soniyaravi
Member
Nice
Superஅத்தியாயம் 18
அவனுக்கே தான் பேசிக் கொண்டு இருப்பது அதிகப்படியாக தோன்றியதோ என்னவோ, "சரி விடு, ஏதாவது சாப்பிட போகலாம், குழந்தைக்கு" என்று இழுத்தபடி அவளை பார்த்தான்...
"பால் கொடுக்கணும்" என்றாள் அவள்...
அவனோ பெருமூச்சுடன் காரை செலுத்தினான்...
அவனது கார் கடற்கரையை வீதியால் சென்றது...
அவளோ கடல் அலையை பார்த்துக் கொண்டே அமர்ந்து இருந்தாள்.
கடல் அலையின் ஆர்ப்பரப்பில் அவள் மனம் அமைதியடைந்தது...
அவன் கார் வந்துநின்றது என்னவோ பெரிய பங்களா முன்னே தான்...
அவளோ அந்த பெரிய பங்களாவை விழி விரித்து பார்க்க, "என்னோட பீச் ஹவுஸ்" என்று சொல்லிக் கொண்டே இறங்கினான்...
கரிகாலனும் பணத்துக்கு குறைவு இல்லாதவன் தான்...
ஆனால் வீரராகவன் பக்கத்தில் கூட நிற்க முடியாது அவனால்...
அவளுமே குழந்தையை தூக்கிக் கொண்டே இறங்கியவள், "எங்க தான் உங்களுக்கு ப்ராப்பர்டி இல்ல?" என்று மனதில் பட்டதை கேட்டு விட்டாள்.
சட்டென திரும்பி அவளை ஆராய்ச்சியாக பார்த்தான்...
அந்த பார்வை கொஞ்சம் வித்தியாசம் தான்...
சந்தேகம் கலந்த ஒரு பார்வை...
சட்டென பார்வையை மாற்றிக் கொண்டே, மென்மையாக புன்னகைத்தான்...
இன்று தான் அவன் இப்படி சிரித்து பார்க்கின்றாள்...
அவளுக்கே வியப்பாக இருந்தது...
ஆனாலும் கேட்கவில்லை...
அவனோ பெருமூச்சுடன் முன்னே நடந்தவன், "வாழ்க்கைல இலக்கே இல்லாம ஓடிக் கொண்டு இருந்தேன்... அளவுக்கு அதிகமாகவே சம்பாதிச்சுட்டேன்... இனி எனக்குன்னு குழந்தை இருக்கா... சோ இனி நிதானமா ஓடலாம்னு இருக்கேன்" என்றான்...
அவளோ, "பணம் எப்போதுமே சந்தோஷத்தை கொடுக்காதுல" என்று சொல்லிக் கொண்டே அவனை தாண்டி நடக்க, அவனோ சட்டென்று நடையை தளர்த்தி அவள் முதுகை ஒரு கணம் வெறித்துப் பார்த்து விட்டு நடக்க தொடங்கியவன், "அனுபவமா?" என்று கேட்டான்... அவளோ அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்தவள், "ம்ம் அனுபவம் தான்... அம்மா அப்பா கூட இருக்கும் போது இருந்த சந்தோஷம், என் குழந்தை கூடவும் கீர்த்தனா கூடவும் மாச சம்பளம் எடுத்துட்டு வாழ்ந்த நேரம் இருந்த சந்தோஷம், என் முதல் கல்யாணத்துலயும் கிடைக்கல, இப்போவும் கிடைக்கல" என்றாள்.
வார்த்தையால் அவனை அடித்து விட்டாள்...
தன்னோடு இருக்கும் போது சந்தோஷம் இல்லை என்று அவள் சொன்னதுமே சட்டென்று வலித்தது... கோபமும் வந்தது... அடக்கிக் கொண்டே, அவள் அருகே நடந்தவன், "உன் விதி அப்படி" என்று மட்டும் சொல்லிக் கொண்டே, அவளை தாண்டி சென்று வாசல் கதவை திறந்தான்...
அவள் இதழ்களில் மெல்லிய விரக்தி புன்னகை தவழ, அவளும் அவனை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்...
அவனைக் கண்டதுமே அங்கே வேலை செய்பவன் ஓடி வந்தான்...
வீரராகவனோ வீட்டை கண்களால் ஆராய்ந்து விட்டு, "அந்த ரூமை யூஸ் பண்ணிக்கோ" என்று கையை நீட்டி ஒரு அறையை காட்டியவன், ஹாலில் கால் மேல் கால் போட்டு அமர, வேலை செய்பவனோ ஏ சி யை போட்டு விட்டு, "சார் ஏதும் குடிக்க கொண்டு வரட்டுமா?" என்று கேட்டான்...
"ஒரு ஆப்பிள் ஜூஸ்" என்று சொல்லிக் கொண்டே, மார்புக்கு குறுக்கே கையை கட்டிக் கொண்டு சோபாவில் சாய்ந்து கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.
இதே சமயம் அறைக்குள் வந்ததுமே குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு, குளியலறைக்குள் சென்ற அக்ஷயாவோ முகத்தை நீரால் அடித்துக் கழுவி விட்டு குழந்தைக்கும் கொண்டு வந்த உடையை மாற்றி விட்டு வெளியே வந்தாள்.
அங்கே வீரராகவன் கண்களை மூடிக் கொண்டே அமர்ந்து இருக்க, அவளுக்கோ அலுவலகத்தில் இருக்கும் அளவுக்கு பயம் இப்போது இருக்கவே இல்லை...
இன்று அவன் பேச்சு கொஞ்சம் ஸ்னேகபூர்வமாக இருப்பது போல உணர்ந்தாள்...
அவன் முன்னே இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
அவனிடம் அசைவில்லை...
தூங்கி விட்டானோ என்று தோன்றியது...
குரலை செருமினாள்...
"மேசைல இருக்கிற ஜூஸை குடி" என்றான்...
கண்களை திறக்கவில்லை, அப்படியே அமர்ந்து இருந்தான்...
அவளுக்கும் தாகமாக இருந்து இருக்க வேண்டும்...
மறுபேச்சு பேசாமல் அதனை எடுத்து குடித்தாள்...
அவள் குடித்து முடித்து, கிளாஸை வைத்த கணத்தில் சட்டென கண்ணை திறந்தான்.
அப்படியே சோஃபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டே, கண்களை திறந்து அவளை பார்த்தான்...
அவளும் அவனை பார்த்துக் கொண்டே, குழந்தையை அணைத்துக் கொள்ள, "ரெஸ்ட் எடுக்கணும்னா எடு... வன் ஹவர் ல பக்கத்துல இருக்கிற ரெஸ்ட்டாரெண்ட் போகலாம்" என்றான்...
அவளுக்கும் சற்று களைப்பாக இருக்க, "தனிஷாவுக்கும் தூக்கமா வருது, தூங்க வச்சிட்டு வரேன்" என்று சொல்லிக் கொண்டே, குழந்தையை தூக்கிக் கொண்டே அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தவள், அப்படியே அவளும் குழந்தையை அணைத்துக் கொண்டே கண்ணயர்ந்து போனாள்.
ஒரு மணி நேரம் கடந்து இருக்கும்...
வீரராகவன் தனது அறைக்குள் இருந்து வந்து வெளியே நேரத்தைப் பார்த்தவனோ, அக்ஷயாவின் அறையை நோக்கி வந்தான்...
சட்டென கதவை திறக்க போனவனுக்கு அன்று கதவை திறக்கும் போது பால் கொடுத்துக் கொண்டு இருந்தது நினைவு வர, சட்டென்று கதவின் குமிழில் இருந்து கையை எடுத்தவன் கதவை தட்டினான்...
அப்படியே கண்ணயர்ந்து போன அக்ஷயாவோ சட்டென்று கண்களை திறந்தாள்...
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழுந்தவளோ, தன்னை ஒரு கணம் கண்ணாடியில் பார்த்து கலைந்து இருந்த முடியை சரி செய்து கொண்டே கதவை திறந்தாள்...
வாசலில் நின்ற வீரராகவனோ, "பாப்பா எந்திரிச்சிட்டாளா?" என்று கேட்டுக் கொண்டே, அவளை தாண்டி எட்டி உள்ளே பார்க்க, அவளோ, "தூங்கிட்டு இருக்கா" என்றாள்...
"சரி தூக்கிட்டு வா" என்று சொல்லிக் கொண்டே, அவன் அங்கிருந்து நகர்ந்து வாசலை நோக்கி செல்ல, அவளும் குழந்தையை தூக்கிக் கொண்டே, அவனை பின் தொடர்ந்து நடந்தாள்...
குழந்தை விழித்து இருந்தால் கூட ஒற்றைக் கையால் அவள் பிடித்துக் கொண்டு கார் கதவை திறந்து விடுவாள்...
ஆனால் தூங்கிக் கொண்டு இருக்கும் குழந்தையை இரு கைகளாலும் பிடித்துக் கொள்ள வேண்டிய நிலை அவளுக்கு...
அதனால் கார் அருகே வந்தவளுக்கு கதவை திறக்க முடியாமல் போனது...
அவள் அருகே வந்த வீரராகவனோ அவளுக்காக கதவை திறந்து விட, அவளோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.
"ஷாக் ஆகாம ஏறு, இப்படியான சந்தர்ப்பம் உனக்கு எப்போவாவது தான் கிடைக்கும்" என்று ஒரு கிண்டல் தொனியில் சொல்ல, அவளோ அவனை பார்க்காமல் காரில் ஏறிக் கொண்டாள்.
அவனும் கார் கதவை சாத்தி விட்டு மறுபக்கம் வந்து காரில் ஏறிக் கொண்டே காரை எடுத்தான்...
அவன் வீட்டிற்கு சற்று தள்ளி தான் ரெஸ்டாரண்ட் இருந்தது...
அதுவரை மௌனம்...
ரெஸ்ட்டாரெண்டில் தான் இருவரும் இறங்கிக் கொண்டார்கள்...
இப்போதும் அவன் தான் கதவை திறந்து விட்டான்...
அவளோ குழந்தையை அணைத்தபடியே அமர்ந்து இருக்க, அவனோ தனக்கு தேவையானதை ஆர்டர் செய்து விட்டு, "உனக்கு என்ன வேணும்?" என்று கேட்டான்...
அவளும், "எதுன்னாலும் ஓகே சார்" என்று சொல்ல, "ரெண்டு பிரைட் ரைஸ்" என்று சொல்லி விட்டு அவளை பார்த்தவன், "நான் குழந்தையை வச்சுகிறேன்... நீ சாப்பிடு, அப்புறம் நான் சாப்பிட்டுக்கிறேன்" என்றான்...
"இல்ல சார் நீங்க சாப்பிடுங்க, நான் வெய்ட் பண்ணி சாப்பிட்டுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இருவருக்குமான உணவும் வந்து சேர்ந்தது...
அவனும், "ஓகே" என்று சொல்லி விட்டு சாப்பிட தொடங்கி விட, அவளோ குழந்தையை அணைத்துக் கொண்டே சுற்றி சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
அவளுக்காக வேகமாக சாப்பிட்டு முடித்தவனோ, குழந்தையை வாங்க கையை நீட்ட, அவனிடம் குழந்தையை கொடுத்து விட்டு அவளும் சாப்பிட்டாள்.
அவனுக்கும் அவள் முன்னே இருந்து அவளை தொந்தரவு படுத்த ஒரு மாதிரி இருந்தது...
அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை குழந்தையை தூக்கிக் கொண்டே நடக்க ஆரம்பித்து விட்டான்.
அவளும் சாப்பிட்டு முடித்து கையை கழுவி முடிக்க, அவனும் அவள் முன்னே வந்து அமர்ந்தவன், குழந்தையை அவளிடம் நீட்டினான்...
அவளும் குழந்தையை பெற்றுக் கொண்டதுமே பர்சில் இருந்த பணத்தை எடுத்து பில்லை கட்டினான்...
அவளோ, "இனி வீட்டுக்கு தானே போறது?" என்று கேட்க, அவனோ கையில் இருந்த ஆப்பிள் வாட்சில் நேரத்தைப் பார்த்து விட்டு, "என்ன அவசரம்?" என்று கேட்டுக் கொண்டே, பர்ஸை பின் பாக்கெட்டில் வைத்தபடி எழுந்தான்...
அவனுடன் கூட எழுந்து கொண்டவள் மனமோ, "இனி எங்க எங்க போக போறோமோ?" என்று புலம்பிக் கொண்டது...
அவனோ அவளை அழைத்துக் கொண்டே வெளியே வந்து கார் கதவை திறந்து விட்டவன், அவனும் காரில் ஏறிக் கொண்டான்...
அவளுக்கோ வீட்டிற்கு போய் விட்டால் சற்று நிம்மதி போல இருந்தது...
அவனுடன் இவ்வளவு நேரம் இருப்பது அவளது இயல்பை தொலைத்த உணர்வை கொடுக்க, என்ன செய்வது என்று தெரியாத தவிப்பு அவளிடம்...
அலுவலகத்தில் கூட அவன் மீட்டிங் என்று அதிகமாக வெளியே சென்று விடுவான்... அதனால் அவளுக்கு ஒரு இடைவெளி கிடைக்கும்...
ஆனால் இன்று மொத்தமாக அவன் அருகிலேயே இருக்க அவளுக்கு அது என்னவோ கடினமான விடயமாக தோன்றியது....
அவன் அதனை உணர்ந்தாலும் அதனை பற்றி எல்லாம் கவலைப்படாமல், காரை அந்த சுற்றுப் புற சூழலில் செலுத்தினான்...
போகும் வழியில், "பீச் போயிட்டு வீட்டுக்கு போவோம்" என்று சொன்னான்.
அவளும், சம்மதமாக தலையாட்டினாள்...
இந்த சமயத்தில் தனிஷாவும் கண் விழித்து இருக்க, அவளும் விழிகளை உருட்டி உருட்டி வெளியே பார்த்துக் கொண்டே வந்தாள்.
அக்ஷயாவும் வெளி அழகை ரசித்துக் கொண்டே வர, நீண்ட நேரம் கடற்கரை சாலையில் கார் ஓட்டினான் வீரராகவன்...
நேரமும் ஐந்து மணியை நெருங்க, அவன் காரும் கடற்கரை ஓரம் நின்றது...
அவனோ, "குழந்தைங்களை பீச்ல விளையாட விடணும்..." என்று சொல்லிக் கொண்டே காரில் இருந்து இறங்கியவன் அப்படியே நடந்து வந்து அவளது கார் கதவை திறந்து விட்டு, குழந்தையை வாங்கிக் கொண்டான்...
அவளும் குழந்தையை கொடுத்து விட்டு காரில் இருந்து இறங்கியவள் அவனுக்கு சற்று பின்னால் நடக்க தொடங்கினாள்...
மாலை நேரம், காற்று பலமாக வீசிக் கொண்டு இருந்தது...
கடல் அலைகள் ஆக்ரோஷமாக கரையை நோக்கி பாய்ந்து வந்து மொத்தமாக தரையை வருட முடியாமல் திரும்பிச் சென்றன...
மேகங்கள் வானை முத்தமிட்டு ஆக்கிரமிக்க ஆரம்பித்து இருக்க, சூரியனும் தனது கதிர்களை மேகங்களுக்குள் மறைத்துக் கொண்டது...
"மழை வர்ற போல இருக்குல்ல" என்றான் அவன்...
அவளும் சுற்றி பார்த்து விட்டு, "ம்ம்" என்று சொல்ல, மூவரின் முகத்திலும் மெல்லிய காற்று வீச, குழந்தைக்கோ குதூகலம்...
பொக்கை வாயை திறந்து சிரித்துக் கொண்டாள்...
அவள் சிரிப்பை ரசித்துக் கொண்டே, அவள் நெற்றியின் பக்கவாட்டாக முத்தம் பதித்தான் அவன்...
அவளுக்கும் குழந்தையை அணைக்க கைகள் பரபரத்தன...
ஆனால் இப்போது அவனிடம் இருந்து குழந்தையை வாங்க முடியாது என்பதால் மௌனமாக இயற்கையை ரசித்துக் கொண்டே நின்று இருந்தாள்.
அவனோ கடலை நோக்கி நடக்க ஆரம்பிக்க, அருகே நின்று இருந்தவளோ பதறி விட்டாள்...
பதட்டத்தில் சட்டென அவன் டீ ஷேர்ட்டின் பின் பக்கத்தை பிடித்து விட, அவனுக்கோ அதிர்ச்சி...
அவள் இப்படி அத்து மீறி அவனிடம் நடந்து கொள்கின்றாள் என்று அதிர்ச்சி...
சட்டென திரும்பி டீ ஷேர்ட்டை பிடித்து இருந்த அவள் கையை பார்த்து விட்டு அவளை ஏறிட்டு பார்த்தான்...
விழிகளில் ஒரு அழுத்தம்...
"அலை ரொம்ப அடிக்குது" என்றாள் தயக்கமாக...
"சரி குழந்தையை பிடி, நான் காலை கழுவிட்டு வரேன்" என்றவன் குழந்தையை அவளிடம் நீட்ட, குழந்தையை வாங்கியவளோ, "இல்ல வேணாமே" என்றாள் தழுதழுத்த குரலில்...
"எனக்கு ஸ்விமிங் தெரியும்" என்றான் அவன்...
"ஆனாலும்" என்று அவள் இழுக்க, "மைண்ட் யோர் பிசினஸ்" என்று சொல்லி விட்டான்...
அவளுக்கோ ஒரு மாதிரி ஆகி விட்டது...
இது தான் உன் எல்லை என்று முகத்தில் அடித்த போல அவன் உரைத்த பிறகு, அவளால் என்ன செய்ய முடியும்...
மௌனித்துப் போனாள்.
அவனோ கடலை நோக்கி செல்ல முற்பட, அவளுக்கோ மனதில் ஒரு வித அழுத்தம்...
சொன்னாலும் கேட்க மாட்டான்...
சொல்லும் உரிமையும் அவளுக்கு அவனிடத்தில் இல்லை...
எச்சிலை விழுங்கிக் கொண்டே வானத்தை பார்த்தாள்.
அவள் பார்வையின் இறைஞ்சல் மேகத்துக்கும் புரிந்து இருக்கும் போல...
சட்டென ஒரு துளி அண்ணாந்து பார்த்துக் கொண்டு இருந்தவளது கன்னத்தில் விழுந்தது...
அவளை அறியாமல் அவள் இதழ்கள் புன்னகைக்க, "மழை வருது" என்று சத்தமாக சொன்னாள்.
அவனும் சட்டென நின்றவன் மேலே அண்ணாந்து பார்க்க, அவன் நெற்றியிலும் ஒரு மழை துளி...
குழந்தை நனைந்து விட கூடாது என்ற எண்ணமே அவனுக்கு...
வேகமாக அவர்களை நோக்கி சென்றவனோ, "வா கிளம்பலாம்" என்று சொல்லிக் கொண்டே, அவளிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டே வேகமாக நடந்தான்...
அவன் வேக எட்டுக்களுக்கு அவளால் தான் ஈடு கொடுக்கவே முடியவில்லை...
கிட்டத்தட்ட அவனை நோக்கி ஓடி வந்தாள்...
மழையின் வேகம் அதிகரிக்க, அவனோ குழந்தையின் தலையில் கையை வைத்து தடுத்தாலும் நடக்க வேண்டிய தூரம் அதிகம்...
சிறிது நேரம் யோசித்தவன், சட்டென குழந்தையை அருகே வந்த அக்ஷயாவிடம் நீட்டி, தனது டீ ஷேர்ட்டை கழட்ட, அவள் தான் அதிர்ந்து போனாள்.
"கவர் பண்ணிக்கோ" என்று குழந்தையின் தலையில் டீ ஷேர்ட்டை போட்டவன் அவளை பார்க்க, அவளோ சட்டென அவனில் இருந்து பார்வையை எடுத்தவள் தலையை குனிந்து கொண்டே, குழந்தையை அணைத்தபடி வேகமாக நடக்க தொடங்கினாள்.
அவன் இப்போது பின்னால் தான் நடந்து வந்தான்...
மழை நீர் தாராளமாக அவனை ஸ்பரிசித்தது...
படிக்கட்டு தேகம் அவனுக்கு...
மழை நீர் கூட அவன் மேனியில் நிற்க வெட்கப்பட்டுக் கொண்டே வழுக்கிக் கொண்டே செல்ல, அவனோ ஒற்றைக் கையால் தனது தலை முடியை அழுந்த கோதிக் கொண்டான்...
அவனை இந்த நிலையில் பார்த்ததில் இருந்த அக்ஷயாவுக்கு பேயறைந்த உணர்வு தான்... த்ரீ குவாட்டர் ஜீன்ஸை அவன் கொஞ்சம் உயர்த்தி போட்டு இருக்கலாம் என்று அவள் நினைக்கும் அளவுக்கு அவளுக்குள் அதிர்ச்சி...
அவனுக்கு தொந்தி இருந்து இருந்தால் ஜீன்ஸ் வயிற்றில் நின்று இருக்குமோ என்னவோ... அதுவும் படிக்கட்டு தேகத்தில் நிற்க முடியாமல் வழுக்கிக் கொண்டே இடை தாண்டி சென்று இருக்க, அதனை கவனித்த அவளுக்கு தான் பேரதிர்ச்சி...
அது தான் இப்போதைய ட்ரெண்ட் ஆக இருப்பதால் அவனும் அதனை பற்றி கவலைப்படவில்லை...
அவன் டீ ஷேர்ட் குழந்தையை மட்டுமே போர்த்தி இருக்க, அவள் தலையும் நனைந்தது...
அதனை கவனித்தவனோ என்ன நினைத்தானோ தெரியவில்லை, சட்டென அவள் அருகே வந்து டீ ஷேர்ட்டை நகர்த்தி அவள் தலையிலும் போர்த்தி விட, அவளோ அதிர்ந்து அவனை திரும்பி பார்த்தாள்.
இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டன...
சட்டென ஒருங்கே இருவரும் விழிகளை அகற்றிக் கொள்ள, அவர்கள் காரும் நெருங்கி இருந்தது... அவன் தான் அவளுக்காக கார் கதவை திறந்து விட்டான்...
அவளும் குழந்தையுடன் ஏற, அவனும் ஏறிக் கொண்டான்...
அவளுக்கோ சங்கடம்...
இந்த நிலையில் அவனைப் பார்க்க சங்கடம்...
அவனோ உள்ளே ஏறியதுமே, அவள் தன்னிடம் இருந்த அவன் டீ ஷேர்ட்டை அவனிடம் நீட்டினாள்...
அவனை பார்க்கவில்லை... எங்கோ பார்த்துக் கொண்டே நீட்டினாள்...
அதனை அவன் கண்டு கொண்டாலும் எதுவும் பேசாமல் டீ ஷேர்ட்டை வாங்கிக் கொள்ள, அவளோ பின் சீட்டில் இருந்த குழந்தையின் பையை எடுக்க முற்பட்டாள். அதற்குள் தான் குழந்தையின் டவல் இருந்தது...
தனிஷாவும் சற்று நனைந்து இருக்க, அவளை துவட்ட வேண்டிய கட்டாயம்...
சட்டென கையை நீட்டி பின்னால் இருந்த பையை எடுக்க முற்பட்டாள் அக்ஷயா... அவளுக்கோ அது எட்டவே இல்லை...
ஒற்றைக் கையில் குழந்தையை வைத்துக் கொண்டே அதனை எடுப்பது கஷ்டமாக இருந்தது...
அவளை பார்த்த வீரராகவனோ, "வெய்ட் நான் எடுத்து தரேன்" என்று சொல்லிக் கொண்டே, சட்டென பின்னால் கையை நீட்ட, இருவரின் முகமும் மூச்சு காற்று படும் அளவுக்கு நெருங்கியது மட்டும் அல்லாமல், அவள் கன்னமோ அவன் வெற்று மார்பில் உரச, அவளுக்கோ மேனியில் மின்சாரம் பாய்ந்த உணர்வு... சட்டென நிமிர்ந்து அமர்ந்து விட்டாள்.
அவனும் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும் என்று நினைக்கவே இல்லை...
அவனுக்கும் சங்கடம் தான் இது...
ஆனால் காட்டிக் கொள்ளாமல் பையை எடுத்து அவளிடம் நீட்டியவன், "ரெடி ஆனதும் சொல்லு காரை எடுக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே, ஒற்றைக் கையால் தலையை கோதிக் கொண்டான்...
அவளும் குழந்தையை துவட்டிக் கொண்டு இருக்க, அவனுக்கே வெற்று மார்புடன் அவள் அருகே அமர்ந்து இருக்க சங்கடமாக இருந்து இருக்க, வேண்டும்...
ஈரம் என்றாலும் பரவாயில்லை என்று அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாது டீ ஷேர்ட்டை அணிந்து கொள்ள, அவளுக்கோ அப்போது தான் பெருமூச்சு வந்தது...
அந்த பெருமூச்சையும் அவன் கவனிக்க தவறவே இல்லை...
குழந்தைக்கு உடையையும் அவள் மாற்றி இருந்தவள், அவனை பக்கவாட்டாக திரும்பி பார்த்து, "ஓகே" என்றாள். அவனும் அதன் பிறகு தான் காரை எடுத்தான்...
வீட்டிற்கு செல்லும் வரை இருவரிடமும் மறுபடியும் மௌனம் தான்...