ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 4

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 4

முதல் நாள் கல்யாண வீட்டில் வேலை செய்த களைப்பினால் தூங்கி எழுந்த கயல் தாமதமாகவே சமையலறைக்குள் நுழைந்தாள்.

சமையலறைக்குள் சித்ராவுடன் அரட்டை அடித்துக் கொண்டு இருந்த மித்ரா அவளை பார்த்து, "என்னம்மா நீ ? ஏதோ கல்யாண பொண்ணு போல இவ்ளோ லேட்டா எழும்புற ??" என்று மித்ரா கேட்க, "போடி" என்று அவளை திட்டியவள், "அம்மா காபி" என்றபடி அங்கிருந்த கட்டில் ஏறி இருந்தாள் மித்ராவுக்கு சரி சமமாக வாயாட கூடிய கயல்.

முதல் நாள் கல்யாண வீட்டில் சேர்ந்து அரட்டை அடித்ததில் இருவரும் நண்பர்களாகி இருந்தனர்.

"உனக்கு காபி கூட போட தெரியாதா?" என்று மித்ரா கேட்க அங்கு வந்த வசுந்தராவோ, "உனக்கு தெரியுமாடி?" என்று கேட்டபடி வந்தாள்.

"ஆஹா... வந்த முதல் நாளே நாத்தனாருக்கு சப்போர்ட்டை பாரு" என்றவள் கயலுக்கு பக்கத்தில் ஏறி அமர்ந்தாள். அந்நேரம் பார்த்து விஷ்வாவும் காபிக்காக அங்கு வந்திருந்தான்.

ஆனால் அவன் முக்கியமாக வந்தது மித்ராவை சைட் அடிக்கும் பொருட்டு.

கயல் பக்கத்தில், சமையல் கட்டில் சாய்ந்து நின்றவன் தோள் மேல் முழங்கையை வைத்தபடி கயல் மித்ராவுடன் அரட்டை அடிக்க தொடங்கினாள்.

பேசிக் கொண்டே அண்ணனை பார்த்த கயல், அவன் கண்கள் மித்ராவிலேயே நிலைத்திருப்பதை கண்டுக் கொண்டவள்,

"ஏன்மா மித்ரா... எங்க அண்ணன் விஷ்வாவை கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்ற கேள்வியில் அதிர்ந்த மித்ரா, 'குடும்பமே லூசா இருக்குமோ?' என்று மனதுக்குள் யோசித்தபடி,

"வெட்டி பயலுக்கெல்லாம் நான் கழுத்தை நீட்ட மாட்டேன்" என்று சொல்லி விட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

அவள் கூறியதில் அனைவருக்கும் கோபம் வந்திருக்க வேண்டும் ஆனால் யாரும் கோபப்படாமல் அவளின் சங்கடப்பட்ட முகத்தை பார்த்து சிரித்தனர் விஷ்வா உட்பட. வசுந்தராவுக்கு இருவரையும் இணைத்து வைத்து பேசுவது சகிக்கவில்லை போலும் அங்கிருந்த இனிப்பு தட்டை தூக்கிக் கொண்டு தன்னறைக்குள் நுழைந்து விட்டாள்.

"அப்போ எங்க அண்ணா வேலைக்கு போனா கட்டிப்பியா?" என்று அவளை சீண்டும் பொருட்டு கயல் கேட்க, "யோசிக்கலாம்... ஆனா வேலைக்கு போறதுக்கு நான்கு எழுத்து படிச்சிருக்கணும்மா" என்றாள் நக்கலாக. அவளை பொறுத்தவரை விஷ்வா ஒரு சண்டைகாரன் தானே என்கிற எண்ணம் அவள் மனதில் ஆழ பதிந்து இருந்தது.

"டேய் நீ படிக்கலயாம்டா, இப்ப என்னடா பண்றது? முதலிலிருந்து ஸ்கூல் போறியா?" என்று கயல் விஷ்வாவிடம் கேட்க, அதுவரை சிரித்தபடியே மித்ராவின் மேலிருந்து கண்ணை எடுக்காதவன் கயலை பார்த்து,

"என்ன பண்றது நீங்க யாரும் என்னை படிக்க வைக்கலையே" என்றான் உதட்டை பிதுக்கிய படி.

வசுந்தரா சாணக்கியன் கல்யாணம் பேசும் போது போலீஸ் ட்ரைனிங்கில் இருந்தவள் யாரை பற்றியும் விசாரிக்கவில்லை. அதில் அவளுக்கு ஈடுபாடும் இருக்கவில்லை. கல்யாணத்துக்கு முதல் நாள் கூட விஷ்வா கல்யாண மண்டபத்துக்கு பின்னால் ஒருவனை முழங்காலில் இருக்க வைத்து அடியாட்கள் சூழ்ந்து நிற்க அவன் முகத்தில் கை முஷ்டியால் நான்கு ஐந்து குத்து குத்தியவன் வழிந்த ரத்தத்தை கையை உதறியபடி பக்கத்திலிருந்த டப்பில் கழுவுவதை கல்யாண மண்டப மேல் அறையிலிருந்து ஜன்னல் ஊடாக பார்த்தவளுக்கு அவன் ஒரு முரடன் என்று மட்டுமே தெரிந்திருந்தது.

அவன் படிக்காமல் இருப்பதால் தான் இவ்வாறு வேலை செய்யாமல் சுத்தி திரிகிறான் என்று அவளாகவே யூகித்தவள் யாரிடமும் கேட்டால் விஷ்வாவுக்கு ரூட் போடுவதாக தப்பாக நினைத்து விடுவார்கள் என்ற பயத்தில் யாரிடமும் அவனை பற்றி கேட்கவுமில்லை

அதுவரை சும்மா இருந்த சித்ராவோ மித்ராவிடம், "ஏன் மருமகளே என் பையனுக்கு என்ன குறைச்சல் ராஜா போல இருக்கான்... படிக்கலன்னா கட்டிக்க மாட்டியா???" என்று அவரும் சீண்ட, "அத்தை நீங்களுமா?" என்றவள், "நான் ஒரு டாக்டரை தான் கல்யாணம் பண்ணுவேன். இந்த வெத்து வேட்டு எல்லாம் எனக்கு வேணாம்" என்றதும் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து லேசாக சிரித்துக் கொண்டனர்.

"அப்போ உன் ரூட் கிளீயர்டா" என்று விஷ்வா காதில் முணுமுணுத்த கயல், அவன் கையில் அடித்து விட்டு காபியை குடிக்க தொடங்கினாள்.

அவள் மனசை இன்னும் ஆழமாக அறியும் பொருட்டு கடைக்கண்ணால் காபி குடித்துக் கொண்டிருந்த விஷ்வாவை பார்த்த படி, "எங்கண்ணன் பற்றி என்ன நினச்ச? S V K ஹாஸ்பிடலின் ஒரு பார்ட்னர் தெரியுமா?" என்றவளை நோக்கிய மித்ரா இளக்காரமாக சிரித்தபடி, "அது உங்க அப்பாவும் பெரிய அண்ணாவும் சம்பாதிச்சது... உங்க சின்ன அண்ணனை நேர்மையா ஒரு ரூபா சுயமா சம்பாதிச்சு காட்ட சொல்லு பார்ப்போம் ... இப்போவே அவனை கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்றதை கேட்டதும் விஷ்வாவுக்கு புரை ஏறியது. சித்ரா ஓடி வந்து தலையில் அவன் தலையில் தட்டியவள், "ஒரு ரூபா என்ன ..." என்று தொடங்க போக தாயின் கையை பிடித்தவன், "பேசட்டும் விடுங்கம்மா" என்றான் சிரித்தபடி.

அவரும் அவனை பார்த்து சிரித்தபடி தனது வேலையை பார்க்க போய் விட, "என்ன ஆளாளுக்கு சிரிக்கிறீங்க... உங்க யாருக்கும் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையா? இங்க பாரு மேன் நான் சொன்னதுக்கு முறைக்கு உனக்கு கோபம் வந்து சம்பாதிக்க இப்போவே வீட்டை விட்டு வெளியேறணும்... நீ என்னன்னா உங்கம்மாவை பார்த்து பல்லை காட்டிட்டு இருக்கிற" என்றாள் சற்று கடுப்பாகவே.

அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவன், "உனக்கு ஏன் இவ்ளோ கோபம் வருது??? நீ கட்டிக்கிறேன் என்றதும் நான் ஓடி போய் சம்பாதிச்சு வரணும் என்று நீ ஏன் எதிர் பார்க்கிற??? டூ யு லவ் மீ?" என்று கேட்டான். அதில் சற்று அதிர்ந்தவள் சமாளிக்கும் பொருட்டு, "தொர இங்கிலிஷ் எல்லாம் பேசுது" என்றாள் நக்கல் கலந்த தொனியில்.

அதை கேட்டு அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனரே தவிர யாரும் அவளிடம் உண்மையை சொல்ல விரும்பவில்லை. அவள் பேச்சு அவர்களுக்கு சுவாரசியத்தை கொடுத்தது.

சற்று நேரம் அவளை கூர்ந்து பார்த்த விஷ்வா இருபக்கமும் சிரித்தபடி தலையை ஆட்டிவிட்டு அவ்விடத்தில் இருந்து அகன்றான்.

மித்ராவோ தோளை உலுக்கிவிட்டு கயலுடன் சேர்ந்து மறுபடியும் அரட்டை அடிக்க தொடங்கி விட்டாள்.

தனது அறைக்குள் சென்ற வசுந்தரா தூங்கிக் கொண்டிருந்த கணவனை எழுப்பாமல் கொண்டு வந்த லட்டை அவ்விடத்தில் இருந்த கதிரையிலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

அப்போது, "எனக்கு இல்லையா?" என்ற சத்தத்தில் திடுக்கிட்டு திரும்பியவள் தலைக்கு கீழ் இரு கைகளையும் வைத்து அவளை பார்த்தபடி படுத்திருந்த சாணக்கியனை கண்டாள்.

லட்டுடன் எழும்பியவள் அவனிடம் நீட்ட அதை எடுக்காதவன், "நீ ஊட்டி விட மாட்டியா?" என்று கேட்க லட்டை எடுத்து அவன் வாயில் வைக்க போக, "அப்படியில்லை" என்றவன் கண்கள் அவள் இதழில் நிலைத்தது.

இது நேற்று நடந்திருந்தால் ரசித்திருப்பாள்.

ஆனால் இன்று அவள் மன நிலையில் அதை ரசிக்க முடியவில்லை.

பெரு மூச்சு விட்டவள் லட்டை பக்கத்திலிருந்த ஸ்டூலில் வைத்து விட்டு வெளியே போக ஆயத்தமாக அவள் கையை பிடித்து இழுத்து அணைக்க, நேற்று இருந்த சிறிய நெகிழ்ச்சி கூட அவளிடம் இல்லாமல் போக வெறுப்புடன் அவளை விட்டு விலகியவன், "நீ போ" என்றபடி மற்றைய பக்கம் படுத்து தூங்க தொடங்கினான்.

வெளியே வந்தவள் சமையலறைக்குள் சென்று சிறிது நேரம் சித்ராவுடன் வேலையில் ஈடுபட்டாள்.

அப்போது தான் மித்ரா அங்கு இல்லாததை கவனித்தவள், "எங்கத்தை மித்ரா?" என்று கேட்க "கயல் ரூமில் இருக்காம்மா" என்றதும் அவள் அறையை நோக்கிச் சென்றாள். அங்கிருந்த இருவருடனும் பேச தொடங்கியவள் கவலைகளை மறந்து போனாள்.

மித்ரா சென்றதும் மீண்டும் வெறுமையை உணர்ந்தவள் தயங்கியபடி சாணக்கியன் அறைக்குள் நுழைய உள்ளே வந்தவளை சினம் தெறிக்க பார்த்தவன் அவளை நோக்கி, "எனக்கும் உன் கூட இருக்கணும்னு விருப்பமில்லை... ஆனால் என் பெயர் சொல்ல எனக்கு ஒரு மகன் வேணும்" என்றவன் அவளை மீண்டும் ஆட்கொண்டு கடமைக்கு அவளுடன் குடும்பம் நடத்த தொடங்கினான்.

அவளுக்கு இந்த இயந்திர வாழ்க்கையில் விருப்பமில்லாத போதும் கூட அவளும் கடமைக்கு மனைவியாக இருந்தாள். ஏற்கனவே மன வலியில் இருந்தவள் மனம் அவன் கூற்றால் இன்னும் ரணமாகி போனது.

இரு நாட்கள் கழித்து பெண் வீட்டு அழைப்புக்கு பெரிய நிகழ்வு ஏற்பாடு பண்ணப் பட்டிருந்தது.

வான் நீல நிற டிசைனர் புடவையில் தேவதை போல் வசுந்தரா நிற்க அதற்கு பொருத்தமான கோட் சூட்டுடன் சாணக்கியன் பக்கத்தில் நின்றான். இருவருக்கும் முகத்தில் புதிதாக கல்யாணம் பண்ணிய மகிழ்ச்சி கொஞ்சமும் இல்லை.

மித்ராவோ இளஞ்சிவப்பு நிற லேஹங்காவில் வெண்ணிற இடை தெரிய ஷால் போட்டு அழகாக ஜொலித்தாள். விஷ்வாவும் வெண்ணிற கோட் போட்டு இருக்க நிகழ்ச்சி களை கட்ட தொடங்கியது.

போடப்பட்ட பாடலுக்கு மித்ராவும் கயலும் ஆடிக் கொண்டிருக்க விஷ்வாவின் கண்கள் மித்ராவையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தது. அவன் பார்வையை அறிந்தவளின் பொறுமை சிறிது நேரம் கழித்து காற்றில் பறக்க, "இருடா வரேன்" என்று முணுமுணுத்தபடி அவனருகில் வந்தவள், "இங்கே வா" என்று சைகையால் கூப்பிட்டாள்.

"என்னையா ?" என்று சைகையில் கேட்டவனை, முறைத்தவள், "உன்னைத்தான்" என்று சைகையில் சொல்லியபடி திரும்பி முன்னே நடந்தாள்.

அவள் பின்னே அவன் செல்ல வெளியில் இருக்கும் மரங்களுக்கிடையில் அழைத்துச் சென்றவள், "எப்படி இருக்கேன்" என்று தனது ஸ்கர்ட்டை ஒரு கையால் பிடித்து ஆட்டியபடி கேட்டாள். அவள் தோரணையில் நக்கல் மட்டுமே பொதிந்திருந்தது.

"செம" என்று அவன் கையை உயர்த்தி காட்டியதும் முகத்தை கடினமாக்கியபடி, "இங்க பாரு... உன் அண்ணா எம்.பி... எங்க அக்கா கலெக்டர்... நான் போலீஸ்... ஒண்ணுக்கும் உதவாத உனக்கும் எனக்கும் செட் ஆகாது. சும்மா பார்த்து ஆசைய வளர்த்துக்காம வேற பொண்ண பார்த்து சைட் அடி... என்ன இரிடேட் பண்ணாத... உன் கண்ணை நோண்டிருவேன்" என்று சுட்டு விரலை நீட்டி பேசியவளை கை கட்டி நின்று பார்த்தவன்,

"அப்படி தான் டி உன்னை பார்ப்பேன்... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ" என்றான் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.

அவனின் பேச்சில் கோபம் எழ வலது கையிலிருந்த காப்பை இடது கையால் கீழிறக்கியவள், "போலீஸ் அடி எப்படி இருக்கும்னு தெரியுமா?" என்று கேட்டாள்.

அவள் தோரணை சிரிப்பை வரவழைத்தாலும் அதை காட்டாமல் முகத்தை கடினமாக வைத்தவன், "அடிச்சு தான் பாரேன்" என்றான்."அடி வாங்கினது மறந்திருச்சு போல?" என்று இடுப்பில் இரு கைகளையும் குற்றி கேட்டவளிடம், "நீ போலீஸ் ட்ரைனிங் முடிச்சவ தானே... அன்னைக்கு நான் அசந்து இருந்திட்டேன். இன்னைக்கு எனக்கு ஒரு அடி முடிஞ்சா அடி" என்றான் மார்புக்கு குறுக்கே தனது இரு கைகளையும் கட்டி அவளை கூர்ந்து பார்த்தபடி.

அவன் எதிர்பார்க்காத நேரத்தில் வலது கையை பொத்தியவள் அவன் முகத்தை நோக்கி கொண்டுச் செல்ல லாவகமாக உடலை வளைத்து பின்னால் சென்றவன் தனது வலது கையால் அவள் முஷ்டியை பிடித்து அழுத்தி அவளை அருகில் இழுத்து மற்றைய பக்கம் திருப்பி அவள் கழுத்தை தனது கையையும் அவள் கையையும் சேர்த்து சுற்றியவன் அவள் எதிர் பார்க்காமல் அவளை அலேக்காக தூக்கி தனது தலைக்கு பின்னால் கொண்டு வந்து அவள் வெற்றிடை அவன் கேசத்தில் பட ஒரு கையால் அவள் கால்களிரண்டையும் அணைத்து மறு கையால் முதுகு பகுதிக்கு பின்னால் கொண்டு வந்து அவளை சவட்டியபடி திரும்பி அவள் முகத்தை பார்த்தான்.

அவனின் இந்த தாக்குதலை எதிர் பராதவள், "கீழே இறக்கி விடுடா..." என்று கத்தினாள். அவளை பார்த்து நக்கலாக சிரித்தபடியே, "என்ன ட்ரைனிங் தான் கொடுக்கிறாங்களோ?" என்று கூறிக் கொண்டு காலிலிருந்த கையை எடுத்து அவளை பின்னால் இறக்கியவன் அவளை நோக்கி திரும்பி கைகளை கட்டியபடி, "எப்படி இருந்தாலும் இந்த பொறுக்கி தான் உனக்கு புருஷன்... போடி" என்று கடின குரலால் சொன்னான்.

அவன் தாக்குதலில் நிலை குலைந்தவள் அங்கிருக்க பயந்தபடி ஓடிச் சென்றாள். அவள் செல்வதை பார்த்து சிரித்தபடியே சாணக்கியன் அருகில் போய் புகைப்படமெடுக்க நின்றான்.


அப்போது தமையனிடம், "என்னடா ரெஸ்லிங் எல்லாம் முடிஞ்சுதா?" என்று கேட்ட சாணக்கியனை அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தான் விஷ்வா.
 
Top