அத்தியாயம் 26
காரைக் கண்டதுமே புருவம் சுருக்கிய மருதநாயகம் எழுந்து நின்றார்...
ரணதீரனும் மரத்தில் இருந்து கீழே பாய்ந்து, மருதநாயகத்தின் அருகே நின்றபடி காரைப் பார்த்தான்...
உள்ளே இருந்த சர்வஜித்தின் கண்கள் முதலில் மருதநாயகத்தில் படிந்தன...
கையில் ஊன்றுகோல், சற்று தளர்ந்து போய் இருந்தார்...
அப்படியே அவர் அருகே நின்ற தனது உயிர் நீரில் உருவான ரணதீரனில் படிந்தது...
அவன் பையன் என்று விழிகளே சாட்சி சொல்லின...
ஆம் அதே ஹேசல் விழிகள்...
சர்வஜித்தின் அதே முக சாயல்...
சர்வஜித் சின்ன வயதில் இருந்த அதே தோற்றம்...
இதே சமயம், ட்ரைவரோ இறங்கி, சர்வஜித்தின் உடைப் பெட்டியை எடுத்து கீழே வைத்து விட்டு காரில் ஏறிக் கொள்ள, அவர்களை பார்த்துக் கொண்டே, காரில் இருந்து இறங்கினான் சர்வஜித்...
மருதநாயகத்துக்கோ தனது கண்களையே நம்ப முடியவில்லை...
கண்களை கசக்கி பார்த்தார்...
ஆம் அது சர்வஜித் தான்...
அடக்கி வைத்து இருந்த கண்ணீர் அவர் கண்ணில் இருந்து தாரை தாரையாக வழிந்தது...
நடக்க முடியவில்லை...
அதீத சந்தோஷத்தில் கால்கள் நடுங்கின... ஊன்றுகோலை அப்படியே பற்றிக் கொண்டே நின்றார்...
காரும் கிளம்பி விட, அவரை நோக்கி வந்தான் சர்வஜித்... அவன் அவரை நெருங்க முதலே, அவன் இதயத்தில் அவனை அசைத்து பார்த்தது அந்த வார்த்தை...
"அப்பா" என்று சொல்லிக் கொண்டே, அவனை நோக்கி ஓடி வந்த ரணதீரனை வியந்து பார்த்தான்...
தன்னை அடையாளம் காட்டி வளர்த்து இருக்கின்றார்கள் என்று புரிந்தது...
ஓடி வந்தவனை தூக்க சர்வஜித்தின் கைகள் விரிய, பாய்ந்து அவனை அணைத்துக் கொண்டான் ரணதீரன்...
இறுகிய அணைப்பு...
அவன் ஏக்கத்துக்கு மருந்தானது இந்த அணைப்பு...
யாருமே எதிர்பார்க்கவில்லை...
அவன் கழுத்தை கட்டிக் கொண்டே, "ஏன்பா இவ்ளோ நாள் என்னை பார்க்க வரல?" என்று கேட்டான்...
பதில் சொல்ல முடியவே இல்லை சர்வஜித்தினால்... திணறிப் போனான்...
"அது" என்று ஆரம்பிக்கும் போதே குரல் கம்மியது...
எத்தனையோ மேடைகளில் ஏறி பயம் இன்றி பேசுபவனுக்கு முதல் முறை மகனுடன் பேச வார்த்தைகள் தடுமாறின...
குரலை செருமிக் கொண்டே மேலும் தொடர்ந்தவனோ, "அப்பாக்கு கொஞ்சம் வேலை" என்று சொன்னான்...
இன்னும் மகனது பெயர் தெரியவில்லை...
எப்படி அழைப்பது என்று தடுமாற்றம்... பெயர் தெரியவில்லை என்று ரணதீரனுக்கு தெரிந்தால் நொறுங்கி விடுவானே...
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டான்...
இதே சமயம், சமையலறையில் ரணதீரனுக்கு பால் கரைத்துக் கொண்டு இருந்த ஆதிரையாழுக்கு "அப்பா" என்கின்ற அவன் குரலை கேட்டதுமே இதயத்தில் ஆழ்ந்த வலி...
சட்டென அப்படியே வீட்டு வாசலை அடைந்து இருந்தவளுக்கோ அங்கே நின்ற சர்வஜித்தைக் கண்டதுமே என்ன உணர்வென்று தெரியவில்லை...
எத்தனையோ வகையான உணர்வுகள்...
கோபம், வலி, அழுகை, நிம்மதி என்று பல உணர்வுகளின் போராட்டம்...
அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டே, கதவு நிலையில் தொய்வாக சாய்ந்தவளோ அவனை இமைக்காமல் பார்த்தாள்...
நிஜம் என்று இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை...
மகனுக்கும் மருதநாயகத்துக்கும் உறவு வந்து சேர்ந்த நிம்மதி மனதில் ஆழமாக விரிந்தது...
ஆனால் இன்னுமே தனது விஷயத்தில் அவன் மேல் ஆத்திரம்...
அடங்காத ஆத்திரம்...
பல்வேறு உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொண்டே, அவள் நின்று இருக்க, சர்வஜித்தோ, அவள் நிற்பது தெரிந்தாலும் அவளை பார்க்கவில்லை...
பார்க்க ஏதோ தடுத்துக் கொண்டு இருந்தது...
அவன் விழிகள் இப்போது கண்ணீருடன் நின்று இருந்த மருதநாயகத்தில் படிய, அவரை நோக்கி அடி மேல் அடி வைத்து நடந்தான்...
அவர் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அவர் விழி திரையை மறைக்க, அவசரமாக துடைத்துக் கொண்டே, அருகே வந்தவனைப் பார்த்தவர், "வந்துட்டியாப்பா?" என்றார்...
ஆறு வருட ஏக்கமும் வலியும் அவருக்கு...
சொந்த பேரன் இல்லை என்றாலும் அவன் மேல் அளவு கடந்த பாசம் அவருக்கு... அவனை தனியாக இத்தனை வருடங்கள் வளர்த்தவர் அல்லவா?
அவர் கண்ணீரும், அவர் வார்த்தைங்களும் அவனுக்கு உறுத்தியது...
ஒரே வார்த்தையில் அவனை நொறுக்கி விட்டார்...
உடைந்து விடுவான் போல இருந்தது அவனுக்கு...
ஆனால் உடைந்து விட்டால் தனது உண்மை தெரிந்து விட்டது என்று அவருக்கும் தெரிந்து விடும்...
அதன் பிறகு அவர் நொறுங்கி விடுவார்...
அவர் நொறுங்க கூடாது என்று நினைத்தவனோ, "ஒரு ப்ராஜெக்ட் விஷயமா வந்தேன்... அப்படியே பார்த்துட்டு போகலாம்னு யோசிச்சேன்" என்றான்...
நடுங்கிய குரலை கஷ்டப்பட்டு அடக்கி சீராக்கினான்...
"அப்போ என்ன பார்க்க வரலையா?" என்று ரணதீரன் கேட்க, "உன்னை தான் முக்கியமா பார்க்க வந்தேன்" என்று சொல்லிக் கொண்டே, அவன் விழிகளை பார்த்தான்...
தன்னையே உரித்து வைத்து பிறந்தவனை பார்த்தவனுக்கு மனதில் ஏதோ அழுத்துவது போன்ற உணர்வு...
"எனக்கு என்ன கொண்டு வந்தீங்க?" என்று அடுத்த கேள்வி கேட்டான்...
உடனே அவனை இறக்கி விட்டு, அருகே இருந்த அவன் பெட்டியை எடுத்து, அதற்குள் இருந்த பையை எடுத்து கொடுத்தவன், "எல்லாம் உனக்கு தான்" என்றான்...
ஐந்து வயது பையனுக்கு தேவையான விளையாட்டு பொருட்களை எல்லாமே வாங்கி வந்து இருந்தான்...
அதற்குள் சாக்லேட்டுகளும் இருந்தன...
"ஐ சாக்கி" என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டே, பையை தூக்கிக் கொண்டே, அவன் அங்கிருந்து ஓடிச் செல்ல, அவனை ஆழ்ந்த மூச்சுடன் பார்த்துக் கொண்டே, மருதநாயகத்தைப் பார்த்தவன், "எப்படி இருக்கீங்க?" என்று கேட்டான்...
"உன்னை பார்க்காம ரொம்ப கஷ்டப்பட்டு போய்ட்டேன்..." என்று சொன்னவருக்கு நிற்க முடியாமல் போக சட்டென்று அவன் கையை பிடித்துக் கொண்டார்...
அப்படியே ஏறிட்டு அவனை பார்த்தவர், "அடுத்த முறை என்னை விட்டு போறதுனாலும் போய்க்கோ, ஆனா உன் பையனையும் பொண்டாட்டியையும் அழைச்சிட்டு போய்டு... நீ இல்லாம உன் பையன் அப்பா எங்கனு ஏக்கமா கேட்டுட்டே இருக்கான்" என்று சொல்ல, அவனோ பெருமூச்சுடன், "அத கிளம்பும் போது பார்த்துக்கலாம்... இங்க தான் ஒரு மாசம் நிற்க போறேன்" என்றான்...
இதழ் நிறைய மருதநாயகத்துக்கு புன்னகை...
"ரொம்ப சந்தோஷம்பா" என்று சொல்லிக் கொண்டே, "உன்னை அணைச்சுக்கலாமா?" என்று கேட்டார்...
அவனுக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது...
அணைப்பதற்கு கூட அனுமதி கேட்கும் தூரத்தில் இருக்கின்றோம் என்கின்ற உறுத்தல்...
"ம்ம்" என்றான்...
சட்டென அணைத்துக் கொண்டவருக்கு கண்ணீர் நிற்கவில்லை... அழுதார்...
இது வரை வலி தீர அழுதவரோ...
இன்று ஆனந்தத்தில் அழுதார்...
அவர் அழுது இன்று தான் பார்க்கின்றான்...
அவர் கம்பீரம் எல்லாம் தொலைத்து, அவன் மார்பில் குழந்தை போல சாய்ந்து நின்றார்...
முதுமை எத்தனை கொடுமையானது என்று அவனுக்கு புரிந்தது...
அப்படியே நின்றவன், "என் பையன் பெயர் என்ன?" என்று கேட்டான்...
கேட்க தயக்கம் தான்...
ஆனாலும் கேட்க வேண்டிய கட்டாயம்...
சட்டென்று அவனை ஏறிட்டுப் பார்த்தவர், "ரணதீரன்... உன் அப்பாவோட பேர்" என்று சொல்ல, அவன் இதழ்கள் மெலிதாக விரிந்தன...
அர்த்தமுள்ள புன்னகை அது...
இதே சமயம் அவனை பார்த்துக் கொண்டே கதவு நிலையில் நின்ற ஆதிரையாழோ, 'அப்போ தாத்தாவை பார்க்க வரல, பிஸினஸுக்காக தான் வந்து இருக்கார்... ச்ச... என்ன மனுஷன்' என்று அவனுக்கு மனதுக்குள் திட்டிக் கொள்ள, விறு விறுவென அவனை அழுத்தமாக பார்த்துக் கொண்டே உள்ளேச் சென்றாள்.
அவள் சென்ற போது தான் அவள் முதுகை ஏறிட்டுப் பார்த்தான் சர்வஜித்...
மருதநாயகமோ, பெருமூச்சுடன் சற்று விலகி நின்றுக் கொண்டே, "சாப்பிட்டியாப்பா?" என்று கேட்க, "சாப்பிடணும்" என்றான்...
அவரோ, "நீ இங்க என்ன வேணும்னாலும் போட்டுக்கோ... வேஷ்டி தான் கட்டணும்னு இல்லை... நீ எப்படி வேணும்னாலும் இரு... நீ இங்க இருந்தா போதும்" என்றார்...
எவ்வளவு பெரிய வார்த்தைகள்...
அவன் மட்டும் வேண்டும் என்று அவர் வார்த்தைகள் உணர்த்த, "உள்ள வாங்க தாத்தா" என்று சொல்லிக் கொண்டே, உள்ளே நுழைந்தான்...
அங்கே சர்வஜித் வாங்கிக் கொடுத்த பொருட்களுடன் ரணதீரன் விளையாடிக் கொண்டு இருக்க, அவனை புன்னகையுடன் பார்த்து விட்டு மாடி ஏறினான்...
அவன் அறை அப்படியே மூடி வைக்கப்பட்டு இருந்தது...
ஒவ்வொரு முறையும் அவன் வருவான் என்ற நம்பிக்கையில் அதனை துப்பரவு செய்து வைத்து இருப்பார் மருதநாயகம்...
அறைக் கதவை திறந்துக் கொண்டே உள்ளேச் சென்றவன், தனது பெட்டியை அங்கேயே வைத்து விட்டு அலுமாரியை திறந்தான்...
வழக்கமாக அவன் உடுக்கும் வேஷ்டி இருந்தது...
அதனை எடுத்துக் கொண்டே, டவலையும் எடுத்தவன் குளியலறைக்குள் நுழைந்து இருந்தான்...
குளிர்ந்த நீரில் குளித்தவனுக்கு உடலில் மட்டும் அல்ல, மனதிலும் ஒரு வித இதம் பரவியது...
குளித்து விட்டு அறைக்குள் வந்தவனோ, வேஷ்டியை கட்டி, ஷேர்ட்டையும் அணிந்துக் கொண்டே, அதன் கையை மடித்து விட்டுக் கொண்டு தன்னை கண்ணாடியில் பார்த்தான்...
தாடி மீசை அளவுக்கதிகமாகவே வளர்த்து இருந்தான்...
என்ன நினைத்தானோ தெரியவில்லை, அவன் கைகள், தானாக மேலேச் சென்று அவன் மீசையை முறுக்கிக் கொண்டன...
சட்டென ஆதிரையாழின் எண்ணம்...
தலையை உலுக்கிக் கொண்டே, கீழே இறங்கிச் சென்றான்...
அங்கே சாப்பாட்டு மேசையில் அமர்ந்து இருந்த மருதநாயகமோ அவனை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே இதழ்களுக்குள் புன்னகைத்துக் கொண்டார்...
அப்படியே நடந்து வந்து, அவர் அருகே இருந்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டே, மறுபக்கம் இருந்த ரணதீரனைப் பார்த்தவன், "இன்னைக்கு என்னடா சாப்பாடு?" என்று கேட்டான்...
ரணதீரன் சிரித்துக் கொண்டே, "இன்னைக்கு எனக்கு பிடிச்ச தோசை தெரியுமா?" என்று விழிகளை உருட்டி சொல்ல, அவன் தோள்களை தட்டியபடியே, "வாங்கி வந்த எல்லாமே பிடிச்சு இருக்கா?" என்று கேட்டான்...
அவனும், "ம்ம்... பிடிச்சு இருக்கு, என் கூட என் நர்சரிக்கு வருவீங்களா?" என்று கேட்டான்...
"ம்ம் வர்றேன்... எதுக்கு?" என்று சர்வஜித் கேட்க, "என் நர்சரில எல்லாரும் அப்பா எங்கனு கேட்டு இருக்காங்க, சில பேர் நீங்க ஓடி போனதா கூட சொல்லி இருக்காங்க... அவங்களுக்கு எல்லாம் உங்கள காட்ட வேணாமா?" என்று கேட்டான்...
சுருக்கென்று தைத்தது அவனுக்கு...
ஓடிப் போய் விட்டானாமே... எப்படிப்பட்ட வார்த்தைகள்...
நினைக்கவே ஒரு மாதிரி ஆகி விட்டது அவனுக்கு...
குரலை செருமியவனோ, "கண்டிப்பா நர்சரிக்கு வரேன்" என்று சொன்னான்...
இதே சமயம் தோசைகள் அடுக்கிய தட்டை தூக்கிக் கொண்டே வந்த ஆதிரையாழோ அதனை மேசையில் வைத்தவள் அதனுடன் கொண்டு வந்த மருதநாயகத்தின் தட்டை அவர் முன்னே வைத்தாள்...
சர்வஜித்துக்கு அவள் அவ்விடத்துக்கு வந்தது தெரிந்தாலும் அவளை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை...
மருதநாயகமோ, "நம்ம சர்வாக்கு ப்லேட்" என்றார்... அவரை ஆழ்ந்து பார்த்து விட்டு விறு விறுவென உள்ளேச் சென்றவளோ, சர்வஜித்துக்கும் ரணதீரனுக்கும் தட்டை எடுத்து வந்தாள்...
ரணதீரனின் முன்னே தட்டை மெதுவாக வைத்து விட்டு, சர்வஜித்தின் முன்னே அழுத்தி வைத்தாள்... "டங்" என்று சத்தம் கேட்டது...
சட்டென ஏறிட்டு அவளைப் பார்த்தான்...
அவளும் அதே சமயத்தில் அவனை முறைத்துப் பார்த்தாள்...
இருவரின் விழிகளும் ஸ்பரிசித்துக் கொண்டன...
அவன் எதுவும் பேசவில்லை... சட்டென பார்வையை திருப்பிக் கொள்ள, அவளோ அவனை முறைத்து விட்டு மருதநாயகத்தைப் பார்க்க, அவரோ, "தோசையை எடுத்து வைம்மா" என்று சொன்னார்...
அவளும் அவருக்கு தோசையையும் சாம்பாரையும் வைக்க, மருதநாயகமோ, "சர்வாக்கு" என்றார் இழுவையாக...
அவளோ கடுப்புடன் தோசையில் கையை வைக்க, கையை நீட்டி தடுத்த சர்வஜித்தோ, "நானே எடுத்துக்கிறேன்" என்று அவளை பார்க்காமல் சொல்லிக் கொண்டே தோசையை எடுத்து தட்டில் வைத்தான்...
அவளோ, அடுத்த கணமே ரணதீரனுக்கு தோசையை எடுத்து வைத்து விட்டு, அவனுக்கு அடுத்த பக்கத்தில் சென்று அமர்ந்தவள் அவனுக்கு ஊட்ட ஆரம்பித்து விட்டாள்.