அத்தியாயம் 25
அடுத்த நாள் காலையில் தங்க நிற பட்டு உடுத்தி தலை நிறைய பூவுடன் செக்க சிவந்த மருதாணி போட்ட கைகள் என கல்யாண பெண்ணுக்கே உரிய ஒப்பனையில் அழகு சிலையாக தங்க ஆபரணங்களுடன் ஜொலித்தாள் மித்ரா. மேடிட்ட வயிற்றுடன் சிவப்பு நிற பட்டில் நெற்றியில் குங்குமத்துடன் மிதமான ஒப்பனையும் தலை நிறைய பூக்களும் என காட்சியளித்தாள் வசுந்தரா. மணமகளின் சார்பில் விரைவாக ஆயத்தமான வசுந்தரா குடும்பத்தினர் மண்டபத்தை அடைந்து அங்கு மித்ராவை மணமகள் அறையில் விட்ட பின் மற்றையவர்கள் தங்களது ஒதுக்கப்பட்ட வேலைகளை பார்க்கச் சென்றனர்.
கயல்விழி நீல நிற பட்டு சாரியில் நெற்றியில் குங்குமம் கழுத்தில் தாலி என மிதமான ஒப்பனையில் காட்சியளிக்க கிருஷ்ணாவோ வெள்ளை வேட்டியும் நீல ஷர்ட் உம் அணிந்திருந்தான்.
இருவரும் ஹாலில் இருந்து அவர்களின் ஒரே இரசனையான ஹாலிவுட் டாம் குரூஸின் படம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.
அந்நேரம் பார்த்து வெண்ணிற வேட்டி சட்டையில் கம்பீரமாக வெளிவந்த கௌதமை ஒரு கணம் ரசனையுடன் பார்த்த கயல் உடனே பார்வையை மாற்றிக் கொண்டாள். கௌதமும் தன்னவளின் அழகை ரசித்த படி வந்தவன் கிருஷ்ணாவும் கயலும் ஒரே நிற உடையில் இருப்பதனை பார்த்து ஏற்றப்பட்ட பொறாமையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தினான்.
கயலை பார்த்தபடியே கிருஷ்ணா அருகில் இருந்து அவன் தோள் மேல் கை போட அவனும் பயந்து ஒடுங்கி வலுக்கட்டாயமாக, "ஹி ஹி" என்று சிரித்தான்.
ஆனால் கௌதமோ எதையும் கவனிக்காமல் கயலை பார்த்துக் கொண்டே இருக்க அவளோ சங்கடத்துடன் வேற இடங்களில் தனது பார்வையை செலுத்தினாள். சித்ராவும் மகாலிங்கமும் ஏற்கனவே சென்றுவிட மூவரும் ஆயத்தமாகி சாணக்கியனுக்காகவும் விஷ்வாவுக்காகவும் காத்திருந்தனர். சாணக்கியனும் வெள்ளை வேட்டி சட்டையில் கம்பீரமாக வந்து சேர விஷ்வாவோ வரும் அறிகுறியையே காணாமல் இருந்தது.
"என்னடா உன் தம்பியை காணோம்? இன்னும் மேக்கப் போட்டு முடியலையா?" என்று கௌதம் கேட்க, "இருடா பார்த்துட்டு வர்றேன்" என்றபடி அவன் அறையை நோக்கி கிளம்ப விஷ்வாவோ இறுகிய முகத்துடன் காற்சட்டையுடன் ஹாலுக்குள் வந்தான்.
அவன் வருவதை பார்த்து அதிர்ந்த அனைவரும் எழுந்து நிற்க விஷ்வாவோ, "எனக்கு வேட்டி கட்டி விடுங்கண்ணா" என்று சாணக்கியனை பாவமாக பார்த்து சொல்ல அனைவரும் சத்தமாக சிரிக்க அவன் எல்லாரையும் முறைத்து பார்த்தான். சிரித்த சாணக்கியன் அவன் தோளில் கை போட்டு உள்ளே கூட்டி போனவன் சற்று நேரத்தில் விஷ்வாவை ஆயத்தமாக்கி கூட்டி வந்தான். விஷ்வாவும் கயலும் ஒரு காரிலும் மற்றையவர்கள் ஒரு காரிலும் சென்று மண்டபத்தை அடைந்தனர்.
இறங்கிய சாணக்கியன் முன்னால் நின்ற வசுந்தராவை அழகாக பார்த்து புன்னகைத்தவன் அவள் தோளில் கை போட்டு உள்ளே அழைத்துச் சென்றான். கிருஷ்ணாவும் கயலும் விட்ட அரட்டையை கௌதமை கடுப்பேத்தவே தொடங்க எரிச்சலடைந்த கெளதம் விறு விறுவென உள்ளேச் சென்று ஒரு ஓரமாய் இருந்தான். மணமகன் அறைக்குள் வந்த விஷ்வாவுக்கோ இருப்பு கொள்ளவில்லை.
யாருக்கும் தெரியாமல் மித்ரா அறைக்குச் செல்ல முடிவெடுத்தவனுக்கு அனைவர் கண்ணிலும் மண்ணை தூவி அவள் அறையை அடைய போதும் போதும் என்றாகி விட்டது. கதவை தட்டியதும் கதவை திறந்த அழகியை பார்த்து சொக்கி போனவன், "செமையா இருக்கடி" என்று அணைக்க போக பின்னால் கட்டிலில் இருந்த கயலோ, "மேக்கப் கலைஞ்சிடும் கவனம்" என்று குரல் கொடுத்தாள்.
மித்ரா மறைத்து நின்றதால் கயல் அவன் கண்ணில் படவில்லை.
அவள் கேட்டதில் தோன்றிய தர்மசங்கடத்தை கண நேரத்தில் மறைத்தவன், "நீ இங்க என்ன பண்ற?" என்று கயலிடம் கேட்க அவளோ, "அது நான் கேட்க வேண்டிய கேள்வி தம்பி" என்றாள்.
அவளை பார்த்து ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், "இப்போ என்னடி வேணும்?" என்று கேட்க, "கல்யாணம் முடிஞ்சப்புறம் பேசிக்கோ... முதல் வெளிய போடா" என்று விஷ்வாவை வலுக்கட்டாயமாக வெளியே தள்ள மித்ரா அனைத்தையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீ சிரிக்கிறியா? நைட் பார்த்துக்கிறேன்" என்று மித்ராவிடம் விஷ்வா அவளை முறைத்தபடி சொல்ல, "தங்கச்சி முன்னால அசிங்கமா பேசாத" என்று கயல் மேலும் அவனை தள்ளி கதவை சாத்தினாள்.
தன்னறைக்குள் வந்த விஷ்வாவிடம் சித்ரா, "எங்கடா போய் தொலைஞ்ச? ஐயர் வரட்டாம்" என்று அவனை அழைத்துச் செல்ல அவனும் தன்னவளின் கழுத்தில் தாலி கட்ட ஆர்வமாக மணமேடையில் சென்று உட்கார்ந்தான். மித்ராவை கயல் அழைத்து வந்து மணமேடையில் அவன் பக்கத்தில் உட்கார வைத்தவள் சாணக்கியன் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.
சாணக்கியனின் மற்றைய பக்கத்தில் வசுந்தரா நிற்க கௌதமும் கிருஷ்ணாவும் ஒன்றாக நின்றனர். மணமக்களின் பெற்றோர் ஜோடியாக நிற்க ஐயர் மந்திரங்களை ஓத தொடங்கினார். கௌதமோ மனதுக்குள், 'எல்லாம் என் நேரம் யார் கூட எல்லாம் நான் ஜோடியா நிற்கவேண்டி இருக்கு' என்றபடி பக்கத்தில் நின்ற கிருஷ்ணாவை பார்க்க அவன் பார்ப்பது தெரிந்த கிருஷ்ணா கயல் மேல் தன் பார்வையை செலுத்தினான்.
'டேய் அவ என் பொண்டாட்டிடா... நானே உன்ன போல பார்த்ததில்ல' என்று அவனுக்கு மனதுக்குள் திட்டியவன் அவன் தோளில் கை போட்டு பிடியை இருக்க, "சரி சார் பார்க்கல...வலிக்குது விடுங்க சார்" என்றான்.
அதை கேட்டவன் சிரித்தபடி கையை எடுத்து கயலை பார்க்க அவளும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். சாணக்கியனோ வசுவிடம் நெருங்கி அவள் காதருகில் குனிந்தவன், "இன்னைக்கு நமக்கும் பிரஸ்ட் நைட்." என்று சொல்ல அவனை அதிர்ச்சியாக பார்த்தவள், "என்ன உளறுறீங்க?" என்று கேட்டாள்.
அவனோ அவளை பார்த்து கண்ணடித்து விட்டு, "இன்னைக்கு நம்ம வீட்டுக்கு நீ வரணுமே" என்றான். "இன்னைக்கா?" என்றவள் மேலும், "அப்படினாலும் நீங்க சொல்றது சரி வராதே" என்று வெட்கப்பட்டு சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்தான். கயல்விழிக்கு அவர்கள் பேசியது மேலோட்டமாக விளங்க, "இவங்க வேற ரொமான்ஸ் பண்ணி நம்மள கடுப்பேத்திக்கிட்டு இருக்காங்க" என்று முணு முணுத்தபடி நின்றாள்.
விஷ்வாவோ மித்ராவை கண் வெட்டாமல் பார்க்க ஐயர் விஷ்வாவிடம், "அம்பி... பொண்ண பார்த்தது போதும் மந்திரத்தை சொல்லுங்கோ" என்று சொல்ல விஷ்வா வெட்கப்பட்டு போனான். மகாலிங்கமோ வலுக்கட்டாயமாக சிரித்தாலும் மனம் நிறைய பயத்துடன் நின்றிருந்தார்.
"கெட்டிமேளம் கெட்டிமேளம்" என்று ஐயர் சொல்லி தாலியை விஷ்வாவிடம் கொடுக்க அதை வாங்கி வெட்கத்துடன் குனிந்திருந்த மித்ரா கழுத்தில் கட்ட நாத்தனார் முடிச்சை கயல் போட்டாள்.
திருமணம் முடிந்ததும் இருவரும் அக்கினி குண்டத்தை சுற்றி வந்தனர். அனைத்தும் முடிய பந்தியில் உட்கார்ந்து இருவரும் சாப்பிட தொடங்க வசுந்தரா அனைவர்க்கும் பெண் வீட்டார் சார்பில் பரிமாற போக அதை சாணக்கியன் வாங்கி பரிமாற போனான்.
ஆனால் அவனின் பதவியை கருத்தில் கொண்டு அவனிடம் இருந்து வாங்க பலர் அவன் கையில் பரிமாற வைத்து இருந்த உணவு தட்டை வாங்க வந்த போதிலும் அனைவரையும் தடுத்தவன் அவனே எல்லாம் செய்து வசுந்தராவை அவன் மேல் முற்றாக பைத்தியமாக வைத்து விட்டான்.
கௌதமும் சாணக்கியனுக்கு உதவியாய் இருக்க அந்நேரம் அவனை தாண்டி ஓர் பாத்திரம் நிறைய பூந்தி லட்டுடன் கயல்விழி சென்றாள். கௌதமோ புருவம் சுருக்கி அவள் பின்னால் சென்று பார்க்க அதை கயல் சாப்பிட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணாவிடம் கொடுத்தாள்.
"வந்துட்டியா கயல்?" என்ற கிருஷ்ணா அதை வாங்கி சாப்பிட தொடங்கினான். அவளும் பின்னால் கெளதம் நிற்பது தெரிந்தே அவன் சாப்பிடுவதை ஆசையாக பார்ப்பது போல் பார்த்துக் கொண்டு நிற்க கௌதமுக்கு மீண்டும் எரிச்சல் மூண்டது.
அவளருகில் வந்தவன், "என்னடி இதெல்லாம்?" என்று கேட்க, "பார்த்தா தெரியல? பூந்தி லட்டு" என்றாள். "அது நல்லாவே தெரியுது..." என்று மேலும் ஏதோ சொல்ல வந்தவனிடம் கிருஷ்ணா, "நல்லா இருக்கு நீங்க சாப்பிடலயா ?" என்று கேட்க கெளதம் முறைத்த முறைப்பில் அவன் வாயை கப்பென்று மூடி சாப்பிட தொடங்கினான்.
"இப்போ என்ன வேணும் ?" என்று கயல் கேட்க, "கேட்டா மட்டும் கொடுத்துருவியா?" என்றான் கெளதம். "அது கேக்கிறத பொறுத்து இருக்கு" என்றவள் அவ்விடத்தை விட்டு அகல அவளின் முதுகை வெறித்து பார்த்தவன் அவள் அழகை பார்த்து தோன்றிய கண்ட கண்ட எண்ணங்களுக்கு கடிவாளமிட்டபடி தனது வேலையை தொடர்ந்தான்.
விஷ்வா மித்ராவுக்கு ஊட்ட போக அவளோ வெட்கத்தில் வேண்டாம் என்றாள்.
உடனே முறைத்தவன் தான் சாப்பிட தொடங்கினான். மித்ராவோ திரும்ப ஊட்ட வருவான் என்று எதிர்பார்த்து வந்த ஏமாற்றத்தை மறைத்தபடி அவளும் சாப்பிட்டாள்.
அன்றே வரவேற்பு நிகழ்ச்சி ஒழுங்கு படுத்தப் பட்டிருக்க மித்ரா பிங்க் நிற டிசைனர் சாரியில் ஜொலிக்க அதுக்கு பொருத்தமான பிங்க் நிற கோட் சூட்டில் விஷ்வா ஆளுமையுடன் நின்றான்.
அனைவரும் ஜோடி ஜோடியாக புகைப்படமெடுக்க, கெளதமோ கயல் கூப்பிடட்டும் என்ற எதிர்பார்ப்பிலும் கயலோ கெளதம் கூப்பிடட்டும் என்று எதிர்பார்ப்பிலும் இருக்க இருவரும் ஜோடியாக நிற்காமல் இருந்தனர்.
கிருஷ்ணா கயலருகில் வந்து, "வா கயல் நாம போய் போட்டோ எடுப்போம்" என்று அழைக்க அவளுக்கு தர்மசங்கடமாக போய் விட்டது. பக்கத்தில் கெளதம் அவள் பதிலை எதிர் பார்த்திருக்க அவள் சற்று தடுமாறி போனாள்.
உடனே கெளதம் கிருஷ்ணாவை நோக்கி, "வாங்க கிருஷ், எனக்கும் ஜோடி இல்ல. ரெண்டு பேரும் சேர்ந்து போய் போட்டோ எடுப்போம்" என்றவன் அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவன் தோளில் கை போட்டு அழைத்துச் சென்றான், கிட்டத்தட்ட இழுத்துச் சென்றான்.
புகைப்படம் எடுத்து முடிய கயலிடம் வந்த கெளதம், "நீ போய் எடு" என்று சொல்ல அவளும் கௌதமிடம் கேட்க சங்கடப்பட்டு தயங்கியபடி மேடை ஏறினாள். அப்போதாவது கேட்பாள் என்று எதிர்பார்த்த கௌதமுக்கு எரிச்சலாய் இருந்தது. மேடை ஏறியவளின் பின்னே ஏறிய கெளதம் அவள் இடையில் கை இட்டு இழுத்தணைத்து நின்று புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தான்.
கயலோ அதிர்ச்சியுடன் அவனை பார்க்க புகைப்படமோ அவள் அவனை பார்ப்பது போல எடுக்கப்பட்டிருந்தது.
உடனே அங்கிருந்த ஒரு பெரியவர், "புருஷன பார்த்தது போதும் முன்னுக்கு பார்க்கிறது." என்று கூற அவளுக்கு தான் கடைசியில் வெட்கமாக போய் விட்டது. கௌதமோ கொடுப்புக்குள் சிரித்தபடி நின்றவன் அவளை பார்க்கவே இல்லை.புகைப்படம் எடுத்ததும் கெளதம் அவளை பார்க்காமலே இறங்கி வெளியில் சென்றான்.
எல்லாம் முடிய அனைவரும் வீட்டுக்கு புறப்பட்டதும் வசுந்தராவையும் அழைத்துக் கொண்டு சாணக்கியன் மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு கிளம்ப இரவாகி விட்டது. அந்நேரம் பார்த்து மகாலிங்கத்தை காணவில்லை என்று அனைவரும் தேடினர். அவருக்கு போனில் அழைத்தும் அவர் போனை எடுக்காமல் இருக்க வீட்டுக்கு போய் இருப்பார் என்று யூகித்தவர்கள் வீட்டை அடைந்தனர்.
அனைவரும் வந்ததும் கௌதமோ அறையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தான். கிருஷ்ணாவிடம் போனவன் கதவை தட்ட கிருஷ்ணாவோ கதவை திறந்து, "என்ன வேணும்?" என்று கேட்டான். "நான் உன் கூட தங்கிக்கலாமா?" என்று கேட்க அவனோ, "நான் அப்படி பட்டவன் இல்ல சார்" என்று கூறி விட்டு பதிலை எதிர்பாராமல் கதவை உடனே சாத்தி விட்டான்.
"டேய்" என்று கத்தியவன் வேறு வழி இல்லாமல் கயல் அறையை தட்ட கதவை திறந்தவள் புருவ முடிச்சுடன் பார்க்க அவளை தள்ளியவன் விறு விறுவென்று சென்று கட்டிலில் படுத்துக் கொண்டான்.
"வெளிய போங்க" என்று கயல் சத்தம் போட, "செம டயர்ட் ஆக இருக்கு தூங்கணும்" என்றவனை மேலும் இம்சிக்க விரும்பாதவள் கீழே படுத்துக் கொண்டாள்.
"மேல படு நான் ஒன்னும் பண்ண மாட்டேன்" என்றவனை முறைத்தவள் மற்றைய பக்கம் திரும்பி படுத்தாள். விஷ்வாவோ அறைக்குள் நுழைந்தது தான் தாமதம் மித்ராவை இழுத்து கதவை சாத்தியவன் அவளை சுவருடன் ஒன்ற வைத்து அவள் இதழ்களை ஆழமாக கவ்விக் கொண்டான்.
நீண்ட நேரம் நீடித்த அவர்களின் முத்தமானது சித்ராவின் ஓலம் கேட்டு தடைப்பட்டது.
சற்று முன்னர்…
மண்டபத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சித்ராவும் தனது அறை கதவை திறக்க மகாலிங்கமோ தூங்கிக் கொண்டு இருந்தார். சித்ராவும் அவரை எழுப்பாமல் குளித்து வந்து பாலுடன், "என்னங்க" என்று எழுப்ப அவர் அப்படியே சரிந்து விழுந்தார். ஆம் மகாலிங்கம் அவ்விடத்திலேயே இறந்து இருந்தார்.
சித்ரா அதிர்ச்சியில், "என்னங்க" என்று கத்த அனைவரும் ஓடிச் சென்று மகாலிங்கத்தை பார்க்க அவரோ மாரடைப்பினால் இவ்வுலகத்தை விட்டு உயிர் நீத்திருந்தார்.
உடனே அனைத்தும் மீடியாவுக்கும் கட்சி காரர்களுக்கும் அறிவிக்கப்பட்டு இறுதி சடங்கும் நடத்த ஏற்பாடு மேற்கொள்ள பட்டது.
கயல்விழியும் சித்ராவும் தாங்க முடியாமல் கதறி அழ அவர்களை அனைவரும் அழுதபடியே சமாதானப் படுத்தினர்.
இறுதி சடங்கு முடிய கெளதம் தனது வீட்டுக்குச் சென்று விட கிருஷ்ணாவும் அமெரிக்கா செல்வதாக கூறிச் சென்று விட கயல் தனித்து போனாள். விஷ்வாவும் சாணக்கியனும் தத்தம் மனைவிமாருடன் இருந்தாலும் அவர்களும் மகாலிங்கம் இறப்பில் கொஞ்சம் சலனப்பட்டு இருந்தனர்.
மகாலிங்கம் இறந்து ஒரு மாதம் சென்ற பின்னரும் கெளதம் சாணக்கியன் உட்பட அனைவருடனும் தொடர்பில்லாமல் இருந்தான். சாணக்கியனும் அவனை தொந்தரவு பண்ண விரும்பவில்லை. ஒரு நாள் தனிமையில் புத்தகம் படித்துக் கொண்டிருந்த சாணக்கியனிடம் வந்த விஷ்வா, "உங்க கிட்ட பேசணும்" என்றான். சாணக்கியனும், "சொல்லு" என்று சொல்ல அவன் தனது பாக்கெட்டில் இருந்து ஒரு பொருளை எடுத்து காட்ட சாணக்கியனோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்.