ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 21

pommu

Administrator
Staff member

அத்தியாயம் 21

நீண்ட பயணத்தை அடுத்து அவர்கள் கார் நெடுஞ்செழியன் வாடகைக்கு எடுத்த வீட்டின் முன்னே நின்றது...

அக்ஷயாவுக்கு கீர்த்தனாவின் வீடு தெரியாது... இந்த ஊர் தான் கீர்த்தனா என்று கேள்விப்பட்டு இருக்கின்றாள் அவ்வளவு தான்...

அக்ஷயாவும் யோசனையுடன் இறங்கிக் கொள்ள, உள்ளே இருந்து வெளியே வந்த நெடுஞ்செழியனோ, "வாடா" என்று அழைக்க, வீரராகவனும், "அப்புறம் மச்சான்" என்று சொல்லிக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டான்...

அக்ஷயாவுக்கு இம்மையும் புரியவில்லை, மறுமையும் புரியவில்லை...

சிங்கப்பூர் செல்வதாக கூறி விட்டு சென்றவன், இந்த ஊரில் இருக்கின்றான்...

அப்படியே யோசனையுடன் நின்று இருக்க, "வா அக்ஷயா" என்று சொன்னவனோ, "டார்லிங்" என்று சொல்லிக் கொண்டே தனிஷாவை தூக்க கையை நீட்ட, அவளும் குழந்தையை கொடுத்தவள், "உங்களுக்கா நிச்சயதார்த்தம்?" என்று கேட்டே விட்டாள்.

"ம்ம்" என்று மென் சிரிப்புடன் சொல்ல, வீரராகவனோ குரலை செருமிக் கொண்டே உள்ளே, செல்ல, அவனை தொடர்ந்து நெடுஞ்செழியனும் அக்ஷயாவும் செல்ல, "பொண்ணு யாரு?" என்றாள் அக்ஷயா...

"நாளைக்கு பார்க்க தானே போற" என்றான்...

அதற்கு மீறி அவளால் என்ன பேசி விட முடியும்? மௌனமாகவே நடக்க, அங்கே நின்ற மனோகரியோ, "அட வாம்மா, எப்படி பயணம் எல்லாம்?" என்று கேட்டு அவளை அணைத்துக் கொள்ள, "எப்படி இருக்கீங்க ஆன்டி?" என்று அவரை வாஞ்சையுடன் விசாரித்தாள்...

அவருடன் பேசி நீண்ட நாட்கள் அல்லவா? அவரும், "சூப்பரா இருக்கேன்... இப்போ தான் இவன் கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இருக்கான்" என்று சொல்ல, மெதுவாக புன்னகைத்த அக்ஷயாவோ, "பொண்ணு யாரு?" என்று மீண்டும் கேட்டாள்.

அவரிடமும் சொல்ல வேண்டாம் என்று நெடுஞ்செழியன் சொல்லி வைத்து இருக்க, "நாளைக்கு பார்க்க தானே போற" என்றார் அவர்...

அவளுக்கோ இவர்கள் புதிர் போடுவது என்னவோ போல இருந்தது...

ஆர்வம் இன்னுமே அதிகரித்தது... அடக்கிக் கொண்டாள்...

"ஆமா கீர்த்தனா கிட்ட சொன்னீங்களா?" என்று கேட்க, அவரோ, "ம்ம் அவ இங்க தானே இருக்கா...நாளைக்கு வந்திடுவா" என்றார் அவர்...

அவளும் சம்மதமாக தலையாட்ட, நெடுஞ்செழியனோ, "இது தான் உங்க ரூம்" என்று மூவருக்கும் ஒரு ரூமை காட்ட, அக்ஷயாவுக்கு தூக்கி வாரிப் போட்டது...

ஒரே அறையில் வீரராகவனுடன் தங்க வேண்டுமா? என்கின்ற தயக்கம்...

வீரராகவனுக்கும் சங்கடமாக இருந்தது...

ஆனால் அவன் காட்டிக் கொள்ளவில்லை...

"ஒரே ரூம் ஆஹ்?" என்று அக்ஷயா கேட்க வர, சட்டென அவளை முறைத்த வீரராகவன், "வீட்ல ஒரே ரூம் தானே" என்றான்...

அவனுக்கோ தனது அந்தரங்கம் வெளியே தெரிவதில் இஷ்டம் இல்லை... அது நெருங்கிய நண்பனாக இருந்தாலும் கூட...

சட்டென வாயை இறுக மூடிக் கொண்டவளோ, "ம்ம்" என்று சொல்லிக் கொண்டே நெடுச்செழியனின் கையில் இருந்த குழந்தையை வாங்கிக் கொண்டே உள்ளே செல்ல, நெடுஞ்செழியன் அவர்கள் கேள்வியில் இருந்தே அவர்கள் விலகலைப் பற்றி புரிந்து கொண்டாலும் அதனை காட்டிக் கொள்ளாமல், அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்காமல் ஒரு புன்னகையுடன் விடை பெற்றுக் கொண்டான்...

அறைக்குள் நுழைந்த அக்ஷயாவுக்கு எப்படி வீரராகவனை எதிர்கொண்டு அவனுடன் இருப்பது என்று தயக்கம்... குழந்தையை குளிக்க வைக்க தயாரானாள்...

அவனோ, "தனிஷாவை குளிக்க வச்சிட்டு தூங்க வைச்சிடு, வரும் போது அவ சாப்பிட்டா தானே" என்று சொன்னான்...

அவளும், "ம்ம், பால் கொடுத்து தூங்க வச்சுட்டா ஓகே" என்று சொல்லிக் கொண்டே குழந்தையை தூக்கிக் கொண்டே குளியலறைக்குள் நுழைய, அவனும் பின்னால் வந்தான்...

அவளுக்கு சங்கடமாக இருந்தது... போகச் சொல்லவும் முடியாது...

அவனோ நீர்க் குழாயை திறந்து நீரின் குளிரை பரிசோதித்தவன், "ரொம்ப குளிரா இருக்கு... இரு தண்ணி மிக்ஸ் பண்ணி கொடுக்கிறேன், இங்க ஹீட்டர் இல்ல" என்று சொல்லிக் கொண்டே, போட்டிருந்த ஷேர்ட்டை கழட்ட, அவளுக்கு மீண்டும் மூச்சு முட்டியது...

ஷேர்ட்டுடன் இந்த வேலைகளை செய்ய முடியாது என்று அவளுக்கும் தெரியும்...

ஆனாலும் அவனுடன் இப்படி அன்னியோன்யமாக நெருங்கி இல்லை என்பதால் அவளுக்கு இந்த தயக்கம்...

ஷேர்ட்டை அங்கே இருந்த ஹங்கேரில் போட்டு விட்டு நீரை வாளியில் ஊற்றி, மனோகரியிடம் கேட்டு வாங்கிய சூடு நீரும் சேர்த்து சரியான அளவுக்கு தயார் செய்தான்...

அவனை பிரமிப்பாக தான் பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்...

பல மில்லியன் சொத்துக்களுக்கு அதிபதி அவன்...

இப்படி மண்டியிட்டு அமர்ந்து குழந்தைக்கு சுடு நீர் கலந்து கொடுத்துக் கொண்டு இருப்பதெல்லாம் அவளுக்கு அபூர்வமாக இருந்தது...

அவனுக்குள் இன்னொரு விம்பம் இருப்பது அவளுக்கு இப்போது தெளிவாக விரும்பியது...

தனக்கு பிடித்தவர்களிடம் அவன் முகம் வேறு கோணத்தில் தான் இருக்கும்...

அவர்களுக்காக எதுவும் செய்யக் கூடியவன் என்று தோன்றியது...

நீரை கலந்து விட்டு எழுந்தவன், "சூடு அளவா இருக்கும்னு நினைக்கிறன்... குளிக்க வச்சிட்டு கொண்டு வா" என்று சொல்லிக் கொண்டே வெளியேறியதும் தான் அவளுக்கு மூச்சே வந்தது...

அவளும் புடவையை இழுத்து சொருகியவள் குழந்தையை குளிக்க வைத்து விட்டு, வெளியே பூந்துவாலையில் சுற்றி தூக்கிக் கொண்டு வந்தாள். அவனோ கட்டிலில் அமர்ந்து தொலைபேசியை பார்த்துக் கொண்டு இருந்தான்...

அக்ஷயாவும் குழந்தையை துடைத்து, பவுடர் போட்டு, உடை மாற்றி முடித்து இருந்தாள். அடுத்து அவள் குளித்து விட்டு தனிஷாவுக்கு பால் கொடுக்க வேண்டும்...

"குளிச்சிட்டு வரேன்" என்று வீரராகவனிடம் சொல்லிக் கொண்டே, அவனை பார்க்க, அவனோ, தொலைபேசியை தள்ளி வைத்து விட்டு, "வாடா குட்டி" என்று குழந்தையை தூக்கி கொஞ்ச ஆரம்பித்து விட்டான்...

அவளுக்கு அவனது இந்த மென்மையான பக்கத்தை இன்னுமே ஜீரணிக்க முடியவில்லை...

குளியலறைக்குள் குளித்து விட்டு அதற்குள்ளேயே நின்றபடி சுடிதாரை போட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.

அவளுக்கு இப்போது குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்... எப்படி கேட்பது என்று தெரியவில்லை... அவனை தயக்கமாக பார்த்துக் கொண்டே கண்ணாடி முன்னே நின்றவள், குங்குமத்தை நெற்றியில் வைக்க, அவன் அவளை பார்க்கவில்லை என்றாலும் அவனுக்கு புரிந்தது...

"குளிச்சிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே அவளுக்கு இடைவெளி கொடுத்தவன், குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு செல்ல, அவளுக்கு இப்போது தான் நிம்மதி பெருமூச்சு வந்தது...

அவளும் குழந்தைக்கு பால் கொடுத்து தூங்க வைத்தவள், அப்படியே அயர்ந்து விட, அவனும் குளித்து விட்டு வெளியே வர நேரம் சரியாக இருந்தது...

இருவரையும் அழுத்தமாக பார்த்துக் கொண்டே, அவன் வெளியேறி இருந்தான்...

அக்ஷயாவும் தனிஷாவும் நீண்ட நேரம் தூங்கியவர்கள் எழுந்த போது மாலை ஆறு மணி தாண்டி இருந்தது...

அவளோ கட்டிலில் படுத்தபடி நேரத்தைப் பார்த்தவள், "ஐயோ இவ்ளோ நேரம் தூங்கி இருக்கேனே" என்று நினைத்துக் கொண்டே எழுந்து அமர்ந்த நேரம், குழந்தையும் கண்களை விழித்து இருந்தது...

அள்ளி அணைத்து குழந்தையை கொஞ்சி விட்டு, அவளை தூக்கிக் கொண்டே, வெளியேற அங்கே ஹாலில், நெடுஞ்செழியனும் வீரராகவனும் பேசிக் கொண்டு இருந்தார்கள்...

மனோகரியோ, காஃபி போட்டு எடுத்து வந்தவர், "எல்லாரும் எடுத்துக்கோங்க" என்று சொல்ல, நெடுஞ்செழியனும், "அம்மாவோட காஃபி இல்லாம சிங்கப்பூர்ல எவ்ளோ கஷ்டம்" என்று சொன்னான். வீரராகவனோ, "அடுத்த மாசம் இருந்து பொண்டாட்டி கையால காஃபி சாப்பிடணும்" என்று சொல்ல, நெடுஞ்செழியனோ, "அது இன்னும் கஷ்டம் டா" என்று சொல்ல, வீரராகவன் அவன் தோளில் தட்டி சிரித்துக் கொண்டான்...

மனோகரியோ, "நீயும் காஃபி எடுத்துக்கோம்மா" என்று காஃபியை நீட்டியவர், அவளிடம் இருந்து குழந்தையை வாங்க, "நீங்க குடிக்கலையா ஆன்டி" என்று கேட்டாள் அக்ஷயா...

"நான் குடிச்சுட்டேன்மா" என்று சொன்னவரோ தனிஷாவிடம் விளையாட ஆரம்பிக்க, அக்ஷயாவுக்கு தான் என்ன செய்வது என்று தெரியவே இல்லை...

மேசை நாற்காலி போல அவளும் ஒரு ஜடமாக ஓரமாக அமர்ந்து இருந்து காஃபியை அருந்தினாள்.

காஃபியை அருந்தி விட்டு வீரராகவனும் நெடுஞ்செழியனும் வெளியே கிளம்பி விட்டார்கள்...

மனோகரியும் அக்ஷயாவும் தனியாக இருக்க, மனோகரியோ, "எப்படிம்மா இருக்க?" என்று கேட்டார்...

"நல்லா இருக்கேன் ஆன்டி" என்றாள் அவள்...

"வீரா முரடன் ஆச்சே..." என்று அவர் சொல்ல, "ஆனா குழந்தை கூட ரொம்ப பாசம் ஆன்டி" என்று சொன்னாள் அவள்...

அவரிடம் ஒரு வித விரக்தி புன்னகை...

"ஆமா அவன் கிட்டயும் யாருக்கும் தெரியாத முகம் ஒன்னு இருக்கு" என்றார்...

வீரராகவனை பற்றி அவள் முதல் எல்லாம் ஆராய நினைப்பது இல்லை...

ஆனால் இப்போது தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற ஆர்வம்...

குழந்தை மேல் அவனது அதீத அக்கறை அந்த ஆர்வத்தை இன்னும் தூண்ட, அவளோ, "நான் ஒன்னு கேட்கட்டுமா?" என்று கேட்டாள்.

"ம்ம் கேளு" என்று அவர் சொல்ல, "அவர் லைஃப்ல என்ன ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா ஆன்டி?" என்று கேட்டாள்.

"அவன் உன் கிட்ட சொல்லலையா?" என்று கேட்க, "சொல்ற அளவுக்கு நெருங்கல" என்றாள் அவள் தலையை குனிந்தபடி...

பெருமூச்சு விட்ட மனோகரியோ, "எனக்கும் செழியன் தான் சொன்னான்" என்று சொன்னவரோ அவன் கதையை சொல்ல ஆரம்பித்து இருந்தார்...

அவன் கதையில் நிறைந்து இருந்தது என்னவோ அவனது காதல் மட்டும் தான்...

சில வருடங்கள் முன்னர்

வீரராகவன் படித்து முடித்து விட்டு, அப்போது தான் தொழில் தொடங்கி வியாபாரத்தில் முன்னேறிக் கொண்டு இருந்த சமயம்... அப்போது சிங்கப்பூரில் அவன் சந்தித்த பெண் தான் மோனிஷா...

அவன் பிசினஸில் வேகமாக முன்னேறிக் கொண்டு இருந்ததினால், அவனுக்கு எதிரிகளும் அதிகமாக இருந்தனர்...

அதில் ஒருவன் தான் மனோஜ்...

வீரராகவன் அப்போது தான் காப்பரேட் உலகத்துக்குள் நுழைந்து இருந்தான்... மனோஜ் பரம்பரை பரம்பரையாக காப்பரேட் உலகத்தை ஆழும் வம்சம்... சுருங்க சொல்ல போனால் வீரராகவனை விட ஒரு படி மேல் தான் அவன்..

ஆனாலும் வீரராகவனின் திறமையையும் உழைப்பையும் பார்த்து அவனுக்குள் ஒரு பயம் இருக்க தான் செய்தது...

மோனிஷா, மனோஜின் கம்பெனியில் இருந்து வீரராகவனின் கம்பெனிக்கு இடம் மாறி வந்தவள் தான்...

வீரராகவனுக்கு எப்போதுமே திறமையானவர்களை பிடிக்கும்... மோனிஷாவும் திறமையானவள்... அவள் திறமை, அழகு, நிமிர்வு என்று அனைத்துமே அவனை கவர்ந்தது...

அதுவரை திருமணத்தில் நாட்டம் இல்லாதவனுக்கு அவள் மீது ஒரு ஈர்ப்பு இருக்க, அவளுக்கும் அவனை பிடித்து இருப்பது போல அவனுக்கு தோன்றியது...

வீரராகவனுக்கு தாய் இல்லை... தந்தை மட்டும் தான் என்பதால், அவரும் அவர்களின் திருமணத்துக்கு தடையாக இருக்கவே இல்லை...

அவளை திருமணமும் செய்து விட்டான் அவன்...

அவள் மீதான காதல் மயக்கம் அவனை வேறு கோணங்களில் யோசிக்க விடவே இல்லை...

நாட்கள் செல்ல செல்ல, அவள் நடவடிக்கையில் ஒரு மாற்றம்...

பப்புக்கு செல்வாள்...

தாமதமாக வீட்டுக்கு வருவாள்... அவன் கேள்வி கேட்டால் எரிந்து விழுவாள்...

அவனுக்கு புரியவே இல்லை...

அவள் மீது எல்லை இல்லாத காதலை கொட்டியவன் அவன்...

அவள் மாற்றம் அவனுக்கு விசித்திரமாக இருந்தது...

கிட்டத்தட்ட இரு மாதங்கள் கடந்து இருக்கும்...

ஒரு நாள் நெடுஞ்செழியன் வீரராகவனை தேடி வந்தான்...

அலுவலகத்தில் இருந்த வீரராகவனை பார்த்தவனுக்கோ அதிர்ச்சி...

எப்போதுமே தாடி மீசையை ட்ரிம் செய்து இருப்பவனுக்கு காடு போல தாடி மீசை வளர்ந்து இருக்க, "என்னடா விஷ் பண்ணலாம்னு வந்தா இப்படி இருக்க?" என்று கேட்டான் அவன்...

"விஷ் ஆஹ்?" என்று வீரராகவன் புரியாமல் கேட்க, "ம்ம் உன் வைஃப் ப்ரெக்னன்ட் தானே" என்று நெடுஞ்செழியன் சொல்ல, அப்போது தான் மோனிஷா கர்ப்பமாக இருப்பதே அவனுக்கு தெரியும்...

"ப்ரெக்னன்ட் ஆஹ்?" என்று வீரராகவன் அதிர, "ம்ம் ஹாஸ்பிடல் ப்ராஜெக்ட் விஷயமா நான் ஹாஸ்பிடல் பக்கம் போனேன்... அப்போ தான் கைனகாலஜிஸ்ட் கிட்ட மோனிஷாவை பார்த்தேன்" என்றான் அவன்...

வீரராகவனுக்கு என்ன உணர்வென்று தெரியவில்லை...

அவளாக சொல்ல வேண்டிய விடயத்தை யாரோ சொல்லி தெரிந்து கொள்கின்றான்...

வலுக்கட்டாயமாக புன்னகைத்தவன், "தேங்க்ஸ்டா" என்று சொன்னாலும் மனம் என்னவோ மோனிஷாவை பற்றி தான் எண்ணிக் கொண்டு இருந்தது...

அன்று அவன் வீட்டுக்குள் நுழைந்த போதே, சோஃபாவில் போதையில் படுத்து இருந்தாள் மோனிஷா... அவளை நெருங்கிய போதே அவனுக்கு மதுவின் வாடை வீச, "ப்ரெக்னன்ட் ஆஹ் இருக்கும் போது என்ன பண்ணிட்டு வந்திருக்கா" என்று முணுமுணுத்துக் கொண்டே, அவள் அருகே மண்டியிட்டு அமர்ந்தவன், "மோனிஷா" என்றான்...

மெதுவாக கண்களை திறந்தாள்...

அவன் கோபக்காரன் தான்... ஆனால் அவளிடம் எப்போதும் கோபம் கொண்டது இல்லை...

அந்தளவு அவளைக் காதலிக்கிறான்... காதலித்துக் கொண்டு இருக்கின்றான்...

அவளோ மெதுவாக எழுந்து இருக்கையில் அமர்ந்தவள், கண்கள் சொருக அவனை பார்த்தாள்.
 
Top