அத்தியாயம் 6
சில நாட்கள் கழித்து , நீண்ட சிகிச்சையின் பின்னர் தூக்கத்தில் இருந்து கண் விழித்து இருந்தாள் மாதவி. கண்களை திறந்தவளால் வெளிச்சத்தை பார்க்க முடியாமல் கூச்சமாக இருக்க, கண்களை இறுக மூடியவள் மனக் கண்ணில் தெரிந்தது என்னவோ அவளை கற்பழித்த அந்த காம கொடூரர்களின் முகம் மட்டுமே. நிதானம் இன்றி இருந்தவளுக்கு அவர்கள் முகத்தை கண்டதுமே பயம் வந்து கவ்விக் கொள்ள "என்னை விட்டுடுங்க, என்னை விட்டுடுங்க, " என்று சத்தமாக அலறினாள் அந்த சின்னப் பெண். அவள் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த தாதியரும் வைத்தியரும் " மாதவி மாதவி" என்று உசுப்ப, கண்களை திறந்தவளுக்கு தான் எங்கே இருக்கிறோம் என்ன நடக்கிறது புரியாமல் இருக்க , "என்னை விடுங்க," என்று கத்தியவளை கண்ணீருடன் இறுக அணைத்துக் கொண்டார் அவள் தாய்... அவளோ தாயின் அணைப்பில் நிதானத்துக்கு வந்தவள் அவர் வயிற்றைக் கட்டிப் பிடித்து கதறி அழ ஆரம்பித்தாள். உடல் வலியை மிஞ்சிய மன வலி அது.. பூவை மொட்டிலேயே கருக்கி விட்டால் பூக்க முடியாமல் அந்த மொட்டு தவிக்கும் தவிப்பு அது..
"என்ன ஏன்மா காப்பாத்துனீங்க?" என்று அழுதபடி கேட்டவளை இறுகி அணைத்த அந்த தாயால் சேர்ந்து அழ மட்டுமே முடிந்தது. அவள் தந்தைக்கோ உயிரோடு மரித்து விட்ட உணர்வு.. எந்த தந்தைக்கும் வரக் கூடாத நிலைமை அது.. பத்தொன்பது வயதானாலும் அவள் அவருக்கு குழந்தை தான்... தன் மகளின் இழி நிலையை பார்க்க பார்க்க இதயம் வலிப்பது போன்ற உணர்வு.. அடுத்த கணமே வெளியே வந்தவர் அங்கு அமர்ந்து "என் பொண்ணு என்ன பாவம் செஞ்சா கடவுளே" என்று கேட்டு கேட்டு தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்து விட்டார்.
அவள் நிலையை உணர்ந்த வைத்தியரும் அடுத்த கணமே அவளுக்கு கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி இருக்க, அவள் மன நிலையை சீராக்க அந்த பெண்ணும் அங்கே வருகை தந்து இருந்தாள். ஒரு பெண்ணின் அனுமதி இன்றி அவளை புணர்ந்து உடலாலும் மனதாலும் காயப்படுத்தி கசக்கி எரியும் மன நிலை பாதிக்கப்பட்ட அரக்கர்கள் மத்தியில் ஏன் பிறந்தோம் என்று அவள் மனம் கதற ஆரம்பித்தது... நண்பி வீட்டில் இருந்து திரும்பி வரும் போது காரில் இழுத்து ஏற்றியது தொடக்கம் மாறி மாறி அவளை புணர்ந்து விட்டு வரும் வழியிலேயே காரில் இருந்து வாய்க்காலில் தூக்கி போட்டது வரை அவளுக்கு நினைவு வந்து போனது. கொடூரமான அந்த நினைவுகள் அழிந்து விடாதா என்று அவள் மனம் பதற ஆரம்பிக்க, அவளுக்கோ செத்து விடலாமா என்றே தோன்றிக் கொண்டு இருந்தது.
பெண் மனோ தத்துவ நிபுணரும் அவள் அருகே உட்கார்ந்து மெது மெதுவாக அவளுக்கு அறிவுரைகள், வாழ்வின் நிதர்சனங்கள் என போதிக்க ஆரம்பித்தாள்.. அவளுக்கு அதை கிரகிக்க கூடியதாக இருந்தாலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க கூடியதாக இருக்கவில்லை. அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தவளைப் பார்க்க அடுத்த கணமே வந்து சேர்ந்தான் கரிகாலன். அவள் விழித்த செய்தி அவனையே அடைந்து இருக்க, உடனே புறப்பட்டு வந்து விட்டான்.
மனோ தத்துவ நிபுணர் செல்லும் வரை வெளியே காத்து நின்றவன் , அவள் தந்தைக்கு ஆறுதல் சொல்லி விட்டு, சிறிது நேரத்தில் உள்ளே நுழைய அங்கு அவள் அம்மாவும் அவளும் மட்டுமே அமர்ந்து இருந்தார்கள். அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன் அவளை ஆழ்ந்து பார்த்தான். அவளோ அவனைப் பார்க்க முடியாமல் குனிந்து இருக்க "நீ ஏன்மா குனிஞ்சிட்டு இருக்கிற? உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவங்க முன்னாடி தலை நிமிர்ந்து வாழணும் , கற்பு மனசு சம்பந்தப்பட்டது தான் மாதவி... "என்று சொல்ல அவனை கன்றிச் சிவந்த கண்களுடன் ஏறிட்டு பார்த்தவள் "என்னால முடில சார்" என்று சொல்லும் போதே அது அவனுக்கும் வலித்தது. அவள் கண்களின் ஊடாகவே அவள் வலியை அறிந்து கொண்டவன் அதை எப்படி போக்குவது என்று தெரியாமல் தவித்துப் போனான்.
பெருமூச்செடுத்தவன் " உன் விஷயத்துல நான் தோத்து போய்ட்டேன்.. என்னை மன்னிச்சுடும்மா" என்று சொல்ல அவளோ பதறியபடி "நீங்க ஏன் சார் மன்னிப்பு கேட்கிறீங்க?" என்று பதறினாள்.. அவனோ " நீ இப்போ வரை சொன்னது நினைவிருக்கு... நான் இருக்கும் மட்டும் இந்த ஊருல பொண்ணுங்க நிம்மதியா நடமாடலாம்னு. ஆனா இப்போ" என்று ஆரம்பித்தவன் குரல் தழுதழுக்க அவளுக்கும் அவன் வருந்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "அத விடுங்க சார், எல்லாம் விதி, நீங்க கவலைப்படாதீங்க" என்று தனது நிலை மறந்து அவனுக்கு ஆறுதல் சொல்ல அவள் நல்ல மனதை நினைத்து அவன் மனம் இன்னும் கனத்துப் போனது.
"இவ்ளோ நல்ல பொண்ண என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க,, ஒருத்தனையும் உயிரோட நான் விடமாட்டேன்" என்று மனதுக்குள் சபதம் எடுத்துக் கொண்டவன் "சரி அத விடு.. உனக்கு டாக்டராக தானே விருப்பம்" என்று கேட்க அவளோ "இதுக்கப்புறம்" என்று சொல்ல வந்தவளுக்கு மேலும் வார்த்தைகள் வர தடுமாறியது. உடனே அவன் "இதுக்கப்புறம் தான் நீ சமுதாயத்துல நிமிர்ந்து நிற்கணும்.. உன்னை போல எத்தனையோ பொண்ணுங்க இருக்காங்க..எல்லாருக்கும் வழி காட்டியா இருக்கணும்.. நீயே இப்படி தளர்ந்து போனா, உன்னை விட பாதிக்கப்பட்ட சின்ன பொண்ணுங்களுக்கு யார் ஆதரவா இருப்பாங்க ?.. காலேஜ்ல கூட உனக்கு சீட் கிடைச்சு இருக்கு... காசு இல்லாம இது வரைக்கும் அங்க போக யோசிச்ச,, ஆனா இப்போ சொல்றேன் நான் உன்னை படிப்பிக்கிறேன்.. உனக்கு நான் இருக்கேன்னு எப்போவுமே நினைச்சுக்கோ... உன்னை ஒரு உயரத்துக்கு கொண்டு செல்லாம நான் ஓயமாட்டேன்..இது சத்தியம்.. " என்று அவள் மனதில் தன்னம்பிக்கையை கொடுக்க, அந்த மனோ தத்துவ நிபுணர் அவ்வளவு நேரமும் கூறிய அறிவுரைகள் மனதில் ஏறாத போதும் அவன் கூறிய வார்த்தைகள் அவளுக்கு புத்துணர்ச்சியை அளித்தது... மேலும் தொடர்ந்தவன் "எத்தனையோ பேர் இப்படியான சந்தர்ப்பங்களில் இறந்து போய் இருக்காங்க,,, ஆனா நீ தப்பி இருக்க.. சாவை தொட்டு வந்து இருக்க, அப்படின்னா என்ன அர்த்தம்..நீ சாதிக்க வேண்டியது இந்த உலகத்துல நிறைய இருக்கு.. மனசு உடைஞ்சு போய்டாத மாதவி.. உனக்காக எல்லாரும் உன் கூட இருக்கோம்" என்று அவளுக்கு பக்க பலமாக பேசினான்.
அவன் பேச்சைக் கேட்டு, வழிந்து கொண்டு இருந்த கண்ணீரை துடைத்தவள் கரிகாலன் மேல் இருந்த அபார நம்பிக்கையினால் "கண்டிப்பா சார், நான் டாக்டராகி சமுதாயத்துக்கு நிறைய செய்வேன்.. என்னை சீரழிச்ச அந்த பாவிங்களுக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன்.." என்று சொல்ல, அவள் தாயோ கரிகாலனைப் பார்த்து கையெடுத்து கும்பிட, வேண்டாம் என்று தலையாட்டிவன் "சாப்பிட்டியா?" என்று கேட்டான். அவளோ "பசிக்கல சார்" என்று சொல்ல, பக்கத்தில் இருந்த சூப்பில் அவன் பார்வை படிந்து மீள அவள் தாயிடம் "சூப்பை கொடுங்கம்மா. நான் வேலை முடிய வந்து பார்க்கிறேன் " என்று வெளியே வந்தவனுக்கு மனம் மேலும் மேலும் கனத்துப் போக, அங்கிருந்த சுவரில் சாய்ந்து கண் மூடி சிறிது நேரம் நின்றவன் பெருமூச்சுடன் தனது வைத்தியசாலையை விட்டு வெளியேறினான். . அதே சமயம் கரிகாலன் சொன்னதுக்காக கடமைக்காக அவள் சூப் குடித்துக் கொண்டு இருந்த போது , அவள் கண்களோ அங்கு இருந்த தொலைக்காட்சியில் பதிந்து மீண்டது. மீடியா என்றால் ஒரே செய்தியை மாதக் கணக்கில் போடுபவர்கள் அல்லவா?
அப்போதும் அவள் கற்பழிக்கப்பட்ட செய்தியே ஒளிபரப்பாக, அவள் தாயோ பதறி டி வி யை அணைக்க போனார். அவளோ எட்டி அவர் கையை பிடித்தவள் "இதெல்லாம் தாண்டி தானேம்மா வரணும். கலெக்டர் சார் சொன்னதை கேட்டீங்க தானே... எல்லாத்துக்கும் பயந்தா நான் எப்படி டாக்டர் ஆக முடியும்?" என்று கேட்க அவள் தாயின் இதழ்களோ பெருமையாக புன்னகைத்துக் கொள்ள அவள் பார்வை தொலைக் காட்சி பெட்டியில் பதிந்தது.. அதில் அவள் கற்பழிக்கப்பட்ட செய்தியை சொன்னவர்கள், கரிகாலனின் பேட்டியையும் ஒளிபரப்ப அவள் விழிகளோ மேலும் விரிந்து கொண்டது. உடனே அவள் தாய், "அன்னைக்கு இந்த மீடியா காரங்களோட தொல்லையால சார் அப்படி சொல்லிட்டாராம். என் கிட்ட கை கூப்பி மன்னிப்பு கூட கேட்டார்" என்று சொல்ல, அவள் இதழ்களோ "சாரை பத்தி தெரியும் அம்மா, அவங்க கேட்ட கேள்விகளை பார்த்தீங்களா? ஏன்மா இந்த உலகத்தில பாதிக்கப்பட்ட பொண்ணை இந்த டிவி சேனல் எல்லாம் விளம்பரமா தான் எல்லாரும் பார்க்கிறாங்க? என் போட்டோ போட்டு இந்த நியூஸ் போட்டு இருக்காங்களே, எனக்கொரு வாழ்க்கை இருக்குன்னு யாருமே நினைக்க மாட்டாங்களா?" என்று ஆதங்கமாக கேட்க அவள் தலையை வருடிய அவள் தாய் "நாம விழுந்தா எழுப்பி விட, கலெக்டர் சார் போல ஒன்னு ரெண்டு பேரோட கை தான் நீளும். மீதி பேர் கை தட்டி சிரிப்பாங்க.. இல்ல நம்மள ஒரு செய்தியா பார்ப்பாங்க..கஷ்டமோ நஷ்டமோ நமக்கு தான்மா," என்று சொல்ல அவளும் ஆமோதிப்பாக தலை ஆட்டியவள் விரக்தியாக சிரித்துக் கொண்டாள். அவள் மனம் கரிகாலன் வந்து சென்ற சிறிது நேரம் நிம்மதியாக இருந்தாலும் தூங்கி எழுந்த பின் வளமை போல கத்த ஆரம்பித்தவள் அவள் தாயின் மார்பில் தஞ்சம் புகுந்து அழுது தீர்த்து இருந்தாள். அவள் மனம் தளரும் போதெல்லாம் கரிகாலன் சொன்னதை நினைத்துக் கொண்டவள் மனமோ அவன் அருகாமையை தான் நாடியது...
அன்று மாலை அவள் நல்ல நேரத்துக்கு அவளை பார்க்க போலீசுடன் மதுபாலா வந்த நேரம் கரிகாலனும் வந்து இருந்தான்.
மதுபாலா வந்ததோ அவள் அரசியல் லாபத்துக்காக மட்டுமே, அவளுக்கு ஆறுதல் கூறுவது போல போட்டோக்களை டிவீட்டரில் போட்டு வாக்குகளை சேர்த்து விடலாம் அல்லவா? அதே நேரம் போலீஸ்காரனும் அவளிடம் விசாரணை நடத்த உள்ளே நுழைந்த கணமே கரிகாலனும் மாதவியைப் பார்க்க உள்ளே நுழைந்தான். மதுபாலாவைப் பார்த்த அவன் மனமோ "இவ எதுக்கு இங்க வந்து இருக்கா... " என்று எரிச்சலாக நினைத்துக் கொண்டவன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்றான். மதுபாலாவோ அவனை கேலி புன்னகையுடன் பார்த்து விட்டு, மாதவி அருகே வந்து "எப்படிம்மா இருக்க?" என்று தலையை வருடினாள்.. அவளோ "நல்லா இருக்கேன் மேடம்" என்று சொன்னாலும் அவள் கண்கள் கரிகாலனிலேயே பதிந்து மீண்டன. மதுபாலா விடயம் கேள்விப்பட்ட போதே மாதவி அவள் தாயிடம் "சார் கண்டிப்பா தப்பு பண்ணி இருக்க மாட்டார்.. இதுல ஏதோ இருக்கு, இந்தம்மா பொய் சொல்றாங்கன்னு தோணுது" என்று அல்லவா சொல்லி இருந்தாள். அந்த வயதிலேயே வயதுக்கு மீறிய பக்குவம் ஒரு பக்கம் கரிகாலன் மேல் அளவு கடந்த நம்பிக்கை இன்னொரு பக்கம் என்று இருந்தவள் அவள். இப்போது மதுபாலாவை கண்டதும் ஏனோ அவளுக்கு பிடித்தம் இல்லாமல் தான் இருந்தது. நமக்கு பிடித்தவர்களுக்கு எதிரானவர்கள் நமக்கும் எதிரியாக தான் தோன்றுவார்கள் என்று சும்மாவா சொன்னார்கள்.? ஆனாலும் முகத்தில் அதனைக் காட்டாமல் மறைத்தவள் அமைதியாகவே இருந்தாள்.
அதே சமயம் அங்கிருந்த சுவரில் சாய்ந்து நின்று நடப்பதை அழுத்தமாக பார்த்துக் கொண்டு இருந்தான் கரிகாலன். வந்திருந்த இன்ஸ்பெக்டரோ மாதவியிடம் பேசிக் கொண்டு இருந்த மதுபாலாவிடம் " மேடம் கொஞ்சம் இன்வெஸ்டிகேட் பண்ணலாமா? " என்று கேட்க " கோ எஹெட் " என்று சொன்னபடி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள் மதுபாலா..
இன்ஸ்பெக்டரோ மாதவியிடம் " எத்தனை பேர் இருந்தாங்க.. " என்று கேட்க அவளோ " நாலு பேர் " என்றாள் குனிந்த தலை நிமிராமல்.
மேலும் தொடர்ந்தவன் " அடையாளம் காட்ட முடியுமா?? எல்லாருமே ரேப் பண்ணினாங்களா? கையை காலை எத்தனை பேர் பிடிச்சிகிட்டாங்க " என்று கேட்க அந்த வக்கிர கேள்விகளில் அதிர்ந்தவள் வாயை பொத்தியபடி பதில் சொல்ல முடியாமல் அழ ஆரம்பிக்க " இன்ஸ்பெக்டர் மைண்ட் யோர் பிசினெஸ் " என்று ஆக்ரோஷமாக உரைத்தான் கரிகாலன்.
உடனே மதுபாலா " அவர் கேட்டதுல என்ன தப்பு இருக்கு?? விடை சொன்னா தானே குற்றவாளியை கண்டு பிடிக்க முடியும்?? " என்று கேட்க அவளை எரித்து விடுவது போல பார்த்த கரிகாலனின் பார்வையோ " நீயெல்லாம் பொண்ணாடி?? " என்ற கேள்வி அடங்கி இருந்தது. பெருமூச்செடுத்தும் கட்டுப்படுத்த முடியாமல் அவன் கோபம் எல்லை மீற " ஜஸ்ட் கெட் அவுட் " என்றான் ஆக்ரோஷமாக. அவளுக்கு அந்த வார்த்தை போதுமே..
" ஏய் யாரை பாத்து வெளிய போக சொல்ற? நான் மேயர் தெரியும்ல " என்று சொல்ல " நல்லாவே தெரியும்.. கவர்மெண்ட் செர்வாண்ட் ஆஹ் சொல்லல...அந்த பொண்ணோட வெல்விஷர் ஆஹ் சொல்றேன்.. வெளிய போங்க...உங்க அரசியல் நடத்த இது ஒன்னும் சாக்கடை இல்ல..இன்ஸ்பெக்டர் நீங்களும் தான்.. பாதிக்கப்பட்ட பொண்ணு கிட்ட எப்படி இன்வெஸ்டிகேட் பண்ணனும்னு கத்துக்கிட்டு வாங்க.. " என்றான் குரலில் சிறிதும் நடுக்கம் இன்றி.. அவன் கோபத்தை பற்றியும் கண்டிப்பை பற்றியும் அறிந்த இன்ஸ்பெக்டர் " சாரி சார் " என்றபடி வெளியேற மதுபாலாவோ " நான் ஏன் வெளிய போகணும்? என்ன வெளிய போக சொல்ல நீ யாரு?? வெல்விஷர்ன்னா எந்த மாதிரி வெல்விஷர் " என்று நக்கல் தொனியில் கேட்டாள் ...
அவனோ அவளை நெருங்கி வந்து ஒரு கணம் எட்டி பார்க்க அங்கு மாதவியோ அழுது கொண்டு இருந்ததால் தான் பேசுவதை கேட்க வாய்ப்பில்லை என்று உறுதி செய்து கொண்டவன் " ஆஅ புருஷன் மாதிரி.. வெளிய போடி " என்றான் அழுத்தம் குறையாமல். அதைக் கேட்டு அவனை விழுக்கென நிமிர்ந்து பார்த்தவள் ஒரு கணம் அழுது கொண்டு இருந்த மாதவியும் பார்த்து விட்டு வெளியேறிவிட கண்ணீரை துடைத்தபடி நிமிர்ந்து கரிகாலனைப் பார்த்தவள் " மீடியாவில் சொன்ன போல என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா சார்.?? . ஏதோ பாதுகாப்பு இல்லாத உணர்வாவே இருக்கு...உங்க கூட இருந்தா மட்டுமே தெம்பா இருக்கு... அழுத்தம் கூடியே செத்துடுவேனோன்னு பயமா இருக்கு... ஆனா எனக்கு வாழணும் சார்... " என்று சொல்ல அவன் மனமோ நொறுங்கி போனது..
அடுத்த கணமே அவளை நெருங்கி அழுது கொண்டு இருந்தவள் தலையை வருடியவன் "சின்ன பொண்ணும்மா நீ, அன்னைக்கு மீடியாவில் கோபத்துல சொல்லிடேன்.. நீ பயப்படாத., உனக்கு எப்போவுமே நான் இருப்பேன்... கல்யாணம் பண்ணி தான் கூட இருக்கணும்னு இல்ல. எப்போவும் உன்னோட வெல்விஷர் ஆஹ் இருப்பேன்.. நீ சுகமாகி டிஸ்சார்ஜ் ஆகி வா,. சேர்ந்தே இந்த சமூகத்தை பேஸ் பண்ணிக்கலாம்" என்று மீண்டும் தெம்பாக பேச, அவளோ முகத்தை மூடியபடி "எனக்கு மட்டும் ஏன் சார் இப்படி? நான் யார்க்கு என்ன பாவம் பண்ணினேன்" என்று விம்மியபடி கேட்க அவனோ "நீ யாருக்குமே பாவம் பண்ணலம்மா, அவனுங்க தான் பெரிய பாவம் பண்ணி இருக்கானுங்க.. அந்த நாலு நாயோட சாவையும் நீ உன் கண்ணால பார்ப்ப " என்று சொல்ல கண்களை துடைத்துக் கொண்டு அவனை ஏறிட்டு பார்த்தவள் "என்னை போல பல பொண்ணுங்க வாழ்க்கையை காப்பாத்த அவனுங்கள கொல்றது தப்பில்ல சார்" என்றாள். அவனோ அவள் தலையை வருடியபடி அருகே இருந்த இருக்கையில் அமர்ந்து "அதெல்லாம் நான் பார்த்துகிறேன்... நீ படிக்கிறத பத்தி மட்டும் பாரு,, இதெல்லாம் தலையில ஏத்திக்காதே, " என்றவன் அருகே இருந்த அவள் போனை எடுத்து தன்னுடைய நம்பரை அதில் பதிந்து விட்டவன் "இது என்னோட நம்பர், எப்போ வேணும்னாலும் கால் பண்ணு , இன்வெஸ்டிகேஷனுக்கு நானும் கூட இருக்கேன். இந்த மீடியா காரனுங்க வந்தா பேட்டி கொடுக்க முடியாதுன்னு முகத்தில அடிச்ச போல சொல்லு, ஓவரா பேசுனா என் கிட்ட சொல்லிடுவேன்னு தைரியமா சொல்லு.. என்னை தாண்டி யார் வர்றான்னு நானும் பார்க்கிறேன்..போலீஸ்காரங்க வந்தா எனக்கு சொல்லு, உடனே நான் வரேன்.. முக்கியமா அந்த மேயரை உள்ளே விடாதே, அவங்க அரசியல் பண்ண இது இடம் இல்ல " என்று அவளுக்கு தான் இருக்கிறேன் என்ற ரீதியில் மனதுக்கு தெம்பை அழிக்க , அவள் இதழ்களோ மெலிதாக புன்னகைத்துக் கொள்ள "தன்க் யூ சார், என் கிட்ட தினமும் வந்து இப்படி பேசிட்டு போக முடியுமா?நீங்க பேசிட்டு போனதும் தான் யானை பலம் வந்த உணர்வை இருக்கு" என்றாள். அவனோ "கண்டிப்பா மா" என்றவன் அருகே நடப்பதை கண்ணீருடன் பார்த்துக் கொண்டு இருந்த அவள் தாயைப் பார்த்து "பாத்துகோங்கம்மா , ஏதும்னா கால் பண்ணுங்க" என்று சொல்லி விட்டு வாசலில் நின்ற அவள் தந்தையிடமும் விடை பெற்று விட்டு வெளியேறிச் சென்றான்.
அதே சமயம், டாக்டரிடம் பேசுவது போல பல போட்டோக்களை எடுத்து தள்ளிய மதுபாலா, மிடுக்காக முன்னே செல்ல, அவனோ பெருமூச்சுடன் அவளை தாண்டி செல்ல, "மிஸ்டர் கரிகாலன்" என்ற வார்த்தையில் அவன் வேக எட்டு தடைபட திரும்பி அவளை பார்த்தான்.
அவனை இளக்காரமாக பார்த்தவள் " சார், அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுறத பர்த்தா சாருக்கு சின்ன பொண்ணு கேட்குதோ ?? " என்று கேட்க அவனோ நாடியை நீவியவாறு அவளை பார்த்து " ம்ம்ம் அப்படியும் சொல்லலாம் " என்றான். என்ன தான் அவன் விவாகரத்து பெற்று இருந்தாலும் அவன் வேறு திருமணத்தை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை..அதற்காகவே அவனை காயப்படுத்த நினைத்தவள் " அவளை கல்யாணம் பண்ணி குழந்தை பெத்து இதெல்லாம் நடக்கிற காரியமா? சார் தான் சாமியாராச்சே ...பரிதாபப்பட்டு கல்யாணம் பண்ண போற போல இருக்கு " என்று அவன் மனதை சரியாக கணித்தாலும் அவன் அதை ஏற்றுக் கொள்ளவானா என்ன ?? " அதெப்படி மேடம் நீங்க டிசைட் பண்ணுவீங்க? அந்த பொண்ணுக்கு வயசும் இருக்கு.. எனக்கு அவளை அம்மா ஆகின்ற தகுதியும் இருக்கு.. கல்யாணம் பண்ணி நிறைய குழந்தைங்க பெத்துப்போம்...அதுல என்ன உங்களுக்கு.வயித்தெரிச்சல்?? எப்போவுமே வாழ்க்கைல ராட்சசி தான் வரணும்ன்னு இல்ல...தேவதைங்க கூட வரலாம்.. " என்று சொல்ல அவளோ " அப்போ நான் என்ன ராட்சசியா? " என்று சீறினாள். அவளை நிதானமாக ஏறிட்டு பார்த்தவன் மென் புன்னகையை சிந்தி இரு பக்கமும் இல்லை என்று தலையாட்டி வீட்டு " அத விட கேவலம் " என்றான். அவளோ "கரிகாலன் திஸ் இஸ் டூ மச் " என்று ஆக்ரோஷமாக சீற இருவரையும் தவிர அந்த இடத்தில் யாரும் இல்லை என்று உறுதி படுத்தியவன் கையை நீட்டி "போடி" என்று சொன்னபடி பாக்கெட்டில் இருந்த சன்கிளாஸை கண்ணில் அணிந்து கொண்டே தனக்காக காத்துக் கொண்டு இருந்த அலுவலக ஜீப்பில் ஏற , "உன்னை சும்மா விட மாட்டேண்டா" என்று காலை வெற்று தரையில் அடித்தவள் ஆவேச மூச்சுகளை விட்டவாறு தனது வண்டியில் ஏறியவள் "வண்டியை எடு" என்று டிரைவரிடம் சீறினாள்.