ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 5

சாணக்கியனை அழுத்தமாக பார்த்து "ஏன் அண்ணா எனக்கு பிரைவசி இல்லையா ???" என்று ஏக்கமாக கேட்க... அவனை நிதானமாக பார்த்தவன், "நீ எப்போ நான் சொல்றத கேட்பியோ அன்னைக்கு நான் உன்ன வேவு பாக்குறத விடுவேன். அது வரைக்கும் உன் மேல ஒரு சின்ன துரும்பு பட கூட விடமாட்டேன்" என்றவனை கண் கலங்க நெகிழ்ச்சியுடன் பார்த்தான்.

"போதும்டா உன் செண்டிமெண்ட் ஒழுங்கா போட்டோக்கு போஸ் கொடு" என்ற சாணக்கியனிடம், "இனி உங்க ஸ்பை ரொமான்டிக் சீன்ஸ் கொஞ்சம் சொல்லுவார்" என்று விஷ்வா சொல்லி கண்ணடிக்க அடப்பாவி என்பது போல் சாணக்கியன் பார்த்தான்.

விஷ்வாவின் தாக்குதலுக்கு பிறகு மித்ரா பயத்தில் விஷ்வாவை கண்டு ஒளிந்து திரிந்தாள்.

அதை கண்டு எரிச்சலடைந்த விஷ்வா, 'நீ எல்லாம் போலீஸாகி என்ன கிழிக்க போறியோ!' என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான்.

ஒளிந்து திரிந்தவளை அவளறியாமலே அங்குலம் அங்குலமாக அளந்த அவன் கண்களில் காதல் போதை விறு விறுவென ஏறியது. அவளை உடனே தன்னவளாக்க வேண்டுமென ஆவல் பிறக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த விஷ்வா நேரே தனது தாயிடம் சென்று, "அம்மா, அப்பாகிட்ட மித்ராவை பற்றியும் என்னை பற்றியும் பேசுங்கம்மா" என்று கூறியவனை விசித்திரமாக பார்த்தவர், "என்னடா சொல்லுற? இப்போ தான் உங்க அண்ணா கல்யாணம் நடந்து ஒரு வாரம் கூட முழுசா முடியல ... அதுக்கிடையிலேவா?" என்று கேட்க ... அவரை முறைத்தவன், "இப்போ நீங்க பேச போறீங்களா? இல்லை நான் பேசட்டுமா?" என்று கேட்டான்.

"வேணாம்டா நானே பேசுகிறேன்" என்றபடி ஆட்களுடன் பேசிக் கொண்டிருந்த மகாலிங்கத்திடம் பதுமையாக நடந்து வந்தார். வந்தவர் அவர் காதுக்கு எம்பி, "என்னங்க உங்க கூட கொஞ்சம் பேசணும்" என்றார்.

சித்ராவை மேலிருந்து கீழ் பார்த்தவர், "வயசானாலும் என் மேல உன் ஆசை குறையவே இல்ல" என்றார் அவரை சீண்டும் பொருட்டு ...

'ச்ச விவஸ்த கெட்ட மனுசன் எங்க நின்னுட்டு என்ன பேச்சு பேசுது' என்று நினைத்தபடி அவரை முறைத்தவர் முன்னால் செல்ல அவர் பின்னால் சிரித்தபடி நடந்து வந்தார் மகாலிங்கம்.

அவரை மண்டபத்தின் ஒரு மூலைக்கு கூட்டிச் சென்று, "நம்ம விஷ்வாவுக்கு மித்ராவை பிடிச்சிருக்காம்" என்றவரை புருவம் சுருக்க பார்த்துவிட்டு, "அவனை கூப்பிடு" என்றார்.

விஷ்வாவும் இவர்களை பார்த்துக் கொண்டு நின்றவன் வேக நடையுடன் அவரருகில் வந்தான்.

"அம்மா சொல்றது உண்மையா?" என்று அவனை பார்த்து அவர் கேட்க ஆம் என்பது போல் தலையாட்டியவனை பார்த்து பெரு மூச்சு விட்டவர் அவன் கையை பிடித்து அழைத்துக் கொண்டு விருத்தாச்சலம் அருகில் சென்றார்.

விருதாச்சலத்தை தனியே அழைத்து அறைக்குள் கூட்டிச் சென்றவர், "இவனுக்கு உன் ரெண்டாவது பொண்ணு மேல காதலாம்" என்றார். அவனை கூர்ந்து பார்த்தவரை அவனும் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி பார்த்தான்.

"எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மகா... மித்ரா கொஞ்சம் விசித்தியாசமானவ... வசு போல இல்ல... அதனால அவ கிட்டயே கேட்டா நல்லது" என்றபடி அவளை தொலைபேசி மூலம் அழைக்க அடுத்த ஐந்து நிமிடத்தில் அவள் அங்கு வந்திருந்தாள்.

விருதாச்சலம் சுத்தி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார். "இங்க பாரு மித்ரா இந்த பையன் விஷ்வா உன்ன கல்யாணம் பண்ண ஆசைப்படுறார்... நீ என்ன சொல்ற???" என்று கேட்க... விஷ்வாவை திரும்பி அதிர்ச்சியாக பார்த்தவள், 'அடப்பாவி நீ சும்மா சொல்லுற என்று தானே நினைச்சேன்... இப்படி பண்ணிட்டியே' என்று அவனுக்கு மனதுக்குள் திட்டியபடி, "அப்பா எனக்கு பிடிக்கல..." என்றாள்.

அது அனைவருக்கும் அதிர்ச்சி தான் விஷ்வா உட்பட.

அவள் தன்னை சீண்டியதில் இருந்தே தன் மேல் காதல் இருக்கும் என்று நம்பியவனுக்கு தற்போது மனது நொறுங்கியது. இப்படி தன்னை சபையில் அவமான படுத்துவாள் என்று எதிர் பார்க்காதவன் கவலையை முகத்தில் மறைத்தபடி அவளை கூர்ந்து நோக்கினான். அவளுக்கோ அவன் மேல் காதல் எப்போது வந்தது என்று தெரியாது... விஷ்வாவை பிடித்து இருந்தாலும் அவன் பொறுப்பற்ற தன்மையால் அவனை கல்யாணம் பண்ண பயந்து போனாள். இப்போது வேணாம் என்று கூறும் போது அவள் மனம் வலித்ததை அவள் மட்டுமே அறிவாள்.

அவள் கூறியதை கேட்டு விஷ்வாவை பார்த்து முறைத்த மகாலிங்கம், "ஏன்மா நீ வேற யாரையும் காதலிக்கிறாயா?" என்று கேட்க, "அப்படி இல்ல அங்கிள்... நான் சொல்லுறேன்னு கோபப்படாதீங்க... ஒரு வேலை வெட்டிக்கு போகாம அடி தடி என்று சுத்தி திரியிற ஒரு பொறுக்கியை எனக்கு கல்யாணம் பண்ண இஷ்டமில்லை" என்றதும் விருத்தாச்சலம், "மித்ரா..." என்று கர்ஜித்தார்.

"நான் என்னப்பா தப்பா சொல்லிட்டேன்... அவங்க அப்பா, அண்ணா போல அவருக்கு தனி அடையாளம் இல்லை தானே?" என்றவளை லூசா நீ என்பது போல பார்த்தவர்,

"விஷ்வாவுக்கு தான் ஒரு ஹாஸ்பிடல் இருக்கே ... அது போதாதா?" என்று சினம் பொங்க கேட்க, "அதுவும் மகாலிங்கம் அங்கிளோட அடையாளம் தானே?" என்றவளை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று யாருக்கும் தெரியவில்லை.

இதுக்கு மேல் பொறுமை இழந்த மகாலிங்கம், "இங்க பாரும்மா என் பையன் இப்போ இருப்பது என் அடையாளத்தில என்பது போல உனக்கு தோணலாம். ஆனா உனக்கு தெரியாம அவனுக்கும் ஒரு தனி அடையாளம் இருக்கு ... அத முதலில் கண்டு பிடி... ஒரு போலீஸ் ஆஃபீசர் ஆக போற பொண்ணு இப்படி வெகுளியாக இருக்க கூடாது..." என்றவர் விஷ்வாவை நோக்கி, "நானும் உன் அண்ணாவும் சொல்லி கேட்காத நீ இனியாவது திருந்தி நடப்ப னு நினைக்கிறேன்" என்றபடி அவனையும் மித்ராவையும் ஒரு கணம் பார்த்து விட்டுச் சென்றார்.

அவர் சொன்ன நிதர்சனத்தில் தலை குனிந்து நின்றவன் மகாலிங்கம் சித்ராவை அழைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு போனதும் பெரு மூச்சொன்றை இழுத்து விட்டான்.

விருதாச்சலத்துக்கும் மகளின் வெகுளித்தனம் கோபத்தை கிளப்ப அவளை முறைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறி விட்டார். அங்கு தனித்து விடப்பட்டது விஷ்வாவும் மித்ராவும் மட்டுமே...

அவள் தன்னை வேண்டாம் என்றது அவன் மன காயமாகி இருக்க அதை காட்டிக் கொள்ள விரும்பாதவன் வெளியேற போனான்.

அவன் வாசலை அடைய போன போது, "ஹெலோ மிஸ்டர்" என்று கை தட்டி அவள் அழைக்க... திரும்பி பார்த்தவன் அடிபட்ட பார்வையை அவளில் செலுத்தி "என்ன ?" என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டான்.

"என்னய்யா உன்ன பார்த்து அடையாளம் இருக்குனு எல்லாரும் சொல்லுறாங்க. எனக்கு உங்கிட்ட ரவுடி தனம் மட்டுமே தெரியுது. அப்படி என்ன அடையாளயத்தை ஒளிச்சு வச்சிக்கிட்டு இருக்க???" என்று இடையில் கை குற்றி அப்போதும் நக்கலாக கேட்டவளை கூர்ந்து பார்த்து, 'இவ திருந்த மாட்டா' என்று நினைத்தபடி விரக்தியாக சிரித்தவன் வாசலை நோக்கி வெளியேற ஆயத்தமானான்.

அவன் முன்னே பாய்ந்து வந்தவள், "இங்க பாரு நான் கேள்வி கேட்டால் பதில் சொல்லணும்... எனக்கு பிடிச்ச போல நீ இருந்தா உன்னை கல்யாணம் பண்ணுவேன் தானே!" என்றாள் ஆசையை காட்டி உண்மையை வெளி கொண்டு வரும் நோக்கில்.

அவள் கூற்றில் எழுந்த சினத்தை அடக்கியவன் அவள் கண்களை நோக்கி, "என் அடையாளத்தை பார்த்து உனக்கு காதல் வரும்னா எனக்கு அந்த காதலே வேணாம் ... ஆனா நான் யாருன்னு கண்டிப்பா உனக்கு தெரியணும்..." என்றவன் மேலும், "S .V . K . ஹாஸ்பிடலில் பார்ட்னர் மட்டுமில்ல ஒன் ஆப் தெ டாக்டர்ஸ்ல நானும் ஒருவன்... முதலில் நான் உயிரை காப்பாற்றும் டாக்டர்... அப்புறம் தான் நீ சொன்ன பொறுக்கி... தப்பு பண்ணுறவன எனக்கு அடிக்கவும் தெரியும் உயிருக்கு போராடுறவன காப்பாற்றவும் தெரியும்" என்றவன் அவள் பதிலை எதிர் பாராமல் விறு விறுவென வெளியேறினான்.

அவன் பதிலில் அதிர்ந்து நின்ற மித்ரா சிலையாகி போனாள். அவன் சென்றதும்தான் அவளுக்கு அவனை பற்றி நிறைய விஷயம் அறிந்துக் கொள்ள வேண்டி இருந்தது. மண்டபத்தில் பாட்டுக்கு ஆடிக் கொண்டிருந்த கயலை இழுத்து வந்தவள், "உன்கிட்ட பேசணும் வாடி" என்றபடி அறை ஒன்றினுள்ளே கூட்டிச் சென்றாள்.

"என்னடி" என்று சலித்தவளிடம்,

"உங்க சின்ன அண்ணன் என்ன பண்ணுறான்???" என்று கேட்க அவளோ, "அவன் ஒரு வெத்து வேட்டு" என்றாள் மித்ராவை சீண்டும் பொருட்டு.

"இங்க பாரு கயல் ப்ளீஸ் என் கிட்ட விளையாடாதே... எனக்கு மூட் இல்ல" என்றவள் பதட்டத்தை அறிந்த கயல் விஷ்வாவை பற்றி கூற தொடங்கினாள்.

விஷ்வா கயலின் சீனியர் தான், கல்லூரியில் படித்த முரட்டு டாக்டர் அவன். அதற்கு காரணம் அவனின் அப்பா மற்றும் அண்ணனின் செல்வாக்கு... அடித்து விட்டு அதுக்கே மருந்து தடவும் குணம் கொண்டவன் விஷ்வா... கல்லூரியில் அவனுக்கு பயந்து யாரும் கயலின் பக்கம் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்... அடித்து விட்டு தான் காரணம் கேட்பான். சாதாரணமாக வைத்தியர்களுக்கு தேவையானது பொறுமை அது அவனிடம் கொஞ்சம் கூட இல்லை... கிட்ட தட்ட வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் கமல் போல... சின்ன வயதிலிருந்தே தந்தையின் அடியாட்களுடன் காலம் செலவழித்தவன் அவர்களுடன் ஒன்றாகி போனான். ஆனால் அந்த ஸ்டெத்தை கழுத்தில் போட்டதும் அவன் குணம் முழுதாக மாறி விடும்.

கல்லூரியில் இருந்து வெளியானதும் தந்தையின் உதவியால் மருத்துவமனையை தொடங்கியவன் அதை சிறப்பாக நடத்தினாலும் அவனது அடியாள் நண்பர்களுடன் சேர்ந்து அடி தடி மற்றும் கட்ட பஞ்சாயத்து போன்றவற்றில் இறங்குவது தான் அவனுக்கு மிகவும் பிடிக்கும்...

தான் சாக்கடையில் விழுந்தாலும் தனது தம்பிக்கு அரணாக நின்ற சாணக்கியன் அவனை இதில் ஈடு பட வேண்டாம் என்று பல தடவை கூறியும் அவன் கேட்கவில்லை... அண்ணனுடன் எல்லா இடமும் சேர்ந்து சுற்றுபவன் சாணக்கியனின் வலது கையாகி போனான்.

மகாலிங்கம் திட்டி திட்டி அவர் வாய் வலித்தது தான் மிச்சம்... அவனுக்கு எதுவும் காதில் ஏறாது. தான் நினைத்ததை சாதிக்க துடிப்பவனுக்கு பொறுமை மிகமிக குறைவு.

சாணக்கியன் தான் கொலைகள் செய்தாலும் விஷ்வாவை ஒரு கொலை கூட பண்ண விட மாட்டான்... அடி தடியோடு நிப்பாட்டி விடுவான்.

"என் தம்பி நீ எப்போதும் உயிரை காப்பாற்ற வேணும் ... நீ எந்த உயிரையும் அழிக்க கூடாது." என்று கூறிய அண்ணன் சொல்லை வேத வாக்காக கொண்டவன் யாரையும் கொலை செய்யும் அளவுக்கு சென்றதில்லை.

காலையில் வைத்தியசாலை பின்னேரங்களில் நண்பர்கள் மற்றும் அடி தடி என காலம் செலவழிப்பவன் அவன்.

கயல் கூறியதை கேட்டு தலை சுற்றி விழாத குறையாக நின்ற மித்ரா, அவளை நோக்கி, "ஏன் நீ இத என்கிட்ட சொல்லல???" என்று கேட்க, "சும்மா" என்று கண்ணடித்தவள் அங்கிருந்து வெளியேறி விட்டாள்.

ஒரு பக்கம் தர்மசங்கடமாகவும் பதட்டமாகவும் இருந்த மித்ரா மறந்தும் விஷ்வா பக்கம் திரும்பவில்லை.விஷ்வாவும் அவளை அதன் பிறகு கண்டு கொள்ளவில்லை. சாணக்கியன் பக்கத்தில் கடமைக்கு நின்ற வசுந்தரா நிகழ்வு முடிந்ததும் தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். சாணக்கியனும் அதை கண்டுக்கவில்லை.

நாட்கள் இவ்வாறே உருண்டோட ,விஷ்வா நினைப்பாகவே இருந்த மித்ரா, அவன் மீதான காதலை உணர்ந்துக் கொண்டாள். "ராஸ்கலுக்கு என் நினைப்பு கொஞ்சமும் இல்லையா?" என்று திட்டியவள் காதல் போதை ஏற ஏற விஷ்வாவிடம் மன்னிப்பு கேட்கும் சாட்டில் அவனை பார்க்க விடுமுறை நாளாக பார்த்து மகாலிங்கம் வீட்டுக்கு வந்திருந்தாள்.

அவள் நல்ல காலம் வீட்டில் விஷ்வாவையும் கயலையும் தவிர அனைவரும் கோயிலுக்கு சென்றிருந்தனர்.

வந்ததும் கயலிடம், "உன் அண்ணன் ரூம் எங்கடி?" என்று கேட்க அவளோ, "நீ எதுக்குடி அங்க போக போற???" என்று கேட்டாள். "சும்மா தொண தொண என்று கேள்வி கேட்காம சொல்லுடி" என்றாள். "இது

நல்லதுக்கில்லை" என்றவள் விஷ்வாவின் அறையை காட்டி விட்டு தன்னறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.

கதவை தட்டாமல் திறந்து உள்ளேச் சென்ற போது விஷ்வாவோ வெற்று மார்புடன் தூங்கிக் கொண்டிருந்தான். அவன் முறுக்கேறிய உடலை பார்த்து வியந்தவள், "வாவ்..!" என்று கத்த, அவள் குரல் கேட்டு எழுந்த விஷ்வா கொஞ்சம் தடுமாறிதான் போனான்.

எழுந்து கண்ணை கசக்கியவன் அவளை முறைத்தபடி கட்டிலில் உட்கார்ந்து, "என்ன வேணும்?" என்று கேட்க அவளோ, "உங்களை தப்பா நினைச்சதுக்கு மன்னிச்சுக்கோங்க" என்று கை கூப்பி குனிந்து மன்னிப்பு கேட்டாள்.

அவளை கூர்ந்து பார்த்தவன், "இது மன்னிப்பு கேக்கிற போல் இல்லையே... நக்கல் அடிக்கிற போல இருக்கே..." என்று கூற, "புரிஞ்சா சரி" என்றபடி அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்தாள்.

"இங்க எதுக்கு வந்த? யாரும் பார்த்தா தப்பா நினைப்பாங்க. ஒரு வயசு பையன் ரூமில நீ இருக்கிறது சரி இல்ல" என்று அவள் மீது அக்கறையாக உரைக்க அவன் மேலுள்ள காதல் மேலும் அவள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துக் கொண்டது.

அவனை சீண்டும் பொருட்டு, "என்னை மன்னிச்சா நான் போவேன்" என்றவளை முறைத்தவன், 'இப்போ பாருடி உன்னை எப்படி ஓட வைக்கிறேன்னு' என வன்மமாய் நினைத்தபடியே, "எனக்கு இப்படி எல்லாம் மன்னிப்பு கேட்டால் மன்னிக்க தெரியாது..." என்றவனை கேள்வியாக பார்த்து, "அப்போ எப்படி?" என்று கண் சிமிட்டி கேட்டாள்.

அவள் கண் சிமிட்டலில் தன்னை இழந்தவன் தன் இதழ்களை தன் பெருவிரலால் வருடி காட்டி, "இங்கே முத்தம் கொடுத்து கேளு நான் மன்னிப்பேன்" என்றான். அவன் எதிர் பார்த்தது அவள் அதை கேட்டு அரக்க பறக்க ஓடுவாள் என்று... ஆனால் மித்ராவோ, "அவ்வளவு தானா?" என்றபடி கதிரையில் இருந்து எழுந்து அவனை நோக்கி வர கட்டிலில் இருந்தபடியே அதிர்ச்சியுடன் அவளை விழி விரித்து நோக்கினான்.

அவனருகில் நெருங்கி இருந்தவள் அவன் முகத்தை இரு கைகளாலும் பற்றி, "என்ன மன்னிச்சிருங்க" என்று அவன் கண்ணை பார்த்து சொல்லியபடி தனது இதழ்களை அவனிதழ்களுடன் இணைத்துக் கொண்டாள்.

இதனை எதிர்பாராதவன் முதலில் அதிர்ந்தாலும் அவள் மேலுள்ள காதலால் அவள் இதழ் அணைப்பில் மூழ்கி போனான்.

மூடப்பட்ட தனியறை காதல் கொண்ட இருவர் மட்டும் என்ற நிலையில் அவன் உணர்வுகள் உடைப்பெடுக்க தொடங்க அவள் செய்கையை தனதாக்கியவன் கைகளும் இதழ்களும் அவள் மேனியில் எல்லை மீற தொடங்கின.

அவளும் அதை எதிர்க்கவில்லை, அவனின் செய்கைகளுக்கு இசைந்து கொடுத்தாள். இருவருக்கும் தாம் செய்வது தவறு என்று தோன்றினாலும் அங்கு அவர்களால் ஒருவரை விட்டு மற்றவர் விலக முடியாமல் அவஸ்தைப்பட்டனர்.

அன்று கோவிலுக்குச் செல்ல சற்று முன்னர், வசுந்தராவுக்கு தலை சுற்றாக இருக்க பரிசோதித்து பார்த்து தான் கர்ப்பம் என்று உறுதிப்படுத்தியவள் ஒரு புத்துணர்ச்சியுடன் கோவிலுக்கு ஆயத்தமாகி போய் இருந்தாள். கோவிலுக்குள் சென்றவர்களிடம் கோவிலில் வைத்து விஷயத்தை கூற சாணக்கியனுக்கு தலை கால் புரியாத சந்தோசம் உருவானது. அவன் கடுமை கொஞ்சம் மறைந்து அவளை மென்மையாக நோக்கினான். கோவில் படி இறங்கும் போது தன் கரத்தை கொடுத்து அவளை இறக்கி விட்டதும் இருவருக்கும் அந்த பிஞ்சு மகாவால் இனம் புரியாத களிப்பும் நெருக்கமும் உருவானது.

"சாணக்கியா நீங்க இரண்டு பேரும் ஒரு தடவை டாக்டர் கிட்ட போயிட்டு வந்துருங்க நானும் அம்மாவும் வீட்டுக்கு போறோம்" என்றபடி மகாலிங்கம் கிளம்ப தனது பாதுகாப்பு வாகனம் பின்னால் வர வசுந்தரா மற்றும் சாரதியுடன் முன்னால் நின்ற வாகனத்தில் ஏறிக் கொண்டான் சாணக்கியன்.

போகும் வழியில் இடையில் எதிர் பாராத விதமாக வாகனத்தில் ஏதோ கோளாறு என்று சாரதி கூற அவ்விடத்தில் வாகனத்தை நிறுத்தி, வாகனத்தை சாரதி திருத்தும் வரை சாணக்கியன் இறங்க வீதி பக்கத்தில் வசுந்தரா இறங்கி நின்றாள்.

அந்த எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஒரு ஜீப்பில் வந்தவர்கள் பின்னால் நின்ற அவனது பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள அவர்களும் மாறி சுட தொடங்கினர்.

இதனை எதிர்பாராத சாணக்கியன் சுதாரித்துக் கொண்டு வீதி பகுதியில் இறங்கி நின்ற வசுந்தராவை இழுத்து ஜீப்புக்குள் ஏற்ற போன போது ஜீப் லாக் பண்ணப் பட்டிருந்தது.

"ஷீட்" என்று ஜீப்பில் உதைத்தவன் அவளை கூட்டிக் கொண்டு மறு பக்கம் கீழே குந்தியவன் தனது வலிய கரங்களால் அவளை அணைத்து கோழி குஞ்சை பாதுகாப்பது போல பாதுகாத்தான்.

அவளை ஒரு கையால் அணைத்துக் கொண்டே இருந்தவனை நோக்கி ஜீப்பில் இருந்த ஒருவன் துப்பாக்கியால் சுட வர கண நேரத்தில் இடுப்பில் இருந்து எடுத்த துப்பாக்கியால் அவனை சுட்டிருந்தான்.

'கொலை அதுவும் தன் கண் முன்னாலேயே' என்று நினைத்து அதிர்ந்த வசுந்தரா அவனை பார்க்க அவனோ அவர்களை வேட்டையாடும் வெறியில் இருந்தான்.

ஒளிந்திருந்து மற்றவர்களையும் துப்பாக்கியால் சுட்டவன் மேலும் சிலரை கொன்றிருந்தான். பாதுகாப்பாளர்களும் மாறி சுட்டதில் சாணக்கியனை கொல்ல வந்த அனைவரும் இறந்து போக துப்பாக்கியை இடுப்பில் சொருகியபடி எழும்பியவன் வசுந்தராவை நோக்கி கை நீட்ட பின்னால் வந்த அந்த வாகன சாரதி கத்தியை கொண்டு அவனை குத்த வந்தான்.

"ஐயோ பின்னால்" என்று கத்திய வசுந்தராவை பார்த்தபடியே குத்த வந்தவனின் கையை பிடித்தவன் லாவகமாக திரும்பி அதே கத்தியை அவன் குரல் வளையில் ஏற்றி இருந்தான் சாணக்கியன்.

குத்திய வேகத்தில் ரத்தம் அந்த இடம் முழுதும் தெறித்தது. அவனின் தொடர் கொலைகளால் அரண்டு போய் அவனை பார்க்க அவனோ வசுந்தராவை பார்த்து சிரித்தவன், "வா போகலாம்" என்று தனது கையை நீட்டி அவளை தூக்கி அவள் இடை நோக்கி அணைக்க அவன் உள்ளங்கை அவள் வெற்று வயிற்றில் பதிந்தது.

பல காலம் நம்பியவன் துரோகம் செய்த வலியை மறைத்துக் கொண்டு இறந்து கிடந்த சாரதியின் பாக்கெட்டிலிருந்து கீயை எடுத்தவன் வண்டியை திறந்து உள்ளே ஏறினான்.

அவன் யூகித்திருந்தபடி வண்டியில் எந்த பழுதும் இருக்கவில்லை.

வாழ்க்கையில் முதன் முதலாய், 'எப்படி இவன் துரோகத்தை அடையாளம் காணாமல் விட்டேன்' என்று யோசித்தவன் தற்காலிகமாக அந்த யோசனையை தள்ளி விட்டு அவனே வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டை நோக்கி புறப்பட்டான்.

இதே நேரத்தில் விஷ்வாவின் உடமை ஆகி விட்டு இருந்த மித்ரா களைப்பில் தூங்கிக் கொண்டிருக்க அவள் நெற்றியில் முத்தம் பதித்து எழுந்த விஷ்வா கார் சத்தம் கேட்டு ஜன்னலினூடு நோக்கினான்.

அங்கே மகாலிங்கத்தின் ஜீப் உள்ளே நுழைந்துக் கொண்டிருந்தது.

பதறியபடி மித்ரா அருகில் ஓடியவன், "எழுந்திரு மித்ரா" என்று அவளை எழுப்ப அவளோ அவனின் கழுத்தில் கைகளை மாலையாக சுற்றி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டாள்.

அவளின் அருகாமையில் அவன் உணர்ச்சிகள் உடைப்பெடுக்க தொடங்க அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவன் அவள் கைகளை பிரித்து விட்டு எழுந்தபடி, "அப்பா வர்றார்டி ... எழுந்திருடி" என்று பதறியவனை எழுந்திருந்து நிதானமாக பார்த்தவள், "வரட்டுமே" என்று கண்ணடித்த படி கட்டிலிலிருந்து எழுந்தவள், "நானும் உன்னை பெரிய வீரன் என்று நினைச்சேன் மேன் நீ உன் அப்பாக்கு இப்படி பயப்படுற" என்றபடி குளிக்கச் சென்றாள்.

"இப்போ நீ கண்டிப்பா குளிக்கணுமா??" என்று எரிந்து விழுந்தவனை அவள் சட்டை செய்ததாக தெரியவேயில்லை. பதறியபடி அவள் வரும் வரை அறைக்குள் நடந்தவன் கதவு தட்டும் சத்தம் கேட்டதும் பயத்தில் உறைந்து போனான்.

அவன் பயத்தில் கதவை திறக்காமல் இருக்கும் போது கதவு இன்னும் வேகமாக தட்டப்பட்டது. கட்டிலில் கிடந்த அவள் உடைகளை தூக்கி கட்டிலுக்கு கீழே எறிந்தவன் மெதுவாக கதவை திறக்க அங்கு நின்றது கயல்.

"என்னடி?" என்று எரிச்சலாக அவளை பார்த்து கேட்டவனிடம், "மித்ரா எங்கே?" என்று கேட்க அவனோ, "அவள் இங்கே வரல" என்றான்.

அவனுக்கு தெரியவில்லை மித்ரா அறைக்கு வழி கேட்டது கயலிடம் தான் என்று

அவனை சந்தேகமாக பார்த்தவளிடம், "உண்மையா வரலடி போடி" என்று கூற... பொறுமை இழந்தவள், "டேய் ...இப்போ நான் தான் அவள உள்ள அனுப்பி வச்சேன்... என்கிட்ட பொய் சொல்லாம அவளை வெளிய அனுப்பு. அப்பா வேற வந்திருக்கார்டா. தெரிஞ்சா நான் செத்தேன்டா" என்றதும் தான் அவனுக்கு விளங்கியது கயலும் இதுக்கு உடந்தை என்று.

நிதானமாகியவன், "குளிச்சுகிட்டு இருக்கா" என்றான். "ஏன் அவ வீட்ல குளிக்கலயாமா??? இங்க வந்து என்ன குளியல் வேண்டி கிடக்கு அவளுக்கு?" என்று கேட்ட தங்கையை நினைத்து எங்காவது சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது அவனுக்கு.

அவனை தாண்டி அறைக்குள் வர போன கயலின் வழியை மறைத்து தடுத்தவன், "அதெல்லாம் அப்படி தான் உனக்கு புரியாது..." என்று கூற, "என்ன புரியாது?" என்றபடி சித்ரா பிரசாதத்துடன் அவர்கள் இருவரிடமும் வந்து நின்றார்.


அவரை கண்டதும் விஷ்வாவுக்கு நெஞ்சு கூட்டில் நீர் வற்றி போனது. கயலுக்கு திருநீறு சாத்தி விட்டு விஷ்வா நெற்றியில் வைக்க போன தாயின் கையை பிடித்து தடுத்தவன், "இன்னும் குளிக்கலம்மா" என்றான்.
 
Top