M.Indumathi
Well-known member
Nice
Super sisஅத்தியாயம் 4
அன்று எல்லோருக்கும் அவள் சாக்லேட் வாங்கி கொடுத்தாள்.
மாலை நேரம் போல, அவள் எதிர்பார்க்காமல் அவளை டைரெக்ட்டரின் அறைக்குள் அழைத்து இருந்தார்கள்...
ஆம் கேக் வாங்கி வெட்ட ஏற்பாடு செய்து இருந்தார்கள்...
ஆச்சரியமாக இருந்தது...
எல்லோரும் பாட்டு பாடி கேக்கும் வெட்ட வைத்தார்கள்...
சந்தோஷமாகவும் இருந்தது...
அவளுக்கு புடவை ஒன்றும் வாங்கி கொடுத்து இருந்தார்கள்...
பிரியந்தவும் அங்கே தான் நின்று இருந்தான்...
மெல்ல மெல்ல அங்கே ஒன்றிப் போனாள்...
அலுவலகத்தினருடன் பழக ஆரம்பித்து விட்டாள்...
பிரியந்த இப்போதெல்லாம் தமிழில் தான் பேசுவான்...
தமிழில் தான் திட்டும் விழும்...
'சிங்களம் எண்டாலும் பரவாயில்ல, விளங்காது, தமிழில ஏசக்குள்ள மனசு கஷ்டமா இருக்கு' என்று நினைத்தும் கொண்டாள்...
அவனுடன் சைட்டுக்கு செல்வாள்...
கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்து பேசவும் ஆரம்பித்து இருந்தாள்.
பிரியந்தவை ரசனையாகவும் பார்த்துக் கொள்வாள்...
ஈர்க்கும் தோற்றம், ஆளுமையான பேச்சு...
யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும்?
அன்று அவர்களின் டைரெக்டரோ, ராதிகாவிடம் கடிதம் ஒன்றுக்கு பதில் எழுத சொல்லி கொடுத்து இருந்தார்...
கடிதமோ சிங்களத்தில் இருந்தது.
அவளுக்கு மயக்கம் வராத குறை தான்...
இப்படியான நேரத்தில் சாந்தன் தான் உதவி செய்வான்...
இன்று சாந்தன் வரவில்லை...
இன்றே அவள் வேலையை முடித்தாக வேண்டும்...
அங்கே தமிழ் தெரிந்தது சாந்தன் மற்றும் பிரியந்த தான்...
வேறு வழி இல்லை... பிரியந்தவை தேடி சென்றாள்...
லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவன் அவளை புருவம் சுருக்கி பார்க்க, "கடிதம் எழுத சொல்லி சேர் தந்தார், எனக்கு விளங்குதே இல்லை" என்று சொல்ல, கண்களால் இருக்க சொன்னவன், அவளிடம் இருந்து ஃபைலை வாங்கிக் கொண்டான்.
அவளும் அமர்ந்து கொள்ள, கடிதத்தை வாசித்தவனோ, விளக்கம் சொல்ல ஆரம்பிக்க, "ஐயோ இருங்க மறந்திடுவேன், பக்கத்தில பென்சில் ல எழுதுறன்" என்று சொல்லிக் கொண்டு, பென்சிலை எடுத்து, எழுந்து நின்று, சற்று குனிந்து, அவன் கைக்கு அருகே இருந்த பேப்பரில் எழுத தொடங்கி விட்டாள்...
அவனுக்கோ அவள் தனக்கு முன்னே இப்படி நின்றது ஒரு மாதிரி ஆகி விட்டது...
புடவை தான் அணிந்து இருந்தாள்...
அனாலும், அவள் நின்ற தோரணையில் அவள் அங்கங்கள் பட்டும் படமால் தெரிய, சட்டென அவளில் இருந்து பார்வையை திருப்பியவன், "இருந்து எழுது" என்று சொல்லி, ஃபைலை அவளை நோக்கி தள்ளி வைக்க, அவளும் எழுத ஆரம்பித்து விட்டாள்...
அவன் சொல்வதை எல்லாம் அவள் எழுத, அவன் விழிகள் இப்போது அவள் முகத்தில் படிந்தன...
அந்த மூக்குத்தி அவனை ஈர்த்து எடுத்தது...
அவன் இப்படி பெண்களை எப்போதும் ரசித்தது இல்லை...
அவளுடன் கொஞ்ச நாட்கள் பழகியதினால் அவனை அறியாமலே ஒரு ஈர்ப்பு... அவளது குழந்தை தனம் பிடித்துப் போய் விட்டதோ என்னவோ?
அவளை ரசிக்கின்றோம், என்று உணர்ந்தவனோ சட்டென தலையை உலுக்கிக் கொண்டான்.
அவளும், எல்லாமே எழுதி முடித்தவள், "தேங்க்ஸ் அய்யே" என்று சொல்ல, "வீட்ல நீ மட்டும் தானா?" என்று கேட்டான்.
"இல்ல, அண்ணா இருக்கார், கல்யாணம் முடிச்சிட்டார்" என்றாள்...
"நீ முடிக்கலையா?" என்று கேட்டான்.
அவனுக்கு தெரிந்து கொள்ள வேண்டியது இதற்கான பதிலை தானே...
அவளோ, "இப்ப தானே வேலைக்கு சேர்ந்து இருக்கிறன், கொஞ்ச நாள் போன பிறகு தான் மாப்பிள்ளை பார்ப்பாங்க" என்றாள்.
"லவ் எல்லாம் இல்லையா?" என்று கேட்டான்...
அவளோ சிரித்துக் கொண்டே, "இல்ல, அப்பாவுக்கு பயம்" என்றாள்...
குரலை செருமிக் கொண்டே, "ம்ம்" என்றான் அவ்வளவு தான்...
அவளும், ஒரு தலையசைப்புடன் வெளியேறி விட்டாள்...
அவனோ பெருமூச்சுடன் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்தான்.
அவளுடன் இரு மாதங்களாக தான் பழகுகின்றான்...
எப்படி இந்த ஈர்ப்பு வந்தது என்று அவனுக்கே தெரியவில்லை...
எத்தனையோ பெண்களை கடந்து வந்து இருக்கின்றான், இவளிடம் மட்டுமே இந்த ஈர்ப்பு...
இது நடைமுறைக்கு சரி வராது என்று அவனுக்கும் தெரியும்...
தன்னை அடக்கிக் கொள்ள முயல்கின்றான்...
அது சாத்தியமா என்றும் தெரியவில்லை...
முடிந்தவரை அவளை தவிர்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
இப்படியான ஒரு நாள், அவனுடன் சைட் ஒன்றுக்கு சென்றாள் ராதிகா...
அங்கே இடத்தைப் பார்த்து விட்டு திரும்பிய சமயம் அங்கே நின்ற விவசாயிகள் ஒரு வீட்டில்அவர்களுக்கு சாப்பாடு கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தார்கள்... வழக்கமாக இப்படி வரும் அலுவலகத்தினரை உபசரிப்பது வழக்கம்...
அவளும் பிரியந்தவும் சுராஜ்ஜும் அங்கே சென்றார்கள்...
ராதிகாவோ ஜீன்ஸ் மற்றும் பச்சை நிற டாப் அணிந்து இருந்தாள்...
தலையை தூக்கி கொண்டை போட்டு இருந்தாள்...
வெயிலில் அலைந்த களைப்பு முகத்தில் அப்படமாக தெரிந்தது...
அவள் அருகே தான் பிரியந்த நடந்து வந்தான்...
தன்னையே அறியாமல் அவன் விழிகள் அவளில் ஒரு கணம் ரசனையாக படிந்து மீண்டது.
அவள் மூக்குத்தியில் எப்பொதுமே அவனுக்கு மயக்கம், இப்போதும் பார்த்துக் கொண்டான்...
தவிர்க்க நினைக்கின்றான்...
ஆனால் இப்படி அருகே வரும் போது எப்படி தவிர்க்க முடியும்...
"களைப்பா இருக்கா?' என்று கேட்டான்..
"இல்லை" என்றாள் அவசரமாக...
"ஏச மாட்டேன் சொல்லு" என்றான்.
"ஓம் அண்ணா" என்றாள்...
அவள் அண்ணா என்று கூப்பிடுவது அவனுக்கு ஏனோ பிடித்தம் இல்லை...
சொல்வதா வேண்டாமா என்று தடுமாற்றம்...
"பேர் சொல்லி கூப்பிடு" என்றான்...
அவனை அதிர்ந்து திரும்பிப் பார்த்தவள், "என்னது?" என்று கேட்க, "உன்னை விட ரெண்டு வயசு தானே கூட, பேர் சொல்லி கூப்புடு" என்று சொல்லி விட்டு, அவன் சுராஜ்ஜூடன் பேச ஆரம்பித்து விட, அவளுக்கோ அவனை பெயர் சொல்லி கூப்பிட அசௌகரிகமான உணர்வு...
மரியாதை கொடுத்தே பழகி விட்டாளே...
எதுவும் சொல்லவில்லை, சாப்பிட அமர்ந்து விட்டார்கள்...
அவர்களுக்கு உணவும் பரிமாறப்பட்டது...
அவளுக்கோ கடுமையான பசி...
உணவை வேகமாக சாப்பிட ஆரம்பித்து விட்டாள்...
பிரியந்தவும் அவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்து விட்டு சாப்பிட, "நல்லா இருக்கு சாப்பாடு" என்றாள் பிரியந்தவிடம்...
அவனும், அவள் சொன்னவற்றை சிங்களத்தில் அங்கே இருந்தவர்களிடம் மொழி பெயர்க்க, அவர்களும் சிரித்துக் கொண்டே, நன்றி சொல்ல, அவளோ, "என்ன இறைச்சி?" என்று கேட்டாள்...
பிரியந்தவும் குரலை செருமிக் கொண்டே, "கோழி" என்று சொன்னாள்.
"வித்தியாசமா இருக்கே" என்றாள்...
"நாட்டுக் கோழி" என்று சொன்னான்...
அவளும், "ஒஹ்" என்று சொல்லிக் கொண்டே, கையை கழுவி விட்டு சற்று நேரம் அங்கே இருப்பவற்றை சுற்றிப் பார்த்துக் கொண்டே, பிரியந்தவிடம் நிறைய கேட்டாள்...
அவனும் சொன்னான்...
அங்கே நின்ற பெண்கள் பாவாடை மற்றும் ஜாக்கெட் தான் அணிந்து இருந்தார்கள்...
ஏற்கனவே பார்த்து இருக்கின்றாள் தான்...
இன்று இந்த சந்தேகத்தை கேட்டே ஆக வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, "இவங்க சாரி ஏன் உடுக்கிறது இல்ல?" என்று கேட்டாள்...
அவனோ, "உடுப்பாங்களே, ஒசரி, கேள்விபட்டது இல்லையா?" என்று கேட்டான்...
"அது தெரியும்... ஆனா இப்ப உடுக்கலையே" என்றாள்...
"இந்த உடுப்பு எங்கட கல்ச்சர்" என்றான்.
"ஒஹ்" என்று மட்டும் சொல்லிக் கொண்டே, அவனுடன் எழுந்து கொண்டாள்...
ஜீப்பிலும் ஏறி இருக்க, ஜீப்பும் புறப்பட்டது...
நன்றாக தாமதமாகி விட்டது...
இனி அலுவலகத்துக்கு போய், மீண்டும் பஸ் எடுத்து ராதிகா தனது வீட்டுக்கு செல்வது எல்லாம் சாத்தியம் இல்லை...
அது பிரியந்தவுக்கும் தெரியும்...
எட்டு மணியும் தாண்டி இருக்க, "உன்னை வீட்ல விடுறோம்" என்றான் பிரியந்த.
"தேங்க்ஸ்" என்றாள் மென் சிரிப்புடன்...
கொஞ்ச தூரம் சென்றதும், குரலை செருமியவன், "இண்டைக்கு நீ சாப்பிட்டது கோழி இறைச்சி இல்ல" என்றான்...
அவளுக்கு தூக்கி வாரிப் போட, "அப்ப?" என்று கேட்டாள்...
"கொக்கு இறைச்சி" என்றான்...
அவளுக்கு மயக்கமே வராத குறை தான்...
"சுட்டக் நவதன்ன"( கொஞ்சம் நிற்பாட்டுங்க) என்று சொல்ல, சுராஜ் அருகே அமர்ந்து இருந்த பிரியந்தவைப் பார்த்தான்...
அவனும் கண்களால் நிறுத்த சொல்ல, வண்டியும் ஓரமாக நின்றது.
வேகமாக ஜீப்பில் இருந்து இறங்கியவள் வாய்க்குள் கையை விட்டு வாந்தி எடுக்க முயன்றாள்...
அது வெளியே வந்தால் தானே...
பிரியந்த பெருமூச்சுடன் இறங்கிக் கொண்டே, "இப்ப என்ன?" என்று கேட்டான்...
அவளோ, "சத்தியும் வருது இல்ல" என்று சிணுங்கிக் கொண்டே, மீண்டும் முயன்றாள்...
"அது செமிச்சு இருக்கும்" என்றான்...
அவளோ, அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "இத ஏன் நீங்க அங்க வச்சு சொல்லவே இல்ல?" என்று சற்று கோபமாகவே கேட்டாள்...
"இப்படி தான் செஞ்சு இருப்பா, அவங்க மனசு கஷ்டப்படுமே" என்றான்...
அதில் நியாயம் இருந்தது...
"சாப்பிட முதல் சொல்லி இருக்கலாமே, சாப்பிடாம இருந்து இருப்பேன்" என்றாள்...
"நீ இருந்த பசிக்கு, உன்னை பட்டினி போட மனசு கேட்கல" என்றான்...
"ஐயோ இப்ப நான் என்ன செய்யுறது?" என்று தவிப்பாக கேட்டாள்...
"கோழியும் பறவை, கொக்கும் பறவை தானே, கோழி சாப்பிடுற நீ, கொக்கு சாப்பிட மாட்டியா?" என்று கேட்டான்...
"எனக்கு ஒரு மாதிரி இருக்கு, கொக்கு பாவம்" என்றாள்..
"அப்ப, கோழி, மீன் எல்லாம் பாவம் இல்லையா?" என்றான் சிரித்துக் கொண்டே...
அவனிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று தெரிந்தது,
"சரி போகலாம் வாங்க" என்று சொல்லிக் கொண்டே ஜீப்பில் ஏறிக் கொள்ள, ஜீப்பும் புறப்பட்டது...
"நீங்க இதெல்லாம் சாப்பிடுவீங்களா?" என்று கேட்டாள்...
"ம்ம்" என்றான்...
"என்னென்ன சாப்பிட்டு இருக்கீங்க?" என்று கேட்டாள்...
"கோழி, உடும்பு, மாடு, கொக்கு, மான், மரை" என்று அடுக்கிக் கொண்டே போக, "உடும்புமா உவாக்" என்று வாந்தி எடுப்பது போல சைகை செய்ய, "நல்லா இருக்கும் தெரியுமா? ட்ரை பண்ணி பாரேன்" என்றான்..
"ஐயோ எனக்கு ஏலா, மனுஷ இறைச்சி மட்டும் தான் மிச்சம் வச்சு இருக்கீங்க போல" என்று சொல்ல, சத்தமாக சிரித்தவன், "வாய்ப்பு கிடைக்கல" என்று சொல்லிக் கொண்டே, அவளை திரும்பிப் பார்க்க, "வாய்ப்பு கிடைச்சா சாப்பிடுவீங்களா?" என்று கேட்டாள்...
"அந்தளவுக்கு கொடூரமனவன் இல்ல நான்" என்றான் கண்களை சிமிட்டி...
"ஓம் நல்லாவே தெரியுது" என்றாள் இதழ்களை சுளித்துக் கொண்டே...
அவனோ, "நீ, மீன் எல்லாம் சாப்பிடுறா தானே, நான் உடும்பு சாப்பிட்டது தான் உனக்கு பிரச்சனையா?" என்று கேட்க, "எனக்கு ஒண்டும் பிரச்சனை இல்ல, உடும்பு சாப்பிடுற பொண்ண பார்த்து கல்யாணம் கட்டுங்க" என்று சொல்லி விட்டாள்...
அவனுடன் இயல்பாக பழக ஆரம்பித்தத்தில் இருந்தே நட்பாக பேச ஆரம்பித்து விட்டாள்...
அவர்கள் தமிழில் பேசியதால் சுராஜ்ஜுக்கு எதுவும் விளங்கவில்லை...
அவளை புருவம் சுருக்கிப் பார்த்தவன், "வர போற பொண்டாட்டிக்கு உடும்பு பிடிக்கல எண்டா சாப்பிடுறதை விட்டுவேன்" என்றான்.
அப்போது தான் அத்து மீறி பேசி விட்டோம் என்று அவளுக்கும் உறைக்க, "ஐயோ சொறி, நான் ஏதோ வாய் தவறி" என்று அவள் இழுக்க, "இப்படியே கதை, பிடிச்சு இருக்கு" என்று மென் சிரிப்புடன் சொல்லி விட்டு அவன் முன்னால் திரும்பிக் கொள்ள, அவள் புருவம் இடுங்கியது...
பெண்கள் சட்டென ஆண்கள் தங்களுடன் பழகும் விதத்தை வைத்தே. அவர்களை மோப்பம் பிடித்து விடுவார்கள் தானே...
முதல் தடவை அவன் பேச்சு அவளுக்கு உறுத்தியது... யோசனையுடனேயே அமர்ந்து இருந்தாள்...