அத்தியாயம் 2
அவன் மனமோ அவள் நிலையை பார்த்து உலையாக கொதிக்க, அவன் கால்கள் கூட நிற்க முடியாமல் தடுமாற ஆரம்பித்தது. கனத்த மனதுடன் வெளியே வந்தவன் கண்ணில் கண்ணீருடன் இருந்த அவள் பெற்றோர் பட, அவள் தந்தையின் தோளில் கை வைத்து "உங்க பொண்ணுக்கு கண்டிப்பா நான் நியாயம் வேண்டி கொடுப்பேன் " என்று சொல்லி விட்டு புறப்பட்டான். அவன் எதிரில் அப்போது தான் தனது வீர பிரதாபங்களை மீடியா காரர்களிடம் அள்ளி எறிந்து விட்டு உள்ளே நுழைந்தாள் மதுபாலா.
அவனை இளக்காரமாக பார்த்தபடி அவள் உள்ளே நுழைய அவனோ அவளை பார்க்காமலே வெளியேறி சென்றான். உள்ளே வந்ததும் மாதவியின் தாய் தந்தையிடம் வந்தவள் கையில் ஒரு கட்டு பணம் எடுத்து கொடுக்க அவர்களோ "பணம் எல்லாம் வேணாம்மா என் பொண்ணு" என்று மேலும் சொல்ல முடியாமல் விம்மி வெடித்து அழுதனர். மனதுக்குள் அவள் அவர்கள் அழுகையை பார்த்து சலித்துக் கொண்டாலும் முகத்தை பரிதாபமாக வைத்துக் கொண்டவள் "இங்க பாருங்கம்மா கண்டிப்பா உங்க பொண்ணுக்கு நீதி கிடைக்கும்.. இது ஹாஸ்பிடல் செலவுக்கு உதவும் வச்சுக்கோங்க" என்று அவர்கள் கையில் பணத்தை திணித்தவள் கூட வந்தவனிடம் சைகை செய்ய அவனும் போட்டோக்களை எடுத்து தள்ளி விட்டான். அதன் பிறகு மாதவி அனுமதிக்கப்பட்டு இருந்த அறைக்குள் நுழைந்து சிறிது நேரம் அந்த பெண்ணை பார்த்து விட்டு வெளியேறியவள் "இந்த போட்டோ நாளைக்கு ஹெட் லைன்ல வரணும்" என்று சொன்னபடி விறு விறுவென வெளியேறினாள்.
அதே சமயம் வீட்டுக்கு வந்த கரிகாலனை நோக்கி வந்த அவள் தாய் "என்னப்பா ஆச்சு? அந்த பொண்ணை பற்றி கேட்டதுமே மனசு பதற ஆரம்பிச்சிடுச்சு, டி வி ல வேற நீ அந்த பொண்ண கல்யாணம் பண்ணிக்க போறதா சொல்றாங்களே, இதெல்லாம் சரியா வருமா?" என்று கேட்க "என்ன வேகம்?" என்று மீடியாகாரர்களை நினைத்து பிரமித்தவன் " ரொம்ப சின்ன பொண்ணும்மா, என் பேட்டி பார்த்து இருப்பீங்க தானே, ஏன் அப்படி சொன்னேன்னு உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன் " என்று சொல்ல அவனை கலங்கிய கண்களுடன் ஏறிட்டு நோக்கியவர் "உன் வாழ்க்கையை நான் தான் வீணாக்கிட்டேன்ல " என்று சொல்லும் போதே அவர் கண்ணில் இருந்து கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் வழிந்தது. அவனோ பெருமூச்சுடன் அவர் தலையை வருடியவன் "அதெல்லாம் ஒண்ணும் இல்ல, எல்லாமே விதி, அப்பா தூங்கிட்டாரா? பையன் தூங்கிட்டானா?" என்று கேட்க "ரெண்டு பேரும் தூங்கிட்டாங்கப்பா" என்றவர் மேலும் "நீ குளிச்சிட்டு வா, நான் காபி போட்டு கொடுக்கிறேன்.. அந்த பொண்ணு எப்படி இருக்கா? " என்று கேட்டார்.. அவனோ "ஒண்ணும் வேணாம்மா, நீங்க படுங்க, அந்த பொண்ணு சாவோட விளிம்பை பார்த்துட்டு வந்து இருக்கா, அவ பட்ட கஷ்டத்தை கேட்கும் போதே மனசு வலிக்குது.. அந்த நாய்களை சும்மா விட மாட்டேன்" என்று வன்மமாக உரைத்தவன் அறைக்குள் நுழைந்து குளிக்கச் சென்றான்.
குளித்து விட்டு வந்தவன் கண்ணாடி முன்னே நின்று தலையை கையினால் கோதியபடி தன்னை தானே பார்த்து விரக்தி புன்னகையை சிந்திக் கொண்டான்.
அவன் மனமோ "உனக்கு நான் என்ன குறைடி வச்சேன்? ஏன் இப்படி பண்ணின ? " என்றவன் ஒரு கணம் திரும்பி தனது குழந்தையை பார்க்க அவன் மனம் மேலும் கனத்துப் போனது. குழந்தை அருகே வந்து படுத்தவன் அவனை வருடியதும் தான் இதுவரை இருந்த தடுமாற்றம் குறைந்த உணர்வு அவனுக்கு உருவானது.
கண்களை மூடியவன் கண்ணில் நிழலாடியது என்னவோ அவள் உருவம் தான். அவன் மனமோ மீண்டும் மீண்டும் "நான் என்னடி தப்பு செய்தேன்? உனக்கு பிடிச்சதெல்லாம் வாங்கி கொடுத்தேன், ஆசைப்பட்ட இடமெல்லாம் எவ்ளோ வேலைக்கு நடுவிலும் கூட்டி போனேன்.. தாம்பத்யத்துல கூட குறை வைக்கவும் இல்ல, வரம்புக்கு மீறி நீ ஆசைப்பட்ட விஷயம் மட்டும் என்னால செய்ய முடியாம போனது... நாட்டுக்கு நேர்மையா இருந்தேன் அது தப்பா? இந்த பச்சை குழந்தையை விட்டு போற அளவுக்கு எப்படி உனக்கு மனசு வந்திச்சு ராட்சசி.. தரம் கெட்டு போய் இருக்கியேடி " என்று திட்டியவனுக்கு அன்று தூக்கம் தொலைந்து போனது.
தான் எட்டி உதைத்தது வைரம் என்று அறியாத கரிகாலனின் முதல் மனைவியவளோ மஞ்சத்தில் இன்னொருவனுடன் ஈருடல் ஓருயிராக இழைந்து கொண்டு இருந்தாள். வாழ்வின் நிதர்சனம் அறியாத பேதையவள் தனது அழகை வைத்தே, இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாள். வயிற்றுப் பிழைப்புக்காக உடலை விற்கும் பரத்தைகள் கூட மன்னிப்புக்கு உரியவர்கள், ஆனால் பகட்டு வாழ்க்கைக்காக ஒரு நல்லவனுக்கு துரோகம் செய்து விட்டு , உடலை மூலதனமாக வைக்கும் அவளை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
அடுத்த நாள் காலையில் எழுந்து அலுவலகத்துக்கு நுழைந்த கரிகாலனை தொடர்ந்து நுழைந்தான் அந்த பிரதேசத்தில் பெரிய குளிர்பான தொழிற்சாலை கட்ட இருக்கும் முதலீட்டாளன். அவனைக் கண்டதுமே கரிகாலனுக்கு அவன் வருகையின் அர்த்தம் புரிந்து விட்டது. பலரிடம் அனுமதி பெற்று கரிகாலனிடம் வந்த அவனது திட்டத்தை ஒரே கையெழுத்தில் நிராகரித்து அல்லவா அவன் அனுப்பி இருந்தான். வெளியே காத்து இருந்தவன் மீது ஒரு கண பார்வையை செலுத்திவிட்டு அவன் உள்ளே நுழைய அந்த முதலீட்டாளனும் பின்னால் சென்றான்.
கரிகாலனோ "இருக்க கூட அவகாசம் தர மாட்டிங்க போல" என்று நக்கல் தொனியில் கேட்டவாறு அமர்ந்தவன் முன்னால் இருந்த இருக்கையில் அமர சொல்லி சைகையில் சொன்னான். இருக்கையில் அமர்ந்தவாறே அவன் முன்னே அந்த திட்டம் சம்பந்தமான ஆவணங்களை வைத்தவன் முதல் கேள்வியாகவே "இதுக்கு ஏன் சார் அப்ரூவல் கொடுக்கல?" என்று கேட்டான். அதைக் கேட்டு இதழ்களை பிதுக்கிய கரிகாலன் "ஒரு ப்ராஜெக்ட் செய்யும் போது என்வயர்ட்மெண்டல் பீசிபிலிட்டி ரிப்போர்ட் , அதாவது சுற்று சூழலுக்கு இதனால உண்டாக கூடிய நன்மை தீமை எல்லாம் அலசி ஒரு அறிக்கை நீங்க சமர்ப்பிக்கணும், அத இங்க காணோம், மேலும் உங்க இஷ்டப்படி அங்க பாக்டரி கட்ட போறேன் இங்க பாக்டரி கட்ட போறேன்னு சொன்னா அத கண்ண மூடிட்டு சைன் பண்ண நான் எதுக்கு படிச்சு வந்து இங்க உட்காரணும் ? நீங்க சொன்ன இடம் மக்கள் வாழற இடம்.. அவங்கள என்ன பண்ண போறீங்க? எங்க இருந்து தண்ணீர் எடுக்க போறீங்க? " என்று கேட்க அவனோ "அதானே குளத்துல இருந்துன்னு தெளிவா போட்டிருக்கேன்" என்று சொன்னான். அதைக் கேட்டு இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவன் " குடிநீர் , விவசாயத்துக்கு பயன் படுத்துற குளத்துல இருந்து எடுக்க போறீங்க ரைட்? அப்போ எல்லாரும் நீங்க தயாரிக்கிற சோடாவை குடிச்சு உயிர் வாழனும் அப்படி தானே" என்று கேட்க அவனுக்கும் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
எப்படி அவன் கேள்விகளுக்கு பதில் சொல்வதென்று தெரியாமல் திணறியவன் "முதல் கையெழுத்து போட்டு தாங்க சார், எடுக்க வேண்டிய அப்ரூவல் எல்லாம் அடுத்த நிமிஷமே உங்க மேசையில் இருக்கும்" என்று பொய்யாவது சொல்லி அவனை வழிக்கு கொண்டு வர நினைத்தான். அவ்வளவு சீக்கிரம் ஏமாறுபவனா கரிகாலன்?
தனக்கு முன்னே இருந்தவனை அழுத்தமாக பார்த்தவன் " பேப்பர்ஸ் ஒண்ணுமே ஒழுங்கா இல்ல.. அப்புறம் இத எப்படி நான் அப்ரூவ் பண்ண முடியும்?? " என்று கேட்க " பேப்பர்ஸ் எல்லாமே ஒரு மேட்டரா சார்... என்ன எதிர் பார்க்கிறீங்க? " என்று கேட்க நெற்றியை நீவியவன் " புரியல " என்றபடி அவனை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தான். வந்தவனோ " கவர்மெண்ட் ஸ்டாப்ஸ் பத்தி எனக்கும் தெரியும் தானே சார்.. வெளிப்படையாவே கேட்கிறேன் எவ்ளோ பணம் வேணும் இந்த பேப்பர்ல கையெழுத்து போடுறதுக்கு?? " என்று கேட்டான்.
அவனோ " ஊப் " என்றபடி இருக்கையில் சாய்ந்து இருந்தவன் " கவர்மெண்ட் ஸ்டாப்ஸ்க்கு, வரும் பொது மக்களிடம் கண்ணியமா நடந்துக்கணும்னு எழுதப்படாத ரூல் இருக்கு..அதனால மரியாதையா சொல்றேன்.. ப்ளீஸ் வெளிய போங்க சார்.. டாகுமெண்ட்ஸ் ஒழுங்கா இருந்தா நான் சைன் பண்ணுவேன்.. " என்று சொல்ல அவனோ " என் பவர் தெரியாம விளையாடுற? உன் கிட்ட என்னடா பேச்சு.. உன் மினிஸ்டர் கிட்ட பேசுறேன் " என்று சொன்னான். அவனை அனல் கக்கும் விழிகளால் நோக்கியவன் " வெளிய போடா நாயே.. " என்று நிறுத்தி மெலிதாக சிரித்தபடி " அப்டின்ன்னு நான் சொல்ல முதல் நீங்களே வெளிய போவீங்கன்னு நினைக்கேன் சார் " என்று சொல்ல அவனை முறைத்தபடி வெளியேறினான் சைன் வாங்க வந்தவன்.. அவன் போய் அடுத்த கணமே அவன் போன் அலற நம்பரை பார்த்தவன் " சொல்லுங்க சார் " என்றான். மறுமுனையில் இருந்த அவனது மினிஸ்டர் " கரிகாலன்... இப்போ வந்தவர் எனக்கு வேண்டப்பட்டவர்.. பிரச்சனை பண்ணாம கேட்கிற இடத்துல கையொப்பம் வைங்க " என்று சொல்ல அவனோ " முடியாது சார் " என்றான் அழுத்தமாக. அவன் மறுப்பு மினிஸ்டருக்கு கடுப்பாக " நான் யார்னு தெரியாம பேசிட்டு இருக்க.. நீ எனக்கு தான் வேலை பார்க்கணும் " என்று சீற அவனோ " சாரி சார் நான் கவர்மெண்ட் ஸ்டாப்.. மக்களுக்காக மட்டும் தான் வேலை பார்ப்பேன்.. என்னால ஒருவன் முகத்தில புன்னகை வந்தா கூட அதை எனக்கு திருப்தி... ஆனா பலரோட கண்ணீரை சம்பாதிக்க போற இந்த ப்ராஜெக்ட்ல எனக்கு கையெழுத்து போட முடியாது.. " என்று சொல்ல அவரோ " உன் போஸ்டுக்கு தானே மதிப்பு...உன்னை எனக்கு தூக்க முடியாதுனு நினைக்கிறியா? " என்று நக்கலாக கேட்க " கண்டிப்பா முடியும் சார்... நீங்க என்னை எந்த போஸ்ட்லயும் போட முடியும்.. ஐ டோன்ட் கேயார்...ஆனா இந்த சீட்ல இருக்கும் மட்டும் நான் கையெழுத்து போட மாட்டேன்.. " என்று ஆணித்தரமாக கொஞ்சமும் பயம் இன்றி சொன்னான்.
அவருக்கு தெரியும் அவ்வளவு சீக்கிரம் அவனை வழிக்கு கொண்டு வர முடியாது என்று, ஆனாலும் அந்த முதலீட்டாளரிடம் பல கோடி பேரம் பேசியதால் அந்த ப்ரொஜெக்ட்டை முடிக்க வேண்டிய கட்டாயம். அடுத்த கணமே "சரி என் ஆஃபீஸுக்கு வா, கொஞ்சம் பேசணும்" என்று சொல்ல, மினிஸ்டர் அவரின் அழைப்பை அவனால் தட்டிக் கழிக்கவும் முடியவில்லை. வேறு வழி இன்றி மனமே இல்லாமல் அவரைத் தேடி அவர் அலுவலகத்துக்கு சென்றான்.
மினிஸ்டரை தேடி அவர் அழைப்பில் வந்தவனுக்கு வாசலில் அமர்ந்து இருந்தவளைக் கண்டதும் தூக்கி வாரிப் போட்டது.. யாரை அவன் வாழ் நாள் முழுதும் பார்க்கவே கூடாது என்று நினைத்தானோ அவள் தான் இரு நாட்களாக அவன் கண்ணில் அடிக்கடி படுகிறாள்.. அவளை தவிர்க்க தான் அவனும் விரும்புகிறான். ஆனால் அவன் விதி அவளிடமே கொண்டு நிறுத்தியது. ... அரச அதிகாரி வட்டாரத்தில் அவளை சந்திக்காமல் இருப்பது சாத்தியமில்லை என்று அறிந்தாலும் ஏனோ மனம் அந்த சந்திப்பை ஏற்க மறுத்தது. அங்கு அமர்ந்து இருந்த மதுபாலாவுக்கு அந்த உணர்வு கொஞ்சமும் இல்லை போலும் " வாங்க சார் , மினிஸ்டரைப் பார்க்க வந்தீங்களா?? என்ன விஷயம் ?? " என்று கேட்க , அவனை அழுத்தமாக பார்த்தவன் " நான் சார் கிட்டயே பேசிக்கிறேன் " என்றான். அவளோ நக்கலாக " சாருக்கு எல்லாமே நான் தான்னு தெரியும்ல " என்று சொல்ல அவனோ இரு பக்கமும் தலையாட்டி சிரித்தவன் " என்னை பேச வைக்காதீங்க மேடம் " என்று சொன்னான். அவளோ " பேசி தான் பாருங்களேன் " என்று ஆரம்பிக்க அவன் சத்தமே இல்லாமல் இதழ் மட்டுமே அசைத்து சொன்ன வார்த்தையில் அந்த இடமே அதிரும் வண்ணம் " கரிகாலன் " என்று சீறினாள். அவனோ தோள்களை உலுக்கி " ஏன் இவ்ளோ கோபம்?? எதுக்கு இவ்ளோ சத்தமா கத்துறீங்க? " என்று கேட்க அவளோ " இப்போ நீ என்ன சொன்ன? " என்று ஒருமையில் ஆரம்பிக்க அவனோ அருகே இருந்தவனிடம் " நான் ஏதும் சொன்னேனா ?? " என்று கேட்க அவனும் இல்லை என்று தலையாட்டினான்.
உடனே அவள் அவனை அனல் தெறிக்க பார்த்தவள் " நீ ஆம்பிள இல்லன்னு உன் பொண்டாட்டி விட்டுப் போன பிறகும் உனக்கு கொழுப்பு குறையல " என்று அவனை அவமானப்படுத்தும் பொருட்டு சீற அவனோ " அவ கொடுத்து வச்சது அவ்ளோ தான்... " என்றான் மிக மிக நிதானமாக... ஆனால் அவள் வார்த்தையில் அவன் மனம் உலையாக கொதித்தது அவன் மட்டுமே அறிவான்.. என்ன வார்த்தைகள் சொல்லி விட்டாள் அவள்? ஆனாலும் தனது கோபத்தை காட்டும் இடம் அதுவல்ல என்று அறிந்தவன் அந்த இடத்தில் கோபத்தை கஷ்டப்பட்டுக் கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தான். அவன் முகமோ இறுக்கமாக இருக்க, அவள் முகமும் அவன் சொன்ன வார்த்தைகளை எண்ணி எண்ணி அனலாக சிவந்து இருந்தது.
அவன் அவளை பார்த்து சொன்ன வார்த்தைகள் சரி தான் ஆனாலும் அதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளுமா என்ன?