ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 3

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 3

தலையை சலிப்பாக ஆட்டிக் கொண்டே தனது உடமைகளில் இருந்த பூந்துவாலையை எடுத்துக் கொண்டே, குளியலறைக்குள் நுழைந்தான்...

அங்கே இரு பொதுவான குளியலறைகள் தான்... மாடியில் ஒன்று... கீழே ஒன்று...

இவனுக்கு மாடி அறை என்பதால் அங்கிருக்கும் குளியலறைக்குள் சென்றான்...

வசதியான குளியலறை என்றாலும் அவனுக்கு மிக மிக எளிமையான தோற்றம் தான் கொடுத்தது...

ஷவரின் கீழே நின்றான்...

அவன் உச்சி முதல் பாதம் வரை நீர் தழுவிச் சென்றது...

வெதும்பிக் கொண்டு இருந்த உடலுக்கும் மனதுக்கும் இதமாக இருந்தது அந்த குளிர்ந்த நீர்...

குளித்து விட்டு இடையில் வேஷ்டியை கட்டிக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்...

அட்டாச்ட் பாத்ரூம் எல்லாம் அங்கு இல்லை அல்லவா?

மருதநாயகம் எடுத்து வைத்து இருந்த நீல நிற ஷேர்ட்டை போட்டான்...

ப்ராண்டட் என்று இருப்பவனுக்கு இந்த கதர் வேஷ்டி சட்டை எரிச்சலைக் கொடுத்தாலும் வேறு வழி இல்லை...

கண்ணாடியை பார்த்துக் கொண்டே, ஒற்றைக் கையால் தலையை கோதியவன் ஷேர்ட்டின் கையை முட்டி வரை மடித்து விட்டுக் கொண்டே வெளியேறி கீழிறங்கிச் சென்றான்...

அங்கே சாப்பிடும் மேசையில் ஏற்கனவே மருதநாயகம் சர்வஜித்துக்காக காத்துக் கொண்டு இருந்தார்...

பிடரியை வருடிக் கொண்டே, 'இந்த பெருசு எத்தனை வருஷத்துக்கு நம்மள வச்சு செய்ய போகுதோ?' என்று நினைத்தபடி அமர்ந்தான்...

"சாகும் வரைக்கும் வச்சு செய்வேன் டா" என்று அவன் நினைத்ததற்கு மருதநாயகம் பதில் அளிக்க, அவரை அழுத்தமாக பார்த்து விட்டு சாப்பாட்டு தட்டை எடுத்து தனக்கு முன்னே வைத்தான்... சர்வஜித்தின் தாத்தா என்றால் கேட்கவும் வேண்டுமா?

உணவை பார்த்தால் நெய் தோசை... அவனுக்கு தலை சுற்றிக் கொண்டே வந்தது...

"நல்லா எடுத்து வச்சு சாப்பிடு, அங்க இலை குலையை சாப்பிட்டு உன் நாக்கு செத்து போய் இருக்கும்" என்று சொன்னபடி நாலைந்து தோசையை மருதநாயகம் எடுத்து வைத்தார்...

உணவை விழி விரித்து பார்த்தவனோ, 'இன்னும் எக்ஸ்ட்ரா ரெண்டு மணி நேரம் வேர்க் அவுட் செய்யணும் அங்க போனதும்' என்று நினைத்தபடியே சாப்பிட்டான்...

அவனை ஒருவர் ஆட்டி வைக்க முடியும் என்றால் அது மருதநாயகம் மட்டும் தான்...

சொத்தை காட்டியே அவனை ஒரு வழி பண்ணிக் கொண்டு இருந்தார்...

"என்னடா அங்க ரொம்ப ஆடுறியாம்... தண்ணி தம்ன்னு ஃப்ரெண்ட்ஸ் கூட ஒரே கொண்டாட்டமாம்" என்றார்...

அவனிடம் மௌனம் மட்டுமே...

அவருக்கு விளக்கம் கொடுத்து களைத்து விடுவான் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்...

அதனால் எதுவுமே பேசவில்லை...

"ஆனா எனக்கு ஒரே ஒரு ஆச்சரியம்" என்றார்...

இப்போது அவரை ஏறிட்டு தனது ஹேசல் விழிகளால் நோக்கியவன், "என்ன தாத்தா?" என்றான்...

"பொண்ணுங்க விஷயத்துல நீ அநியாயத்துக்கு நல்லவன்னு கேள்விப்பட்டேன், அதெல்லாம் அங்க வாய்ப்பே இல்லையே... ஹெல்த்ல ஏதும் ப்ராப்லம் ஆஹ்? அப்படினா சொல்லிடு, இங்க கை மருத்துவம் நிறைய இருக்கு" என்றார்...

அவரை முறைத்துப் பார்த்தவன், "ஐ ஆம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்" என்றான்...

'இந்த சொத்துக்காக என்ன பேச்செல்லாம் கேட்க வேண்டி இருக்கின்றது' என்ற எண்ணம் தான் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது...

ஆழந்த மூச்சை எடுத்து விட்டுக் கொண்டே தன்னை சமநிலைப்படுத்தினான்.

"நீ இப்படி இருக்கிறதும் நல்லதுக்கு தான்... இல்லனா கண்ட கண்ட நோய் எல்லாம் வந்திடும்" என்று சொல்லிக் கொண்டே அவர் சாப்பிட்டார்...

அவன் அவர் வைத்த நான்கு தோசைகளை மாத்திரம் சாப்பிட்டு முடித்தான்...

மருதநாயகமோ, "உன் வயசில நான் பத்து தோசை சாப்பிடுவேன்... நீ என்ன லேடீஸ் போல சாப்பிடுற?" என்று கேட்டுக் கொண்டே இன்னும் மூன்று தோசைகளை வைத்தார்...

தோசையையும் அவர் தொப்பையையும் பார்த்தவன், "பார்த்தாலே தெரியுது... என்னால இப்படி சாப்பிட முடியாது... மசில்ஸ் வச்சு இருக்கேன்... ஸ்பாயில் ஆய்டும்" என்றான்...

அவனை முறைத்தவர், "இந்த மசில்ஸ் வச்சு என்ன சாதிச்ச? ஒரு கேர்ள் ஃப்ரென்ட் கூட இல்லை... பொண்டாட்டியும் இல்லை... அது என்னத்துக்கு தண்டமா?" என்று கேட்டார்...

அவனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார்...

அவனுக்கு மாறி பேச முடியாமல் வாயையும் கையையும் கட்டி போட்ட நிலை...

"சாப்பிட்டு தொலைக்கிறேன்" என்று திட்டிக் கொண்டே அவர் வைத்த மூன்று தோசைகளையும் சாப்பிட்டு முடித்தான்...

"சரி நீ இப்போ ரெஸ்ட் எடு... ஈவினிங் நாலு மணிக்கு கீழ வந்திடணும்" என்று சொல்லிக் கொண்டே அவர் வெளியேற, அவர் முதுகை வெறித்து விட்டு படுப்பதற்காக மேலே ஏறிச் சென்றான்...

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பவனுக்கோ அளவுக்கதிகமாக சாப்பிட்டதும் கண்களை சுழட்டியது...

படுத்ததும் தூங்கி விட்டான்...

அவன் எழுந்தது என்னவோ வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டு தான்...

சட்டென எழுந்து கட்டிலில் அமர்ந்தவனோ, ஒற்றைக் கையை கழுத்தில் வைத்து நெட்டி முறித்துக் கொண்டே கதவை திறந்தான்...

வாசலில் மருதநாயகம் நின்று இருந்தார்...

"நாலு மணிக்கு வர சொன்னேன்ல, இவ்ளோ நேரம் தூங்குற... வா" என்று அதட்டி விட்டுச் சென்றார்... திரும்பி நேரத்தைப் பார்த்தான்... நான்கரை தான்...

அரை மணி நேரத்துக்கே அவர் எகிறினார்... அவனை போலவே நேரம் தவறாமல் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்...

அவனோ சலிப்புடன் இறங்கிச் செல்ல, அவனை அவர் அழைத்துச் சென்றது என்னவோ வீட்டை சுற்றி இருக்கும் தோட்டத்துக்கு தான்...

மருதநாயகம் கையை பின்னால் கட்டிக் கொண்டே கம்பீரமாக நடக்க, சர்வஜித் அவர் அருகே அதே கம்பீரத்துடன் நடந்து வந்தான்...

"தோட்டம் எப்படி இருக்கு?" என்று அவர் கேட்டார்...

கண்களை சுழல விட்டவன், "ம்ம்... நல்லா இருக்கு, இங்க கிடைக்கிற பழங்களை ஏன் எக்ஸ்போர்ட் செய்ய கூடாது?" என்று கேட்டான்.

அவனை திரும்பி மேலிருந்து கீழ் பார்த்தவர், "இங்கயும் வந்து உன் பிசினஸ் புத்தியை காட்டாத, அங்கே தேங்காய் இருக்கு போய் உரிச்சு போடு" என்றார்...

"என்னது?" என்றான் அவன் அதிர்ச்சியுடன்...

"தேங்காயை உரிச்சு போடுடா" என்று சொல்லிக் கொண்டே, தோட்டத்தை சுற்றிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

அவனுக்கோ ஆத்திரம் எல்லை மீறியது...

ஆனால் காட்ட முடியவே இல்லை...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே, தேங்காய் அருகே சென்றவன், ஒவ்வொரு தேங்காயாக எடுத்து அங்கிருந்த அலவாங்கில் உரிக்க ஆரம்பித்தான்...

அவனுக்கோ பலம் அதிகம்...

கோபத்தில் பலம் இருமடங்காகி இருக்க, வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டே தேங்காய் உரிக்க ஆரம்பித்தவன் மின்னல் வேகத்தில் தேங்காய் உரித்துக் கொண்டு இருந்தான்...

இந்த சமயம், அவர்கள் வீட்டிற்கு மருதநாயகத்தை தேடி வந்து இருந்தாள் ஆதிரையாழ்...

வந்தவளோ அங்கே தேங்காய் உரித்துக் கொண்டு இருந்த சர்வஜித்தைக் கவனிக்கவே இல்லை...

சுற்றும் முற்றும் தேடினாள் அவரைக் காணவே இல்லை... அவரோ வீட்டின் பின் பக்கம் சென்று இருந்தார்...

வழக்கமாக அவரிடம் தான் சமையலுக்கு தேங்காய் எடுத்து போக வருவாள்... அவரும் இலவசமாக அவளுக்கு கொடுத்து விடுவார்...

தேவை என்றால் அனுமதி பெறாமலே எடுக்க முடியும் என்று மருதநாயகம் கூறி இருக்க, அங்கே குவிந்து கிடந்த தேங்காயை தூக்கியவள், 'ஐயா கிட்ட அப்புறம் சொல்லிக்கலாம், அடுப்புல சமைக்க பானையையும் வச்சுட்டேன்' என்று நினைத்துக் கொண்டே, போக முற்பட்டவளது கையை எட்டி பிடித்து இருந்தான் சர்வஜித்...

அவன் பிடித்த பிடியில் மணிக்கட்டில் வலி சுள்லென்று இருந்தது...

பிடியில் அவ்வளவு அழுத்தம்... அவள் கையில் இருந்த தேங்காய் சட்டென்று கீழே விழ, சர்வஜித்தை திரும்பி அதிர்ந்து பார்த்தாள்...

அவள் சர்வஜித்தைக் ஏற்கனவே கண்டு இருக்கின்றாள் என்பதால் அடையாளம் கண்டுக் கொண்டாள்.

சர்வஜித்துக்கு அவளை பெரிதாக தெரியாது...

மேலோட்டமாக பார்த்திருக்கின்றான் அவ்வளவு தான்...

அவனைக் கண்டதுமே அவள் விழிகள் அகல, "திருடிட்டு போக பார்க்கிறியா?" என்றான் அழுத்தமாக...

"திருடிட்டா?" என்று கேட்டவளது கண்களோ அவன் போட்ட பழியினால் சட்டென்று கலங்கி போக, "அப்படி எல்லாம் இல்ல" என்றாள் அவசரமாக...

"இங்க நிக்கிற என் கிட்ட சொல்லல, தாத்தா கிட்ட சொல்லல, இஷ்டத்துக்கு எடுத்துக்கிட்டு போற, இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?" என்று கடுப்பாக வந்தது அவன் வார்த்தைகள்...

மருதநாயகத்தின் மேல் இருந்த கோபத்தை அவனுக்கு யார் மேல் கொட்டுவது என்று தெரியவே இல்லை...

கோபத்தை அவள் மீதே அள்ளி தெளித்து இருந்தான்...

"இப்படி எல்லாம் பேசாதீங்க, ஐயா தான் எப்போ வேணும்னாலும் தேங்காய் எடுத்து போக சொன்னார்" என்று சொன்னவளுக்கு கண்ணீர் அதோ இதோ என்று வழிய ஆரம்பமானது...

"அவர் சொன்னா உனக்கு எங்க போச்சு புத்தி... வயசான காலத்துல எதையாவது உளறுவார்... இலவசம்னு சொன்னதும் பல்லை இளிச்சிட்டு வர்றது உனக்கு அசிங்கமா தெரியலையா?" என்று அவன் வார்த்தைகள் தடித்தன...

இன்னுமே அவள் கையை அவன் விடவில்லை...

அவன் கையின் பிடி அவள் மேனியை வலிக்க செய்ய, அவன் வார்த்தைகள் அவள் மனதை குத்திக் கிழிக்க, அவனுடன் வாய் தர்க்கம் பண்ணும் அளவுக்கு அவளுக்கு தெம்பும் இல்லை, தைரியமும் இல்லை...

"இனி இப்படி பண்ண மாட்டேன்" என்று சொன்னவளது கண்ணீர் சட்டென்று கீழே விழ, "இனி பண்ண மாட்ட, பண்ணுனதுக்கு என்ன தண்டனை?" என்று கேட்டான்...

"என்ன பண்ணனும்? கை வலிக்குது" என்று நலிந்த குரலில் சொன்னாள் பெண்ணவள்...

சட்டென்று அவள் கையை விட்டவனோ, அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே, "தோணும் போது சொல்றேன்... வீட்டுக்கு கிளம்பு... இனி உன்னை இந்த பக்கம் பார்த்தேன்... சாவடிச்சிடுவேன்" என்று ஒற்றை விரல் நீட்டி சொல்ல, அவளோ அங்கிருந்து கண்களில் கண்ணீர் வழிய வேகமாக தான் சென்று இருந்தாள்.

"பட்டிக்காட்டு கூட்டம் எல்லாம் வீட்டுக்குள்ள விட வேண்டியது... இந்த பெருசுக்கு மூளையே இல்லை... வயசானதும் மூளை மழுங்கி போச்சு" என்று முணு முணுத்துக் கொண்டே தேங்காயை உரிக்க, ஆரம்பித்தான்.
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 3)

அய்யய்யோ..! இவன் என்ன இம்புட்டு கறாரா இருக்கான்..?
இவனுக்கெல்லாம் மிலிட்ரிமென் மருதநாயகம் தான் சரி வரும் ட்ரில் வாங்க.

அது சரி, என்ன பண்ணனும்ன்னு யாழ் கேட்டதற்கு, தோணும் போது சொல்றேன்ங்கறானே...
இதுல ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரியே தெரியுதே...
வாட் இஸ் தட்...?

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Waiting for next epi sis
 
Top