அத்தியாயம் 24
தன்னுடன் படிக்கும் குழந்தைகளின் தந்தைமாரை பார்த்து விட்டு வந்தவன், "என் அப்பா ஏன் என்னை இவ்ளோ நாள் பார்க்க வரல?" என்று கேட்டான்...
ஆதிரையாழிடம் பதில் இல்லை...
மருதநாயகத்தைப் பார்த்தாள்... அவரோ, "உன் அப்பா அமெரிக்காவிலே இருக்கான்... அதனால வரல" என்றார்...
"ஃபோன்லயும் பேசலையே" என்றான்...
இந்த காலத்து பிள்ளைகளை ஏமாற்ற முடியாது என்று மருதநாயகத்துக்கு புரிந்தது...
"கொஞ்சம் வேலையா இருக்கான்... சீக்கிரம் பேசுவான்" என்றார்...
அதன் பிறகு, அடிக்கடி, "என் கூட ஏன் இன்னும் பேசல?" என்று கேட்க ஆரம்பித்து விட்டான்...
ஆதிரையாழும் மருதநாயகமும் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுவார்கள்...
ஆதிரையாழோ, "தீரா, உனக்கு ஒன்னு வாங்கி வச்சு இருக்கேன்" என்று ஏதாவது சொல்லி அவன் கவனத்தை திசை திருப்புவாள்...
இப்படி தான் அவர்கள் நாட்கள் நகர்ந்துக் கொண்டு இருந்தன...
ஆறு வருடம் கடந்த நிலையில்... மருதநாயகம் இன்னும் வயதேறி விட்டார்...
கையில் பிடிமானத்துக்கு ஒரு ஊன்றுகோல் இருக்கும்...
ஆனால் இன்னுமே அந்த கம்பீரம் குறையவில்லை...
இவர் இப்படி என்றால் சர்வஜித்தின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது...
ஜிம் செய்த அந்த உடல் அப்படியே தான் இருந்தது...
இன்னும் ஜிம்முக்கு போய்க் கொண்டு தான் இருந்தான்...
முதல் போல தாடியை ட்ரிம் செய்யவில்லை... தாடியும் மீசையும் வளர்ந்து இருந்தது...
ஜெல் வைத்து வாரிய முடி....
கண்ணில் ஒரு கண்ணாடி அணிந்து இருந்தான்...
மற்றபடி அதே கம்பீரம், அதே ஆளுமை எல்லாமே அப்படி இருந்தது...
முதல் இருந்த துடினம் இல்லை...
நிதானமாகி இருந்தான்... வெகு நிதானம்... வெற்றிகளை கண்டு கண்டு களைத்து விட்டான்... இப்போதெல்லாம் வெற்றிகளை புன்னகையுடன் கடந்து போக பழகிக் கொண்டான்...
ஆனாலும் அந்த ஈகோ அப்படியே தான் இருந்தது...
ஆதிரையாழின் நினைவும் அப்படியே இருந்தது...
அவன் அழிக்க முயன்று தோற்று விட்டான்... அப்படியே விட்டு விட்டான்...
சிறந்த வர்த்தகர் விருதை நான்காவது ஆண்டில் தொடர்ந்து வாங்கி இருந்தான்...
அமெரிக்காவில் அசைக்க முடியாத வர்த்தகர்களில் அவனும் ஒருவன்...
இத்தனை வருட கடின உழைப்பின் பயன் அது...
வர்த்தகர்கள் கூடிய அந்த விழாவில், "தெ பெஸ்ட் என்ட்டர்ப்ரூனர் அவார்ட் கோஸ் டு மிஸ்டர் சர்வஜித் ரணதீரன்" என்று சொல்ல, படியேறி அவர்கள் கொடுத்த விருதை வாங்கியவன், அனைவருக்கும் நன்றி சொல்லி விட்டு இறங்கிக் கொண்டான்...
ஆர்ப்பாட்டம் இல்லை...
அவன் தோற்றத்தில் மட்டும் அல்ல, நடவடிக்கையிலும் ஒரு முதிர்ச்சி... அவனுக்கே தெரியாமல் உண்டான முதிர்ச்சி...
எத்தனை மாற்றங்கள் வந்தாலும் மருதநாயகம் மேல் இருக்கும் கோபம் மட்டும் அவனுக்கு குறையாமல் அப்படியே இருந்தது... பணத்தை காட்டி அவர் தன்னை ஆட்டி வைத்ததை அவனால் இன்று வரை ஜீரணிக்க முடியவே இல்லை...
விருதுடன் இறங்கி வந்தவனோ அமர்ந்தது என்னவோ ஜேம்ஸ் அருகே தான்...
ஜேம்ஸோ அவனை பார்த்து, "வெல் டன் சர்வா" என்று சொல்ல, "தேங்க்ஸ்" என்று சொன்னான்...
"உன் தாத்தா இத கேட்டா ரொம்ப சந்தோஷப்படுவார்" என்று சொல்ல, அவனிடம் எந்த பதிலும் இல்லை... ஒரு அழுத்தமான பார்வை மட்டுமே...
ஜேம்ஸுக்கு புரியும் அவனுக்கு மருதநாயகம் பற்றி பேசினால் பிடிக்காது என்று...
ஆழ்ந்த மூச்சை எடுத்தவரோ, "வெல், இந்த வீகென்ட் என்னோட ஐம்பதாவது வெட்டிங் அன்னிவெர்சரி, உனக்கு ஸ்பெசல் டின்னர்... உனக்காகவே தனியா ஏற்பாடு செய்து இருக்கேன்… கண்டிப்பா டின்னருக்கு வந்திடு" என்று சொல்ல, "ஷோர் ஜேம்ஸ், கங்கிராட்ஸ்" என்று முடித்துக் கொண்டான்.
இப்படியே நாட்கள் நகர, ஒரு நாள் தோட்டத்தில் சுற்றி பார்த்துக் கொண்டு இருந்த மருதநாயகத்துக்கு நெஞ்சில் லேசான வலி ஊடுருவ, நெஞ்சை பிடித்துக் கொண்டே கையில் இருந்த ஊன்று கோலை கீழே விட, "ஐயா" என்று கத்திக் கொண்டே, அவரை பிடித்து இருந்தான் முத்து...
இதனை பார்த்த அருகே நின்ற ரணதீரனோ, "அம்மா! தாத்தாவுக்கு ஏதோ ஆயிடுச்சு" என்று கத்த, வீட்டினுள் இருந்து சமைத்த அரைவாசியில் ஓடி வந்தாள் ஆதிரையாழ்...
அடுத்த கணமே அவரை வைத்தியசாலைக்கு ஏற்றிச் சென்றார்கள்...
தனியாக இருந்து அனைவரையும் வழி நடத்தியது என்னவோ ஆதிரையாழ் தான்...
அவளுக்கு இந்த பொறுப்பையும் ஆளுமையையும் இத்தனை வருடங்களில் சொல்லிக் கொடுத்து இருந்தார் மருதநாயகம்...
அழவில்லை அவள்...
அவருக்கு ஒன்றும் ஆகாது என்று நம்பிக்கை... அவரை காப்பாற்றி விட வேண்டும் என்று முனைப்பு...
அழுதால் ரணதீரனுக்கு தவறான உதாரணம் ஆகி விடுவோமோ என்று பயம்...
பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டே நின்றாள்.
வைத்தியசாலைக்குச் சென்றதுமே, அவருக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது...
வைத்தியருக்காக வெளியே மகனுடனும் முத்துவுடனும் காத்துக் கொண்டே நின்றாள் ஆதிரையாழ்...
நீண்ட சிகிச்சைக்கு பின்னர் வெளியே வந்த வைத்தியரோ, "நீங்க அவருக்கு?" என்று கேட்க, "பேத்தி" என்றாள் ஆதிரையாழ்...
குரலை செருமிய வைத்தியரோ, "ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆஹ் இருக்கார் போல... மைல்ட் அட்டாக் தான்... ஒண்ணும் பிரச்சனை இல்லை... ஆனா இந்த வயசில மைல்ட் அட்டாக் வர்றது கூட ஆபத்து தான்... அவர் ஸ்ட்ரோங் என்கிறதால தப்பிட்டார்... அவர் ஸ்ட்ரெஸ் ஆகாம பார்த்துக்கோங்க" என்று சொல்ல, அவளும், "ம்ம்" என்று சொன்னவளோ மேலும், "தாத்தாவை பார்க்கலாமா?" என்று கேட்க, "நீங்க மட்டும் போய் பாருங்க, நிறைய பேர் இப்போதைக்கு பார்க்க வேணாம்" என்றார்...
அவளும், "சரிங்க டாக்டர்" என்று சொல்லி விட்டு, ரணதீரனிடம், "முத்து மாமா கூட நின்னுக்கோ, அம்மா உள்ளே போய் பார்த்துட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே, கதவை திறந்துக் கொண்டே உள்ளேச் சென்றாள்.
மருத்துவ உபகரணங்களுக்கு நடுவே படுத்து இருந்தார் மருதநாயகம்...
அவர் அருகே வந்து, அவர் கையை பற்றிக் கொண்டே, இருக்கையில் அமர்ந்தவளுக்கு கண்ணீர் வழிய, "பயந்துட்டேன் தாத்தா" என்றாள்.
அதுவரை தேக்கி வைத்து இருந்த கண்ணீர் அவர் முன்னே தான் வெளி வந்தது...
மெதுவாக சிரித்தவரோ, "சர்வாவை பார்க்காம அவ்ளோ சீக்கிரம் செத்து போக மாட்டேன்... சர்வா கைல அவன் பையன ஒப்படைச்சுட்டு தான் செத்து போவேன்" என்றார்... அவரை அவள் பரிதாபமாக தான் பார்த்தாள்...
அவரோ, "சிலவேளை எனக்கு இப்படி ஆய்டுச்சுனா அவன் கண்டிப்பா வருவான்... ஜேம்ஸ் கிட்ட இத சொல்லிடுறியா?" என்று கேட்டார்...
அவரது ஒவ்வொரு ஏக்கமும் அவளுக்கு சர்வஜித் மீது கொலைவெறியை தான் தூண்டியது...
"மனசாட்சி இல்லாதவன்" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே, "சொல்லிடுறேன் தாத்தா, உங்க ஃபோன் முத்து கிட்ட தான் இருக்கு" என்றாள்.
"ம்ம்" என்று சொன்ன மருதநாயகமோ மேலும், "தீரன் என்ன பண்ணுறான்?" என்று கேட்க, "வெளிய நிக்கிறான் தாத்தா, இப்போ என்னை மட்டும் தான் டாக்டர் உள்ளே வர விட்டார்" என்றாள்.
ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டார் மருதநாயகம்...
அவருடன் பேசி விட்டு, வெளியே வந்தவளோ முத்துவிடம், "தாத்தாவோட ஃபோனைக் கொடு" என்றாள். அவனும் கொடுக்க, அதில் ஜேம்ஸின் தொலைப்பேசி எண்ணை தேடி எடுத்தாள்...
அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவு சரளமாக வராது... மருதநாயகம் மூலம் கொஞ்சம் பேச கற்றுக் கொண்டாள்.
ஜேம்ஸிடம் ஆங்கிலத்தில் தானே பேச வேண்டும்...
ஒரு தயக்கத்துடன் தான் ஜேம்ஸுக்கு அழைத்தாள்... அவரும் மருதநாயகத்தின் எண் என்று சொன்னதுமே ஒரே ரிங்கில் எடுத்து விட்டார்...
"ஹெலோ, நான் ஆதிரையாழ்" என்றாள்.
அவரோ சின்ன மௌனத்தின் பின்னர், "ம்ம்... சொல்லு" என்று சொல்ல, அவளோ தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எல்லாமே சொல்லி முடித்தாள்....
"இப்போ மருதுக்கு ஒன்னும் இல்லையே" என்று கேட்டார் அவர்...
அவர் பேசியதை கஷ்டப்பட்டு புரிந்துக் கொண்டவள், "ஹீ இஸ் ஓகே" என்று சொன்னாள்.
"ஓகே, இந்த சன்டே நைட் சர்வாக்கு டின்னர் இருக்கு... அப்போ நான் இத சொல்லிடுறேன்" என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்...
அவளுக்கு அவர் சொன்னது மேலோட்டமாக புரிந்தது...
அவளுக்கு இது எல்லாம் முக்கியம் அல்ல, சர்வஜித் வந்தாலும் வரவில்லை என்றாலும் அவளுக்கு கவலை இல்லை... கவலை எல்லாம் மருதநாயகத்தை பற்றி தான்...
ஜேம்ஸோ அலைப்பேசியை வைத்து விட்டு அருகே இருந்த க்ளாராவைப் பார்த்தவர், "மருதுக்கு மைல்ட் அட்டாக் ஆஹ்ம்" என்றார்...
க்ளாராவோ, "சர்வா கிட்ட சொல்லுங்க" என்று சொல்ல, அவரோ, "ஃபோன் எடுத்தாலே பர்சனல் விஷயம் பேச வேணாம்னு சொல்லுவான்... இந்த சன்டே நைட் வருவான் தானே... அப்போ சொல்லிக்கலாம்" என்று சொல்ல, க்ளாராவும் சம்மதமாக தலையாட்டினார்...
இதே சமயம் மருதநாயகமும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் சென்று விட்டார்...
"சும்மா சும்மா நடந்து திரியாம ஓய்வா இருங்க" என்று கண்டிப்பான கட்டளை ஆதிரையாழிடம் இருந்து...
அவரும் அவள் சொல்லை மதித்து மாதிரிகளுடன் நாளை கடத்த ஆரம்பித்தார்...
இதே சமயம் ஞாயிற்றுக் கிழமையும் வந்து சேர்ந்தது...
ஜேம்ஸின் வீட்டின் முன்னர் லம்போர்கினி காரில் வந்து இறங்கினான் சர்வஜித்...
கருப்பு நிற ஜீன்ஸ், கருப்பு நிற ஷேர்ட், காதில் ப்ளூ டூத் மற்றும் கண்ணில் கண்ணாடி என்று வந்திருந்தான்... தலையை ஜெல் வைத்து வாரி இருந்தவனது செம்மையான தோற்றத்தை ஒரு கணம் பார்த்து விட்டு செல்லாதவர்கள் இருக்க முடியாது...
அவனோ கையில் சிவப்பு நிற பூங்கொத்துடன் வீட்டினுள் நுழைய, ஜேம்ஸும் க்ளாராவும் அவனை வரவேற்றார்கள்...
"வெல்கம் சர்வா... இப்போ தான் என் பசங்க கிளம்புனாங்க" என்று சொல்ல, அவனோ, "மிஸ் பண்ணிட்டேன் ஜேம்ஸ்... கங்கிராட்ஸ்... ஐம்பது வருஷம் சேர்ந்து வாழுறது எல்லாம் பெரிய விஷயம்... நீங்க லவ்வபிள் கப்பில்" என்று சொல்லி பூங்கொத்தை கொடுத்து வாழ்த்தி விட்டு, அவர்களுக்கு பரிசாக ஆளுக்கு ஒரு டயமண்ட் மோதிரமும் கொடுத்தான்...
க்ளாராவோ, "ரொம்ப அழகான மோதிரம்" என்று சொல்ல, அவனும் மென் சிரிப்புடன் அங்கே அமர்ந்தான்...
அவனுக்கு மது பரிமாறப்பட, அவனோ, "நோ ஜேம்ஸ்... நான் தான் ட்ரைவ் பண்ணி வந்தேன்... சோ இன்னைக்கு ட்ரிங்க் பண்ண மாட்டேன்" என்று சொல்ல, "ஓகே" என்று சொல்லிக் கொண்டே ஜூஸை கொடுக்க, அவனும் குடித்தான்...
அதனை தொடர்ந்து எல்லாரும் சாப்பிடும் மேசையில் அமர்ந்தார்கள்...
சர்வஜித்தோ, உணவை எடுத்து தட்டில் வைத்துக் கொண்டே சாப்பிட ஆயத்தமாக, க்ளாராவோ ஜேம்ஸிடம், "ஜேம்ஸ் சொல்லுங்க" என்று சொன்னார்...
சாப்பிட்டுக் கொண்டு இருந்த சர்வஜித் காதில் இது விழ, சட்டென நிமிர்ந்தவன், "ஏதும் பேசணுமா?" என்று கேட்டான்...
குரலை செருமிய ஜேம்ஸோ, "உங்க தாத்தாவுக்கு மைல்ட் அட்டாக்... இப்போ ஓகே ஆயிட்டார்... உன்னை பார்க்கணும்னு ஆசைப்படுறார்" என்று சொல்ல, அவனோ அவரை அழுத்தமாக பார்த்து விட்டு, தலையை குனிந்து சாப்பிட்டவன், "ஐ ஆம் நாட் இன்டெரெஸ்ட்டேட்" என்றார்...
"ஹீ இஸ் சிக்" என்றார் க்ளாரா பொறுமை இன்றி... ஜேம்ஸோ, "க்ளாரா" என்று அதட்ட, "என்னால கன்ட்ரோல் பண்ண முடியல, சாரி" என்றார் க்ளாரா...
சர்வஜித்தோ பெருமூச்சுடன், "ஜேம்ஸ்... எனக்கு அவர் முகத்துல முழிக்கவே இஷ்டம் இல்ல" என்று சொல்ல, "வை" என்று க்ளாரா உடனே கேட்டார்...
"ஏன்னா அவர் எனக்கு செய்த வேலை அப்படி... அங்கே போனா எவ்ளோ டார்ச்சர்... எல்லாம் இந்த பணத்துக்காக தானே... கடைசியா என் ஸ்டேட்டஸுக்கு கொஞ்சமும் மேட்ச் இல்லாத ஒருத்தியை கல்யாணம் வேற பண்ணி வச்சார்... எல்லாம் பணத்தை காட்டி தானே பண்ணுனார்... பணம் தான் கைல வந்திடுச்சே... இனி அவர் சொல்றத எல்லாம் கேக்கணும்னு அவசியம் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, கையை அருகே இருந்த டிஸ்ஸுவினால் துடைக்க, "திஸ் இஸ் க்ருவல்" என்றார் க்ளாரா...
க்ளாராவினால் அவன் பேசுவதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை...
அவனுக்கும் ஜேம்ஸிடம் எடுத்து எறிந்து பேசுவதை போல பேசவும் முடியவில்லை... முக்கியமாக கல்யாண நாள் அன்று அவர்களை கஷ்டப்படுத்தவும் அவன் விரும்பவில்லை...
மேசையில் இருந்த கார் கீயை எடுத்தவன், "இந்த கதையை இப்போவே நிறுத்திக்கலாம்... ஐ ஆம் லீவிங், பை ஜேம்ஸ்" என்றார்...
"நோ சர்வா... நீ எனக்கு பதில் சொல்லி தான் ஆகணும்" என்றார் க்ளாரா...
ஜேம்ஸோ, "விடு க்ளாரா, ரிலாக்ஸ்" என்று சொல்ல, க்ளாராவோ, "நோ ஜேம்ஸ்... மருதநாயகம் இவனுக்கு எவ்ளோ பண்ணி இருக்கார்... இவன் கொஞ்சமும் நன்றி இல்லாம பேசுறான்" என்று சொல்ல, சர்வஜித்துக்கும் பொறுமை போய் விட்டது...
"அப்படி என்ன பண்ணிட்டார்? சொத்து கொடுத்து இருக்கார்... பேரன்னா கொடுத்து தானே ஆகணும்... மீதி எல்லாம் எனக்கு கொடுமை தான் பண்ணி இருக்கார்... முக்கியமா என் கல்யாணம்" என்று சொல்ல, க்ளாராவோ, "நல்ல பொண்ண தானே கல்யாணம் பண்ணி கொடுத்தார்... நானும் ஜேம்ஸும் ஐம்பது வருஷம் சேர்ந்து வாழ்ந்து இருக்கோம்... பட் உன்னால அஞ்சு மாசம் கூட வாழ முடியல... அம்போனு விட்டு வந்து இருக்க" என்று கடுப்பாகவே கேட்டார்...
அவனுக்கு பொறுமை மொத்தமாக போய் விட, அவரை திரும்பி பார்த்தவன், "நீங்க லவ் பண்ணி இருக்கீங்க, சேர்ந்து வாழுறீங்க, பட் நான் அப்படி இல்ல... பிடிக்காத பொண்ணு கூட எப்படி சேர்ந்து வாழுறது?" என்று கேட்டார்...
"பிடிக்கலைன்னா, வை யூ மேட் லவ்? பச்சையா கேக்கணும்னா வை டிட் யூ ஃப* ஹேர்?" என்று க்ளாரா கேட்க, சர்வஜித்துக்கு சுருக்கென்று தைத்தது...
ஜேம்ஸோ, "க்ளாரா ப்ளீஸ்" என்று அடக்க முற்பட, "நோ ஜேம்ஸ் நான் பேசணும், சிக் ஆன ஒருத்தர பார்க்க நாட் இன்டெர்ஸ்டெட்னு சொல்றான்... எப்படி பேசாம இருக்க முடியும்?" என்றார் அவர்...
அவரை ஆழ்ந்து நிதானமாக பார்த்த சர்வஜித்தோ, "எஸ் ஐ மேட் லவ்... சாரி உங்க பாஷைல சொல்லணும்னா ஐ ஃப** ஹேர்... தட்ஸ் மை செக்ஸுவல் நீட்... அதுக்கும் லவ்வுக்கும் என்ன சம்பந்தம்? அதுக்கு உரிய பணம் நான் கொடுத்துட்டேன்..." என்றான்...
க்ளாராவுக்கு தூக்கி வாரிப் போட்டது...
"என்ன பேசுற நீ? உனக்கு ஒரு பையன் இருக்கான்... அதுவாவது தெரியுமா?" என்று கேட்க, சட்டென ஒரு அதிர்வு அவன் உள்ளே...
இத்தனை வருடங்களில் இதனை பற்றி எல்லாம் அவன் யோசிக்கவே இல்லையே...
ஆழ்ந்த மூச்சை எடுத்து தனது உணர்வுகளை மறைத்தவன், "சோ வாட்? அவ அபார்ட் பண்ணாததுக்கு நான் பொறுப்பாக முடியுமா?" என்று கேட்டான்...
"சச் எ க்ருவல் ஆன்ஸ்வெர்" என்றார் க்ளாரா...
"எஸ்... ஐ ஆம் எ டெவில்... போதுமா?" என்று சொன்ன சர்வஜித்தோ, "ஓகே ஜேம்ஸ், ஐ ஆம் லீவிங்... லெட் ஹேர் காம்" என்று சொல்லிக் கொண்டே வாசலில் காலை வைக்க, "அப்போ இது தான் உன் முடிவா?" என்று கேட்டார்...
அவனோ நின்று நிதானமாக திரும்பி அவரை பார்த்தவன், "எஸ், அவரை பார்க்கவும் எனக்கு இஷ்டம் இல்லை... அவர் கல்யாணம் முடிச்சு தந்த குப்பை கூட வாழவும் இஷ்டம் இல்ல" என்று சொல்லி விட்டு முன்னால் திரும்பி அடுத்த அடி வைக்க, "யார் குப்பை? நீ தான் குப்பை... உன்னை தூக்கி கோபுரத்துல வச்ச அவரை சொல்லணும்" என்று சொன்னார் க்ளாரா...
ஜேம்ஸோ, "க்ளாரா" என்று அதிர, அவரோ, "இந்த டெவில்காக நாம உண்மையை எதுக்கு மறைக்கணும்?" என்று கேட்க, சட்டென அவர்களை திரும்பி பார்த்த சர்வஜித்தோ, "எக்ஸ்கியூஸ் மீ" என்றான் அழுத்தமாக...
அவனை நோக்கி வந்த க்ளாராவோ, "உன் பொண்டாட்டியை நீ குப்பைனு சொன்னா, நீயும் அதே குப்பை தான்... நீ ஒன்னும் மருதநாயகத்தோட பேரன் இல்லை... கார் ஆக்சிடென்ட்ல மருதநாயகத்தோட மகன், மருமகள்,பேரன் எல்லாருமே இறந்துட்டாங்க... அதே நேரம் இந்தியாவுல அவர் தோட்டத்தில வேலை பார்த்த பொண்ணோட குழந்தை தான் நீ... அந்த பொண்ண நிறைய பேர் சேர்ந்து ரேப் பண்ணி அதுல உருவான குழந்தை தான் நீ... உனக்கு அப்பா பேர் கூட இல்லை... உன்ன பெத்துட்டு, உனக்கு ரெண்டு வயசா இருக்கும் போது ஊர் சனம் பேசுன பேச்சு தாங்க முடியாம உன் அம்மா சூசைட் பண்ணிக்கிட்டாங்க... அவருக்கும் யாரும் இல்ல... உனக்கும் யாரும் இல்லை... உடனே உன்ன அவர் தூக்கிட்டு இங்க வந்துட்டார்... அவரோட பேரனோட அடையாளம் எல்லாத்தையும் உன் கிட்ட கொடுத்தார்... உனக்குனு அடையாளம் கூட இல்லை... உன் உண்மையான பேர் கூட உனக்கு தெரியாது... இப்போ சொல்லு... அப்பா பேர் தெரியாத நீ குப்பையா? இல்ல உன் பொண்டாட்டி குப்பையா?" என்று கேட்க, அவனோ ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்து விட்டான்...
"க்ளாரா கம் அகைன்" என்று அவன் சொல்லும் போதே இதயம் அவனுக்கு வேகமாக துடிக்க ஆரம்பித்தது...
'இது உண்மையாக இருக்கவே கூடாது' என்று நினைத்தான்...
ஜேம்ஸோ, "க்ளாரா இனாஃப்" என்று சொல்ல, சர்வஜித்தோ கையை நீட்டி, "ஜேம்ஸ் எனக்கு தெரிஞ்சாகணும், லெட் ஹேர் டாக்" என்றான்... மேலும் தொடர்ந்த க்ளாராவோ, "ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ்ன்னு பதறுறியே... அந்த ஸ்டேட்டஸ் கூட உன் தாத்தா போட்ட பிச்சை தான்... அவர் இல்லனா நீ இப்போ ஊர்ல பிச்சை எடுத்துட்டு இருந்து இருக்கணும்" என்று ஆக்ரோஷமாக சொல்ல, "ஐ நீட் எவிடென்ஸ்" என்றான்...
க்ளாரா அவனை இளக்காரமாக பார்த்தவர், "நான் கொடுக்கிறேன்" என்று தனது அறைக்குள் செல்ல, அவனோ அவர் சென்ற வழியை வெறித்துப் பார்த்துக் கொண்டே மார்புக்கு குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டே நின்றான்... உள்ளேச் சென்று ஒரு ஆல்பம் ஒன்றை எடுத்து வந்தார்...
பழைய ஆல்பம் ஒன்று அது...
அதில் தான் அனைத்து புகைப்படங்களும் இருந்தன...
"இந்த ஃபோட்டோ எல்லாம் உன் கிட்ட காட்ட கூடாது என்கிறதுக்காக எங்க கிட்ட கொடுத்து வச்சு இருந்தார்... நீ பிறந்த நேரம் உன் அம்மா, அப்பா கூட இருக்கிற படம் தான் பார்த்து இருப்ப... ஆனா அதுல இருக்கிறது நீ இல்ல... அதுக்கு பிறகு நீ வளர்ந்து ரெண்டு வயசு வர்ற நேரம் உன் அம்மா, அப்பா ஃபோட்டோ பார்த்து இருக்க மாட்டே... ஏன்னா முக சாயல் வித்தியாசம்னு இந்த படம் லாம் எங்க கிட்ட கொடுத்தார்... ரெண்டு வயசில உன் தாத்தா கூட இருக்கிற படம் தான் நீ பார்த்து இருப்ப... அவங்க ஃபேமிலி ஃபோட்டோ பாரு" என்று சொல்ல, ஆல்பத்தை விரித்து பார்த்தான்...
நெஞ்சில் அழுத்தம்...
அவனது அம்மா, அப்பா என்று அவனுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் வேறு ஒரு முக சாயல் உள்ள பையனை தூக்கி வைத்துக் கொண்டே இருந்தார்கள்...
அதே ஆல்பத்தின் இறுதி பக்கத்தை புரட்டி காட்டிய க்ளாராவோ, "இது தான் ஆக்சிடென்ட் டைம் பேப்பர்ல வந்த படம்... நல்லா பாரு" என்று சொன்னார்... அவனும் அதனை ஆழ்ந்து பார்த்தான்...
"நடந்த விபத்தில் தாய், தந்தை, மகன் என்று மூவரும் சம்பவ இடத்தில் பலி" என்று அவர்கள் படமும் போடப்பட்டு இருந்தது...
விரல்களை கொண்டு அதனை வருடியவனுக்கு என்ன உணர்வென்று தெரியவில்லை...
எல்லாமே தன்னை விட்டு போன உணர்வு...
அவன் இருக்கும் அடையாளம் கூட அவனுடையது அல்ல...
ஸ்டேட்டஸ் ஸ்டேட்டஸ் என்று பதறியவனுக்கு தாய் வைத்த பெயர் கூட தெரியாது... தந்தை பெயரும் தெரியாது...
எப்படி இருக்க வேண்டியவனை இப்படி கொண்டு வந்து இருத்தி இருக்கின்றார் மருதநாயகம்... ஆனால் அவனோ, அவரை கொஞ்சமும் மதிக்காமல் அல்லவா இருக்கின்றான்... மனது மேலும் அழுத்தியது...
ஆல்பத்தை மூடி, க்ளாராவிடம் கொடுத்தவன், "ஓகே ஐ ஆம் லீவிங்" என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் செல்ல ஜேம்ஸோ, "இது உனக்கு தெரிஞ்ச போல காட்டிக்காதே சர்வா... உங்க தாத்தா தாங்கிக்க மாட்டார்... நீ உன் இஷ்டப்படி நடக்கும் போதெல்லாம் உண்மையை சொல்ல சொல்லி அவன் கிட்ட சொல்லுவேன்... ஆனா கேட்க மாட்டான்... உண்மை தெரிஞ்சா உடைஞ்சிடுவேன்னு பயம் அவனுக்கு... உனக்கு இந்த திமிர் தான் அழகுனு எப்போதுமே மருது சொல்லுவான்..."
அவரை அழுத்தமாக பெருமூச்சுடன் பார்த்தவன், "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே விறு விறுவென சென்று காரில் ஏறிக் கொண்டான்...
கார் அடுத்த கணமே மின்னல் வேகத்தில் புறப்பட்டது...
எல்லாம் இருந்தும் இப்போது அனாதையான உணர்வு...
வார்த்தைக்கு வார்த்தை பேசிய வார்த்தைகள் எல்லாம் பொய்த்து விட்டன...
அவன் வாழ்ந்த வாழ்க்கையே பொய்யான வாழ்க்கை என்று தோன்றியது...
வீட்டுக்கு வந்தவனுக்கு தூக்கம் வருமா என்ன? அடுத்த கணமே தனது உதவியாளனுக்கு அழைத்தவன், "நாளைக்கே இந்தியா போகணும்... டிக்கெட் புக் பண்ணு" என்றான்...
அவனும், "ஓகே சார்" என்று சொல்லி விட்டு வைத்தான்...
சுழலும் நாற்காலியில் சாய்ந்து கண் மூடி நீண்ட நேரம் அமர்ந்து இருந்தான்...
சற்று நேரத்தில் தொலைப்பேசி அலறியது...
"ஃபெர்ஸ்ட் க்ளாஸ் அண்ட் பிசினஸ் க்ளாஸ்ல இடம் இல்ல சார்" என்று சொல்ல, சர்வஜித்தோ, "எக்கானமி" என்றான்...
உதவியாளனோ, "நீங்க அதுல போவீங்களா சார்?" என்று கேட்க, ஒரு சின்ன மௌனம் அவனிடம்...
"கண்டிப்பா போவேன்... புக் இட்" என்று சொல்லி விட்டு வைத்தவன், அடுத்த நாளே இந்தியாவுக்கு கிளம்பி இருந்தான்...