அத்தியாயம் 24
பயந்த போல நடித்து விட்டு "நான் வரட்டா சார் ?" என்று கேட்டபடி எழுந்த கௌதமிடம், "அந்த பயம் இருக்கட்டும்" என்ற கிருஷ்ணா, "வா கயல் நாம பேசலாம்" என்றான். உடனே கயல், "எனக்கு தலை வலிக்குது கிருஷ்ணா" என்றவள் எழுந்து விறு விறுவென கௌதமை தாண்டி நடந்துச் செல்ல அவள் முதுகை சிரிப்புடன் வெறித்துக் கொண்டு இருந்தான் கெளதம்.
கௌதமின் முன்னால் கிருஷ்ணாவை பிடித்து இருப்பதாக கூறி தான் நடித்த நடிப்பால் கிருஷ்ணாவை கயலால் ஒதுக்க முடியாமல் இருந்தது.
அதே சமயம் அனைவரிடமும் கௌதமாக மட்டும் நடித்துக் கொண்டிருப்பதால் போலி கிருஷ்ணா பற்றி யாரிடமும் தெரிவிக்க முடியாமல் கெளதம் தவித்துக் கொண்டிருந்தான். சாணக்கியனால் மகாலிங்கத்தின் நிம்மதியை அழிக்க உருவாக்கப்பட்ட போலி கிருஷ்ணா சாணக்கியனின் ஐடியாவின் படி கௌதமையும் கயலையும் சேர்ப்பதை ரெண்டாவது பணியாக மேற்கொண்டான்.
தனியே வந்து அறைக்குள் இருந்து யோசித்த மகாலிங்கத்துக்கு எதுவும் புரியவில்லை.
கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் உணர்ந்தவர் கிருஷ்ணா உயிருடன் இருக்க கூடாது என்று முடிவெடுத்தார். தனது ஆட்களை நம்பி நொந்து போனவருக்கு நினைவில் வந்து நின்றான் கெளதம். திறமையான பையன் எவ்வளவோ பாதுகாப்புகளை தாண்டி தன்னை கொல்ல வந்தவர்களிடமிருந்து தன்னை காப்பாற்றியவன் அதனால் அவன் தான் தனது அடுத்த திட்டத்துக்கு பொருத்தமானவன் என்று நினைத்தவர் அவனுக்கு தொலைபேசியில் அழைத்தார்.
மறு முனையில் கெளதம் போனை எடுத்ததும், "ஹெலோ கெளதம் கொஞ்சம் என் ரூமுக்கு வா" என்று கூறி விட்டு போனை மகாலிங்கம் வைக்க, 'பெருசு ஏன் பதறுது?' என்று யோசித்தபடி அவர் அறையை தட்டி உள்ளே நுழைந்தான் அவன்.
அங்கிருந்த சோபாவை காட்டி இருக்க சொன்னவருக்கு ஏசி ரூமிலும் வியர்க்க, "அந்த கிருஷ்ணாவை பத்தி என்ன நினைக்கிற?" என்று கேட்டார். 'ஓ இதுதான் பிரச்சனையா ?' என்று யோசித்தவன், "ஒன்னும் சொல்றதுக்கு இல்லை மாமா... உடம்பை பார்த்தா நல்லா சாப்பிடுவார் போல இருக்கு." என்றான்.
"நான் என்ன கேக்கிறேன் நீ என்ன சொல்ற?" என்று தனது நெற்றியில் அடித்தவர், "அவன் என்ன கொல்ல வந்திருக்கான்னு தோணுது கெளதம்...அவன் தான் என்ன ரெண்டு தடவை கொலை பண்ண நினைச்சிருப்பான்" என்றவரை புருவ முடிச்சுடன் பார்த்தவன், "ஏன் அப்படி சொல்றீங்க?" என்று கேட்க, "அவனை எனக்கு நல்லா தெரியும்... என் வளர்ச்சி பிடிக்காது அவனுக்கு... எதிர் கட்சி சூழ்ச்சி" என்றார் தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள, "ஓ" என்றவன் மனதுக்குள், 'என்ன நடிப்புடா சாமி' என்று சலித்துக் கொண்டான்.
அவனை அழுத்தமாக பார்த்தபடி, "அதனால அவனை போட்டுரு... இல்லாட்டி என்னை கொன்று விடுவான்" என்றவரை அதிர்ச்சியாக பார்த்தவன், "ஏன் போட சொல்றீங்க? அரெஸ்ட் பண்ணி உள்ள வைக்கிறேன் கொலை முயற்சி என்று சொல்லி" என்றவனை உறுத்து விழித்தவர், "அவனுக்கு நிறைய ஆட்கள் இருகாங்க... இவன் செத்தா தான் அவங்க அடங்குவாங்க. இல்லாட்டி என்னை வேற ஆள வச்சு போட்ருவாங்க" என்றார் பதட்டத்துடன்.
அவரின் பொய்களால் வந்த எரிச்சலை கட்டுப்படுத்தியவன் எழுந்து பாக்கெட்டுக்குள் தனது கைகளை விட்டபடி, "சோ அவனை போடாணும். அவ்வளவு தானே?" என்றவனை பார்த்து ஆம் என்று தலையாட்ட "ஓகே கல்யாணம் முடியட்டும்" என்றான்.
"அவ்வளவு நாளா ?" என்றவரை வெறுப்பாக பார்த்தவன், 'என்ன சுயநலமப்பா' என்று மனதுக்குள் நினைத்தபடி "இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம்... அதுக்கிடையில் உங்களுக்கு ஒன்றும் நடக்காது" என்றவன் வெளியேறினான். அவன் சொன்னதை செய்வான் என்று நம்பினாலும் அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
மகாலிங்கம் அறைக்குள் இருந்து சாணக்கியன் அறைக்குள் மெல்லிய புன்னகையுடன் வந்த கௌதமை பார்த்த சாணக்கியன், "உன் மாமாக்கு என்னவாம்?" என்று கேட்க "உனக்கு சி.சி.டி.வி கண் டா" என்ற கெளதம், "என்ன போட சொல்லி என்கிட்டயே சொல்றார்டா" என்றான்.
"என்ன உளர்ற?" என்று சாணக்கியன் கேட்க, "அதான் நம்ம குண்டு பையன போடட்டாம்... அவன் அவரோட அரசியல் எதிரியாம்" என்று சலித்தபடி கூறியவன் அங்கிருந்த சோபாவில் சாய்ந்து அமர்ந்தான்.
"அதுக்கு நீ என்ன சொன்ன?" என்று கேட்க அவன், "சொல்ல மாட்டேன் போடா" என்று சொல்லி சிரித்தான்.
அதே நேரம் தனது அறைக்குள் வந்த கயலுக்கு கண்ணீர் கோர்த்திருந்தது. கோபத்திலும் அழுகையிலும் கண்ணீர் சொரிய நின்றவள் சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விட்டு கண் மூடி படுத்தாள். சாணக்கியன் அறைக்குள் இருந்தவனுக்கு கயல் நினைப்பாகவே இருந்தது. மனசு கேட்காமல் கயல் அறையை நோக்கிச் சென்றவன் அவள் அறை கதவை திட்ட அதை திறந்தவள், "எதுக்கு வந்தீங்க?" என்று சீறினாள். அவள் சிவந்த முகமும் அழகான இதழ்களும் அவனை போதை கொள்ள வைத்தது.
தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியவன், "அழுதியா?" என்று கேட்க, "அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? வெளிய போங்க" என்றவளின் தோளை பிடித்து தள்ளியவன் கதவை சாத்திவிட்டு உள்ளே வர அவளோ அவனை முறைத்து விட்டு, "வெளிய போங்க" என்று சீறினாள்.
"உன் கிருஷ்ணா என்றால் இப்படி சொல்லுவியா?" என்று கேட்டவன் குரலில் கேலியும் பொறாமையும் கலந்து இருந்தது.
அவன் பொறாமையை அறிந்தவள் அவனை சீண்ட, "எனக்கு அவரை பிடிச்சிருக்கு" என்றாள்.
அவள் பேச்சில் கோபம் வர, 'நான் என்ன கேட்கிறேன் இவ என்ன சொல்றா?' என்று எரிச்சலாக நினைத்தவன், "அவன் கிருஷ்ணா இல்லனாலும் பிடிக்குமா?" என்று கேட்டான்.
"எனக்கு கிருஷ்ணாவில பிடிச்சதே அவர் கொலு மொழு கன்னமும் அவர் குழந்தை மனசும் தான்... இது கண்டிப்பா கிருஷ்ணா தான்... நீங்க இப்போ வெளிய போங்க" என்றவளை முறைத்தபடி இல்லை என்று தலையாட்ட அவளோ, "அப்போ நான் போறேன்" என்றபடி கதவை திறந்துக் கொண்டு வெளியேறினாள்.
அவள் வெளியேறுவாள் என்று எதிர் பார்க்காதவன் பின்னால் செல்ல அவளோ ஹாலுக்குள் சென்று, "ஹாய் கிருஷ்ணா" என்றபடி அவனை அழைத்தவள் அவன் முன்னால் இருந்த சோபாவில் இருக்க கௌதமோ கடுப்புடன் தள்ளி இருந்த கதிரையில் இருந்தான்.
"வந்துட்டியா கயல்... இப்போ தலைவலி சுகமா?" என்று கேட்ட கிருஷ்ணாவிடம், "ஆமாம் சுகம் தான்" என்றவள், "பூந்தி லட்டு வேணுமா?" என்றாள்.
அவனோ, "உன் கையால் விஷத்தை கொடுத்தா கூட சாப்பிடுவேன்" என்று சொல்லி சிரிக்க அவனுடன் சேர்ந்து சிரித்தவள் எழுந்து அவனுக்கு பூந்தி லட்டு எடுத்து வர சமையலறைக்குள் சென்றாள்.
'அப்படியே எலிப்பாசனம் வாங்கி கொடு சாகட்டும்' என்று நினைத்த கெளதம், கிருஷ்ணாவை பார்க்க அவனோ, "என்ன போலீஸ் சார் என்ன கொல்ல பிளான் போடுறீங்களா?" என்று கேட்க அதிர்ச்சியுடன் அவனை கெளதம் பார்த்தான். அந்நேரம் கயல் வந்து சேர இருவரும் அமைதியாகினர்.
பூந்தி லட்டை கௌதமை பார்த்த படியே கொடுக்க கிருஷ்ணாவோ, "கயல் எனக்கு ஊட்டி விடமாடியா?" என்று கேட்க கௌதமுக்கு கோபம் திகு திகுவென பற்றி எரிந்தது.
அவனின் முறைப்பை கண்டவள், "ஓகே கிருஷ்ணா" என்றபடி பூந்தி லைட்டை தூக்க கௌதமோ பொறுமை இழந்து, "கயல்" என்று உறுமினான். அவனை சட்டை செய்யாது பூந்தி லைட்டை அவன் வாயின் அருகில் கொண்டு போனவளை கெளதம் ரெண்டடியில் எட்டி வந்து அவள் கையை பிடித்து தடுத்தவன், "நான் ஊட்டுறேன் நீ போ" என்றான்.
கிருஷ்ணாவோ, "நீங்க ஊட்டுறதும் அவ ஊட்டுறதும் ஒண்ணா சார்" என்று கேட்க அவனை முறைத்தபடியே, "என்ன வித்தியாசம்?" என்று கேட்டான். அதுக்கு கிருஷ்ணா, "காதலி கையால சாப்பிடும் போது ஒரு சுகம் சார் " என்றான் ஏக்கமான குரலில்.
'என் கையால் அடி வாங்கி சாக போற டா' என்று நினைத்தவன், "அந்த பீலிங் நான் ஊட்டுனாலும் வரும். சோ நானே ஊட்டி விடுறேன்" என்றவன் பூந்தி லட்டை வலுக்கட்டாயமாக அடுத்த பேச்சு பேச முதல் அவன் வாய்க்குள் திணிக்க அவன் அதை கஷ்டப்பட்டு திணறியபடி சாப்பிட்டான்.
அதை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்த கயலிடம், "இங்க என்ன படமா காட்டுறாங்க? உள்ளே போ" என்று சீற அவளோ கழுத்தை நெடித்தபடி உள்ளே போனாள்.
கெளதம், கிருஷ்ணாவின் கழுத்தை வளைத்து தனது கைக்குள் பிடித்தவன், "உங்க கூட பேசணும் வெளிய வர்றீங்களா?" என்று கேட்க கிருஷ்ணா பயந்து போய் கௌதமை பார்த்தான்.
அவனை முறைத்தபடியே அவனை இழுத்துச் செல்ல எத்தனித்தவனின் தோளில் கை போட்ட சாணக்கியன், "கெளதம் வா வெளிய போவோம்" என்றதும் கிருஷ்ணா கழுத்தில் இருந்து கை எடுத்த கெளதம், "இல்லடா இவன் கூட பேசணும்" என்று கிருஷ்ணாவை பார்த்து சொல்ல சாணக்கியனை பயத்துடன் கிருஷ்ணா பார்த்துக் கொண்டு இருந்தான். சாணக்கியனோ போகும் படி கிருஷ்ணாவிடம் கெளதம் பார்க்காதபடி கண்களால் சைகை செய்ய அவன் விறு விறுவென உள்ளே நடந்தான்.
"டேய் நில்லுடா" என்று கௌதம் கத்த, "அவனை விடுடா... நீ வா" என்று சாணக்கியன் கௌதமை வெளியே அழைத்துச் சென்றான். அறைக்குள் வந்த கிருஷ்ணா, "இனி கயல் விஷயத்தில கவனமா இருக்கணும்... சாணக்கியன் சார் வரலன்னா என் பாடு... அப்பப்பா என்னா பிடி... போலீஸ்காரன் பிடி என்றது சரியா தான் இருக்கு" என்றபடி கழுத்தை தேய்த்து விட்டான்.
சாணக்கியனுடன் வெளியில் கெளதம் சுத்தினாலும் மனம் பூரா கயல் கிருஷ்ணாவுடன் நடந்துக் கொண்ட விதத்தை பற்றியே அலை பாய்ந்தது. அவள் தன்னை வெறுப்பேத்த அவ்வாறு நடப்பது தெரிந்தாலும் அவனுக்கு ஊட்டி விடுமளவுக்கு சென்றதை அவனால் ஜீரணிக்க முடியவில்லை.
வீட்டுக்கு வந்ததும் நேரே கயல் அறைக்குச் சென்ற கௌதமை பார்த்து சிரித்தபடி சாணக்கியன் தனது அறைக்குள் நுழைந்தான்.
உள்ளே கதவை தட்டாமல் சென்றவனை பார்த்ததும் குளித்து முடித்து புடவை உடுத்திக் கொண்டிருந்தவள் அப்படியே அதை அள்ளி தன்னை மறைத்தபடி, "கதவை தட்டிட்டு உள்ளே வர தெரியாதா?" என்று கேட்க அவனோ இளக்காரமாக, "உன் கூட ரொமான்ஸ் பண்ண ஒன்னும் வரல நான் உன்னோட பேசணும்" என்றான் அவளை பார்த்து அலை பாய்ந்த மனதை மறைத்தபடி.
"கொஞ்சம் வெளிய இருங்க நான் கூப்புடுறேன்" என்றவளை கூர்ந்து பார்த்தவாறு வெளியே நின்றான் கண்ணியமான கணவனாக.
சற்று நேரம் கழித்து கதவை திறந்தவள், "என்ன விஷயம்?" என்று கேட்க, "உள்ளே போய் பேசலாமா?" என்று கேட்டான். அவளும் சற்று தள்ளி அவனை உள்ளே விட உள்ளே வந்தவன் கைகளை கட்டி அவளை கூர்ந்து பார்த்து, "கதவை சாத்து" என்றான். "எதுக்கு?" என்றவளிடம், "நான் உன் மேல ஒன்னும் பாய மாட்டேன்... அப்படி பட்டவன் என்றால் எப்போதோ உன் மேல பாய்ஞ்சிருக்கணும்" என்றவனை முறைத்தவள், "பேசுற பேச்சை பாரு" என்ற படி கதவை சாத்தினாள்.
அவளும் அவனை போல கையை கட்டி அவன் முன்னால் நிற்க, "எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியல நேரடியாவே கேக்கிறேன்…எதுக்குடி அவனுக்கு ஊட்டி விட போன?" என்று கேட்க கல கலவென சிரித்தவள்,
"கட்டிக்க போறவனுக்கு ஊட்டி விடுறது தப்பில்ல.... உங்களுக்கும் ஊட்டி விட்டதா ஞாபகம்" என்றாள்.
அவள் பதிலில் வந்த எரிச்சலை மறைத்தவன், "நானும் அவனும் ஒண்ணா?" என்று கேட்க, "இல்லையே... அவன் உங்கள விட ஒரு படி மேல" என்றாள் அவனை கூர்ந்து பார்த்தபடி. பொறுமை இழந்தவன், "என் கிட்ட இல்லாதது அவன் கிட்ட என்னடி இருக்கு...?" என்று கேட்க, "குண்டு கன்னம் அப்புறம் வெகுளி மனம், அப்புறம் என் மேல அன்பு" என்று சொல்ல, 'வெறுப்பேத்துறியா டி?' என்று மனதுக்குள் நினைத்தவன், "சரி என்னை விட அவன் மேலாவே இருக்கட்டும்... அதுக்காக இப்படி பண்ணி உன் பெயரை நீயே கெடுக்காதே... எனக்கு நல்ல வக்கணையா அட்வைஸ் பண்ணிட்டு நீ பண்ணுறது
சரியா?" என்று கேட்க... அவன் கூறியதில் நியாயம் விளங்கினாலும் அவன் பொறாமை அவளுக்கு சுவாரசியமாக இருக்க,
"ஏன் உங்களுக்கு அவன் கூட போட்டி போடுற அளவுக்கு உங்க மேல கான்பிடன்ட் இல்லையா?" என்று அவன் கேட்டதையே திருப்பி கேட்க அவள் பதிலில் புன்னகைத்தவன், "நல்லா பேசுற... நான் செய்த போலவே ட்ரை பண்ணுறியா? நீ உண்மையாவே அவனை லவ் பண்ணலனு தெரியும்... சும்மா இப்படியெல்லாம் நடக்காதே... அவன் எப்படி பட்டவனோ தெரியல" என்றான்.
உடனே அவள் அவனை சீண்டும் பொருட்டு, "நீங்க நடிச்சீங்க... நான் உண்மையாவே என் சின்ன வயசு காதலை காதலிக்கிறேன்" என்றாள். 'அடங்கமாட்டாளா?' என்று மனதுக்குள் யோசித்தவன்,
"இஸ் இட்?" என்று ஒற்றை புருவம் தூக்கி கேட்டவன் மேலும்,
"நீ என்னை தான் காதலிக்கிறனு நான் நிரூபிக்கவா?" என்றான் குரலில் ஏக்கத்தை தேக்கி.
அவன் குரல் அவளை என்னமோ செய்தாலும் அதை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள், "ஐ லவ் ஹிம்" என்றாள். அவனோ "லெட்ஸ் சீ" என்றபடி அவளை கூர்ந்து பார்த்தபடி நெருங்க கட்டிய கைகளை கீழே இறக்கியவள் அவனின் ஒவ்வொரு அடிக்கும் பின்னால் நகர்ந்து சுவரில் சாய்ந்து நிற்க அவளை மூச்சு காற்று படுமளவுக்கு நெருங்கி இரு கைகளையும் சுவரில் குற்றியவன் அவள் இதழ்களை தாபத்துடன் பார்த்தான்.
அவன் மூச்சு காற்றின் உஷ்ணமும் பார்வையின் தீட்சண்யமும் தாங்காது தலையை ஒரு புறம் அவள் திருப்ப, சிரித்தவன், "இதுவே போதுமே நிரூபிக்க" என்றான்.
உடனே அவனை நோக்கி திரும்பியவள் கோபமாக, "சிகெரட் மணக்குது அதனால் தான் முகத்தை திருப்பினேன்" என்றாள் தன் காதலை மறைக்கும் பொருட்டு...
"ஹே நான் சாத்தியமா குடிக்கலடி" என்றவனிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க சத்தமாக சிரித்தவனின் மார்பில் கை வைத்து தள்ள அவளின் பிஞ்சு விரல்களால் அந்த வலிய ஆண் மகனை கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை.
அவன் பார்வையிலேயே உருகி குழைபவளுக்கு அவனின் நெருக்கம் அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன்னிலை இழக்க செய்ய அவனை அதிர்வுடன் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அவளை கூர்ந்து பார்த்தபடி ஒற்றை கை சுவரில் இருக்க அடுத்த கையின் சுட்டு விரலால் அவள் நெற்றியில் கோலம் போட்டவன் விரலை அவள் நாசிக்கு இறக்கி பின் கன்னங்களில் கோலம் போட்டவனின் விரல் இறுதியில் அவள் இதழ்களை அடைந்து அதனை வருட தன்னிலை மறந்தவள் கண்கள் தானாக மூடிக் கொண்டது.
அவள் கண் மூடி நிற்பதை பார்த்து கொடுப்புக்குள் சிரித்தவன் அப்படியே நின்றபடி அவள் காதுக்குள் தனது மீசை ரோமம் உரச குனிந்து, "இது போதுமே நிரூபிக்க" என்று சொல்ல அவள் கண்களை திறந்து அவன் மார்பில் கை வைத்து அவனை விலக்கி தள்ளியவள், "அது...வந்து..." என்று தடுமாற,
"இதுக்கும் புது கதை ஏதும் சொல்ல போறியா?" என்று கேட்டு சிரித்தவன், "என் சுட்டு விரல் அசைவே போதுமடி என் மேல் உள்ள உன் காதலை நிரூபிக்க" என்றவன் கண்களை சிமிட்டி விட்டு வெளியேறினான்.
அவன் போனதும் பிரம்மை பிடித்த போல் நின்றவள் திடீரென சுயநினைவுக்கு வந்தாள்.
'இவன் என்ன நினைச்சுட்டு இருக்கான்?' என்று யோசித்தே அவளுக்கு தலை வெடிக்கும் போல் இருந்தது.
கௌதமோ அவளை ஏற்றுக் கொள்ளவும் முடியாமல் முழுதாக விலகவும் முடியாமல் ஒரு தளம்பலான மன நிலையில் இருந்தான்.
அவனுக்கு அவள் காதல் முழுதாக வேண்டும் ஆனால் அவள் தன்னை பற்றி அறிந்து காதலிக்க வேண்டுமென விரும்பினான். அது நடக்காது என்று அவனே யூகித்து அவளை விட்டு விலக நினைத்தாலும் அவள் மேலுள்ள காதல் அவனை பாடாய் படுத்தியது. இரு தலை கொள்ளி எறும்பாய் தவித்து போய் இருந்தான்.
கல்யாணத்துக்கு முதல் நாளை ஒவ்வொருவரும் வெவ்வேறு மன நிலையில் தனிமையாக கழிக்க கல்யாண நாளும் வந்து சேர்ந்தது. ஒவ்வொருவரும் மாறி மாறி ஏமாற்றி தங்கள் கண்ணாமூச்சி ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக் கொண்டு இருந்தனர்.