அத்தியாயம் 18
அவனை தொடர்ந்து இறங்கி வந்த மாதவி அவன் கையை பயத்துடன் பிடித்துக் கொள்ள, அவனை அணைத்துக் கொண்டவன் மதுபாலாவை அம்பியூலன்சில் ஏற்றி விட்டு அவனும் தனது காயத்துக்கு மருந்திட வைத்தியசாலைக்கு சென்றான்.
அவர்கள் ஜீப்பை அடித்த லாரி டிரைவரும் சம்பவ இடத்தில் இறந்து போய் இருக்க , அவளது விபத்தை எதிர்க்கட்சி சதி என்று பேச ஆரம்பித்து இருந்தது ஊடகம்.. அவள் முகமோ கண்ணாடி வெட்டுக்களால் தழும்பாக இருக்க, அவள் அழகு மொத்தமாக சிதைந்து போய் இருந்தது. எந்த அழகை காட்டி, இந்த உயரத்தை பிடித்தாளோ அந்த அழகே அவளை விட்டு சென்று இருக்க, அவள் கால் நசுங்கி போனதால் கால் ஒன்றை அகற்ற வேண்டிய நிலை அவளுக்கு.
மாதவியே கரிகாலனுக்கு மருந்து இட்டவள் "என்ன இருந்தாலும் அவங்க பாவம் " என்று சொல்ல அவனோ விரக்தியாக சிரித்துக் கொண்டானே தவிர ஏதுவும் பேசவில்லை. அவன் மனமோ "எப்போவுமே அதர்மம் ஜெயிக்காதுடி" என்று சொல்ல அவன் மௌனமே காத்தான் மாதவி பயந்து விடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக. அன்றைய நாள் அப்படியே முடிய, பல ஆபரேஷன்களை கடந்து வந்த மதுபாலாவோ தனது முகத்தை கூட கண்ணாடியில் பார்க்க விரும்பவில்லை. பட்டுக் கன்னம் அதில் ஆழமான தழும்புகள் இருக்க, அவளோ பொய் கால் பூட்டி நடக்க வேண்டிய நிலையில் படுத்த படுக்கையாக இருந்தாள்.
அவளுக்கோ தொற்று விட்ட உணர்வே மனதில் இருக்க கரிகாலன் மீது கோபம் கரை புரண்டு ஓடியது. அவ்வளவு சீக்கிரம் திருந்தி விடுவாளா அவள்?
அதே சமயம் , நாட்களும் மெதுவாக நகர, வைத்திய துறையில் இருக்கும் மாதவியும் மதுபாலாவின் உடல் நிலையை பற்றி ஒரு வைத்திய மாணவியாக கவனம் செலுத்த நினைத்தவள் ஒருநாள் வைத்தியசாலைக்கு வந்த சமயம் சிகிச்சை எடுத்தப்படியே இருந்த மதுபாலாவை பார்க்க வந்து இருந்தாள். அவள் மனதினுள் இப்போது கோபம் எல்லாம் இல்லை. இருந்தது என்னவோ மதுபாலா மேல் பரிதாபம் மட்டுமே. உள்ளே வந்த மாதவியோ கட்டிலில் சாய்ந்து அமர்ந்து இருந்த மதுபாலாவிடம் "எப்படி இருக்கீங்க?"என்று கேட்க அவளோ "என்னடி நான் கஷ்டப்படுறதை பார்த்து ரசிக்க வந்து இருக்கியா?" என்று வன்மமாக கேட்டாள். மாதவியோ அவள் மனநிலை உணர்ந்து ஒரு நோயாளியாகவே அவளை நோக்கியவள் "அப்படி இல்ல மேடம், உங்கள பார்த்துட்டு போக தான் வந்தேன்" என்று மென்மையாக சொன்னாள். அதைக் கேட்டு சத்தமாக சிரித்த மதுபாலா " நீ என்ன பெரிய தியாகியா என்னை பார்த்து இரக்கம் காட்டுறதுக்கு ? அன்னைக்கு நான் போட்ட பிளான் மட்டும் சக்ஸஸ் ஆகி இருந்தா நீ செத்த இடத்தை புல்லு முளைச்சு இருக்கும்.. இப்ப கூட நான் அடங்கிட்டேன்னு நினைக்காத... உன்ன மொத்தமா அழிக்காம விடமாட்டேன்.. " என்று சொல்லவும் மாதவிக்கு அதிர்ச்சியாகி போனது.. அவள் தான் தங்களை கொல்ல வேலை பார்த்து இருக்கிறாள் என்று அறிந்தவளுக்கு கொஞ்சம் பயம் வந்தாலும் அதை அவள் முகத்தில் காட்டவில்லை. உடனே மாதவி "என்னடி தைரியமா இருக்கிற போல நடிக்கிறியா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, ஆதித் ஐ நான் என் கஸ்டடியில் எடுத்து அவன வச்சே உன்னை பழி வாங்குவேண்டி" என்று சீற "என்ன மேடம் அன்னைக்கு பேசுனதை மறந்துடீங்களா?" என்றபடி உள்ளே நுழைந்தான் கரிகாலன்.
மாதவி அவனிடம் சொல்லி விட்டு தான் மதுபாலாவை பார்க்க வந்து இருந்தாள். இப்படி ஏதும் நடக்கும் என்று தான் அவன் வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்ததே. உள்ளே வந்தவனை அனல் தெறிக்க மதுபாலா பார்த்துக் கொண்டு இருக்க, " இப்போவும் சொல்றேன் , விஜிதனோட போட்டோ என் கிட்ட இருக்கு,, இதுக்கு தானே என்ன போட பிளான் போட்ட.. நீ என்ன பண்ணினாலும் உன்னால ஒன்னும் புடுங்க முடியாது.. எனக்கு மத்தவங்க குடியை கெடுத்து பழக்கம் இல்ல... உன்னை பாவமென்னு சும்மா விடுறேன்.. அரசியலில் இருந்தோமா சேவை செய்தோமான்னு போய் கிட்டே இரு.. என் பக்கம் திரும்புனா நடக்கிறதே வேற. அதுக்கு பிறகு நீ விபச்சாரம் கூட பண்ண முடியாது.. பிச்சை தான் எடுக்கணும்..ஆனா விபச்சாரம் பண்ணுறத விட பிச்சை எடுக்கிறது எவ்வளவோ மேல் …கடவுளா உனக்கு தண்டனை கொடுத்து இருக்கார்.. இன்னும் நீ திருத்தலன்னா நீ எல்லாம் பூமிக்கே பாரம்டி " என்று சொல்ல அவளோ சளைக்காமல் "உன் சாவு என் கைல தாண்டா" என்று சொல்ல அவனோ "முதலில் உன்னை காப்பாதிக்க பாரு" என்றவன் மாதவியின் கையை பிடித்துக் கொண்டே வெளியேறி இருந்தான். கரிகாலன் உறுதியாக இருந்தாலும் மதுபாலா பேசியதில் அதிர்ந்து இருந்தது என்னவோ மாதவி மட்டும் தான்.
வீட்டுக்கு வந்ததுமே அவள் கரங்கள் நடுங்க தூங்கிக் கொண்டு இருந்த ஆதித்தை வருடியவள் "எனக்கு பயமா இருக்கு கண்ணா" என்று சொல்லும் போதே அவள் கண்ணில் இருந்து கண்ணீர் வழிந்தது. அப்போது தான் ஷேர்ட்டை கழட்டிக் கொண்டு இருந்த கரிகாலன் அவள் தோளில் கை வைத்து "ஏண்டி?" என்று கேட்க அவளோ கண்ணீருடன் கரிகாலனை ஏறிட்டு பார்த்தவள் "எனக்கு முதல் பையன் ஆதித் தான். அவனை யாருக்குமே விட்டு கொடுக்க மாட்டேன்" என்று சொன்னபடி மகனின் தலையை வருட, அவனோ "நான் இருக்க உனக்கென்ன பயம்., மதுபாலா ஒண்ணுமே பண்ண மாட்டா " என்று சொல்ல "அன்னைக்கு கொஞ்சதுல நம்ம உயிர் போய் இருக்கும்ல " என்று கேட்டாள் மாதவி. அதைக் கேட்டவனோ அவள் தலையை வருடி "அத மறந்திடும்மா, இனி உனக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துப்பேன்" என்று சொன்னான்.. அதற்கு அவளோ "உங்க மேல எனக்கு ரொம்ப நம்பிக்கை இருக்கு, ஆனா அவ அடிபட்ட பாம்பு.. சும்மா இருக்க மாட்டா, இன்னைக்கு அவ கண்ணுல அவ்ளோ வன்மத்தை பார்த்தேன்.. என்னையும் என் பையனையும் பிரிச்சிடுவா" என்று சொல்லும் போதே, அவளால் முடியாமல் விம்மி அழ ஆரம்பிக்க அவனோ "இந்த நிலையில ஏண்டி அழுகை? பிரிக்க நான் விடமாட்டேன் மாதவி என்ன நம்பு" என்று சொன்னான்.
அவளோ "இல்லங்க.. அவ பிரிக்கலானாலும் அவன் என்னை விட்டு பிரிஞ்சிட்டா என்ன பண்ணுறது? பெர்த் சர்டிபிகேட் தொடக்கம் எல்லாத்துலயும் அம்மான்னு என் பெயர் இல்லையே, அப்புறம் என்னை அவன் அம்மான்னு ஏத்துக்குவானா ?" என்று கேட்க கரிகாலனோ "ஹேய் அவனுக்கு அவன் அம்மாவோட குணம் தெரிஞ்சா அவங்க பக்கம் நிற்க மாட்டாண்டி.. " என்று சொன்னான். அந்த ஒற்றை வரியில் சமாதானம் ஆகி விடுவாளா அவள்?
அவனை நோக்கி கையை கூப்பியவள், கண்களில் கண்ணீருடன் "நீங்க வாழ்க்கையில நீதி தவறி நடக்கல்லன்னு தெரியும்.. ஆனா எனக்காக என் பையனுக்காக கை கூப்பி கேட்கிறேன்.. எல்லா செர்டிபிகேட்லயும் அவன் அம்மான்னு என் பெயர் இருக்கணும், அவனுக்கு மதுபாலான்னு ஒருத்தங்க இருக்கிறதே தெரிய வேணாம்.. அவனோட அம்மா நான் மட்டுமா தான் இருக்கணும்.. உங்களால, உங்க பதவியால இத எனக்காக செய்ய முடியும்னு தெரியும்... உங்க மனைவியா கேட்கல.. மகனை தன் கூட தக்க வச்சுக்க துடிக்கிற தாயா கேட்கிறேன் .. ப்ளஸ் எனக்காக இத பண்ணுவீங்களா? " என்று கேட்டவள் தன்னை அதிர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தவனின் காலில் விழ போனவள் "உங்க காலுல வேணும்னாலும் விழுறேன்" என்று அவன் காலை கஷ்டப்பட்டு மேடிட்ட வயிற்றுடன் விழ போக அவள் தோள்களை பற்றி தூக்கி எடுத்தவன் "ஹேய் என்ன பண்ற?" என்று சீறினான்.
நீதி தவறாதவன் அவன், இப்படியான போலி பத்திர வேலைகளுக்கு எதிராக இருப்பவன் அவன். லஞ்சம் வாங்குவதற்கு தடையாக இருப்பவன் அவன். அவனே இன்று நிலை தாண்டி நடக்க வேண்டிய கட்டாயம்.. அவன் மனம் ரணமாக வலித்தது.. அவள் உணர்வுகள் அவனுக்கும் புரிந்தது.. அவனை பொறுத்தவரை அவள் கேட்டது சின்ன உதவி தான். ஆனாலும் நேர்மையானவர்கள் முதன் முதல் தடம் மாறும் போது ஒரு வலி தோன்றும் அல்லவா? அந்த வலி அவனுக்கு.. ஆனாலும் மனைவிக்காக அவன் மகனுக்காக சுயநலமாக முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் "சரிம்மா, பண்ணிடலாம், நம்ம மேரேஜ் சர்டிபிகேட் பையனோட பெர்த் சர்டிபிகேட் எல்லாமே மாத்திடலாம்" என்று சொல்லும் போதே அவனுக்கு உயிருடன் மரித்த உணர்வு...
ஆனாலும் மாதவியின் கோரிக்கையை அவனால் தட்ட முடியவில்லை. அக்கினி சாட்சியாக அவளை கரம் பிடித்தவனுக்கு அவள் கண்ணீர் ரணமாக வலிக்க.,அவளுக்காக தடம் மாற யோசித்தான். ஆனால் பெண்ணவள் கோரிக்கை அத்துடன் நின்றுவிடவில்லை. மேலும் தொடர்ந்தவள் "நாம வேற ஊருக்கு போய்டலாம் கண்ணா, என்ன தான் மாத்தினாலும் இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் அவன் மதுபாலா பையன்னு தெரியும்.. ஒருத்தங்க சொன்னா கூட என் மேல அவனுக்கு வெறுப்பு வந்திடுமே. ..இந்த ஊரே வேணாம் கண்ணா. வேலை என் காலேஜ் எல்லாத்தையும் மாத்திட்டு மொத்தமா போய்டலாம்... " என்று கேட்டவள் அவன் வெற்று மார்பில் தஞ்சம் புகுந்து கண்ணீருடன் யாசகம் கேட்டாள். அவள் கண்ணீரோ அவன் மார்பை நனைக்க "பயந்து ஓட சொல்றியா மாதவி" என்று கேட்டான். அவளோ " துஷ்டனை கண்டால் தூர விலக சொல்லி இருக்காங்க. அதுக்கு பயம்னு அர்த்தம் இல்ல, நம்ம நிம்மதியா இருக்கணும்ன்னா இங்க இருந்து போயாகணும்.. அவ எப்படியாவது வாழட்டும்.. என்னால எப்போ என் பையனுக்கு உண்மை தெரியும்..எப்போ என்னை வெறுப்பான் , எப்போ அவ என் பையன அவ பக்கம் இழுப்பான்னு யோசிச்சு யோசிச்சு வாழ முடியாது.. எனக்கு நூறு குழந்தைங்க பிறந்தாலும் அவன் தான் என்னோட மூத்த பையன்..அதுல எந்த மாற்றமும் இல்ல. நான் அவனை எப்போவுமே விட்டுக் கொடுக்க மாட்டேன்.. உங்க கிட்ட நான் ஆசைப்பட்டு எதுவும் கேட்டதே இல்ல. முதல் முறை என் பையனுக்காக யாசகம் கேட்கிறேன்" என்று சொன்னவளை தன்னுடன் மேலும் இறுக அணைத்துக் கொண்டவன் "உன் இந்த நல்ல மனசுக்காகவே நீ கேட்கிற எல்லாமே பண்ணி கொடுப்பேன் மாதவி" என்று சொல்ல அவள் இதழ்களும் இப்போது கண்ணீருடன் சேர்த்து விரிந்து கொண்டன.
கரிகாலனும் மாதவி சொன்ன போல் அனைத்து மாற்றங்களையும் செய்தவன் குடும்பத்தினருடன் வடக்கு பக்கம் ட்ரான்ஸ்பர் எடுத்துக் கொண்டு சென்று விட, மதுபாலாவோ எம் எல் ஏ எலெக்ஷனில் போட்டியே இல்லாமல் அனுதாப ஓட்டுகளினால் ஜெயித்து இருந்தாள்.
எம் எல் ஏ பதவி வந்ததும் அவளுக்கு பொறுப்புகள் ஒரு பக்கம் அதிகரித்து விட, இதுவரை உடலை விற்று வியாபாரம் செய்தவள் இப்போது பொறுப்புகள் அதிகமாக அதை தள்ளி வைத்து விட்டு அரசியலில் முழு மூச்சாக ஈடுபட ஆயத்தமானாள். அவள் அழகும் இப்போது தொலைந்து போய் இருக்க, தனது முகத்தை பார்ப்பதே அவளுக்கு அருவருப்பாக இருந்தது. தனிமை ஒரு பக்கம்.. போலியான கால் மறுபக்கம் என்று அவள் உயிருடனேயே வலியை அனுபவித்தாலும் அரசியல் சாக்கடையில் நீந்த கற்று இருந்தாள். இந்த சந்தர்ப்பத்தில் அவள் கர்ப்பமாக இருப்பதும் அவளுக்கு தெரிய வந்தது. அதற்கு யார் தந்தை என்று அவளுக்கே தெரியாத நிலை.. கட்சி தலைமையை அடைய அவள் உடலை தானே லஞ்சமாக கொடுத்து இருந்தாள் பல பிரமுகர்களுக்கு..
அதை முதலில் கலைக்க நினைத்தவள் மனமோ "இந்த கட்சிக்கு எதிர்கால சந்ததி என் உதிரமா தான் இருக்கணும் " என்று யோசித்தவள் குழந்தையை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தாள் . ஆனால் இப்போது சமூகத்தின் முன்னே குழந்தையை பெற்றுக் கொண்டால் தனது எதிர்காலமே கேள்விக் குறியாகும் என்று நினைத்தவள் சிலமாதங்கள் சிகிச்சைக்கு வெளிநாடு சென்று முகத்தை சீர் செய்வதாக கூறி விட்டு புறப்பட்டவள் அங்கேயே யாரும் அறியாமல் குழந்தையையும் பெற்றுக் கொண்டாள்.
ஊருக்கு வந்து சில மாதங்களில் தனது சொந்த குழந்தையையே தத்தெடுத்தவள் அவனுக்கு மிதுன் என்று பெயரிட்டு அரசியல் வாரிசாக வளர்க்க ஆரம்பித்து இருந்தாள். சாக்கடையில் சந்தனம் வளருமா என்ன? அவனும் அவளை போலவே சாக்கடையாக தான் வளர்ந்தான்.
அதே சமயம் மாதவி அரவணைப்பில் சந்தனமாக வளர்ந்த ஆதித்துக்கு அவன் தாயின் அதே தந்திர குணமும், மூர்க்க குணமும் சேர்ந்து இருந்தாலும் தந்தையை போலவே உருவத்தில் மட்டும் அல்ல நேர்மையிலும் குணத்திலும் வளர்ந்து வந்தான்.
இருபத்தைந்து வருடங்கள் கழித்து,
"என்னடா சொல்ற?" என்று பதட்டத்துடன் கேட்டபடியே தூக்கத்தில் இருந்து எழுந்தான் ஆதித்.. பொறியியல் படிப்பை முடித்தவனுக்கு வேலையில் சேர கொஞ்சமும் விருப்பம் இல்லாமல் இருக்க ஒரே காரணம் அவனது அரசியல் ஆர்வம்.. அவன் ஆர்வத்தை பார்த்ததுமே மாதவிக்கு வந்து போனது என்னவோ மதுபாலா முகம் தான். உடனே ஒற்றை காலில் நின்று அவனை ஒரு வேலையில் சேர்த்து விட, வேண்டா வெறுப்பாக வேலைக்கு சென்றாலும் அன்னையின் வேண்டுகோளுக்கு இணங்க அந்த வேலையில் நிலைத்து இருந்தான். கல்லூரியில் கூட எலெக்ஷனில் நின்று யூனியன் லீடராக இருந்தவனுக்கு அரசியல் என்றால் அலாதி பிரியம்.. அவன் கூட படித்த அவன் நண்பன் தருண் , ஒரு அரசியல் வாதி பையன்.. அவன் வேறு யாரும் அல்ல மதுபாலாவின் எதிர் கட்சி தலைவர் மகன் தான் அவன்..
இப்போது காலையில் அழைத்தது கூட அவன் தான்... மேயர் எலெக்ஷனில் நிற்க இருந்த அவன் அண்ணா இப்போது ஆக்சிடெண்டில் இறந்து இருக்க, அதை சொல்ல தான் அழைத்தவன் அழுகையை எப்படி நிறுத்துவது என்று ஆதித்துக்கும் தெரியவில்லை. அதைக் கேட்டவனோ "இருடா நான் உன் ஊருக்கு வரேன்" என்று சொன்னபடி அனுமதி கேட்க சென்றது முதலில் கரிகாலனிடம் தான். அப்போது தான் அவன் தம்பி மாதேஷும் அங்கு வந்து அமர்ந்து இருக்க ஆதித்தோ "அப்பா, தருணோட அண்ணா இறந்துட்டாராம். நான் மதுரைக்கு போகணும்" என்று சொல்ல மாதேஷோ " ஹா ஹா அம்மா கிட்ட கேளுங்க,, அங்க தான் ரிமோர்ட் இருக்கு.. இது டம்மி ரிமோர்ட் " என்று சொல்லவே அங்கு வந்து சேர்ந்து இருந்தாள் மாதவி.
அடுத்த கணமே "எங்கடா போக போற?" என்று அதட்ட அவனோ "மதுரை அம்மா மதுரை,,தருண் அண்ணா இறந்துட்டார் " என்று சொல்ல மாதவியோ "கொன்னுடுவேன்... இங்க வேலைய பாரு.. உனக்கு பொண்ணு பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறன்" என்று சொல்ல ஆதித்தோ அவளை புருவம் சுருக்கி பார்த்தவன் "இப்போ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி கேட்டேனா? இறந்த வீட்டுக்கு கூட போக விடமாடீங்களா? என்ன பழக்கம் அம்மா இது?" என்று கொஞ்சம் ஆதங்கமாகவே கேட்டான். அதைக் கேட்ட மாதவி கொஞ்சம் அதிர்ந்தாலும் அவனை அங்கே அனுப்ப கூடாது என்று உறுதியாக இருந்தவள் "நீ சின்ன பையன்ப்பா உனக்கு ஒண்ணுமே தெரியாது" என்று சொல்ல முதல் கையில் இருந்த போனை தூக்கி எறிந்ததில் அது சுவரில் பட்டு சுக்கு நூறாக உடைந்தது..
மாதேஷோ "போன் நம்பர் 25,, கரெக்டா அப்பா?" என்று கேட்க கரிகாலனோ "மாதவி" என்று அழைத்தவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்.
ஆதித்தோ "என்ன நினைச்சுட்டு இருக்காங்கடா இவங்க? எப்போ கேட்டாலும் அங்க போகாதே இங்க போகாதேன்னு சொல்ல வேண்டியது..." என்று சீறியபடி தலையை கோதியவன் மாதேஷ் பக்கத்தில் அமர்ந்தான்.
ஆதித்துக்கு அளவு கடந்த கோபம் வந்தாலும் அதை வார்த்தையால் வெளிக்காட்டினால் அவர்கள் மனம் உடைந்து விடும் என்று யோசிப்பவனுக்கு மனதை விட பொருட்கள் பெறுமதி அற்றவை என்ற உண்மை தெரியும்.. அதனாலேயே போனை உடைத்து கோபத்தை வெளிப்படுத்தியவன் ஒரு வார்த்தை பேசவில்லை.
ஆனால் அவன் சிவந்த கண்களும் கழுத்தில் புடைத்த நரம்புகளும் அவன் கோபத்தை எடுத்துக் காட்டின.
உள்ளே வந்த மாதவியிடம் "நீ பண்ணுறது நல்லா இருக்கா மாதவி?" என்று கேட்க அவளோ "அவன் அங்க போக கூடாது கண்ணா. எனக்கு அவன் கோபம் புரியுது.. ஒரு இறந்த வீட்டுக்கு போக விடலைன்னா எப்படி இருக்கும்னு தெரியுது.. ஆனா என் பையன் எனக்கு வேணும்.." என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்க அவனோ "உன் வளர்ப்புல உனக்கு நம்பிக்கை இல்லையா?" என்று கேட்க அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள் மாதவி.. மேலும் தொடர்ந்த கரிகாலன் " அவன் மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை ஏண்டி உனக்கு இல்ல? அவன் கோபக்காரன் ஆனா நியாயமானவன்.. அவனை விடு.. இல்லன்னா அவனுக்கு இப்பவே உன் மேல வெறுப்பு வந்திடும்..மகன் மகன் என்று சொல்லி அவன் சுதந்திரத்தை பறிக்காத" என்று சொல்ல அவளுக்கு கண்களை கரித்துக் கொண்டு வந்தாலும் அவன் சொன்னது நியாயமாக பட, ஆமோதிப்பாக தலை ஆட்டினாள்.
அன்று மாலையே அவன் புறப்பட, அவனுக்கு அறிவுரை சொல்லியே அவன் காதில் ரத்தம் வராத குறை தான்.. பிளைட் ஏறி அவன் தனது ஊரில் காலடி வைத்த கணம் , தன் முன்னே இருந்த மிதுனிடம் "டேய் ஏண்டா அவனை போட்ட? அது தான் உன்னை நான் ஜெயிக்க வைக்கிறேன்னு சொன்னேனே... இப்போ அவங்க கட்சி இத வச்சே வாக்கு கேட்பாங்கடா... நீ ஒரு முழு முட்டாள் " என்று சீறினாள் மதுபாலா அப்போதைய மினிஸ்டர் ஆக இருந்தவள். உடனே மிதுன் "அம்மா அவனுக்கு நம்ம நதீகா மேல கண்ணு .. அது தான் போட்டேன்... " என்று சொல்ல அங்கிருந்த நதீகாவின் அப்பா " பாண்டியன் " எம் எல் ஏ. "மேடம் பையனுக்கு காதல் முத்தி போச்சு போல. சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்கலாம்" என்று சொல்ல அவளோ "அவனை வெட்டியா கல்யாணம் பண்ணி கொடுக்க எனக்கும் விருப்பம் இல்ல, முதலில மேயர் ஆகட்டும். அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணம்" என்று சொன்னாள்.
நதீகா பெயருக்கேற்ற அழகும் திமிரும் உடையவளுக்கு ஆண்கள் அனைவரும் தனது அடிமை என்ற ரீதியில் இருப்பவள்.. மிதுன் ஆசைப்பட்ட பெண்களை அடைந்து விட்டாலும் அவன் திருமணம் செய்ய நினைத்தது என்னவோ எந்த ஆண் மகனின் மூச்சு காற்று கூட படாத நதீகாவை தான்.. அவளிடம் நேரில் பேசினால் மினிஸ்டரின் மகன் என்றும் பாராமல் செருப்பை கழட்டி அடிப்பாள் என்று தெரிந்தே தாய் மூலம் திருமணம் பேசி முடித்து இருந்தான்.
இதில் ஒரு துரதிஷ்டம் நதீகாவுக்கு இந்த விஷயத்தை பாண்டியன் பயத்திலேயே சொல்லவில்லை;.. அவள் பாண்டியனின் மகள் மட்டும் அல்ல, மதுபாலாவின் பெர்சனல் செக்ரீடரியும் கூட... அவள் கெட்டித்தனத்தை பார்த்தே மதுபாலா அவளை மருமகளாக்க சம்மதித்து இருந்தாள்.
இப்படியான நேரத்தில் தான் ஆதித் அந்த மண்ணை மிதித்து இருந்தான்.
தாய் மகனின் இடையே பாசப் பிணைப்பு உருவாகுமா இல்லை தர்ம யுத்தம் உருவாகுமா என்று அடுத்த பாகத்தில் பார்ப்போம்..