தடம் மாறிய இலக்கணம்..!
எழுத்தாளர்: ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 17)
அட... அப்ப அந்த ஜெயா நந்தன், மகாலஷ்மி, நேத்ரா ... இவங்க தான் அசஷயாவோட அம்மா, அப்பா, தங்கச்சியா...? ம்.. இதுநாள் வரைக்கும் மூத்தப் பொண்ணுக்கு என்னாச்சு, ஏதாச்சுன்னு கூட தெரிஞ்சிக்கலை. அந்தளவுக்கு மனசை கல்லாக்கிட்டாங்க போல. ஆனா, இவ மேலயும் தப்பு இருக்குது தானே. பெத்தவங்க நம்பி பிள்ளையை பள்ளிக்கூடத்துக்கு படிக்க அனுப்பினா, இப்படி காதல் ஊதல்ன்னு போனா... அவங்க வயிறெரியத்தானே செய்யும்.
இப்ப, இவ நம்பி போன அந்த நாதாரியே இவளுக்கு மொத்தமா சங்கு ஊதிட்டான் இல்ல. பலநேரம் , பெத்தவங்க வயித்தெரிச்சல் நம்மளை சும்மா விடறதில்லை.. அது உண்மைதான்.
அட... இந்த விருமாண்டி என்ன அசஷயா கிட்ட இத்தனை இளக்கமா பேசுறான்...? ஒருவேளை, இவனுக்குள்ளயும் ஆறாத காயங்களும், ரணங்களும் இருக்குதோ....? அதான் "சிரிக்கிற எல்லோரும் சந்தோஷமா இருக்காங்கன்னு அர்த்தமும் இல்லை... கோபப்படுறவங்க எல்லாரும் இறுக்கமானவங்கன்னும் அர்த்தமும் இல்லை..." ன்னு நம்மளை சிந்திக்க வைச்சுட்டானோ...?
CRVS (or) CRVS 2797