ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 5

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 5

ஓங்கி அடித்ததில் அவள் நெற்றி வெடித்து ரத்தம் பீச்சியடிக்க, ருத்ர மூர்த்தியாக நின்ற கரிகாலனின் கோபம் சற்றே மட்டுப்படுத்தப்பட்டு இருக்க, அவள் ஆழ்ந்த மூச்சை அவதானித்தவன் கண்களை மூடித் திறந்து கொண்டான்.

மயங்கி அவள் விழுந்த சத்தத்தில் அறைக்குள் ஓடி வந்த கரிகாலனின் தாய் " டேய் என்னடா ஆச்சு?? " என்று கீழே ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தவளைப் பார்த்து பதற , கரிகாலனோ " அவளை அடிச்சே சாகடிக்கும் அம்மா பொண்ணா அவ... நீங்க சொன்னது நிஜம் தான் " என்று தழு தழுத்த குரலில் திட்டினாலும் அவளை கைகளில் ஏந்திக் கொண்டவன் காரை நோக்கிச் சென்றான். அவன் தந்தையோ "ஏண்டா இப்படி பண்ணுன? நானும் வரேன், " என்று பின்னால் ஓடிச் செல்ல "பையனை பாத்துக்கோங்கப்பா, நானே சமாளிச்சுகிறேன்" என்றவன் தனியாகவே அவளை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றான்.

காரை ஓட்டிக் கொண்டே மயங்கி இருந்தவளை திரும்பிப் பார்த்தவன் மனமோ கனத்துப் போனது. உயிருடன் அவனை புதைப்பது போன்ற வலி அது. அவன் நிஜ காதல் நிராசையாகி போன வேதனை. எதிர்காலமே சூனியமாகி விட, கண் முன்னே அவன் பிஞ்சு பாலகன் முகம் வந்து போக "ஏண்டி உனக்கு இந்த கேடு கெட்ட புத்தி?" என்று முணுமுணுத்தவன் அடுத்த கணமே வைத்தியசாலையை அடைந்தான்.



வைத்தியசாலை உள்ளே அவளை எமெர்ஜென்சி ட்ரீட்மென்டுக்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து கொண்டு செல்ல, அவளை பரிசோதித்த மருத்துவர் நடந்ததை பற்றி விசாரித்தார். அவன் நினைத்து இருந்தால் அதனை ஆக்சிடென்ட் என்று மறைத்து இருக்க முடியும்.. ஏனோ அவனுக்கு அந்த நேரம் பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளக் கூட தோன்றவில்லை.

"நான் தான் டாக்டர் கோபத்துல லாப்டாப்பினால் அடிச்சேன்" என்று வாக்கு மூலம் கொடுக்க "வாட்? என்ன சார் சொல்றீங்க? நீங்களா இப்படி பண்ணினீங்க? இது போலீஸ் கேஸ் சார், காம்ப்லைன் கொடுத்தா தான் ட்ரீட் பண்ண முடியும்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன் "கம்பிளைன் கொடுத்துட்டு ட்ரீட்மெண்டை ஆரம்பிங்க டாக்டர் " என்றான் கொஞ்சமும் தன்னை பற்றி யோசிக்காமல்.

அவன் பதிலில் வைத்தியர் கொஞ்சம் ஆடிப் போனாலும் தனது கடமையை செய்ய, கொஞ்ச நேரத்தில் விசாரணைக்காக அங்கு போலீசார் வந்து இருந்தனர். வந்தவர்களுக்கு அவனிடம் விசாரிக்கும் அளவுக்கு தைரியமும் இல்லை, அவனது பதவியும் வலுவானது அல்லவா? அவர்கள் தயங்கியபடி "சார், ரிமாண்ட் பண்ணி விசாரிக்கணும் " என்று இழுக்க, "ம்ம்" என்றவன் கொஞ்சமும் அசராமல் அவர்களுடன் சென்றான்.

அவர்கள் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்த போதும் கூட "கோபத்தில் அவ்வாறு நடந்து கொண்டேன்" என்றவன் அவளது தரம் தாழ்ந்த செயலைப் பற்றி வாயையே திறக்கவில்லை. ஒன்று அவன் மகனின் எதிர்காலத்தை யோசித்து இருந்தான், அடுத்தது அவள் மனம் மாறி திருந்தி தன்னுடன் வந்தால் இந்த விடயம் அவள் எதிர்காலத்தை சமூகத்தில் கேள்விக்குறியாக்கும் என்றே அமைதி காத்தான்.

அதே சமயம் வைத்தியசாலையில் இருந்து கண் விழித்த மதுபாலாவின் மனமோ உலையாக கொதித்துக் கொண்டு இருந்தது. தனது பிழையை உணராதவளுக்கு அவன் திட்டியதும் அடித்துமே கோபமாக உருமாற, கரிகாலன் மீது பழி வெறி வேரூன்றியது. தனது தாய் தந்தைக்கு கூட அழைக்காமல் அவள் அடுத்து அழைத்தது என்னவோ விஜிதனுக்கு தான். அவனும் அவள் மேல் உள்ள மோகத்தில் வைத்தியசாலையை அடைந்த சமயம் போலீசாரும் அவளிடம் வாக்கு மூலம் பெற வைத்தியசாலையை அடைந்தனர். போலீசார் உள்ளே சென்றதால் அவன் வெளியே காத்திருக்க , மதுபாலாவிடம் சென்றவர்கள் அவள் உடல் நிலையை விசாரித்து விட்டு "என்னம்மா ஆச்சு?உங்க கணவர் உங்களை அடிச்சதா வாக்கு மூலம் கொடுத்து இருக்கார், நடந்ததை சொல்ல முடியுமா? " என்று கேட்க அவளோ " அவர் அடிக்கல சார், நான் தான் கீழ விழுந்தேன்" என்று சொன்னாள். உடனே அங்கிருந்த வைத்தியரும் நர்ஸும் "எவ்ளோ நல்ல பொண்ணு, அடிச்ச கணவரை கூட காட்டி கொடுக்கல, " என்று அவள் மீது நல்ல அபிப்ராயத்தை வளர்த்துக் கொண்டனர்.

அதே சமயம் வீட்டு வன்முறை என்ற பிரிவில் கேஸ் பதியப்பட்டு இருந்ததால் பெண்கள் புனர்வாழ்வு பிரிவினரும் அவளிடம் விசாரிக்க வந்து இருந்தனர். அவள் பதிலை கேட்டு திகைத்த போலீசார் "பயப்படாம சொல்லுங்க, நாங்க இருக்கோம்" என்று சொன்ன போதிலும் அவள் வாயை திறக்கவில்லை.. அனைவரும் அவளுக்கு கணவன் மேல் பாசம் என்று நினைத்து இருக்க அவள் மனமோ "உண்மையை சொல்ல ஆரம்பிச்சா கிண்டி கிளறி எனக்கும் விஜிதனுக்கும் இடையே இருக்கிற உறவை வெட்ட வெளிச்சம் ஆக்கிடுவாங்க , அதனால இப்படி சொல்லி தப்பிச்சுக்கலாம்" என்று தந்திரமாகவே யோசித்தது. ஆனாலும் அவளுக்கு கரிகாலன் மேல் கொலை வெறி ஆத்திரம் இருந்தது என்னவோ உண்மை தான்.

அவளது பதிலால் பெண்கள் புனர்வாழ்வு மையத்தினருக்கும் அவள் மீது நல்ல அபிப்ராயம் தோன்ற ஆரம்பிக்க, அவர்கள் அவளது குணத்தை பார்த்து வியந்து விட்டு அங்கிருந்து சென்று விட, உள்ளே நுழைந்தான் விஜிதன். அவனைக் கண்டதுமே சுற்றும் முற்றும் பார்த்து யாருமே இல்லை என்று உறுதி செய்து கொண்டவள் "அவனை ஏதாவது பண்ணனும் விஜி, லேப்டாப்பை தூக்கி அடிச்சான் தெரியுமா?" என்று நடந்ததை கண்ணீருடன் கூற, அவள் இதழ்களில் அழுந்த முத்தமிட்டவன் "நீ ஏன் போலீஸ்ல சொல்லல?" என்று கேட்க அவளோ "சொன்னா அப்புறம் நம்ம விஷயம் பப்லிக் ஆய்டுமே , " என்று சோகமாக சொன்னவள் "எனக்கு இனி அங்க போக மாட்டேன், நான் உங்க கூடவே இருக்கிறேன்" என்று அவன் தலையில் குண்டை தூக்கி போட்டாள். உடனே அவன் "அது சரி வராது மது, உன் அம்மா அப்பா கூட இரு, நாம அடிக்கடி மீட் பண்ணிக்கலாம்" என்று சொல்ல அவளோ "அப்பாக்கு இந்த விஷயம் தெரிஞ்சா என்ன கொன்னே போட்டிடுவார், எனக்கு யாருமே வேணாம் நீங்க மட்டுமே போதும்" என்றாள் பெற்ற குழந்தை தொடக்கம் அனைவரையும் மறந்து..

காமமும் பணமும் அவளுக்கு நிதர்சனத்தை மறக்க வைக்க அவள் அடம் பிடித்ததில் வேறு வழி இன்றி அவளை டிஸ்சார்ஜ் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றான் விஜிதன்.

அதே சமயம் , அவள் கேஸ் கொடுக்காததால் விடுதலை ஆகி, வைத்தியசாலைக்கு அவள் திருந்தி விட்டாளோ என்று நப்பாசையுடன் வந்த கரிகாலனுக்கு கிடைத்த செய்தி என்னவோ அவள் தனது அண்ணன் விஜிதனுடன் கிளம்பி சென்று விட்டாள் என்று தான். அதைக் கேட்டவன் "அண்ணனா? அந்த வார்த்தைக்கே அசிங்கம்" என்று முணு முணுக்க கோபத்தில் அவன் முகமோ சிவந்து போனது. அப்போது அவனிடம் வந்த வைத்தியர் பெண்மணி. "நல்ல பொண்ணா இருக்காங்க சார், இனி அவங்கள கஷ்டப்படுத்தாம நல்லா வச்சு பார்த்துக்கோங்க" என்று சொல்ல பெருமூச்சு விட்டவன் "ம்ம்" என்றபடி தளர்ந்த மனதுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். இரவு முழுதும் ஸ்டேஷனில் இருந்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்கு வந்தவனிடம் "மது எங்கப்பா? " என்று பதட்டமாக அவன் தாய் கேட்க அவனோ "அவன் கூடவே போய்ட்டாம்மா" என்று சொல்லும் போது அந்த வேதனை அப்பட்டமாக அவன் குரலில் தெரிய, "இப்படி ஒரு மோசமானவள கட்டி வச்சு நானே உன் வாழ்க்கையை கெடுத்துட்டேனே" என்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பிக்க அவரை இழுத்து அணைத்தவன் "எல்லாமே விதிம்மா" என்று சொல்லிக் கொண்டான். அவமானம் ஒரு பக்கம், வேதனை மறு பக்கம், குழந்தை தாயை தேடி அழும் அழுகை இன்னொரு பக்கம் என மொத்தமாக மூவரின் மனதும் சிதைந்து போக, அந்த குடும்பமே நரக வேதனையை அனுபவித்துக் கொண்டு இருந்தது. குடும்ப மானத்தை காப்பாத்தும் பொருட்டு வெளியே உண்மையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அவள் அன்னை வீட்டுக்கு சென்று இருப்பதாக சமாளித்தவர்கள் உண்மையை சொன்னது என்னவோ அவள் தாய் தந்தையிடம் மட்டுமே.,



அவள் தந்தையோ "அந்த கேடு கெட்டவள் என் பொண்ணே இல்ல'" என்று தலை முழுகி விட்டாலும் பாதிப்பு என்னவோ கரிகாலனுக்கு அவன் பையன் ஆதித்துக்குமே..

இந்த நேரத்தில் தான் விஜிதன் அவளை தனியாக வீடெடுத்து தங்க வைத்தவனுக்கு அரசியல் வசதிகளுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. அப்படி அவளுக்கு விஜிதன் மூலம் அறிமுகமானவர் தான் விருத்தாச்சலம்... பாதாள உலகம் சம்பந்தமாக ஒரு டீலை முடிக்க அவரை வீட்டுக்கு அழைக்க முடியாமல் அவள் வீட்டுக்கு அழைத்து இருந்தான் விஜிதன். விஜிதனின் ஆசை நாயகி தான் மதுபாலா என்று விருதாச்சலத்துக்கு தெரிந்தாலும் அவள் அழகில் அவர் மயங்கி தான் போனார்.

இதற்கிடையில் கரிகாலனுக்கு அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையும் இருக்கவில்லை. அப்படி திரும்பி வந்தால் சேர்ந்து வாழும் மன நிலையும் இருக்கவில்லை. ஆனாலும் அவன் விவாகரத்து கேட்காத போது , அவளிடம் இருந்தே விவாகரத்து கோரிய சம்மன் வீட்டுக்கு வந்து சேர்ந்தது. அவனும் அடுத்த கணமே அதற்கு ஒப்புதல் அளித்து விட, விவாகரத்தும் சுமூகமாக கோர்ட்டில் நடந்தது. ஒரு தடவை அவன் போய் வாக்கு மூலம் கொடுத்து விட்டு வர, அவளும் சென்று வாக்கு மூலம் கொடுத்து விட்டு வந்தாள். வெவ்வேறு நாட்களில் சென்றதால் இருவரும் சந்திக்க கூட சந்தர்ப்பம் அமையவில்லை.. கரிகாலனுக்கு அதிலும் ஒரு வலி அவள் குழந்தையை கூட உரிமை கோராமல் விட்டது தான். அவளிடம் தாய் பாசத்தையும் எதிர் பார்த்து தோற்று போனவன் "என்ன பொண்ணுடி நீ" என்று நினைத்து விட்டு குழந்தையை தன்னுடனேயே வைத்துக் கொள்ள சம்மதித்தான்.

இவ்வாறே விவாகரத்து ஒரு பக்கம் நிறைவேறி இருந்த சமயம், விருத்தாச்சலம் தனது ஆசையை வெளிப்படையாக விஜிதனிடம் சொல்லி விட்டார். விஜிதனுக்கு அதில் விருப்பமில்லை என்றாலும் தனது காரியம் முடிய வேண்டி இருந்ததால் மதுபாலாவிடம் வந்தவன் விடயத்தைக் கூற அடுத்த கணமே அவன் கன்னம் பழுத்தது. "நான் உன் கூட தான் இருப்பேன்,. நீ எதுக்கு என்ன கண்டவன் கூட படுக்க சொல்ற?" என்று கேட்க அவன் வாய் வரை "பெரிய உத்தமி போல பேசாதடி" என்று சொல்ல வந்தாலும் அதை சொல்லி வேலையை முடிக்க முடியாது என்று நினைத்தவன் " சொன்னா கேளு செல்லம், அந்த கிழவன் ஒரு சைன் போட்டா போதும், நமக்கு கோடி கணக்குல பணம் வரும்.., உனக்கு 30% தந்திடுறேன், " என்று அவள் மூளையை சலவை செய்ய ஆரம்பிக்க, ஆரம்பத்தில் தயங்கியவள் அடுத்து சம்மதித்துக் கொண்டாள்.

விருத்தாச்சலம் உடனும் அவள் கட்டில் லீலைகள் ஆரம்பிக்க, அவரோ அவள் அழகில் மெய் மறந்து போனவர் அவளை ஆஸ்தான நாயகியாக வைத்துக் கொண்டார். ஆரம்பத்தில் ப்ரோக்கர் போல செயற்பட்ட விஜிதனையும் கழட்டி விட்டவள் அவருடன் நேரடி தொடர்பில் இருக்க, அதைத் தட்டிக் கேட்ட விஜிதனின் உயிர் விபத்தில் இரு நாட்களிலேயே பறிக்கப்பட்டது.

அவளோ மனதுக்குள் "இது பெரிய பார்ட்டி தான் போல, கெட்டியா பிடிச்சுக்கணும்" என்று நினைத்து, அந்த தொகுதி மேயர் எலெக்ஷனில் இடமும் பிடித்தாள். அது யாருக்கு அதிர்ச்சியோ இல்லையோ கரிகாலனுக்கு பேரதிர்ச்சி. அதைக் கேட்டதுமே அவன் இதழ்கள் "விபச்சாரி" என்று முணு முணுக்க , அவள் அரசியல் பிரவேசத்தால் பத்தோடு பதினொன்றாக இருந்த கரிகாலனின் குடும்ப விடயம் சந்திக்கு வந்து சேர்ந்தது.

ஆயிரத்தெட்டு கேள்விகள் அவளை நோக்கி கரிகாலனை பற்றி தொடுக்கப்பட , ஏதோ தான் பெரிய உத்தமி போலவும், கரிகாலன் குடித்து விட்டு அடித்ததில் தலை உடைந்து போனது போலவும், ஆனாலும் அவள் அவனை காட்டிக் கொடுக்காமல் இருக்கின்ற போலவும் பேசி பேசியே வாக்குகளை சேகரிக்க தொடங்கி இருந்தாள். அதற்கும் மேல் ஒரு படி மேல சென்று "கணவன் மார் கை நீட்டினால் தன்னை போல சொந்த காலில் நிற்க பழக வேண்டும்" என்று பெண்ணியம் வேறு பேசினாள். அப்போது அவள் குழந்தை பற்றியும் கேள்விகள் வர ஆரம்பிக்க "பொண்ணு தானா குழந்தையை பார்த்துக்கணும், என் பையன் மேல எனக்கு அளவு கடந்த பாசம் இருந்தாலும் அவர் பண்ணின தப்புக்கு தண்டனையாக குழந்தையை அவரே வளர்க்கணும்" என்று வீரப் பெண் போல பேச, அவளை ஏதோ பெண் சிங்கமாக கற்பனை பண்ணிய சமூகமும் அவளுக்கு வாக்குகளை வழங்க தயாரானார்கள். இதை எல்லாம் கேட்ட கரிகாலன் ஒரு விரக்தி புன்னகையை சிந்தினானே தவிர வாயையே திறக்கவில்லை. அவன் குணம் அறிந்து தான் அவள் பயமின்றி பேச ஆரம்பித்து இருந்தாள். அவன் நினைத்து இருந்தால் ஒரு பேட்டியிலேயே அவள் அரசியல் பிரவேசத்தை சுக்கு நூறாக தகர்த்து எறிந்து இருக்க முடியும் , அவள் போன் கூட அவனிடம் தான் இருந்தது. அது போதுமே அவள் தடம் மாறிய வாழ்க்கையை நிரூபிப்பதற்கு... ஆனாலும் அமைதி காத்தான், தனது குழந்தையின் எதிர்காலத்துக்காகவும், அவள் குடும்பத்தினர் சமூகம் முன்னே கூனி குறுகி போக கூடாது என்ற காரணத்துக்காகவும். அவள் தனது தாய் தந்தையை மதிக்கவில்லை. ஆனாலும் அவன் தனது மாமனார் மாமியார் மேல் அளவு கடந்த மதிப்பை வைத்து இருந்தான்.

அதே சமயம், வேறு ஒரு மீட்டிங்கில் ஒரு மீடியா காரன் " மேயர் எலெக்ஷன்ல போட்டி போடும் மதுபாலா பற்றி என்ன நினைக்கிறீங்க சார்?" என்று கேட்க "நோ கமெண்ட்ஸ்" என்றவன் அந்த மீட்டிங்கில் இருந்தே வெளியேறி இருந்தான்.

இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி, அவளும் விருத்தாச்சலம் உதவியுடன் அமோகமாக ஜெயித்து மேயர் ஆகி விட, அதைக் கூட பொறுமையாக தான் கரிகாலன் பார்த்துக் கொண்டு இருந்தான். முதல் முதல் நடந்த மேயர் கூடத்துக்கு வந்தவனை நக்கலாக பார்த்து சிரித்தவள் "என்ன மிஸ்டர் கரிகாலன், எல்லாம் ஒழுங்கா பார்த்துகிறீங்களா?" என்று நக்கல் கேள்வி வேறு கேட்க , கோபத்தில் அவன் கழுத்து நரம்புகள் புடைத்தாலும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு "எஸ் மேடம்" என்று தான் பதிலளித்தான். அவனாக விலகி போனாலும் அவன் தன்னை அடித்த கோபத்தில் இன்று வரை அவளை சீண்டிக் கொண்டே இருந்தாள் அவள். இடைப்பட்ட காலத்தில் கரிகாலனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல விவாதங்கள் வந்து போனாலும் அவன் அமைதியாக இருந்ததால் அதெல்லாம் மறைந்து தான் போயின.

அவன் சேவையின் முன்னே அவனது தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றும் இல்லாமல் போனது. ஆனாலும் அவள் அவனை சீண்ட பணம் கொடுத்து மீடியாக்களிடம் கூட ஆட்களை ஆயத்தப்படுத்தி இருந்தாள் , அவன் எங்கு சென்றாலும் தர்மசங்கடமாக கேள்வி கேட்க அவள் பணம் கொடுத்து இருந்த யாரும் மீடியா காரர்கள் அதற்குள் மறைந்து இருப்பார்கள். ஆரம்பத்தில் "ஏன் மீடியா இப்படி சம்பந்தம் இல்லாம கேட்கிறாங்க?" என்று தடுமாறினாலும், அதன் பிறகு அது மதுபாலாவின் ஏற்பாடு என்று அறிந்தவன் அந்த கேள்விகளை அமைதியாக தான் கடந்து போனான்.

ஆனால் அனைவர்க்கும் பொறுமைக்கு ஒரு எல்லை இருக்கும் அல்லவா? அப்படி அவன் எல்லை உடைந்து போனது மாதவியின் கற்பழிப்பு விஷயத்தில். ஆம், அவன் உணர்ச்சிவசப்பட்டு பேசி இருந்தான் அந்த நேரத்தில்.. மதுபாலா மேல் இருந்த கோபமும், அவளது தான்தோன்றி தனமான குற்றச்சாட்டுகளும், அவமானப்படுத்தும் நடவடிக்கையும் அவன் பொறுமையை சோதிக்க வீறு கொண்டு எழுந்து இருந்தான்.

கரிகாலன் , மதுபாலா, விருத்தாச்சலம் சந்திப்புக்கு பிறகு, அன்று இரவு விருதாச்சலமுடன் கட்டிலை பகிர்ந்த மதுபாலா " எம் எல் ஏ எலெக்ஷனுக்கு என்னை நிற்க வைக்கிறீங்களா?" என்று தலையணை மந்திரம் போட்டுக் கொண்டே கேட்க அவரும் அவள் மேல் இருந்த மயக்கத்தில் "உன்னை நிற்க வைக்காமல் யாரை நிற்க வைக்க போறேன்?" என்று கேட்டவர் "உன் கிட்ட வெளிப்படையாக ஒரு விஷயம் கேட்கலாமா?" என்று கேட்டார். அவளோ "ம்ம் கேளுங்க" என்று சொல்ல " இந்த விஷயத்துல யார் பெஸ்ட்" என்று கேட்க அவளோ "கிழவனுக்கு ஆசைய பாரு" என்று நினைத்தவள் "நீங்க தான்," என்று வாய் கூசாமல் பொய் சொன்னாலும் அவளுக்கு விஜிதனின் நினைவுகளையும் மீறி வந்தது என்னவோ கர்ப்பமாக முன்னர் கரிகாலனுடன் இருந்த அந்த மூன்று மாத நினைவுகள் தான். அதை நினைத்து பெருமூச்சு விட்டவள் மனமோ "ஒன்னு கிடைச்சா இன்னொன்னு கிடைக்காது" என்று நினைத்துக் கொள்ள அவள் மொத்த எண்ணமும் இருந்தது என்னவோ இப்போது இந்த அரசியலில் தான்.
 

CRVS2797

Active member
அந்தாதி நீ தானே...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மு
(அத்தியாயம் - 5)


அடிப்பாவி...! என்ன தான் ஊர் குருவி மேல மேல பறந்தாலும் பருந்தாக முடியாது. என்ன தான் மேயர், அரசியல், எம்எல்ஏன்னு மேல மேல உசந்துட்டே போனாலும்.. அங்க இருந்து கீழே விழும் போது, திரும்ப எழுந்திருக்கவே முடியாத அளவுக்கு அடி படுமாம். அது மாதிரி இவ ஆடிய ஆட்டமெல்லாம் ஒருநாள் அடங்குற காலம் வரும்போது திரும்ப எழுந்திருக்கவே முடியாதாம். ஒரேயொரு நோய் வந்துட்டா கூட போதும் மொத்தம் ஜோலியும் காலியாகிடும்.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Top