அத்தியாயம் 16
அவளை நெருங்கி அமர்ந்தவன் " இப்போ உன்னை கூட்டிட்டு வீட்ட போனா உங்க அம்மா நமக்குள்ள சண்டைன்ன்னு நினச்சுடுவாங்களே " என்று சொல்ல அவளோ " நினச்சா கூட பரவாயில்ல... ஆனா நான் உங்க கூட வருவேன்.. ஆதித் என்னை காணாமே தேடினானா? " என்று கேட்டாள் ..அவனோ அவளை மேலிருந்து கீழ் பார்த்து " இப்போ நல்லா பேசு.. யோசிக்காம வர வேண்டியது.. ஏன் உனக்கு ஆளே கிடைக்கலையா போயும் போயும் அவ கிட்ட போய் பேசி இருக்க... " என்று கேட்க அவளோ " தப்பு தான் " என்றபடி குற்ற உணர்ச்சியுடன் தலையை குனிந்து கொண்டாள் .. அவனோ " ம்ம் சரி அத விடு .. போகலாம் வாடி.. சந்தேகம் வந்தா கூட அத்தை மாமா கேட்க மாட்டாங்கன்னு நினைக்கேன் " என்று சொல்ல ஆமோதிப்பாக தலை ஆட்டியவள் அங்கே வைக்கப்பட்டு இருந்த உடைப்பெட்டியை தூக்க போனாள் .. அவனோ அவளை தாண்டி அதனை தூக்கியவன் முன்னே செல்ல அவளும் பின்னே சென்றாள் .. இருவரும் வருவதை பார்த்த மாதவியின் தாய்க்கு கொஞ்சம் நெருடலாக இருக்க அவர் மனதில் உள்ளதை முகம் மூலம் அறிந்த கரிகாலன் " சாரி அத்தை .. ஆதித் இவ இல்லாமல் இருக்க மாட்டான் " என்று அன்று இரவு மாதவி இல்லாமல் அவன் அழுவான் என்பதை முன்னரே யூகித்தபடி கூற அவரும் நிம்மதி பெருமூச்சு விட்டவர் சிறு புன்னகையுடன் இருவரையும் வழி அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வரும் வழியிலே மௌனமே அங்கு ஆட்சி செய்ய, இருவர் மனதிலும் மதுபாலா மீது கோபம் கொப்பளித்துக் கொண்டு இருந்தது என்னவோ உண்மை தான்.
வீட்டுக்கு வந்து இறங்கியதுமே அவள் ஓடிச் சென்று கரிகாலனின் தாயின் கையில் இருந்த ஆதித்தை வாங்கி கொள்ள, அவர் தாயோ "என்னாச்சும்மா சீக்கிரமே வந்துட்ட? கோவிச்சுட்டு போனியா?" என்று கேட்க என்ன பதில் சொல்வதென்று திணறிப் போனவள் பின்னால் அவளது பெட்டியை தூக்கி வந்த கரிகாலனை பார்த்தாள். அந்த பார்வையே "என்னை காப்பாத்துங்க" என்று இறைஞ்ச, கரிகாலனோ "ஒன்னும் இல்லம்மா சின்ன தடுமாற்றம் அவ்வளவு தான்.." என்று சமாளிக்க, அவரோ "நல்ல பொண்ணும்மா நீ, இவன் வேற அடிக்கடி உன் நினைவு வரும் போதெல்லாம் அழுத்திட்டே இருந்தான்" என்று சொல்ல மாதவியின் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது. கையில் அவளையே அணைத்தபடி இருந்த ஆதித்தை பார்த்தவள் "அம்மாவை தேடினியா கண்ணா?" என்று கேட்டு அவன் நெற்றியில் முத்தம் பதித்தவள் "இனி எப்போவுமே உங்களை விட்டு போக மாட்டேன் அத்தை" என்று சொன்னவள் அவர் கையில் சத்தியம் பண்ண அவர் இதழ்கள் மெலிதாக விரிந்து கொள்ள, கரிகாலனோ "வா மாதவி" என்றபடி அறைக்குள் நுழைந்து கொண்டான்.
உள்ளே நுழைந்ததும் அவன் குளிக்க சென்று விட, அவளோ மகனுடன் விளையாடி கொண்டு இருந்தாள். வரும் போது இடையில் ஒரு டவலுடன் வர, அவளுக்கோ கொஞ்சம் சங்கடமாக போனது. இது வரை அவள் உணர்ச்சிகள் மட்டுப்பட்டு இருந்த போதிலும் அவன் முத்தமிட்ட பிறகு அவன் மூச்சு காற்று கூட அவள் உணர்ச்சிகளை தூண்டி விட்டது. அவளுக்கே அந்த நிலை என்றால் கரிகாலனை கேட்கவும் வேண்டுமா என்ன?
அவள் விழி அசைவிலேயே மொத்தமாக விழுந்து விடுபவனுக்கு இப்போது அவள் மீது எல்லை இல்லாத காதல் கரை புரண்டு ஓடியது..
காதல் உடல் சம்பந்தப்பட்டது இல்லை, மனம் சம்பந்தப்பட்டது என்று இருவரும் உணர்ந்தாலும் அந்த காதலுடன் அவர்கள் உணர்வும் பிணைந்து இருக்க, வெளிப்படுத்தி விட்ட காதலுடன் பிரிந்து இருப்பது சாதாரண விடயமா என்ன?
அவளோ குழந்தையை தூக்கியபடி "நான் ரூமுக்கு போறேன்" என்று சொல்ல அவனோ "இது உன் ரூம் தானே" என்றான். அவளோ அவனை விலுக்கென நிமிர்ந்து பார்த்தவள் சங்கடமாக " அந்த ரூமுக்குள்ள போறேன்" என்று சொல்ல அவனோ "சரி இவனை கொடுத்துட்டு போ" என்று சொன்னபடி அவளை நெருங்க அவளுக்கோ இதயம் படபடக்க தொடங்கியது..
அவனும் குழந்தையை தூக்கும் போது இருவர் ஸ்பரிசங்களும் உரசிக் கொள்ள, குழந்தை கையில் இருப்பதால் விலக முடியாமல் அவஸ்தை பட்டவளை ரசித்து பார்த்தவன் "இன்னும் பிரிஞ்சு இருக்கணுமா மாதவி" என்று வாய் விட்டு கேட்டான். அவளோ அவனை யோசனையாக பார்க்க மெல்லிய புன்னகையை சிந்தியவன் "வெளிப்படையா சொல்றேன், எனக்கு நீ முழுசா வேணும்னு தோணுது.. இதுக்கு பேர் காமம் எல்லாம் இல்லடி.. இதுவும் உன் மேல இருக்கிற எல்லை இல்லாத காதலிலே உருவாகிற உணர்வு தான்.. ஆனா உன் படிப்பு உன் வயசு மனநிலை எல்லாம் யோசிக்கும் போது இப்போதைக்கு நாம வாழ்க்கையை ஆரம்பிக்க வேணாம்னு தோணுது.. என்னை கட்டுப்படுத்திட்டு இருக்கிறது கொஞ்சம் இல்லை எனக்கு நிறையவே கஷ்டம்.. அதுவும் இன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு பிறகு" என்று அவள் இதழ்களை பார்த்தபடி கூறியவன் சற்று நிறுத்தி விட்டு, " உன் விருப்பம் மாதவி.. உன் படிப்புக்காக லேட்டா குழந்தை பெத்துக்கலாம்.. ஆனா புருஷன் பொண்டாட்டியா உன் கூட வாழணும்னு தோணுது..என் மனசில இருக்கிறத சொல்லிட்டேன்.. இனி உன் முடிவு.. இல்லன்னு சொன்னாலும் நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்.. வாழ்வோ சாவோ என் மொத்தமும் உனக்கு தான்" என்று சொல்ல அவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு தன்னையே மொத்தமாக கொடுத்து விட்டால் என்ன? என்று தான் தோன்றியது.
இவ்வளவு காதல் வைத்து அவன் யாசிக்கும் போது ,இல்லை என்று சொல்ல அவள் ஒன்றும் ராட்சஸி இல்லையே.. அவளோ பதில் சொல்லாமல் "சாப்பிட்டீங்களா? " என்று கேட்க அவள் சம்பந்தமில்லாமல் பேசுவதை புருவம் சுருக்கி பார்த்தவன் "இன்னும் இல்ல," என்றான். உடனே அவள் "நானும் குளிச்சுட்டு வரேன் சாப்பிடலாம்" என்று சொல்ல, அவன் மனமோ "நான் என்ன கேட்கிறேன் இவ என்ன பேசுறா ?ஒரு வேளை பிடிக்கலன்னு நேர்ல சொல்ல சங்கடப்பட்டு மறைமுகமா சொல்ல வர்றாளோ " என்று நினைத்தவன் "சரிம்மா" என்றபடி அவள் கையில் இருந்த குழந்தையை வாங்கி கொண்டு வெளியேற அவளோ பெருமூச்சுடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்.
குளித்து விட்டு வந்ததும் குடும்பமாக அனைவரும் சாப்பிட்டு முடிய ஆதித்தும் தூங்கி போனான். அவனை தொட்டிலில் வளர்த்தியவள் கரிகாலனை பார்க்க அவனோ பக்கவாட்டாக படுத்து தூங்க தொடங்கினான். அவளும் யோசனையுடன் அறைக்குள் நுழைந்து கொண்டவளுக்கு தூக்கம் தொலைந்து போனது.. அவள் காதில் இன்னும் அவன் யாசித்ததே விழுந்து கொண்டு இருக்க , அவளால் தூங்க முடியுமா என்ன? அவள் உடம்பில் ஒவ்வொரு அணுவும் அவன் அணைப்புக்கு ஏங்கும் போதும், அவன் வெளிப்படையாக காதலை உரைத்து விட்ட போதிலும் ஏன் இந்த தயக்கம் என்று அவளுக்கும் தெரியவில்லை. கண் மூடி யோசித்தவள் மனமோ அந்த தயக்கத்துக்கு காரணம் பெண்களின் இயல்பான கூச்சம் மட்டுமே என்று சொல்ல எழுந்து கொண்டவள் கதவை திறந்து கொண்டு தன்னவனை நோக்கி சென்றாள் . அவள் அறிவாள் இதற்கு மேல் அவன் தன்னிடம் இதை பற்றி பேச மாட்டான். முழு முடிவும் அவளிடம் தான் என்று... வெளியே வந்து தன்னவனை பார்க்க அவனுக்கும் தூக்கம் வரவில்லை. தப்பாக கேட்டு விட்டோமோ என்ற பதட்டமே அவன் மனதில் இருக்க, பக்கவாட்டாக படுத்து இருந்தவன் பின் பக்கமாக வந்து படுத்தவள் தனது கையை அவன் இடையூடு புகுத்தி திண்ணிய மார்பில் பதித்து அணைத்துக் கொண்டவள் தனது கன்னத்தை அவன் வெற்று முதுகில் வைத்து "மொத்தமா எடுத்துக்கோங்க சார்" என்று சொல்ல அவன் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து கொள்ள அவள் கையை விலக்கி விட்டு அவளை நோக்கி திரும்பினான்.
அவளும் அவனை ஏறிட்டு பார்க்க "இன்னும் இந்த சார் தேவையா?" என்று அடுத்த கேள்வி கேட்டான். அவளோ "என்னன்னு கூப்பிடட்டும்?" என்று கேட்க அவனோ "ம்ம் பெயரை சொல்லியே கூப்பிடு" என்றான் அவள் விரல்களுடன் விரல்கள் கோர்த்தபடி . அவளோ "ஐயோ நீங்க ரொம்ப பெரியவர், நான் பேர் சொல்லி கூப்பிட மாட்டேன்" என்று சொல்ல அவனோ அவள் கரத்தில் முத்தம் பதித்தபடி "அப்போ கண்ணான்னு கூப்பிடு" என்று சொல்ல அவளோ "ஆதித் தானே கண்ணா"என்றாள். அவனோ "என்னையும் கூப்பிடேண்டி"என்று இறைஞ்சலாக கேட்டபடி அவள் இடையை தன்னை நோக்கி மொத்தமாக நெருக்கிக் கொண்டான். அவன் நெருக்கத்தில் அவள் உணர்வுகள் தறி கெட்டு ஓட , அவன் உணர்வுகளும் கரை புரண்டு ஓட தொடங்கியது.
அவனோ "ம்ம் கூப்பிடு" என்று சொல்ல அவளோ "க க கண்ணா" என்று தட்டு தடுமாறி உரைத்தாள். அந்த தடுமாற்றத்துக்கு காரணம் வேறு ஒன்றும் இல்லை அவன் கரமானது அவள் வெற்றிடையினை தேடி பிடித்து கோலம் போட்டுக் கொண்டு இருந்தது.
அவளோ உணர்வுகளின் மேலீட்டால் தனது கரத்தை அவனது வெற்று மார்பில் பதிக்க அவள் நக கண்கள் அவன் மேனியில் தடம் பதிக்க அவன் இதழ்களோ அவள் நெற்றியில் முத்திரையை பதிக்க ஆரம்பிக்க, அவன் கரங்களோ அவள் புடவையை தளர்த்த ஆரம்பித்தது.
அவன் இதழ்கள் நெற்றியில் ஆரம்பித்து மூக்கு, கன்னம், காதுமடல் என்று பயணம் செய்து இதழ்களில் இளைப்பாற அவளோ மொத்தமாக அவன் அணைப்பில் அடைக்கலம் ஆகி போனாள். அதன் பிறகு அவனை கேட்கவும் வேண்டுமா? அவள் மேனியில் கவிதை எழுத ஆரம்பித்தவன் அவளை மொத்தமாக கொள்ளை இட்டு இருந்தான்.
வாழ்வின் முதல் அனுபவம் அவளுக்கு கசப்பாக இருந்த போதிலும் , இன்று பெண்ணவளை போக பொருளாக மட்டும் அல்ல, பொக்கிஷமாக கூட தாம்பத்தியத்தின் போது கையாளலாம் என்று அவளுக்கு உணர்த்த அவளோ அவன் மென்மையிலும் அவளுக்கு வலிக்குமோ என்று தனது உணர்வுகளுக்கு கூட கடிவாளம் இட்டு நிதானமாக அவளை கையாண்டதிலும் அவள் மனம் இன்று அவனிடம் மொத்தமாக சரணடைந்து இருந்தது.
அவளை மீண்டும் மீண்டும் நாடிய சமயம் ஒரு கட்டத்தில் அவள் இதழ்களில் இருந்து தனது இதழ்களை பிரித்தவன் " உனக்கு ஓகேயா?" என்று கேட்க அவளோ "நீங்க கேட்கிறது தான் வலிக்குது.. என்னோட ஒவ்வொரு அணுவும் உங்களுக்கு தான். நீங்க கேட்கும் போது என் மேல உரிமை எடுத்துக்க தயங்கிற போல இருக்கு..ரொம்ப வலிக்குது கண்ணா " என்று முடிக்க முதல் அவள் இதழை ஆவேசமாக அடைத்து இருந்தவன் அவளுடன் ரெண்டற கலந்தான்.
அவளுக்காக அவனும் அவனுக்காக அவளும் மனதாலும் உடலாலும் ஒன்றித்து வாழ ஆரம்பித்தார்கள். அன்று இரவு ஆதித் சிணுங்க , முதலில் எழுந்த கரிகாலன் தனது மார்பில் படுத்து இருந்த மாதவியை விலக்கி வைத்து விட்டு மகனை நோக்கிச் சென்றவன் அவனை தூக்கி கொண்டான். அடுத்த கணமே கண் விழித்த மாதவிக்கு தெரிந்தது என்னவோ ஆதித்தை தூக்கி கரிகாலன் தனது மார்பில் அவனை தூங்க வைத்த காட்சி தான். தன்னை போர்வையால் மறைத்தபடி எழுந்தவள் "என்னை எழுப்பி இருக்கலாமே" என்று சொல்ல, கரிகாலனோ அவளை பார்த்து கண் சிமிட்டி விட்டு குழந்தையை தொட்டிலில் வளர்த்தியவன் அவள் அருகே வந்து அமர்ந்து "தூக்கமே போச்சுடி" என்றான் ஹஸ்கி குரலில். அவளோ நேரத்தை பார்த்தபடி " ரெண்டு மணிக்கு தூக்கம் போய்டுச்சா? இப்போ என்ன பண்ண போறீங்க? நான் அப்போ தூங்கவா?" என்று கேட்க அவளை வெட்டவா குத்தவா என்றபடி பார்த்தவன் மனமோ "ரொம்ப சின்ன பொண்ண கல்யாணம் பண்ணினா இதெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்" என்று சொல்ல அவளை விழுங்கி விடுவது போல பார்த்தவன் "என்ன விட்டுட்டு தூங்க போறியா?" என்று கேட்க அவளோ "தூங்காம இருந்து என்ன பண்ணுறது? " என்று கேட்டாள். அவனும் " என்ன பண்ணலாம்னு சொல்லி தரேன்" என்று சொன்னபடி அவள் இதழ்களை கவ்வி கவி பாட ஆரம்பிக்கவே அவன் சொன்ன அர்த்தம் புரிந்தவள் கன்னம் சிவந்து போனாலும் அவன் கற்றுக் கொடுத்த பாடங்களை நல்ல மாணவியாக கற்றுக் கொண்டாள்.