ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 22

அத்தியாயம் 22

மாங்காய்களை வெட்டி அதில் மிளகாய் தூள் உப்பு போட்டு தட்டில் வைத்தவள், அதனை வெளியேக் கொண்டு வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்க, அவள் அருகே வந்து நெருங்கி அமர்ந்தான் சர்வஜித்...

அவளோ அவனை எதிர்பார்க்கவே இல்லை...

அவனை அவள் அதிர்ந்து பார்க்க, "எனக்கு கொடுக்க மாட்டியா?" என்று கேட்டான்...

அவளோ, "இந்தாங்க" என்று கையில் இருந்த தட்டை நீட்ட, அவனோ, அவளின் கையில் அவள் கடித்த மாங்காயை பார்த்தவன், அவள் கையை பிடித்து அதில் வாயை வைத்து கடிக்க, அவளுக்கோ வெட்கம் தறி கெட்டு ஓட ஆரம்பித்து விட்டது...

இதனை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த மருதநாயகமோ, அருகே நின்று இருந்த முத்துவிடம், "நானும் பயந்து பயந்து தான்டா கல்யாணம் பண்ணி வச்சேன்... இப்போ தான் நிம்மதியா இருக்கு" என்று சொல்ல, அவனும் சிரித்துக் கொண்டான்...

அன்று இரவு வழக்கம் போல, அவளை அணைத்து முத்தமிட்டு தனது லீலைகளை தொடங்கி விட்டான் சர்வஜித்...

வியர்வை வழிய, ஒருவருக்கு ஒருவர் போர்வையாக தான் படுத்து இருந்தார்கள்...

அவளோ அவன் வெற்று மார்பில் நிம்மதியாக தூங்கி விட்டாலும் அவனுக்கு தூக்கம் இல்லை...

நீண்ட நேரம் விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டே படுத்து இருந்தான்...

அதனை தொடர்ந்து எப்போது தூங்கினான் என்று அவனுக்கும் தெரியவே இல்லை...

தினமும் இதே போல தான் நாட்கள் நகர்ந்தன...

அவளை மேலும் மேலும் நாடினான் அவன்...

அவளே அவன் ஏன் தன்னை விடவே மாட்டேன் என்கின்றான் என்று யோசிக்கும் அளவுக்கு அவளை படுத்தி எடுத்து விட்டான்.

நாட்களும் வேகமாக நகர்ந்தன...

அவர்கள் அமெரிக்கா கிளம்ப இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், அன்று இரவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மருதநாயகமோ, "நாளைக்கு வக்கீல் வர்றார் சர்வா... எல்லா சொத்தும் உன் பெயருக்கே ஏற்கனவே மாத்திட்டேன்... உன் கிட்ட சொல்லாம இருந்தேன்... வக்கீல் எல்லாமே ரெஜிஸ்டர் பண்ணிட்டாராம்... நாளைக்கு சொத்து பத்திரத்தை உன் கிட்ட கொடுப்பார்.... இன்னும் பிசினஸை டெவலப் பண்ணனும்னா மாத்தி கொடுக்கிறது தான் நியாயம்னு எனக்கு தோணுது... எல்லாத்துக்கும் மேல எனக்கு பிடிச்ச போல நீ இருக்க" என்று சொல்ல, அவனோ மெலிதாக புன்னகைத்துக் கொண்டான் அவ்வளவு தான்...

அன்று இரவும் அவளை ஆண்டு விட்டு அணைத்துக் கொண்டே படுத்தவனுக்கு தூக்கம் வர மறுத்தது... அவளோ அவன் மார்பில் கையினால் கோலம் போட்டுக் கொண்டே, அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ, "என்ன?" என்று புருவம் உயர்த்தி கேட்டான்...

அவளும், "எனக்கு ஒரு ஆசை" என்று சொல்ல, அவனோ, "ம்ம்" என்று சொன்னான்...

"இந்த மீசையை முறுக்கி பார்க்கவா?" என்று கேட்க, அவனோ, "ம்ம்" என்று சொல்ல, அடுத்த கணமே கையை நீட்டி, அவன் மீசையை முறுக்க, அவனுக்கு சுள்லென்று வலித்தது...

"ஸ்ஸ் ஆஹ்" என்றான்...

"ஐயோ வலிக்குதா?" என்று கேட்டபடி கையை எடுக்க, அவனோ மென்மையாக புன்னகைத்துக் கொண்டே, "வலிக்கு நானே மருந்து போட்டுக்கிறேன்" என்று சொன்னபடி அவளை மீண்டும் ஆள ஆரம்பித்து விட்டான்.

தன்னை மீண்டும் மீண்டும் நாடுபவனை பார்த்து அவளுக்கு விசித்திரமாக இருந்தாலும், எதுவும் கேட்காமல் களைப்பில் தூங்கி விட்டாள்.

அவன் தான் தூங்கவே இல்லை...

எழுந்து போய் பால்கனி அருகே நின்று நிலவை வெறித்துப் பார்த்தான்...

அவளோ தனது இறுதி நிம்மதியான இரவில் தூங்கிக் கொண்டு இருந்தாள். அவளை திரும்பி பார்த்து விட்டு, கையில் இருந்த சிகரெட்டை வாயில் வைத்தான்...

நீண்ட நேரம் புகைத்தான்...

மனதில் இருக்கும் வெம்மையை அவனால் அடக்க முடியவே இல்லை...

எவ்வளவு நேரம் அப்படியே நின்றான் என்று தெரியவில்லை...

நீண்ட நேரம் கழித்து தான் தூங்கச் சென்று இருந்தான்...

அடுத்த நாள் காலையிலேயே சென்னையில் இருந்து வக்கீல் வந்து இருந்தார்...

வெளியே தோப்பில் தான் இருக்கைகள் போடப்பட்டு இருந்தன...

வக்கீல் ஒரு நாற்காலியில் இருக்க, அவருக்கு முன்னே மருதநாயகம், சர்வஜித் மற்றும் ஆதிரையாழ் என்று மூவரும் அமர்ந்து இருந்தார்கள்...

வக்கீல் உயிலை தெளிவாக வாசித்தார்...

மொத்த சொத்தும் சர்வஜித் பெயருக்கு மாற்றப்பட்டு இருந்தது...

ஆதிரையாழோ சர்வஜித்தின் கையை பற்றிக் கொண்டு தான் அமர்ந்து இருந்தாள்.

வக்கீலோ, "கங்கிராட்ஸ் சர்வஜித்... இனி மொத்த சொத்துக்கும் லீகல் வாரிசு நீங்க தான்" என்று உயில் இருந்த ஃபைலை அவனிடம் நீட்ட, ஆதிரையாழின் கையில் இருந்து தனது கையை உருவிக் கொண்டே, அந்த சொத்து பத்திரத்தை வாங்கி சரி பார்த்தான்...

அனைத்தும் அவன் பெயருக்கு மாறி இருந்தது...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே எழுந்த சமயம், அவர்களது வளாகத்தினுள் பென்ஸ் கார் ஒன்று கம்பீரமாக வந்து நின்றது...

"வக்கீல் சார் உங்களோட கார் ஆஹ்?" என்று மருதநாயகம் கேட்க, அவரோ, "பென்ஸ் கார் வச்சு இருக்கிற அளவு எல்லாம் வசதி இல்ல சார் நான்" என்று சொல்லிக் கொண்டே, அந்த காரை தான் திரும்பி பார்த்துக் கொண்டு இருந்தார்...

அனைவரும் காரை பார்த்துக் கொண்டே இருக்க, அந்த காரை நோக்கிச் சென்ற மருதநாயகமோ சாரதி அருகே சென்று கண்ணாடியில் கையால் தட்ட, கார் கண்ணாடி இறக்கப்பட்டது...

உள்ளே இருந்த சாரதியோ, "இங்க தான் வர சொல்லி டாக்சி புக் செய்து இருந்தாங்க" என்று சொல்ல, 'யாரு செய்து இருப்பாங்க?' என்று யோசித்துக் கொண்டே, "இடம் மாறி வந்துட்டே போல தம்பி நீ" என்றார் அவர்...

அவனோ தனது தொலைப்பேசியை எடுத்து விலாசத்தைப் பார்த்துக் கொண்டே, "சரியா தான் சார் வந்து இருக்கேன்" என்றான்...

"வாய்ப்பே இல்ல, இங்க யாரும் டாக்சி புக் செய்ய மாட்டாங்க" என்று மருதநாயகம் முடிக்கவில்லை, "சரியா தான் அவன் வந்து இருக்கான்" என்று சிம்ம குரலில் கர்ஜித்தான் சர்வஜித்...

மருதநாயகமோ, அதிர்ந்து திரும்பிப் பார்க்க, "நான் தான் வர சொன்னேன்" என்றான்...

அவரோ, "எதுக்கு வர சொன்ன?" என்று சொல்ல, அவனோ, "எயார் போர்ட் போக தான்" என்றான் பின்னங்கழுத்தை வருடிக் கொண்டே...

அவருக்கு புரியவே இல்லை... அவனை யோசனையாக பார்த்தவர், "அடுத்த வாரம் தான் ஃப்லைட்" என்றார்...

அவனோ, கையில் இருந்த சொத்து பத்திரத்தை தூக்கி காட்டியவன், "நான் வந்த வேலை முடிஞ்சு போச்சு... இனி இங்க இருந்து என்ன பண்ணுறது?" என்று கேட்க, அங்கிருந்த அனைவருமே அதிர்ந்து விட்டார்கள்...

ஆதிரையாழோ, "என்னங்க பேசுறீங்க?" என்று கேட்க, அவளை அழுத்தமாக திரும்பி பார்த்தான் தவிர, எதுவும் பேசவே இல்லை...

"இப்போவே போறோமா?" என்று அவள் மீண்டும் அவன் விழிகளை பார்த்துக் கொண்டே கேட்டாள்.

"போறோமா இல்ல... போறேன்... நான் மட்டும் தான் போறேன்" என்றான் அழுத்தமாக...

அந்த "நான்" என்ற சொல்லில் அப்படி ஒரு அழுத்தம்...

அவள் விழிகள் அதிர்ச்சியில் விரிய, "என்னடா பேசிட்டு இருக்க?" என்று எகிறிக் கொண்டே வந்தார் மருதநாயகம்...

வந்த வேகத்தில் அவன் ஷேர்ட்டை பிடித்து உலுக்கியவர், "அப்போ இவ்ளோ நாளா நடிச்சியா?" என்று கேட்க, "கையை எடுங்க" என்றான் அழுத்தமாக...

"கேக்கிறதுக்கு பதில் சொல்லுடா" என்று சீறினார்...

அவனோ, "கையை எடுக்க சொல்றேன்ல" என்று சொல்லிக் கொண்டே, அவர் கையை பிடித்து உதறி விட, அவரோ அதிர்ந்து போனார்...

இப்படி ஒரு நடவடிக்கையை அவனிடம் இருந்து அவர் எதிர்பார்க்கவே இல்லை...

மொத்தமாக நம்பினார்... முதுகில் அல்லவா குத்தி விட்டான்...

அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டே, ஷேர்ட்டின் காலரை பின்னால் இழுத்து விட்டவன், "ஆமா நடிச்சேன்... இந்த சொத்துக்காக தான் நடிச்சேன் போதுமா? என்னோட தகுதி என்ன? நீங்க எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்த இவளோட தகுதி என்ன? இனி அவ எனக்கு எதுக்கு? இந்த சொத்துக்காக தான் அவளை சகிச்சிட்டு இருந்தேன்" என்று சொன்னவன், விறு விறுவென தனது உடமைகளை எடுக்கும் பொருட்டு வீட்டினுள் நுழைந்தான்...

அதிர்ந்து விட்டார் மருதநாயகம்...

மருதநாயகம் மட்டும் அல்ல ஆதிரையாழுக்கு யாரோ தலையில் கல்லை தூக்கி போட்ட உணர்வு...

இடிந்து போனாள்...

கண்ணில் இருந்து நிற்காமல் கண்ணீர் வழிய, அதே கண்ணீருடன் அவனை தேடி வீட்டிற்குள் ஓடிச் சென்றாள்...

அவர்களை பார்க்கவே வக்கீலுக்கு பாவமாக இருந்து இருக்க வேண்டும்...

மருதநாயகம் அருகே வந்து, "அவசரப்பட்டுட்டீங்க சார்" என்று சொல்ல, அவர் அப்படியே விறைத்துப் போய் நின்றார்...

அவனை நம்பி ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுத்து விட்டோமே என்ற குற்ற உணர்வு வேறு அவருக்கு...

சர்வஜித்தை தேடி மாடியேறிய ஆதிரையாழுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவே இல்லை...

முந்தானையால் துடைக்க துடைக்க கண்ணீர் வழிந்தது...

சர்வஜித்தோ வேஷ்டி சட்டையில் இருந்து ஜீன்ஸ் டீ ஷேர்ட்டுக்கு மாறியவன், லேப்டாப் பையை மட்டும் தனது தோளில் போட்டுக் கொண்டே நிமிர, அங்கே அறை வாசலில் கண்ணீருடன் நின்று இருந்தாள் ஆதிரையாழ்...

அவனோ அவளை அழுத்தமாக பார்த்து விட்டு அறையை விட்டு வெளியேற போக, சட்டென அவன் கையை பற்றியவள், "நிஜமா விட்டு போறீங்களா?" என்று கண்ணீர் மல்க கேட்டாள்.

கையை சட்டென உதறியவன், "அது தான் தெளிவா சொன்னேன்ல, உன் தகுதி என்ன? என் தகுதி என்ன? நீ குப்பைல பிறந்தவ, ஆனா நான் அப்படி இல்ல" என்று அவள் இதயத்தில் ஈட்டியை வீசினான்...

துடித்து விட்டாள் பெண்ணவள்...

"குப்பைல பிறந்தவ கூட தானே இவ்ளோ நாள் இருந்தீங்க" என்று கேட்கும் போதே அவள் குரல் தழுதழுக்க, "ஓஹோ அத சொல்றியா?" என்று கேட்டுக் கொண்டே, சுவரில் சாய்ந்து நின்றவன், "சரி அத பேசி முடிச்சிட்டு கிளம்புறேன்" என்று சொல்லிக் கொண்டே, தனது பின் பாக்கெட்டில் இருந்து பர்ஸை எடுத்தான்...

அவளோ அவனை அதிர்ந்து பார்க்க, அதற்குள் இருந்த டாலர்களை எடுத்தவன், "வழமையா பணம் வச்சு இருக்கிறது இல்ல நான்... உனக்கு தான் கொண்டு வந்தேன்" என்றான்...

அவளோ விக்கித்து போனாள்...

"பணமா?" என்று அவள் கேட்கும் போதே இதழ்கள் நடுங்கியது...

அவனோ ஒரு கட்டு பணத்தை அவளிடம் நீட்டிக் கொண்டே, "எனக்கு பொண்ணுங்க வாசனையே இது வரைக்கும் தெரியாது... உன் மூலம் தெரிஞ்சுக்கிட்டேன்... அதுக்கு இந்த பணம்" என்று சொல்ல, அவளால் இன்னும் அதனை ஜீரணிக்க முடியவில்லை...

சத்தமாக கத்த வேண்டும் போல தோன்றியது...

ஆனால் வார்த்தைகள் வரவில்லை...

அவனே அவள் கையை பற்றி அந்த பணத்தை வைத்தான்...

விறைத்து போய் நின்றாள்...

அடுத்த கட்டு பணத்தை எடுத்தவனோ, "இது என் கூட டெய்லி நைட் கம்பெனி கொடுத்ததுக்கு" என்று சொல்லி அதற்கு மேல் வைத்தான்...

பணத்தை பார்த்து விட்டு அவனை அடிப்பட்ட பார்வை பார்த்தாள்.

அவன் முகத்தில் சின்ன சலனம் கூட இல்லை...

நிதானம்... வெகு நிதானம்...

அடுத்த கட்டு பணத்தை எடுத்தவனோ, "இது நான் சொன்னதெல்லாம் பண்ணுனதுக்கு" என்று சொல்லி அவள் கையில் வைக்க, அவளோ நொறுங்கி விட்டாள்.

அனைத்தையும் கொடுத்து விட்டு மீண்டும் பர்ஸினுள் பார்த்தான்...

"நூறு டாலர் இருக்குடி" என்று சொல்லிக் கொண்டே, அதனை எடுத்தவன், "இத எனக்கு சும்மா கொடுக்க விருப்பம் இல்ல" என்று சொன்ன அடுத்த கணமே, ஒற்றைக் கையால் அவள் கழுத்தை பற்றி இதழில் ஆழ்ந்து இதழ் பதித்து விலகியவன், "இப்போ கிஸ் பண்ணுனதுக்கு இத வச்சுக்கோ" என்று அதையும் அவள் கையில் வைத்து விட்டு விறு விறுவென வெளியேற, அவள் கையில் இருந்த பணம் நிலத்தில் சிதற, அப்படியே நிலத்தில் தொய்ந்து அமர்ந்தாள்.

அவளை மொத்தமாக புதைத்து விட்டு செல்பவனிடம் அவளால் என்ன பேசி விட முடியும்? கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்தது...

இன்னுமே நடந்ததை கிரகிக்க முடியவே இல்லை...

நேற்று வரை அவளுடன் அவ்வளவு நெருக்கமாக நடந்துக் கொண்டானே...

அனைத்தும் பொய்யா?

இதனை நினைக்க நினைக்க வலித்தது...

எழுந்து நடக்க கூட கால்களில் தெம்பில்லை... மனதில் தெம்பிருந்தால் தானே உடலில் தெம்பிருக்கும்... தட்டு தடுமாறி எழுந்தவளோ, கையில் பணத்தையும் எடுத்துக் கொண்டே, விறு விறுவென கீழிறங்கிச் சென்றாள்.

அங்கே மருதநாயகமோ, "எதுக்குடா இப்படி பண்ணுற?" என்று தலையில் அடித்துக் கொண்டே அவனிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தார்...

அவருக்கு ஆதிரையாழின் வாழ்க்கையினை நினைத்து வலி...

அவனோ, "இது தான் என் முடிவு... உங்க மரியாதையை காப்பாத்திக்கணும்னா விலகி நில்லுங்க" என்றான்...

"உன் காலுல வேணும்னாலும் விழுறேன்... அவளை அழைச்சிட்டு போ" என்று அவன் காலில் விழவே அவர் தயாராகி விட, "தாத்தா" என்று அழுத்தமான குரல்...

அழைத்தது வேறு யாருமல்ல, ஆதிரையாழ் தான்...

மருதநாயகமும் சர்வஜித்தும் சேர்ந்தே திரும்பி பார்த்தார்கள்...

"காலுல எல்லாம் விழ வேணாம் தாத்தா, விடுங்க போகட்டும்... காதலோட வாழ்ந்தா தான் அந்த வாழ்க்கை நல்லா இருக்கும்... இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு தேவல" என்று சொல்லிக் கொண்டே, சர்வஜித்தை நோக்கி வந்தாள்.

அவள் இவ்வளவு பேசுவாள் என்று சர்வஜித்துக்கே இன்று தான் தெரியும்...

அவளை அவன் புருவம் இடுங்க பார்க்க, அவன் முன்னே வந்து அவன் கையை பிடித்து அதில் அவன் கொடுத்த பணத்தை வைத்தவளோ, "இத நீங்களே கொண்டு போய்டுங்க, என் உடம்ப உங்களுக்கு போட்ட பிச்சையா நினைச்சுக்கிறேன்" என்று சொன்னவள் அவனை பார்க்காமல் விறு விறுவென செல்ல, "ஏய்" என்று ஆத்திரத்தில் எகிறியவன், தன்னை அடக்கிக் கொண்டே, பணத்தை தூக்கி எறிந்து விட்டு கோபமாக காரில் ஏறிக் கொண்டான்...
Ippo dhaan adhiraa correctta pesi irukka
 
Paradesi paya
 
Top