ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 17

pommu

Administrator
Staff member
அத்தியாயம் 17

விஷ்வா-மித்ரா திருமணத்துக்கு கல்யாண பத்திரிக்கை எல்லாம் அடித்து உற்றார் உணவினர்களை அழைக்கும் வேலையில் குடும்பத்தினர் அனைவரும் மூழ்கி இருந்த சமயம் திருமணத்துக்கு இன்னும் மூன்று நாள் என்ற நிலையில் மகாலிங்கம் அரசியல் தலைவர்களுக்கு பத்திரிக்கை கொடுக்க தனது வாகனத்தில் சென்றார். அப்போது யாரும் எதிர் பாராத விதமாக புல்லெட்டில் விரைந்து வந்த கெளதம் அவரின் ஜீப்பின் முன்னால் தனது வண்டியை நிறுத்தினான்.

அவரை நோக்கி ஓடிச் சென்றவன் கண நேரத்தில் காரை திறந்து அவரை இழுத்து வெளியே தள்ளியவன், "எவெரி படி மூவ்... இதுக்குள்ள பாம் இருக்கு" என்றபடி அனைவரையும் அங்கிருந்து கண நேரத்தில் அகற்றினான்.

அவன் ஏற்கனவே சொல்லி இருந்ததால் வெடிகுண்டை செயலிழக்க செய்யும் வீரர்கள் சற்று நேரத்தில் அங்கு வந்து சேர அவர்கள் விரைந்து செயல் பட்டு குண்டை செயலிழக்க செய்தனர்.

நடந்ததை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த மகாலிங்கம் நெகிழ்ச்சியில் கௌதமை கட்டி அணைத்து, "ரொம்ப நன்றிப்பா ரெண்டு தரம் என் உயிரை காப்பாத்தி இருக்க..." என்றார். அது தான் அரசியல் சூழ்ச்சி. அந்த சந்தர்ப்பத்தில் மகாலிங்கத்துக்கு அவர் உயிர் காக்க ஒருவன் தேவைப்பட்டான். இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் தன் உயிருக்கு இரு தடவை ஆபத்து வந்ததில் இருந்து அதிர்ந்தவர் தன்னை காப்பாற்றிய கௌதமிடம் நட்பு பாராட்ட தொடங்கினார். அவருக்கு அவர் மானத்தை விட உயிர் தான் பெரிதாக பட்டது. அப்போதே கௌதமை கொல்லும் எண்ணத்தை கை விட்டவர் தன்னுடனேயே அவனை வைத்திருக்க முடிவு செய்தார்.

தன்னை கொல்ல முயற்சி செய்வது யார் என்று அவர் அறிந்துக் கொள்ள முடியாதளவு சாணக்கியனின் திட்டங்கள் அமைந்திருந்தன.

இவ்வளவு தூரம் நடந்த பிறகு வீட்டிலும் தனக்கு பாதுகாப்பு இருக்காது என்று பயந்தவர் கௌதமிடம், "என் கூட வந்து இருப்பா...விஷ்வா கல்யாணமும் வருது..." என்று போலியாக சிரித்தபடி இழுக்க அவர் முகத்தை பார்த்து கேள்வியாக யோசித்தவன், சாணக்கியன் திட்டத்தை பக்கத்தில் இருந்து முறியடிப்பது இலகுவாக பட, "சரி மாமா" என்றபடி அவருடன் பத்திரிக்கை கொடுக்கச் சென்று விட்டு நேரே தன் வீட்டுக்குச் சென்று தேவையான உடைகளை எடுத்துக் கொண்டு அவருடனேயே வீட்டுக்கு திரும்பினான்.

முன்னால் அடியாட்களுடன் பேசிக் கொண்டிருந்த சாணக்கியன் இருவரும் ஒன்றாக வருவதை பார்த்து அதிர்ந்து தான் போனான். கெளதம் காப்பாற்றிய விடயம் அறிந்தாலும் அவன் தனது வீட்டிலேயே வந்து தங்குவான் என்று சாணக்கியன் எதிர் பார்க்கவே இல்லை.

சன் கிளாசை உயர்த்தி எப்படி என புருவம் உயர்த்தி சாணக்கியனிடம் கண்களால் கேட்டு அவனை பார்த்து ஒற்றை கண்ணை அடிக்க சாணக்கியனோ அவனை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றான்.

வெளியில் நாண்பர்களாகவும் உள்ளுக்குள் எதிரிகளாகவும் சிலர் எனவும் வெளியில் எதிரிகளாகவும் உள்ளே நண்பர்களாகவும் சிலர் எனவும் கண்ணாமூச்சி ஆட்டம் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்தது.

மகாலிங்கம் தனது அறைக்குள் சென்றதும் கௌதமோ நேரே சாணக்கியன் அறைக்குள் சென்று கட்டிலில் படுத்து தூங்கினான்.

கெளதம் தனது அறைக்குள் செல்வதை பார்த்தவன் அவன் பின்னால் சென்று அறைக்கதவை சாத்தி விட்டு, "நீ ஏன்டா இங்க படுக்குற? யாரும் பார்த்தா என்ன நினைப்பாங்க? பேசாம கயல் ரூமுக்கு போ" என்று திட்ட,

"நான் இங்கே தான் படுப்பேன். சும்மா அலுப்படிக்காம போடா" என்றவன் குப்பற படுத்துக் கொண்டான்.

"இவனை திருத்த முடியாது" என்று நெற்றியை நீவியவன், "சரி சாப்பாடு மேசைல இருக்கும் போய் சாப்பிட்டு வந்து படு... நான் இப்போ வெளியில போய்ட்டு வர்றேன்" என்றான்.

திரும்பி படுத்து கைகள் இரண்டையும் தலைக்கு கீழ் வைத்தவன் அவனை பார்த்து கண்ணடித்து, "என்ன மச்சி அடுத்த பிளான் ஆஹ்?" என்று கேட்டான்.

அவனை கூர்ந்து பார்த்தவன், "இல்லடா, நீ வச்ச ஸ்பைக்கு இன்னைக்கு கடைசி நாள்... முடிஞ்சா தப்பிக்க சொல்லு. எதிரியை மன்னிச்சாலும் துரோகிய எப்போவும் மன்னிக்க மாட்டேன்" என்றபடி விறு விறுவென வெளியேறினான்.

"டேய் வேணாம்டா" என்று கத்தியும் அவனுக்கு விளங்காமல் இருக்க தன்னுடையவனை காப்பாற்றும் பொருட்டு அவனுக்கு அழைத்து தலை மறைவாக சொன்னான்.

உடனே திரும்பி வந்தவன், "என்ன இன்போர்ம் பண்ணிட்டியா ?" என்று கேட்டுவிட்டு பக்கத்தில் அமர்ந்து அவன் தோள் மேல் கை போட்டவன், "வசுவுக்காக இப்படி சில்லறை தனமாக எல்லாம் கொலை பண்ணுறத விட்டுட்டேன்டா" என்றவனை மெச்சுதலாக பார்த்தான் கெளதம்.

"சரி டயர்ட் ஆக இருப்ப... சாப்பிட்டு வா... நானும் இன்னும் கொஞ்ச நேரத்தில குளிச்சிட்டு விஷ்வா பத்திரிக்கை கொடுக்க போகணும்" என்றவன் கௌதமை கையோடு அழைத்துச் சென்று உட்கார வைத்து பரிமாறியவன் குளிப்பதற்காக அறைக்குள் சென்றான்.

அப்போது தான் களைப்பாக வந்த கயல்விழி சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌதமை பார்த்து ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றவள், உடனே சுதாரித்துக் கொண்டு கண்டும் காணாதது போல் தனது அறைக்கு விரைந்தாள்.

கௌதமும் குனிந்தபடி சாப்பிட்டவன் அவள் தன் அறைக்கு அவனை தாண்டி போகும் வரைக்கும் நிமிரவே இல்லை.

அறைக்குள் வந்தவளுக்கு அவனை பார்த்ததால் ஒரு இனம் புரியாத சந்தோஷமும் அவன் மீராவுடன் இழைந்ததால் வந்த கோபமும் அவன் தன்னை ஒதுக்குவதால் ஒரு வகை சோகமும் என கலவையான உணர்ச்சிகளில் தத்தளித்துக் கொண்டு இருந்தாள்.

மனதை ஒருநிலைப்படுத்தியவள் குளித்து உடை மாற்றி விட்டு சாப்பிட வந்த போது அவனோ சாப்பிட்டு முடிந்து அவ்விடத்தை விட்டு கிளம்பி இருந்தான். 'எங்கே போயிருப்பான்?' என்று யோசித்தவள் மனமில்லாமல் சாப்பிட்டு விட்டு, எழுந்துச் சென்று யாரும் கண்டு பிடிக்காத வண்ணம் அவனை தேட தொடங்கினாள். முதலில் வெளியில் வந்து முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்தவள் அவனை வெளியில் தேடி பார்த்தாள்.

'எங்கே போய் தொலைந்தான்?' என்று மனதுக்குள் திட்டியவள், 'அவன் நினைப்பாகவே இருப்பதால் பார்க்கிறவர்கள் எல்லாரும் அவனை போல தெரியிறாங்களோ? ஒரு வேளை நமக்கு ஏதும்

சைக்கோலஜி ப்ரோப்ளேம் ஆக இருக்குமோ?' என்று தனது படிப்பறிவை கொண்டு சற்று யோசித்தவள் தலையை உலுக்கி சமன் செய்தபடி அங்கிருந்த காவலாளியிடம், "கெளதம் சார் வெளிய போனாரா?" என்று கேட்டாள்.

அவனோ, "இல்லம்மா உள்ள இருப்பாங்க" என்று கூற அவளுக்கு மனம் சந்தோஷத்தில் சிறகடித்து பறந்தது. மறு பேச்சு பேசாமல் உள்ளே வந்தவள் அவனை தேட தொடங்கினாள். அடுத்தவர் அறையை தட்ட சங்கோஜப்பட்டவள் தனது தாயிடம் சென்றாள். "அம்மா... இங்க யாரும் புதுசா வந்தாங்களா?" என்று கேட்க மகளின் தேடுதலை கண்டு அவருக்கு வந்த சிரிப்பை அடக்கியவர், "இல்லையேம்மா" என்றார்.

பொறுமை இழந்தவள், "கெளதம் எங்கே?" என்று கேட்டாள். "அப்படி கேட்க வேண்டியது தானே... சாணக்கியன் அறையில் போய் பாரு" என்றதும் அவன் அறையை நோக்கி சிட்டாக பறந்தவள் தர்மசங்கடத்துடன் கதவை தட்டினாள்.

வெளியில் செல்ல ஆயத்தமாகிய சாணக்கியன் கதவை திறந்து என்ன என்று புருவங்கள் உயர்த்தி கேட்டான். "ஹி ஹி... அண்ணா உங்க சார்ஜர் இருக்கா?" என்றபடி உள்ளே நுழைந்தவளை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன், "ஏன்மா உன் போன் வேற மாடல் என் போன் வேற மாடலாச்சே!" என்றான்.

'கடவுளே ஏன் சாணக்கியன் அண்ணனுக்கு மட்டும் இப்படி கற்பூர மூளை?' என்று யோசித்தவள், "அது வந்து..." என்றபடி அறையை கண்களால் துழாவ அங்கு கௌதமை காணவில்லை. குளியலறையும் திறந்திருக்க, 'எங்க போய் இருப்பான்?' என்று யோசித்தவள்,

"ஆமால, அண்ணா மறந்துட்டேன்" என்றபடி சாணக்கியனை பார்க்க அவனோ கை கட்டி அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்.

எப்படியும் சாணக்கியன் தன் மனதை அறிந்திருப்பான் என்று யூகித்தவள், "அப்போ நான் வரட்டுமா?" என்று கேட்க அவள் பின்னால் பார்க்க சொல்லி சாணக்கியன் அவளுக்கு கண்களை காட்டினான்.

திரும்பி பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள். பால்கனியிலிருந்து உள்ளே வந்துக் கொண்டிருந்தான் கெளதம். அவனோ அவளை கண்டும் காணாதபடி சாணக்கியனிடம், "இன்னும் கிளம்பலையா?" என்று கேட்க, "கிளம்ப தான்... சரி வரேன்" என்றபடி வெளியேற கயல்விழியோ கௌதமுடன் அதே அறையில் தனித்து விடப்பட்டாள்.

கௌதமோ அவளை கணக்கெடுக்காது கட்டிலில் மல்லாக்க படுத்த படி தொலை பேசியை நோண்டிக் கொண்டிருந்தான்.

அவளும் அவனை இமைக்க மறந்து சிறிது நேரம் பார்த்தவள் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, "க்கும் க்கும்" என்றாள். அப்போதும் அவன் நிமிராமல் இருக்க, "உங்க கூட பேசணும்" என்றாள். அவனோ அதை சட்டை செய்யவில்லை என்றதும், விறு விறுவென அவனை நோக்கி நடந்துச் சென்று அவன் கையிலிருந்த தொலைபேசியை வெடுக்கென்று பறிக்க அவனோ கோபம் கிளர்ந்தெழ, "தா டி" என்றபடி அவளை நோக்கி பாய்ந்து அவள் கையை பிடித்தான்.

அவளும் மற்றைய கைக்கு தொலை பேசியை மாற்றியவள் கெளதம் பிடித்திருந்த அவனது கையை குனிந்து கடித்து விட்டாள். கடித்தவள் ஓட்டமெடுக்க, "ஆஅ ராட்சசி..." என்று அலறியவன் ஓடியவளை பாய்ந்து ரெண்டே எட்டில் அவள் இடையை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுக்க கால் தடுக்கி அவன் மல்லாக்க கட்டிலிலும் அவன் மேல் அவள் மல்லாக்கவும் விழுந்தனர்.

அப்படியே இருந்தபடி தொலைபேசியை பறிக்க முற்பட அவளோ அதை முன்னோக்கி நீட்டி இருந்தாள்.

அப்படியே அவள் இடையை பிடித்து தூக்கி பக்கத்தில் போட்டவன் அவள் மேல் முற்றாக படர அவளோ தனது கையை மேலே தூக்கி இருந்தாள். ஆறடி கட்டுடல் கொண்ட ஆண் மகனுக்கு அவளிடம் இருந்து தொலைபேசியை வாங்குவது அவ்வளவு கஷ்டமாக இருக்கவில்லை.

ஆனால் அவன் பாரத்தை அவளால் தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனினும் தன்னவன் உடல் தன் மேல் முழுதாக உரச அவள் பெண்மை உணர்வுகள் கிளர்ந்து எழ தொங்கின. அவனுக்கோ அந்த உணர்வுகள் கொஞ்சமும் வராமல் அந்த சந்தர்ப்பத்தில் போனிலேயே கவனத்தை செலுத்தினான்.

அவள் தனது தலைக்கு மேல் நோக்கி தூக்கி இருந்த கைகளில் இருந்த தொலைபேசியை பறிக்க அவன் தனது கையை கொண்டு போன போது இருவரின் முகங்களும் மிக அருகருகே வந்தன.

அவனின் குறிக்கோள் தொலைபேசியில் இருக்க அவளின் கவனம் முழுதும் அவனிலேயே இருக்க தன்னிலை மறந்தவள் தன் தலையை உயர்த்தி நெருக்கமாக இருந்த அவன் இதழ்களை சிறை செய்தாள்.

தொலைபேசியை பறிக்க அவளின் இரு கைகளையும் பிடித்தவனுக்கு அவள் இதழ் அணைப்பு உணர்வுகளை தூண்டி விட தொலைபேசியை அவள் கையில் இருந்து வாங்கி அதை தூக்கி பக்கத்தில் வைத்து விட்டு அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக் கொண்டான்.

அவள் செயலை அவன் தனதாக்கியபடி அவள் இதழ்களில் யுத்தம் நடத்திக் கொண்டிருக்க அவன் கைகள் அவள் கைகளில் இருந்து இறங்கி அவள் மேனியில் எல்லை மீறிக் கொண்டிருந்த சமயம் கதவு தட்டும் சத்தத்தில் தன்னிலை அடைந்தான். அப்போது தான் அவளுடன் தான் இழைந்துக் கொண்டு இருக்கும் நிலை கண்டு அதிர்ந்தவன் உடனே சுதாரித்தபடி பக்கத்திலிருந்த தொலை பேசியை எட்டி எடுத்துக் கொண்டு அவளிலிருந்து எழும்பினான். அவளோ அவனின் அணைப்பில் உருகி அப்படியே கண் மூடி படுத்திருக்க அவளை உச்சி முதல் பாதம் வரை அளந்தவனுக்கு சற்று முன் அவளுடன் எல்லை மீறியதால் தன் மீதே கோபம் கிளம்ப அதையும் அவள் மீது காட்டும் பொருட்டு அவள் கால் பெருவிரலில் நன்றாக கிள்ளினான்.

வலி தாங்க முடியாமல், "ஆ... வலிக்குது" என்றபடி கண்ணை திறந்தவள் முன்னால் அவன் முகம் ருத்ர மூர்த்தியாக காட்சியளித்தது.

அவன் அனல் கக்கும் பார்வையை அதிர்ச்சியுடன் பார்த்தவளிடம், "யாரோ வந்திருக்காங்க... ப்ளீஸ் வெளிய போ... இனி இங்க வராதே" என்று உறுமியவனை அடிபட்ட பார்வை பார்த்தவளுக்கு அவன் சற்று முன் தன்னுடன் நடந்துக் கொண்ட விதத்தில் தைரியம் வர, எழுந்து அவனருகில் வந்து அவன் கையை பிடிக்க அதை உதறியவன், "உனக்கு கொஞ்சமும் வெட்கம் மானம் இல்லையா? எதுக்குடி வெட்கமில்லாம என் பின்னாடி சுத்துற?" என்று வார்த்தைகளை கடித்து துப்பியபடி அவளை முறைத்துக் கொண்டு கதவை திறந்தவன் வெளியில் நின்ற சித்ராவை பார்க்காமலே வெளியேறினான்.

விறு விறுவென மாடி ஏறி பால்கனிக்கு வந்தவன் முன்னிருந்த கட்டில் கைகளை குற்றி இயற்கையை ரசித்தபடி நின்று தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டிருந்தான்.

அந்நேரம் பார்த்து மீரா அவன் போனுக்கு அழைக்க அவள் அழைப்பை எடுத்தவன் அவளுடன் பேச தொடங்கினான். கீழே அதிர்ச்சியுடனும் கண்ணீருடனும் நின்ற கயல் தனது தாயை பார்க்க சங்கடப்பட்டபடி அவரை தாண்டி விறு விறுவென மாடியேறி தனது அறையை நோக்கிச் சென்றாள்.

மேலே ஏறியவளுக்கு கெளதம் போனில் பேசிக் கொண்டு நின்ற பால்கனியை தாண்டிச் செல்ல வேண்டி இருந்தது. அவள் செல்லும் பொது கெளதம் தொலைபேசியில், "மீரா ஜஸ்ட் ரிலாக்ஸ் நான் பார்த்துக்கிறேன்... மீரா மீரா... என் மேல நம்பிக்கை இல்லையா?" என்று கேட்கும் போதே அழுதபடி மீரா தொலைபேசியை அணைத்திருந்தாள். ஆனால் அதை காதில் வைத்தபடி திரும்பியவன் தான் பேசியதை சுவரில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த கயல்விழியின் காலை அவதானித்து மனதுக்குள், 'உனக்கு என் மேல நம்பிக்கை இல்லையாடி..? உன் சந்தேகம் தான் என் துருப்பு சீட்டு' என்றபடி காதில் தொலைபேசியை வைத்தவாறே இழைந்த குரலில், "மீரா நாம நேற்று இரவு பண்ணுனது மறந்திடுச்சா?" என்று கேட்க கயலோ அவள் மேல் யாரோ நெருப்பை அள்ளி கொட்டுனது போல துடி துடித்து போனாள். கண்களில் கண்ணீர் சொரிய வாயை சத்தம் வராமல் பொத்திக் கொண்டவள் விசும்பல் கெளதம் காதில் கேட்டு அவன் மனதையும் ஆட்டியது.

சற்றே சுதாரித்தவன் மேலும், "மீரா ஐ லவ் யு சோ மச் டா உன் லிப்ஸ்டிக் பிளேவரோட டேஸ்டை இப்போவும் என்னால பீல் பண்ண முடியுது.ஷால் வி மீட் டுடே ஆல்சோ?" என்று கேட்க அதுக்கு மேலும் அவன் கொஞ்சலை பொறுக்க முடியாதவள் விறு விறுவென தனது அறைக்குள் ஓடினாள். அவளின் கொலுசு சத்தம் அவன் மனசை அசைத்து பார்த்தது. அவன் மனதில் பல்வேறு நினைவுகள் சுழல கனத்த மனதுடன் தொலைபேசியை பாக்கெட்டில் போட்டு விட்டு வெளியில் வெறித்தபடி சற்று நேரம் நின்றிருந்தான்.

அறைக்குள் வந்தவளுக்கு தன்னுடன் கௌதம் சற்று முன் இழைந்து விட்டு இப்போது மீராவுடன் பேசும் பேச்சு ஆத்திரத்தை அதிகரிக்க மேசையிலிருந்த அனைத்தையும் போட்டுடைத்தவள் கட்டிலில் விம்மியபடி விழுந்து அழுதாள்.

அவளுக்கோ கெளதம் மீது வந்த ஆத்திரத்தை விட மீரா மீது கொலை வெறி எழுந்தது. கண்ணீரை துடைத்து விட்டு மித்ராவை தொடர்பு கொண்டவள், "மித்ரா... உனக்கு மீரா என்று யாரையும் தெரியுமா?" என்று கேட்க... மித்ராவோ, "மீராவா? யார் அது? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு? அழுதியா?" என்று கேட்க, "இல்ல கொஞ்சம் உடம்பு சரி இல்லை.." என்று சமாளித்தவள் மேலும், "உங்க டிபார்ட்மென்ட் தான் இப்போ மாடல் ஆயிட்டாங்க" என்றதும்...கொஞ்ச நேரம் யோசித்தவள், "யார்கிட்டயும் கேட்டு சொல்றேன்" என்றாள்.

உடனே கயல், "இப்போ எங்க இருக்காங்க என்று டீடெயில்ஸ் வேணும்" என்று சொல்ல அவளோ, "கொஞ்சம் வெயிட் பண்ணு கேட்டு சொல்றேன். அது சரி உனக்கெதுக்குடி அவங்க டீடெயில்ஸ்?" என்று கேட்க, "இல்ல ஒரு பேஷண்ட் விஷயமா பேசணும்" என்று சமாளித்தவள் மேலும் மித்ராவின் கேள்விகளை தவிர்க்கும் பொருட்டு தொலைபேசியை அணைத்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அழைத்த மித்ரா, மீராவின் விலாசத்தை சொல்ல அதை குறித்துக் கொண்டவள் அந்த இருட்டில் வெளி உடைக்கு மாறி விட்டு விறு விறுவென கீழே இறங்கினாள்.

அவள் இறங்குவதை கொலுசு சத்தத்தில் அறிந்த கெளதம், 'இந்த நேரத்துல எங்க போறா?' என்றபடி இறங்கி பார்க்க அவளோ வண்டியை எடுத்துக் கொண்டு பறந்திருந்தாள். அவளின் வேகத்தில் அதிர்ந்தவன் அவள் பின்னால் தனது வண்டியை எடுத்துக் கொண்டு அவளுக்கு தெரியாமலே அவளை பின் தொடர்ந்தான். அவளோ அழுதழுது வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தாள்.

பின் தொடர்ந்தவனுக்கு மீராவின் இருப்பிடம் கூட தெரியாததால், "எங்க போறா ?" என்று ஒரு வித குழப்பத்துடனேயே பின்னால் சென்றான்.

அவள் ஒரு வீட்டுக்கு முன்னால் காரை நிற்பாட்டி இறங்கியதும், 'இது யார் வீடு?' என்று யோசித்தவன் அவளின் பின்னால் செல்ல அவளோ காற்றை விட வேகமாகச் சென்று கதவை சத்தமாக தட்டினாள்.

புதருக்கு பின்னால் இருட்டில் இருந்தவன் புருவம் சுருக்கி பார்த்துக் கொண்டிருக்க மீரா கதவை திறந்தாள்.

மீராவை கண்டதும், "ஓஹ் மை காட்" என்று அதிர்ந்தவன் அடுத்து சிந்திக்க முதல், "வாங்க" என்ற மீராவின் கன்னம் கயல்விழியின் கை பட்டு சிவந்திருந்தது.

சும்மாவே அதிர்ச்சியிலிருந்த கௌதமுக்கு அவள் செயல் மேலும் அதிர்ச்சியளிக்க அவர்களை நோக்கி ஓடிச் செல்ல முதல், "உனக்கு அடுத்தவ புருஷன் தானா தேவை?" என்று கேட்டபடி மேலும் ஒரு அறையை மீராவுக்கு கயல்விழி அறைந்திருந்தாள்.

தொடர்ச்சியாக அறைந்ததில் நிலை குலைந்த மீராவுக்கு சுதாரிக்க கூட கயல்விழி நேரம் கொடுக்கவில்லை.

அப்போது அடுத்த அறையை அறைய முற்பட்டவளின் கையை ஓடி வந்து தடுத்த கெளதம், "என்ன பண்ற?" என்று உறுமினான்.

உடனே கௌதமை அனல் தெறிக்க பார்த்தவள் கையை அவனிடம் இருந்து உதறியபடி, "ஓ வந்துட்டீங்களா உங்க சல்லாபத்துக்கு?" என்று சீற அதில் அதிர்ந்தது மீரா மட்டுமே.

"கயல் என்ன பேச்சு பேசுறீங்க?" என்று மீரா கோபத்தில் சீற, "நீ வாயை மூடுடி" என்று மீராவை கை நீட்டி எச்சரித்தவளின் கன்னம் வீங்கி இருந்தது கெளதம் அறைந்ததில்.

ஆனால் அதில் இன்னும் கயலின் கோபம் கிளர்ந்தெழ, "உங்க ஆசை நாயகியை ஏதும் சொன்னா கோபம் பொத்துக்கிட்டு வருதோ?" என்றாள் இயலாமையில் கண்களில் கண்ணீர் வழிய.

"கயல் திஸ் இஸ் லிமிட்" என்று சீறியவன் நடப்பது என்ன என்று புரியாமல் அதிர்ந்து நின்ற மீராவிடம், "சாரி மீரா" என்றபடி கயலின் கையை பிடித்தவன், "வா போகலாம்" என்றான்.

மீண்டும் அவன் கையை உதறியவள் கண்களில் கண்ணீருடன், "எனக்கு நீதி கிடைக்காமல் நான் இங்க இருந்து வரமாட்டேன்." என்றபடி விறு விறுவென மீராவை தள்ளி விட்டு உள்ளேச் சென்றவள் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து இருவரையும் பார்த்தாள்.

'சரியான இம்சைடி நீ...பெரிய கண்ணகி என்று நினைப்பு' என மனதுக்குள் நினைத்தவன் மீராவை பார்க்க மீராவோ கண்ணீருடன் நின்றிருந்தாள். தர்மசங்கடத்துடன் உள்ள வந்தவன் மீராவை வரும் படி திரும்பி கண்ணால் சொல்ல அவளும் யோசனையும் கண்ணீருமாக வந்து அமர்ந்தாள்.

"ஓ கண்ணாலேயே பேசிக்கிறீங்களா?" என்று அந்த ரணகளத்திலும் நக்கலாய் கயல்விழி கேட்க கௌதமுக்கு எங்கயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. சும்மா இருந்தவளை சீண்டி விட்டதுக்கு தன்னை தானே கடிந்துக் கொண்டான்.

அவளிடம் மென்மையையும் அன்பையும் மட்டுமே அறிந்தவனுக்கு அவளின் காளி அவதாரம் புதிதாக இருந்தது.

கயல்விழி இருவர் இருக்கும் சோபாவில் அமர்ந்திருக்க அவளுக்கு முன்னால் இருந்த மூன்று பேர் இருக்கும் சோபாவில் ஒரு மூலையில் மீராவும் அடுத்த மூலையில் கௌதமும் அமர கயலுக்கு கோபம் தலைக்கு மேல் கொழுந்து விட்டெரிந்தது

இருவரையும் முறைத்தவள் கௌதமை நோக்கி, "இப்போ கூட அவ பக்கத்துல தான் போய் உரசிக்கிட்டு இருக்கணுமா?" என்றாள்.

"உரசிக்கிட்டா? இடையில் ஒரு பெரிய ஆள் உட்காரும் இடைவெளி உன் கண்ணுக்கு தெரியலையா?" என்று கேட்க, "அது என்ன பார்த்து பயத்துல தள்ளி இருந்திருப்பீங்க... நான் இல்லாட்டி மடியில தானே வச்சு இருப்பீங்க?" என்றாள்.

கௌதமுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. கௌதமின் மௌனம் மீராவுக்கு எரிச்சலாக இருந்தது. அவனால் தானே இந்த நிலைமை என்கின்ற குற்ற உணர்ச்சியால் கயலை கூர்ந்து பார்த்தப்படி எழுந்தவன் கயல் அருகில் வந்து நெருங்கி உட்கார்ந்தான்.

அவன் நெருக்கம் அவளுக்கு இனிப்பாக இருந்தாலும் அவன் மேலிருந்த கோபத்தில் அதை கசப்பாகவே உணர்ந்தாள்.

"இப்போ எதுக்கு என் கிட்ட உரசிக்கிட்டு?" என்று சீற அவளை முறைத்தவன், "இப்ப என்னடி பண்ணனும்?" என்று கேட்டபடி பெரு மூச்செடுத்தவன் எழுந்து நின்று கைகளை கட்டியபடி, "சரி நான் நிற்கிறேன். நீ சொல்லு" என்றான்.

"என்னத்த சொல்றது? அதான் நீங்க ரெண்டு பேரும் பேசுனது எல்லாம் கேட்டேனே. ஏதோ பிளேவர் லிப்ஸ்டிக் அது இது... அப்புறம்... ஆ இன்னைக்கு நைட் வேற... ச்ச சொல்லவே என் வாய் கூசுது... ஏன் மீரா..." என்று தட்டு தடுமாறி தொடங்கியவளை, "வில் யு ப்ளீஸ் ஸ்டாப் இட்" என்று சீறலுடன் தடுத்த மீரா, "கெளதம் வாட் ஐஸ் திஸ்?" என்றாள்.

நிலைமை மோசமாவதை உணர்ந்த கெளதம் உண்மையை சொல்ல நினைத்து விட்டு மீராவிடம், "ரியலி சாரி மீரா... கயல்விழியை என்னை விட்டு தள்ளி வைக்க எனக்கு வேற வழி தெரியல... அவ சுவரில் ஒட்டிட்டு நிக்கிறத பார்த்திட்டு... நீ போனை வைத்ததும் உன் பெயரை சொல்லி ரொமான்டிக் ஆக அவ கேக்கணும்னு வேணுமென்றே பேசினேன்" என்றதும் அதிர்ந்த இரு பெண்களும் அவனை அனல் பறக்க பார்த்தனர்.

அவன் தான் ஆண் சிங்கமாச்சே அந்த பார்வையையும் தைரியமாகவே எதிர் கொண்டான்.

'அடப்பாவி! நான் நிக்கிறத பார்த்திட்டா இவ்வளவும் பேசின? ச்ச' என்று மனதுக்குள் கயல் திட்ட மீராவோ, "கெளதம் இது தப்பா தெரியலையா? நீங்க என் பேரையும் சேர்த்து கெடுத்து வச்சு இருக்கீங்க" என்றவள் விம்மி விம்மி அழ கயலுக்கு குற்ற உணர்ச்சி மேலோங்க தொடங்கியது. கௌதமை முறைத்தபடி அவளருகில் எழும்பிச் சென்றவள் மீராவை தனது தோளோடு அணைத்து, "ஐ அம் ரியலி சாரி மீரா... எல்லாம் இந்த இடியட்டினால் வந்தது." என்றாள் கௌதமை முறைத்தபடி.

அவள் தன்னை இடியட் என்றதால் வெளியில் முறைத்த கௌதமோ மனதுக்குள் மீரா கயலின் ஆதரவை பார்த்து சிலிர்த்தவன், 'இந்த அக்கறை தாண்டி உன் மேல நான் பைத்தியமாக காரணம்.' என்று மனதுக்குள் நினைத்தபடி கயலின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

மீராவும் அவள் தோளில் சாய்ந்து அழுதவள் விம்மியபடி, "நான் கெளதம் கிட்ட உதவிக்கு போனது எனக்கு இருக்கிற ஒரு பிரச்சனைக்காக தான். என் ஸ்பான்சர் நான் டிரஸ் மாற்றும் போது படம் எடுத்து அதை காட்டி மிரட்டுகிறான். அவன் கூட படுக்கணுமாம் இல்ல படம் எல்லாம் நெட்ல போட்டு விடுவானாம். அதுக்கு உதவி செய்ய கூடிய எனக்கு நம்பிக்கையான ஒரே ஆள் கெளதம் தான். பொண்ணுங்க விஷயத்துல என் மற்ற பிரண்ட்ஸ் கூட நம்பிக்கை இல்லாதவங்க... பட் கௌதம் ரியலி கிரேட் கயல்... அண்ட் அவர் ஒரு ஜென்டில் மேன்... டோன்ட் மிஸ் அண்டர்ஸ்டாண்ட் ஹிம்... எந்த பொண்ணையும் தப்பாக பார்க்க மாட்டார். ரியலி குட் பிரெண்ட்" என்றதும் கயல்விழியோ கௌதமை காதலுடன் பார்க்க அவனோ, 'இனி இவ நம்ம பின்னாடியே சுத்துவாளே' என்று எரிச்சல் பட்டபடி முகத்தை வேறு பக்கம் திருப்பினான்.


'இதுக்கு மட்டும் குறைச்சல் இல்ல' என்று நினைத்தவள், "சாரி மீரா நானும் அவசர பட்டு விட்டேன்" என்றபடி அவள் அறைந்த கன்னத்தை தடவினாள்.
 
Top