ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 2

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 2

அவன் வெறுக்கும் மாதம் இந்த வைகாசி மாதம் தான்...

இம்முறையும் அவன் ஊருக்குச் செல்ல வேண்டும்... சலிப்பாக இருந்தது...

பார்ட்டி முடித்து வந்தவன், உடைகளை மாற்றிக் கொண்டே கட்டிலில் படுத்துக் கொண்டு தொலைப்பேசியைப் பார்த்தான்...

வெறுப்பாக இருந்தாலும் வேறு வழி இல்லை சென்றாக வேண்டும்...

ஆழ்ந்த மூச்சை எடுத்துக் கொண்டே தூங்கி விட்டான்...

இதே சமயம் மருதநாயகமோ, தனது தோப்பு வீட்டில் இருக்கும் மரங்களை சுற்றிப் பார்த்துக் கொண்டே நடந்தார்... எண்பது வயது இருக்கும்... ஆனால் அப்படி சொல்ல முடியாதளவு இளமையான தோற்றம்...

சர்வஜித்தின் கம்பீரம் எங்கே இருந்து வந்தது என்று அவரை பார்த்தால் துல்லியமாக சொல்லி விடுவார்கள்...

அவரும் சர்வஜித் போல தொழில் தொழில் என்று சின்ன வயதில் அலைந்தவர் தான்...

ஆனால் அப்போதெல்லாம் தோன்றாத நிம்மதி அவருக்கு இந்த இயற்கையின் நடுவே தோன்றியது...

அதனால் இங்கேயே வந்து விட்டார்...

அவருக்கு இருக்கும் ஒரே உறவு சர்வஜித் தான்...

ஆனால் இங்கே அவர் தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் ஏராளம்... அதில் அவருக்கு கிடைக்கும் பாசங்களும் ஏராளம்...

வேஷ்டி சட்டை என்று கம்பீரமாக இருப்பவர் இப்போதும் திடகாத்திரமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு தான் நடப்பார்...

மீசையை முறுக்கிக் கொண்டே, தோட்டத்தை சுற்றிப் பார்த்து விட்டு அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்தவரை தேடி வந்தாள் ஆதிரையாழ்...

இருபத்தைந்து வயது பெண்ணவள்...

மருதநாயகத்தின் பக்கத்து வீடு தான்...

அவருக்கு ஒன்று என்றால் ஓடி வந்து நிற்பவள் அவள் தான்...

அவளுக்கென்று யாரும் இல்லை...

ஒரே ஒரு மாமாவும் அத்தையும் இருக்கின்றார்கள்...

தூரத்தில் இருப்பவர்கள்... அவர்கள் வீட்டிற்கு அவளுக்கு செல்ல விருப்பம் இல்லை... அவர்கள் பையன் மணி அவளை வக்கிரமாக தான் பார்ப்பான்...

இதற்கு அவனுக்கு திருமணமாகி வயது வந்த பெண் வேறு இருக்கின்றது...

அதனாலேயே தனியாக இருந்தாலும் பரவாயில்லை, இங்கேயே இருக்கின்றேன் என்று கூறி விட்டாள்.

ப்ளஸ் டூ வரைக்கும் படித்து இருக்கிறாள்.

காலேஜ் போக முதலே அவள் பெற்றோர் இறந்து விட, மருதநாயகத்தின் தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்து விட்டாள்.

"நான் படிக்க வைக்கிறேன்" என்று மருதநாயகம் சொல்லிப் பார்த்தார்... பிடிவாதமாக மறுத்து விட்டாள். அவருக்கும் அதற்கு மேல் அவளை என்ன செய்வது என்று தெரியவே இல்லை... அவள் போக்கில் விட்டு விட்டார்...

அவருக்கு பிடித்த மீன் குழம்பு தொடக்கம் எல்லாமே அவள் செய்துக் கொண்டு வந்து அவருக்கு கொடுப்பாள்... அவருக்கு உடல் நிலை சரி இல்லை என்றால் அவளே வந்து கை கால்களை அமுக்கி விடுவாள்...

"ஐயா ஐயா" என்று அவர் மேல் பாசத்தை கொட்டி தீர்ப்பவள்.

அவளுக்கும் யாரும் இல்லை, தனியாக இருக்கும் அவருக்கும் யாரும் அருகில் இல்லை...

பாசக்கார தாத்தா,பேத்தி தான் இருவரும்...

அவளைக் கண்டதுமே அவர் இதழ்கள் விரிய, "அட வாம்மா யாழ்" என்றார்...

யாழ் என்று வாய் நிறைய அழைக்க அவருக்கும் பிடிக்கும்...

"எப்படி இருக்கீங்க ஐயா... முகம் எல்லாம் பளிச்சுனு இருக்கு... பேரன் வர்ற சந்தோஷமா?" என்று கேட்டுக் கொண்டே, அவர் அருகே மண்டியிட்டு அமர, அவரோ, "அவன் கிடக்குறான்... கல்யாணம் பண்ணிக்க சொன்னா பண்ணிக்கவே மாட்டேன்னு இருக்கான்... சரி அத விடு, நீ எப்போ கல்யாணம் பண்ணிக்க போற?" என்று கேட்டதுமே அவள் முகம் இறுகி போனது...

தலையை குனிந்துக் கொண்டாள்.

"ஏய் என்னாச்சு யாழ்?" என்று அவர் கேட்க, அவரை ஏறிட்டு பார்த்தவள், "அத சொல்ல தான் தாத்தா வந்தேன்" என்றாள் அவள்...

"ம்ம்... சொல்லு" என்றார் அவர்...

"நேத்து அத்தை, மாமா, மணி அத்தான் வீட்டுக்கு வந்தாங்க" என்று அவள் சொல்ல, அவரும், "ம்ம்... பார்த்தேன்" என்றார்...

"எனக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்காங்களாம்..." என்று அவள் தயக்கமாக சொல்ல, "நல்ல விஷயம் தானேம்மா" என்றார்...

"மணி அத்தானோட வயசாம் அவருக்கு" என்று சொன்னதுமே மருதநாயகத்தின் முகம் இறுக, "அவனுக்கு ஒரு நாற்பது இருக்குமா? அந்த வயசு வித்தியாசத்துல எதுக்கு பார்த்தான்?" என்று கடுப்பாக கேட்டார்...

"அது கூட பரவாயில்லை தாத்தா, மாப்பிள்ளைக்கு கல்யாணம் பண்ணி குழந்தை ரெண்டு இருக்காம்... மனைவி இறந்துட்டாங்களாம்... அந்த குழந்தையை பார்த்துக்க தான் ஆள் தேடி கல்யாணம் பண்ணுறாராம்" என்று சொன்னவள் முகத்தில் வேதனை அப்பட்டமாக தெரிந்தது...

"நீ என்ன ஆயாவா?" என்று காட்டமாக கேட்டார் மருதநாயகம்...

"கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லைனு சொன்னேன்... நிறையவே பேசுறாங்க... கொஞ்சம் அசிங்கமா கூட மணி அத்தான் பேசுறார்... மனசுக்கு கஷ்டமா இருக்கு" என்று சொன்னவள் கண்ணில் கண்ணீர் வழிய, தாவணியில் முந்தானையால் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்...

அவள் தலையை வருடிய மருதநாயகமோ, "அடுத்த முறை வீட்டுக்கு வர்ற நேரம் என்னை கூப்பிடு, நான் பேசிக்கிறேன்... இனியும் வருவாங்களா?" என்று கேட்டார்...

"வருவாங்கனு தான் தோணுது... கொஞ்ச நாள் கழிச்சு வந்து பேசுறோம் கொஞ்சம் யோசிச்சுக்கோம்மானு அத்தை சொல்லிட்டு தான் கிளம்புனாங்க" என்றாள்.

மருதநாயகமோ, "சரி விடு யாழ்... வர்ற நேரம் பார்த்துக்கலாம்... உனக்கு என்ன வேணும்னு கேளு, அமெரிக்காவுல இருந்து என் பேரனை வாங்கி வர சொல்றேன்" என்று கேட்க, அவளோ அழுத்தமாக இல்லை என்று தலையாட்டிவள், "எனக்கு எந்த ஆசையும் இல்லை ஐயா... ஆசைப்பட்ட எதுவுமே கிடைச்சது இல்லை... அதனால ஆசைப்படுறதை விட்டுட்டேன்... இருக்கிற வரைக்கும் உங்கள போல உறவுகள் நடுவுல சந்தோஷமா இருக்கணும்" என்றாள்.

"கண்டிப்பா உனக்குனு ஒருத்தன் வருவான்... நீயும் கல்யாணம் பண்ணி புள்ளை குட்டினு வாழ தான் போற... இந்த கிழவன் அத பார்த்துட்டு தான் கண்ணை மூடுவேன்" என்று சொல்ல, அவரை முறைத்து பார்த்த ஆதிரையாழோ, "இப்போ எதுக்கு சாகுறத பத்தி எல்லாம் பேசுறீங்க... உங்க வாயில நல்ல வார்த்தையே வராதா?" என்று கடிய அவரும் சிரித்துக் கொண்டார்...

சர்வஜித்தை ஆதிரையாழ் பார்த்து இருக்கின்றாள் தான்...

ஆனால் பேசியது இல்லை... அவனும் இலகுவில் பேசவும் மாட்டான்... எல்லாவற்றுக்கும் புன்னகை மட்டும் தான்... அமெரிக்கா என்று சொன்னதுமே அவளுக்கு சற்று பயம்... தான் பேசுவது விளங்குமா என்று பயம்... ஆங்கிலம் அவளுக்கும் கொஞ்சமாக சமாளிக்கும் அளவுக்கு தான் தெரியும்... அதுவும் மருதநாயகம் கற்றுக் கொடுத்தது தான்...

சர்வஜித் வந்து நிற்கும் போதெல்லாம் மருதநாயகத்தின் வீட்டிற்குச் செல்வதை நன்றாக குறைத்துக் கொள்வாள்...

அக்கம் பக்கத்தினர் தேவை இல்லாமல் பேசி விடுவார்கள் என்ற பயம் அவளுக்கு...

இம்முறையும் சர்வஜித் வந்ததுமே மருதநாயகம் வீட்டுக்கு போக முடியாது என்று ஒரு கவலை மனதின் ஓரத்தில் இருந்தது...

இப்படியே அந்த மாதமும் நகர்ந்து இருக்க, சர்வஜித் இந்தியாவிற்கு புறப்படும் நாளும் வந்து சேர்ந்தது...

ஃபெர்ஸ்ட் க்ளாசில் பயணம் செய்து பழக்கப்பட்டவன் அவன்...

இம்முறையும் அதே ஃபெர்ஸ்ட் க்ளாஸ் தான்...

நியூயார்க்கின் ஜான். எஃப் கென்னடி இன்டெர்னஷனல் எயார் போர்டிற்கு தனது காரில் சாரதியுடன் வந்து இறங்கினான் அவன்...

விலை உயர்ந்த ஆசைப்பட்ட காரான லம்போர்கினியை அவன் கொண்டு வரவில்லை, அது அவன் மட்டுமே ஓட்ட வேண்டும் என்ற மேல் தட்டு எண்ணம் அவனுக்கு...

வீட்டில் இருக்கும் ஏனைய கார்களை மட்டும் தான் சாரதி வைத்து தேவைக்கு ஓட்டுவான்...

இது மட்டும் விலை குறைந்த கார் எல்லாம் இல்லை... பென்ஸ் வகை கார் தான்...

முட்டி வரை மடிக்கப்பட்ட வெண்ணிற ஷேர்ட், ஜீன்ஸ் அணிந்து ஜெர்க்கின் அணிந்து இருந்தவன் கண்ணில் சன் க்ளாஸும் காதில் ப்ளூ டூத்தும் இருக்க, அவனது ஹாண்ட் லக்கேஜில் லேப்டாப்பை மட்டும் வைத்துக் கொண்டே நடந்து உள்ளே வந்தான்...

அவன் உடமைகளை அங்கே நிற்கும் வேலையாட்கள் தள்ளிக் கொண்டுச் சென்றார்கள்... இந்த பகட்டு வாழ்க்கை ஊரில் இருக்காது என்று அவனுக்கு தெரியும்...

அது தான் அவனுக்கு பெரிய தலைவலியும் கூட...

மைனஸ் டிகிரிக்கு பழக்கப்பட்ட அவன் மேனியோ சின்ன வெப்பநிலை உயர்வென்றாலும் வியர்த்துக் கொட்டி விட ஆரம்பித்து விடும்... அவனுக்கு அந்த உணர்வே எரிச்சலை கொடுக்க கூடியது...

வருடத்தில் ஒரு மாத சிறை வாழ்க்கை என்ற எண்ணத்துடன் தான் வி ஐ பி நுழைவாயிலூடு உள்ளே நுழைந்தான்...

அவனுக்கு எப்போதுமே தனிப்பட்ட வரவேற்பு தான்...

பணம் இருந்தால் பிணமும் வாய் திறக்கும் அல்லவா?

அவன் ஆளுமையில் மயங்கி விமான நிலையத்தில் வேலை செய்யும் பெண்களே தேடி வந்து அவனுக்கு உதவி செய்ய முனைவார்கள்...

அவன் வழக்கம் போல ஒரு அலட்சியத்தை அவர்களிடம் காட்டி விட்டு, அனைத்து செயல்முறைகளும் முடிய விமானத்தில் ஏறிக் கொண்டான்...

ஃபெர்ஸ்ட் க்ளாஸ் என்றால் கேட்கவும் வேண்டுமா?

தனி அறையாக இருந்தது...

கட்டில், கழிப்பிடம், இருக்க இருக்கை என்று பிரம்மாண்டமாக இருந்தது...

அதற்கான டிக்கெட் மட்டும் பல லட்சங்களை தொட்டிருக்க, அதெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டில்லாத பணம் தான்...

ஜெர்கினை கழட்டி அருகே இருந்த ஹாங்கரில் போட்டு விட்டு, கட்டிலில் அப்படியே சரிந்து கண்களை மூடிக் கொண்டான்...

அப்படி ஒரு இதம் தனிமை அவனுக்கு கொடுத்தது...

இந்த தனிமை திரும்பி வரும் போது அவனுக்கு கிடைக்காது என்று அப்போது அவனுக்கு புரியவே இல்லை...

புரிந்து இருந்தால் ஊருக்குச் சென்று இருக்க மாட்டானோ என்னவோ?

கிட்டத்தட்ட பதினைந்து மணி நேர பயணம்...

இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கி விட்டான் சர்வஜித்...

விமான நிலையத்தில் இருந்து அவன் வெளியேறிய சமயம், அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தது மருதநாயகம் அனுப்பிய கார்...

அவர் வரவில்லை, காரை மட்டும் அனுப்பி இருந்தார்...

பழைய மாடல் வெண்ணிற அம்பாஸடர் ஒன்று...

மருதநாயகத்தின் தந்தை பயன்படுத்திய காராம் அது...

அவர் நினைவாக இன்றும் மருதநாயகம் வைத்து இருந்தார்...

ராசியான கார் என்று சொல்வார்...

ஒவ்வொரு முறையும் அவன் காரை மாற்ற சொல்லி மருதநாயகத்திடம் சொல்வது உண்டு... அவர் கேட்டால் தானே... பணம் இருந்தாலும் சென்டிமென்ட் பேசி அவனை ஒரு வழி பண்ணி விடுவார்...

இதற்கு அவரிடம் பேசாமலே இருந்து இருக்கலாம் என்று நினைத்ததும் உண்டு...

வழக்கம் போல அதே காரை அனுப்பி இருந்தார்...

'இந்த சொத்துக்காக என்ன எல்லாம் பண்ண வேண்டி இருக்கு' என்று நினைத்துக் கொண்டே காரில் ஏறிக் கொண்டான்...

அந்த காரின் சாரதி முத்துவோ, "தம்பி எப்படி இருக்கீங்க?" என்று கேட்க, "ம்ம்... குட்" என்று மட்டும் சொல்லிக் கொண்டான்...

இந்திய வெப்பநிலையை அறிந்தவன் கோட்டை கழட்டி இருந்தாலும் வியர்த்து வழிய ஆரம்பித்தது...

அமெரிக்காவில் அந்த குளிரில் கூட அவன் ஜெர்க்கின் தவிர எதுவும் போடுவது இல்லை...

சில சமயம் ஜெர்க்கின் கூட போட மாட்டான்...

அவன் உடலை குளிர் பெரிதாக தாக்குவதும் இல்லை...

குறைந்த வெப்பநிலைக்கே பழகி போய் விட்டான்...

அவனை கொண்டு இங்கே விட்டால் என்ன நடக்கும்?

வெதுப்பகத்தினுள் இருக்கும் உணர்வு தான் அவனுக்கு...

சட்டென ஷேர்ட்டின் மேலிரு பட்டன்களை திறந்து விட்டான்... அப்போதும் வியர்த்து வடிந்தது...

"ஃப*" என்று வாய்க்குள் திட்டிக் கொண்டே, ஷேர்ட்டை கழட்டியவன், தனது ஹாண்ட் லக்கேஜில் இருந்து ஆர்ம் கட்டை அணிந்துக் கொண்டான்... காரில் ஏசியும் இல்லை... கார் வேறு தூக்கி தூக்கி போட்டது...

தனக்கு பக்கத்தில் அமர்ந்து ஷேர்ட்டை மாற்றிக் கொண்டு இருப்பவனைப் பார்த்த முத்துவோ, "அதென்ன தம்பி ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லிட்டே இருக்கீங்க... அதுக்கு என்ன அர்த்தம்?" என்று கேட்க, அவனை சட்டென திரும்பி அழுத்தமாக பார்த்தவன், "இது இங்கிலிஷ் கெட்ட வார்த்தை" என்றான்...

அதனை கேட்டு அதிர்ந்த முத்துவோ, "எனக்கா திட்டுனீங்க?" என்று கேட்க, அவனோ, "இல்ல சன்னுக்கு திட்டுனேன்" என்றவன் ஒரு கணம் நிறுத்தி, "சூரியனுக்கு திட்டினேன்" என்று அவனுக்காக தமிழில் மாற்றி சொன்னான்...

"ஓஹோ" என்று சொன்னவனோ, ஷர்ட் இல்லாத சர்வஜித்தின் மேனியை பார்த்துக் கொண்டே, "உங்களுக்கும் திட்டு திட்டா இருக்கா? எங்க ஊர்ல மூட்டை தூக்குற சின்ராசுக்கும் திட்டு திட்டா இருக்கு" என்றான்...

சர்வஜித்துக்கு சுர்ரென்று எகிறியது...

யாருடன் யாரை ஒப்பிடுகின்றான் என்று ஆத்திரம்...

அவனை திட்ட தொண்டை வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டான்...

முத்துவோ மருத நாயகத்தின் செல்லப் பிள்ளை... திட்டவும் முடியாத நிலை...

'இந்த பெருசால யாருக்கும் திட்டவும் முடியல... சொத்தை என் பேர்ல எழுதி வச்சு இருந்தா குறைஞ்சு போய்டுமா இந்த பெருசு... இது எப்போ மண்டையை போட்டு நான் எப்போ சொத்தை எடுத்துக்கிறது...' என்று சலிப்பாக நினைத்துக் கொண்டான்...

அவனுக்கு ஜீன்சும் வியர்த்தது...

அமெரிக்கா என்றால் கழட்டி விடுவான்... போன முறை கழட்டி, முத்து அதிர்ந்து, அது மருதநாயகத்தின் காதிற்கு போய் அவர் அவனை ஒரு வழி பண்ணி விட்டார்... அதில் இருந்து அவனுக்கு வேறு வழி தெரியவே இல்லை... வியர்ப்பதை தாங்கிக் கொண்டு தான் இருக்க வேண்டும்...

மில்லியன் கணக்கில் இருக்கும் சொத்துக்களை அவன் விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை...

அதில் அவன் உழைப்பும் இருக்கின்றது அல்லவா? அதனால் இந்த சிறை தண்டனையை வேறு வழி இல்லாமல் அனுபவிக்க வருடா வருடம் வந்து விடுவான்...

இங்கே அவனை பார்த்தால் அமெரிக்காவில் இருக்கும் சர்வஜித் என்று கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்தால் கூட நம்பமாட்டார்கள்...

அவனும் திறந்து இருந்த ஜன்னலினூடு ஊரை பார்த்துக் கொண்டே வந்தான்...

அருவருப்பாக இருந்தது அவனுக்கு... "ஷீட்" என்று வாய்க்குள் சொல்லிக் கொண்டான்...

அவன் கார் தேங்கி நின்ற நீர் நிலை ஒன்றைக் கடந்து போக, அவன் மூக்கை துளைத்தது நாற்றம்...

சட்டென கார் கண்ணாடியை மூடியவன் மூக்கை மூடிக் கொண்டே, "எதுக்கு இந்த ரோட்ல விட்ட?" என்று எகிறினான்...

"மன்னிச்சுக்கோங்க தம்பி..." என்று சொல்லிக் கொண்டே காரை ஓட்ட, அவனோ சலிப்பாக இரு பக்கமும் தலையாட்டி, "ஓஹ் மை காட்" என்று சொல்லிக் கொண்டான்...

சற்று நேரத்தில் அவர்கள் வீடும் வந்து விட்டது...

மரங்கள் நடுவே அமைந்து இருந்த இயற்கை எழில் கொஞ்சும் மாளிகை அது...

வாசலில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஊர்க்காரர்களுடன் பேசிக் கொண்டு இருந்தார் மருதநாயகம்...

அவரை பார்த்துக் கொண்டே காரில் இருந்து சர்வஜித் இறங்க, "என்னடா ட்ரெஸ் இது? ஆர்ம் கட் போட்டு வந்து இருக்க?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார் மருதநாயகம்...

அவனுக்கோ, 'இப்போவே பெருசு ஆரம்பிச்சிடுச்சு' என்று நினைத்துக் கொண்டே, "ஒரே ஹாட் ஆஹ் இருக்கு" என்றான்...

"உன்னை திருத்தவே முடியாது... ரூம்ல வேஷ்டி சட்டை எடுத்து வச்சு இருக்கேன்... போட்டுட்டு வா" என்றார்... கஷ்டப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்தியவனோ அவரை முறைத்துக் கொண்டே வீட்டினுள் நுழைய, "என்னடா முறைப்பு? இந்த கிழவன் இன்னும் சாகுறான் இல்லையேன்னு பார்க்கிறியா? அவ்ளோ சீக்கிரம் மண்டையை போட மாட்டேன்... உன்னை வச்சு செஞ்சிட்டு தான் மண்டையை போடுவேன்" என்றார்...

அவன் பதில் ஒன்றும் சொல்லாமல் வாய்க்குள் திட்டிக் கொண்டே அறைக்குள் நுழைய, அங்கே கட்டிலில் வேஷ்டியும் சட்டையும் இருந்தது...
 
CRVS2797

Active member
உனக்குள் உறையும் அனல் நானடி...!
எழுத்தாளர்: ஆத்வீகா பொம்மூ
(அத்தியாயம் - 2)

அய்யோ பாவம் ! ஆத்தா பாவம் ! தாத்தா பாவம்..!
வசமா மாட்டிக்கிட்டான் போலயே...? ஆனாலும், சொத்துக்காக இப்படியா
தாத்தா செத்தொழியணும்ன்னு நினைக்கிறது...? சொத்து இருந்தா போதுமா ? சொந்தம் சொல்லிக்க யாரும் வேண்டாமோ...? நல்ல பேராண்டி, பாவப்பட்ட தாத்தா..!

😀😀😀
CRVS (or) CRVS 2797
 
Super and intresting sis
 
Top