாது... திட்டினால் மருதநாயகத்திடம் போட்டு கொடுத்து விடுவான் என்று சர்வஜித்துக்கு தெரியும்...
அதனாலேயே பொறுமையை இழுத்து பிடித்துக் கொண்டே இருந்தான் சர்வஜித்...
அவளுக்கான பாஸ்போர்ட் வேலையை முடித்து விட்டு கையுடன் பாஸ்போர்ட்டை எடுத்து வந்தவன், அடுத்த நாளே விசா வேலைக்காக கிளம்பி விட்டான்...
அவனை வீட்டில் பார்க்கவே முடியவில்லை...
இரவானதும் தான் வீட்டுக்கே வருவான்...
அவனுக்கே வீட்டுக்கு வர விருப்பம் இருக்கவில்லை... வேறு நாட்கள் என்றால் அவனை உண்டு இல்லை என்று ஆக்கி இருப்பார் மருதநாயகம்...
விசா வேலை என்று கூறி தப்பித்து விடுவான்...
இப்படியே அனைத்தும் கையில் வந்து விசாவும் வர, ஆதிரையாழுக்கு விமான டிக்கெட் போட்டு இருந்தான்...
இன்னும் ஊருக்குச் செல்ல ஒரு வாரம் இருந்தது...
அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த நேரம், "என்னடா டிக்கெட் போட்டியா?" என்று கேட்டார் மருதநாயகம்...
"ம்ம்" என்றான் அவன்...
"ஃபெர்ஸ்ட் க்ளாஸ் தானே?" என்று அவர் கேட்க, "ஃபெர்ஸ்ட் க்ளாஸ் அவைலபில் இல்லை... எக்கனாமி தான் போட்டு இருக்கேன்" என்றான்...
"ரெண்டு பேரும் எக்கனாமிலையா போக போறீங்க?" என்று கேட்க, அவனோ, "நான் ஃபெர்ஸ்ட் க்ளாஸ் டிக்கெட் வரும் போதே போட்டுட்டேன்... அவ தான் எக்கனாமி" என்று சொன்னதுமே, மருதநாயகத்தின் விழிகள் சிவக்க, "அடிங், போறதுன்னா ரெண்டு பேரும் எக்கனாமில போகணும்" என்றார்...
அவனோ, "எக்கனாமில சீட் ஒன்னு தான் இருக்கு" என்று பொய்யை கூறி சமாளிக்க முற்பட, "முத்து என் ஃபோனை எடுத்து வா, நான் செக் பண்ணுறேன்" என்றவரோ தேடி பார்த்து விட்டு, "பொய் பொய்யா சொல்லிட்டு இருக்க, எக்கனாமில எவ்ளோ டிக்கெட் இருக்கு? ரெண்டு பேரும் ஒண்ணா தான் போறீங்க..." என்று சொல்லிக் கொண்டே அவரே அன்று இரவு டிக்கெட்டை போட்டார்...
சர்வஜித்துக்கு எரிச்சலாக இருந்தது...
"நான் எக்கனாமிலையா போகணும்" என்று திரும்ப கடுப்பாக கேட்டான்...
"ஆமாடா போய் தான் ஆகணும்" என்றார் அவர்...
அவன் மனமோ, 'இதுக்கெல்லாம் சேர்த்து அவளை அங்க வச்சு செய்யுறேன்' என்று கறுவிக் கொண்டது...
அடுத்த ஒரு வாரம் சர்வஜித்துக்கு பெரிய தலைவலி தான்...
தோட்டத்தில் தான் மருதநாயகம் சுற்றி திரிந்துக் கொண்டு இருந்தார்...
சர்வஜித்தோ மருதநாயகம் கட்டளைக்கு ஏற்ப ஒன்றுமே செய்யாமல் அங்கே இருந்த மணல் குவியல் மேல் வேஷ்டி சட்டையுடன் அமர்ந்து இருந்தான்...
சற்று தள்ளி இருந்த மாமரத்தினை சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டே, நின்று இருந்தாள் ஆதிரையாழ்...
அவளுக்கோ மாமரத்தில் இருந்த மாங்காய் மீது கண் செல்ல, எட்டி எட்டி அதனை பறிக்க பார்த்தாள் முடியவே இல்லை...
அந்த வழியால் வந்த மருதநாயகமோ, "என்னம்மா மாங்காய் வேணுமா?" என்று கேட்க, அவளோ, "ஆமா தாத்தா, இங்க தடி ஏதாவது கிடைக்குதானு பார்க்கிறேன்" என்று சுற்றும் முற்றும் தேட, "நீ இரு யாழ்" என்று சொன்னவரோ, "டேய் சர்வா" என்று அழைக்க, சிவனே என்று இருந்த சர்வஜித்தும் எழுந்து வந்தவன், "என்ன?" என்று கேட்டான்...
"யாழுக்கு மாங்காய் வேணுமாம் பறிச்சு கொடு" என்றார்...
அவனோ மாங்காய் இருக்கும் இடத்தை அண்ணார்ந்து பார்த்தவன், "அவ்ளோ தூரத்துல இருக்கு" என்றவனோ, தடியை தேட, "தடி எல்லாம் வேணாம், அவளை தூக்கு, அவளே பறிச்சுப்பா" என்றார் மருதநாயகம்...
"எத? நான் தூக்கணுமா?" என்று சர்வஜித் கேட்க, "உயில் உயில்" என்று சொல்லிக் கொண்டே அவர் நடக்க, "நீங்க தாத்தாவா மாமாவானு சந்தேகமா இருக்கு" என்று சத்தமாக சொன்னான் அவன்...
"என்ன வேணும்னாலும் நினைச்சுக்கோ" என்று சொல்லிக் கொண்டே அங்கே இருந்து அவர் நகர்ந்தவர், அங்கே வேலை செய்பவர்களிடம், "சின்னஞ்சிறுசுங்க அப்படி இப்படி இருப்பாங்க, நீங்க மத்த பக்கம் போய் வேலையை பாருங்க" என்று சொல்லிக் கொண்டே நடக்க, "பெருசுக்கு ஏதோ ஆயிடுச்சு" என்று முணு முணுத்த சர்வஜித்தோ, "இங்க வா தூக்குறேன், பறிச்சுக்கோ" என்றான் சாதாரணமாக...
அவளோ அவனை நோக்கி தயங்கி தயங்கி வந்தவள், "கீழே போட்டுட மாட்டீங்களே" என்று கேட்க, "ஒரு ஐம்பது கிலோ இருப்பியா? நான் நூறுக்கு மேலயே தூக்குவேன்... அப்படி எல்லாம் போட மாட்டேன்" என்று சொல்லிக் கொண்டே தனக்கு முன்னே வந்தவளது தொடைகளை சேர்த்து இரு கைகளாலும் அணைத்தபடி பிடித்து தூக்கினான்...
அவன் பழு தூக்குவது போல எதார்த்தமாக தான் தூக்கினான்... அவளுக்கு தான் கூச்சமாக இருந்தது... எப்போது பறித்து முடிப்போம் என்று இருந்தது...
அவளோ கையை எட்டி எட்டி பார்த்த போதிலும் மாங்காய் எட்டவில்லை...
"ஐயோ எட்டலையே" என்றாள் அவள்...
"தொடையை தானே பிடிச்சு இருக்கேன், இதுக்கு மேல எங்க பிடிக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே, இன்னும் தூக்க முயல, அவளோ தனது காலை அவன் இடையில் வைத்து விட்டாள்.
அவனுக்கு கடுப்பாக இருந்தாலும் வேறு வழி இல்லை... அடக்கிக் கொண்டான்...
அவளும் மாங்காய்களை பறித்த கணத்தில், அவன் இடையில் அழுந்த பதிந்து இருந்த தனது விரல்களுக்கு அழுத்தத்தை கொடுக்க, அவன் இடையில் இருந்த வேஷ்டியோ அவிழ ஆரம்பித்தது...
அவனுக்கோ தூக்கி வாரிப் போட்டது... அவளுக்கு அது தெரியவே இல்லை...
"ஏய் வேஷ்டி" என்று அவன் கத்த முதலே, அது கீழே விழ முயல, தூக்கி இருந்தவளை ஒற்றைக்கையால் வேகமாக இறக்கிக் கொண்டே அடுத்த கையால் வேஷ்டியை பிடிக்க முயல, அவன் இறக்கி விட்டதில் சமநிலை இன்றி விழ போனவளும் பிடித்தது என்னவோ அவன் வேஷ்டியை தான்...
விளைவு, அவன் வேஷ்டியை இழுத்துக் கொண்டே நிலத்தில் தொபுக்கடீர் என்று அவள் விழுந்து விட, அவளிடம் இருந்து வேஷ்டியை பறித்து எடுத்தவனோ,
"அன்னைக்கு வெறிச்சு வெறிச்சு பார்க்கும் போதே தெரியும் உனக்கு என்ன ஐடியான்னு, நல்ல வேளை பாக்ஸர் போட்டு இருந்தேன், என் வேஷ்டியை அவிழ்க்கிறது உன்னோட எத்தனை நாள் ப்ளான்?" என்று கேட்டுக் கொண்டே வேஷ்டியை கட்ட, அவளோ அப்படியே அவனை வெறித்துப் பார்த்தபடி படுத்து இருந்தாள்.
அவன் வேஷ்டியை கட்டி விட்டு பார்த்த போதும் அவள் அப்படியே இருக்க, "அது தான் வேஷ்டியை கட்டிட்டேனே, இதுக்கு மேல இங்க பார்க்க என்ன இருக்கு?" என்று அவன் தன்னை கையால் காட்டி கேட்க,
"ஐயோ நான் அத ஒன்னும் பார்க்கல" என்று சொல்லிக் கொண்டே, அவசரமாக எழுந்துக் கொண்டவளுக்கு அவனை பார்க்கவே சங்கடமாக இருந்தது...
வேகமாக ஓடி வீட்டை நோக்கி அவள் செல்ல, அவள் முதுகை வெறித்துப் பார்த்து விட்டு, அவள் கையில் இருந்து சிதறிய மாங்காய்களை எடுத்துக் கொண்டே, அவனும் வீட்டை நோக்கி நடந்தான்...