ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 31

அத்தியாயம் 31

அடுத்த நாள் காலையில் எழுந்த சர்வஜித்தோ அடுத்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தான்...

தன்னை பற்றிய உண்மை தெரிந்தவுடனேயே எதையும் யோசிக்காமல் கிளம்பி வந்து விட்டான்...

இனி திட்டங்களை போட்டு செயற்படுத்த வேண்டும்...

அனைவரையும் அமெரிக்கா அழைத்துச் செல்வது தான் அவன் எண்ணமே...

மருதநாயகத்துக்கு நல்ல மருத்துவம் பார்க்க வேண்டும்...

ரணதீரனை அங்கே இருக்கும் பாடசாலையில் கல்வி கற்க வைக்க வேண்டும்...

இப்படி பல எண்ணங்கள் அவனுள்...

ஆதிரையாழ் இதற்கெல்லாம் சம்மதிப்பாளா என்கின்ற எண்ணம் வேறு அவனுக்கு...

சாமாளித்து விடலாம் என்கின்ற நம்பிக்கையுடன் எழுந்துக் கொண்டவனோ, ஆயத்தமாகி ரணதீரனையும் நர்சரிக்கு காரில் கொண்டு விட்ட பின்னர் வீட்டுக்கு வந்தான்...

நேரே வந்தவன், தோப்பில் அமர்ந்து இருந்த மருதநாயகத்தின் முன்னே வந்து அமர, அவரோ, "வந்துட்டியாப்பா?" என்று கேட்டார்...

"ம்ம், என் கூட அமெரிக்கா வர்றீங்களா தாத்தா? எல்லாரும் அங்கே போகலாம்" என்றான்...

மருதநாயகமோ, "எதுக்குப்பா உனக்கு தொந்தரவா? யாழையும் தீரனையும் அழைச்சுட்டு போ, என் கூட ஃபோன்ல நீ பேசுனாலே போதும்... இந்த கிழவனுக்கு இங்க தான் நிம்மதி" என்று சொல்ல, அவனோ இருக்கையை இழுத்துப் போட்டுக் கொண்டே, அவரை நெருங்கி இருந்து அவர் கையை பற்றிக் கொண்டான்...

அவன் செயல் அவருக்கு புதிதாக இருந்தது...

அவனை வியந்து பார்த்தார்...

அவனும் தனது உணர்வுகளை அடக்க நினைக்கின்றான்...

ஆனால் முடியவே இல்லை...

எப்படியோ அவர் பேச பேச உணர்வுகள் ஆர்ப்பரித்துக் கொண்டு கிளம்பி விடுகின்றன...

குரலை செருமிக் கொண்டே, அவர் விழிகளைப் பார்த்தவன், "உங்கள என் கூடவே வச்சுக்கணும்னு ஆசைப்படுறேன்" என்றான்...

அவன் நா தழுதழுத்தது...

எப்படி இருக்க வேண்டியவனை இப்போது உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்த்துக் கொண்டல்லவா இருக்கின்றார் இந்த மருதநாயகம்...

அவரை வைத்துப் பார்க்காமல் யாரை அவன் வைத்து பார்க்க போகின்றான்?

அவன் நடவடிக்கை அவருக்கு புதிதாக இருந்தது...

பிடித்தும் இருந்தது...

மறுக்க தோன்றவில்லை...

அவன் மீது கண் மூடித்தனமான அன்பை கொண்டு இருப்பவர் அவர்...

உடனேயே, "சரிப்பா வரேன்" என்று சொல்லி விட்டார்...

அவனும் மென் புன்னகையுடன் அவர் கையை விட்டவன், "அங்க உங்க ஹெல்த்தையும் செக் பண்ணிக்கலாம்" என்று சொல்ல, அவரும், மென்மையாக புன்னகைத்துக் கொண்டார்...

இதே சமயம் அவருக்கும் சர்வஜித்துக்கும் காஃபி போட்டுக் கொண்டு வந்தாள் ஆதிரையாழ்... எப்படியும் மருதநாயகத்துக்கு மட்டும் கொடுத்தால் "சர்வாக்கு காஃபி" என்று அவர் சொல்ல தான் போகின்றார்... அதனால் அவனுக்கும் சேர்த்து காஃபி கொண்டு வந்து இருந்தாள்.

மருதநாயகத்துக்கு காஃபியை கொடுத்து விட்டு, சர்வஜித்துக்கு நீட்ட, அவனோ அவளை விழுங்கி விடுவது போல பார்த்துக் கொண்டே காஃபியை எடுத்தான்...

அவளிடம் இருந்து ஒரு முறைப்பு மட்டுமே பதிலாக...

அவள் முறைத்தாலும் அவன் பார்வை அவளை விட்டு அகலவே இல்லை...

அவளை பார்த்துக் கொண்டே, அவன் காஃபியைக் குடிக்க, அவளுக்கோ அவனுடன் இருந்த நாட்களில் அவன் காஃபி கேட்பது நினைவுக்கு வந்தது...

"ச்ச" என்று தலையை உலுக்கி தன்னை நிதானப்படுத்திக் கொண்டே, அங்கிருந்து கிளம்ப போக, "யாழ்" என்று அழைத்தார் மருதநாயகம்...

அவளும், "சொல்லுங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே திரும்ப, "சர்வா எல்லாரையும் அமெரிக்காவுக்கு வர சொல்றான்மா, நம்ம தீரன் கிட்ட பக்குவமா சொல்லு, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் விட்டு வர்றோம்னு... அவன் ஃபீல் பண்ண கூடாதுல" என்றார்...

அவளுக்கு தூக்கி வாரிப் போட்டது...

அமெரிக்காவிற்கு அழைத்து போக போகின்றானாமே...

அவளுக்கு இதில் கொஞ்சம் கூட இஷ்டம் இல்லை...

மறுக்கவும் முடியாத நிலை...

இல்லை என்று சொன்னால் காரணம் கேட்பார் மருதநாயகம்...

அவள் என்ன தான் சொல்ல முடியும்?

அனைவரும் ஏற்றுக் கொண்டவனை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூற முடியுமா?

"ம்ம்" என்று சொல்லிக் கொண்டே, சர்வஜித்தை ஒரு கணம் பார்த்து விட்டு உள்ளே நுழைந்துக் கொண்டாள்.

சமையல் கட்டில் இரு கைகளையும் ஊன்றி நின்றவளுக்கு நிலை பெற முடியவில்லை...

அவனுடன் செல்ல அவளுக்கு கொஞ்சமும் விருப்பம் இல்லை...

இன்னும் அவன் பணத்தை கையில் வைத்துச் சென்ற காட்சி கண் முன்னே விரிந்தது...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டவளோ, நினைவுக்கு வந்தது சர்வஜித்தின் செருமல் சத்தத்தில் தான்...

சட்டென திரும்பிப் பார்த்தாள்.

வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே, அவளை நோக்கி வந்தவன், அவளை பார்த்துக் கொண்டே சமையல் கட்டில் ஏறி இருந்தான்...

அங்கே வேலை செய்துக் கொண்டு இருந்த பெண்கள் அடிக்கடி சமையலறைக்குள் வந்து போவதாக இருந்தார்கள்...

அதனால் ஆதிரையாழினால் அவனிடம் சத்தம் போடவும் முடியாது...

சண்டை போடவும் முடியாது...

அவனைப் பார்க்காமல் முன்னே இருந்த கப்பை அவள் கழுவ, அவனோ, "மல்லிப்பூ உனக்கு ரொம்ப அழகா இருக்கு" என்றான்...

அவளுக்கோ கடுப்பாகி விட்டது...

ஒற்றைக் கையால் பூவை இழுத்து தலையில் இருந்து பிய்த்து எடுத்தவள், அதனை குப்பை கூடைக்குள் தூக்கிப் போட்டாள்...

"ஓஹோ" என்று அவன் சொல்லிக் கொண்டே, "இந்த பிளாஸ்டிக் காப்பு கூட அழகா தான் இருக்கு" என்றான்...

அவளோ அடுத்த கணமே, அந்த காப்பை உருவி கழட்டியவள், அதனையும் குப்பை கூடைக்குள் போட, அவனுக்கு அவள் கோபத்தில் சிரிப்பு வந்தது...

'இப்போ என்ன பண்ணுறேன்னு பார்க்கிறேன்' என்று நினைத்தவனோ, "இந்த ஜாக்கெட்டும் புடவையும் கூட சூப்பரா இருக்கு" என்றான்...

அவனை ஏறிட்டு ஒரு முறைப்பு...

"என்ன முறைப்பு மட்டும் தானா? அந்த பூ, காப்பு எல்லாம் தூக்கி எறிஞ்ச போல எறிவேன்னு எதிர்பார்த்தேன்... நீ தான் ரோஷக்காரி ஆச்சே" என்றான்...

கழுவிய கப்பை மேசையில் அடித்து வைத்தவளோ, "உங்க கிட்ட தனியா பேசணும்" என்று சொல்லிக் கொண்டே, விறு விறுவென மாடியேறிச் செல்ல, அவளை தொடர்ந்து சமையல் கட்டில் இருந்து பாய்ந்து இறங்கிய சர்வஜித்தும் மேலேறிச் சென்றான்.

அறைக்குள் நுழைந்த ஆதிரையாழோ அவளை தொடர்ந்து சர்வஜித் நுழைந்ததுமே அறையை தாழிட்டு விட்டு, மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியபடி நின்று இருந்தாள்.

சர்வஜித்தும் கதவில் சாய்ந்து அவளை பார்த்துக் கொண்டே நின்று இருக்க, "எனக்கு அமெரிக்கா வர இஷ்டம் இல்ல" என்றாள்.

"ஏன்?" என்றான் அவன்...

"அங்க வந்தா என் நிம்மதியே போயிடும்" என்று சொன்னவளுக்கு குரல் தழுதழுக்க, "உன் நிம்மதிக்கு நான் கேரண்டி" என்றான்...

அவனை முறைத்தவள், "மண்ணாங்கட்டி, என் நிம்மதி போக போறதே உங்களால தான்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன், "எனக்கு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணி முடியலடி, உன்னை சந்தோஷமா வச்சு பார்த்துக்கிறேன்... போதுமா?" என்றான்...

"உங்கள நம்ப நான் தயாரா இல்லை... என்னை உங்க வேலைக்காரினு அறிமுகப்படுத்துனவர் தானே நீங்க, உங்க ஃப்ரெண்ட் தப்பா நடந்துக்கிட்டதுக்கு சப்போர்ட் வேற பண்ணுன ஆள் நீங்க, இப்படி பட்ட உங்க கூட நான் எப்படி வாழுறது?" என்று கேட்டாள்.

அவனோ, "அதெல்லாம் முடிஞ்ச அப்புறம் கூட வாழ்ந்த தானே" என்று சொல்ல, அவளுக்கு கண்ணில் தேங்கி இருந்த கண்ணீர் சட்டென்று வழிய அதனை துடைத்துக் கொண்டவளோ, "அது தான் நான் பண்ணுன தப்பு... உங்கள புரிஞ்சும் உங்க ஆசைக்கு எல்லாம் உடன்பட்ட என்னை சொல்லணும்... பொண்டாட்டியா பார்க்கிறீங்கனு நினைச்சேன்... ஆனா விபச்சாரியா பார்த்து இருக்கீங்கனு அப்புறம் தான் புரிஞ்சுது" என்று சொல்ல, "அறைஞ்சேன்னா" என்று அவன் குரலை உயர்த்தி விட்டான்...

"நான் என்ன பொய்யா சொல்லிட்டு இருக்கேன்? நீங்க நடந்துக்கிட்டதை தானே சொல்லிட்டு இருக்கேன்... நான் உங்க பொண்டாட்டினு அங்கே ஒருத்தருக்காவது தெரியுமா?" என்று கேட்டாள்.

அவனோ ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே தலையை கோதியவன், "ஊருக்கே தெரியும்" என்றான்... அவளோ புரியாமல் பார்க்க, "நான் ஆரம்பத்துல பொண்டாட்டினு சொல்லாம விட்டது உண்மை தான்... அப்புறம் சொல்லிட்டேன்... இன்னொன்னு கேட்டுக்கோ... விஷ்வா தப்பா நடந்துக்கிட்டதுக்கு நான் எதுவும் பண்ணலனு நினைக்காதே... அவன் பிசினஸை மொத்தமா லாஸ் ஆக வச்சேன்... அந்த கோபத்தில் அவன் நாம பார்க்ல கிஸ் பண்ணுனதை ஃபோட்டோ எடுத்து லீக் பண்ணிட்டான்... அப்புறம் நானே நியூஸ் போட்டேன்...இது எல்லாம் உனக்கு தெரியல" என்று சொல்லிக் கொண்டே, தொலைப்பேசியை எடுத்து அவன் கொடுத்த செய்தியை திருமண புகைப்படத்துடன் காட்டினான்...

அவளோ அதனை பார்த்து விட்டு, "அது கூட ஃபோட்டோ லீக் ஆனதால உங்க பேர் கெட்டுட கூடாதுனு சொல்லி இருக்கீங்க... மனசால சொல்லல, அது சரி மனசுல காதல் இருந்தா குழந்தையை கொடுத்துட்டு விட்டு போய் இருப்பீங்களா என்ன?" என்றாள் இளக்கார குரலில்...

கண்களை மூடி தலையை அழுந்த கோதிக் கொண்டவனோ, "இப்போ என்னடி பண்ண சொல்ற? உனக்கு என் கூட வர முடியாதா? அப்போ நான் தாத்தாவையும் தீரனையும் அழைச்சிட்டு போறேன்... தனியா இருப்பியா?" என்று கேட்டான்.

"என்னை தீரன் கிட்ட இருந்து பிரிக்கணும், அது தானே உங்க ஆசை" என்றாள் அவள்...

அவனோ, "ஷப்பா, என்ன பேசுனாலும் ஏதாவது ஒன்னு பேசிட்டு இருக்கியே..." என்று சொன்னபடி கட்டிலில் தொய்ந்து அமர்ந்தவனோ, அவளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே, "எனக்கு அவங்க மட்டும் இல்ல, நீயும் வேணும்... ஆறு வருஷத்துக்கு முதல் உன் மேல காதல் இருந்திச்சா இல்லையானு எனக்கு சொல்ல தெரியல... ஆனா இப்போ என்னால அடிச்சு சொல்ல முடியும்... உன் மேல காதல் இருக்கு... ஒரு நாள் கூட உன் நினைவு வராம இல்லை... உன்னை தவிர யார் மேலயும் என் நுனி விரல் கூட பட்டது இல்லை... எனக்கு ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் தான் வேணும்னா அமெரிக்காவுல இல்லாத பொண்ணுங்களா? ஆனா என்னால வேற பொண்ணுங்கள தொட கூட முடியல... மனசுல எல்லாமே உன் நினைப்பு தான்... புரியுதா?" என்று கேட்டான்...

அவன் மூச்சு வாங்க பேசியது எல்லாமே காற்றில் பறந்த போல, "எனக்கு நம்பிக்கை இல்ல" என்றாள் ஒற்றை வரியில்...

இரு கைகளையும் விரித்தவன், "நம்பணும்னா என்ன தான்டி பண்ணனும்?" என்று கேட்க, அவனை முறைத்தவள், "ஒண்ணும் பண்ண தேவல, எனக்கு வர இஷ்டம் இல்ல" என்று சொல்லிக் கொண்டே கதவை திறக்க போக, எழுந்து வந்து அவள் கையை பிடித்து இருந்தான் சர்வஜித்...

"கையை விடுங்க" என்று சொல்லிக் கொண்டே, அவள் கையை உறுவ முயல, "இஷ்டம் இல்லனு சொல்லிட்டு போனா விட்ருவேன்னு நினைக்காதே... என் கூட நீ வந்து தான் ஆகணும்" என்று சொன்னான்...

அவளை எப்படி சம்மதிக்க வைப்பது என்று அவனுக்கு தெரியவே இல்லை...

கெஞ்சி பார்த்தான்...

இப்போது அதட்டியும் பார்த்தான்...

அதற்கு அவள் மடிவாளா என்ன?

"விடுங்க" என்று சொல்லிக் கொண்டே கையை உறுவி எடுத்தவளோ, அவன் பிடித்து இருந்த இடத்தை வருடிக் கொண்டே, "வரணும் வரணும்னா எப்படி வர்றது? நான் தானே குப்பை... இந்த குப்பை உங்களுக்கு எதுக்கு? நீங்க தான் பணத்துல பிறந்து வளர்ந்தவராச்சே... உங்கள போல நாங்க பிறக்கல தான்... அதுக்காக இப்படி தான் என்னோட தன்மானத்தை சீண்டி அசிங்கப்படுத்துவீங்களா? என்னை கேவலமா நடத்துவீங்களா? இப்போ அதெல்லாம் மறந்துட்டு நான் உங்க கூட வரணுமா? இந்த குப்பை உங்களுக்கு எதுக்கு?" என்று ஆக்ரோஷமாக கண்ணீருடன் சீறினாள்...


அடக்கி வைத்து இருந்த பொறுமை போய் விட்டது அவனுக்கு...
Super sis
 
Top