ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் -2

pommu

Administrator
Staff member
அத்தியாயம் -2

அவன் இறுகிய அணைப்பில் முதலில் நெகிழ்ந்தவள், உடனே சுதாரித்தபடி, "டேய் விடுடா பொறுக்கி ராஸ்கல்" என்று திமிறியவளை இன்னும் இழுத்து அணைத்தவன் அவள் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்ட பிறகு அவனாகவே அவளை விட்டான் விஷ்வா என்கிற விஷ்வவர்மன்.

அவன் முத்தத்தில் சற்று நேரம் தடுமாறியவள், தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை அனல் பறக்க பார்த்தாள். அவனை உதறி விட்டு தள்ளி நின்றவளை தனது உதட்டை பெருவிரலால் வருடியபடி பார்த்தவன் கொடுப்புக்குள் சிரித்தபடி கையில் இருந்த அவளது தொப்பியை கொடுத்தான்.

"இடியட்" என்று அவனை முறைத்து பார்த்தபடி திட்டி விட்டு அவனிடமிருந்து தொப்பியை வாங்கி கொண்டு வாசலுக்கு செல்ல போனவளை மீண்டும் இழுத்து அவள் இதழ்களில் தனது இதழ்களை பொருத்தினான்.

அது அவளின் கோபத்தை அதிகரிக்க ஓங்கி அவனை அறையப்போன அவளது கையை பிடித்தவன் கையிலும் முத்தமிட்டான். அதற்கு மேல் அவள் பொறுமை காற்றில் பறந்து விட அவன் பிடித்திருந்த தனது கையில் உள்ள நகத்தினால் அவன் உதட்டில் நன்றாக கிள்ளிவிட்டாள். அவனுக்கோ அது உயிர் போகும் வலியை கொடுக்க , "ஆ..." என்றபடி அவள் கையை விட்டான்.

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தவள் அவ்விடத்தில் இருந்து ஓடி வந்து வாசலில் நின்றவள் மகாலிங்கத்துக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

அவள் ஓடி வந்ததை அங்கிருந்த கதிரையில் அமர்ந்து இருந்தபடி கவனித்த சாணக்கியனுக்கு விளங்கி விட்டது, "வேலையிருக்கிறது" என்று கூறிச் சென்ற விஷ்வா செய்து முடித்த வேலையை பற்றி. அவளை பார்த்து பல் வரிசை முழுதும் தெரிய நக்கலாக சிரித்த சாணக்கியன், சிரித்தபடி தன்னை நோக்கி வந்த விஷ்வாவை பார்த்து, "என்னடா போன வேலை எல்லாம் நல்ல படியா முடிஞ்சு போல" என்று அவளை கடைக்கண்ணால் பார்த்தபடி கேட்க, அவளோ இருவரையும் முறைத்தபடி, 'என்ன ஜென்மங்களோ விவஸ்த்தை கெட்டதுகள் ... அண்ணனும் தம்பியும் பேசுற பேச்சை பாரு' என்று அவர்கள் இருவருக்கும் சரமாரியாக மனதுக்குள் திட்டிக் கொண்டு நின்றாள்.

அண்ணன் கேட்டதில் வெட்கப்பட்ட விஷ்வா அவனை பார்த்து கண்ணடித்தபடி அவனருகில் இருந்து மித்ராவை வைத்த கண் வாங்காமல் விழுங்கி விடுவது போல பார்த்தான். கடை கண்ணால் அவன் தன்னை பார்ப்பதை கண்டுக் கொண்ட மித்ரா, 'முதலில் இவன் கண்ணை நோண்டனும்' என்று மனதுக்குள் திட்டியவள் முகம் இறுகி இருந்தது.

அந்நேரம் பார்த்து அவ்விடம் வந்த மகாலிங்கத்துக்கு கோபத்தில் சிவந்திருந்த மித்ராவின் முகத்தை பார்த்ததும் புரிந்து போனது தனது மகன்கள் இருவரும் அவளுடன் வம்புக்கு போய் இருப்பார்கள் என்கின்ற விடயம்.

அவளருகில் வந்தவர், "யாரும் உன்ன தொந்தரவு பண்ணினா என் கிட்ட சொல்லும்மா" என்ற படி விஷ்வாவை பார்க்க, அவனோ தனக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை என்றபடி முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான். மேலும் தொடர்ந்தவர், "நீயும் பார்த்து சூதானமா நடந்துக்கம்மா" என்று கூறி அவள் தலையில் இடியை இறக்கினார்.

அதை கேட்டு, 'இது குடும்பமா?' என்று மனதுக்குள் அதிர்ச்சியடைந்தவளை பார்த்து சிரித்து விட்டு தனது வாகனத்தில் ஏறிக் கொண்டார் மகாலிங்கம்.

விஷ்வாவோ அப்பாவின் சொல்லை கேட்டு மின்னிய கண்களுடன் அவளை பார்த்தபடி தனது இதழ்களை வருடிக் கொண்டான். இதனை சாணக்யனும் மகாலிங்கமும் கண்டும் காணாதபடி இருக்க, 'ச்சீய் இவனுக்கு கொஞ்சம் கூட அப்பா அண்ணா இருக்கிறாங்க என்கிற எண்ணம் இல்லையா?' என்று மனதுக்குள் அவனுக்கு திட்டியபடி நின்றாள். சாணக்கியன் அவளருகில் வந்து, "மாமா என்ன சொல்றார்?" என்று கண்ணடித்து கிண்டலாக கேட்டு விட்டு தனது வாகனத்தில் ஏறிக் கொண்டான்.

அதை கேட்டு மானசீகமாக தலையில் அடித்த அவளும் மகாலிங்கத்தின் வாகனத்தை தனது ஜீப்பில் பின் தொடர்ந்தாள்.

சுகாதார அமைச்சரின் பெரிய மண்டபத்தில் பல பத்திரிக்கையாளர்கள் குழுமி இருந்தனர். அங்கு ஏற்கனவே கமிஷனர் விருத்தாச்சலம் மற்றும் பல அதிகாரிகள் அந்த நிகழ்வுக்காக வருகை தந்து இருந்தனர். முன்னால் மகாலிங்கம் வர பின்னால் சாணக்கியனும் விஷ்வாவும் மித்ராவும் வந்துக் கொண்டிருக்க, மகாலிங்கத்தை பார்த்து மரியாதையை நிமித்தம் அனைவரும் எழுந்து நின்றனர்.

அப்போது மேடிட்ட வயிற்றுடன் கலெக்டர் வசுந்தரா எழும்ப முடியாமல் எழுந்து நின்றாள். அவளையும் அவள் மேடிட்ட வயிற்றையும் ஒரு கணம் பார்த்த சாணக்கியன் அவளருகிலேயே அவனுக்காக ஒதுக்கப்பட்டு இருந்த இருக்கையில் போய் அமர்ந்துக் கொண்டான்.

கூட்டம் தொடங்கியதும் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமான கருத்துக்களை மகாலிங்கம் முன் வைத்தார். அனைத்தையும் குறித்துக் கொண்ட பத்திரிகையாளர்களில் ஒருவன் எழுந்து, "ஐயா நீங்க அதிகாரத்தை பயன்படுத்தி சில பல மறைமுக சம்பவங்களில் ஈடுபடுவதாக வரும் செய்தி உண்மையா?" என்று கேட்க அரங்கமே நிசப்தமாகியது. அது சாணக்கியன் சம்பந்த பட்ட விடயம் என்று மகாலிங்கத்துக்கு புரிய, "இது டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமான கூட்டம். இதுக்கு வேற கூட்டம் போட்டு பேசலாமே?" என்று தன்மையாக கூறினார்.

வசுந்தராவோ மனதுக்குள், 'ஏன்பா உனக்கு உயிர் வாழ விருப்பமே இல்லையா???' என்பது போல அந்த பத்திரிக்கையாளனை பரிதாபமாக பார்த்தவள் பக்கத்தில் இருந்த சாணக்கியனையும் விஷ்வாவையும் பார்க்க அவர்கள் இருவரும் அந்த பத்திரிக்கையாளனை தான் துளைத்தெடுக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பார்வையை வைத்தே, 'இந்த பையன் வாழ்க்கை அவ்வளவுதான்' என்று நினைத்தவள் முகத்தை பத்திரிக்கையாளர்களை நோக்கி திருப்பிக் கொண்டாள்.

கூட்டம் முடிந்ததும் அனைவரும் கலைந்த பின் விருதாச்சலத்தை நோக்கி கையை குலுக்கிய மகாலிங்கம், "உன் பொண்ணு ரொம்ப கம்பீரமா இருக்காப்பா..." என்று கடைக்கண்ணால் மித்ராவை பார்த்து சொன்னார்.

அதற்கு விருத்தாச்சலம், "ஓடுறது என் ரத்தம் ஆச்சே" என்று சொல்லி சிரிக்க மித்ராவோ சங்கடமாக மகாலிங்கம் அருகில் நிமிர்ந்து நின்றாள்.

அதுவரை கதிரையில் இருந்து எழும்பாமல் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த சாணக்கியன் அப்போது தான் கதிரையில் இருந்து எழ கஷ்டப்பட்ட படி இருந்த வசுந்தராவை பார்த்தான். அவ்வளவு நேரமும் விஷ்வாவும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

கதிரையில் இருந்து எழுவதற்கு அவள் மேடிட்ட வயிறு இடம் கொடுக்காமல் இருக்க, 'இங்கு எத்தனை பேர் நிக்கிறாங்க ஒருத்தன் எனக்கு உதவி செய்றானா என்று பாரு' என மனசுக்குள் திட்டியவளை நோக்கி ஒரு விறைப்பான ஆண் கரம் நீண்டது.

நிமிர்ந்து பார்த்தவள் அது விஷ்வாவின் கரம் என்றதும் தயங்காமல் அவன் கரத்தை பற்றி எழுந்தாள். "உடம்பை கவனமா பார்த்துக்கொள்ளுங்க அண்ணி" என்றவனை பார்த்து சிரித்தவள் கடைக்கண்ணால் சாணக்கியனையும் பார்த்தாள். அவனோ தோளை உலுக்கியபடி முன்னால் நடக்க அவன் பின்னால் நடந்துச் சென்றாள்.

அவன் இறங்கியதும் அடுத்து மேடையிலிருந்து இறங்க போனவள் கால் தடுக்கி கீழே விழ போக அதை உணர்ந்து விரைவாக அவள் பக்கம் திரும்பிய சாணக்கியன் அவள் தோளை தாங்கி பிடித்திருந்தான்.

அவளோ அதிர்ச்சியுடன் அவனை பார்க்க அவளை பார்த்து முறைத்தவன், "பார்த்து இறங்க மாட்டியா?" என்று சீறியபடி அவளை நிலையாக நிற்க வைத்து விட்டு விறு விறுவென மண்டபத்தை விட்டு வெளியேறினான். வெளியேறும் போது மகாலிங்கத்தையும் விருதாச்சலத்தையும் அவன் கண் கொண்டு பார்க்கவே இல்லை.

வசுந்தரா விடயத்தில் அவனின் செய்கையை பார்த்த இருவருக்கும் கொஞ்சம் நிம்மதி பரவ சினேகமாக சிரித்துக் கொண்டனர். சாணக்கியனை தொடர்ந்து விஷ்வாவும் அவன் பின்னால் வெளியேறிவிட்டான். வசுந்தரா விழ போனதை கவனித்த மித்ராவும் அந்நேரம் அவளை நெருங்கி இருந்தாள். அவளின் கையை பிடித்து இறக்கியவள், "என்னாச்சு அக்கா?" என்று கேட்க, "நீண்ட நேரம் உட்கார்ந்திருந்ததால் கால் வீங்கி விறைச்சுடுச்சுடி" என்றபடி கெந்தி கெந்தி விருதாச்சலத்தை நோக்கி நடந்தாள்.

அவள் நிலைக்கு தனது மகன் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சியில் அவளை பரிதாபமாக பார்த்த மகாலிங்கம், "என் பேரன் என்ன சொல்லுறான்?" என்று அக்கறையாக கேட்க, "உங்க பேரன் உங்க மகன் போல மாமா... எப்போவும் உதைச்சிட்டே இருக்கான்" என்று சொல்லி சிரித்தாள்.

அந்த சிரிப்பில் அவள் பல கவலைகளை உள்ளடக்கி இருந்தாள்.

மகாலிங்கம், சாணக்கியன், விஷ்வா மூவரும் அதிரடியான அரசியல் குடும்பமென்றால் விருத்தாச்சலம், வசுந்தரா மற்றும் மித்ரா அதிகார குடும்பம்.

சாணக்கியன் வெளியேறிய ஐந்து நிமிடத்தில் அந்த பத்திரிக்கையாளன் கடத்தப்பட்டிருந்தான். அடுத்த நாள் அலுவலகத்துக்கு வந்த வசுந்தரா முதலில் கேள்விப்பட்டது குப்பை தொட்டிக்கு அருகில் ஒரு பிணம் கிடப்பதாகதான்... அதை கேட்டு அவசரமாக சம்பவ இடத்துக்கு விரைந்தவளுக்கு, இறந்து கிடந்தது நேற்று கேள்வி கேட்ட பத்திரிக்கையாளன் என்ற செய்தி கிடைத்ததும் அவள் முகத்தில் இனம் புரியாத விரக்தி பரவியது.

அந்த இடத்துக்கு ஏற்கனவே வருகை தந்திருந்த விருதாச்சலத்துக்கும் யோசனை தோன்றியது. அடுத்த நாள் பத்திரிக்கைகளில் அந்த பத்திரிக்கையாளன் கேள்வி கேட்ட விஷயமும் அவனின் இறப்பும் இணைக்கப்பட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

அதை வாசித்ததும் பொறுமை இழந்த வசுந்தரா மேடிட்ட வயிற்றுடன் சாணக்கியனின் அலுவலகத்தை அடைந்தாள். அவன் அறைக்குள் நுழைந்த போது அவளை கண்ட விஷ்வா, "வாங்க அண்ணி" என்று கதிரையை எடுத்து போட அதில் இருந்தவள் சாணக்கியனுக்காக காத்திருந்தாள். சிறிது நேரம் கழித்து வந்த சாணக்கியன் உடையிலும் கைகளிலும் ரத்த கறை படிந்திருந்தது. அது வசுந்தரா கண்களுக்கும் தப்பவில்லை.

உள்ளே வந்தவன் வசுந்தராவை புருவம் சுருக்கி பார்த்தபடி சட்டையை அவள் முன்னேயே கழட்டி அங்கிருந்த சோபாவில் போட்டுவிட்டு குளிப்பதற்காக அறையுடன் சேர்ந்திருந்த குளியலறைக்குள் நுழைந்தவன் சிறிது நேரத்தில் குளித்து விட்டு உடை மாற்றி வந்தான்.

அவனை ரத்த கறையுடன் கண்டதிலிருந்தே அவனை மனதுக்குள் அர்ச்சித்தபடி இருந்தவள் சாணக்கியனை சீற்றத்துடன் பார்த்தாள். அவள் பார்வையை சட்டை செய்யாமல் அவள் முன்னே இருந்து அவளை நிதானமாக பார்த்தவன், "என்ன?" என்று ஒற்றை வரியில் கேட்க அவளோ, "நீங்க தானே அந்த கொலைக்கு காரணம்?" என்றாள்.

"வாட் ?கொலையா? எந்த கொலை?" என்று தெரியாத போல் கேட்டவனை பார்த்து எழுந்த கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கியவள், "அந்த பேப்பர் ரிப்போர்ட்டர் கொலைக்கு" என்றாள் குரலில் கோபத்தை தேக்கி... அவளை கொடுப்புக்குள் சிரித்தபடி அழுத்தமாக நோக்கியவன், "இங்கே பாருங்க கலெக்டர் மேடம்... அவன் கேள்வி கேட்டதுக்காக கொலை செய்ற அளவுக்கு நாங்க ஒன்றும் சின்ன பசங்க இல்லை…ஊர்ல எந்த கொலை நடந்தாலும் அதை என் தலையிலேயே கட்டுறீங்க...இதுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... என் கூட பேசி சும்மா உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாம உங்க அப்பா கிட்டயும் உங்க தங்கச்சி கிட்டயும் சொல்லி கொலைகாரனை கண்டு பிடிக்க சொல்லுங்க... வாங்குற சம்பளத்துக்கு கொஞ்சமாச்சும் வேலை பார்க்க வேணாமா? உங்க ப்ரோமோஷனுக்காக என் தலையில பழி போட வேண்டாம்." என்று நீளமாக பேசி முடித்தவன் அவளை விட்டு தனது பார்வையை நகர்த்தாமலே இருந்தான்.

அவன் தனது தந்தையையும் தங்கையையும் கிண்டலடித்தது கோபத்தை கிளப்பினாலும் அதை கட்டுப்படுத்தியவள், "அப்போ இந்த ரத்த கறை?" என்று அவன் அங்கே கழட்டி போட்டு இருந்த சட்டையை சுட்டிக் காட்டி கேட்டாள்.

"ஓ அதுவா? இன்று மதியம் ஒரு பார்ட்டி இருக்கு. அதுக்கு கோழி வெட்டி கொடுத்துட்டு வந்தேன். வேணும்னா நீங்களும் சாப்பிட்டு போகலாமே." என்றான் நக்கல் தொனியில். இது கோழி வெட்டிய ரத்தம் என்றால் குழந்தை கூட நம்பாது. அவள் நம்புவாளா? அவனை சந்தேகமாக பார்க்க, "விஷ்வா" என்று அழைத்தவன் அவளை கோழி வெட்டிய இடத்துக்கு அழைத்து போக சொன்னான்.

அங்கு சென்றவளுக்கு குற்றுயிரும் குலை உயிருமாய் இருந்த கோழிகளை பார்த்து மனசு பாரமாக சாணக்கியனை மீண்டும் சந்திக்காமலே வெளியேற போனாள்.

அவள் கஷ்டகாலம் சாணக்கியனோ அவள் வண்டியில் சாய்ந்து ஒற்றை காலை மேலே குற்றியபடி தனது அடியாட்களுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தான்.

அலுவலகத்தில் இருந்து வெளியே வந்தவளை பார்த்தவன், "என்ன கலெக்டர் மேடம் கோழி உரிச்ச இடத்தை பார்த்தாச்சா?" என்று கண்ணடித்தபடி கேட்டான். அவன் பேச்சு அவளின் சினத்தை கூட்டினாலும் அதை காட்ட முடியாத பதவியில் அவன் இருந்தான்.

உடனே அவன் கேள்வியை சட்டை செய்யாமல், "நான் போகணும்" என்று வேறெங்கோ பார்த்து சொன்னவளை பார்த்தவன், "போங்க" என்றபடி வண்டியை விட்டு அசையாமல் நின்றான். அவளின் சாரதியோ என்ன செய்வதென்று புரியாமல் சாணக்கியனின் கைவளைவுக்குள் கையை கட்டியபடி நின்றான்.

"சொல்லுப்பா... உங்க மேடம் போகணுமாமே... அனுப்பலாமா?" என்று அவன் கழுத்தை பிடித்து ஆட்டியபடி கேட்க... அவனோ என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான். வசுந்தராவுக்கு சாரதியை பார்க்க பாவமாக இருந்தது.

இருவரையும் பார்த்து நக்கலாக சிரித்தவன், சாரதியிடம், "நீ போய் வண்டியிலேறு" என்றபடி சற்று விலகி அவள் கதவை திறந்து விட்டு, "ஏறுங்க கலெக்டர் மேடம்" என்று நக்கலாக சொல்லி உள்ளே நோக்கி கையை காட்டினான். அவள் போதாத காலமோ ஏறும் போது கால் தடுக்க அவள் முதுகை பிடித்து அவன் தான் தாங்கி இருந்தான்.

அதிர்ச்சியுடன் அவள் கழுத்தை மட்டும் திருப்பி அவனை பார்க்க அவளை முறைத்தபடி, "நீ என்ன குடிகாரியா? எப்போ பாரு விழுந்துட்டே இருக்க... உண்மையாவே விழுறியா ? இல்ல நான் உன்ன பிடிக்கணும்னு நினைச்சு விழுறியா ?" என்று சீறியவனின் குரலில் சற்று முன்னிருந்த நக்கல் மறைந்து கோபம் மட்டுமே இருந்தது.

அவன் அடியாட்கள் முன்னால் தன்னை இவ்வாறு அவமானப் படுத்தியது கோபத்தை கிளப்ப அவனை முறைத்தபடி ஜீப் கதவை அடித்து சாத்தினாள். 'இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல' என்று நினைத்தவன் அடியாட்களுடன் பேசிய படி தனது அறைக்குள் சென்றான்.

வீட்டிலிருந்த மகாலிங்கத்துக்கு தெரியும் இந்த கொலை சாணக்கியன் செய்திருக்க மாட்டான் என்று.

ஆனால் யார் செய்தது என்று குழப்பமாகவே இருந்தது. அதே குழப்பத்தில் தான் சாணக்கியனும் விஷ்வாவும் இருந்தனர். சாணக்கியனை கோர்த்து விட யாரோ செய்த சதி என்று மட்டும் அவர்களுக்கு தெரிந்தது.

ஒரு எதிரி இருந்தால் அடையாளம் காணலாம், ஊர் முழுக்க எதிரிகளே நிறைந்து இருந்தால் யாரை சந்தேகப்படுவது என்று தெரியாமல் குழம்பி போனார்கள்.

அந்நேரம் வீட்டுக்குள் காத்தமுத்துவுக்கு கயல்விழி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தாள். அதை பார்த்த சித்ரா அவள் வாழ்க்கை வீணாகி விட்டதே என்று வழிந்த தனது கண்ணீரை துடைத்த போது வீட்டுக்குள் நுழைந்த சாணக்கியன் அவரது நடவடிக்கையை புரியாத பார்வை பார்த்தபடி தனது அறையை நோக்கிச் சென்றான்.

சாணக்கியனை கண்டவுடன் சாப்பிடுவதை விட்டு விட்டு சிரித்தபடி அவனருகில் ஓடி வந்தான் காத்தமுத்து.


அவனும் காத்தமுத்துவை பார்த்து மெலிதாக சிரித்தவன், "சாப்பிட்டீங்களா?" என்று அக்கறையாக கேட்க... அவனும் தலையை ஆட்டியபடி அவனை அணைத்துக் கொண்டான். இதையெல்லாம் பார்த்து விஷ்வா தான் கொஞ்சம் கடுப்பானான். அவன் பின்னால் வந்த கயல்விழி சாணக்கியனை விரக்தியாக பார்த்து புன்னகைத்தவள் காத்தமுத்துவை கை பிடித்து கூட்டிக் கொண்டு மாடியேறினாள். தங்கையின் வாழ்க்கையை நினைத்து மருகியபடி தனது தாயை பார்க்க அவரோ அழுது முடித்திருந்ததை அவர் கண்கள் பறை சாற்றியது.
 
உனக்குள் நானே rerun ஆனால் நான் முதல் முறையாக இந்த கதையைப் படிக்கிறேன்.

நல்ல குடும்பம்
அதிரடிக்கும், அதிகாரதிக்கும் எப்படி ஒத்துப்போகுமோ தெரியவில்லை.
இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்? எப்படி பிரிந்தார்கள் ? என்று தெரிந்துக்கொள்ள அவா!!
எனக்கென்னமோ அந்த காத்தமுத்து பைத்தியம் இல்லை என்று தோன்றுகிறது🤔🤔 அவன் CBCID ஆ இருப்பானோன்னு சந்தேகம்
ஏனெனில் முதல் எபிசோடில் கயல் அவன் தலையையும், உடையையும் தொட அனுமதிப்பதில்லை என்று படிக்கும் போதே இந்த சந்தேகம் வந்தது.
சோ, அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து இவர்களை கண்டுபிடிக்க வந்தவன் போல் தெரியுது. ஆனால் இவனை திருமணம் செய்து கொடுக்க எப்படி மகாலிங்கம் ஒத்துக்கொண்டார் என்று தான் குழப்பம்🤔
 
உனக்குள் நானே rerun ஆனால் நான் முதல் முறையாக இந்த கதையைப் படிக்கிறேன்.

நல்ல குடும்பம்
அதிரடிக்கும், அதிகாரதிக்கும் எப்படி ஒத்துப்போகுமோ தெரியவில்லை.
இவர்கள் எப்படி சேர்ந்தார்கள்? எப்படி பிரிந்தார்கள் ? என்று தெரிந்துக்கொள்ள அவா!!
எனக்கென்னமோ அந்த காத்தமுத்து பைத்தியம் இல்லை என்று தோன்றுகிறது🤔🤔 அவன் CBCID ஆ இருப்பானோன்னு சந்தேகம்
ஏனெனில் முதல் எபிசோடில் கயல் அவன் தலையையும், உடையையும் தொட அனுமதிப்பதில்லை என்று படிக்கும் போதே இந்த சந்தேகம் வந்தது.
சோ, அவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் போல் நடித்து இவர்களை கண்டுபிடிக்க வந்தவன் போல் தெரியுது. ஆனால் இவனை திருமணம் செய்து கொடுக்க எப்படி மகாலிங்கம் ஒத்துக்கொண்டார் என்று தான் குழப்பம்🤔 இந்த ரிப்போர்ட்டர் கொலையையும் இந்த காத்தமுத்து செய்து இருப்பானோன்னு இரண்டு சந்தேகம் ஆனால் அவன் நடிக்கிறான் என்று நல்லா தெரியுது
 
Top