ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 19

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 19

சித்ராவின் உயிர் தோழி தான் மலர், கௌதமின் தாய், பாடசாலையில் ஆசிரியையாக பணி புரிபவர். அவரின் கணவர் சத்யபாலன் ஒரு விபத்தில் இறந்துவிட 14 வயதேயான கிருஷ்ணாவுடனும் வயிற்றில் பல வருடங்கள் கழித்து உருவான இரு மாத கருவுடனும் கணவரின் ஊரிலிருக்க பிடிப்பில்லாமல் மாற்றலாகி சித்ரா இருக்கும் ஊருக்கு வந்திருந்தார்.

அந்நேரம் மகாலிங்கம் எம்.பி ஆக பதவி வகித்த காலம். ஒரு நாள் சித்ரா மூன்று குழந்தைகளையும் ஏற்ற பாடசாலைக்குச் சென்றவர் ஜீப்பில் இருந்தபடியே குழந்தைகளின் வரவை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு குடையுடன் பாடசாலையிலிருந்து வீதியை கடந்த மலரை கண்டு சந்தோஷப்பட்டவர் அவரின் விதவை கோலத்தை கண்டு அதிர்ந்து தான் போனார்.

பாடசாலையிலிருந்தே நெருங்கிய தோழிகள் சித்ராவும் மலரும்... ஆனால் திருமணத்தால் வெவ்வேறு ஊர்களுக்கு பிரிந்துச் சென்று விட்டனர்... வாட்ஸ்அப், பேஸ்புக் இல்லாத அந்த காலத்தில் திருமணத்தின் பின் நட்பு என்பது எட்டா கனியாகவே இருந்தது.

ஜீப்பிலிருந்து இறங்கியவர் மலரை நோக்கி ஓடிச் சென்று அவர் முன்னே நின்று, "மலர்" என்றபடி அவரை அணைத்துக்கொள்ள ராசியில்லாதவள் என்று ஊரார் தொடக்கம் சொந்தம் வரை அனைவரும் தூற்றி சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்த மலருக்கு அவரின் அணைப்பு ஆறுதலாக இருக்க, "சித்ரா என் நிலைமையை பாரு" என்றபடி குலுங்கி குலுங்கி அழுதார்.

வீதி ஓரம் என்பதால் சற்று சுதாரித்தவர்கள், "என்ன நடந்தது?" என்று சித்ரா கேட்க மலரும் தனது வாழ்வில் நடந்ததை கண்ணீருடன் கூறினார்.

"கவலைப்படாதே மலர் நான் இருக்கேன்" என்று கூறிய சித்ராவுக்கு தெரியவில்லை அவரால் தான் மலரின் குடும்பம் சிதைந்து போக போகின்றது என்கின்ற உண்மை. தெரிந்திருந்தால் அவர் மலரை சந்திக்காமல் இருந்திருப்பாரோ என்னமோ..!

"இது உன் பையனா? மொசு மொசு என்று அழகா இருக்கான்" என்று பக்கத்தில் நின்ற கிருஷ்ணாவை பார்த்தவர் அவனை இறுக்கி அணைத்து உச்சியில் முத்தமிட்டார்.

மலர் சுண்டினால் ரத்தம் வருமளவுக்கு சிவந்த நிறமும் பெரிய பையனுக்கு தாய் என்று கூற முடியாதளவுக்கு அழகான உடல் வாகும் உடையவர். அதே போல கிருஷ்ணாவும் நல்ல சிவந்த நிறமாக இருந்தாலும் முகத்தில் கண் மூக்கு வாயை அடையாளம் காண முடியாதளவுக்கு சதைப்பற்றான கன்னமும் பெரிய குண்டான உடல்வாகும் என பம்பளிமாஸ் கணக்காக இருப்பான். அவனை பார்த்தால் அனைவர்க்கும் அவன் கன்னத்தை கடிக்க வேண்டும் போலவே இருக்கும்... அப்படி பட்ட பணிஸ் போன்ற கன்னத்தை உடையவன்.

"உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்று மலர் கேட்க, "எனக்கு மூன்று வானரங்கள் டி, உன் ஸ்கூல்ல தான் படிக்கிறாங்க. நீ வா உன்னை வீட்ல கொண்டு விடுறேன்" என்றபடி இருவரையும் அழைத்துச் சென்றவர் ஜீப்பில் ஏற்றினார்.

அந்நேரம் பார்த்து சித்ராவின் புத்திரர்கள் மூவரும் ஜீப்பை நோக்கி வர, முதலில் ஜீப்பில் ஏற போன சுட்டிப் பொண்ணு கயலோ மலரை பார்த்ததும் பின்னால் நகர்ந்து சாணக்கியன் பின்னால் ஒளிந்தாள்.

மலர் அவளை எட்டி பார்த்து, "இது உன் பொண்ணா?" என்று கேட்க, "ஆமா ஏதும் சேட்டை பண்ணினாளா?" என்று கேட்ட சித்ராவிடம், "இல்லை" என்று தலையாட்டி சிரித்தார்.

அப்போது தான் கயலுக்கு மூச்சு வந்தது. கிருஷ்ணாவும் சாணக்கியனும் ஒரே வகுப்பில் இருந்தாலும் சாணக்கியன் புதிதாக வந்த கிருஷ்ணாவுடன் பெரிதாக பேச மாட்டான். அதுக்கு அவன் பாரிய உருவமும் ஒரு காரணம்.

கயல்விழி அன்று தான் தன்னுடன் படிக்கும் தன்னை கிண்டல் பண்ணிய பையனின் காற்சட்டையை பின்னால் சென்று எல்லார் முன்னாடியும் வேணுமென்று கழட்டி விட்டு ஓட அந்நேரம் பின்னால் கிருஷ்ணாவுடன் காண்டீனிலிருந்து வந்த மலர் அவளை எட்டி பிடித்து அடித்து வெளுத்திருந்தார்.

தான் காற்சட்டையை கழட்டிய விடயத்தை தனது தாயிடம் சொல்லி விடுவாரோ என்று பயந்த கயல் ஜீப்பில் மலரை கண்டதும் உறைந்து போனாள். ஆனால் அவர் சொல்லாமல் இருக்க சந்தோஷப்பட்டவள் அவர் அருகில் போய் இருந்தாள்.

அந்நேரம் பார்த்து கிருஷ்ணா, "அம்மா இந்த பொண்ணு தானே அந்த பையன் காற்சட்டையை கழட்டியது?" என்று சத்தமாகவே கேட்டான்.

அதில் அதிர்ந்த கயல்விழியோ மனதுக்குள், 'டேய் குண்டா சும்மா இருக்க மாட்டியாடா? அடுத்தது உன்னோடது தான்' என்று சபதம் போட்டவள் பயத்தில் அடங்கி ஒடுங்கி போக விஷ்வா, சாணக்கியன் மற்றும் சித்ரா அதிர்ச்சியுடன் கயல்விழியை பார்த்தனர்.

உடனே சுதாரித்த மலர், "இல்ல கிருஷ்ணா அது வேற பொண்ணு" என்று சமாளிக்க, "இல்லம்மா எனக்கு நல்லா தெரியும் இந்த பொண்ணு தான்... பாருங்க நீங்க பிடிக்க போகும் போது விழுந்ததில் சட்டையில் அப்பிய சேறு அப்படியே இருக்கு" என்று அவள் உடையை சுட்டிக் காட்ட எல்லாரும் அவளையே அனல் பறக்க பார்த்துக் கொண்டிருந்தனர். சித்ரா காளி அவதாரம் எடுத்திருந்தார்.

உடனே மலர் கிருஷ்ணாவிடம் எதுவும் பேச வேண்டாம் என்று கண்களால் சொல்ல அவனும் தாய் சொல்லுக்கு கட்டுப்பட்டான்.

உடனே சித்ராவிடம், "அவன் எதோ புரியாம பேசுறான்" என்றவர் அவளை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டார்.

"ஐயோ மலர் இந்த நிலமைல அவளை மடியில வச்சுக்கிட்டு... இறக்கி விடு" என்று அக்கறையாக சித்ரா சொல்ல, "பரவாயில்லை இருக்கட்டும் விடு" என்ற மலர் அவளை அணைத்தபடி அவளுடனேயே ஒன்றி போனார்.

கிருஷ்ணாவையும் மலரையும் அவர்கள் வீட்டில் இறக்கி விட்டவர்கள் சனி ஞாயிறு கிழமைகளில் வீட்டுக்கு வரும்படி அழைத்து விட்டு சென்று இருந்தனர்.

இப்படியே நாட்கள் நகர, புதிதாக பாடசாலைக்குச் சென்ற கிருஷ்ணாவால் யாருடனும் ஒன்ற முடியவில்லை அவன் உருவத்தினாலேயே அனைவரும் அவனை ஒதுக்கினர். கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனிடம் சில பெரிய பசங்க சென்று, "டேய் குண்டா" என்று கலாய்க்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்தவன் சாப்பாட்டை அவர்களிடத்தில் விசிறி அடித்தான்.

அதில் கோபமடைந்தவர்கள் அவன் வெளியில் வரும் வரை பார்த்து இருந்து விட்டு அவன் சாப்பிட்டு விட்டு வகுப்புக்குள் செல்லும் பொருட்டு கிரவுண்டை தாண்டிச் செல்லும் போது அவனை சுற்றி வளைத்தனர்.

அவனும் தளராமல் நிமிர்ந்து நிற்க, "உனக்கென்னடா அவ்வளவு திமிர்?" என்று கேட்டு அவனை அனைவரும் சேர்ந்து அடிக்க தொடங்கினார்கள். அவனும் எதிர்த்து நின்று ஒரு கட்டத்தில் முடியாமல் கீழே விழ அப்போதும் அடித்தவர்களால் அவன் தலையில் அடிபட்டு நெற்றியில் ரத்தம் வடிந்தது. சுருண்டு விழுந்தவனின் சத்தத்தை கேட்டு அவ்விடத்துக்கு போன விஷ்வா எட்டி பார்த்து அடி வாங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணாவை கண்டு அதிர்ந்தவன் ஓடிச் சென்று நண்பர்களுடன் இடைவேளை நேரத்தில் வகுப்பறையில் அரட்டை அடித்துக் கொண்டிருந்த சாணக்கியனிடம் விடயத்தை சொன்னான்.

"அண்ணா... நம்ம மலர் டீச்சர் பையன் கிருஷ்ணாவ கிரௌண்ட் பக்கத்தில வச்சு எல்லாரும் அடிக்கிறாங்க ரத்தம் வருது" என்று ஓடி வந்ததில் மூச்சு வாங்கியபடி சொல்ல பாய்ந்து எழுந்து அவ்விடத்தை நோக்கி ஓடிய சாணக்கியன், "விடுங்கடா அவனை" என்றபடி அனைவரையும் தள்ளி விட்டான்.

அவன் எம். பி பையன் என்பதால் அவன் மேல் உள்ள பயத்தில் அனைவரும் விலகி நிற்க ரத்தத்துடன் சுருண்டு கிடந்த கிருஷ்ணாவை பின்னால் வந்த விஷ்வாவின் உதவியுடன் எழுப்பியவன், "இவனை புடிச்சுக்கோ" என்றபடி அவனை அடித்தவர்களிடம் சென்றான்.

அவர்களை அனல் தெறிக்க பார்த்தவன், "இவன் மேல யாருடா முதலில் கை வச்சது?" என்று இடுப்பில் கை வைத்தபடி கேட்க அனைவரும் பயந்து அடுத்தவர்களை மாறி மாறி காட்டினார்.

கடைசியாக அவர்களின் தலைவரை நோக்கி எல்லார் கையும் நீள அவனை சைகையால் சாணக்கியன் அருகில் வரும்படி அழைத்தான்.

பயந்தபடி அருகில் வந்தவனின் செவிப்பறை கண நேரத்தில் அதிர்ந்தது. அந்நேரமே புஜ பலமாக இருந்த சாணக்கியனின் ஒரே ஒரு அறையில் அவன் கீழே விழுந்து கன்னத்தை பொத்தியபடி நிமிர்ந்து பார்த்தான்.

"அவன் மேல இனி கை வச்சா எவன் கையும் அவனவன் உடம்பில இருக்காது." என்று சுட்டு விரலால் எச்சரித்தவன் விஷ்வாவுடன் சேர்ந்து கிருஷ்ணாவை தோளில் கை போட்டு தூக்கியபடி சிக் ரூமுக்குள் அழைத்துச் சென்றான்.

அவனுக்கு மருந்து போடும் நேரத்தில் பேசிக் கொண்டிருந்த மூவரும் நண்பர்களாயினர். கிருஷ்ணாவின் வெகுளித் தனமான குணம் சாணக்கியனுக்கும் சாணக்கியனின் ஆளுமையான குணம் கிருஷ்ணாவுக்கும் பிடித்து போக அவர்கள் நட்பை வளர்த்துக் கொண்டனர். விஷ்வா இரு வயது குறைந்தவன் ஆகையால் சில கதைகளில் அவனை சேர்த்தும் சில கதைகளில் அவனை தள்ளியும் வைத்தனர்.

சில மணி நேரங்கள் பின் மகனின் நிலை கேட்டு விரைந்து வந்த மலர், "என்னப்பா ஆச்சு?" என்று கேட்க நடந்ததை கூறியவன், "சாணக்கியன் தான் அம்மா காப்பாத்துனான்." என்று சொல்ல கை கட்டி நின்ற சாணக்கியனின் ஆளுமையில் வியந்தவர், "ரொம்ப நன்றிப்பா" என்றார்.

அவனும் சிரித்தபடி தலையசைக்க கிருஷ்ணாவிடம் திரும்பி, "ஏன்பா இனி அவங்க சண்டை போடா மாட்டாங்களா? வேற ஸ்கூல் மாறுவோமா?" என்று கேட்க சாணக்கியன் அவர் பின்னாலிருந்து, "வேணாம் டீச்சர் நீங்க பயப்படாதீங்க இனி கிருஷ்ணா மேல ஒரு தூசு விழாமல் நான் பார்த்துக்கிறேன்" என்று வாக்கு கொடுத்தவனுக்கு தெரியவில்லை தன்னை மீறி அவன் உயிர் போகும் நிலைக்கு அவன் தள்ளப்படுவான் என்று.

சாணக்கியனை நெகிழ்ச்சியாக பார்த்தவர் அவனை அருகில் அழைத்து அணைத்துக் கொண்டார்.

சனிக்கிழமை ஆனதும் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு மகாலிங்கம் வீட்டுக்கு வந்தார் மலர். சபல புத்தி கொண்ட மகாலிங்கம் அந்த சமயத்தில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார்.

அப்போது உள்ளே மலர் மேல் அவர் கண்கள் பேப்பருக்கு பின்னால் இருந்து யாரும் கவனிக்காத வண்ணம் நன்றாக மேய்ந்தது.

அப்போது அங்கிருந்த சித்ரா, "வா மலர்..." என்று அழைத்தவர் மகாலிங்கத்திடம் திரும்பி, "என்னங்க இது என் ஸ்கூல் பிரெண்ட் மலர்... நேற்று சொன்னனே அவங்க" என்று அறிமுகப்படுத்த அவரும் கையை நீட்டினார். மலரோ கை கூப்பி வணக்கம் சொல்ல புருவம் உயர்த்தி பார்த்தவர் அவரும் கை கூப்பி வணக்கம் சொன்னார்.

சித்ரா மலரை அழைத்துக் கொண்டுச் செல்ல சாணக்கியனோ, "வாடா கிருஷ்ணா" என்று அவனை தனது அறைக்குள் அழைத்துக் கொண்டு விஷ்வாவுடன் சென்றான்.

மாதத்தில் ஒவ்வொரு சனி ஞாயிறு கிழமைகளிலும் இரு வீட்டாரும் ஒன்று சேர்ந்து சந்திக்க அவர்கள் பிணைப்பு மேலும் மேலும் இறுகியது. சாணக்கியனும் கிருஷ்ணாவும் ஒரே வகுப்பில் தங்களது நட்பை இன்னும் பலப்படுத்தினர். ஒருவர் இல்லாமல் மற்றையவர் இருக்க முடியாத நிலைமைக்கு வந்தவர்கள் சில நாட்களில் சாணக்கியன் கிருஷ்ணா வீட்டிலும் கிருஷ்ணா சாணக்கியன் வீட்டிலும் இரவிலும் தங்கிக் கொண்டார்கள்.

கிருஷ்ணாவை கயலுக்கு மட்டும் தான் பிடிக்காமல் இருந்தது. முதல் நாள் தன்னை மாட்டி விட்ட கோபம் அப்போது வரை அவளிடம் இருந்தது. அவன் வந்தால் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பாள். ஆனால் பத்து வயதிலேயே அழகாக இருந்த கயலை ரெண்டும் கெட்டான் வயசிலிருந்த கிருஷ்ணா யாருக்கும் தெரியாமல் சைட் அடித்தான்.

இப்படியே நாட்கள் நகர, ஒரு நாள் சாணக்கியன் இல்லாத நேரமாக பார்த்து கேன்டீனில் கிருஷ்ணாவை சிலர் கிண்டல் பண்ண பொறுமை இழந்தவன், "டேய் ..." என்று உறுமியவாறு எழும்ப அனைவரும் பயந்து பின் வாங்கி ஓடி விட்டனர்.

'நம்ம டேய்...க்கு இவ்வளவு மதிப்பா?' என்று முதலில் ஆச்சரியப்பட்டவன் பின்னால் திரும்ப அங்கு அனல் பறக்கும் கண்களுடன் சாணக்கியன் நின்றிருந்தான்.

'அதானே பார்த்தேன்... நம்மள பார்த்து இவங்க பயந்துட்டாலும்...' என்று அவன் மனதுக்குள் யோசித்தாலும் சாணக்கியனை நோக்கிச் சென்று அவன் தோளில் கை போட்டு, "பார்த்தியாடா??? ஐயாவோட பெர்போர்மன்ஸ் எப்படி என்று?" என ஷர்ட் காலரை கிருஷ்ணா உயர்த்தி காட்ட, "பார்த்தேன்டா என் சிங்க குட்டி" என்று அவன் தோளை அணைத்தவாறே இறுக்கி பிடித்து சிரித்தான் சாணக்கியன்.

நண்பனின் அன்பில் பெரு மூச்செடுத்தவன், "எனக்கு தெரியும்டா உன்ன பார்த்து தான் பயந்து ஓடுனாங்க என்று" என கவலையாக சொல்ல, "இல்லடா... உன்ன பார்த்து தான் டா..." என்று சொல்ல வந்தவனின் வாய் மேல் கை வைத்தவன், "போதும்" என்றான்.

"நீ வளர்ந்த பிறகு எல்லாரும் பயப்படுற போல ஒரு சீறும் சிங்கமா இருப்ப" என்று சொன்னவனுக்கு அப்போது தெரியவில்லை தான் ஆறுதல் படுத்த சொல்லியது பிற்காலத்தில் உண்மை ஆகும் என்று.

அன்று ஒரு நாள் சித்ரா வீட்டில் பூந்தி லட்டு பிரியனான கிருஷ்ணா சமையலறைக்குள் நுழைந்து பூந்தி லட்டை துவம்சம் பண்ணிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட அனைத்தையும் காலி பண்ணி இருந்தான்.

கயலும் சாப்பிட ஆசையாக வந்தவள் வெறும் தட்டை பார்த்து அதிர்ந்து, "அம்மா எனக்கு லட்டு இல்லையா?" என்று கேட்க சித்ராவுக்கோ சங்கடமாக போய் விட்டது.

"இல்லம்மா..." என்று சித்ரா சொல்ல ஆத்திரத்துடன் கிருஷ்ணா முன் போய் நின்றவள் அவன் தட்டை பறித்து எறிந்து விட்டு, "என் லட்டை ஏன்டா சாப்பிட்ட?" என்று அவன் தலையை பிடித்து உலுக்கினாள்..

"ஐயோ வலிக்குதே..." என்று கிருஷ்ணா கத்த சித்ராவும், "விடு கயல்" என்று சொல்லி இழுத்து தள்ளி விட்டார்.

சத்தம் கேட்டு சாணக்கியனும் அவ்விடத்துக்கு வந்திருந்தான். தாய் தள்ளி விட்ட கோபத்தில் எழுந்தவள், "உன் வீட்ல சாப்பாடு போட மாட்டாங்களா? இங்க வந்து சாப்பிடுறியே ?" என்று கோபத்தில் அறியாமல் பேச வெகுண்டெழுந்த சாணக்கியன் அவளுக்கு அறைந்தான். அதோடு நில்லாமல் சர மாறியாக அடிக்க தொடங்கினான்.

சித்ராவோ, "விடுடா அவளை" என்று சாணக்கியனை இழுத்தவரால் அவனின் பலத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

"விடு அண்ணா வலிக்குது" என்று கயல் அழ அதை பார்த்து பொறுக்க முடியாத கிருஷ்ணா அவனை பின்னால் சென்று கட்டி பிடித்து இழுத்திருந்தான். "பாவம் டா விடுடா" என்று அவன் கெஞ்சலுக்கே மதிப்பு கொடுத்து அடிப்பதை நிப்பாட்டியவன் சித்ராவிடம் திரும்பி, "அவ அந்த பேச்சு பேசுறா? நீங்களும் பார்த்திட்டு இருக்கீங்க ?" என்று திட்டியவன் கயலை பார்த்து, "நீ இனி தேவையில்லாம ஒரு வார்த்தை கிருஷ்ணாவை பத்தி பேசினாலும் உன் வாயில பல்லு ஒன்னு கூட இருக்காது கவனம்" என்று எச்சரித்தவன் மேலும், "நானும் போனா போகுதுனு கேட்காம இருந்தேன் ஆனா உன் சேட்டையை சும்மா விட கூடாது." என்றவன் அவள் முன் கையை கட்டி தன் உயரத்துக்கு நிமிர்ந்து நிக்க அவள் பயந்து ஒடுங்கி நிமிர்ந்து பார்த்தாள்.

"அது என்னடி அன்னைக்கு ஒரு பையனின் காற்சட்டையை கழட்டி விட்டு ஓடுனாயாம் ?" என்று கேட்க அவளோ கிருஷ்ணாவை அனல் பார்வை பார்த்தாள்.

"அவனை எதுக்குடி பார்க்கிற? கேட்டது நான்... இங்க பார்த்து பதில் சொல்லு" என்று சொல்லி அவள் தாடையை பிடித்து தன் பக்கம் திருப்ப அவள் பயத்தில் கண்ணீர் கோர்த்தது.

"டேய் வேணாம்டா..." என்ற கிருஷ்ணாவை முறைத்தவன், "நீ சொல்லு" என்றான். சித்ராவும் கயலை முறைத்துக் கொண்டு நிற்க அவள் பயத்தில் மேலும் ஒடுங்கி போனாள். "கழட்டினியா இல்லையா?" என்று கேட்க இல்லை என்று தலை ஆட்டியவளின் தலையில் ஒரு கொட்டு விழுந்தது.

"பொய் பொய் இந்த வயசிலேயே பொய்" என்றவன், "இனி இப்படி செய்வியா ?" என்று கேட்டு கேட்டு ரெண்டு மூன்று கொட்டு கொட்டினான். அவளும் விம்மி அழ தொடங்க மனம் பொறுக்காமல் சித்ரா அவளை அணைத்துக் கொண்டு அவளை விட சொல்லி கண்களால் மகனிடம் கெஞ்சினார்.

அவரை பார்த்து பெருமூச்சு விட்டவன் கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டுச் செல்ல, கிருஷ்ணாவோ கயலையே திரும்பி திரும்பி பார்த்தபடி சென்றான்.

கயலுக்கோ கிருஷ்ணா மேல் வெறுப்பே மேலும் மேலும் படர்ந்திருந்தது. நாட்கள் செல்ல நெருங்கிய நண்பர்களான சாணக்கியனும் கிருஷ்ணாவும் நண்பர்களிடத்தில் வயதுக்கு வந்தவர்களின் படம் ஒன்றை எடுத்து வந்து அறையை பூட்டி விட்டு அதை திருட்டுத் தனமாக பார்க்க தொடங்கினர். அது அனைத்து விடலை பையன்களும் விடும் தவறு தான்.

விஷ்வாவும் சாணக்கியனின் கதவை பல முறை தட்டியும் திறக்காமல் இருக்க கடுப்படைந்தவன் சித்ராவிடம் போய் அழுதுக் கொண்டே முறையிட்டான். மகாலிங்கம் வீட்டில் இல்லாத சமயம், இருவரினதும் நடவடிக்கை சித்ராவுக்கு ஏதோ விசித்திரமாக பட மலரையும் அழைத்துக் கொண்டு பின்னால் சென்று ஜன்னலால் உள்ளே எட்டி பார்த்து டிவி யில் ஓடும் படத்தை பார்த்து அதிர்ந்தவர் ஜன்னலுக்குள்ளாலேயே, "டேய் என்ன படம்டா பார்க்குறீங்க ?" என்று திட்ட பயந்து எழுந்த இருவரும் டீவியை மறைத்த படி நின்றுக் கொண்டனர்.

பயத்தில் கிருஷ்ணா கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. முன்னால் வந்த சித்ராவும் மலரும் அறை கதவை தட்டி, "கதவை திறங்கடா" என்றதும் இருவர் மூச்சும் சற்று நேரம் நின்றது.

கதவை மெதுவாக திறந்த சாணக்கியனுக்கு சித்ரா அறைய, ஓடி முன்னால் சென்ற கிருஷ்ணா, "அவனை அடிக்காதீங்க ஆன்ட்டி நான் தான் இத கொண்டு வந்தேன்" என்றான்.

இதை கேட்டு கொதிப்படைந்த மலர், "பச்சை புள்ள போல இருந்திட்டு பண்ற வேலைய பாரு" என்று திட்ட அங்கிருந்த கயல் ஓடிச் சென்று ஒரு பிரம்பை எடுத்து வந்து மலரிடம் கொடுத்து, "நல்லா அடிங்க டீச்சர்" என்றாள்.

கிருஷ்ணா அதிர்ந்து அவளை பார்க்க சாணக்கியனோ கயலை எரித்து விடுவது போல் பார்த்தவன், "தப்பு என்னோடது எனக்கு அடிங்க" என்றான்.

"நீ ஏன்டா பொய் சொல்ற?" என்ற கிருஷ்ணா மேலும், "எனக்கு அடிங்க" என்றான்.

சித்ராவோ கோபத்தில் மலரிடமிருந்து பிரம்பை பறித்தவர், "உங்க ரெண்டு பேருக்கும் அடிக்கிறேன்டா" என்று ஓங்க சாணக்கியனோ, "இனி இந்த தப்பு பண்ண மாட்டோம் அம்மா" என்றான் புத்தி சாதுரியமாக. அந்த வயசிலேயே சாணக்கியம் அறிந்தவன் சாணக்கியன். அவனின் பேச்சில் கொஞ்சம் கோபம் குறைய பட சிடியை வெளியே எடுத்து உடைத்த சித்ரா, "இதான் கடைசி" என்றபடி சென்றார்.

அனைவரும் அங்கிருந்த நகர்ந்து விட அப்போது அங்கு நின்ற கயல் சாணக்கியனின் கண்ணில் பட எட்டி அவள் காதை திருகியவன், "பிரம்பு எடுத்து கொடுக்குறியாடி?" என்றவன் அவள் சத்தம் போட்டு அழ தொடங்க கிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு விரைவாக வீட்டை விட்டு வெளியேறினான்.

வெளியில் வந்தவர்கள் நேரே கிரௌண்டுக்குள் நடந்துச் சென்றார்கள். வழியில் செல்லும் போது கிருஷ்ணாவோ சாணக்கியனிடம், "பாவம் டா வலிச்சிருக்கும்" என்றான். "நீ என்னடா அவளுக்கு எப்போ பார்த்தாலும் சப்போர்ட் பண்ணுற?" என்று புருவம் சுருக்கி கேட்க குனிந்து வெட்கப்பட்டான் கிருஷ்ணா.

"டேய் என்னடா இது ?" என்று சாணக்கியன் மீண்டும் கேட்க சாணக்கியனிடம் எதையும் மறைத்து பழக்கமில்லாத கிருஷ்ணா, "நான் அவளை லவ் பண்றேன்டா" என்றதும் சாணக்கியன் மயங்கி விழாத குறையாக அதிர்ச்சியுடன் அவனை பார்த்து, "லவ் ஆ இந்த வயசிலேயா ?" என்று கேட்க, "காதலுக்கு வயசு முக்கியமில்லடா மனசு தான் முக்கியம்" என்று காதல் தத்துவம் பேசியவனை ஆச்சரியமாக பார்த்தான் சாணக்கியன்.

"அவ பஜாரிடா, உன் கேரக்டர் வேற அவ கேரக்டர் வேற... நீ தான் கஷ்டப்படுவ"

என்றவனிடம், "ஆப்போசிட் அட்ராக்டஸ் ஈச் அதர் என்று நம்ம சயின்ஸ் டீச்சர் இன்னைக்கு தானே சொல்லி தந்தாங்க" என்றான் கிருஷ்ணா. "அவளுக்கு இப்போ தான் டா பத்து வயசு." என்றான் கடைசியில் ஒரு பொறுப்புள்ள அண்ணனாக, "நான் இப்போ கல்யாணம் பண்ண மாட்டேன். ரெண்டு பேரும் வளர்ந்து வேலை எடுத்ததும் கல்யாணம் பண்ணுவேன்" என்று குழந்தை தனமாக பேசிய கிருஷ்ணாவை பார்த்து அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல் நின்றிருந்தான்.

"சரி இப்போ என்ன செய்ய போற?" என்று சாணக்கியன் கேட்க, "நீ தான் டா என் காதலை அவ கிட்ட சொல்லணும்" என்றான் அப்பாவியாக, "லூசாடா நீ? நான் அவ அண்ணன்டா, இது மட்டும் என் அம்மாவுக்கு தெரிஞ்சா நாம ரெண்டு பேரும் செத்தோம்." என்றான்.

"இப்போ என் காதலை சொல்லா விட்டால் வளர்ந்து வேற யாரையும் கல்யாணம் பண்ணிருவாடா" என்றவனை பார்த்து தனது நெற்றியில் அடித்தவன், "அவ வயசுக்கு கூட வரலடா முதலில வளர விடுடா." என்றான்.


"நீ சொல்லாட்டி நானே சொல்லுவேன்" என்றவனிடம் கையெடுத்து கும்பிட்டவன், "நீயாச்சு உன் காதலாச்சு... இதுல என்ன இழுக்காதே" என்றவனுக்கு தெரியவில்லை அவன் உண்மையாகவே கயலிடம் காதலை கூறுவான் என்று.
 
Top